Followers

Search Here...

Showing posts with label அழிவு. Show all posts
Showing posts with label அழிவு. Show all posts

Thursday 7 February 2019

உலகத்தில் ஏற்படும் நான்கு ப்ரளயங்கள் (அழிவுகள்) என்னென்ன? ப்ரம்மாவின் வயது என்ன? தெரிந்து கொள்வோமே ...

உலகத்தில் நான்கு விதமான ப்ரளயங்கள் (அழிவுகள்) ஏற்படுகிறது என்று ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரம் சொல்கிறது.



  • 2012ல் உலகம் அழியும்,
  • 5000 வருடத்திற்கு முன் உலகமே இல்லை,
  • உலகம் தட்டையானது,
  • ஒரே பிறவி தான்,
  • மனிதன் ஆடை இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் மூலம் வந்தார்கள்,
  • கொலை செய்யப்பட்டவர் மீண்டும் வருவார்
என்று தன் கற்பனைக்கு தோன்றியதை சொல்லி ஏமாற்றும் பழக்கம் ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரத்தில் இல்லை.

உலகம் பல கோடி வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது என்று காலத்தை கணக்கிட்டு சொல்லும் நம் ஹிந்துக்களின் சாஸ்திரம், அழிவை பற்றியும் சொல்கிறது.
தெரிந்து கொள்வோமே...

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
ஹிந்துவாக பிறந்தவன் பெரும் புண்ணியம் செய்தவன்.
ஹிந்துவாக மாற ஆசைப்படுபவனும், புண்ணியம் செய்தவன்.

நான்கு வகையான ப்ரளயங்கள்:

  1. நித்ய ப்ரளயம்
  2. நைமித்திக ப்ரளயம்
  3. மஹா ப்ரளயம்
  4. ஆத்யந்திக ப்ரளயம்

என பிரளயங்கள் நான்கு சொல்லப்படுகிறது.

1) நித்ய ப்ரளயம்:
நித்ய ப்ரளயம் என்பது "ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அழிவு".
ஒவ்வொரு நொடியும் உலகத்தில் பல லட்சம் உயிர்கள் தன் தேகங்களை விட்டு விட்டு, மரணித்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த அழிவுகளை, நித்ய பிரளயம் என்கிறது ஹிந்துக்களின் வேத சாஸ்திரம்.

மோக்ஷம் அடையாத உயிர்கள், அவரவர் குணங்களுடன் மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
தூக்கம் என்பது கூட நம் "மனதை பொறுத்தியவரை" நடக்கும் நித்ய பிரளயம் தான்.
நாம் தூங்கும் போது மனம் அழிகிறது.
விழித்த பின், மீண்டும் மனம் விழித்து எழுகிறது.


2) நைமித்திக ப்ரளயம்
சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பிரம்மாவுக்கு, அவருடைய பகல் வேளையில், உலக நிர்வாகத்தை 14 மனு அரசர்களை நியமித்து நிர்வாகம் செய்கிறார்.
ஒவ்வொரு மனுவும் 71 சதுர் யுகங்கள் வாழ்கின்றனர். ஆட்சி செய்கின்றனர்.

ஒரு மனு தன் அரசாட்சியை முடித்த பின், ஒரு சத்ய யுக காலம் பூலோகம் நீரில் மூழ்கும்.
அடுத்த மனு அரசர் பணி அமர்த்தப்பட்டு, கடல் தன் எல்லைக்குள் சென்று, மீண்டும் 71 சதுர் யுகங்கள் ஆட்சி நடக்கிறது.

இந்த சரித்திரத்தை, திருடி, மனு அரசனை noah என்று சொல்கின்றனர் பிற மதத்தவர்கள்... போலிகள்.. https://en.m.wikipedia.org/wiki/Noah.

14 மனு அரசர்கள் ஒவ்வொருவரும் 71 சதுர் யுகங்கள் ஆண்ட பின், சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு தன் ஒரு நாளில், ஒரு பகல் வேளை முடிகிறது.

"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.

பொதுவாக 14 மனு அரசர்கள் சேர்ந்து மொத்தமாக 14×71 = 994 சதுர் யுகங்களை ஆளுகின்றனர் என்று அறிகிறோம்.
பொதுவாக,
1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்று சொல்வது வழக்கம்.

