Followers

Search Here...

Showing posts with label காக்கிறது. Show all posts
Showing posts with label காக்கிறது. Show all posts

Wednesday 23 October 2019

தெய்வங்கள் ஹிந்து மதத்தை காக்கிறதா?.. எப்படி ஹிந்துக்கள் 1000 வருட அந்நிய படையெடுப்பையும் மீறி, ஹிந்துவாகவே இன்றும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்..? அலசல்

"உலகம் (இயற்கை) ஒரு மாய திரை (ஜீவனை பொறுத்தவரை பொய், நிலையற்றது)..
உலகில் காணப்படும் ஜீவனாகிய நாம் அனைவரும் ஈஸ்வரனின் அம்சமே..
ஆதலால்,
பிறவி கடலை கடக்க, உலக பற்றை உதறி தள்ளி, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'அத்வைதம்'.



வேதத்தில், சில சூக்தங்கள் 'அத்வைதமாக இருக்கிறது'.

"ஜீவன் வேறு, பரமாத்மா வேறு.
ஜீவன் "பரமாத்மாவிற்கு அடி பணிந்தவன்".
பிறப்பு, இறப்பு, முதுமை, எதிர்காலம் எதுவும் இவன் இஷ்டத்தில் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.
முயற்சிக்காமல் சில சமயங்களில் பலன் கிடைப்பதும் பரமாத்மாவின் அருளால் தான்.

ஜீவன் செய்யும் முயற்சிக்கெல்லாம், அவன் இஷ்டத்தில் பலன் கிடைப்பது இல்லை. 
அவன் நினைப்பதெல்லாம் நடப்பதும் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.

ஆதலால்,
பிறவி கடலை கடக்க, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'த்வைதம்'.

வேதத்தில் "சில சூக்தங்கள் த்வைதமாகவும் இருக்கிறது".

ஜீவன் மற்றும் பரமாத்மா உறவை காட்டும் போது, இந்த இரு மார்க்கமும் மாறுபடுகிறது.
ஆனால்,
"அத்வைதம், த்வைதம்" இரண்டுமே, "ஈஸ்வர பக்தி செய்து தான், மோக்ஷம் அடைய வேண்டும்" என்று முடிவாக சொல்கிறது..

"இந்த இரண்டு விதமான பார்வையும், வேதத்தில் தான் உள்ளது" என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
ஆக, இரண்டு மார்க்கமுமே பொய் அல்ல..
புரிந்து கொள்ள, நமக்கு தான் பக்குவம் தேவைப்படுகிறது.

"உலகத்தையும் (ஸ்ரீவத்சம்/லட்சுமி), ஜீவனையும் (கௌஸ்துபம்) இரண்டையும் உடையவனாக ஈஸ்வரன் இருக்கிறார்"
என்று விசேஷித்து சொல்கிறது 'விசிஷ்ட அத்வைதம்'. (அத்வைதத்தில் த்வைதம்)


புரிந்து கொள்ள:

அஞானியாக ஜீவன் இருக்கும் வரை,
"தான் வேறு, உலகில் உள்ள மற்ற ஜீவன்கள் வேறு, பரமாத்மா வேறு'"
என்று ஜீவன் 'த்வைத'மாக தான் பார்க்கிறான்.
ஆதலால்,
வேதம், அஞானிக்கும் மோக்ஷ பாதையை வழிகாட்ட, 'த்வைத' தத்துவத்தை ஒரு இடத்தில் சொல்கிறது.

அதே சமயம்,
ஆதிசங்கரர், ஜடபரதர், ஸ்ரீசுகர் போன்ற ஞானியாக இருக்கும் ஜீவன்,
"தான் வேறல்ல, உலகில் உள்ள மற்ற ஜீவன்களும் வேறல்ல, இந்த ஜீவனை படைத்த பரமாத்மாவும் வேறல்ல"
என்று 'அத்வைத'மாக பார்க்கிறார்கள்.
ஆதலால்,
வேதம், ஞானிக்கு மோக்ஷ பாதையை வழிகாட்ட அத்வைத தத்துவத்தையும் மற்றொரு இடத்தில் சொல்கிறது.

