Followers

Search Here...

Monday 31 October 2022

பாம்புக்கு இரண்டு நாக்கு ஏப்படி ஏற்பட்டது? கருடன் பெற்ற வரங்கள் என்ன? கருடன் விஷ்ணுவுக்கு கொடுத்த வரம் என்ன? வியாச பாரதம் அறிவோம்.

ஒரு சமயம், கஷ்யபர், புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்.

யாகத்துக்கு தேவையான உதவிகளை தேவர்களும், ரிஷிகளும்,கந்தர்வர்களும் செய்தனர்.


யாகத்துக்கு தேவையான ஸமித்துக்களை சேகரிக்க இந்திரனும், மற்ற தேவர்களும் உதவினர்.


இந்திரன் தன் சக்திக்கு ஏற்றார் போல, மலை அளவுக்கு ஸமித்துக்களை அள்ளி கொண்டு, சிரமமில்லாமல் வந்து கொண்டிருந்தான்


வரும் வழியில், ஆகாரம் இல்லாமல் உடல் மெலிந்து, உடலில் சக்தி இல்லாத நிலையில் வாலகில்ய ரிஷிகளை கண்டான்.

அவர்களை பார்த்து சிரித்து கொண்டே, அவர்களுக்கு மரியாதை செய்யாமல் விரைந்து சென்றான்.


இதை கண்ட அந்த ரிஷிகள், "இந்திரனின் கர்வத்தை அடக்க, அவனுக்கே பயத்தை கொடுக்கும், இந்திரனை காட்டிலும் பலம் வாய்ந்த மற்றொரு இந்திரன் (தலைவன்) உருவாகட்டும்" என்று சபித்து விட்டனர்.


இதை அறிந்த இந்திரன், கஷ்யபரிடம் முறையிட்டு, வழி கேட்டு பிரார்த்தனை செய்தான்.


நிலைமையை சமாளிக்க, கஷ்யபர், வாலகில்ய ரிஷிகளிடம் சென்றார்.


"ப்ரம்மா மூவுலகத்தையும் நிர்வாகம் செய்யட்டும் என்று இந்திர பதவி கொடுத்து இருக்கிறார். உங்களுக்கு இந்திரனிடம் ஏற்பட்ட கோபம் நியாயமே என்றாலும், இன்னொரு இந்திரனை உருவாக்கினால், அது பிரம்மாவுக்கு ஏற்புடையதாக இருக்காதே! ஆதலால் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.

வாலகில்ய ரிஷிகள், "கொடுத்த வாக்கை திரும்ப பெற முடியாதே! நீங்களே இதற்கு மாற்று வழியை சொல்லுங்கள்" என்றனர்.


காஷ்யபர் "அப்படியென்றால், பிறக்க போகும் அந்த மஹாபலசாலி பக்ஷிகளுக்கு இந்திரனாக இருக்கட்டும். நரர்களுக்கு இந்திரனாக இப்பொழுது இருக்கும் இந்திரனே இருக்கட்டும்" என்று சொன்னார்.


இதற்கு சம்மதம் தெரிவித்தனர் ரிஷிகள்.


அப்பொழுது வினதா தனக்கு புத்ரர்கள் வேண்டும் என்று விரதத்தில் இருந்தாள். அவள் கர்ப்பம் தரித்தாள்.


அவளிடம்  "உனக்கு 2 புத்ரர்கள் பிறப்பார்கள். இருவருமே மஹா பலசாலிகளாக இருப்பார்கள். இவர்களில் ஒருவன், உலகத்தாரால் பூஜிக்கப்படுபவனாக, நினைத்த ரூபம் எடுத்து கொள்பவனாக, மஹா வீரனாக, அனைத்து  பக்ஷிகளுக்கும் இந்திரனாக இருக்க போகிறான்" என்று கஷ்யபர் தெரிவித்தார்.


இந்திரனை பார்த்து, "பிறக்கபோவது சகோதரர்களாக இருக்க போவதால், பயப்பட வேண்டாம்" என்று சொல்லி சமாதானம் செய்து அனுப்பினார்.


அந்த வினதாவுக்கு அருணன் பிறந்தான். அருணன் சூரியனுக்கு சாரதியாக சென்றான்.


பிறகு, கருடன் பிறந்தார். கருடன் பக்ஷி ராஜனாக ஆனார்.


ஒரு சமயம், கருடன் தேவலோகம் சென்றார். கருடனை பார்த்த தேவர்கள் பயந்து நடுங்கினர்.


அமிர்த கலசத்தை "பௌமன்" என்ற தேவன் பாதுகாத்து கொண்டிருந்தான்.


கருடன் இறக்கைகளை அடித்து கொண்டு பறக்க, புழுதி கிளம்பி யார் எதிரில் நிற்கிறார்கள்? என்பதே தெரியாமல் போனது.


உடனே வாயு தேவனை கூப்பிட்டு கலைக்க சொல்லி, பெரும் யுத்தம் செய்தனர் தேவர்கள்.


கடைசியில்,

சாத்யர்களும், கந்தர்வர்களும் - கிழக்கு நோக்கியும்,

வசுக்களும், ருத்ரர்களும் - தெற்கு நோக்கியும்,

ஆதித்யர்கள் - மேற்கு நோக்கியும்,

நாசத்யர்கள் என்ற அஸ்வினீ தேவர்கள் - வடக்கு நோக்கியும், கருடனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஓடினர்.

साध्याः प्राचीं स-गन्धर्वा 

वसवो दक्षिणां दिशम् |

प्रजग्मुः सहिता रुद्राः 

पतगेन्द्र प्रधर्षिताः |

दिशं प्रतीचीम् आदित्या 

नासत्या: उत्तरां दिशम् ||

- வியாச மஹாபாரதம்

கடைசியாக அம்ருத கலசம் இருக்கும் இடத்துக்கு வந்த போது, நான்கு புறமும் தீ வானளாவி இருந்தது. இதற்கு நடுவில் அம்ருத கலசத்தை தேவர்கள் பாதுகாத்து வைத்து இருந்தனர்.

உடனே கருடன் 8100 வாய்களை எடுத்து கொண்டு, பல நதிகளை குடித்து, ஜ்வாலை விட்டு எறிந்து கொண்டிருந்த அக்னியை நனைத்தார்.


உடனே தன் உருவத்தை சிறியதாக ஆக்கி கொண்டு, சமுத்திரத்துக்குள் வேகமாக நதிகள் புகுந்து கொள்வது போல, பிரவேசித்தார்.


அப்பொழுது கூர்மையான கத்தி முனைகள் கொண்ட சக்கரம் சுழல்வதை கண்டார்.


சிறிது நேரம் அதனோடு தானும் சுற்றி பறந்து கொண்டே, சாமர்த்தியமாக அந்த இடைவெளியில் புகுந்து சென்று விட்டார்.


அங்கு, அந்த கலசத்தை காத்து கொண்டு இரண்டு மஹா சர்ப்பங்கள் கண்களில் விஷத்தோடு இருந்தன.


இதை கண்டு சிறிது கலங்கிய கருடன், புழுதியை கிளப்பி, அந்த சர்ப்பங்களின் கண்களை மறைக்க, அந்த சமயத்தில் உடனே பறந்து அந்த இரண்டு சர்ப்பங்களையும் பிடித்து கிழித்து எறிந்தார். 

அம்ருதத்தை தான் எடுத்து கொள்ளாமல், அங்கிருந்த அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு உயரே பறக்க ஆரம்பித்தார்.


அப்பொழுது, வைனதேயர் என்று அழைக்கப்படும் கருடனை, 'அம்ருதத்தில் ஆசையற்ற' கருடனை கண்டு சந்தோஷமடைந்த விஷ்ணு பகவான் அவர் முன் காட்சி கொடுத்தார்.


கருடனை பார்த்து, "உனக்கு நான் வரம் கொடுக்கிறேன். கேள்" என்றார்.

உடனே கருடன், "நான் உங்களுக்கு மேல் இருக்க ஆசைப்படுகிறேன். மேலும் அம்ருதம் உண்ணாமலேயே முதுமையும், மரணமும் இல்லாமல் இருக்க வேண்டும்" என்றார்.


"அப்படியே ஆகட்டும்" என்றார் பகவான்.


एवमस्त्विति तं विष्णुरुवाच विनतासुतम्।

प्रतिगृह्य वनौ तौ च गरुडो विष्णुम् अब्रवीत्।।

भवतेपि वरं दद्यां वृणोतु भगवानपि।

तं वव्रे वाहनं विष्णुर्नरुत्मन्तं महाबलम्।।

- வியாச மஹாபாரதம்

உடனே கருடன், "நான் உங்களுக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். நீங்களும் கேட்க வேண்டும்" என்றார்.


மந்தஹாசம் செய்து கொண்டே பகவான், "நீ எனக்கு வாகனமாக இரு" என்றார்.


இப்படி உடன்படிக்கை ஆன பிறகு, கருடன் விஷ்ணு பகவானுக்கு வாகனமாகவும், பகவானுக்கு மேலே கருட கொடியாகவும் இருந்தார்.


விஷ்ணு பகவானிடம் தான் வந்த காரியத்தை முடித்து விட்டு வருவதாக சொல்லி அனுமதி பெற்று, மீண்டும் அம்ருத கலசத்தோடு கிளம்பினார்.


வழியில், இந்திரன் பறந்து கொண்டிருக்கும் கருடனை நோக்கி வஜ்ராயுதத்தை வீசினான்.


वज्रस्य च करिष्यामि तवैव च शतक्रतो।

एतत् पत्रं त्यजाम् एकं यस्यान्तं नोपलप्स्यसे।।

- வியாச மஹாபாரதம்

வஜ்ராயுதம் பட்டும் கலங்காத கருடன், இந்திரனை பார்த்து, "இந்திரா! இந்த வஜ்ராயுதம் எந்த ரிஷியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த ரிஷிக்கும், இந்த வஜ்ராயுதத்துக்கும், உனக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இதோ என்னுடைய ஒரே ஒரு சிறகை விடுகிறேன்" என்று சொல்லி ஒரு சிறகை மட்டும் கீழே போட்டார்.


सुरूपं पत्रमालक्ष्य सुपर्णो अयं भवत्विति।

- வியாச மஹாபாரதம்

அந்த ஒரு சிறகின்  அழகை கண்டே சொக்கி போன தேவர்கள் அனைவரும் "இவர் ஸுபரணர்" என்று கருடருக்கு பெயரிட்டு ஜெயகோஷம் செய்தனர்.


இந்திரன் கருடனின் பராக்கிரமத்தை பார்த்து, தன்னோடு தோழமை கொள்ளுமாறு கேட்டு கொண்டான். மேலும் கருடனின் உண்மையான பலம் தான் என்ன? என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டு கருடனிடமே கேட்டான்.

இப்படி சொன்ன தேவேந்திரனை பார்த்து, "தேவனே! புரந்தரனே ! நீ விரும்பியபடி உனக்கும் எனக்கும் ஸ்நேஹம் இருக்கட்டும். என்னுடைய பலம் பெரியது, தாங்க முடியாதது என்றும் அறிந்து கொள்.

தன் பலத்தை அறிந்தவர்கள், தன் பலத்தை குறித்து பெருமையாக பேசிக்கொள்வதில்லை.

தன்னை பற்றி தானே பெருமை சொல்லி கொள்பவன், பிறரால் தூஷணைக்கு உள்ளாகிறான்.

ஆனால், பிறர் கேட்டால், அவர்களுக்கு தன்னை பற்றி சொல்லலாம்.

தானாக சொல்வது கூடாது.

நீ கேட்டதால், உனக்கு என்னை பற்றி சொல்கிறேன்.

மலைகள், காடுகள் கடல்கள் கொண்ட இந்த பூமியை, இதில் இருக்கும் உன்னையும் சேர்த்து, மற்ற உயிரைகளோடு சேர்த்து, ஒரே ஒரு சிறகினால் தூக்கி விடுவேன். இது என்னுடைய பலம் என்று அறிந்து கொள்" என்றார் கருடன்.


