Followers

Search Here...

Friday 28 September 2018

சக்தியை கொடுப்பது எது? உலகில் மதிக்கத்தக்கது எது? மதிக்க வேண்டியது எது?

இந்த உலகில்,
                     நாம் மிகவும் மதிக்கத்தக்கது எது?
                     நாம் மதிக்க வேண்டியது எது?
                     நாம் உணர வேண்டியது எது? 
                     நாம் அடைய வேண்டியது எது?
உலகத்தை பார்ப்பதற்கு, நமக்கு ஒரு தீபத்தின் ஜோதி (ஒளி) தேவைப்படுகிறது.



ஒரு தீபத்தின் வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
யார் நிற்கிறார்கள்? யார் இருக்கிறார்கள்?
என்று அனைத்தும் இந்த தீப ஜோதியினால் நமக்கு தெரிகிறது.
தீப ஜோதி இல்லையென்றால், நிலா வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
இரவில் சந்திர ஜோதி நமக்கு உலகை காட்டுகிறது.
பகலில், சூரிய வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
சூரிய ஜோதி நமக்கு உலகை காட்டுகிறது.

தீப ஜோதியை விட ப்ரகாசமானது 'சந்திர ஜோதி'.

சந்திர ஜோதியை விட மிகவும் ப்ரகாசமானது 'சூரிய ஜோதி'.

ஆக சந்திர ஜோதியை விட, மிகவும் மதிக்கத்தக்கது சூரிய ஜோதி.

சூரிய ஜோதியை விட, பிரகாசமான ஜோதி உலகத்தில் இருக்க முடியுமா?
சூரிய ஜோதியை விட உலகத்தை காட்டும் சக்தியுள்ள ஒரு ஜோதி உண்டா?
ஆம்... இருக்கிறது.

கண் என்ற உறுப்பு இருந்தும், பார்க்க முடியாத குருடனுக்கு, ஆயிரம் சூரியன் சேர்ந்து, வெளிச்சத்தை கக்கினாலும், உலகம் இருப்பதை அவனுக்கு காட்ட முடியுமா?

கண் என்ற உறுப்பில், நேத்ர ஜோதியும்  உடையவன் தானே உலகை காண்கிறான்.

நேத்ரம் என்றால் தமிழில் "கண்" என்று அர்த்தம்.
ஆக சூரிய ஜோதியை விட, மிகவும் மதிக்கத்தக்கது நம்முடைய "நேத்ர ஜோதி" தானே.

இந்த கண்ணுக்கு எங்கிருந்து இந்த 'நேத்ர ஜோதி' வந்தது?
என்ற கேள்வி எழும்போது நமக்கு பல உண்மைகள் விளங்கும்.

செத்துப்போனவனுக்கு கண் இருந்தாலும், அந்த கண்ணில் இருந்த நேத்ர ஜோதியை காணவில்லையே!!

உடம்பில் உயிர் இருந்தவரை, நேத்ர ஜோதியை கண்ணுக்கு கொடுத்தது, உள்ளிருக்கும் "ஆத்ம ஜோதி" அல்லவா.

கொஞ்சம் சிந்தித்து பார்த்தாலே, 'ஆத்மஜோதி இந்த உடம்பில் இருக்கும் வரை தானே, இந்த உடம்பில் உள்ள ஜட பொருட்கள் சக்தி பெற்றது' என்ற உண்மை புரியும்.
ஆத்மா இந்த உடம்பில் இருக்கும் வரை தானே, 'கண்' என்ற அவயவம் பார்ப்பதற்கு பயன்பட்டது.
ஆத்ம ஜோதி உடலை விட்டு பிரிந்தவுடன், கண்ணுக்கு கிடைத்த "நேத்ர ஜோதியும்" மறைந்து விட்டதே.

கண் பார்த்தால் தானே, சூரிய ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

கண் பார்த்தால் தானே, சந்திர ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

கண் பார்த்தால் தானே, தீப ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

இந்த கண் பார்க்காமல் போனால், உலகம் இருந்தும் ப்ரயோஜனமில்லையே நமக்கு.

கண் தெரிவதற்கு காரணம்,  "ஆத்மஜோதி" உள்ளே இருப்பதால் தானே.

இப்படி இருக்கும் போது, ஆத்ம ஜோதியை விட பெரிய ஜோதி எது இருக்க முடியும்?

ஆத்ம ஜோதியை காட்டிலும் பெரிய ஜோதி கிடையாது.
அந்த மதிப்பு மிகுந்த ஆத்ம ஜோதி தானே "நாம்".
"நாம்" எத்தனை அருமை என்று அப்பொழுதுதானே புரியும்.

இந்த ஆத்ம ஜோதியின் அருமை புரிந்தவன், இந்த ஆத்மாவை எப்படி மதிப்போடு பார்த்து கொள்வான்.

இந்த உடம்பை காப்பாற்ற, அதற்கு உணவு கொடுக்க,  வாழ்நாள் முழுவதும் வேலை செய்து, யார் யாருக்கோ பணத்திற்காக அடிமையாகி போய், இந்த உடம்பை போஷிக்கும் நாம், ஆத்ம ஜோதியான நமக்கு ஆகாரம் போடாமல், நம்மை கவனிக்காமல் விட்டு விடுகிறோமே?
இது அநியாயம் அல்லவா?

உடம்பை கவனிப்பது போல, கொஞ்சம் ஆத்மாவையும் கவனிக்க வேண்டாமா?

ஜீவ ஆத்மாவான நமக்கு, இந்த உடல் கிடைக்க பகவான் அனுக்கிரகம் செய்ததே, பரமாத்மாவான தன்னை பூஜிப்பான், முக்திக்கு வழி செய்து கொள்வான் என்பதற்காக தானே.
கண் என்ற அவயவத்தால், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து,
காலால் கோவிலுக்கும், திவ்ய க்ஷேத்ரங்களுக்கும் நடந்து,
வாயால் பகவானை பாடி, ராம ஜபம் செய்து,
கையால் பூஜை செய்து, பக்தி செய்து, இறுதியில்
இந்த ஜீவஆத்மாவை, அந்த பரமாத்மாவிடம் சேர்த்து கொள்வான் என்று தானே மனித உடம்பு கொடுக்கிறார் பகவான்.
நம் உடம்பில் உள்ள எந்த உறுப்புக்கும், சக்தியை கொடுப்பது உள்ளிருக்கும் ஆத்ம ஜோதி தானே.

கண் என்ற அவயவம், நேத்ர ஜோதியை, ஆத்ம ஜோதியின் துணையால் தானே பெறுகிறது.



ஆத்மாவோ, "சுயமே பிரகாசம்" உடையதாக உள்ளது.

இருட்டான இடத்தில் ஒருவனிடம், "நீ (ஆத்மா) இருக்கிறாயா?" என்று கேட்டாலும்,
"நான் இருக்கிறேன்" என்று தானே சொல்வான்.
"நான் இல்லை" என்று சொல்வானா? இல்லையே.

இருட்டில் இருந்தாலும், வெளியில் உலகில், தீபஜோதி இல்லாமல் போனாலும், தன் ஆத்மஜோதியாலேயே "நான் இருக்கிறேன்" என்று தெரிந்து கொண்டு விடுகிறானே.




இதை சற்று சிந்திக்கும் போது தான், நமக்கு, "ஆத்ம ஜோதி"யான நம் மகத்துவம் புரியும். நாம் அருமை என்றும் புரியும்.

"ஆத்ம ஜோதியான நாம்" உடம்பை விட்டு வெளியேறி விட்டால்,
மலை, ஆகாயம், கடல் போன்ற ஜடமான பொருட்களை போன்று தான், இந்த உடம்பும் என்று தெரிந்து விடுமே?

இத்தனை நாள் இந்த "உடம்பே" 'நான்'" என்று நினைத்த அறிவீனம் நமக்கு புரியுமே.

நான் தான் அந்த "ஆத்ம ஜோதி" என்று புரிந்து கொண்டவன், இந்த ஜடமான உடம்பு நமக்கு பரமாத்வால் ஏதோ ஒரு காரணத்துக்காக கொடுக்கப்பட்டு உள்ளது என்று உணர்கிறான்.
உடம்பை மட்டுமே போஷிக்காமல், ஆத்மாவையும் போஷிக்கிறான்.

இன்னொரு விளக்கு (ஜோதி) கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லாமல், தானே பிரகாசமாக இருப்பதால், ஆத்ம ஜோதியே சிறந்தது.

அந்த ஆத்ம ஜோதி "நீ தான்" என்று வேதம் நம் மதிப்பை நமக்கு காட்டுகிறது.

தீப ஒளியை கொண்டு, ஆத்ம ஜோதியை பார்க்க முடியாது.
சூரிய ஒளியை கொண்டும், ஆத்ம ஜோதியை பார்க்க முடியாது.
ஆனால்,
ஆத்ம ஜோதியால், அனைத்து ஜோதியையும் பார்க்க முடிகிறது.
ஆத்ம ஜோதியை விட உயர்ந்தது உலகில் உண்டா?

ஆத்மாவுக்கு தான் இருப்பது இருட்டில் இருந்தாலும் தெரிவதால், ஆத்மாவை "சுயம் பிரகாசம்" என்றும் சொல்கிறோம்.

இன்னொரு ஜோதி கொண்டுதான் அறிய முடியும் என்று இல்லாத படி, தானே பிரகாசமாக இருப்பதால், தானே ஞானத்துடன் இருப்பதால், ஆத்மாவுக்கு "ஞான ஸ்வரூபன்" என்றும் பெயர்.

ஞான ஸ்வரூபனான ஆத்மாவுக்கு தான் இருப்பது தெரிகிறது. 
ஜடமான பொருளுக்கு தான் இருப்பது தெரிவதில்லை.

உலகத்தில் உள்ள எல்லா ஜட வஸ்துக்களும், இந்த ஞான ஸ்வரூபமான 'ஆத்ம ஜோதியால்' மட்டுமே அறியப்படுகிறது.