ஞானிக்கு 'அத்வைதம்' காட்டி,
அஞானிக்கு 'த்வைதம்' காட்டி,
உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும், பிறவி கடலை கடக்க வழி சொல்கிறது நம் வேதம் (சப்த பிரம்மம்)

"ஒரே வழி, ஒரே கட்டளை" என்று பிடிவாதம் செய்து, மனிதர்களால் உருவான பொய் மதம் இல்லையே!! நம் சனாதன ஹிந்து தர்மம்.

ஆதி சங்கரர் (சிவபெருமான்) அவதாரம் செய்த போது,
வேதம் கூறும் ஞான மார்க்கத்தை புரிந்து கொள்ளாமல், மோக்ஷ பாதையில் செல்லாமல்,
"இந்த யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும்,
அந்த மந்திரம் சொன்னால் சூன்யம் வைக்கலாம்,
அந்த மந்திரம் ஸித்தி ஆனால் வசியம் செய்யலாம்"
என்ற அளவுக்கு கர்ம மார்க்கத்தை மட்டுமே எடுத்து கொண்டு பாரத தேசம் முழுவதும், வறட்டு பிடிவாதம் செய்யும் கர்மடர்கள் அதிகமாகி இருந்தனர்.

இவர்கள் ஞான மார்க்கத்தை மறந்து,
"யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும், இந்த சுகம் கிடைக்கும்"
என்ற ரீதியில் போனதால், 70வதுக்கும் மேற்பட்ட பல பொய் மதங்கள் உருவாகின.. பௌத்த மதமும் இதில் ஒன்று.



"நரபலி காளிக்கு கொடுத்தால், காளி வரம் கொடுப்பாள்" என்ற அளவுக்கு பாரத தேசத்தில் அசாம் போன்ற இடங்களில், அஞானிகள் கையில், 'வேதம்' மாட்டிக்கொண்டு தவித்தது..
ஞானியான "ஆதி சங்கரர்", இவர்களை ஞான மார்க்கத்தில் திருப்ப,
வேதத்தில் சொல்லப்பட்ட "அத்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி,
70வதுக்கும் மேற்பட்ட பொய் மதங்களை, தர்க்க வாதத்தினால், தன் தரிசனத்தால் ஒடுக்கி,
பாரத மக்களை, மீண்டும் ஞான மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தை ஞான மார்க்க ரீதியில் பார்க்க செய்து, 
பெரும் உபகாரம் செய்தார்.

1017ADல் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்வேதத்தின் முழு நோக்கமான,"விசிஷ்ட அத்வைத" மார்க்கத்தை வழி காட்டினார்.

அஞானியாக இருப்பவர்கள் "பக்தி செய்து, நாராயண நாமத்தை பெற்று ஜபித்து இருங்கள்" என்று வேதம் சொல்லும் த்வைத மார்க்கத்தை காட்டி வழி நடத்தி, அஞானியையும் ஞானியாக ஆக்கி, ஜீவன் வேறு பகவான் வேறல்ல என்ற அத்வைத மார்க்கத்தையும் காட்டி, பெரும் புரட்சி செய்தார்.

ஆதி சங்கரர் வந்தும் மாறாமல், "ஆடை இல்லாமல் திரிந்த சமணர்கள் அனைவரையும் வேத மார்க்கத்தில் மீண்டும் திருப்பி, நாராயணனே வேதம் இறுதியாக சொல்லும் பரதெய்வம்" என்று வேதத்தை கொண்டே (புருஷ சூக்தம்) நிரூபித்து, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தில் இருந்து விலகி விடாமல் இருக்க தயார் செய்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ராமானுஜரின் காலத்துக்கு பின், தமிழ்நாட்டில் "சேங்கனூர்" என்ற கிராமத்தில், 4000 திவ்ய பிரபந்ததுக்கும் அதன் உண்மையான உள் அர்த்தத்தை உலகுக்கு அள்ளி கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை" என்ற "கிருஷ்ண சூரி" அவதரித்தார்.