இதை கேட்ட தேவேந்திரன், "உம்முடைய பலத்தை ஒப்புக்கொள்கிறேன். எங்களிடம் ஸ்நேஹம் கொள்ளுங்கள். உமக்கு இந்த அம்ருதம் தேவையென்றால் எடுத்து கொள்ளுங்கள். தேவை இல்லையென்றால், எங்களுக்கு திருப்பி தந்து விடுங்கள். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், அதன் பலத்தை கொண்டு எங்களை எதிர்ப்பார்கள்" என்றான்.


கருடன், "இதை நான் ஒரு காரணமாக கொண்டு செல்கிறேன். நான் இந்த அம்ருத கலசத்தை ஒரு இடத்தில் வைக்கும் போது, அதை நீங்கள் எடுத்து செல்லுங்கள்" என்றார்


இதை கேட்ட இந்திரன் சந்தோஷமடைந்து, "கருடா ! நீ என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான்.


கருடன், "நான் சர்வ வல்லமை உடையவன் என்றாலும், நீ கேட்பதால் சொல்கிறேன். மிகுந்த வலிமையான சர்ப்பங்கள் எனக்கு உணவாக ஆகட்டும்" என்றார்.


"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, கொடுத்த வரத்தை பற்றி விஷ்ணு பகவானிடம் தெரிவித்து, அவர் சம்மதத்தையும் பெற்றான்.


கருடன் கடைசியாக வினதையிடம் வந்து "அம்மா! தேவலோகத்தில் இருந்து அம்ருதத்தை கொண்டு வந்துள்ளேன். என்ன செய்ய வேண்டும். கட்டளை இடுங்கள்" என்றார்.


தாயான வினதா, "பெரிதும் மகிழ்ந்தேன். நீ மூப்பு இல்லாமல், மரணமில்லாமல் தேவர்களுக்கு அன்பானவனாக இருப்பாய்" என்றாள்


உடனே அங்கிருந்த கத்ருவின் பிள்ளைகளான சர்ப்பங்களை பார்த்து, "இதோ அம்ருதம். இதை இந்த தர்ப்பை பாயில் வைக்கிறேன். ஸ்நானம் செய்து விட்டு, இதை உண்ணுங்கள். நீங்கள் சொன்னபடி அம்ருதத்தை கொண்டு வந்து விட்டேன். ஆதலால் நீங்கள்  அமர்ந்து இப்பொழுதே 'என் தாய் உங்கள் தாயாரான கத்ருவுக்கு  அடிமை இல்லை'  என்று ஆக வேண்டும்" என்றார்.


அந்த சர்ப்பங்கள் "அப்படியே ஆகட்டும்" என்று கருடனின் தாயான வினதாவின் அடிமை விலங்கை விலக்கினார்கள்


இப்படி இவர்கள் சொல்லி விட்டு ஸ்நானம் செய்ய கிளம்ப, உடனே தேவேந்திரன் அங்கு வந்து அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு மீண்டும் தேவலோகம் சென்று விட்டான்.


ஸ்நானம் செய்து விட்டு, திரும்பி வந்த சர்ப்பங்கள், அம்ருத கலசம் காணாமல் போனதை கண்டன.


सोमस्थानम् इदं चेति दर्भांस्ते लिलिहु: तदा।

ततो द्विधा कृता जिह्वाः सर्पाणां तेन कर्मणा।    

अभवंश्च अमृत स्पर्शाद् दर्भास्तेऽथ पवित्रिणः।।

- வியாச மஹாபாரதம்

அம்ருதம் இருந்த இடம் என்பதால், போட்டி போட்டு கொண்டு அந்த தர்ப்பை பாயை நக்கின.

இதனால், பாம்பின் நாக்குகள் இரண்டாக பிளந்தன.

யாராலும் எதிர்க்க முடியாத கருடனை பார்த்து பயந்த சர்ப்பங்கள் ஓடி ஒளிந்தன. எதிர்த்த சர்ப்பங்களை உணவாக உண்டு விட்டார் கருடன்.


பிறகு தன் தாயோடு வசித்து கொண்டு, பக்ஷிகளுக்கு ராஜனாக இருந்து கொண்டு, ப்ரஸித்தியோடு இருந்தார் கருடன்.


இந்த சரித்திரத்தை கேட்பவன், படிப்பவன், கருடனுடைய சங்கீர்த்தனத்தால் நிச்சயம் ஸ்வர்க்கம் அடைவான்.

Friday 21 October 2022

பாண்டிய ராஜ்யத்தில் நடந்த ஒரு நிகழ்வு... - பாண்டிய அரசரும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு... தெரிந்து கொள்வோம்.

பாண்டிய ராஜ்யம் - பாண்டிய அரசரும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு. ஆதி பர்வம், 235 அத்தியாயம்

அர்ஜுனன் தீர்த்த யாத்திரையாக 12 மாதங்கள் மேலும் ஒரு மாதம் வனத்தில் இருந்து விட்டு, மேலும் தொடர்ந்து பயணித்து, நாக கன்னிகையையும் (உலூபி), பிறகு பாண்டிய அரசனின் புதல்வியையும் (சித்ராங்கதை என்ற‌ தமிழ் பெண்) மணந்து கொண்டான். (தீர்த்த யாத்திரை முடித்து கொண்டு திரும்பும் போது, துவாரகை (gujarat) சென்ற போது, தன் தங்கை சுபத்திரையை அர்ஜுனன் மணந்து கொள்ள உதவினார் ஶ்ரீ கிருஷ்ணர்.

अर्जुनं पुरुष-व्याघ्रं स्थिर आत्मानं गुणैः युतम्।

स वै संवत्सरं पूर्णं मासं च एकं वने वसन्।।

तीर्थयात्रां च कृतवान् नाग-कन्याम् अवाप च।

पाण्ड्यस्य तनयां लब्ध्वा तत्र ताभ्यांसहोषितः'।। 

Adi parva 61


தீர்த்தயாத்திரைக்கு சென்ற அர்ஜுனன் கங்கையில் ஸ்நானம் செய்த போது, நாக கன்னிகை "உலூபி" இழுத்து கொண்டு தன் இடத்துக்கு சென்றாள். அவள் தன்னை மணக்கும் படியாக கேட்க, உலூபியை மணந்து கொண்ட அர்ஜுனன், ஒரு நாள் அவளோடு தங்கி விட்டு, மேலும் தீர்த்த யாத்திரையை தொடர்ந்தான்.


பிறகு இமய மலைக்கு சென்றான். பல புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்தான்.


பிறகு கிழக்கு நோக்கி பிரயாணம் செய்து, வரும் வழியில் நைமிசாரண்யத்தில் பல நதிகளில் ஸ்நானம் செய்து, பிறகு கயா சென்று அங்கும் ஸ்நானம் செய்து, பிறகு வங்க (bengal), களிங்க (orisaa), தேசங்களில் உள்ள புண்ய நதிகளில் ஸ்நானம் செய்து, அங்குள்ள கோவில்கள் மாளிகைகளை தரிசித்து கொண்டே, மேலும் ப்ரயாணம் செய்து, மஹேந்திர மலையை கண்டு, பிறகு கோதாவரியில் ஸ்நானம் செய்து, பிறகு, கடல் வரை சேரும் காவிரி நதியில் ஸ்நானம் செய்து, தேவரிஷி பித்ரு தர்ப்பணம் செய்தான்,

मणलूर् ईश्वरं राजन् धर्मज्ञं चित्रवाहनम्।

तस्य चित्राङ्गदा नाम दुहिता चारु दर्शना।।

பிறகு, மணலூர் (மதுரை) என்ற தேசத்துக்கு சென்று அந்த அரசரை சந்தித்தான். அவளுக்கு சித்ராங்கதை என்ற பெண் இருந்தாள்.

तां ददर्श पुरे तस्मिन् विचरन्तीं यदृच्छया।

दृष्ट्वा च तां वरारोहां चकमे चैत्रवाहनीम्।।

அவள் அந்த பட்டிணத்தில் சுதந்திரமாக சஞ்சரிப்பதை கண்டான் அர்ஜுனன். சித்ரம் போல இருக்கும் அவளை கண்டதுமே அவளை விரும்பினான் அர்ஜுனன்.




अभिगम्य च राजानमवदत्स्वं प्रयोजनम्।

देहि मे खल्विमां राजन् क्षत्रियाय महात्मने।।

தன் விருப்பத்தை அந்த தேசத்தின் அரசரிடம் நேராக சென்று "அரசே! உங்கள் பெண்ணை க்ஷத்ரியனான எனக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தான்.


तच्छ्रुत्वा त्वब्रवीद् राजा कस्य पुत्रोऽसि नाम किम्।

उवाच तं पाण्डवोऽहं कुन्तीपुत्रो धनञ्जयः।।

இதை கேட்ட அரசர், "நீ யாருடைய புதல்வன்? உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அர்ஜுனன் "நான் பாண்டவன். குந்தி புத்ரன் தனஞ்சயன்" என்றான்.


तम् उवाचाथ राजा स सान्त्व पूर्वम् इदं वचः।

राजा प्रभञ्जनो नाम कुले अस्मिन्संबभूव ह।।

அர்ஜுனன் பேசியதை கேட்ட அரசன், மிகவும் சாந்தமாக பேச தொடங்கினார்.."எங்கள் ராஜ்யத்தில் ஒரு சமயம் பிரபஞ்சன் என்ற ஒரு அரசர் இருந்தார்.

अपुत्रः प्रसवेनार्थी तपस्तेपे स उत्तमम्।

उग्रेण तपसा तेन देवदेवः पिनाक-धृक्।।

ईश्वरस्तोषितः पार्थ देवदेवः उमापतिः।

स तस्मै भघवान्प्रादाद् एकैकं प्रसवं कुले।।

குழந்தை பாக்கியம் இல்லாத அந்த அரசர், தனக்கு சந்ததி அமைய தவம் செய்தார். அவருடைய உக்ரமான தவத்தால் தேவாதி தேவனும், பினாகி என்ற ஆயுதம் கையில் ஏந்திய உமாபதியான சிவபெருமான் ப்ரசன்னமானார். மேலும் அந்த உமாபதி அரசரை பார்த்து. "உங்கள் குலத்தில் ஒவ்வொரு குழந்தை தான் பிறக்கும்" என்று சொன்னார்.


एकैकः प्रसव: तस्माद् भवति अस्मिन् कुले सदा।

तेषां कुमाराः सर्वेषां पूर्वेषां मम जज्ञिरे।।

இதன் காரணத்தால், இன்று வரை இந்த குலத்தில் ஒவ்வொரு சந்ததிக்கும் ஒரே ஒரு குழந்தை தான் பிறக்கிறது. என்னுடைய முன்னோர்கள் வரை, அனைவருக்கும் ஆண் குழந்தையே பிறந்தனர்.


एका च मम कन्येयं कुलस्योत्पादनी भृशम्।

पुत्रो ममायमिति मे भावना पुरुषर्षभ।।

पुत्रिका-हेतु विधिना संज्ञिता भरतर्षभ।

तस्माद् एकः सुतो योऽस्यां जायते भारत त्वया।।

एतच्छुल्कं भवत्वस्याः कुल कृज्जायताम् इह।

एतेन समयेनेमां प्रतिगृह्णीष्व पाण्डव।।

स तथेति प्रतिज्ञाय तां कन्यां प्रतिगृह्य च।

मासे त्रयो-दशे पार्थः कृत्वा वैवाहिकीं क्रियाम्।

उवास नगरे तस्मिन् मासांस्त्रीन्स तया सह।।

"புருஷர்களில் சிறந்தவனே ! எனக்கு பிறந்த ஒரே பெண் குழந்தை இவள். இவள் தான் என் குலத்தை வளர செய்பவளாக இருக்கிறாள்.