அத்தனை பெரிய ஜடமான மலைக்கு, தனக்கு மேலே ஆகாயம் இருப்பது தெரியாது. "தான்" இருப்பதும் தெரியாது.
அத்தனை பெரிய ஜடமான ஆகாயத்திற்கு, அருகில் கடல், மலை இருப்பது தெரியாது. "தான்" இருப்பதும் தெரியாது.

இவையெல்லாம் பெரிய பெரிய பொருளாக இருந்தாலும், ஜடமாக இருப்பதால், "தான்" இருப்பது கூட தெரிவதில்லை.

ஆனால், உலகத்தில் உள்ள சிறிய பொருளிலிருந்து, பெரிய பெரிய மலைகள், கடல், ஆகாயம் வரை  இருப்பது, ஆத்மாவான "நமக்கு" தெரிகிறது.

'ஆத்மா'வான நமக்கோ இந்த உலகம் இருப்பதும் தெரிகிறது. "தான்" இருப்பதும் தெரிகிறதே!!  எத்தனை அற்புதமான படைப்பு நாம்! 

அப்பொழுது தான், ஆகாசத்தை விட, மலையை விட, கடலை விட, மிகவும் பெரியது, மதிக்கத்தக்கது "ஆத்மா" என்று புரியும்.

"உலகத்தில் உள்ள ஜட பொருட்களை எல்லாம் அறியக்கூடிய ஆத்மாவல்லவோ நீ.
மதிப்பு மிக்க ஆத்மாவாகிய நீ, ஜடமான இந்த உடம்பை போய் "நான், நான்" என்று நினைக்கிறாயே?
ஆத்மாவுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது?"
என்று கேட்கிறது வேதம்.

இந்த உடம்பு மாறிக்கொண்டே இருக்கிறதே. ஒரு நாள் சுருங்கி, அழுகி, செத்து போய் விடுமே.
ஆத்மா (நீ) வெளியேறிய பின்,
இந்த உடம்பு தானாக அழுகி விடுமே?
புதைத்தால் மண்ணோடு மண்ணாகி விடுமே?
எரித்தால் சாம்பலாகி விடுமே?.
அப்படியே விட்டு விட்டால், பறவைகள் கொத்தி தின்று விடுமே?
இந்த உடம்பை போய் "நான் நான்" என்று நினைப்பது, எத்தனை முட்டாள் தனம்?

கொஞ்சம் விவேக புத்தியால் உணர்ந்து, தான் அந்த "ஆத்ம ஜோதி" என்று எப்பொழுதும் அனுசந்தானம் (நினைத்து) செய்ய வேண்டும்.

இந்த உடம்பு தான் அல்ல, தான் உள்ளிருக்கும் "ஆத்ம ஜோதி" என்று உணர்ந்தவன் எப்படி இருப்பான்?

அந்த ஆத்ம ஜோதி தான் "நான்" என்று புரிந்து கொண்டு விட்டால்,
ஒரு பிடி சர்க்கரையை வாயில் போட்டால், "சுவைக்கிறதே" என்றா தோன்றும்?. பைத்தியக்காரா! அதே சக்கரையை செத்தவன் நாக்கில் போட்டால், சுவைக்குமா?

இது நாள் வரை நாக்கா சுவைத்தது?
சுவைக்கும் சக்தியை கொடுத்தது ஆத்ம ஜோதி அல்லவோ.

ஆத்ம ஜோதியான "நான்" உள்ளே இருப்பதால் தானே, நாக்குக்கு சுவை தெரிகிறது என்ற ஞானம் ஏற்படும்.
இந்த சுவை என்ற சுகம் நாக்கினால் ஏற்பட்டது. அவ்வளவு தானே என்று இருப்பான்.

ஒருவன் நீங்கள் ரொம்ப அறிவாளி சார், என்று புகழ்ந்தால், காதுக்கு இனிமையாக இருக்கிறது.
ஆனால், அந்த காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்தது யார்?
ஆத்ம ஜோதியான உள்ளே இருப்பதால் தானே காதுக்கு கேட்கும் சக்தியை கிடைத்தது என்ற ஞானம் ஏற்படும்.

இந்த புகழ்ச்சி என்ற சுகம் காதினால் ஏற்பட்டது. அவ்வளவு தானே என்று இருப்பான்.
இதெல்லாம் அல்ப சுகம் என்று நிதானமாக இருப்பான்.

இந்த ஜட வஸ்துக்களான கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்றவற்றின் துணை கொண்டு ஆத்மா அனுபவிக்கும் சுகம் அல்ப சுகங்களே.

இவற்றின் துணை இல்லாமல், ஆத்ம ஜோதியான தன்னை மட்டுமே கொண்டு அனுபவிக்க தெரிந்தவன், "ஞான இன்பத்தை' அல்லவா அனுபவிக்கிறான் என்கிறார் நம்மாழ்வார்.

மகான்கள் இந்த உலகத்தில் பூத உடலை விட்டு சென்றாலும், ஆத்ம ஜோதியான அவர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். அருள் செய்து கொண்டே இருக்கின்றனர்.
காஞ்சி பெரியவர், சாய் பாபா போன்ற மகான்கள் இன்றும் ஜீவிக்கின்றனர். ஞான இன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.

'அதனில் பெரிய சுடர் ஞானஇன்பமே ஓ' - என்று  திருவாய்மொழியில் (நம்மாழ்வார்) பாடுகிறார்.

இந்த ஜட வஸ்துக்களை கொண்டு, ஆத்ம ஜோதியான நீ அனுபவிக்கும் அனைத்து சுகங்களும், "அல்ப இன்பத்தை" தானே தரும்.
ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, அதன் மேல் ஐந்து ஓட்டை உள்ள ஒரு மூடியை வைத்து மூடி விட்டால், அந்த தீபத்தின் வெளிச்சம் சுதந்திரமாக எங்கும் பிரகாசிக்க முடியாமல், எப்படி வெளிச்சத்தை அந்த ஐந்து ஓட்டைகள் வழியோடு மட்டும் காட்டி, சிறை படுமோ,
அது போல,
ஆத்ம ஜோதியான நீ, ஆனந்தத்தை சுதந்திரமாக அனுபவித்த நீ, இந்த உடம்பு என்ற சிறையில், கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற ஐந்து ஓட்டைகள் வழியாக மட்டும் சுகத்தை அனுபவித்து, கைதியாக இருக்கிறாய்.



இதிலும், 'தான்' சிறையில் உள்ள ஆத்ம ஜோதி என்பதை அறியாமல், ஐந்து ஜன்னல் உடைய சிறைச்சாலையான இந்த உடம்பையே தான் என்று நினைத்து அஞானத்தில் மூழ்குகிறாய்.

நீ அனுபவித்த எல்லையில்லா இன்பத்தை தடுத்து, இந்த ஐந்து ஜன்னல் வழியாக மட்டும் சுகத்தையே பேரின்பமாக நினைக்காமல், இந்த ஜட வஸ்துக்களான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இல்லாமல் சுகத்தை அனுபவிக்க தெரிந்தவன் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

கண் என்ற வஸ்துவை கொண்டு தான் பார்க்க முடியுமானால், கண் என்ற ஜன்னல் கொடுக்கும் அளவு தான், ஆத்ம ஜோதி உனக்கு இன்பம் கிடைக்கிறது.

காது என்ற வஸ்துவை கொண்டு தான் கேட்க முடியுமானால், காது என்ற ஜன்னல் கொடுக்கும் அளவு தான், ஆத்ம ஜோதி உனக்கு இன்பம் கிடைக்கிறது.

இந்த உடம்பு என்ற சட்டையை கழற்றினோம் என்றால், அற்பமாக கிடைத்த சுகங்கள் போய், அகண்டமான எல்லையில்லா சுகம் இந்த ஆத்மாவுக்கு கிடைக்கிறது.

இந்த ஐந்து புலன்கள் வழியாகவே கிடைக்கும் இன்பத்தை கொண்டு எத்தனை ஜென்மங்கள் உழல்வேன்? என்கிறார் ஆழ்வார்.
எப்பொழுது இந்த உடலை விட்டு பிரிந்து, எல்லையில்லா ஆனந்தத்தை பெறுவேன் என்கிறார்.

சுதந்திரமான ஆத்மா பேரின்பத்தை அனுபவிக்க ஆசையில்லாமல், இந்த உடம்பினால் அனுபவித்த சிற்றின்பத்தை ஆசைப்பட்டால், சிற்றின்பமே கிடைக்கும்.

உடலை நினைத்தே உயிரை விடுபவன் முக்தி அடைவதில்லை. மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.

வைகுண்டம் நம்முடைய சொத்து. அங்கு அனுபவித்த பேரின்பமும் நம்முடையது, என்று இருக்க, "வைகுண்டமும் வேண்டாம், பேரின்பமும் வேண்டாம்" என்று இருக்கலாமா?
உலக ஆசையை தள்ளி, பேரின்பத்தை நாடி, வைகுண்டம் அடைவது மண்ணவற்கு விதியே என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

எப்பொழுது வரை நாம் அழியக்கூடிய பொருளை விரும்புகிறோமோ, அதுவரை, பிறப்பு வந்து கொண்டே இருக்கும்.
அழியக்கூடிய பொருளை விரும்பினால், அழியக்கூடிய பொருளே கிடைக்கும்.

எந்த ஜென்மத்தில் நமக்கு அழிவில்லாத இந்த ஆத்ம ஜோதியே 'நான்' என்ற தெளிவு பிறக்கிறதோ, நான் அடைய வேண்டியது அந்த பரமாத்வான நாராயணனை மட்டுமே என்று அறிந்து கொள்கிறானோ, அதுவே அவனது கடைசி பிறவி ஆகிறது. அந்த ஆத்மா முக்தி அடைந்து விடுகிறான்.

அழியக்கூடிய எதை ஆசைப்பட்டாலும் அதில் கிடைக்கும் இன்பமும் அழியக்கூடியதாகவே உள்ளது.
அதனால் தான்,
நமக்கு சுகம் என்று வந்தால், அதை தொடர்ந்து துக்கம் வருகிறது.
ஆரோக்யமாக இருக்கிறோம் என்று நினைத்தால், ஒரு நாள் நோய் வருகிறது.
லாபம் என்றால், நஷ்டம் வருகிறது.