மற்ற மதங்களில் தவறான புரிதல், குழப்பங்கள் ஏற்படும் போது, மதங்கள் அழிகிறது. 
அதை சரி செய்ய மக்களே பாடுபடுகின்றனர். 
மதத்தை வளர்க்க 
"பணம் கொடுத்து, பொய் பிரச்சாரம் செய்து, மற்ற மதங்களை கீழ்த்தரமாக பேசி வெறுப்பை விதைத்து" 
தங்கள் மதத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர்.

ஆனால்,
நம் ஹிந்து தர்மத்தில் உள்ள நாம், "வழி தவறி ஹிந்து தர்மம் அழியும்" அபாயம் நேர்ந்தால்,
தெய்வங்களே தன்னை வெளிப்படுத்தி கொண்டு அவதாரங்கள் செய்து, ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் நின்று காக்கின்றனர்..



"மனிதர்களால்" மற்ற மதங்கள் காப்பாற்றப்படுகிறது..
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது.

1000 வருடங்கள், வெளி மதங்களே ஆண்டு அட்டகாசம் செய்தும், இன்றும் ஹிந்து தர்மம் துளி கூட அழியவில்லை..
மாறாக, உலகம் முழுவதும் இன்று ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர்..

வெளி மதமான அரேபிய இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் "ஹிந்துக்கள் செல்வத்தை, நம்பிக்கையை, கோவிலை, பெண்களை, சுதந்திரத்தை சூறையாடி, அதிக வரி ஹிந்துக்களுக்கு, வரி இல்லாத வாழ்க்கை இஸ்லாமியனாக மாறுபவனுக்கு"
என்று விதித்து பெரும் சவாலை பாரத மக்களுக்கு தந்தனர்..

ஹிந்து அரசனும், ஹிந்து அரசனும் போருக்கு சென்றால், போர்க்களத்தில் சண்டை இட்டு கொள்வார்கள்..
பாண்டிய அரசன் சோழ அரசனிடம் தோற்றால், பாண்டிய தேசத்தையும் தன் சோழ ஆட்சிக்கு கொண்டு வந்து ஆட்சி செய்வார்கள் அரசர்கள்.
மகாபாரத போர் கூட, குருக்ஷேத்ரம் என்ற போர் காலத்தில் தானே நடந்தது.
ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்கொண்ட போது கூட, ஊருக்குள் புகுந்து பொது மக்களை கொல்லவில்லையே ! 




இஸ்லாமிய சுல்தான்கள், ஹிந்து அரசனிடம் போர் செய்யும் போது,
ஊரில் புகுந்து பொது மக்களை கொன்று, 
கோவிலை இடித்தும், அரசர்களை பணிய வைத்தார்கள்..
"அலாவுதீன் கில்ஜி" ஆட்சியின் போது,
அவன் அனுப்பிய "மாலிக் காபூர்",
ககாத்திய தேசத்தை (தெலுங்கானா) எதிர்த்த போது,
அங்கு இருந்த பொது மக்களை கொன்று, கோவில்களை இடித்து, செல்வங்களை கொள்ளை அடித்து, பெரும் நாசம் செய்தான்..

அப்பொழுது அங்கு இருந்த ஒரு காளி கோவிலில் இருந்த ஒரு வைர கல் தானே இன்று "கோஹினூர் வைரம்" என்று இங்கிலாந்து நாட்டில் வைத்துள்ளார்கள்...

ஒரு காளி கோவிலில் சர்வ சாதாரணமாக வைர மாலைகள் இருந்தது என்றால், நம் செழிப்பு எத்தகையானதாக இருந்து இருக்க வேண்டும்!!?
என்று எண்ணி பார்க்க வேண்டும்..
ஒரு கோவிலை இடித்தாலே மனம் பதறும் போது, இப்படி ஒரு பேடிகள் சூழ்ந்து, மக்களை, கோவிலை இடிக்கும் போது, அரசர்கள் வேறு வழி இல்லாமல், சரண் அடைந்தனர்..
சில அரசர்கள் தலை சீவப்பட்டனர்.. 
சில அரசர்கள் பெரும் செல்வத்தை தானமாக கொடுத்தனர்..