இவள் பெண் குழந்தையாக இருந்தாலும், இவளை சந்ததி வளர்க்கும் புத்ரன் என்றே நினைக்கிறேன். உன் மூலமாக இவளுக்கு பிறக்கும் குழந்தை என் குலத்தை எடுத்து செல்பவனாக இருக்க வேண்டும். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் நான் என் பெண்ணை உன் கையில் ஓப்படைக்க சம்மதிக்கிறேன்" என்றார் அரசர். அர்ஜுனன் "அப்படியே ஆகட்டும்" என்று சபதம் செய்து 12 மாத தீர்த்த யாத்திரை முடிந்த நிலையில், அவளை முறையாக மணம் செய்து கொண்டு, 3 மாதங்கள் பாண்டிய தேசத்திலேயே இருந்தான்.

அதன் பிறகு, அர்ஜுனன் தென் சமுத்திர (கன்யாகுமரி) கரை வரை சென்றான். அங்கு பல புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தான். அங்கிருந்த ரிஷிகள் குறிப்பாக "அகஸ்திய தீர்த்தம், ஸௌபத்ர தீர்த்தம், பௌலோம தீர்த்தம், காரந்தம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் என்ற 5 தீர்த்தங்களில் மட்டும் ஸ்நானம் செய்ய வேண்டாம்" என்று தடுத்தனர்.


ग्राहाः पञ्च वसन्त्येषु हरन्ति च तपोधनान्।
तत एतानि वर्ज्यन्ते तीर्थानि कुरुनन्दन।।

அதில் மனிதர்களை விழுங்கும் 5 பெரும் முதலைகள் இருப்பதை சொல்லி எச்சரித்தார்கள்.


மஹா வீரனான அர்ஜுனன், கவலையே இல்லாமல் இறங்கி, அதில் தன்னை விழுங்க வந்த ஒரு முதலையை தூக்கி கொண்டு வந்து கரையில் போட்டான்.


ரிஷிகள் பார்க்க, அந்த முதலை உருமாறி, சர்வ ஆபரணங்கள் அணிந்த அப்சரஸாக மாறினாள்.


அந்த தேவ லோக அப்சரஸ் மேலும் தன்னுடைய 4 தோழிகள் முதலையாக இருப்பதை சொல்லி, அவர்களையும் சாப விமோசனம்  செய்யுமாறு பிரார்த்தனை செய்தாள்.


தாங்கள் ஐவரும், தவம் செய்து கொண்டிருந்த ப்ராம்மணனை மயக்க நினைத்து அவர் முன் நடனம் ஆடி, பேச்சு கொடுத்த போது, "100 வருடங்கள் முதலையாக போங்கள்" என்று சபித்ததை சொன்னாள்.


அதே சமயம், "ஒரு புருஷ ஸ்ரேஷ்டன் ஒரு நாள் வந்து உங்களை தூக்கி கரை ஏற்றும் போது, சாபம் நீங்கும்" என்று சமாதானமும் செய்தார்.


இதை கேட்ட மஹா வீரனான அர்ஜுனன், மீண்டும் இறங்கி, மற்ற 4 முதலைகளையும் அடக்கி, தூக்கி கொண்டு கரையில் விட்டான். உடனே அனைவரும் தங்கள் தங்கள் உருவத்தை பெற்று, அர்ஜுனனுக்கு நன்றி கூறி, தேவலோகத்துக்கு சென்றனர்.


பிறகு மீண்டும் சித்ராங்கதை இருக்கும் மணலூர்க்கு (மதுரைக்கு) சென்ற அர்ஜுனன், அவள் மூலம் "பப்ரு வாகனன்" என்ற மகனை பெற்றான்.


बभ्रुवाहन नाम्ना तु 

मम प्राणो बहिश्चरः।

तस्माद्भरस्व पुत्रं वै 

पुरुषं वंशवर्धनम्।।

அந்த அரசரை பார்த்து, "என் மகனான 'பப்ரு வாகனனை' உமக்கே தருகிறேன். நீங்கள் என் மகனை வாங்கி கொண்டு, எனக்கு விடுதலை தாருங்கள்" என்று கேட்டான்.

தன் மனைவியான சித்ராங்கதையை பார்த்து, "நீ இங்கேயே இருந்து கொண்டு இரு. பப்ரு வாகனனை நன்றாக வளர்த்து வா. உனக்கு சுகம் உண்டாகட்டும். இவன் வளர்ந்த பிறகு இந்த்ரப்ரஸ்தம் வா. அங்கு மாதா குந்தி தேவி, யுதிஷ்டிரர், பீமன், என்னுடைய இளைய சகோதரர்கள், மற்ற எனது உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீ பார்க்கலாம். என் சொந்தங்களோடு நீயும் சுகமாக இருக்கலாம்.




அன்பானவளே! தர்மத்தில் இருப்பவரும், சத்தியத்தை விடாதவருமான என் சகோதரர் யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய போகிறார்.


உலகத்துக்கே அவர் சக்கரவர்த்தி என்ற பட்டத்தோடு அவர் ராஜ சுய யாகம் செய்து கொள்ளும் போது, உன் தந்தையோடு நீயும் வா. அங்கு உன்னை பார்க்கிறேன்.


இப்பொழுது நம் புத்திரனை காப்பாற்றி வளர்த்து கொண்டு இரு. துக்கப்படாதே!

எனது உயிரே பப்ரு என்ற உருவத்தோடு இருக்கின்றான் என்று பார்.  இந்த வம்சத்தை விருத்தி செய்ய போகும் பப்ருவை பார்த்து கொள்.

என் பிரிவினால் வருத்தப்படாதே !"

என்று அர்ஜுனன் சொல்லி சமாதானம் செய்தான்.


பிறகு மேலும் யாத்திரையை தொடர்ந்து கடற்கரை பக்கம் வந்து, கடைசியாக கேரள தேசம் தாண்டி, புண்யமான கோகர்ண க்ஷேத்ரம் (கர்நாடக) நோக்கி சென்றான்.


பாண்டிய தேசத்துக்கு அர்ஜுனன் சென்றதை பிறகு துரியோதனனும் சொல்கிறான்.

துரியோதனன் தன் தகப்பனார் த்ருதராஷ்டிரனிடம் மீண்டும் ஒரு முறை பாண்டவர்களை சூதாட அழைக்க சொல்லி.. அர்ஜுனனின் பராக்ரமத்தையும், அவன் தீர்த்த யாத்திரை செய்த போது, பலராமரையும் யாதவ சேனையையும் ஒரே ஆளாக எதிர்த்து போரிட்டதையும் சொல்லி பயம் கொள்கிறான்.


தீர்த்த யாத்திரை செய்த அர்ஜுனன், தமிழகம் வந்து, பாண்டிய தேசத்து அரசனின் குமாரியை மணந்தான் என்று சொல்கிறான்.


ततो गोदावरीं कृष्णां कावेरीं चावगाहत।

तत्र पाण्ड्यं समासाद्य तस्य कन्यामवाप सः।।

இப்படி தீர்த்த யாத்திரை செய்து வந்த அர்ஜுனன், கோதாவரி, கிருஷ்ணா, காவேரீ போன்ற புண்ய நதிகளில் நீராடி கொண்டே சென்றான். பிறகு பாண்டிய தேசம் சென்று, அந்த அரசரின் பெண்ணை மணம் செய்து கொண்டான்.


लब्ध्वा जिष्णुर्मुदं तत्र ततो याम्यां दिशं ययौ।

பிறகு மேலும் சந்தோஷத்தோடு மேலும் தென் திசை நோக்கி தீர்த்தயாத்திரை தொடர்ந்தான்.


स दक्षिणं समुद्रान्तं गत्वा चाप्सरसां च वै।

कुमार-तीर्थम् आसाद्य मोक्षयामास च: अर्जुनः।।

தெற்கு கோடிக்கு சென்ற அர்ஜுனன், தேவர்களில் அப்சரஸ் அதிகம் சஞ்சரிக்கும் குமார தீர்த்தம் (கன்னியாகுமாரி) வந்து, அங்கு 5 அப்சரஸ்கள் முதலையாக சாபத்தில் இருப்பதை அறிந்து, தன் பலத்தினாலும், கரையில் எடுத்து சாப விமோசனம் செய்து விடுவித்தான்.


இவ்வாறு துரியோதனன் அர்ஜுனனை பற்றி சொல்கிறான்.

 

யார் அந்த பாண்டிய அரசன்? அவர் பெயர் என்ன?

இவர்கள் பெயரை சஹதேவன் ராஜசூய யாகத்துக்கு திக்விஜயம் சென்ற போது, அவர்களை பார்த்த பொழுது, அறிகிறோம்.


प्रतिजग्राह तस्याज्ञां सम्प्रीत्या मलयध्वजः।।

- Vyasa Mahabharata

அர்ஜுனனின் மாமனாரும், பாண்டிய அரசரான "மலயத்வஜ" அரசரிடம் தான் வந்திருப்பதை தெரிவிக்க தன் தூதுவனை அனுப்பினார், சஹதேவன். உடனேயே, பாண்டிய ராஜன் சஹதேவன் கட்டளையை அன்புடன் அங்கீகரித்தார்.

भार्या रूपवती जिष्णोः पाण्ड्यस्य तनया शुभा।

चित्राङ्गदेति विख्याता द्रमिडी योषितां वरा।।  

आगतं सहदेवं तु सा श्रुत्वाऽन्तः पुरे पितुः।

प्रेषयामास सम्प्रीत्या पूजारत्नं च वै बहु।।

- Vyasa Mahabharata

அர்ஜுனனின் மனைவியும், பாண்டியராஜனின் மகளுமான அழகில் சிறந்தவளான, நல்ல லக்ஷணங்கள் கொண்ட, பெண்களில் சிறந்தவளான, தமிழ் பெண்ணான 'சித்ராங்கதை', சஹதேவன் வந்திருப்பதை தன் தந்தை மூலமாக அறிந்து கொண்டு,  பல வகையான விலையுயர்ந்த பொருள்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவழங்களையும், தூதர்களிடம் கொடுத்து சஹதேவனுக்கு அனுப்பினாள்.


पाण्ड्योऽपि बहु-रत्नानि दूतैः सह मुमोच ह।

मणिमुक्ताप्रवालानि सहदेवाय कीर्तिमान्।।

तां दृष्ट्वाऽप्रतिमां पूजां पाण्डवोऽपि मुदा नृप।

भ्रातुः पुत्रे बहून्रत्नान्दत्वा वै बभ्रूवाहने।।

- Vyasa Mahabharata

அந்த நிகரற்ற மரியாதையை கண்ட சஹதேவன், மிகுந்த ஆனந்தம் அடைந்து, தன் சகோதரன் புதல்வனான பப்ருவாஹனனுக்கு  தானே ரத்தினங்களை அள்ளி கொடுத்து, ஆனந்தப்பட்டார்.




पाण्ड्यं द्रमिड-राजानं श्वशुरं मलयध्वजम्।

स दूतैस्तं वशे कृत्वा मणलूर् ईश्वरं तदा।।

ततो रत्नान्युपादाय द्रमिडै: आवृतो ययौ।

अगस्त्यस्यालयं दिव्यं देवलोकसमं गिरिम्।। 

- Vyasa Mahabharata

பாண்டிய தேசத்தின் தமிழ் அரசனும், மணலூர் (மதுரை) தேசத்தை ஆளும், அர்ஜுனனுக்கு மாமனாருமான மலயத்வஜ பாண்டியனை தன் தூதர்களை அனுப்பி தன் வசப்படுத்தி அவரிடம் ரத்தினங்களை பெற்று கொண்டு, தமிழ் மக்களால் சூழப்பட்ட சஹதேவன் அகத்திய ரிஷியின் திவ்யமான மலையை நோக்கி மேலும் புறப்பட்டார்.


