Followers

Search Here...

Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

Saturday 30 November 2019

கர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெரிந்து கொள்வோமே

சமைத்ததை அப்படியே சாப்பிட்டால் - சாதம்.
அதையே தெய்வத்திடம் காட்டி
"இன்று எனக்கு சோறு கிடைத்தது. அதை விட, வாயில் போட்டால் சுவைக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமான உயிரும் இருக்கிறதே. உனக்கு நன்றி. உயிரை நிற்க வைத்துள்ள நீயே இந்த உணவையும் ஜீரணம் செய்கிறாய்" என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் - பிரசாதம்.



சாப்பாடு கிடைக்காமலோ, சாப்பிடாமலோ கிடந்தால் - பட்டினி.
சாப்பாடு சாப்பிடாமல், தெய்வ சிந்தனையுடன் இருந்தால் - விரதம்.

தாகம் எடுத்து குடித்தால் - தண்ணீர்.
தாகம் எடுத்து, தெய்வத்திடம் காட்டிவிட்டு, தெய்வ சிந்தனையுடன் குடித்தால் - தீர்த்தம்.

அருமையான பாட்டை அமைத்தால், கேட்டால் - இசை.
அருமையான பாட்டை தெய்வத்திற்காக அமைத்தால், கேட்டால் - கீர்த்தனம்.

ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - அவனுக்கு இதயம் உள்ளவன் என்று பெயர்.
இறைவனே அனைத்துமாக காட்சி தருகிறார் என்ற நினைவில் ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - இதயத்தில் இறைதன்மை கொண்டிருக்கும் அவனே கோவிலாகிறான்.

தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - செயல் (கர்மா).
தெய்வம் நம் செயலை பார்த்து திருப்தி அடைய வேண்டும் என்ற ஆசையில், தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - சேவை (கர்ம யோகம்).

தனக்காகவும், பிறருக்ககாவும் பல இடங்கள் செல்வது - பயணம்.
தெய்வம் ஆசைப்படுகிறது என்றும், தெய்வத்தை காணப்பதற்கும் பல இடங்கள் செல்வது - தீர்த்த யாத்திரை.



ஒழுக்கம், தர்மம், அடக்கம் என்று வாழ்பவன் - மனிதன்.
இறைவனே லட்சியம் என்று வாழ்பவன் - புனிதன்.

மனிதர்கள் தெய்வபக்தி இல்லாமல் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்மமாக ஆகி, பாவம் புண்ணியம் சேர்த்து, யமனிடம் உதைப்பட்டு பின் மீண்டும் பிறந்து விடுகிறான்.

மனிதர்கள் தெய்வபக்தியுடன் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்ம யோகமாக ஆகி, பாவம் புண்ணியம் அனைத்தும் அந்த தெய்வமே ஏற்று விடுவதால், யமனிடம் உதைப்படாமல், மோக்ஷம் அடைந்து விடுகிறான்.

ஆதலால் நாமும் பக்தி செய்வோம் !!

வாழ்க ஹிந்து தர்மம்.  வாழ்க ஹிந்துக்கள். 



Saturday 13 October 2018

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?


மனிதனால் மட்டும் தான், கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க முடிகிறது.
பலமாக கொடுக்கப்பட்ட இந்த வரத்தை, வீண் செய்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.

மிருகங்கள் எதற்கும் கடந்த காலத்தை நினைத்தோ, எதிர்காலத்தை நினைத்தோ வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவை நிம்மதியாகவே உள்ளன.

மூளை கலங்கிய கடந்த காலத்தை மறந்து, எதிர்கால சிந்தனையும் இல்லாமல், சில பைத்தியம் பிடித்தவர்கள் கூட,  வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவர்களும், நிம்மதியாகவே உள்ளனர்.

கடந்த கால வாழ்வில் நடந்த சோகங்கள், இனி நடக்காமல் இருக்க, வழி செய்வதை விட்டுவிட்டு, கடந்த கால வாழ்வில் நடந்த சோகத்தை நினைவில்  மட்டும் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

எதிர் கால வாழ்வில் என்ன விபரீதங்கள் நடக்குமோ? என்று பயந்து, நல்லவைகள் நடக்க இன்று செயலில் இறங்குவதை விட்டுவிட்டு, எதிர் கால வாழ்வில் என்ன நடக்குமோ என்று பயத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர், "கடமையை செய்" என்று, "இன்று நீ செய்ய வேண்டிய கடமையை செய்ய செயலில் இறங்கு" என்று வழி காட்டுகிறார்.


ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம யோக வழியில், கடந்த கால வாழ்க்கையை உணர்ந்து, அதில் கற்ற பாடம் என்ன? என்று அறிந்து, எதிர்காலத்தில் நல்ல படியாக வாழ இன்று என்ன செய்ய வேண்டும்? என்று உணர்ந்து, நம் கடமையை தர்மத்துடன் செய்து வந்தால், பகவான் நம்மை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான் என்று, பக்தனும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழ்கிறான்.

கிருஷ்ணர் சொன்ன கீதையை படித்து, கிருஷ்ண பக்தனாகி, நாமும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழுவோம்.