ககாத்திய தேசத்தை தொடர்ந்து, பாண்டிய தேசமான மதுரைக்கு நுழைந்து, அதே செயலை செய்து,
பொது மக்களை கொன்று, மீனாட்சி கோவிலை பிடித்தான்.. 
"மாற்றி வைக்கப்பட்ட போலி சிவலிங்கத்தை இடித்தே விட்டான்" மாலிக் காபூர்..
விளைவு:
பாண்டிய மன்னன் "கோவிலை இடித்து விடுவானே" என்று பாண்டிய தேசத்தின் கஜானாவை திறந்து விட்டார்..
இதை தொடர்ந்து,
மேலும் ஸ்ரீ ரங்கம் வரை சென்று, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ஸ்ரீரங்கத்தையே சூறையாடி, உற்சவராக இருக்கும் ஸ்ரீரங்கநாதரை (சிலை திருடன்) டில்லிக்கு தூக்கி சென்று விட்டான் என்று சரித்திரம் போகிறது...



கிடைத்த செல்வமே அளவிடமுடியாமல் இருக்க, சோழ நாட்டில் கால் பிறகு வைத்து கொள்ளலாம் என்று மாலிக் காபூர் டில்லி திரும்பி,

தன் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு வெற்றி பரிசாக அனைத்தையும் கொடுத்தான் (கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) உட்பட)..
இது நடந்தது 1310AD சமயத்தில்..

இஸ்லாமியர்கள் பாரத தேசத்துக்குள் வந்து "300 ஆண்டுகளே" ஆன சமயம் அது..

அந்த காலத்தில் இருந்த ஹிந்துக்களின் நிலைமையே எப்படி இருந்து இருக்குமோ!! என்று நினைத்து பார்க்க முடியவில்லை..

1857AD வரை இஸ்லாமியர்களின் ஆட்சி பாரத மண்ணில் கொடி கட்டியது என்று பார்க்கும் போது தான், "எத்தனை நெஞ்சுரம் மிக்கவர்களாக நம் பாட்டனார்கள் இருந்து இருக்கிறார்கள்" என்று புரிந்து கொள்ள முடியும். "இவர்கள் ஏழை ஆனாலும் ஹிந்துவாகவே வாழ்வேன்"
என்று இருந்ததால் தானே, அவர்கள் பரம்பரையில் வந்த நாம் இன்றும் ஹிந்துவாக இருக்கிறோம்..
நினைத்து பார்க்க வேண்டும் ந்த காலங்களில் வாழ்ந்த நம் பாட்டனார்களை..

1238AD சமயத்தில் "மத்வாச்சாரியார்" என்று போற்றப்படும் "ஆனந்த தீர்த்தர்" என்ற மகான் கர்நாடக தேசத்தில் உதித்தார்.
ருக்மிணி தேவி துவாரகையில் தானே வழிபட்ட  பாலகிருஷ்ண விக்ரஹம் இவர் கையில் கிடைத்து, உடுப்பியில் இந்த கிருஷ்ணருக்கு கோவில் அமைத்தார்.
ஞானியான மத்வாச்சாரியார்,
இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நசுக்கப்படும் ஹிந்துக்கள், "காலம் கனியாதோ!!" என்று பயந்து மதம் மாறி விடாமல், "பகவான் காப்பாற்றுவார்" என்ற நம்பிக்கையை வளர்க்க,
அஞானியாக உள்ள பொது மக்களுக்கு, மனோ தைரியமும், தெய்வ நம்பிக்கையும் ஏற்பட, "ஜீவனாகிய நாம் அனைவரும் பரமாத்மா ஸ்ரீ வாசுதேவனை வணங்குவோம்" என்று
வேதத்தில் சொல்லப்பட்ட "த்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி, பாரத மக்களின் மனதில் பக்தியின் மூலம் தெய்வ நம்பிக்கையை விதைத்தார்.

பாரத மக்களை பக்தி மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தில் சொல்லப்படும் த்வைத மார்க்கத்தை ப்ரகாசப்படுத்தினார்.

"பக்தி மார்க்கம்" பாரத பூமி எங்கும் சூழந்தது..
இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் கடும் முயற்சி செய்தும், இந்த கோட்டையை தகர்க்க முடியவில்லை..