स तं प्रदक्षिमं कृत्वा मलयं भरतर्षभ।

लङ्घयित्वा तु माद्रेय: ताम्रपणीं नदीं शुभाम्।। 

प्रसन्नसलिलां दिव्यां सुशीतां च मनोहराम्।

समुद्र तीरम् आसाद्य न्यविशत् पाण्डु-नन्दनः।।

-Vyasa Mahabharata

ஜனமேஜயா! கிளம்பும் முன், மலயத்வஜ பாண்டியனை வலம் வந்து நமஸ்கரித்து புறப்பட்ட சஹதேவன், கிளம்பி குளிர்ச்சியான நீரை கொண்ட தாம்ரபரணி நதியோரம் வழியாக, இலங்கையை நோக்கி வந்து பயணம் மேற்பட்ட சஹதேவன், கடற்கரையை அடைந்தார்

Wednesday 5 October 2022

துரியோதனின் 100 சகோதரர்கள் பெயர் என்ன? யார் இவர்கள்? யார் இவர்கள்? குந்தி, காந்தாரி, 16000 கிருஷ்ண பத்னிகள், துரியோதனின் சகோதரர்கள், அபிமன்யு.... இவர்கள் யார்? எந்த தேவதை? எந்த அசுரன்? எப்படி பிறந்தார்கள்? தெரிந்து கொள்வோம் - வ்யாசரின் மஹாபாரதம்..

குந்தி, காந்தாரி, 16000 கிருஷ்ண பத்னிகள், துரியோதனின் சகோதரர்கள், அபிமன்யு.... இவர்கள் யார்? தெரிந்து கொள்வோம் - வ்யாசரின் மஹாபாரதம்..

वैशंपायन उवाच। (வைசம்பாயனர் ஜனமேஜெயனிடம் சொல்கிறார்)

मानुषेषु मनुष्येन्द्र संभूता ये दिवौकसः।

प्रथमं दानवाश्चैव तांस्ते वक्ष्यामि सर्वशः।। 

- adi parva (vyasa mahabharata)       

அரசரே ! எந்த தேவர்கள், எந்த அசுரர்கள் மனிதர்களாக பூலோகத்தில் பிறந்தார்களோ அவர்கள் பெயர்களை சொல்கிறேன். கேளுங்கள்.


विप्रचित्तिरिति ख्यातो य आसीद्दानवर्षभः।

जरासन्ध इति ख्यातः स आसीन्मनुजर्षभः।।    

"விப்ர-சித்தி" என்ற அசுரன், ஜராஸந்தனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்..


दितेः पुत्रस्तु यो राजन्हिरण्यकशिपुः स्मृतः।

स जज्ञे मानुषे लोके शिशुपालो नरर्षभः।।

திதியின் புத்ரனான "ஹிரண்யகசிபு" என்ற அசுரன், சிசுபாலனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்..


संह्लाद इति विख्यातः प्रह्लादस्यानुजस्तु यः।

स शल्य इति विख्यातो जज्ञे वाहीकपुङ्गवः।।   

பிரகலாதனுக்கு தம்பியாக இருந்த "ஸம்ஹ்லாதன்" என்ற அசுரன், சல்லியனாக பூமியில் பிறந்து இருந்தான். வாஹீக (வேத தர்மத்தை புறக்கணித்து வாழும்) தேசத்தை ஆட்சி செய்து அரசாண்டு கொண்டிருந்தான்..




अनुह्लादस्तु तेजस्वी योऽभूत्ख्यातो जघन्यजः।

धृष्टकेतुरिति ख्यातः स बभूव नरेश्वरः।।             

பிரகலாதனுடைய கடைசி தம்பியாக இருந்த "அநுஹ்லாதன்" என்ற அசுரன், த்ருஷ்டகேதுவாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


यस्तु राजञ्शिबिर्नाम दैतेयः परिकीर्तितः।

द्रुम इत्यभिविख्यातः स आसीद्भुवि पार्थिवः।।

சிபி என்ற மற்றொரு அசுரன், த்ருமன் என்ற பெயருடன் பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


बाष्कलो नाम यस्तेषामासीदसुरसत्तमः।

भगदत्त इति ख्यातः सं जज्ञे पुरुषर्षभः।।

பாஷ்கலன் என்ற மற்றொரு அசுரன், பகதத்தன் என்ற பெயருடன் பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


अयःशिरा अश्वशिरा अयःशङ्कुश्च वीर्यवान्।

तथा गगनमूर्धा च वेगवांश्चात्र पञ्चमः।

पञ्चैते जज्ञिरे राजन्वीर्यवन्तो महासुराः।

केकयेषु महात्मानः पार्थिवर्षभसत्तमाः।

केतुमानिति विख्यातो यस्ततोऽन्यःप्रतापवान्।

अमितौजा इति ख्यातः सोग्रकर्मा नराधिपः।।

"அயஸிர, அஸ்வஸிர, அயசங்கு, ககனமூர்தா, வேகவான்" என்ற 5 அசுரர்கள், கேகேய தேசத்தில் (pakistan) மஹாவீரர்களாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தனர். அவர்களோடு, "கேதுமானி" என்ற அசுரனும், கொடிய செயல்கள் செய்யும் "அமிதொளஐஸ்" என்ற மற்றொரு அசுரனும் பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தனர்.


स्वर्भानुरिति विख्यातः श्रीमान्यस्तु महासुरः।

उग्रसेन इति ख्यात उग्रकर्मा नराधिपः।।

"ஸ்வர்பானு" என்ற மஹா அசுரன், உக்ரசேனர் என்று பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


यस्त्वश्व इति विख्यातः श्रीमानासीन्महासुरः।

अशोको नाम राजाऽभून्महावीर्योऽपराजितः।।

"அஸ்வந்" என்ற அசுரன், அசோகன் என்று பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


तस्मादवरजो यस्तु राजन्नश्वपतिः स्मृतः।।

दैतेयः सोऽभवद्राजा हार्दिक्यो मनुजर्षभः।।

"அஸ்வந்" என்ற அசுரனின் தம்பியான "அஸ்வபதி" என்ற அசுரன், "ஹார்திக்" என்னும் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


वृषपर्वेति विख्यातः श्रीमान्यस्तु महासुरः।

दीर्घप्रज्ञ इति ख्यातः पृथिव्यां सोऽभवन्नृपः।।

வ்ருஷபர்வன் என்ற அசுரன், பூமியில், தீர்க-ப்ரஞன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.


अजकस्त्ववरो राजन्य आसीद्वृषपर्वणः।        

स शाल्व इति विख्यातः पृथिव्यामभवन्नृपः।।

வ்ருஷபர்வன் என்ற அசுரனின் தம்பியான "அஜகன்" என்ற அசுரன், சால்வன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்.

अश्वग्रीव इति ख्यातः सत्ववान्यो महासुरः।

रोचमान इति ख्यातः पृथिव्यां कोऽभवन्नृपः।।

அஸ்வ-க்ரீவன் என்ற அசுரன், ரோசமானன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


सूक्ष्मस्तु मतिमान्राजन्कीर्तिमान्यः प्रकीर्तितः।

बृहद्रथ इति ख्यातः क्षितावासीत्स पार्थिवः।।

"சூக்ஷ்மன்" என்ற அசுரன், ப்ருஹத்ரதன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


तुहुण्ड इति विख्यातो य आसीदसुरोत्तमः।      

सेनाबिन्दुरिति ख्यातः स बूभव नराधिपः।।

"துஹுண்டன்" என்ற அசுரன், சேனாபிந்து என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


इषुमान्नाम यस्तेषामसुराणां बलाधिकः।

नग्नजिन्नाम राजासीद्भुवि विख्यातविक्रमः।।

"இஷுமான்" என்ற அசுரன், நக்னஜித் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


एकचक्र इति ख्यात आसीद्यस्तु महासुरः।

प्रतिविन्घ्य इति ख्यातो बभूव प्रथितः क्षितौ।।

"ஏகசக்ரன்" என்ற அசுரன், ப்ரதிவிந்த்யன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


विरूपाक्षस्तु दैतेयश्चित्रयोधी महासुरः।

चित्रधर्मेति विख्यातः क्षितावासीत्स पार्थिवः।।

"விரூபாக்ஷன்" என்ற அசுரன், சித்ரதர்மன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


हरस्त्वरिहरो वीर आसीद्यो दानवोत्तमः।

सुबाहुरिति विख्यातः श्रीमानासीत्स पार्थिवः।।

"ஹரன்" என்ற அசுரன், சுபாஹு என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


अहरस्तु महातेजाः शत्रुपक्षक्षयंकरः।

बाह्लिको नाम राजा स बभूव प्रथितः क्षितौ।।

"அஹரன்" என்ற அசுரன், பாஹ்லீகன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான் 


निचन्द्रश्चन्द्रवक्त्रस्तु य आसीदसुरोत्तमः।

मुञ्जकेश इति ख्यातः श्रीमानासीत्स पार्थिवः।।

"நிசந்த்ரன்" என்ற அசுரன், முஞ்சகேசன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


निकुम्भस्त्वजितः संख्ये महामतिरजायत।

भूमौ भूमिपतिश्रेष्ठो देवाधिप इति स्मृतः।।

"நிகும்பன்" என்ற அசுரன், தேவாதிபன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


शरभो नाम यस्तेषां दैतेयानां महासुरः।            

पौरवो नाम राजर्षिः स बभूव नरोत्तमः।।

"சரபன்" என்ற அசுரன், பௌரவன் என்ற பெயரில் ராஜரிஷியாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


कुपटस्तु महावीर्यः श्रीमान्राजन्महासुरः।

सुपार्श्व इति विख्यातः क्षितौ जज्ञे महीपतिः।।

"குபடன்" என்ற அசுரன், சுபார்ஷ்வன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


कपटस्तु राजन्राजर्षिः क्षितौ जज्ञे महासुरः।

पार्वतेय इति ख्यातः काञ्चनाचलसन्निभः।।

"கபடன்" என்ற அசுரன், பார்வதேயன் என்ற பெயரில் ராஜரிஷியாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


द्वितीयः शलभस्तेषामसुराणां बभूव ह।

प्रह्लादो नाम बाह्लीकः स बभूव नराधिपः।।

"சலபன்" என்ற மற்றொரு அசுரன், ப்ரஹ்லாதன் என்ற பெயரில் பாஹ்லீக பூமியில் (வேத தர்மத்தை ஏற்காத) பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்

चन्द्रस्तु दितिजश्रेष्ठो लोके ताराधिपोपमः।

चन्द्रवर्मेति विख्यातः काम्बोजानां नराधिपः।। 

"சந்த்ரன்" என்ற அசுரன், சந்த்ரவர்மன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


अर्क इत्यभिविख्यातो यस्तु दानवपुङ्गवः।

ऋषिको नाम राजर्षिर्बभूव नृपसत्तमः।।           

"அர்கன்" என்ற அசுரன், ரிஷிகன் என்ற பெயரில் ராஜரிஷியாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


मृतपा इति विख्यातो य आसीदसुरोत्तमः।

पश्चिमानूपकं विद्धि तं नृपं नृपसत्तम।।              

"ம்ருதபன்" என்ற அசுரன், பஸ்சிமானூபகன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


गविष्ठस्तु महातेजा यः प्रख्यातो महासुरः।

द्रुमसेन इति ख्यातः पृथिव्यां सोऽभवन्नृपः।।    

"கவிஷ்டன்" என்ற அசுரன், த்ருமசேனன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


मयूर इति विख्यातः श्रीमान्यस्तु महासुरः।       

स विश्व इति विख्यातो बभूव पृथिवीपतिः।।

"மயூரன்" என்ற அசுரன், விஸ்வன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


सुपर्ण इति विख्यातस्तस्मादवरजस्तु यः।

कालकीर्तिरिति ख्यातः पृथिव्यां सोऽभवन्नृपः।।

"சுபர்ணன்" என்ற மயூரன் என்ற அசுரனின் தம்பி, காலகீர்த்தி என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


चन्द्रहन्तेति यस्तेषां कीर्तितः प्रवरोऽसुरः।        

शुनको नाम राजर्षिः स बभूव नराधिपः।।

"சந்த்ரஹந்தன்" என்ற அசுரன், சுனகன் என்ற பெயரில் ராஜரிஷியாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


विनाशनस्तु चन्द्रस्य य आख्यातो महासुरः।

जानकिर्नाम विख्यातः सोऽभवन्मनुजाधिपः।।

"சந்த்ரஸன்" என்ற அசுரன், ஜானகி என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


