Followers

Search Here...

Showing posts with label கல். Show all posts
Showing posts with label கல். Show all posts

Friday 31 May 2019

கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே? - என்று சொல்கிறார்கள் போலி பகுத்தறிவாளிகள்...இவர்கள் பார்ப்பது என்ன? நாம் பார்ப்பது என்ன? ஒரு அலசல்

"பகுத்தறிவாளி" என்று நினைத்து பேசுபவர்கள், ஹிந்துக்களை பார்த்து கேலியாக,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே!!"
என்று குரைக்கிறார்கள்.


'கண்ணால் எதை பார்க்கிறோமோ, அது தானே உண்மை' என்று போலி பகுத்தறிவாளிகள் நினைக்கிறார்கள்.
தங்கத்தால் ஆன கிண்ணத்தை ஒருவன் பார்த்து "கிண்ணம்" என்று சொல்கிறான்.
இதில் பால் ஊற்றி குடிக்கலாம் என்று நினைக்கிறான்.
"அப்படி சொல்லாதே... அப்படியெல்லாம் நினைக்காதே... நன்றாக பார். இது வெறும் தங்கம் தான். இனி நீ இதை 'தங்கம்' என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது தங்கம்' என்று சொல்பவனுக்கே தெரியுமே... ஆனால் இப்போது "தங்கத்தில் கிண்ணம் தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

அதே போல,
மண்ணால் செய்யப்பட்ட குதிரையை ஒரு குழந்தை பார்த்து "ஆஹா... குதிரை" என்று சொல்லி அதனுடன் விளையாடுகிறது.
"அப்படியெல்லாம் சொல்லாதே... மண் குவியல் என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது மண் தான்' என்று குழந்தைக்கே தெரியுமே... ஆனால் இப்போது "அந்த மண்ணில் குதிரை தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் என்றால், மனிதனுக்கு புத்தி எதற்கு? மனம் எதற்கு? மிருகமாகவே இருந்து விடலாமே..

தாய், தன் குழந்தையை பார்த்து, "என் செல்ல குழந்தை" என்று கொஞ்சுகிறாள்.

'வெளியில் என்ன பார்க்கிறாயோ அது தான் உண்மை.' என்று குரைக்கும் பகுத்தறிவாளிகள், தன் தாயிடமே சென்று,
"என்னை நன்றாக பார். சதை, எலும்பு, நரம்பு, ரத்தத்தால் செய்யப்பட்ட 80 கிலோ மாமிச பிண்டம் தான் நான்.
80 கிலோ மாமிசம் தானே உன் கண்ணுக்கு எதிரில் நிற்கிறது. இந்த மாமிசத்தை பார்த்து 'என் குழந்தை, என் குழந்தை' என்று சொல்கிறாயே!!"
என்றா தன் தாயை பார்த்து கேலி செய்வான்?

தாய்க்கு தெரியாதா, தன் குழந்தை மாமிசத்தால் ஆனவன் தான் என்று.
'மாமிச உடம்பு தான் இது' என்று தாய்க்கு தெரிந்தாலும்,
அதில் தன் குழந்தை இருப்பதை தன் மனதாலும், புத்தியாலும் பார்ப்பதால் தானே "என் மகனே" என்று கொஞ்சுகிறாள்.





தாய்க்கு பகுத்தறிவு உள்ளதா? 
கண்ணால் காண்பதே நிஜம் என்று நினைத்து குரைக்கும், முட்டாள் பகுத்தறிவாதிக்கு பகுத்தறிவு உள்ளதா?

தெய்வ நம்பிக்கை உள்ள கிறிஸ்தவன், கொலை செய்யப்பட்டு, இறந்தே போய்விட்ட ஏசுவை, தெய்வமாக நினைத்து, அவருடைய உருவத்தை சிலையாக வைத்து, "ஏசு ஏசு" என்று கல்லை பார்த்து கும்பிடுகிறான்.
இவர்களை பார்த்து,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'ஏசு ஏசு' என்று சொல்கிறாயே, அறிவில்லை?
அவர் கொலை செய்யப்பட்டு 2000 வருடங்கள் ஆகி விட்டதே..முட்டாள்" என்றா கேட்கிறான் இந்த போலி பகுத்தறிவாதி?...