உலகம் சுகமாக இருக்கிறது என்று நினைக்கிறான் உடம்பே "நான்" என்று நினைக்கும் அஞானி.
ஆனால் உலகம் உண்மையில் பயங்கரமாக இருக்கிறது.
கல்யாணம், விசேஷம், குழந்தையின் மழலை பேச்சு, அருமையான இசை, நிலா, சுமங்கலியான பெண்கள், பசு மாடு, வசதியான வாழ்க்கை
இவை அனைத்தையும் பார்க்கும் போது உலகம் சுகமாக இருக்கிறதே என்று தோன்ற செய்தாலும்,
கொஞ்சம் விவேகத்துடன் பார்த்தால்,

  • குழந்தையாக இருக்கும் போதே மரணம்,
  • கல்யாணம் ஆகி சில வருடத்தில் கணவன் மரணம், விதவையாகும் பெண்,
  • பெற்றவள் இருக்க, மகன் இறந்து விடுகிறான்,
  • மனைவி இறந்து, கணவன் அழுகிறான்,
  • அதை விட சோகம், குழந்தை, மனைவியை விட்டு விட்டு, கணவன் இறந்து விடுகிறான்.
  • இளமையான பையன் திடீரென்று இறந்து விடுகிறான்,
  • தாங்க முடியாத வியாதிகள்.

இவையெல்லாம் உலகத்தில் நாம் அனைவரும் பார்க்கிறோமே.

அல்ப காலம் வாழ கிடைத்த இந்த உடம்பை வைத்துக்கொண்டு, கொஞ்சம் விவேகமுள்ள எவன் தான் இந்த உலகம் சுகமானது என்று சொல்லி இங்கு வாழ ஆசைப்படுவான்?

இந்த துக்கமான உலகத்தில் இருந்து எனக்கு விமோசனம் கிடைக்காதா? என்று தானே நினைப்பான்.
உலக துக்கம் தாளாமல், தற்கொலை செய்து கொண்டு விடுவோம் என்று கூட சிலர் துணிந்து விடுகிறார்களே. 

தற்கொலை செய்து கொண்டாலும், மீண்டும் பிறக்க வேண்டுமே! 
அழிவில்லாத சுகம் இந்த உலகத்தில் பார்க்க முடியவில்லையே..

நோய்களும், துன்பங்களும் துரத்தும் இந்த உலகத்தில், இருந்து விடுபட, இந்த ஆதம் ஜோதி "நான்" என்று அறிந்து, பக்தி செய்து மோக்ஷம் போவதை தவிர நமக்கு வழி இல்லையே..
இதனால் தான், ஆழ்வார் "வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே" என்று சொல்கிறார்.

இந்த உலக துன்பத்தில் இருந்து தப்பிக்க, ஆத்ம ஜோதியான நாம் வைகுண்டம் அடைய முயற்சிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால், மண்ணில் பிறந்த அனைவரும், 
"வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே" என்கிறார் நம்மாழ்வார்

திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாசுரம்.
"வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே"
என்று சொல்கிறார்.

உலக துன்பத்தில் இருந்து தப்பிக்க, வைகுண்டம் போகவேண்டியது தவிர வேறு வழியில்லை என்பதால், வைகுண்டம் புகுவது நம் விதியே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம் இது தான்.

உலகம் துன்பத்தால் சூழ்ந்து  இருப்பது புரியாதவரை "வைகுண்டம்" என்ற சொல் கூட புரியாமல் தான் இருக்கும். ஏளனமாக கூட இருக்கும்.

பணம் இருக்கும் போதும், இளமை இருக்கும் போதும், புதிதாக கல்யாணம் ஆகி இருக்கும் போதும், அகம்பாவம் (கர்வம்) மறைக்கும் போது, "வைகுண்டம்" ஏளனமாக கூட இருக்கும்.
ஆனால், விவேகமுள்ளவன், எந்த நிலையிலும் "இது எவ்வளவு நாளுக்கு?" என்று கேட்டுக்கொள்ளும் போது,
பின் வரக்கூடிய முதுமை, மரணம் போன்றவற்றை அறிந்து, அகம்பாவம் இல்லாமல், பக்தி செய்து வைகுண்டம் அடைய முயற்சி செய்வான்.

இன்றைய விஞ்ஞான உலகத்தில், இந்த சுகத்தை நிரந்தரமாக செய்ய பெரும் முயற்சி செய்கிறார்கள்.
தானே விசிறி கொள்ளாமல் இருக்க, ac, fan செய்துள்ளனர்.
காலால் நடப்பதற்கு பதில் bus, train, flight செய்துள்ளனர்.
உடல் ஆரோக்கியமாக இருக்க ஏதேதோ  மருந்து தயாரிக்கின்றனர்.

நூறு வயது ஆனாலும், இளமை ஆரோகிக்கியம் குறையாத மருந்து தயாரிக்க வேண்டியது தானே?
சாகாமல் இருக்க, மருந்து தயாரிக்க வேண்டியது தானே?. இன்று வரை முடியவில்லையே.



இன்றைய விஞ்ஞானம் எப்படியாவது உலகத்தில் அழியா சுகம் கிடைக்க வைக்க முயற்சி செய்கிறது.

முதுமையும், மரணமும் நிச்சயமாக உள்ள இந்த உலகில், எந்த முயற்சியும் எடுபடாது என்பதை உணர்ந்த நம் ரிஷிகள், இவர்கள் முயற்சிகளை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை. நம்பவும் இல்லை.

இந்த வசதிகள் புராணத்திலும் இருந்ததே. புஷ்பக விமானம் என்று flight ராமாயண காலத்திலேயே சொல்லப்பட்டு உள்ளதே. காலால் நடக்காமல் இருக்க தேர் இருந்தது.
இதையெல்லாம் நம் ரிஷிகள் பெரிய விஷயமாக கருதவில்லையே.
இந்த வெளி சுகங்களை நம்பவில்லையே நம் ரிஷிகள்.
தாற்காலிகமாக உள்ள இந்த சுகங்களை நம் ரிஷிகள் நம்பவில்லையே.

எத்தனை பெருமையாக வாழ்ந்தாலும், சுகமாக வாழ்ந்தாலும், "தாற்காலிகம்" தானே.

இறந்த பின், எவனாக இருந்தாலும் மண்ணோடு மண்ணாகவோ, பொசுங்கியோ போக வேண்டியது தானே இந்த சரீரம்.

"பஸ்மாந்தகம் சரீரம்" என்ற ஒரு சொல்லில் வேதம் உண்மையை சொல்லி விடுகிறதே.

கோடீஸ்வரனானாலும், இறந்து விட்டால், தங்கத்தாலா பாடை கட்டுவார்கள்?

இந்த சரீரம் ஒரு நாள் சாம்பலாகி விடும் என்று வேதம் சொல்லும் போது, இந்த உலகத்தின் தாற்காலிகத்தை தானே அது நமக்கு சொல்கிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தில் பல இடங்களில் இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை, மரணத்தின் போது ஏற்படும் துன்பங்களை எடுத்து எடுத்து நமக்கு காட்டுகின்றனரே, எதற்காக?
"தற்காலிகமான வாழ்க்கையை நம்பாதே" என்பதற்காக தானே.

"ப்ரம்ம லோகம் வரை அழிய கூடியது என்று இருக்கும் போது,50-100 வயது வரை வாழும் அல்ப வாழ்க்கையை நம்பாதே.
அகம்பாவம் அகற்றி, வைகுண்டம் அடைய நாராயணனை சரணம் செய்"
என்று ஆழ்வார்கள் வழி காட்டுகின்றனரே.

சொர்கலோகம் சென்றாலும் உலகத்திற்கு திரும்ப வேண்டும்.

பிரம்மாவின் இரவு பொழுதில்,
நைமித்திய பிரளயம் ஏற்பட்டு, சொர்கலோகம் ஆரம்பித்து, பூலோகம், பாதாளம் வரை அழிந்து விடும்.
மீண்டும் அவருடைய பகலில்
ப்ரம்மா மூன்று லோகங்களை மீண்டும் ஸ்ருஷ்டி செய்கிறார்.

பிரம்மாவின் ஆயுசு முடியும் பொழுது,
பரமபத நாதனான நாராயணனால் மகா பிரளயம் ஏற்பட்டு,
சொர்கலோகத்துக்கு மேல் உள்ள மகர (நக்ஷத்திர) லோகம், ஜன லோகம்,தப லோகம், சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகம் உட்பட  பூலோகம், பாதாளம் வரை சேர்த்து 14 லோகங்களும் அழிந்து விடுகிறது.
பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று எதுவுமே இல்லாது போகும்.
அந்த நிலையிலும், அழியாமல் இருப்பது நம்முடைய ஆத்ம ஜோதியும்,
வைகுண்டமும் தான். 
வைகுண்டத்தில் நாராயணன் யோக நித்திரையில் இந்த ஜீவ ஆத்மாக்கள் அனைவரையும் தன் இதயத்தில் வைத்து, 14 உலகங்களை தன் திரு வயிற்றில் வைத்து இருந்து, மீண்டும் தன் சங்கல்பத்தால் 14 லோகங்களை ஸ்ருஷ்டி செய்து, பிரம்மாவை நியமித்து, மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் மீண்டும் பிறக்க வைக்கிறார்.

இந்த பிரளய காலத்தில், பரமாத்மாவாவின் இதயத்தில் இருந்து பேரின்பத்தை எங்கு இருந்து அனுபவித்தோம் என்று தெரியாமல் அனுபவித்த நாம், உலகத்தில் பிறந்தாலும் ஆனந்தத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம்.

அறியாமல் பேரின்பத்தை அனுபவித்ததால், உலகில் கிடைக்கும் சிற்றின்பத்தை எல்லாம் அடைய முயற்சி செய்து, துன்பத்தை அடைகிறோம்.