दीर्घजिह्वस्तु कौरव्य य उक्तो दानवर्षभः।

काशिराजः स विख्यातः पृथिव्यां पृथिवीपते।।

"தீர்கஜிஹ்வன்" என்ற அசுரன், காசிராஜன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


ग्रहं तु सुषुवे यं तु सिंहिकार्केन्दुमर्दनम्।

स क्राथ इति विख्यातो बभूव मनुजाधिपः।।

சிம்ஹிகை பெற்ற "ராகு" என்ற கிரக அசுரன், க்ராதன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


दनायुषस्तु पुत्राणां चतुर्णां प्रवरोऽसुरः।

विक्षरो नाम तेजस्वी वसुमित्रो नृपः स्मृतः।।

தனாயுஷ் என்ற அசுரனின் 4 புத்ரர்களில் ஒருவனான "விக்ஷரன்" என்ற மூத்தவன், வசுமித்ரன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


द्वितीयो विक्षराद्यस्तु नराधिप महासुरः।

पाण्ड्यराष्ट्राधिप इति विख्यातः सोऽभवन्नृपः।।

விக்ஷரனுக்கு பிறகு இரண்டாவதாக பிறந்த ஒரு அசுரன், பாண்டியராஜனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


बली-वीर इति ख्यातो यस्त्वासीदसुरोत्तमः।

पौण्ड्रमात्स्यक इत्येवं बभूव स नराधिपः।।       

"பலீ-வீரன்" என்ற அசுரன், பௌண்ட்ரமாத்ஸ்யன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


वृत्र इत्यभिविख्यातो यस्तु राजन्महासुरः।

मणिमान्नाम राजर्षिः स बभूव नराधिपः।।         

"வ்ருத்ர" என்ற அசுரன், மணிமான் என்ற பெயரில் ராஜரிஷியாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


क्रोधहन्तेति यस्तस्य बभूवावरजोऽसुरः।

दण्ड इत्यभिविख्यातः स आसीन्नृपतिः क्षितौ।।

வ்ருத்ரனின் தம்பியான "க்ரோதஹந்தன்" என்ற அசுரன், தண்டன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்

क्रोधवर्धन इत्येवं यस्त्वन्यः परिकीर्तितः।

दण्डधार इति ख्यातः सोऽभवन्मनुजर्षभः।।   

"க்ரோதவர்தன்" என்ற அசுரன், தண்டதாரன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான்


कालेयानां तु ये पुत्रास्तेषामष्टौ नराधिपाः।

जज्ञिरे राजशार्दूल शार्दूलसमविक्रमाः।।

காலேயர்களின் பிள்ளைகளான எட்டு அசுரர்கள், புலிக்கு சமமான அரசர்களாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தனர்


मगधेषु जयत्सेनस्तेषामासीत्स पार्थिवः।

अष्टानां प्रवरस्तेषां कालेयानां महासुरः।।

காலேயர்களில் முதல் அசுரன், மணிமான்ஜெயத்சேனன் என்ற பெயரில் அரசனாக பூமியில் பிறந்து மகத தேசத்தை அரசாண்டு கொண்டிருந்தான்




द्वितीयस्तु ततस्तेषां श्रीमान्हरिहयोपमः।

अपराजित इत्येवं स बभूव नराधिपः।।

இரண்டாமவன், அபராஜித் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


तृतीयस्तु महातेजा महामायो महासुरः।

निषादाधिपतिर्जज्ञे भुवि भीमपराक्रमः।।

மூன்றாமவன், நிஷாத ராஜனாக பூமியில் பிறந்து இருந்தான்.


तेषामन्यतमो यस्तु चतुर्थः परिकीर्तितः।

श्रेणिमानिति विख्यातः क्षितौ राजर्षिसत्तमः।।

நான்காமவன், ஸ்ரேணிமான் என்ற ராஜரிஷியாக பூமியில் பிறந்து இருந்தான்.


पञ्चमस्त्वभवत्तेषां प्रवरो यो महासुरः।

महौजा इति विख्यातो बभूवेह परन्दपः।।

ஐந்தாமவன், மஹௌஜன் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


षष्ठस्तु मतिमान्यो वै तेषामासीन्महासुरः।

अभीरुरिति विख्यातः क्षितौ राजर्षिसत्तमः।।

ஆறாமவன், அபீரு என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


समुद्रसेनस्तु नृपस्तेषामेवाभवद्गणात्।

विश्रुतः सागरान्तायां क्षितौ धर्मार्थतत्त्ववित्।।

ஏழாமவன், சமுத்ரசேனன் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


बृहन्नामाष्टमस्तेषां कालेयानां नराधिप।

बभूव राजा धर्मात्मा सर्वभूतहिते रतः।।

எட்டாவன், ப்ருஹத் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


कुक्षिस्तु राजन्विख्यातो दानवानां महाबलः।

पार्वतीय इति ख्यातः काञ्चनाचलसन्निभः।।

தானவர்களில் குக்ஷி என்ற அசுரன், பார்வதீயன் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


क्रथनश्च महावीर्यः श्रीमान्राजा महासुरः।

सूर्याक्ष इति विख्यातः क्षितौ जज्ञे महीपतिः।।

க்ரதனன் என்ற அசுரன், சூர்யாக்ஷன் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


असुराणां तु यः सकूर्यः श्रीमांश्चैव महासुरः।

दरदो नाम बाह्लीको वरः सर्वमहीक्षिताम्।।

ஸகூர்யன் என்ற அசுரன், தரதன் என்ற அரசனாக பாஹ்லீக பூமியில் பிறந்து இருந்தான்.


गणः क्रोधवशो नाम यस्ते राजन्प्रकीर्तितः।

ततः संजज्ञिरे वीराः क्षिताविह नराधिपाः।।

க்ரோதவஸோ என்ற அசுர கூட்டத்திலிருந்து, பலர் பூமியில் பிறந்து இருந்தனர்.


मद्रकः कर्णवेष्टश्च सिद्धार्थः कीटकस्तथा।

सुवीरश्च सुबाहुश्च महावीरोऽथ बाह्लिकः।।

क्रथो विचित्रः सुरथः श्रीमान्नीलश्च भूमिपः।

चीरवासाश्च कौरव्य भूमिपालश्च नामतः।।

दन्तवक्त्रश्च नामासीद्दुर्जयश्चैव दानवः।

रुक्मी च नृपशार्दूलो राजा च जनमेजयः।।

आषाढो वायुवेगश्च भूरितेजास्तथैव च।

एकलव्यः सुमित्रश्च वाटधानोऽथ गोमुखः।।

कारूषकाश्च राजानः क्षेमधूर्तिस्तथैव च।

श्रुतायुरुद्वहश्चैव बृहत्सेनस्तथैव च।।

क्षेमोग्रतीर्थः कुहरः कलिङ्गेषु नराधिपः।

मतिमांश्च मनुष्येन्द्र ईश्वरश्चेति विश्रुतः।।

மத்ரகன், கர்ணவிஷ்டன், ஸித்தார்த்தன், கீடகன், ஸுவீரன், ஸுபாஹு, மஹாவீரன், பாஹ்லீகன், க்ரதன், விசித்ரன், ஸுரதன், நீலன், சீரவாசன், பூமிபாலன், தந்தவக்த்ரன், துர்ஜயன், ருக்மி, ஜனமேஜய, ஆஷாடன், வாயுவேகன், பூரிதேஜஸ், ஏகலவ்யன், சுமித்ரன், வாடாதானன், கோமுகன், காரூஷகன், க்ஷேமதூர்தி, ஸ்ருதாயு, உத்வஹன், ப்ருஹத்சேனன், க்ஷேமன், அக்ரதீர்த்தன், கலிங்க தேச அரசன் குஹரன், மதிமான் என்று பல அரசர்களாக அசுரர்கள் பூமியில் பிறந்தனர்.


गणात्क्रोधवशादेष राजपूगोऽभवत्क्षितौ।

जातः पुरा महाभागो महाकीर्तिर्महाबलः।।

कालनेमिरिति ख्यातो दानवानां महाबलः।

स कंस इति विख्यात उग्रसेनसुतो बली।।

முன்பு அசுரர்களில் மஹாவீரனும், பெரிய கீர்த்தியும் கொண்ட காலநேமி என்ற அசுரனே, மகாகோபமுள்ள கம்சனாக பூமியில் பிறந்து அரசாண்டு கொண்டிருந்தான். உக்ரசேனருக்கு மகனாக பிறந்து இருந்தான்.


यस्त्वासीद्देवको नाम देवराजसमद्युतिः।

स गन्धर्वपतिर्मुख्यः क्षितौ जज्ञे नराधिपः।।

தேவகன் என்ற அசுரன், கந்தர்வன் என்ற அரசனாக பூமியில் பிறந்து இருந்தான்.


बृहस्पतेर्बृहत्कीर्तेर्देवर्षेर्विद्धि भारत।

अशाद्द्रोणं समुत्पन्नं भारद्वाजमयोनिजम्।।

धन्विनां नृपशार्दूल यः सर्वास्त्रविदुत्तमः।

महाकीर्तिर्महातेजाः स जज्ञे मनुजेश्वर।।

धनुर्वेदे च वेदे च यं तं वेदविदो विदुः।

वरिष्ठं चित्रकर्माणं द्रोणं स्वकुलवर्धनम्।।

தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியே, கர்ப்பம் மூலம் பிறக்காமல் பாரத்வாஜருக்கு துரோணராக பூமியில் பிறந்தார். இவர் சிறந்த வில்லாளியாகவும், அஸ்திரங்கள் அனைத்தும் தெரிந்தவராக பூலோகத்தில் பிறந்து இருந்தார். இந்த துரோணர் தனுர் வேதத்திலும்,   வேதத்திலும் மிக சிறந்தவராகவும், தனது குலத்தை வ்ருத்தி செய்பவராகவும் இருந்தார்.


महादेवान्तकाभ्यां च कामात्क्रोधाच्च भारत।

एकत्वमुपसंपद्य जज्ञे शूरः परन्तपः।।

अश्वत्थामा महावीर्यः शत्रुपक्षभयावहः।

वीरः कमलपत्राक्षः क्षितावासीन्नराधिपः।।

சிவபெருமானின் அனுகிரஹத்தால், காமமும் க்ரோதமும் ஒன்று சேர்ந்தபடி, ஒரு மஹாவீரன் இவருக்கு மகனாக பிறந்தான். அவனுக்கு அஸ்வத்தாமன் என்று பெயர். 


जज्ञिरे वसवस्त्वष्टौ गङ्गायां शन्तनोः सुताः।

वसिष्ठस्य च शापेन नियोगाद्वासवस्य च।।

तेषामवरजो भीष्मः कुरूणामभयङ्करः।

मतिमान्वेदविद्वाग्मी शत्रुपक्षक्षयङ्करः।।

जामदग्न्येन रामेण सर्वास्त्रविदुषां वरः।

योऽप्युध्यत महातेजा भार्गवेण महात्मना।।

வசிஷ்டரின் சாபத்தால், இந்திரனின் அனுமதியோடு, 8 வசுக்கள் கங்கா தேவிக்கும், சந்தனு மஹாராஜனுக்கும் பிள்ளைகளாக பிறந்தார்கள். அந்த வசுக்களில் கடைசியாக பிறந்தவரே, கௌரவர்களுக்கு காவலனாக இருந்து, சிறந்த புத்தியுடன், வேதங்களை நன்கு அறிந்து, நல்ல பேச்சு திறனுடன், எதிரிகளை ஒழிப்பவருமான பீஷ்மராக பிறந்து இருந்தார். அஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவரான, மஹா பராக்ரமசாலியான, மஹாத்மாவாகிய பீஷ்மர், ஜாமதக்னியின் புத்ரனான பரசுராமரையே  எதிர்த்து ஒரு முறை யுத்தம் செய்தார்.