இது போன்ற முட்டாளை, கிறிஸ்துவன் மதித்தால், அது அவன் வணங்கும் ஏசுவை அவமானபடுத்தியதற்கு சமம் அல்லவா!
உண்மையான கிறிஸ்தவன், இப்படி தன் வழிபாட்டையும், தான் தெய்வமாக வழிபடும் ஏசுவையும் சேர்த்து தான் கேலி செய்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியனும் மெக்காவில் உள்ள கல்லை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்று நினைக்கிறான். 'கல்லை பார்க்க எதற்காக அலைகிறாய்?' என்றா கேட்பான் இந்த போலி பகுத்தறிவாதி?

தெய்வத்தை எந்த விதத்தில் கேலி செய்பவனையும், தெய்வ நம்பிக்கை உள்ளவன் தன் தலைவனாக ஏற்று கொள்ள முடியுமா?
'உன் தாய் விபச்சாரி' என்று கேலி செய்தவனை, 'பரவாயில்லை, சொல்லிக்கொள்' என்று இருப்பானா? ஒரு மான உணர்ச்சி உள்ள மகன்.

தான் வணங்கும் தெய்வத்தை பழிப்பவனை பார்த்து, 'நீ தான் என் தலைவன் சொல்வானா?' தெய்வ நம்பிக்கை உள்ளவன்..

தெய்வ நம்பிக்கை உள்ள அனைவரும் புறக்கணிக்க வேண்டியவன் அல்லவா, இந்த போலி பகுத்தறிவாதி...

மனம், புத்தி இரண்டையும் பயன்படுத்தாத இவர்களிடம், அவனுடைய தாயே புத்தி சொன்னால் கூட புரிந்து கொள்ள மாட்டானே!!

அறிவாளியாக இருந்தாலாவது, "கொஞ்சம் புத்தியை, மனதை பயன்படுத்தி பார், நான் மாமிச சரீரத்தை பார்த்து மகனே என்று சொல்லவில்லை.. அந்த உருவத்தில் என் குழந்தை இருப்பதை பார்க்கிறேன்" என்று தானே தாய் சொல்வாள்..

அது போலவே,
இறந்து போன தன் தகப்பன் உடலை பார்த்து, போலி பகுத்தறிவாதி மகனும் "ஐயோ அப்பா... அப்பா" என்று கதறி அழுகிறான்.
பார்க்க வேதனையாக இருந்தாலும், 'இவன் போலி பகுத்தறிவு அப்போது எங்கே போனது?' என்று தானே கேட்க தோன்றுகிறது.

அந்த போலி பகுத்தறிவாதி மகனிடம் சென்று,
"நன்றாக பார். இங்கு அசையாத ஒரு மாமிசம் பிண்டம் தானே இருக்கிறது.
எதற்கும் உதவாத இந்த மாமிசத்தை பார்த்து 'அப்பா... அப்பா..' என்று சொல்கிறாயே!!.. அறிவு இல்லை?"
என்று கேட்டால், அந்த போலி பகுத்தறிவு மகன் என்ன சொல்வான்?

அதே போல,
என்றோ இறந்து போனவனின், சிலையை, போட்டோவை வைத்து கொண்டு அந்த சிலைக்கு மாலையும் போட்டு, வணக்கமும் தெரிவித்து, மரியாதை செய்து மகிழ்கிறான் கோமாளியான நாத்தீகனும், போலி பகுத்தறிவாதியும்.

அந்த போலி நாத்தீகனிடம் சென்று,
"நன்றாக பார்.. இது ஒரு பேப்பர், இது ஒரு கருங்கல்.
முட்டாள்தனமாக பேப்பரை பார்த்து, கல்லை பார்த்து
'ராமசாமி கிழவன்.. ராமசாமி கிழவன்.. தான் வளர்த்த பெண்ணை கட்டிக்கொண்ட கருக்காலி" என்று சொல்கிறாயே!!..அறிவு இல்லையா"
என்று கேட்டால், அந்த நாத்தீகன் என்ன சொல்வான்?