பிரம்மாவின் இரவு என்பது இது போன்று 1000 சதுர் யுக காலங்கள் நீண்டது.

ஒரு "சதுர் யுகம்" என்பது, 4 யுகங்களை கொண்டது.

"க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்" சேர்ந்தது ஒரு "சதுர் யுகம்".

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது.
துவாபர யுகம், 8,64,000 பூலோக வருடங்கள் கொண்டது.
த்ரேதா யுகம் 12,96,000 பூலோக வருடங்கள் கொண்டது.
க்ருத யுகம் 17,28,000 பூலோக வருடங்கள் கொண்டது.
ஆக,
ஒரு "சதுர் யுகம்" என்பது, 43,20,000 பூலோக வருடங்கள் கொண்டது.
(அதாவது, ஏறத்தாழ 43 லட்ச பூலோக வருடங்கள் ஒரு "சதுர் யுகம்".)

ஒரு மனு அரசர் இது போல 71 சதுர் யுகங்கள் இருந்து பூலோகத்தை ஆட்சி செய்கிறார்.


அதாவது ஒரு மனு அரசர், 71×43,20,000 = 30,67,20,000 பூலோக வருடங்கள் வாழ்கிறார்.
(அதாவது, ஏறத்தாழ 30 கோடி பூலோக வருடங்கள், ஒரு மனு அரசர் வாழ்கிறார்.)

14 மனு அரசர்கள் பிரம்மாவின் ஒரு பகல் வேளையில் நியமிக்கப்படுகின்றனர்.

14× 30,67,20,000 = 429,40,80,000 பூலோக வருடங்கள் பிரம்மாவுடைய பகல் வேளையில், 14 மனு அரசர்கள் ஆட்சி செய்கின்றனர்.
(அதாவது, ஏறத்தாழ 429 கோடி பூலோக வருடங்கள், 14 மனு அரசர்கள் பூலோகத்தை ஆண்டு, பிரம்மாவுடைய ஒரு பகல் வேளையில் ஆளுகின்றனர்.)

ஒரு மனு அரசரின் ஆட்சி முடிந்து, இன்னொரு மனு ஆட்சியில் அமரும் இடைவேளையில் பூலோகம் நீரில் மூழ்குகிறது.
இதன் காலம் 17,28,000 பூலோக வருடங்கள். (ஏறத்தாழ 17 லட்ச பூலோக வருடங்கள்)

ஒரு மனுவுக்கும், இன்னொரு மனுவுக்கும் 13 இடைவெளி வருகிறது.
இந்த 13 இடைப்பட்ட காலத்தில் ப்ரம்மா சிறிது ஓய்வு எடுக்கிறார், சந்தியா வந்தனம் செய்கிறார்.

சத்ய லோகத்தில், 13 முறை கிடைக்கும் இந்த நேரம், அவரை பொறுத்தவரை, இது சில மணி நிமிடங்கள் மட்டுமே.

14 மனு அரசர்கள், தன் பதவி முடிந்து, அடுத்த மனுவுக்கு தன் அரசாட்சியை கொடுத்து விட்டு போகும், இந்த இடைவெளி காலத்தை கணக்கிட்டால், 13×17,28,000 = 2,24,64,000 பூலோக வருடங்கள் என்று தெரிகிறது.
(ஏறத்தாழ 2 கோடி பூலோக வருடங்கள்)




ஆக சத்ய லோகத்தில் உள்ள, பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்பது 2,24,64,000 + 429,40,80,000 = 431,65,44,000 பூலோக வருடங்கள்.
அதாவது, ஏறத்தாழ 431 கோடி பூலோக வருடங்கள், பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை.

அதிகபட்சம் 100 வயது வாழும் மனிதர்களான நம்மில், "கடவுளை காட்டு, காட்டினால் தான் நம்புவேன்" என்று திமிர் பிடித்து கேட்பவனை பார்த்து, பல கோடி வருடங்கள் இருக்கும் ப்ரம்மா என்ன நினைப்பார்?
அல்ப ஆயுசு இருக்கும் இவனுக்கு ஆசை இருந்தாலாவது பகவான் வருவார், திமிர் பிடித்து இருக்கிறானே என்று  தான் நினைப்பார்.  

சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவுடைய இரவு, பகலை போன்று 431 கோடி பூலோக வருடங்கள் நீண்டது.
14 மனு அரசர்கள் ஆண்ட இத்தனை நீண்ட அகண்டமான 429 கோடி வருடங்களும், பூலோகத்தில் மறுபடி மறுபடி பிறந்து, ஒரு சமயம் ஹரியை பஜித்தவர்கள் மோக்ஷம் அடைந்து விடுகிறார்கள்.
மீண்டும் அவர்கள் பிறப்பதில்லை.
ஹரி பக்தி இல்லாதவர்கள், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு ஏற்ப, மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

"இன்று வரை நாம் இருக்கிறோம்" என்று சற்று நம்மை கவனித்தால், மோக்ஷம் அடையாத ஜீவன்களில் நாமும் ஒருவர் என்று புரியும்.
எத்தனை கோடி வருடங்கள் உலகில் பிறந்து கொண்டே இருக்கிறோம் என்று புரியும்.


மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனும், ப்ரம்மாவின் தூக்க சமயத்தில் அதாவது 431 கோடி பூலோக வருட காலங்கள் "தமஸ்" என்ற இருளில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்து கொண்டே இருப்போம்.

இன்று வரை மோக்ஷம் அடையாத, நாம் அனைவரும் இதை அனுபவித்தவர்கள் தான்.
நாம் அனைவரும் இன்று வரை மோக்ஷம் அடையாத ஜீவன் தான்.

நம்மை தட்டி எழுப்பி, மோக்ஷ பாதையை காட்ட, பகவான் நமக்கு ஆன்மீக குருவை உலகில் பிறக்க செய்கிறார். சமயத்தில் அவரே அவதரிக்கவும் செய்கிறார்.

ப்ரம்மா தான் தூங்க போகும் போது, "சொர்க்க லோகம்", அதற்கு கீழ் இருக்கும் "புவர் லோகம், பூலோகம், அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, பாதாள, ரஸாதல" போன்ற அனைத்து லோகங்களையும் அழித்து விட்டு தூங்க செல்கிறார்.
தேவர்கள் கூட அழிந்து விடுவார்கள்.
இந்த சமயத்தில் சொர்க்க லோகத்துக்கு மேல் இருக்கும் "மகர லோகம், ஜன லோகம், தப லோகம்" அழிவதில்லை.
சத்ய லோகத்தில் பிரம்மாவே இருப்பதால், இதுவும் அழிவதில்லை.

புண்ணியங்கள் செய்த யோகிகளும், ரிஷிகளும் இந்த லோகங்களில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
தப லோகத்துக்கும் மேல் இருக்கும், தன் லோகமான சத்ய லோகத்தில் ப்ரம்மா உறங்குகிறார்.

பூலோக கணக்குப்படி ஏறத்தாழ 431 வருடங்கள் மோக்ஷம் அடையாத நாம் அனைவரும் "தமஸ்" என்ற இருளில், உலகமே இல்லாததால், மாமிச உடலும் இல்லாததால் "கம்" என்று இந்த சமயத்தில் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் இருப்போம், இருந்தோம்.
இன்றைய தேதியில், இன்று உள்ள பிரம்மாவுக்கு 50 வயது முடிந்து விட்டது.

பிரம்மா தன் 51 வயதில், முதல் நாளில் அவருடைய பகல் பொழுதில் இருக்கிறார்.

இந்த பகல் வேளையில், 14 மனு அரசர்கள் வரிசையில், "ஸ்வாயம்பு" என்ற முதல் மனு அரசரில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.

இன்று வரை நாம் மோக்ஷம் அடையவில்லை.

இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
"வைவஸ்வத மனு" ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.
இதில் 3 யுகங்கள் முடிந்து விட்டது.


நாம் இப்பொழுது 28வது சதுர் யுகத்தின், கலி யுகத்தில் இருக்கிறோம்.

கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

கலியுகம் ஆரம்பித்து ஏறத்தாழ 5000 வருடங்கள் ஆகி உள்ளது.