यस्तु राजन्कृपो नाम ब्रह्मर्षिरभवत्क्षितौ।

रुद्राणां तु गणाद्विद्धि संभूतमतिपौरुषम्।।

ப்ரம்மரிஷியாகவும், கௌரவர்களின் குல குருவாகவும் பிறந்து இருந்த க்ருபர், ருத்ர கணங்களில் ஒருவர்.   


शकुनिर्नाम यस्त्वासीद्राजा लोके महारथः।

द्वापरं विद्धि तं राजन्संभूतमरिमर्दनम्।।

துவாபர யுக புருஷனே மனித ரூபம் தரித்து, சகுனியாக பிறந்து அரசனாக இருந்தான்.

सात्यकिः सत्यसन्धश्च योऽसौ वृष्णिकुलोद्वहः।

पक्षात्स जज्ञे मरुतां देवानामरिमर्दनः।।

7 மருத்துக்களில் ஒருவரே, சத்ய சந்தனும், வ்ருஷநீ குல வீரனுமாக தோன்றிய ஸாத்யகீயாக பூமியில் பிறந்து இருந்தான்.

द्रुपदश्चैव राजर्षिस्तत एवाभवद्गणात्।

मानुषे नृप लोकेऽस्मिन्सर्वशस्त्रभृतां वरः।।

ராஜரிஷியாக மானிட உலகத்தில் பிறந்து இருந்த த்ருபதனும், 7 மருத்துக்களில் ஒருவரே.


ततश्च कृतवर्माणं विद्धि राजञ्जनाधिपम्।

तमप्रतिमकर्माणं क्षत्रियर्षभसत्तमम्।।

அரசனாக மானிட உலகத்தில் பிறந்து இருந்த க்ருதவர்மனும், 7 மருத்துக்களில் ஒருவரே.




मरुतां तु गणाद्विद्धि संजातमरिमर्दनम्।

विराटं नाम राजानं परराष्ट्रप्रतापनम्।।

அரசனாக மானிட உலகத்தில் பிறந்து இருந்த விராடனும், 7 மருத்துக்களில் ஒருவரே.


अरिष्टायास्तु यः पुत्रो हंस इत्यभिविश्रुतः।

स गन्धर्वपतिर्जज्ञे कुरुवंशविवर्धनः।।

धृतराष्ट्र इति ख्यातः कृष्णद्वैपायनात्मजः।

दीर्घबाहुर्महातेजाः प्रज्ञाचक्षुर्नराधिपः।।

मातुर्दोषादृषेः कोपादन्ध एव व्यजायत।।

அரிஷ்டை என்ற கந்தர்வ தேவதைக்கு பிறந்த ஹம்சன் என்பவனே, வ்யாஸர் அனுகிரஹத்தால் த்ருதராஷ்டிரனாக பிறந்து இருந்தார். இவருடைய தாயார் ரிஷிக்கு செய்த அபவாதத்தால், இவர் குருடனாக பிறந்தார்.


मरुतां तु गणाद्वीरः सर्वशस्त्रभृतां वरः।

पाण्डुर्जज्ञे महाबाहुस्तव पूर्वपितामहः।

तस्यैवावरजो भ्राता महासत्वो महाबलः।।

சஸ்திரம் பிடித்தவர்களின் சிறந்த, உன் தந்தைக்கு (பரீக்ஷித்) பாட்டனாரான அந்த த்ருதராஷ்டிரனுக்கு தம்பியாக மஹா தைரியமும், பலமும் கொண்ட பாண்டுவும் 7 மருத்துக்களில் ஒருவரே.  


धर्मात्तु सुमहाभागं पुत्रं पुत्रवतां वरम्।

विदुरं विद्धि तं लोके जातं बुद्धिमतां वरम्।।

தர்மம் தெரிந்தவராக, சிறந்த பிள்ளையாக, புத்திமானாக யமதர்மனே விதுரனாக பூமியில் பிறந்தார்.


कलेरंशस्तु संजज्ञे भुवि दुर्योधनो नृपः।

दुर्बद्धिर्दुर्मतिश्चैव कुरूणामयशस्करः।।

जगतो यस्तु सर्वस्य विद्विष्टः कलिपूरुषः।

यः सर्वां घातयामास पृथिवीं पृथिवीपते।।

கலி புருஷனே, துரியோதனனாக கெட்ட புத்தியுடன், கெட்ட எண்ணத்துடன் கௌரவர்களுக்கு அவப்பெயர் கிடைக்கும்படியாக  பூமியில் பிறந்தான். உலகத்தையே விரோதிப்பவனாக பிறந்த இந்த கலிபுருஷன் துரியோதனன் உலகையே நாசம் செய்தான் 


उद्दीपितं येन वैरं भूतान्तकरणं महत्।

पौलस्त्या भ्रातरश्चास्य जज्ञिरे मनुजेष्विह।।

शतं दुःशासनादीनां सर्वेषां क्रूरकर्मणाम्।

दुर्मुखो दुःसहश्चैव ये चान्ये नानुकीर्तिताः।।

दुर्योधनसहायास्ते पौलस्त्या भरतर्षभ।

वैश्यापुत्रो युयुत्सुश्च धार्तराष्ट्रः शताधिकः।।

புலஸ்திய ரிஷிக்கு பிறந்த பிற ராக்ஷஸர்களே, இந்த மனித உலகத்தில் இந்த துரியோதனனுக்கு சகோதரர்களாக பிறந்தனர். துச்சாதனன், துர்முகன், துஸ்ஸஹன் போன்ற 100 பேர் சகோதரர்களாக பிறந்தனர். த்ருதராஷ்டிரனுக்கும், வைஸ்ய வர்ணத்தில் இருந்த இன்னொரு ராணிக்கும் பிறந்த யுயுத்சுவும் புலஸ்திய ரிஷிக்கு பிறந்த ஒரு ராக்ஷஸனே


जनमेजय उवाच। (ஜனமேஜயன் கேட்கிறார்)

ज्येष्ठानुज्येष्ठतामेषां नामधेयानि वा विभो।

धृतराष्ट्रस्य पुत्राणामानुपूर्व्येण कीर्तय।।

தாங்கள், த்ருதராஷ்டிரரின் 100 புதல்வர்களில் யார் பெரியவர்? யார் சிறியவர்? என்று வரிசையாக பெயரை கூற வேண்டும்


वैशंपायन उवाच। (வைசம்பாயனர் கூறலானார்)

दुर्योधनो युयुत्सुश्च राजन् दुःशासन: तथा।

दुःसहो दुःशलश्चैव दुर्मुखश्च तथापरः।।

विविंशति र्विकर्णश्च जलसन्धः सुलोचनः।

विन्दन् अनुविन्दौ दुर्धर्षः सुबाहु: दुष्प्रधर्षणः।।

दुर्मर्षणो दुर्मुखश्च दुष्कर्णः कर्ण एव च।

चत्र: उपचित्रौ चित्राक्ष: चारुचित्राङ्गदश्च ह।।

दुर्मदो दुष्प्रहर्षश्च विवित्सु: विकटः समः।

ऊर्णनाभः पद्मनाभस्तथा नन्द उपनन्दकौ।।

सेनापतिः सुषेणश्च कुण्डोदर महोदरौ।

चित्रबाहु: चित्रवर्मा सुवर्मा दुर्विरोचनः।।

अयोबाहु: महाबाहु: चित्रचाप सुकुण्डलौ।

भीमवेगो भीमबलो बलाकी भीमविक्रमः।।

उग्रायुधो भीमशरः कनकायु: दृढायुधः।

दृढवर्मा दृढक्षत्रः सोम कीर्ति: अनूदरः।।

जरासन्धो दृढसन्धः सत्यसन्धः सहस्रवाक्।

उग्रश्रवा उग्रसेनः क्षेममूर्ति: तथैव च।।

अपराजितः पण्डितको विशालाक्षो दुराधनः।।

दृढहस्तः सुहस्तश्च वातवेग सुवर्चसौ।

आदित्य केतु: बह्वाशी नागदत्त अनुयायिनौ।।

कवाची निषङ्गी दण्डी दण्ड धारो धनुर्ग्रहः।

उग्रो भीमरथो वीरो वीरबाहु: अलोलुपः।।

अभयो रौद्रकर्मा च तथा दृढरथश्च यः।

अनाधृष्यः कुम्डभेदी विरावी दीर्घलोचनः।।

दीर्घबाहु: महाबाहु: व्यूढोरुः कनकाङ्गदः।

कुण्डज: चित्रकश्चैव दुःशला च शताधिका।।

துரியோதனன் (1), யுயுத்சு என்ற கரணன், துச்சாஸனன் (2), துஸ்ஸஹன் (3), துச்சலன் (4), துர்முகன் (5), விவிம்சதி (6), விகர்ணன் (7) (இவன் ஒருவன் தான் திரௌபதியை சபைக்கு இழுத்து வந்ததை தவறு என்று கடிந்து கொண்டான்), ஜலஸந்தன் (8), ஸுலோசனன் (9),  விந்தன் (10),

அனுவிந்தன் (11), துர்தர்ஷன்  (12), ஸுபாஹு  (13), துஷ்ப்ரதர்ஷனன் (14), துர்மர்ஷணன்  (15), மற்றொரு துர்முகன் (16), துஷ்கர்ணன் (17), கர்ணன்  (18), சத்ரன்  (19), உபசித்ரன் (20),

சித்ராக்ஷன் (21), சாருசித்ராங்கதன் (22), துர்மதன் (23), துஷ்ப்ரஹர்ஷணன் (24), விவித்சு (25), விகடன் (26), ஸமன் (27), ஊர்ண-நாபன் (28), பத்மநாபன் (29), நந்தன் (30),

உபநந்தன்  (31), ஸேனாபதி (32), ஸுஷேணன் (33), குண்டோதரன் (34), மஹோதரன் (35), சித்ரபாஹூ (36), சித்ரவர்மா (37), ஸுவர்மா (38), துர்விரோசனன் (39), அயோபாஹு (40), 

மஹாபாஹு (41),  சித்ரசாபன் (42), ஸுகுண்டலன் (43), பீமவேகன் (44), பீமபலன்  (45), பலாகீ (46), பீமவிக்ரமன்  (47), உக்ராயுதன் (48), பீமசரண் (49), கனகாயு (50), 

த்ருடாயுதன் (51),  த்ருடவர்மன் (52), த்ருடக்ஷத்ரன் (53), ஸோமன் (54), கீர்த்தி (55), அனூதரன் (56), ஜராஸந்தன் (57), த்ருடஸந்தன் (58), ஸத்யசந்தன் (59), ஸஹஸ்ரவாக் (60),

உக்ரஸ்ரவஸ் (61), உக்ரசேனன் (62), க்ஷேமமூர்த்தி (63), அபராஜிதன் (64), பண்டிதகன் (65), விசாலாக்ஷன் (66), துராதனன் (67), த்ருடஹஸ்தன் (68), ஸுஹஸ்தன் (69), வாதவேகன் (70),

ஸுவர்ச்சஸ் (71), ஆதித்யன் (72), கேது  (73), பஹ்வாஸி  (74), நாகதத்தன் (75), அனுயாயி (76), கவாசீ (77), நிஷங்கீ  (78), தண்டீ  (79), தண்டன் (80), 

தாரன் (81), தனுக்ரஹன் (82), உக்ரன் (83),பீமரதன் (84), வீரன்  (85), வீரபாஹு (86), அலோலுபன் (87), அபயன் (88), ரௌத்ரகர்மன் (89),  த்ருடரதன் (90), அனாத்ருஷ்யன் (91),

கும்டபேதீ (92), விராவீ (93),தீர்க்கலோசனன் (94), தீர்க்கபாஹு  (95),மற்றொரு மஹாபாஹு  (96), வ்யூடோரு (97), கனகாங்கதன்  (98), குண்டஜன் (99)  சித்ரகன் (100)  என்று 100 சகோதரர்கள். துச்சலா 101வதாக பிறந்தவள்.


वैश्यापुत्रो युयुत्सुश्च धार्तराष्ट्रः शताधिकः।

एतदेकशतं राजन्कन्या चैका प्रकीर्तिता।।

வைஸ்ய புத்திரனாக பிறந்த யுயுத்சு, த்ருதராக்ஷ்டிரருக்கு 100 மேற்பட்டு பிறந்தவன். அரசரே! இவ்வாறு 101 புத்திரர்கள் பெயரும், ஒரு பெண் பிள்ளை பெயரும் நீங்கள் கேட்டவாறு உரைத்தேன். 


नामधेयानुपूर्व्या च ज्येष्ठानुज्येष्ठतां विदुः।

सर्वे त्वतिरथाः शूराः सर्वे युद्धविशारदाः।।

सर्वे वेदविदश्चैव राजञ्शास्त्रे च परागाः।

सर्वे सङ्घ्रामविद्यासु विद्याभिजनशोभिनः।।

இவர்கள் அனைவருமே அதிரதர்கள். அனைவருமே யுத்தம் செய்வதில் தேர்ந்தவர்கள். அனைவருமே வேதம் தெரிந்தவர்கள். அனைவருமே சாஸ்திரங்களை கரைகண்டவர்கள். அனைவருமே யுத்தத்தின் வித்தைகளை அறிந்தவர்கள். இவர்கள் கல்வியாலும், குலத்தினாலும் பிரகாசித்தார்கள். 


सर्वेषामनुरूपाश्च कृता दारा महीपते।

दुःशलां समये राजसिन्धुराजाय कौरवः।

जयद्रथाय प्रददौ सौबलानुमते तदा।।

இவர்கள் அனைவருமே தகுதியான பத்னிகளையும் பெற்று இருந்தனர். கௌரவன் த்ருதராஷ்ட்ரன், தன் மகளான துச்சலையை சிந்து தேச அரசன் "ஜயத்ரஜனுக்கு" மணம் செய்து கொடுத்தார்.


धर्मस्यांशं तु राजानं विद्धि राजन्युधिष्ठिरम्।

भीमसेनं तु वातस्य देवराजस्य चार्जुनम्।

अश्विनोस्तु तथैवांशौ रूपेणाप्रतिमौ भुवि।

नकुलः सहदेवश्च सर्वभूतमनोहरौ।

स्युवर्चा इति ख्यातः सोमपुत्रः प्रतापवान्।।

ஜனமேஜெயா ! தர்மதேவதையே, யுதிஷ்டிரனாக மனித ரூபத்தில் பிறந்து இருந்தார். வாயு பகவானே பீமனாக பூமியில் பிறந்து இருந்தார். தேவேந்த்ரனே அர்ஜுனனாக பூமியில் பிறந்து இருந்தார். அஸ்வினி குமாரர்களே நகுல, சகாதேவனாக பூமியில் பிறந்து இருந்தார்கள். வஸுக்களில் ஒருவனான ஸோமனின் புத்ரனான "வர்ச்சஸ்", பூமியில் "அபிமன்யு"வாக பிறந்து இருந்தார்.




स: अभिमन्यु: बृहत्कीर्ति: अर्जुनस्य सुत: अभवत्।

यस्यावतरणे राजन् सुरान् सोम: अब्रवीद् इदम्।।

नाहं दद्यां प्रियं पुत्रं मम प्राणैर्गरीयसम्।

समयः क्रियतामेष न शक्यम् अतिवर्तितुम्।।

सुरकार्यं हि नः कार्यमसुराणां क्षितौ वधः।

तत्र यास्यत्ययं वर्चा न च स्थास्यति वै चिरम्।।

ऐन्द्रिर्नरस्तु भविता यस्य नारायणः सखा।

सोर्जुनेत्यभिविख्यातः पाण्डोः पुत्रः प्रतापवान्।।

तस्यायं भविता पुत्रो बालो भुवि महारथः।

ततः षोडशवर्षाणि स्थास्यत्यमरसत्तमाः।।

अस्य षोडशवर्षस्य स सङ्ग्रामो भविष्यति।

यत्रांशा वः करिष्यन्ति कर्म वीरनिषूदनम्।।

नरनारायणाभ्यां तु स सङ्ग्रामो विनाकृतः।

चक्रव्यूहं समास्थाय योधयिष्यन्ति वःसुराः।।

विमुखाञ्छात्रवान्सर्वान्कारयिष्यति मे सुतः।

बालः प्रविश्य च व्यूहमभेद्यं विचरिष्यति।।

महारथानां वीराणां कदनं च करिष्यति।

सर्वेषामेव शत्रूणां चतुर्थांशं नयिष्यति।।

दिनार्धेन महाबाहुः प्रेतराजपुरं प्रति।

ततो महारथैर्वीरैः समेत्य बहुशो रणे।।

दिनक्षये महाबाहुर्मया भूयः समेष्यति।

एकं वंशकरं पुत्रं वीरं वै जनयिष्यति।

प्रनष्टं भारतं वंशं स भूयो धारयिष्यति।।

ஜனமேஜெய அரசரே! அபிமன்யு பிறக்கும் போது, வஸுக்களில் ஒருவனான ஸோமன் "அனைத்து உயிர்களையும் விட எனக்கு என் புத்ரன் பிரியமானவன். அவனை நான் கொடுக்க மாட்டேன். நான் சொல்லப்போகிற விதியை நீங்கள் ஏற்க வேண்டும். பூமியில் அவதரித்துள்ள அசுரர்களை வதைப்பது நம் காரியம் தான். என் பிள்ளை வர்ச்சஸ் இதற்காக பிறக்க போகிறான். ஆனால் அதிக காலம் பூமியில் இவன் தங்க மாட்டான். நாராயணருக்கு சகாவான நரனுக்கு பிள்ளையாக இவன் பிறக்கட்டும். இவன் பாலகனாக இருக்கும் போதே மஹாரதனாக இருப்பான். தேவர்களில் உத்தமமானவர்களே! என் பிள்ளை 16 வருட காலம் மட்டுமே பூலோகத்தில் இருப்பான். அந்த வயதில் நம்மவருக்கும் அசுரர்களுக்கும் பெரும் யுத்தம் பூலோகத்தில் நடக்க விருக்கிறது. அசுரர்கள் சக்ரவியூகம் அமைத்து யுத்தம் செய்வார்கள். அந்த சக்ரவ்யூகத்தை உடைக்க முடியாமல் உள்ளேயே என் பிள்ளை சஞ்சரிப்பான். அங்கு நிற்கும் எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்வான். அங்கு தனி ஒருவனாக 4ல் ஒரு பங்கு சேனையை எம பட்டணம் அனுப்புவான். பல மஹாரதர்கள் எதிர்க்க, சாயங்கால சமயத்தில் மீண்டும் என்னோடு வந்து சேருவான். இந்த வம்சத்துக்கு வீரனான ஒரு பிள்ளையை இவன் கொடுத்து விட்டு வருவான். அந்த புத்ரன் அழிந்து போன பாரத வம்சத்தை மறுபடியும் நிலை நிறுத்துவான்" என்று மற்ற தேவர்களை பார்த்து இவ்வாறு சொன்னார்.


वैशंपायन उवाच। (வைசம்பாயனர் சொன்னார்)

एतत् सोम-वचः श्रुत्वा तथास्त्विति दिवौकसः।

प्रत्यूचुः सहिताः सर्वे ताराधिपमपूजयन्।

एवं ते कथितं राजंस्तव जन्म पितुः पितुः।।

சந்திரனுடைய இந்த கோரிக்கையை ஏற்று, மற்ற தேவர்களும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி கௌரவித்தினர். ஜனமேஜெயரே! ராஜன்! உன் பிதாவுக்கு பிதாவான அபிமன்யுவின் பிறப்பை பற்றி சொன்னேன். 


अग्नेर्भागं तु विद्धि त्वं धृष्टद्युम्नं महारथण्।

शिखण्डिनमथो राजंस्त्रीपूर्वं विद्धि राक्षसम्।।

அக்னி தேவனே மஹாரதனாகிய த்ருஷ்டத்யும்னனாக பூலோகத்தில் பிறந்து இருந்தார். 

ராக்ஷஸர்களில் ஒருவனே  முதலில் பெண்ணாக இருந்து பிறகு சிகண்டியாக பூலோகத்தில் பிறந்து இருந்தான். 


द्रौपदेयाश्च ये पञ्च बभूवुर्भरतर्षभ।

विश्वान्देवगणान्विद्धि संजातान्भरतर्षभ।।

प्रतिविन्ध्यः सुतसोमः श्रुतकीर्ति: तथापरः।

नाकुलिस्तु शतानीकः श्रुतसेनश्च वीर्यवान्।।

பரத குலத்தில் உத்தமரே! விஸ்வான் தேவர்களே திரௌபதிக்கு 5 பிள்ளைகளாக பூலோகத்தில் பிறந்தனர்.  ப்ரதிவிந்த்யன், சுதஸோமன், ஸ்ருதகீர்தி, நகுலனின் புத்திரனாக ஸதாநீகன், ஸ்ருதசேனன் என்ற பெயர்களில் பிறந்தனர்.


शूरो नाम यदुश्रेष्ठो वसुदेवपिताऽभवत्।

तस्य कन्या पृथा नाम रूपेणासदृशी भुवि।

சூரசேனர் என்ற ராஜனுக்கு யது குலத்தின் உத்தமராக வசுதேவர் பிறந்தார். சூரசேனருக்கு முதலில் அழகிய மகளாக "ப்ருதா" என்ற பெண் பிறந்து இருந்தாள்.

पितुः स्वस्रीयपुत्राय सोऽनपत्याय वीर्यवान्।

अग्रमग्रे प्रतिज्ञाय स्वस्यापत्यस्य वै तदा।।

अग्रजातेति तां कन्यां शूरोऽनुग्रहकाङ्क्षया।

अददत्कुन्तिभोजाय स तां दुहितरं तदा।।

சூரசேனர், தன் தந்தையோடு பிறந்த அக்காளுடைய (அத்தை) பேரனான குந்தி போஜனுக்கு கொடுத்த வாக்கின் படி, அவருக்கு சந்ததி இல்லாத காரணத்தால்,  தன் மூத்த குழந்தையான "ப்ருதா"வை தத்து கொடுத்தார்.


सा नियुक्ता पितुर्गेहे ब्राह्मणातिथिपूजने।

उग्रं पर्यचरद्धोरं ब्राह्मणं संशितव्रतम्।।

தகப்பனார் சூரசேனரோடு இருந்த காலத்தில், குழந்தையான இவள், ப்ராம்மணர்களையும், அதிதிகளையும் பூஜிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள்.


निकूढनिश्चयं धर्मे यं तं दुर्वाससं विदुः।

समुग्रं शंसितात्मानं सर्वयत्नैरतोषयत्।।

கடுமையானவரும், கடும் தவம் செய்தவரும், தர்மத்தில் உறுதியும் கொண்ட துர்வாசர் மகரிஷி வந்த போது ப்ருதா பூஜித்தாள்.


तुष्टोऽभिचारसंयुक्तमाचचक्षे यथाविधि।

उवाच चैनां भगवान्प्रीतोऽस्मि सुभगे तव।।

यं यं देवं त्वमेतेन मन्त्रेणावाहयिष्यसि।

तस्य तस्य प्रसादात्त्वं देवि पुत्राञ्जनिष्यसि।।

அந்த ரிஷி தங்கி இருந்த காலம் வரை, அனைத்து சேவைகளையும் செய்தாள். இவளுடைய பக்தியால் ப்ரசன்னமான துர்வாசர், அவளுக்கு தேவதா ரூபமான மந்திரங்களை உபதேசம் செய்தார்.

பிறகு அவளை பார்த்து, "குழந்தாய்! உன்னுடைய பக்தியில் திருப்தி கொள்கிறேன்! தேவி! நீ இந்த மந்திரத்தால், எந்த தேவதையை கூப்பிடுகிறாயோ, அந்த தேவதைகளின் அனுகிரஹத்தால் புத்ரர்களை பெறுவாய்" என்று சொன்னார்.