இவரின் ஆரம்ப காலத்தில் தான் "ஜெயதேவர்" வாழ்ந்தார்.

பிறகு வந்த மகான்களை கொஞ்சம் நினைத்து பார்ப்போம்..

இஸ்லாமிய ஆக்கிரமிப்பை சமாளிக்க,
மனோ தைரியமும், மக்களிடையே பக்தியையும் பரப்ப,
மஹாராஷ்டிரா தேசத்தில் "நாமதேவர்", "தியானேஸ்வர்" என்ற மாவுலி அவதரித்தார்கள்..
உத்திர பிரதேசத்தில், "ராமானந்தர்" அவதரித்தார்.
அவரின் சிஷ்யராக "கபீர் தாசர்" அவதரித்தார்.
தமிழ்நாட்டில் "மணவாள மாமுனிகள்" அவதரித்தார்.

குஜராத்தில், "நரசிங்க மேதா" அவதரித்தார்.

உத்திர பிரதேசத்தில் "சூரதாஸ்" அவதரித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், "வல்லபாச்சாரியார்" அவதரித்தார்.

வங்காள தேசத்தில், உலகம் போற்றும் இஸ்கான் (Iskcon) சொல்லும் "ஹரே கிருஷ்ண ஹரே ராம" மந்திரத்தை கொடுத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமான "கிருஷ்ண சைதன்யர்" அவதரித்தார்.



அதை தொடர்ந்து
கர்நாடக தேசத்தில் "புரந்தர தாசர்", "கனக தாசர்" அவதரித்தார்கள்.

அதை தொடர்ந்து
உத்திர பிரதேசத்தில், ஹிந்தியில் ராமாயணம் கொடுத்த "துளசி தாசர்" அவதரித்தார்.

ராஜஸ்தானில் "பக்த மீரா" அவதரித்தாள்.

அதை தொடர்ந்து,
தமிழ்நாட்டில், பிரகலாதனின் அம்சமாக "ஸ்ரீ ராகவேந்திரர்" அவதரித்தார்.
அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் "துக்காராம்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தெலுங்கு தேசத்தில், "கோபண்ணா" என்ற "பத்ராசல ராமதாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் சாம்ராட் வீர சிவாஜிக்கு ஆத்ம குருவாக, "சமர்த்த ராம தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
பஞ்சாப தேசத்தில் "குரு கோவிந்த் சிங்" அவதரித்தார்.

தமிழகத்தில், ராம நாமத்தின் பெருமையை காட்ட "போதேந்திரர்" அவதரித்தார்.
"ஸ்ரீதர் ஐயாவால்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
கர்நாடக தேசத்தில், "விஜய தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தமிழ் நாட்டில் கர்நாடக இசை சக்கரவர்த்தி, ஸ்ரீ ராமரை நேரில் கண்டு தரிசித்த மகான் "ஸ்ரீ தியாகராஜர்" திருவாரூரில் அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
வங்காள தேசத்தில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்" அவதரித்தார்.
அவரை தொடர்ந்து,
சிவபெருமான் அம்சமாக விவேகானந்தர் அவதரித்தார்.

பாரத பூமியை மகான்கள் சுற்றிக்கொண்டு, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தை 800 வருட இஸ்லாமிய ஆட்சியில் காத்தனர்.

800 வருட இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது..  ஹிந்துக்களை அழிக்க முடியாமல் விழுந்தது...

தெய்வங்கள் மகான்களாக பாரத தேசம் முழுவதும் அவதரித்து,
ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் வந்து காத்தனர்.
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது... 

எத்தனை பெருமை நமக்கு....
மனிதன் அழிக்க நினைத்தாலும், தெய்வங்கள் காக்கும் ஹிந்து தர்மத்தில் பிறந்ததற்கு...நாம் எத்தனை பெருமைப்பட வேண்டும்??!!

நாம் எத்தனை கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்..  
நம் பெருமை நமக்கே தெரியாமல் இருப்பது தான் விந்தை.


வாழ்க பாரதம்... வாழ்க ஹிந்துக்கள்.