ஐயா, நான் போட்டோ பேப்பரை பார்க்கவில்லை.. அந்த பேப்பரில் காணப்படும் இறந்து போன அந்த கிழவனை நினைத்து பார்க்கிறேன். இறந்து விட்ட அவரை பார்க்க முடியாது என்பதால், அவர் சொன்ன விஷயங்கள் என் மனதில் இருப்பதால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த போட்டோவுக்குள் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த மரியாதையை காட்டி கொள்கிறேன்" என்று தானே சொல்வான் போலி பகுத்தறிவு பேசும் மடையர்கள்.

இதை தானே ஆஸ்தீகன், செய்கிறான்.

இறந்து போன மனிதன், கொலை செய்யப்பட்ட ஆவிகளுக்கே, தங்கள் நன்றியை தெரிவிக்க, அவர்கள் உருவத்தை போட்டோவில், சிலையாக செய்து, மாலை போட்டு, வணக்கம் செலுத்தும் போது...
சர்வ வல்லமை கொண்ட பரமாத்மா, எங்கும் உள்ள பரமாத்மாவை,
ஒரு கல்லில், போட்டோவில் இருப்பதாக பாவித்து வணங்கினால், இவன் மூளைக்கு புரியவில்லை.

இவர்களை போன்ற போலிகள், தான் கொண்டாடும் போலி தலைவனை சிலை வைத்து, மாலை போடும் போது, தாங்கள் இப்பொழுது என்ன செய்கிறோம்? என்று கொஞ்சம் விவேகம் இருந்து யோசித்தாலே,
ஆஸ்தீகன் கல்லை பார்க்கவில்லை, அதனில் தன் தெய்வத்தை பார்க்கிறான் என்று புரிந்து கொள்வான்.
அந்த தெய்வத்துக்கு மரியாதை செய்கிறான். அந்த தெய்வத்திடம் தன் பிரார்த்தனையை வைக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும்.

தான் கல்லுக்கு மரியாதை செய்யும் போது, "என் தலைவனை நினைத்து மரியாதை செய்கிறேன்" என்று பேசும் இவர்கள்,
ஆஸ்தீகன் 'சிவபெருமானை இந்த சிலையில் பார்க்கிறேன்' என்று வணங்கினால்,
ஆஸ்தீகனை கேலி செய்து, அவன் தெய்வத்தையும், கலாச்சாரத்தையும் கேலி செய்து பிழைப்பு செய்கிறான்.
இது போன்ற போலிகள், சமுதாயத்தை சீரழித்து விடுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கீழ் தரமான போலிகளை, நாம் வழிபடும் தெய்வத்தை வெறுக்கும் போலிகளை, வேரோடு ஒதுக்க வேண்டும்.
இவர்களை சட்டத்தாலும், ஒடுக்க வேண்டும்.


தான் மட்டும் சிலை வழிபாடு செய்து, இறந்து போய் விட்ட கிழவனை வணங்குவேன், ஆனால்,
நீ எங்கும் உள்ள தெய்வத்தை உன் ஆசைக்காக ஒரு சிலையாக செய்து, 'எங்கும் இருப்பவர், அதிலும் இருக்கிறார்' என்று வழிபட்டால், கேலி செய்வேன் என்று சொன்னால்,
அது போன்ற போலிகளை ஜென்ம விரோதியாக கூட நினைக்கலாம்.

தெய்வத்தையே நிந்தனை செய்து, நம் வழிபாடுகளை கேலி செய்யும் கூட்டம், ஆசை வார்த்தை கூறி, நமக்கே வயிற்றுக்கு சோறு போட்டால் கூட, அவர்கள் முகத்திலேயே துப்பி விட வேண்டும்.

பகுத்தறிவு போர்வையில், இருக்கும் இந்த போலிகள்,  நசுக்கப்பட வேண்டும்.

மானமுள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், தெய்வ வழிபாட்டை கேலி செய்யும் இவர்களை, மதிப்பது கூட, நாம் வழிபடும் தெய்வத்துக்கு நாம் செய்யும் அவமானமாகும்.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - listen to Bhajan

Sandhya vandanam - morning with meaning



Sandhya vandanam - afternoon with meaning.

Sandhya vandanam - evening with meaning.