एवमुक्ता च सा बाला तदा कौतूहलान्विता।

कन्या सती देवमर्कमाजुहाव यशस्विनी।।

प्रकाशकर्ता भगवांस्तस्यां गर्भं दधौ तदा।

अजीजनत्सुतं चास्यां सर्वशस्त्रभृतांवरम्।।

இதை கேட்டு ஆச்சர்யப்பட்ட அந்த சிறுமி, மந்திரத்தை பரீக்ஷித்து பார்க்க, கன்னியாக இருந்த போதே, சூரியனை நினைத்து கொண்டு ஜபித்து விட்டாள். உடனே சூரியதேவனால் அனுகிரஹிக்கப்பட்டு, கர்ப்பம் தரித்து விட்டாள்.


सकुण्डलं सकवचं देवगर्भं श्रियान्वितम्।

दिवाकरसमं दीप्त्या चारुसर्वाङ्गभूषितम्।।

உடனே, காதில் குண்டலங்களுடன், மார்பில் கவசத்தோடு தேவ கர்ப்பத்தால் உண்டான ஒரு பிள்ளை சூரியனை போல பிறந்து விட்டான்.


निगूहमाना जातं वै बन्धुपक्षभयात्तदा।

उत्ससर्ज जले कुन्ती तं कुमारं यशस्विनम्।।

உறவினர்கள் என்ன சொல்வார்களோ!! என்று பயந்து போன அந்த சிறுமி, அந்த சூர்ய புத்ரனை ஆற்று ஜலத்தில் விட்டு விட்டாள்.


तमुत्सृष्टं जले गर्भं राधाभर्ता महायशाः।

राधायाः कल्पयामास पुत्रं सोऽधिरथस्तदा।।

ஆற்றில் விடப்பட்ட அந்த அதிரதனான குழந்தையை ராதை என்பவளின் கணவன், தன் மனைவிக்கு பிள்ளையாக ஸ்வீகரித்து கொண்டு பெரும் புகழ் பெற்று விட்டான்.


चक्रतुर्नामधेयं च तस्य बालस्य तावुभौ।

दंपती वसुषेणेति दिक्षु सर्वासु विश्रुतम्।।

அந்த தம்பதிகள் தங்களுக்கு கிடைத்த இந்த பிள்ளைக்கு "வசுசேனன்" என்று பெயரிட்டனர்.


संवर्धमानो बलवान्सर्वास्त्रेषूत्तमोऽभवत्।

वेदाङ्गानि च सर्वाणि जजाप जपतां वरः।।

பலவானாக வளர்ந்த இந்த குழந்தை, அனைத்து சாஸ்திரங்களையும் கற்றான். ஜபம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவன், வேத அங்கங்களையும் கற்றான்.


यस्मिन्काले जपन्नास्ते धीमान्सत्यपराक्रमः।

नादेयं ब्राह्मणेष्वासीत्तस्मिन्काले महात्मनः।।

तमिन्द्रो ब्राह्मणो भूत्वा पुत्रार्थे भूतभावनः।

ययाचे कुण्डले वीरं कवचं च सहाङ्गजम्।।

ஜபம் செய்து விட்டு, ப்ராம்மணர்களுக்கு அவர்கள் வேண்டியதை கொடுக்கும் வ்ரதம் கொண்டிருந்தான். அப்பொழுது, தேவேந்திரன் தனது புத்ரனுக்காக (அர்ஜுனன்) ப்ராஹ்மண வேஷம் போட்டுகொண்டு, அந்த வீரனோடு பிறந்த கவசத்தையும் குண்டலத்தையும் யாசித்தார்.


उत्कृत्य कर्णो ह्यददत्कवचं कुण्डले तथा।।

शक्तिं शक्रो ददौ तस्मै विस्मितश्चेदमब्रवीत्।।

देवासुरमनुष्याणां गन्धर्वोरगरक्षसाम्।

यस्मिन्क्षेप्स्यसि दुर्धर्ष स एको न भविष्यति।।

உடனேயே தன் கவசத்தையும், குண்டலங்களையும் அறுத்து கொடுத்து விட்டான். இதை கண்டு ஆச்சர்யப்பட்ட தேவேந்திரன், சக்தி என்ற ஆயுதத்தை கொடுத்து, "தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, நாகர்களோ, ராக்ஷஸர்களோ - எவராக இருந்தாலும் சரி, நீ இந்த சக்தி ஆயுதத்தை எவர்கள் மீது பிரயோகிப்பாயோ, அவன் உயிரோடு இருக்க மாட்டான்" என்று ஆசிர்வதித்தார்.


वैशंपायन उवाच। (வைசம்பாயனர் மேலும் சொன்னார்)

पुरा नाम च तस्यासीद्वसुषेण इति क्षितौ।

ततो वैकर्तनः कर्णः कर्मणा तेन सोऽभवत्।।. 

வசுசேனன் என்று முதலில் பெயர் கொண்டிருந்த இந்த மஹாவீரன், கவசத்தையும், குண்டலத்தையும் அறுத்து கொடுத்ததால், "கர்ணன்" என்று புகழ் பெற்றான்.


आमुक्तकवचो वीरो यस्तु जज्ञे महायशाः।

स कर्ण इति विख्यातः पृथायाः प्रथमः सुतः।।

கவசத்தோடு பிறந்த அந்த பெரும் புகழ் பெற்றவனே, "ப்ருதா"வின் மூத்த பிள்ளை.


स तु सूतकुले वीरो ववृधे राजसत्तम।

कर्णं नरवरश्रेष्ठं सर्वशस्त्रभृतां वरम्।।

दुर्योधनस्य सचिवं मित्रं शत्रुविनाशनम्।

दिवाकरस्य तं विद्धि राजन्नंशमनुत्तमम्।।

ராஜ ஸ்ரேஷ்டரே ! அந்த வீரன் தான் சூத குலத்தில் வளர்ந்தான். துரியோதனின் நெருங்கிய நண்பனாகவும், எதிரிகளை நாசம் செய்பவனாகவும் இருந்த அவனை சூரிய அம்சம் என்று அறியுங்கள்.


यस्तु नारायणो नाम देवदेवः सनातनः।

तस्य अंशो मानुषेष्वासीद् वासुदेवः प्रतापवान्।।

தேவர்களுக்கெல்லாம் தேவனும், நாராயணன் என்றும், காலத்திற்கு அப்பாற்பட்ட வாசுதேவன், வசுதேவனின் புத்ரனாக அவதரித்து இருந்தார்.


शेषस्यांशश्च नागस्य बलदेवो महाबलः।

सनत्कुमारं प्रद्युम्नं विद्धि राजन्महौजसम्।।

அந்த வாசுதேவன் படுத்து இருக்கும் அந்த ஆதி சேஷனே மஹாபலசாலியான பலராமனாக பிறந்தார். ராஜன்! சனத் குமாரரே 'ப்ரத்யும்னனாக' பிறந்தார்.


वमन्ये मनुष्येन्द्रा बहवोंशा दिवौकसाम्।

जज्ञिरे वसुदेवस्य कुले कुलविवर्धनाः।।

இதை தவிர மேலும் பல தேவர்கள், வசுதேவரின் குலத்தில் பல அரசர்களாக பிறந்து வம்சத்தை வளர்த்தனர்.


गणस्तु अप्सरसां यो वै मया राजन्प्रकीर्तितः।

तस्य भागः क्षितौ जज्ञे नियोगाद्वासवस्य ह।।

तानि षोडशदेवीनां सहस्राणि नराधिप।

बभूवुर्मानुषे लोके वासुदेवपरिग्रहः।।

ராஜன்! தேவ அப்சரஸ் கணங்களே, இந்திரனின் கட்டளைப்படி பூமியில் அவதரித்தனர். 16000 பெண்களாக பிறந்து இருந்த இவர்கள் அனைவரும், பூலோகத்தை உத்தாரணம் செய்ய வந்த வாசுதேவ கிருஷ்ணனையே மணந்தனர்.


श्रियस्तु भागः संजज्ञे रति अर्थं पृथिवीतले।

भीष्मकस्य कुले साध्वी रुक्मिणी नाम नामतः।।

பகவானுடைய ஐஸ்வர்யமாக இருக்கும் லக்ஷ்மி, கண்ணனின் ப்ரீதிக்காக, பீஷ்மகரின் மகளாக ருக்மிணி என்ற பெயரில் பிறந்தாள்.


द्रौपदी त्वथ संजज्ञे शची भागादनिन्दिता।

द्रुपदस्य कुले जाता वेदिमध्यादनिन्दिता।।

नातिह्रस्वा न महती नीलोत्पलसुगन्धिनी।

पद्मायताक्षी सुश्रोणी स्वसिताञ्चितमूर्धजा।।

सर्वलक्षणसंपन्ना वैदूर्यमणिसंनिभा।

पञ्चानां पुरुषेन्द्राणां चित्तप्रमथनी रहः।।

திரௌபதி இந்திராணி ஸசி தேவியின் அம்சமாக பிறந்தாள். இவள் த்ருபதன் வளர்த்த யாக குண்டத்தில் தோன்றினாள். அதிக குள்ளமாகவும் இல்லாமல், அதிக  நெட்டையாகவும் இல்லாமல், நீலோத்பல (குவளை) புஷ்பத்தின் மணத்தோடு, தாமரை போன்ற நீண்ட கண்களோடு, அழகிய நிதம்பம் உடையவளாக, மை போன்ற கரு கருவென்ற நீண்ட சுருண்ட கூந்தலோடு, அனைத்து லக்ஷணங்களோடு, வைடூரிய மணி போல, பஞ்ச ப்ராணனாக பிறந்து இருக்கும் புருஷர்களின் சித்தத்தை கலக்குபவளுமான திரௌபதி பிறந்தாள். 


सिद्धिर्धृतिश्च ये देव्यौ पञ्चानां मातरौ तु ते।

कुन्ती माद्री च जज्ञाते मतिस्तु कुबलात्मजा।।

ஸித்தி, த்ருதி என்ற இரண்டு தேவதைகளே, பஞ்ச பாண்டவர்களுக்கு தாயாக பிறந்தனர். இவர்களே குந்தீ என்றும் மாத்ரீ என்றும் அறியப்பட்டனர். மதி என்ற தேவதையே, குபலா (என்ற காந்தாரியாக) பிறந்து இருந்தாள். 




इति देवासुराणां ते गन्धर्वाप्सरसां तथा।

अंशावतरणं राजन्राक्षसानां च कीर्तितम्।।

ராஜன்! இவ்வாறு தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், ராக்ஷஸர்களும் பூமியில் யார் யாராக பிறந்தனர் என்று உமக்கு சொன்னேன். 


ये पृथिव्यां समुद्भूता राजानो युद्धदुर्मदाः।

महात्मानो यदूनां च ये जाता विपुले कुले।।

இந்த பூமியில் யுத்தத்தில் அடங்காதவர்களாக இருக்கும் அரசர்களை பற்றியும், யது குல மஹாத்மாக்களை பற்றியும் உமக்கு சொன்னேன்.


ब्राह्मणाः क्षत्रिया वैश्या मया ते परिकीर्तिताः।

धन्यं यशस्यं पुत्रीयमायुष्यं विजयावहम्।।

इदमंशावतरणं श्रोतव्यमनसूयता।

अंशावतरणं श्रुत्वा देवगन्धर्वरक्षसाम्।।

प्रभवाप्ययवित्प्राज्ञो न कृच्छ्रेष्ववसीदति।।

ப்ராம்மணர்களாகவும், க்ஷத்ரியர்களாகவும், வைஸ்யர்களாகவும் பிறந்த இவர்களை பற்றி சொன்னேன். யார் யாருடைய அம்சமாக பிறந்தார்கள் என்று நான் சொன்னதை வெறுப்பில்லாமல் கேட்பவன், வாழ்நாளில் தேவையான செல்வத்துடனும், புகழுடனும், பிள்ளைகளையும், நீண்ட ஆயுளையும், வெற்றியையும் அடைவான். தேவா அசுர அம்சங்களை அறிந்து கொண்ட புத்திமான், மரணத்தை கண்டும் கலங்கமாட்டான்.


இவ்வாறு வைசம்பாயனர் ஜனமேஜெய மஹாராஜனுக்கு சொன்னார்.