ஸத் என்ற அழிவில்லாத வைகுண்டம் அடைவதை தவிர, பரமாத்மாவை அடைவதை தவிர, ஆத்ம ஜோதியான நமக்கு, உலக துன்பங்களில் இருந்து விடு பட வேறு வழியில்லை.

நாம் இந்த உடம்பு அல்ல, "ஆத்ம ஜோதி"யே நாம் என்று அறிவோம்.
நாராயணனிடம் பக்தி செய்து, வைகுண்டம் அடைய ஆசை படுவோம்.



Friday 14 September 2018

நாராயணனே பரம்பொருள். பின்பு ஏன் பல தெய்வ வழிபாடு வேதத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது?

முசுகுந்த சக்கரவர்த்தி, ப்ருகு முனிவரிடம் காஞ்சிபுரம் வந்த  போது கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.
தான் ஒருவனே தெய்வம் என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் மற்ற தெய்வங்களையும் உலகிற்கு வேதத்தில் வெளிக்காட்டி, பேதமாக காட்டி கொள்வது ஏன்? பல தெய்வங்களாக காட்டிக்கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.
ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.

மகா கருணை உடையவர் நாராயணன்.




தான் ஒருவனே தெய்வம் என்றாலும்,
'தன்னை நேரிடையாக வணங்கினால் தான், அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன்' என்று பிடிவாதம் செய்வதில்லை.
எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு ஒரே ஒரு  மருந்தை மட்டும் கொடுக்காமல், அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல,
சர்வேஸ்வரனான நாராயணன்,
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன்,
ருத்திரனை வழிபட்டால் இந்த பலன்,
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் மோக்ஷம் என்று, பிரித்து,
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு, அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணன், பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
"படைத்தல், காத்தல், அழித்தல்" என்ற மூன்று காரியங்களுக்கு,
- ப்ரம்மாவை படைக்கும்” தொழிலை செய்யுமாறு படைத்தார்.
- சிவபெருமானை பிரளய காலத்தில் “சம்ஹாரம்” என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார்.
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
- தானே காக்கும்” தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.




முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி "உபேந்திரன்" என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்கள், இவரும் ஒரு தேவன் தானே என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா, திடீரென்று, மீனாகவும், பன்றியாகவும் தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.
ரிஷிகளுக்கு நடுவே ஒரு ரிஷியாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு மனிதனாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

“தான் ஒருவனே தேவன்” என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.




உபேந்திரனும் தன்னை போன்ற ஒரு தேவன் தானே! என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தானே என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், சாமானிய மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இப்படி தேவர்களுக்குள் தேவனாக, மனிதர்களுக்குள் மனிதனாக, மீன்களில் ஒரு மீனாகவும் கருணையின் காரணமாக அவதாரம் செய்து விடும் இவரை, பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் "குணத்தாலும், சரித்திரத்தாலும்" மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில் தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
"வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?"
என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா,
"யார் வேண்டுமானாலும் தன்னை 'பரம்பொருள்' என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், 'நாராயணன் மட்டுமே பரப்ரம்மம்' என்று சொல்கிறதே.
அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்"
என்று பதில் சொன்னார்.




(பரப்ரம்மமான புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? யார் ஒருவரே புருஷன்? Further read,
http://www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகிக்கொண்டு, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று அறிந்து இருந்தான். நாராயணனே எங்கும் உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
"என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார்.
உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்." என்றான்.

பேதமாக உலகம் அஞானிக்கு தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.

ஞானிக்கு அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து உலகம் பேதமாகவும், அபேதமாகவும் தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து வேதத்தில் சொன்ன தெய்வங்கள் அஞானிக்கு பேதமாகவும், ஞானிக்கு அபேதமாகவும் தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து,
சிலருக்கு த்வைதமாக தெய்வங்கள் தெரிவதும் உண்மை.
சிலருக்கு அத்வைதமாக தெரிவதும் உண்மை.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து, இரண்டுமே உண்மை என்பதால், வேதம் ஒரு இடத்தில் ஒரே தெய்வம் தான் என்கிறது. மற்றொரு இடத்தில் விஷ்ணு, சிவன், இந்திரன் என்று பிரித்து தெய்வங்கள் பல என்றும் காட்டுகிறது.

வேதத்தின் அபிப்ராயப்படி  இரண்டுமே உண்மை என்று  இருப்பதால், விஷிஷ்ட அத்வைதமே மார்க்கம் என்று காட்டுகிறது.

விஷிஷ்டஅத்வைதம், த்வைதம்-அத்வைதம் இரண்டையும் ஒப்புக்கொள்கிறது.

அத்வைதம் என்ற ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனையே எங்கும் கண்டான். நாராயணனையே பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். உனக்கும் தரிசனம் கிட்டும். மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.

சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.





Thursday 13 September 2018

த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் பற்றி ப்ருகு முனிவர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோமே...

இக்ஷ்வாகு என்ற சூரிய வம்சத்தில், "முசுகுந்தன்" என்ற சக்கரவர்த்தி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
இவர் க்ருத யுகத்தில் இருந்தவர்.
"ஸ்ரீ ராமர்" அவதாரத்துக்கும் முன் இருந்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி.
3102 BCல் கலியுகம் ஆரம்பித்தது.
கலியுகத்துக்கு முன், துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்.
இதற்கும் முன் த்ரேதா யுகம். த்ரேதா யுகம் 12, 96,000 வருடங்கள்.
இதற்கும் முன் க்ருத யுகம் 17,28,000 வருடங்கள்.


ஆக குறைந்த பட்சம், 20 லட்ச வருடங்கள் முன் இருந்தவர் "முசுகுந்த சக்கரவர்த்தி" என்று நாம்  அனுமானிக்கலாம்.

ஸ்வபாவத்திலேயே இவர் தார்மீகர்.
இயற்கையாகவே அடக்கம் உள்ளவர்.
விஷ்ணு பக்தி உடையவர்.
தன் மக்களை சிறப்பாக தர்ம வழியில் பரிபாலித்து வந்தார்.
சத்யம் மீறாதவர்.
சூர்யவம்ச அரசர்கள் யாவரும் சத்தியத்துக்காக உயிரையும் தியாகம் செய்ய துணிந்தவர்களாக இருந்தனர்.
மகா வீரர்.
இதனால் தான் பிற்காலத்தில், இந்த பரம்பரையில் ஸ்ரீ ராமராக அவதரிக்க திருவுள்ளம் கொண்டார் பரவாசுதேவன்.

ஒரு சமயம், அயோத்யாவில் இருந்து, தீர்த்த யாத்திரையாக தன் பரிவாரங்களுடன், ஒவ்வொரு க்ஷேத்ரமாக சென்று சேவிக்கலாம் என்று புறப்பட்டார்.

அயோத்தியில் இருந்து, மதுரா, மாயா, கயா, வாரணாசி போன்ற க்ஷேத்ரங்கள் தரிசித்து, தென் பாரதம் முழுக்க ஒவ்வொரு க்ஷேத்ரமாக தரிசித்து, ஒரு சமயம், நம் தமிழகத்துக்கு வந்தார். 
காஞ்சிபுரத்திற்கு வந்து தங்கினார்.

காஞ்சியில், "ஹேம சரஸ்" என்ற பொற்றாமரை குளம் இருந்தது.
அங்கேயே தங்கி இருந்தார்.
அந்த சமயம், ரிஷியான "ப்ருகு" முனிவரை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றார்.

(தமிழ் நாட்டில் நடந்த சரித்திரம் என்று கவனிக்கும் போது, நம் பெருமை நமக்கு புரியும்)

பொதுவாக, நாம் ஒவ்வொருவருக்கும் மனதில், சில விடை தெரியாத கேள்விகள் எழுவது உண்டு.

'விடை தெரியாத கேள்விகளுக்கு, பதிலை அறிய, நாம் சரியான பதில் தெரிந்தவர்களிடம் சென்று, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்' என்று சாஸ்திரம் சொல்கிறது.

ப்ருகு ரிஷியை பார்த்த முசுகுந்த சக்கரவர்த்தி, நமஸ்கரித்து, ஆர்வத்தோடும், அடக்கத்தோடும், ஸ்ரத்தையோடும் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டார்,

"உங்களை தரிசித்த பாக்கியம் பெற்றேன்.
வேதம், பொதுவாக பல தெய்வங்களை பற்றி பாடுகிறது.
வேதத்தில் ப்ரம்ம ஸூக்தம் இருக்கிறது.
ருத்ர ஸூக்தம் இருக்கிறது.
இது போன்று
இந்திரன், வருணன், அஸ்வினி குமாரர்கள், அக்னி, சூரியன், 
யமன், சோமன், வாயு, ப்ரம்மனஸ்பதி, விஸ்வேதேவர்கள், 
மருத்து, ரிபுக்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள்,  விஷ்ணு 
என்று எல்லா தெய்வங்களுக்கும் வேத மந்திரங்கள் உள்ளது.

வேத வாக்கும் சத்தியம். இவர்கள் கற்பனையான தெய்வங்களும் இல்லை.
இவர்கள் அனைவரும் நிஜமாகவே இருக்கிறார்கள் என்றும் வேதம் சொல்கிறது.




இவ்வளவு தெய்வங்களுக்குள்ளே, யார் உயர்ந்தவர்? ச்ரேஷ்டமானவர்?

யாரை ஆராதித்தால், கோரமான ஸம்ஸாரத்தில் இருந்து கரையேற முடியும்?

'மோக்ஷம்' என்ற ஐஸ்வர்யம் யாரை ஆராதித்தால் கிடைக்கும்?

தெய்வங்களுக்குள்ளே பேதம் (வேற்றுமை) உண்டா? அபேதமா?

இதில் உமக்கு எது சம்மதம்?

சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் உண்டு' என்று சொல்கிறார்கள்.
சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் இல்லை' என்று சொல்கிறார்கள்.

எனக்கு உள்ள இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

நீங்கள் சர்வஞர், அனைத்தையும் உண்மையாக அறிந்தவர்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் இருக்கிறதோ, இல்லையோ, எப்படி இருந்தாலும், நான் ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம் எது?

நீங்கள், இதை நிர்ணயம் செய்து எனக்கு சொல்ல வேண்டும்.
எனக்கு எது பாதை? என்று சொல்ல வேண்டும்."
என்று கேட்டார் முசுகுந்த சக்கரவர்த்தி.

ப்ருகு பேசலானார்,
"முசுகுந்த சக்கரவர்த்தி! தெய்வங்களை, மனிதர்களை பார்ப்பது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அனுமானம் செய்ய கூடாது.

மனிதர்கள் பஞ்ச பூதங்களில் "நிலத்தில்" இருந்து உருவானவர்கள். கண்ணால் பார்க்கும் படியாக, உருவம் தரித்தவர்கள்.

வேதத்தில் உள்ள தெய்வங்கள் மனிதர்களின் கண்களுக்கு  அரூபமானவர்கள்.

மனிதன் ஒரு விஷயத்தை நம்புவதற்கு, கண், காது, நாக்கு, மூக்கு, ஸ்பரிசம் போன்ற உறுப்புகளே ஆதாரமாக உள்ளது.

மனிதன் பார்க்க முடியாத விஷயங்களும் உலகில் இருக்கிறது.
அதை உணருவதற்கும், நம்புவதற்கும், இந்த உறுப்புகள் மட்டும் போதாது.

கண்ணுக்கு தெரிந்த விஷயங்களுக்கு சாஸ்திரத்தின் தேவை இருக்காது. நாமே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு யானையை சாஸ்திரம் கொண்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கண் இருந்தாலே போதுமானது.

உலகத்தில் கண்ணுக்கு தெரியாத விஷயத்தை ஒருவன் எப்படி தான் தெரிந்து கொள்ள முடியும்?
வேத சாஸ்திரமே கதி"
என்றார் ப்ருகு முனிவர்.

இதையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  துவாபர யுகத்தில் அவதாரம் செய்த போது,
"தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே"
என்று
"சாஸ்திரத்தை கொண்டு தான் நாம் செய்யும் செயல், தர்மமா? அதர்மமா?"
என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ப்ருகு மேலும் பேசலானார்,
"பரமாத்மா யார்? அவர் எப்படி இருப்பார்? என்ற நமக்கு அப்பாற்பட்ட கேள்விக்கு, பதிலை சாஸ்திரத்தின் துணை கொண்டே பெற முடியும். சாஸ்திரமே கதி.


நாமாக பரமாத்மா இப்படி தான் இருப்பார் என்று உருவாக்கி, ஏமாற்ற கூடாது.

வான்வெளியில் என்ன நடக்கிறது?
நம் உடம்புக்குள்ளே என்ன நடக்கிறது?
வெளிநாடுகள் எப்படி இருக்கிறது?
என்ற பல கேள்விகளுக்கு, அதனை பற்றி ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள், சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் அனுபவத்தில் எழுதி வைத்த புத்தகங்களுமே (சாஸ்திரமே) நமக்கு ப்ரமாணம் ஆகிறது அல்லவா?

அந்த புத்தகங்கள் (சாஸ்திரம்) என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து, நாமும் சென்றால், நாமும் வெளிநாடு இருப்பதை காண முடிகிறது.

நம்மாலும், உடலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று கணிக்க முடிகிறது.

விண் வெளியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆக, ஐந்து புலன்களால், நாம்  அறிய முடியாத விஷயங்களும் உண்டு என்பதை மனிதன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்து புலன்களால், அறிய முடியாத விஷயங்களையும் நாம் உணர்ந்து கொள்ள, அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஞானிகள், வழியில் சென்று பார்த்தால், நமக்கும், புரியாத பல விஷயங்கள் புரியும்.

மனிதர்கள், கண்ணால் காண முடியாத விஷயங்களும், இருப்பதை உணர்வதற்கு தேவையான அடிப்படையான தகுதிகள் :
1. அந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை.
2. அவர்கள் எழுதிய புத்தகத்தின் (சாஸ்திரம்) படி முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

எப்படி உலகத்தில், காண முடியாத விஷயங்களை, உணர்வதற்கே, நாம் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியை, அவன் எழுதிய புத்தகத்தை (சாஸ்திரத்தை) நம்புகிறோமோ,
அதுபோல,
உலகத்திற்கும் மேல், கண்ணால் காண முடியாத தேவர்களை உணர, தேவர்களை நேரில் பார்த்த ரிஷிகளையும், அவர்கள் கொடுத்த வேத சாஸ்திரத்தையும்  நம்ப வேண்டாமா?

தேவர்களை பொறுத்தவரை, மனிதன் மிகவும் 'அற்ப பிறவி'.
மனிதன் பூமியில் நிரந்தரமாக, வாழ முடியாதவன். 
மரணம் நிச்சயம் உடையவன்.
மோக்ஷம் அடையும் வரை,  மீண்டும் பிறந்து, இறந்து பூமியில் சுழன்று கொண்டே இருப்பவன்.
தேவர்களை பொறுத்தவரை, மனிதன் அற்பமானவன் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.

தன் வீட்டின் சுவற்றிக்கு பின்னால் என்ன நடக்கிறது? என்று தானே அறிய முடியாதவன்.
நாளை என்ன நடக்க போகிறது?  என்றும் தெரியாதவன்.
5 வயதில் என்னென்ன செய்தோம்? என்பதை மறந்தவன்.
படித்த பல விஷயங்கள் மறந்து போய், சில விஷயங்கள் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எத்தனையோ பேரை வாழ்நாள் முழுதும் பார்த்தும், சிலர் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எப்பொழுது தனக்கு மரணம்? என்றும் அறியாதவன்.

நம் புத்தி அற்பமானது என்று நமக்கே புரிகிறதே !!
இந்த அற்ப புத்தியை கொண்டு, 'தேவர்களை பற்றி எப்படி நம் புத்தியை கொண்டு  அனுமானிக்கலாம்?'

நம் புத்தியை கொண்டு தெய்வம் 'இப்படி தான் இருக்கும்' என்றால், 
யார் வேண்டுமானாலும் கற்பனையாக தெய்வங்களை உருவாக்கி விடலாமே?

இப்படி பொய் மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுமே? அது எப்படி உண்மையாகும்?
அது எப்படி தெய்வமாகும்?


இப்படி மனித புத்தி கொண்டு உருவாக்கப்படும் எந்த தெய்வமும் தெய்வமில்லை, எந்த சாஸ்திரமும் சாஸ்திரமில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் சங்கிலியை கட்டி, இதோ தெய்வம் என்பர்.

மனிதனால் புதிதாக பெயர் கொடுத்து உருவாக்கப்பட்ட தெய்வங்கள் 'உண்மையான தெய்வங்கள் இல்லை'.
அங்கு ஏற்படும் அலைகள் யாவும் மன வியாதியே.
பலர் சேர்ந்து "இது தெய்வம், இது தெய்வம்" என்று சொல்லி, ஒரு மன வியாதியை உருவாக்கிவிடலாம்.

கண்ணால் காண முடியாத தெய்வங்களை, ரிஷிகள் பார்த்து, நமக்கு வேத சூக்தங்களாகவும், புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் அருளினர்.

வேத சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் நாமும் சென்று, அதன்படி செய்யும் போதுதான், தெய்வங்களை நாமும் உணர முடியும்.




தெய்வங்களை நேரில் பார்த்த ரிஷிகள் கொடுத்த வேதத்தை கொண்டே தெய்வத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

ரிஷிகளின் வாக்கில் வந்த வேதத்தில் 'இந்திரன், வருணன், ருத்ரன், விஷ்ணு, யமன்' என்று பல தேவதைகளின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த தேவதைகள் அனைவரும் "உண்மை" என்பதை நீ வேதத்தின் வாக்கினாலும், ரிஷிகளின் சுய அனுபவத்தாலும் நம்பலாம்.

வேத சாஸ்திர படி, வருண ஜெபம் செய்தால், மழை பெய்யும். 
இதை நீயும் அனுபவத்தால் உணரலாம். 
வருண தேவன் உண்மையில் தேவனே என்று உணர்வாய்.

வேதத்தில் சொல்லாத, மனிதன் கற்பித்த தெய்வங்களை, தெய்வங்கள் என்று நம்பி விடாதே.

மெய் ஞானிகளான (உண்மையை அறிந்த) ரிஷிகள் அளித்த வேதத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதுவே ப்ரமாணம் என்று உணர்வாயாக. 
அதில் உள்ள தேவதைகளே உண்மையான தெய்வங்கள்.

தனக்கு தோன்றிய தேவதைகளை மனிதர்கள் உருவாக்கி கஷ்டப்படுகிறார்கள். தன்னையே ஏமாற்றி கொள்கிறார்கள்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 
"பேதம் இல்லை" என்பதாக சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.

ச ப்ரம்மா சசிவஸ்தேதிஹ்ய
வேத ஸ்ருதி வாக்ய:
என்று வேதம் சொல்லும் போது, 
'அவனே ப்ரம்மா, அவனே சிவன், அவனே விஷ்ணு 
அவனே எல்லாமுமாக இருக்கிறார்'
என்று அபேதமாக சொல்கிறது.

அபேதம் தெரிவதால், 'அத்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது."
என்றார் ப்ருகு.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 'பேதம் உண்டு' என்பதாகவும் சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.
'இந்திரன், விஷ்ணு, ருத்ரன் போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள்' என்று வேதமே பிரித்து காட்டுகிறது.


இப்படி பிரித்து சொல்வதாலேயே, தெய்வங்களுக்குள்ளே  'பேதம்' இருப்பது தெரிகிறது.

யார் ச்ரேஷ்டமான தெய்வம்?
யாரை வணங்கினால் எனக்கு மோக்ஷம் கிடைக்கும்?
சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்? என்று கேட்டாய்.

அக்னிர் தேவானாம் அவம:
விஷ்ணு பரம:
என்று வேத வாக்கியம் இருக்கிறது.

'விஷ்ணு' முதல் தெய்வமாகவும், 
'அக்னி' கடைசி தெய்வமாகவும் இருக்க, 
வேதத்தில் சொன்ன அனைத்து 'பிற தேவதைகளும்' இவர்களுக்கு அந்தர்கதமாக இவர்களுக்கு 'இடையில் இருக்கின்றனர்' 
என்கிறது வேதம்.
இதன் காரணமாக தான், ப்ரம்மத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்கள், அக்னி வளர்த்து, விஷ்ணுவை ஆராதனை செய்கிறார்கள்.

'அக்னியையும், விஷ்ணுவையும் பூஜித்தால், இவர்களுக்கு இடையில் இருக்கும் அனைத்து தேவர்களையும் பூஜித்ததாகும்' 
என்று வேதமே அங்கீகரிக்கிறது.
விஷ்ணு: பரம:
என்று வேத ஸ்ருதி சொல்கிறது.
'விஷ்ணுவே பரப்ரம்மம்'
என்று சொல்லும் வேதம், மற்ற தெய்வங்களுக்குள்ளே, அனைத்திலும் அந்தர்யாமியாக விஷ்ணுவே இருக்கிறார் என்று சொல்கிறது.

இப்படி, அக்னி, விஷ்ணு, இந்திரன் என்று வேதமே பிரித்து காட்டுவதால், 'பேதம்' தெளிவாக தெரிகிறது.
பேதம் தெரிவதால், 'த்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது.

மேலும், 
'தெய்வங்களில் ச்ரேஷ்டமான தெய்வம் யார்?' 
என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதமே பதில் சொல்கிறது.
நம் புத்தியால் சொல்லக்கூடாது.

வேதமே, விஷ்ணுவாகிய "நாராயணனே" முதல் தெய்வம் என்று சொல்கிறது.
'நீ அவரை உபாசித்தால், உனக்கு மோக்ஷம் கிடைக்கும்' என்பதில் சந்தேகமில்லை"
என்றார் ப்ருகு ரிஷி.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டா, இல்லையா? என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதம் இரண்டுமே உண்மை தான் என்று சொல்கிறது.


சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டு' என்று, த்வைதமாக சொல்கிறது.
சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் இல்லை' என்று, அத்வைதமாகவும் சொல்கிறது.

வேதமே பேதத்தையும் (த்வைதம்), அபேதத்தையும் (அத்வைதம்) சொல்லுவதால், இரண்டுமே உண்மை தான்.
வேதம் பொய் பேசுவதில்லை.

'தெய்வங்கள் வெவ்வேறு' என்று பேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்க கூடாது.
அதேபோல,
அனைத்தும் 'ஒருவனே' என்ற அபேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டும் முடிவு எடுக்க கூடாது.

வேதத்தின் உட்பொருளை உணரும் போது, வேதத்தின் உண்மையான அபிப்ராயம் என்ன? என்று புரிந்து விடும்.

தெய்வங்களுக்குள்ளே பேதமா, அபேதமா? அதில் உமக்கு எதில் சம்மதம்? என்று கேட்டாய்.
வேதத்திற்கு எது சம்மதமோ, அதுவே என் சம்மதம்.

'வேதம் ஒரு இடத்தில் அபேதமாக இருக்கிறார் என்றும், மற்றொரு இடத்தில் பேதமாக இருக்கிறார் என்று சொல்வதே' எனக்கும் சம்மதம்.
'அத்வைதமும் உண்மை, த்வைதமும் உண்மை' என்பதால், இரண்டையும் சேர்த்து ஏற்று கொள்ளும் விஷிஷ்ட அத்வைதமே வேதத்தின் உண்மையான அபிப்ராயமாக உள்ளது.

இதுவே என் அபிப்ராயமும் கூட.

(947 AD முதல் 1947 AD வரை, பாரத தேசத்தில், ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, த்வைதம், அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம் போன்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்த “ஆதிசங்கரர்”, “ஸ்ரீ ராமானுஜர்”, “மத்வ ஆச்சாரியார்” அவதாரம் செய்து, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தனர் . Further read - http://www.proudhindudharma.com/2018/05/947-1947.html )

வேதம் அபேதமாக பேசும் போது, பரப்ரம்மமாக இருக்கும் அந்த லட்சுமி பதியான விஷ்ணுவே, மற்ற அனைத்து ஜீவனிடத்திலும், அனைத்து உலகத்திலும் பரவி இருக்கிறார் என்கிறது.
அவரே பரப்ரம்மம்.
அவர் ஒருவரே பரமாத்மா. 
அவர் ஒருவரே என்றும் இருப்பவர். 
அவரே அனைத்துமாக இருக்கிறார் என்று சொல்கிறது.
இதுவே உண்மை.
வேதம் 'பேதமாக' பேசும் போது, 
சிவன், யமன், இந்திரன், என்று பல தெய்வங்களை பெயர் குறிப்பிட்டு சொல்கிறது.

நாராயணனே பரவாசுதேவன் என்று சொல்லும் வேதம், அக்னி தேவனை உயர்த்தியும்  ஸ்தோத்திரம் செய்கிறது.


வேதம் 'அபேதமாக' சொல்லும் போது, வேதம் அந்த நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை பார்த்து துதிக்கிறது.
விஷ்ணுவாக அனைத்தும் நானே என்று இருக்கும் பரப்ரம்மத்தை பார்த்து, அவன் கண்களே அக்னி தேவனாக இருப்பதை கண்டு, அவன் கண்களுக்கு ஜெய கோஷம் போடுகிறது வேதம்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, அக்னி தேவனை வேதம் துதிப்பதாக தோன்றும்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, தெய்வங்களுக்குள்ளே பேதம் இருப்பது போல தோன்றும்.

ஞானிகளுக்கு, வேதத்தில் அக்னியை குறித்து வரும் வேத மந்திரங்களை கேட்கும் போது, அந்த நாராயணனின் அங்கமாக இருக்கும் அவன் கண்களுக்கு பூஜை செய்யும் உண்மை புலப்படும்.

இப்படி இந்திரனை குறித்து வரும் வேத மந்திரங்கள் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனின் புஜங்களை குறித்து பாடுகிறது என்று புரியும்.

இப்படி பேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை என்று ஞானிகள் உணர்கின்றனர்.

நாராயணனின் அங்கங்களில் தேவதைகள் அடக்கம்.
அக்னி தேவன் அவர் கண் ஒளியாக இருக்கிறார்.
அல்ப ஆசைகளை நாடுபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை மட்டுமே தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.

மோக்ஷத்தை விரும்புபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை நினைக்காமல், நாராயணனின் கண்களாக  தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.
மேலும், 
நாராயணன் மகிழ்ச்சி அடைந்து, தன்னையே தருகிறார். பக்தி தருகிறார். பிறவி கடலில் இருந்து மீட்டு, மோக்ஷமும் தந்து விடுகிறார்.

ஒரே வேத மந்திரம் தான். 
அல்ப ஆசை உள்ளவன் அல்ப பலன்களை பெறுகிறான்.

அதே வேத மந்திரத்தை சொல்லி, ஒரு ஞானி அல்ப பலன்களையும் பெறுகிறார், மோக்ஷத்தையும் பெறுகிறார்.

இப்படி அபேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனையே பூஜை செய்கிறது என்றும் ஞானிகள் உணர்கின்றனர்.

இப்படி வேத மந்திரங்கள் எதையும் விலக்காமல், அதன் உண்மையான நோக்கத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து, இரண்டு சித்தாந்தமும்  ஒவ்வொரு விதமாக அந்த நாராயணனை தான், பூஜை செய்கிறது என்பதால், இந்த விஷிஷ்ட அத்வைதமே எனக்கும் சம்மதம்"
என்றார் ப்ருகு முனிவர்.

சந்தேகம் தீர்ந்த, முசுகுந்த சக்கரவர்த்தி மேலும் கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.

'தான் ஒருவனே தெய்வம்' என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் பல தெய்வங்களை நியமித்து, பேதமாக காட்டி கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.


ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.
மகா கருணை உடையவர் நாராயணன்.

'தன்னை நேரிடையாக வணங்கினால் தான்' அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்வதில்லை.

எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு 'ஒரே மருந்து' என்று கொடுக்காமல், 
அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல, சர்வேஸ்வரனான நாராயணன், 
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன், 
ருத்ரனை வழிபட்டால் இந்த பலன், 
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் 'மோக்ஷம்' என்று, பிரித்து, 
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணனுக்கு, பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
'படைத்தல், காத்தல், அழித்தல்' என்ற மூன்று காரியங்களுக்கு, நாராயணன்,
ப்ரம்மாவை 'படைக்கும்' தொழிலை செய்யுமாறு படைத்தார்.
சிவபெருமானை பிரளய காலத்தில் 'சம்ஹாரம்' என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார். 
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
தானே 'காக்கும்' தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி 'உபேந்திரன்' என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்களுக்கு, 'இவரும் ஒரு தேவன் தானே' என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா!!, திடீரென்று, 'மீனாகவும், பன்றியாகவும்' தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

ரிஷிகளுக்கு நடுவே ஒரு 'ரிஷி'யாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு 'மனிதனாகவும்' அவதாரம் செய்து விடுகிறார்.

'தான் ஒருவனே தேவன்' என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.

'உபேந்திரனும்' தன்னை போன்ற ஒரு தேவன் தான் என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தான் என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இவர் பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் குணத்தாலும், சரித்திரத்தாலும் மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில், தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு 'விஷ்ணுவாக' வ்யூஹ அவதாரம் செய்து கொண்டார்.


மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
'வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?' என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா, 'யார் வேண்டுமானாலும் தன்னை பரம்பொருள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், நாராயணன் மட்டுமே பரப்ரம்மம் என்று சொல்கிறதே. அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்'
என்று பதில் சொன்னார்.

(புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
யார் ஒருவரே புருஷன்? Click Here to Read )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து பழகி, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
'என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார். என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார். உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.' என்றான்.