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது என்று பார்க்கும் போது, இந்த கலியுகம் முடிய இன்னும் 4 லட்சத்துக்கும் மேல் வருடங்கள் உள்ளது.

ஆக,
"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.
மகர, ஜன, தப, சத்ய லோகங்களை தவிர்த்து,
மற்ற அனைத்து உலகங்களும் அழிந்து விடும் நிகழ்வை 'நைமித்திக ப்ரளயம்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

சத்ய லோகத்தில், தூங்கி எழுந்த ப்ரம்மா, மீண்டும் அதே போல அனைத்து லோகங்களையும் ஸ்ருஷ்டி செய்து, மோக்ஷம் அடையாத ஜீவனுக்கு மீண்டும் பிறக்க உலகங்கள் படைத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மனித, மிருக, தாவர உடம்பை கொடுத்து, 14 மனு அரசர்களை கொண்டு மீண்டும் உலகை ஆட்சி செய்ய செய்கிறார்.

3) மஹா ப்ரளயம்
மஹா ப்ரளயம் என்பது, பிரம்மாவுக்கு 100 வயது ஆகி, பிரம்மாவின் ஆயுசு முடியும் போது ஏற்படும் பேரழிவு.

ப்ரம்மாவே மறைந்து விடுவதால், அவர் இருக்கும் சத்ய லோகம் ஆரம்பித்து, அதற்கு கீழ் இருக்கும் தப லோகம், ஜன லோகம், மகர லோகம் என்று பாதாள லோகங்களை வரை உள்ள, 14 லோகங்களும் அழிந்து விடும். இந்த அழிவே மஹா பிரளயம்.

பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பஞ்ச பூதங்களும் அழிந்து விடும்.
14 லோகங்களும் பிரளய ஜலத்தில் கரைந்து,
பிரளய ஜலம், பிரளய அக்னியில் வற்றி,
பிரளய அக்னி, ஆகாசத்தில் அடங்கி,
ஆகாசமும் தமஸில் அடங்கி விடும்.

அனைவரும் அழிந்து விடுவார்கள். நாராயணன் ஒருவரே இருப்பார். பிரம்மாவின் ஆயுசு முடிந்தும் மோக்ஷம் அடைய ஆசைப்படாமல், ஹரி பக்தி செய்யாது வாழ்ந்த ஜீவ கோடிகளை தன் இதயத்தில் "தமஸ்" என்ற நிலையில் இருக்க செய்கிறார் பரமாத்மா.
"தமஸ்" என்பது "இருட்டை" சொல்லவில்லை.
"இருள்" என்றும் "அஞான நிலை" என்றும் பொருள் கொள்ளலாம்.
தமஸ் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை குறிப்பிடுகிறது.

இந்த தமஸ் என்ற அனுபவத்தை புரிந்து கொள்ள, பகவான் நமக்கு "தூக்கத்தை" கொடுத்து உள்ளார்.
தூங்கும் போது "தமஸ்" என்ற நிலையில் நாம் இருக்கிறோம்.
தூக்க சமயத்தில் "நாம் இருந்தும், இருப்பதை உணராமல்" இருக்கிறோம். இதையே "தமஸ்" என்று சொல்கிறோம்.

இதே நிலையிலேயே, ஆனந்த மூர்த்தியான நாராயணனே இதயத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே, பல கோடி வருடங்கள், மஹா பிரளயம் ஏற்பட்ட பின் "தமஸ்" என்ற நிலையில் இருப்போம்.

ஹரி பக்தி செய்து மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், வைகுண்டம் என்ற என்றுமே அழியாத லோகத்தை அடைந்து விடுகின்றனர்.
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
தேவைப்பட்டால், நாராயணன் சொன்னால், பூலோகம் வரவும், 14 லோகங்களில் எங்கு செல்லவும் அந்த மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு அனுமதி உண்டு.
நாராயணனை போலவே இவர்களும் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் வைகுண்டத்தில்.
நாராயணன், பரவாசுதேவனாக அங்கு இருந்து கொண்டு, அவர்கள் பூஜையை ஏற்று கொண்டே இருக்கிறார்.