பேதமாக உலகம் தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.
அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. 
அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது. 
இரண்டும் உண்மையாக பக்குவத்தை பொறுத்து தெரிகிறது.
இதுவே விஷிஷ்ட அத்வைதம்.

இந்த ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனை பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். 
உனக்கும் தரிசனம் கிட்டும். 
மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.



சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள அந்த “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.



Wednesday 12 September 2018

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை யார் ஆள வேண்டும்? ஒரு அலசல்

ஒரு பெரிய மனிதரை சந்திக்க, அவர் வீட்டுக்குள் நாம் சென்றால், அவர் நம்மை வரவேற்பாரா? என்பது சந்தேகமே.
வரவேற்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை.
இது சகஜம்.
நம்மை எல்லாம் படைத்தவர் நாராயணன்.



அவரை பார்க்க நாம் கோவிலுக்குள் நுழையும் போது, மனிதர்களை போல மதிக்காமல் இருப்பதில்லை நம் பெருமாள்.
வருவது ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தீர்த்தம் கொடுத்து, துளசி கொடுத்து, ஜடாரி வைத்து, தன்னை பார்க்க வந்த நம் அனைவரையும், தன் சார்பில் அர்ச்சகரை அனுப்பி உபசாரம் செய்ய சொல்லி, பின் தன் தரிசனத்தையும் தருகிறார்.
முடிந்தால் புளியோதரை, பொங்கல் என்று தன் பிரசாதத்தையும் நமக்கு தருகிறார்.
கேட்கும் நம் பிரார்த்தனைகளையும், நமக்கு நல்லது கெட்டது பார்த்து கிடைக்க அணுகிரஹமும் செய்து விடுகிறார்.
சும்மா அனுப்புவதே இல்லை பெருமாள்.

க்யூவில் நிற்கும் நாம், பெருமாளை ஒழுங்காக பார்த்தோமா, பார்க்கவில்லையா என்று கூட தெரியாது.
ஆனால் தன்னை தரிசிக்க வரும் அனைவரையும் அவர் பாரத்து விடுகிறார்.

திருமலை போன்ற திவ்ய தேசத்தில், தானே விருப்பப்பட்டு அர்ச்ச அவதாரம் செய்த ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை தரிசிக்க வரும் பக்தனுக்காக தன் பூஜை, தூக்கம் என்று அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பக்தர்களை அங்கு இங்கு திரும்பாமல், திரை போட்டு கொண்டு விடாமல், "யார் வந்து இருக்கிறார்கள்? யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம்?" என்று நின்று கொண்டே இருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.
நாம் மூன்று மணி நேரம் நின்றால், அவரோ நம் வருகைக்காக நாம் பிறந்ததில் இருந்து, எப்பொழுது வருவானோ என்று காத்துக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
இதை நினைத்து பார்க்கும் பக்தன், தான் 3 மணி நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?
அவர் நமக்காக, நம்மை காண, நம் பாவங்கள் பொசுக்க, நமக்கு மோக்ஷம் அளிக்க, நின்று கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்ட பின்னும், ஒரு பக்தன் தான் 3 மூன்று நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?

தன் பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, இந்த கூட்டத்தில் தன்னை பக்தன் பார்த்தானோ இல்லையோ, பெருமாள், பக்தனை கடாக்ஷம் செய்கிறார்.

அரை நொடி தரிசனம் பெற்று வெளியே வரும் பக்தனிடம் 'தரிசனம் கிடைத்ததா? என்று கேட்டால்,
பக்தன் 'மனம் திருப்தி அடைந்தது. ஆஹா... அருமையான தரிசனம்  கிடைத்தது' பூரிப்புடன் சொல்கிறான்.

'ஒரு நொடி தானே தரிசனம் கிடைத்தது?' என்று கேட்டால், 'அந்த ஒரு நொடி தரிசனம் கூட சொல்லமுடியாத திருப்தியை தந்து விட்டது' என்கிறான்.

இந்த திருப்தி நம் மனதில் ஏற்பட காரணம், நாம் அவரை பார்த்ததினால் அல்ல, அவர் நம்மை பார்க்கிறார் என்பதினால் தானே ஏற்படுகிறது.

கூட்டம் தினமும் அலைமோதுவதற்கு காரணம், திருமலையப்பன் கருணையே காரணம்.
நமக்கு எது நல்லதோ அதை நடத்தி வைப்பான் ஸ்ரீனிவாசன்.
கோவிலில் அர்ச்சனை செய்பவர், பகவானின் பிரதிநிதி.
உண்மையான பக்தன் தன்னை பார்க்க வரும் போதும், அர்ச்சனை செய்யும் போதும், பெருமாள் அர்ச்சகர் மூலமாக பக்தனின்  பிரார்த்தனைகளை கேட்கிறார். அனுக்கிரகம் செய்கிறார்.

ப்ராம்மணர்கள் எல்லோரும் அர்ச்சகர் கிடையாது, ஆகி விடவும் முடியாது.

அந்த கோவில்களை கட்டிய அரசர்கள் நியமித்த அர்ச்சகர் குடும்பம் மட்டும் தான் இன்று வரை பூஜை செய்கின்றனர். 

பிராம்மணன் மட்டும் சாமியை தொடலாம், நாங்க தொட கூடாதா? என்று கேட்கும் தெய்வ பக்தி இல்லாத, பொறாமை மற்றும்  காழ்ப்புணர்ச்சி மட்டுமே உடையவர்களுக்கு....

பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைந்து மூலவரை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா? பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைவதும் இல்லை, தெய்வத்தை தொடுவதுமில்லை.
அர்ச்சகரை தவிர, ப்ராம்மணனாக இருந்தாலும், பகவானை தொட யாருக்கும் அனுமதி இல்லை.
அர்ச்சகரின் மனைவி கூட கோவில் மூலவரை தொட முடியாது.

அதேபோல, காளி கோவிலில் ப்ராம்மணன் இல்லாத மற்றவர்கள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.
அவர்களை தவிர, பிராம்மணன் கூட அம்பாளை தொட அனுமதி இல்லை.

தெய்வத்தை வழிபட யாருக்கும் அனுமதி உண்டு.
ஆனால், ஆகம விதிப்படி கோவிலில் அமைந்த தெய்வத்தை, தொடுவதற்கு அனுமதி அனைவருக்கும் கிடையாது.

யாவருக்கும் பெருமாளை தொட வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் தானே, ஒவ்வொரு வீட்டிலும் அதே போன்ற பெருமாளை பஞ்ச லோகத்தில் செய்து வழிபட அனுமதித்தனர். இது மறந்து விட்டதா இந்த பொறாமை புத்தி உடையவர்களுக்கு?

சிறிய விக்ரஹம் முதல் பெரிய விக்ரஹம் வரை, வீட்டில்  வழிபடலாமே, பக்தி இருந்தால்.
தியாகப்ரம்மம் தன் கீர்த்தனைகள் முழுவதும் தன் வீட்டில் இருக்கும் ராம விக்ரஹத்தை பார்த்து தானே பாடினார். அவர் பக்திக்கு, ராமர் காட்சி கொடுத்தாரே.
தன் வீட்டில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஒரு நாள் அபிஷேகம், அலங்காரம் செய்தது கிடையாது இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட பொறாமை கூட்டம்.
தன் வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் அக்கறை கிடையாது, பக்தியும் கிடையாது,
பொறாமை குணத்தினால், ஆழ்வார்கள் பாடிய பெருமாளையும்,  நாயன்மார்கள் பாடிய சிவனையும் கோவிலுக்கு சென்று தொட வேண்டுமாம் இவர்களுக்கு.

இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் கண்டிக்கப்படவேண்டும்.

பணம் இருப்பவர்கள் special entrance வழியாக காசு கொடுத்து, பெருமாளை பார்க்கின்றனர்.
அவர்கள் காசு கொடுத்து சென்றாலும் பொறாமை.
இதில் சம்பந்தப்படாத அர்ச்சகரிடமும் பொறாமை.








அரசாங்கம் கோவிலை கைப்பற்றிய காலத்துக்கு முன், எந்த கோவிலில் இது போன்று க்யூ நடைமுறை இருந்தது?
ஒரு காலத்தில் மீனாக்ஷி கோவிலில் எளிதாக தரிசனம் பார்த்த சமயங்களில் அதே அர்ச்சகர்கள் தானே இருந்தனர்.
இப்பொழுது அரசாங்கம் special entrance, vip entrance என்று காசு வாங்கினால், கோபம் அர்ச்சகரிடமா?

தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் நமக்கு. ஆனால் அவருடனேயே இருக்கும் அர்ச்சகரிடம் பொறாமை.
தீபாவளி ஆனாலும், புது வருடம் ஆனாலும், தன் குடும்பத்தை விட, தினமும் காலை 4 மணி எழுந்து குளித்து, கோவிலுக்கு நுழைந்து இரவு 10-12 மணி வரை தனக்கு தொண்டு செய்யும் அர்ச்சகரை, 'பிச்சைக்காரன், திருடன், சோம்பேறி' என்று சொல்லும் உங்களை, தெய்வம் தண்டிக்குமா? கொண்டாடுமா?

பொறாமை குணத்தால் உங்கள் முகத்தில் தெரியும் அழுக்கை கண்ணாடியில் பாருங்கள். எத்தனை கீழ் தரமானவர்கள் நீங்கள் என்று புரியும்.

நாத்தீகன் தெய்வத்தை நம்பவில்லை. அவனுக்கு கோவிலை பற்றியும் அறிவில்லை, தெய்வத்தை பற்றியும் அறிவில்லை, அர்ச்சகர் பற்றியும் அறிவில்லை, தெய்வ நம்பிக்கையோடு செல்லும் எவரிடமும் நம்பிக்கை இல்லை.

கோவில், தெய்வம் என்ற விஷயத்தில் சம்பந்தமில்லாத இந்த நாத்தீக கூட்டத்தை, தெய்வநம்பிக்கை உடையவர்கள் மதிப்பதே அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு அவமானம்.

மானமுள்ள ஆஸ்தீகன் (எந்த மத தெய்வத்தை வழிபட்டாலும்), நாதீகனை மதிப்பதே, அவரவர்கள் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

"உன் தெய்வமே பொய், உன் நம்பிக்கையே பொய்"
என்று சொல்லும் நாத்தீகன் 'உலகையே உனக்கு வாங்கி தருகிறேன்' என்றாலும், அவனை மதிப்பதே பெரும் பாவம்.
அவன் கொடுத்து நாம் வாங்குவதே, நம் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

'உன் தாய் வேசி' என்று சொல்லிவிட்டு, 'நீ நல்லவன்' என்று சொல்பவனை ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் ஏற்றுக்கொள்வானா?
நாத்தீகனுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுப்பதே ஆஸ்தீகனுக்கு பாவத்தை சேர்க்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் நாத்தீகனை அரசு பதவியில் அமர்த்தியதன் விளைவை தான் இன்று தமிழகம் பார்க்கிறது.
தமிழை வளர்த்த தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பாடிய ஓதுவார்கள் ஓரம் தள்ளப்பட்டனர்.
தமிழை வளர்த்த இந்த தெய்வ பாசுரங்களை இவர்கள் நாத்தீக புத்தியால் தடுக்கப்பட்டது.
தமிழ் மொழியை அழித்து, இன்று தமிழை படிக்க தெரிந்த தலைமுறை இல்லாமல் செய்து, கோவில்களில் சொத்துகள் சுரண்டப்பட்டு, கோவில் சொத்துக்கள் அரசுக்கும் மற்ற மதக்காரர்கள் செலவுக்கும் அனுப்பி, கோவில்கள் நிறைந்த தமிழ்நாட்டை, நாத்தீக மடமாக்கி விட்டனர்.

நல்லவனாக இருந்தாலும் அந்த நாத்தீகனை புறக்கணிப்போம்.

ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட ஒரு நல்லவன் அரசாள செய்வோம். தெய்வ பாசுரங்கள் மீண்டும் தானே துளிர்க்கும். தமிழ் வளரும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் நம்பிய காலம் போய், இந்த நாத்தீக கூட்டத்தால், "தமிழர்கள் முரண்டு செய்பவர்கள், நாத்தீகம் தலைக்கு எரியதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மடையர்கள், மதராசி திருடர்கள்" என்ற பிரமையை நீக்க வேண்டிய கட்டாயம் ஆன்மீக எண்ணம் கொண்ட அனைத்து தமிழனுக்கும் உண்டு.

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை ஆன்மீகவாதியே ஆள வேண்டும்.
பதவி ஆசை பிடித்த நாத்தீக கூட்டம் ஒடுக்க பட வேண்டும்.

பெருமாளை விட்டு விடாமல், எப்பொழுதும் கூடவே இருந்து கைங்கர்யம் செய்யும் அர்ச்சகருக்கு 5 ரூபாய் தட்டில் போட்டால் குறைந்து விடுவோமா?
தெய்வத்தின் முன் நின்றும் பொறாமை குணம் நமக்கு வேண்டுமா?
நாம் தரிசனம் செய்ய செல்லும் பகவானை, கூடவே இருந்து பார்த்து கொள்ளும் அர்ச்சகர் மீது மரியாதை வேண்டாமா?
நம் குறைகளை பெருமாளிடம் போய் சேர்க்கும் அர்ச்சகரிடம் பொறாமை உள்ளவனுக்கு, அடுத்த பிறவியில் மனித பிறவி கிடைக்குமா?
ஊரில் உள்ளவன் எல்லாம், படித்து டாக்டர் ஆகலாமா? வெளிநாடுகள் செல்லலாமா? சைடு பிசினஸ் பண்ணலாமா? என்று பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,
தான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குடுமி வைத்து இருப்பதை பார்த்து கேலி செய்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் அனைவரும் காலி செய்து, பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை, கோவிலை சுற்றி இருந்த  ஹிந்துக்கள் மானங்கெட்டு தன் வீட்டை பிற மதத்த்தவனுக்கு  விற்று விட்டு கோவில் உத்ஸவம் நடத்த முடியாமல் செய்தாலும் சரி, இந்த கோவிலே எனக்கு கதி, கல்யாணம் செய்து கொள்ள பெண் கொடுக்க மறுத்தாலும் இந்த கோவிலில் தீபம் ஏற்ற நான் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்' என்று இன்றும் 'பெருமாள் ஒன்றே சரணம்' என்று வாழும் அர்ச்சகர்கள் மீது பொறாமையா?
இவர்களிடம் நீங்கள் காட்டும் பொறாமை உங்கள் வம்சத்தையும் சேர்த்து சபிக்குமே!

108 திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்று தான் இந்த பொறாமை குணம் கொண்டவர்களுக்கு தெரியுமா?
எத்தனை கோவில்கள் கும்பாபிஷேகம் கூட செய்யப்படாமல், ஏழை அர்ச்சர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தினமும் காலையிலிருந்து இரவு வரை உள்ள சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.
தவ வாழ்க்கை வாழும் அர்ச்சர்கள் குடும்பத்தை இந்த பொறாமைக்காரர்கள் கண்டதுண்டா?
காஞ்சியில் உள்ள திவ்ய தேச கோவில்களின் நிலைமையும், கும்பாபிஷேகம் கூட செய்ய முன் எடுக்காத இந்த ஹிந்துக்களின் நடுவே, அந்த கோவில் உள்ள பெருமாளுக்கு, பூஜைகளை காலம் தவறாமல் செய்து கொண்டு, வரும் ஒரு சில பக்தர்களிடமும் "கோவில் கும்பாபிஷேகத்திற்காகவாவது முயற்சி செய்யுங்களேன்" என்று கூட கேட்காமல், பெருமாளை காட்டி, துளசியும் தீர்த்தமும் கொடுத்து உபசாரம் செய்கிறார்களே. இவர்களிடம் கூட பொறாமையா?

பெருமாளுக்கு, பணக்காரனும் ஒன்று தான், ஏழையும் ஒன்று தான்.
அவரை பொறுத்தவரை, தன் மரியாதையை, வரவேற்பை தராமல் இருப்பதில்லை.

பணம் கொடுத்து பார்த்தத்தினால் மட்டும் பகவான் தரிசனம் தந்து விடுவாரா?
தெய்வத்தை பொறுத்தவரை 'பக்தி இருக்கிறதா?' என்று தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பக்தி இல்லாமல், கோவிலுக்கு வந்து பணம் கொடுத்து வேகமாக தரிசனம் செய்தாலும், ஒன்றும் கொடுக்காமல், சாதாரண க்யூவில் ஒரு மணி நேரம் நின்று, தரிசனம் செய்தாலும்,
பகவான் மகிழ்ச்சி அடையப்போவதில்லை.

உண்மையான பக்தி உள்ளவன், தரிசனம் செய்வதே பாக்கியம் என்று கருதுவான்.



உண்மையான பக்தி உள்ளவன், பணக்காரன் காசு கொடுத்து வேகமாக தரிசனம் பெற்று செல்வதை பார்த்து கூட பொறாமைப்பட மாட்டான்.
மாறாக, தான் வெகு நேரம் கோவிலில் அவருக்காக காத்து இருந்து தரிசிப்பதை ப்ரயோஜனமாக கருதுவான்.

பகவான் சிலருக்கு வேகமாக தரிசனம் தந்து விட்டு, அனுப்பி விடுவார்.
பக்தனான தன்னை கொஞ்ச நேரம் தன் சந்நிதியில் நிறுத்தி, தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் இங்கே இருக்க வைத்த கருணையை நினைப்பான்.
பக்தன் க்யூவில் காத்து இருந்தாலும், "பெருமாள் தன்னை இங்கேயே தன் சந்நிதியில் கொஞ்ச நேரம் நில் என்று சொல்கிறார் போலும்" என்று நினைத்து அதிலும் ஆனந்தப்படுவான்.

பொறாமை குணம் கொண்ட, பக்தி இல்லாதவன், எவனோ காசு கொடுத்து பார்த்தான் என்று, அர்ச்சகரிடமும், காசு கொடுத்து பார்த்தவனிடமும், அரசிடமும் கோபப்பட்டு, இறுதியில் கடவுளிடமும் கோபப்பட்டு, சாபத்தை வாங்கி கொள்கிறான்.

பொறாமை குணத்தை விட்டு, பக்தியை வளர்த்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டை இனி ஆன்மீக எண்ணம் கொண்டவர்களே ஆள அனுமதிப்போம்.

கோவிலில் பாசுரங்கள் மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். தமிழை எப்படி வளர்த்தோமோ, அதே போன்று மீண்டும் வளர்ப்போம்.

இடிந்து போன நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழக  கோவில்களை புதுமை படுத்துவோம்.

காட்டுவாசி போன்ற, நாத்தீகம் பேசும் மடையர்கள் அல்ல தமிழர்கள்,
இறையாண்மை உள்ள தமிழக மக்கள் என்ற உண்மையை மற்ற மாநில அரசுக்கும், மக்களுக்கும்  காட்டுவோம்.

கூடி வாழ்வோம்.

ஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
  • கோவில்கள் கொட்டி கிடக்கும் தமிழகத்தில்,
  • 63 நாயன்மார்கள் பிறந்த தமிழகத்தில்,
  • 12 ஆழ்வார்கள், ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற மகான்கள் அவதரித்த தமிழகத்தில்,
  • அகஸ்தியர் போன்ற ரிஷிகள் அவதரித்த தமிழகத்தில்,
  • ஆயிரக்கணக்கான சித்தர்கள் அவதரித்த தமிழகத்தில்,
பிறந்தவர்கள் என்று பெருமை கொள்வோம். புரிய வைப்போம்.



நாத்தீகம் பேசுபவனை தலையெடுக்க விடுவதே தமிழகத்தின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும் அவமானப்படுத்தியதாகும்.
ஆன்மீகம் துளிர்க்க செய்வோம்.
ஆன்மீக அரசியலை வரவேற்போம்.
ஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களுக்கு துணை நிற்போம்.
தமிழை காப்போம்.