ஹரி பக்தி செய்து, "இது நாராயணன் கொடுத்த பதவி, இது நாராயணன் கொடுத்த பிறவி" என்று நாராயணனிடம் ப்ரேம பக்தி செய்து ப்ரம்மா வாழ்ந்து இருந்தால், பகவான் அந்த பிரம்மாவுக்கு மோக்ஷம் என்ற வைகுண்டம் கொடுத்து விடுகிறார்.

"நான் ப்ரம்ம தேவன், 14 லோகங்களும் எனக்கு கட்டுப்பட்டு நடக்கிறது" என்று நினைத்து இருந்தால், அவர் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப மீண்டும் உலக ஸ்ருஷ்டி நடக்கும் போது, பூமியில் பிறக்க வேண்டியது தான்.
இந்த சட்டம் அனைவருக்கும் உண்டு.
பிரம்மாவுக்கும் உண்டு.

மஹா பிரளயம் முடிந்து, ஜீவ கோடிகளை தன் இதயத்தில் வைத்து கொண்டு, 14 லோகங்களையும் தன் திருவயிற்றில் வைத்து, நாராயணன் தூங்க செல்கிறார்.

நித்திரை, யோக நித்திரை, விழிப்பு, செயல் என்பது நமக்கு மட்டுமல்ல, பரமாத்மாவுக்கு உண்டு.
பரமாத்மா நாராயணன், உலகை ஸ்ருஷ்டி செய்யலாம் என்று மீண்டும் சங்கல்பத்து விழிக்கும் பொழுது, மீண்டும் பிரம்மாவை படைத்து உலக ஸ்ருஷ்டி செய்ய, வேதம் என்ற தன் அறிவை அவருக்கு உபதேசம் செய்து, சத்ய லோகத்தை படைத்து, மேலும் லோகங்களை படைக்க சொல்லி, தன் இதயத்தில் இருக்கும் ஜீவ கோடிகள் மீண்டும் பிறக்க செய்து, உலக இன்ப துன்பங்களை அனுபவித்து அனுபவித்து அலுப்பு ஏற்பட்டு, இப்பொழுதாவது மோக்ஷம் அடைய ஹரி பக்தி செய்கிறார்களா? என்று யோக நித்திரையில் உலகம் நடப்பதை தன் சுய பலத்தால் நிர்வாகம் செய்து, பார்த்து கொண்டு வருகிறார் பரமாத்மா.

இது ஒரு விளையாட்டு போல இருப்பதால், உலக நிர்வாகத்தை பகவான் லீலையாக செய்கிறார் என்று பொதுவாக சொல்வது உண்டு.

4) ஆத்யந்திக ப்ரளயம்
ஆத்யந்திக ப்ரளயம் என்பது ஜீவனுக்கு சம்சார சூழலில் சிக்கி ஏற்படும் பிறப்பு, இறப்பில் இருந்து ஏற்படும் முற்று புள்ளி. விடுதலை. மோக்ஷம்..
ஹரி பக்தி செய்து,
"உலகத்தில் இனி மீண்டும் பிறந்து இன்ப துன்பங்கள் அனுபவிக்க தயார் இல்லை" என்று திட சித்தம் கொண்டு,
உடலில் ஏற்படும் சுக துக்கத்தை சிறிதும் பொருட்படுத்தாமல்,
ஆத்மா நான் என்ற அறிவுடன்,
இந்த ஆத்மா பரமாத்மாவான ஹரியை சேர்ந்தவன் என்ற குறிக்கோளுடன்,
ஹரி பக்தியே செய்து வைராக்யத்துடன் வாழ்ந்து,
ஹரியை மகிழ்ச்சி படுத்தி,
அந்த பரமாத்மா அந்த ஜீவனின் கடைசி மூச்சு விடும் சமயத்தில் தானே வந்து காட்சி கொடுத்து, எம தர்மன் கூட்டி செல்லாமல், தானே வைகுண்டம் கூட்டி செல்வது மோக்ஷம்.
மோக்ஷம் அடைந்த ஜீவன், இதற்கு பிறகு திரும்பி வர இயலாது.. 

HARE RAMA HARE KRISHNA

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka