Followers

Search Here...

Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Wednesday 25 September 2019

ஜாதிகள் இருந்தாலும், "வர்ண கட்டுப்பாடு" இன்று இல்லை.. இதனால் நாம் இழந்தது என்ன? கல்வியில் மாற்றம் எப்படி கொண்டு வரலாம்?... ஒரு அலசல்.

"பாரத நாட்டை விட்டு, வெளிநாட்டில் போய் வாழலாம். வேலை கிடைக்கும். அதிக பணம் சம்பாதிக்கலாம்"
என்று ஒருவன் கூட போக விரும்பாத காலமாக, பாரத நாடு ஒரு சமயம் இருந்தது..
'பொருளாதாரத்தில்' பாரத நாடு உலகத்தை பொறாமை பட வைத்த சமயம்.
'வர்ணங்கள் கலக்காமல்' இருந்த காலம் அது.
'தொழில்கள் அவரவர்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்டதால்',  பொருளாதாரத்தில் பாரத நாடு உலகத்தை பொறாமை பட வைத்தது.


பாரத நாட்டில் லட்சக்கணக்கான வருடங்களாக கடைபிடிக்கப்படும் "வேத தர்மத்தை" விட்டுவிட்டு, "புத்தர் வழியில் வாழ்வோம்" என்று போன பாரத மக்களால் வந்தது வினை.. பேரழிவு..
ஈரான் ஆரம்பித்து ஆப்கான், சிந்து தேசங்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தனாக ஆனதால்,
போர், வீரம் போன்றவை மறந்து, எல்லோரும் சந்நியாசி போல ஆகி இருந்தனர்.

947AD சமயத்தில் இஸ்லாமிய மதம் நுழைந்து, போர் பயிற்சி இல்லாத ஈரான், பாரத நாடான ஆப்கான், சிந்து தேசங்களை கைப்பற்றினர்..
பௌத்தனாக இருந்த ஈரான் அரசன் அமீர் சூரி, இஸ்லாமுக்கு மாறினான். 
ஆப்கானில் உள்ள கோர் (ghor) என்ற இடத்தில் பிறந்ததால், கோரி அரச பரம்பரை உருவானது..
அவன் குடும்பத்தில் தான் "முகம்மது கோரி" என்ற பிறப்பால் இஸ்லாமியன் பிறந்து, பாரத நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்க முயன்றான்.

அன்று ஆரம்பித்தது, அந்நிய தர்மங்கள் படையெடுப்பு..
இந்திய பொருளாதாரத்தை கண்டு,
கோவிலில் இருக்கும் செல்வங்களை  கண்டு,,
அரசர்கள், பெண்கள் வைத்திருந்த வைர ஆபரணங்களை கண்டு,
உலகை பொறாமை பட வைத்தது.

அரேபிய நாட்டினர், 
பாரத நாட்டை கொள்ளை அடிக்க "1000 வருடம் நுழைந்தனர்"..

ஒரே ஒரு சோம்நாத் கோவிலை கொள்ளை அடித்தாலே போதும் என்று 18 முறை போர் தொடுத்தான் முகமது கஜினி என்றால், பாரத தேசம் முழுவதும் எத்தனை செல்வம் இருந்து இருக்கும்? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

1739ADல் ஈரான் தேசத்தில் இருந்து வந்த நாதீர் ஷா (Nadir Shah) என்ற இஸ்லாமியன், ஒரே ஒரு நாள் டெல்லியை தாக்கினான்.
டெல்லியில், ஒரே நாளில், 30000 பொது மக்களை கொன்றான். 
முகலாய அரசன் என்று இருந்த "முகமது ஷா" தோல்வியை ஒப்புக்கொண்டு 'என்ன வேண்டுமோ எடுத்து கொள்ள சொல்லிவிட்டான்'.
நாதீர் ஷா, அந்த ஒருநாளில் கொள்ளை அடித்து போன செல்வத்தை வைத்து கொண்டே, அவன் தன் ஈரான் நாட்டில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து 3 வருடம் வரியே வாங்கவில்லை.

டெல்லியில் ஒருநாளில் கொள்ளை அடித்தற்கே '3 வருடம் ஒரு தேசத்துக்கு சோறு போட்டான்' என்றால், பாரத தேசம் முழுவதும் எவ்வளவு செல்வங்கள் இருந்திருக்கும்? என்று அனுமானித்து பார்த்தாலே,
நாம் எப்படி வாழ்ந்து இருக்கிறோம்!!.. இப்போது எப்படி வாழ்கிறோம்!!
என்பது புரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் பொருளாதார நிலையை பார்த்து,
இஸ்லாமியன் மட்டுமா பாரத நாட்டுக்குள் நுழைந்தான்? 

இவர்களை தொடர்ந்து,
1400AD சமயத்தில், கிறிஸ்தவனான போர்ச்சுகல் வந்தான்.. 
இவன் பங்குக்கு,  சுமார் 500 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

இவர்களை தொடர்ந்து,
1600 சமயத்தில், கிறிஸ்தவனான டட்ச் வந்தான்.. 
இவன் பங்குக்கு, சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

அதை தொடர்ந்து,
1600 சமயத்திலேயே, கிறிஸ்தவனான பிரிட்டிஷ் வந்தான்.. 
இவன் பங்குக்கும், சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.


அதை தொடர்ந்து,
1600 சமயத்திலேயே, கிறிஸ்தவனான பிரெஞ்ச்காரன் வந்தான்.. 
இவன் பங்குக்கும், சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

அவனவன் அவன் பங்குக்கு கொள்ளை அடித்து, அவர்கள் ஊர்களில் சேர்த்தனர்.

1947ADல் இனி சுரண்ட இடமில்லை என்றபின்,
இரண்டு உலக போர் ஹிட்லரால் அரங்கேற்றப்பட்டதால்,
பாரத நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

போகும் நேரத்தில், சரியான ஆலோசனை செய்யாமல், பாரத நாட்டை பிரித்தனர்.

பாரத தேசத்தின் சிந்து பகுதியை (Today "Pakistan") மிச்சப்பட்ட (பாக்கி) இடமாக கருதி, பாகிஸ்தான் என்று பெயரில் பிரித்தனர்.
இஸ்லாமியர்களாக ஆகி போன, ஹிந்துக்கள் வாழட்டும் என்று வழி செய்தனர்.
விளைவு,
அங்கு இருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டன. 
"சிந்து தேசம், கேகேய தேசம்" இன்று இஸ்லாமிய நாடாக மாற்றப்பட்டு விட்டது.

ராமபிரான் புதல்வன் "லவன்" அமைத்த 'லவபுரம்', இன்று லாகூர் (Lahore) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
ராமபிரான் சகோதரர் "பரதன்" அமைத்த 'தக்ஷ சீலம்', இன்று டக்சிலா (Taxila) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
ராமபிரான் சகோதரர் "பரதன்" அமைத்த 'புருஷ புரம்', இன்று பேஷாவர் (Peshavar) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
இன்னும் எத்தனை இழந்தோமோ.. !!!



தேசிய கீதத்தில், "சிந்து" என்று சொல்லி வாழ்த்துகிறோம்..
ஆனால் சிந்து தேசம் நம்மிடத்தில் இல்லை.

சிந்துவை பிரித்து விட்டதால், பாரத தேசத்தை பிரிட்டிஷ், அரேபியன் உளறி கொட்டிய "இண்டியா" (INDIA) என்ற பெயரையே நமக்கு கொடுத்து விட்டனர்..
"கிரேக்க, அரேபிய இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ், போர்ச்சுகல், டச், பிரெஞ்சு" என்று உலக மக்கள் யாவரும். இந்தியாவை நோக்கியே வந்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

இந்திய பொருளாதாரம் எந்த கட்டுமானத்தால் இப்படி வலுவாக இருந்தது? நாம் ஏன் அன்று உலகை நம் பக்கம் இழுத்தோம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?

வர்ண கட்டுப்பாடுகள் இருந்த, அந்த காலத்தில், JOB COMPETITION இல்லை.
"அவரவர்கள் அவர்கள் பரம்பரையாக செய்த தொழிலை" செய்தனர்.

"ப்ராம்மணன்", ப்ரம்மத்தை சிந்தித்து கொண்டே இருப்பான். 
"அவனுக்கு உலக ஆசைகள் கூடாது" என்று வர்ணம் கட்டு படுத்துகிறது.

"ப்ராம்மணனுக்கு"
'வைஸ்யனை' போல தொழில் செய்ய திறன் இருந்தாலும்,
'சூத்திரனை' போல கூலிக்காக உழைத்து சம்பாதிக்க திறன் இருந்தாலும்,
'க்ஷத்ரியனை'  போல நாட்டை போரில் முதல் ஆளாக இருந்து காக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும்,
"மற்றவர்கள் தொழிலை கற்று கொள்ள அனுமதி தந்ததே தவிர, அந்த தொழில் செய்ய கூடாது" என்று ப்ராம்மணனை வர்ண கட்டுப்பாடு தடுத்தது.

"பிராம்மண" குலத்தில் பிறந்த துரோணர்,
அனைத்து அஸ்திர சாஸ்திர வித்தைகளும் கற்று இருந்தார்.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கற்று கொடுத்தார்.
ஆனால் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்தார். 

இவர் க்ஷத்ரியனை போல சண்டை போட வந்தபோது, "இது வர்ணத்தை மீறிய செயல்" என்று பாண்டவர்கள் சொல்லியும் சண்டைக்கு வந்தார்.


பிராம்மண தர்மத்தை மீறிய 'துரோணர்' போரில் மரணித்தார். 
"வர்ண கட்டுப்பாடு" கெட்டு போக ஆரம்பித்த காலம், மஹாபாரத காலம் என்று சொல்லலாம்.
3102BCக்கு கொஞ்சம் முன் நடந்தது மஹாபாரத போர். 
3102BCல் கலி யுகம் ஆரம்பம்.

வர்ண கட்டுப்பாடு இருந்ததால்,
வைசியன் (business people) தனக்கு ஒரு வேலை சென்று சம்பாதிக்க முடியும்.. என்று ஆசை இருந்தாலும்,, வர்ண கட்டுப்பாடு "வேலை தேடாதே தொழில் தொடங்கி, வேலை கொடு" என்கிறது..

"ப்ராம்மணன், வைஷ்யன், க்ஷத்ரியன்" இவர்கள் யாவருமே அவரவர்களுக்கு உரிய ஆன்மீக தேடல், தொழில், பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே இருந்ததால்,
அன்றைய காலத்தில், பாரத நாட்டுக்கு "வேலையில்லா திண்டாட்டம்" இல்லாமல் இருந்தது..

வேலைக்கு செல்லும் சூத்திரர்கள் (Employee), தான் படித்த அதே படிப்பை
க்ஷத்ரியனும் படித்து விட்டான்..
ப்ராஹ்மமணன் கூட படித்து விட்டான்.
வைஸ்யனும் படித்து விட்டான் என்ற நிலை ஏற்படாமல், 
தொழில் போட்டி இல்லாமல் இருந்தது.

அவரவர் தொழிலை செய்யுங்கள்..
அடுத்தவர் தொழிலை திறன் இருப்பதால் கற்பேன் என்று கற்றாலும், அதை வைத்து வேலைக்கு சென்று விட கூடாது,
"சூத்திரனாக (employee) இருப்பவர்கள் வாழ்க்கையில் போட்டியை உருவாக்க கூடாது" என்று வர்ண கட்டுப்பாடு வழி காட்டியது..




இதனால்,
"க்ஷத்ரியன், வைஸ்யன், பிராம்மணன்" அனைத்து தொழிலையும் கற்று இருந்தாலும், வேலைக்கு சென்று "சம்பாதிக்க கூடாது" என்று தடை விதிக்கிறது வர்ணம்.

தவத்தில் காலம் கழிக்கும் ப்ராம்மணர்கள் தனக்கு திறமை இருந்தும், மற்றவர்கள் தொழிலை தெரிந்து போட்டியாக வாழ கூடாது என்று இருந்தனர்.
பெரும்பாலும் 1857AD வரை, ப்ராம்மணர்கள் ஏழைகளாக தான் இருந்தனர். அதை பற்றி அவர்களும் கவலைப்படவில்லை.
"இவர்களை காப்பது கடமை" என்று அனைவரும் உதவி செய்தனர்.
அரசர்கள் இவர்களுக்கு கோவிலுக்கு அருகில் இடங்களை கொடுத்து வாழ வழி செய்தனர்.

1800AD சமயத்தில், வீரமுள்ள க்ஷத்ரிய அரசர்கள் இல்லாமல் போய் விட, ப்ராம்மணர்கள் வாழ கூட முடியாத நிலைக்கு ஆகினர்.

கிறிஸ்தவர்கள் "நாட்டை ஆள வேண்டும்" என்று அடித்தளம் போட்ட போது, ஆன்மீக எண்ணமே அதிகம் கொண்ட ப்ராம்மணர்களை தனக்கு கணக்கு வழக்கு எழுத பயன்படுத்தி கொண்டான்..
வாழ வழி தெரியாத சில ப்ராம்மணர்கள், அரசர்கள் இல்லாத நிலையில், உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலையில், கொடுத்த சம்பளத்தில் ப்ராம்மணன் வாழ ஆரம்பிக்க, ஆரம்பித்தது "பிராம்மண த்வேஷம்".

சூத்திரன் (employment) தொழிலை, பிராம்மணன் செய்ய ஆரம்பித்த காலம் அது.

100 வருடங்கள் ப்ராம்மணன், கிறிஸ்துவ பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆசிரியர், கணக்காளர் என்று வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
'பிராம்மணன் எதிர்க்க மாட்டான்.. சாது. நியாமாக நடப்பான்' என்பதால், பிரிட்டிஷ்கார கிறிஸ்தவர்கள், ப்ராம்மணர்களை தன் வேலைக்கு சேர்த்து கொண்டான்.

இந்த 100 வருட காலத்தில் தான், பிராம்மண சமுதாயம் தீண்டாமை என்ற பெயரில் வெறுப்பை காட்டினர்.
பாரதியார் போன்றவர்கள் இது பிராம்மண குணம் அல்ல என்று கோபப்பட்டனர்.
இப்படி நியாயம் பேசும் அவரை கூட, பிராம்மண சமுதாயம் மதிக்காமலேயே இருந்தனர். 

அரசர்கள் அழிந்த பின்,
வாழ்க்கையை நடத்த கூட முடியாத படி 900 வருட இஸ்லாமிய ஆட்சியில் பிராம்மணர்கள் நசுக்கப்பட்டதால்,
ஆங்கிலேய காலத்தில் "ஏதோ அரசாங்கம் என்ற பெயரில், மரியாதையாக நடத்துகிறார்கள்" என்றதும், இந்த இடைப்பட்ட காலத்தில் பிராம்மண சமுதாயம் காட்டிய அலட்சியம், 'ஈவே ராமசாமி' போன்றோர் மூலம்,  பிராம்மண வெறுப்பை உமிழ வைத்தது. 

பிராம்மண சமுதாயம் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த 100 வருட கிறிஸ்தவ ஆட்சியில் தாங்கள் காட்டிய அலட்சியத்தை உணர்ந்தாலும்,
ஈவே ராமசாமி போன்றோர் தொடர்ந்து பிராம்மண வெறுப்பை உமிழ்ந்தனர்.

ராமபிரானின் பெயரை "ராமசாமி" என்று தானே வைத்து கொண்டு இருந்தாலும்,
"பிராம்மண வெறுப்பால்", அவர்கள் கொண்டாடும் தெய்வங்களையும்  எதிர்க்கும் அளவுக்கு வெறுப்பு உண்டானது.


பிராம்மண வெறுப்பால், தன் தகப்பன் பாட்டன் வழிபட்ட தெய்வங்களையே உடைக்கும் அளவுக்கு வெறுப்பு உண்டானது. 

இஸ்லாமிய காலத்தில் கோவிலை உடைத்தார்கள், கொள்ளை அடித்தார்கள், மதம் மாற்றினார்கள் என்றால், "கிறிஸ்தவர்கள் ஆட்சியில்" பிராம்மணர்கள் செய்த தீண்டாமையை மறக்க முடியாமல்,
இவர்களும் "பிள்ளையார் சிலையை உடைப்பேன்" என்று உடைக்க, தமிழ்நாடு முழுக்க தெருவுக்கு தெரு பிள்ளயார் அமர்ந்து விட்டார். 

காரணத்தோடு காட்டப்பட்ட பிராம்மண வெறுப்பு, மூடத்தனமான வெறுப்பாக மாறி, ஹிந்துக்கள் அனைவரும் வழிபடும் தெய்வங்களையும் சேர்த்து கிண்டல் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தது.

ஈவே ராமஸ்வாமி, "பிராமண வெறுப்பை" ஆரம்பித்து,
கடைசியில் "நாத்தீகர்களுக்கு வழிகாட்டி" ஆனார்.

1947ல் விடுதலை பெற்ற போது,
"ப்ராம்மணன் வேலைக்கு செல்கிறான்!!.. விடுதலை கிடைத்து விட்டது!!.. எங்களுக்கு வேலை கொடுங்கள்"
என்று சூத்திரர்கள் (enployee) அரசை கேட்டனர்.
நியாயமான கோரிக்கை.

1947ல் விடுதலை பெற்ற போது, "மீண்டும் வர்ண கட்டுப்பாட்டை கொண்டு வந்து, நாட்டை வழி நடத்துவோம்" என்றார் ராஜாஜி.

ராஜாஜி வழியில் நாம் சென்று இருந்தால், இன்று "ப்ராம்மணன் இருக்கும் கோவிலை, பூஜைகளை, வேதத்தை காப்பாற்றி கொண்டு, பேராசை இல்லாமல் அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்."
அரசர்கள் காத்தது போல, அவனுக்கு சிறு மானியம் கொடுத்து இருந்தால், "பேராசை இல்லாமல் அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்" ப்ராம்மணன்.
"ஈவே ராமசாமி" போன்றவர்கள் ராஜாஜி சொன்னதை புரிந்து கொள்ள முடியாமல் எதிர்க்க,
"அனைவருக்கும் கல்வி, எதுவேண்டுமானாலும் படிக்கலாம்.. யார் வேண்டுமானாலும் படிக்கலாம்" என்று சட்டம் செய்தனர்..

விளைவு,
"நாட்டை காப்பதே என் தர்மம்" என்று இருந்தவர்கள் படித்து விட்டு, வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

"பேராசை, பொருளாசை இல்லாமல் வாழ்ந்த ப்ராம்மணன், தெய்வ சிந்தனையே என் தர்மம்" என்று இருந்தவர்கள் படித்து விட்டு,
வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

அதே போல வைஸ்யர்களும் (Business) வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
சுதந்திரம் அடைந்த போது அளிக்கப்பட்ட இந்த "அனைவருக்கும் கல்வி.. அனைவருக்கும் சம வாய்ப்பு" என்ற சட்டம், 70 வருட காலத்திலேயே, "வேலையில்லா திண்டாட்டம்" என்ற பெரிய பிரச்சனையை பாரத மக்களுக்கு தந்து விட்டது.

"அனைவரும் படிக்கலாம்" என்ற சட்டம்,
ப்ராம்மணனுக்கு வைஸ்யனுக்கு பெரும் வாய்ப்பு தர, உலகத்தில் உள்ள பல வேலைகளில் இவர்கள் நுழைந்து விட்டனர்.

சூத்திரன் தன் வாய்ப்பை இழந்தான்..  
"வேலையில்லா திண்டாட்டம்" தலை எடுக்க ஆரம்பித்தது..

வர்ண கட்டுப்பாடு இருந்த காலத்தில், சூத்திரன் சூத்திரனோடு மட்டும் போட்டி போட்டான்.

"வர்ண கட்டுப்பாடு தேவை இல்லை..யாரும் எதுவும் படிக்கலாம்" என்ற நிலை வந்த போது,
சூத்திரன் (employee), "சூத்திரனோடு, சூத்திரனாக ஆகி விட்ட 'ப்ராம்மணன், க்ஷத்ரியன், வைஷ்யன்' என்று அனைவரிடத்திலும் போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது".

காலப்போக்கில்,
எந்த வேலை அதிகம் பணம் தரும்? என்று பார்க்கும் அறிவு ஏற்பட்ட போது, சூத்திரனிடம் இருந்த பல வித வேலை திறன்கள் அழிந்து போனது...

சிற்ப கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
ஆயுத கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
வேதத்தை அப்படியே மனப்பாடமாக சொல்லும் ப்ராம்மண குடும்பம், தன் வேதத்தை விட்டது..
தலை முடி திருத்தும் கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
நடனத்தில், வாத்தியங்கள் வாசிப்பதில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
விவசாய கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் விவசாய திறனை விட்டது..

எந்த படிப்பில் பணம் வரும்?
என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்களோ, அதை படிக்கவே கோடிக்கணக்கான பாரத மக்களும் ஆர்வம் காட்டினர்..

இதனால் பல வித தொழில்கள் (business), பல வித திறன்கள் (Skill) உள்ளவர்கள் இல்லாமல்,
பாரத நாட்டில் 120 கோடி மக்கள் இருந்தும், வேலைக்கு தகுதி, திறன் உள்ளவர்கள் குறைவாக ஆகினர்..


60 மார்க் வாங்குபவனும், அதிக பணம் சம்பாதிக்க மருத்துவ படிப்பு எப்படியாவது சேர பார்க்கிறான்!!
கல்லூரிகளில் லஞ்சம் உருவானது.

நடிகன் ஆகி விட்டால், பணம் கிடைக்கும் என்பதால் "படிப்பே வராதவன், நடிகனாக ஆகி விடுவோம்!!" என்று முயற்சிக்கிறான்..
நடிகனாக பெரு முயற்சி செய்கிறான்.

படிப்பே வராதவன், "கிரிக்கெட் விளையாடி, இந்தியாவுக்கு IPL போன்றவற்றில் நுழைந்து ஆகி விடுவோம்" என்று முயற்சிக்கிறான்..
கிரிக்கெட் வீரனாக IPL போன்றவற்றில் விளையாடி விட்டால், "பணம் கிடைக்கும்" என்பதால் பெரு முயற்சி செய்கிறான்.

கோடிக்கணக்கான மக்கள் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" என்ற வட்டத்தையே சுற்றுகின்றனர்..

வர்ண கட்டுப்பாடு இல்லாததால்,
ஒவ்வொரு மனிதனும், 120 கோடி மக்களுடன் போராட வேண்டி உள்ளது..

"அதி புத்திசாலிகள், அதிக திறன் கொண்டவர்கள்" ஜெயிக்கிறார்கள்..

கோடிக்கணக்கான மக்கள் இந்த பெரும் போட்டி உலகத்தை கண்டு பயப்படுகின்றனர்.

ஒரு வகுப்பில் கூட ஒருவன் தானே முதல் மதிப்பெண் வாங்குவான். அதே வகுப்பிலேயே சராசரி மாணவனும் உண்டே.. அவனுக்கு வாழ வழி காட்ட முடியாமல் செய்தது. 

அற்புதமான "சிற்ப கலையில்" சிறந்த குடும்பத்தில் பிறந்து, அதை விட்டு  விட்டு, மருத்துவம் சேர வேண்டும் என்று படிக்க வந்து, தோற்று, உலகத்தின் பார்வையில் தோல்வியாளனாக தலை குனிகிறான்.

"சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" மட்டுமே அதிக பணம் சம்பாதிக்க வழி என்று ஆனதால்,
இந்த துறையில் திறன் இல்லாதவர்கள், அதி புத்திசாலித்தனம் இல்லாதவர்கள், குடும்பம் கலாச்சாரம் மீது பற்று உள்ளவர்கள், வாழ்க்கையை தொலைத்து
கூலி வேலை, கிடைத்த வேலை என்று செய்து கொண்டு, காலத்தை தள்ளி கொண்டு உள்ளனர்...

வர்ண கட்டுப்பாடு இல்லாததால், "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" மட்டுமே பணம் தரும் வழிகள் என்று நினைத்து, தன் பரம்பரை தொழிலை விட்டனர்...

"இசையே தொழிலாக" கொண்டு இருந்த குடும்பத்தில், "இசை பணம் தராது" என்று முடிவு செய்து, இசையை விட்டனர்....

"சவர தொழில்" செய்தவன், "சவர தொழில் பணம் தராது" என்று முடிவு செய்து, சவர தொழிலை விட்டான்.

எல்லோரும் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" நோக்கி சென்றனர்..

இசையை விடாமல் கொண்டு சென்ற ஒரு குடும்பத்தில், திடீரென்று ஒரு இசை ஞானி உருவானவர்.. 
"இசை சோறு போடாது" என்று பலர் போன போது, இசை, இவர் ஏழு தலைமுறைக்கு சோறு போடும் செல்வத்தை கொடுத்தது..

சவர தொழில் பணம் தராது, என்று கைவிட்டவனை, ஸ்பா, unisex சலூன் போன்றவை பார்த்து சிரிக்கிறது...
கோவில்களில் ஒரு "கல்லில் சங்கிலியை உருவாக்கும்" திறன் கொண்ட ஒரு குடும்பம், தன் தொழிலை விட்டதால், இது போன்ற திறன் வெளிநாட்டவர்கள் இன்று செய்து காட்டினால், இந்தியன் வாய் பிளக்கிறான்.

வர்ண கட்டுப்பாட்டை புரிந்து கொள்ளாததால்,
இன்று தொழில் உருவாக்க, வைசியன் இல்லை.. 
வைஸ்ய குடும்பத்தில் பிறந்தவன், இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.

உலக ஆசைகளில் இருந்து ஒதுங்கி, மற்றவர்களுடன் போட்டி பொறாமை இல்லாத, ப்ராம்மணன் இல்லை.
இன்று மிக குறைவாகவே உள்ளனர். பெரும்பாலும் சூத்திரனாகி (Employee) போன ப்ராம்மணர்களே உள்ளனர்.
ப்ராம்மண குடும்பத்தில் பிறந்தவன், இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.

"உயிரையே கொடுக்க எப்போதும் தயார்" என்று சொல்லி திரிந்த க்ஷத்ரியன் பரம்பரையும் இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு உள்ளனர்.
ராணுவத்தில் எல்லையில் இருப்பபர்களை தவிர, நாட்டை உயிரை கொடுத்து காக்க உண்மையில் யாரும் இல்லை.

வர்ண கட்டுப்பாட்டை விட்டதால், 120 கோடி மக்களும் எனக்கு வேலை வேண்டும்!! என்று கேட்கும் நிலையை ஏற்பட்டு விட்டது.


யார் வேலை தருவார்கள்? 
எந்த வேலை அதிக பணம் தரும்? 
என்ற கேள்வியே எழுவதால்,
அற்புதமான திறன்கள் அழிந்து  விட்டது.
இப்பொழுது "கம்ப ராமாயணம், நாயமார்கள் பதிகங்கள், ஆழ்வார்கள் பாசுரங்கள்" போன்ற தமிழை புரிந்து கொள்ள கூட உரை தேவைப்படுகிறது...

தகப்பன், பாட்டன், முப்பாட்டன் காலம் தொட்டு பரம்பரையாக பெற்ற திறனை விட்டு விட்டு,
எல்லோரும் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" நோக்கி ஓட,
'லட்சத்தில் ஒருவன்' வெற்றி பெற, 
மற்றவர்கள் 'சேற்றில் விழுந்தது போல வாழ்வை தொலைத்து' கொள்கின்றனர்...

"நடிகனாக வேண்டும்" என்று ஆசைப்படும் எவருமே,
"நடிப்பில் சாதிக்க முடியாது.. பணம் கிடைக்காது" என்ற நிலை ஏற்பட்டால் அங்கு கூட செல்ல மாட்டார்கள்..

"கிரிக்கெட் பணம் தரும்" என்பதால் ஆர்வம் காட்டுபவர்கள், "பேட்மின்டன் பணம் தராது" என்று ஒதுக்கினர்..
இன்று ஒரு பெண் அதில் சாதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை காட்ட, இப்பொழுது அதை நோக்கி ஓடுகின்றனர்..

வர்ண கட்டுப்பாடை விட்டதால், ஆட்டு மந்தை ஆகி விட்டோம்..
செல்வத்தில் புரண்ட பாரத மக்கள், உலக மக்கள் நம் ஊரை தேடி வந்த காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல்,
அற்புதமான ஹிந்து தர்மத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல்,
ஆட்டு மந்தை போல புத்தி ஆனதால், 
'ஆடு மேய்ப்பவனை' கூட நம்ப தயாராகி விட்டோம்.

ஆடு மேய்ப்பவன் "பணம் தருகிறேன்" என்றால், நம் குலதெய்வத்தை கூட மறக்க துணிகிறோம்.

வர்ண கட்டுப்பாடு இருந்த வரை, நம் நாட்டை நோக்கி உலகம் படையெடுத்தது..
வெட்கமே இல்லாமல், நம் நாட்டில் 1000 வருடங்கள் இருந்து கொண்டு கொள்ளை அடித்தது.

இவர்களை துரத்திய பின், வர்ண கட்டுப்பாடு அமைத்து ஒரு சமுதாயம் அமைத்து இருந்தால், இந்த 70 ஆண்டுகளில் மீண்டும் இந்திய தேசம் வளர்ந்த நாடாக ஆகி இருக்கும்..

அவனவன் பரம்பரையாக செய்த தொழிலில்,
அனுபவங்களோடு, அற்புதங்கள் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கும்.
தேசத்தை காக்கும் குடும்பங்கள், தேச நலனிலேயே கருத்தாக இருந்து இருக்கும்..
ப்ராம்மணன், அமைதியாக ஒழுக்கம் மீறாமல் பக்தி செய்து கொண்டு இருந்திருப்பான். வேத ரகசியங்களை விளக்கி இருப்பான்.
வைஸ்யர்கள், புதிய தொழில் கொண்டு வர வேண்டிய அவசியத்தால், சூத்திரர்களிடம் (employee) உள்ள பல வித திறனால் கோடிக்கணக்கான புதிய வியாபாரங்களை இந்தியாவிலேயே ஆரம்பித்து இருப்பார்கள்..

ஒரு இந்தியன் கூட, வெளியூர் சென்று பிச்சை எடுக்க தேவை இல்லை என்று நிலை ஏற்பட்டு இருக்கும்..

ஈவே ராமசாமி போன்ற அறிவு ஜீவிகளின் மழுங்கிய புத்தியால், சரித்திரத்தில் என்ன நடந்தது? என்று புரிந்து கொள்ள முடியாத நிலையால், ப்ராம்மணன் ராஜாஜி மொழிந்த "வர்ண கட்டுபாட்டை"
ப்ராம்மணன் மீது இருந்த கோபத்தால் எதிர்த்தனர்..

இந்திய நாட்டில் இன்று உள்ள பெரும் பிரச்சனையே...
120 கோடி மக்களுக்கு எப்படி வேலை கொடுப்பது?.. என்பது தான்.  இன்னும் மக்கள் தொகை அதிகமானால், இந்த பிரச்சனையை முடிவில்லாததாக ஆகி விடும். 
தான் வாழ, ஒவ்வொரு மனிதனும், "எதையும் செய்ய துணிந்து விடுவான்".

120 கோடி மக்களுக்கு எப்படி வேலை கொடுப்பது? இந்த எண்ணமே தவறு...

"70 கோடி மக்கள் மட்டுமே", வேலை செய்பவர்களாக (Sudra) ஆக்க வேண்டும்.
120 கோடி மக்களும் வேலைக்கு செல்ல (Sudra) வழி செய்ததே, 
இந்த பெரும் பிரச்சனைக்கு காரணம்.

இதற்கு அவர்களுக்கு (70 கோடி மக்களுக்கு) பல வித திறன்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஒருவர் சிற்ப வேலை செய்பவராக இருந்தால்,
அவர் குழந்தை பள்ளியில் சேரும்போது, அதே "சிற்ப வேலையை செய்ய ஆர்வம் உள்ளவராக ஆக்க விருப்பமா?" என்று அவர் தந்தையிடம் கேட்க வேண்டும்.
அதன் அடிப்படையில் பாடம் அமைய வேண்டும்..
அந்த குழந்தை வளர்ந்து அதே துறையில் நுழைய ஆசைப்பட்டால், அந்த குழந்தைக்கு இட ஒதுக்கீடு (reservation Quota) தர வேண்டும்..

"ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில்" இட ஒதுக்கீடு கொடுத்து பார்த்து விட்டோமே.
விளைவு..
120 கோடி மக்களும் அனைவரும் படித்து விட்டு, வேலைக்கு நிற்கிறார்கள்...  அனைவருக்கும் வேலை இல்லை.
விவசாயம் செய்ய ஆள் இல்லை. 
கோவிலில் பூஜை செய்ய வேதம் அறிந்த ஆள் இல்லை. 
மர வேலை செய்ய ஆள் இல்லை.
உழைக்கவே ஆள் இல்லை.
தொழில்கள் உருவாக்க ஆள் இல்லை.


போதுமே இந்த ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு!!
பிரச்சனையை அதிகமாக்கும், வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் இதை மாற்றி அமைக்கலாமே.

தந்தை இப்பொழுது செய்யும் தொழில் சம்பந்தமாகவே பள்ளியில் இருந்து படிக்க ஆரம்பிக்கும் போது, அவர் குழந்தை தன் தந்தையிடமே பல விஷயங்களை தெரிந்து கொள்ளும். 
திறன் இயற்க்கையாக அதிகமாக இருக்கும்.

ஒரு வேளை பள்ளி முடிந்து, சிற்ப கல்வியை கற்றும், வேறு துறை செல்ல ஆர்வம் இருந்தால், இட ஒதுக்கீடு இல்லாமல், தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்படி இரண்டு தலைமுறைக்கு செய்தால், 70 கோடி மக்களிடம் பல வித திறன்கள் கிடைக்கும்.

20 கோடி மக்கள் தொழில்கள் உருவாக்கி, 70 கோடி மக்களிடம் உள்ள இந்த திறன்களை பயன்படுத்த பழக்க வேண்டும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் போது, பள்ளிகளில் இவர்களுக்காக தொழில் தொடர்பான கல்வியே கற்று தர தரத்தை உயர்த்த வேண்டும்.

இப்படிப்பட்ட பள்ளிகளில் இவர்கள் சேரும் போது, தொழில் செய்பவர்கள் தன் குழந்தைகளுக்கும் தொழில் அனுபவங்களை சொல்லி சொல்லி தயார் செய்வார்கள்.

20 கோடி மக்களை, நாட்டுக்காக வாழ பயிற்சிக்க வேண்டும்.

10 கோடி மக்களை, ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து நல்லதை அவ்வப்போது சொல்லி, அமைதியாக வாழ பயிற்சிக்க வேண்டும்.  வேதத்தை படித்து, அதில் உள்ள ரகசியங்களை வெளிப்படுத்த இவர்களுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும்.

2 தலைமுறையில், மீண்டும் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்.

"போட்டி, பொறாமை இல்லாமல், stress இல்லாத வாழ்க்கை" இந்தியர்கள் காண முடியும்...

கல்வியில் மாற்றம் தேவை..
சிற்ப கலையில் உள்ள தகப்பன், தன் மகனை அதன் வழியில் கொண்டு செல்ல ஆசைப்பட்டால், அதற்கான பாட திட்டங்கள் வேண்டும்.

வேதம் கற்ற ப்ராம்மணன் தன் பிள்ளை வேதம் கற்க அனுப்பினால், அதற்கான பாட திட்டங்கள் வேண்டும்.

பள்ளிகளில், தகப்பன் செய்யும் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட, அவன் பிள்ளைக்கு மேலும் தொழிலை வளர்க்க உதவும் பாட திட்டங்கள் பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும்.

விவசாயம் செய்யும் தகப்பன், தன் பிள்ளையை விவசாயம் செய்து பெரும் பணக்காரனாக ஆக்க ஆசைப்படும் விதமாக, விவசாயத்தின் நுணுக்கங்கள், பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும்.

ஓவிய கலையில் தேர்ந்த தகப்பன், தன் பிள்ளையை பள்ளியில் சேர்த்தால், தகப்பனை மிஞ்சும் அளவுக்கு ஓவியனாக காலத்திற்கு ஏற்ப பாட திட்டங்கள் வகுத்து பள்ளியில் சொல்லி தர வேண்டும்.

கல்வியில் பெரும் புரட்சி தேவைப்படுகிறது.
பல வித கல்விகள் பள்ளிகளிலேயே இருக்க வேண்டும். 

நடக்குமா?
நம் பாரத நாடு மீண்டும் "பொருளாதாரத்தில் மட்டுமின்றி, தன்னிறைவு பெற்ற நாடாக" ஆகுமா?
நாம் நாடு நாடாக அலைந்து, வேலைக்கு செல்லும் நிலை மாறி,
மீண்டும் உலகை நம் நாட்டின் பக்கம் திருப்ப முடியுமா? 

முடியும்..
சிறு சிறு ஊர்களாக எடுத்து, கல்வியில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், முடியும்.
120 கோடி மக்களின் திறன் அளவிட முடியாததாகி விடும் என்பதில் சந்தேகம் இருக்காது.

பாரத தேசத்தை தெய்வங்கள் காக்கிறது.
தெய்வங்கள் நமக்கு வழிகாட்ட, அப்படி ஒரு ஹிந்து தலைவனை கொண்டு, இதை சாதிக்கும் என்று நம்புவோம்.


வாழ்க பாரத நாடு. 
வாழ்க பாரத மக்கள்.


"வர்ண கட்டுப்பாடு" இருந்ததால் தான், வேலையில்லா திண்டாட்டம் என்ற பேச்சே இல்லாமல், ஒவ்வொருத்தரும் செல்வந்தர்களாக இருந்தோம் என்ற உண்மையை புரிந்து கொள்வோம்.
"வர்ண கட்டுப்பாடு" இருந்ததால் தான், நம் பாரத நாட்டை நோக்கி உலகம் வந்தது என்று உண்மையை அறிவோம்.



Sunday 8 September 2019

கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?... பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல்.

பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல். 
பரமாத்மா 'நாராயணன்' சங்கல்பித்து தான், "ப்ரம்ம தேவன்" படைக்கப்பட்டார்.
அதற்கு பின்,
"சனகாதி முனிவர்கள்" பிரம்மாவால் படைக்கப்பட்டனர்.
அதற்கு பின்,
பரவாசுதேவன் நாராயணனே, ப்ரம்ம தேவன் நெற்றியில் சம்ஹார மூர்த்தியாக  "ஏகாதச (11)ருத்ரர்களாக" அவதாரம் செய்தார். 
இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்..



மேலும், 
ப்ரம்ம தேவன் தொடர்ந்து, "ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்" 
என்று பல படைப்புகள் செய்தார்.

நாராயணன் ஒருவரே "பரமாத்மா".  
மற்ற அனைவரும், "ஜீவாத்மாக்களே".
என்று வேதம் சொல்கிறது.

"ப்ரம்ம தேவன்" முதல் பூலோகத்தில் பிறக்கும் புழு பூச்சி வரை, அனைத்தும் "ஜீவாத்மாக்களே". 

அவரவர்கள் செய்த புண்ணியத்துக்கு "ப்ரம்ம பதவி, தேவ பதவி, மனித உடல், விலங்கு, பறவை, புழு, பூச்சிகளாக, மரமாக" பிறக்கின்றனர்
என்று வேதம் சொல்கிறது.

மஹா புண்ணியங்களை செய்து "ப்ரம்ம பட்டத்தில் ப்ரம்ம தேவனாக இருக்கும் ஜீவாத்மாவுக்கும்" ஆயுசு எல்லை உண்டு என்று வேதம் சொல்கிறது.
இப்பொழுது இருக்கும் "ப்ரம்ம தேவன்" காலம் முடிந்த பின், பரமாத்மா நாராயணன் மீண்டும் இன்னொரு புண்ணிய ஆத்மாவை (ஜீவன்) ப்ரம்ம பதவியில் அமர்த்தி, வேதத்தை கொடுத்து, உலகை நடத்த ஆணை இடுகிறார்.

"நாராயணனை பக்தி செய்து அவர் கருணையால் மோக்ஷம் அடையாதவரை",
செய்த புண்ணியங்களுக்கு, செய்த பாவங்களுக்கு
"மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்"
என்றும் வேதம் சொல்கிறது.

"பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை" புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

பொதுவாக,
ஜீவாத்மாவை "பரமாத்மாவின் அம்சம்" என்று சொல்வது வழக்கம்.

ஜீவாத்மா "பரமாத்மாவின் அம்சம்" என்றால் என்ன? புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
எளிதான உதாரணம் மூலம், நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பரமாத்மா "பரஞ்ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறார்" என்று சொல்லி கேட்டு இருப்போம்.

அந்த பரமாத்மாவை (பரஞ்ஜோதியை) "ஒரு அணையா விளக்கை" உதாரணமாக கொண்டு, பார்க்கும் போது
பரமாத்மா யார்? ஜீவாத்மா யார்? 
அத்வைதம் எப்போது தெரிகிறது?
த்வைதம் எப்போது தெரிகிறது?
விஷிஷ்ட அத்வைதம் எப்போது தெரிகிறது?
என்ற புரிதல் நமக்கு ஏற்படும்.



"பரமாத்மா ஒருவனே" (பரஞ்ஜோதியை) - என்று வேதம் சொல்வதை, 
ஒரு அணையா விளக்காக பார்ப்போம்.  
ஒரே ஒரு அணையா விளக்கிள் உள்ள ஜோதியை கொண்டு, 
கார்த்திகை மாதத்தில், ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றுகிறோம் அல்லவா?!!.

அது போல, 
பரஞ்ஜோதியாக இருக்கும் பரமாத்மா வாசுதேவன், 
'தன் அம்சமாகவே' பல ஜீவஜோதிகளை (ஜீவாத்மாக்களை), தானே படைக்கிறார்.
ஆனால்,
இந்த ஜீவாத்மாக்களுக்கு, பரமாத்மாவை போல உயிரற்ற உலகங்கள், உடல்கள் ஸ்ருஷ்டி செய்ய சக்தி கிடையாது. 

பரமாத்மா வாசுதேவன், 
தன்னை போன்றே அம்சமுள்ள "ஜீவாத்மாக்களை படைக்கவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார், 
உயிரற்ற "உலகங்களாக தானே ஆகவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார்.

பூலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்த போது,
இதை தன் அவதாரத்தில் காட்டி, நமக்கு புரியவும் வைக்கிறார், பரமாத்மா வாசுதேவன்.

ஒரு சமயம், "ப்ரம்ம தேவன்" கோகுல சிறுவர்களை மறைத்து ப்ரம்ம லோகத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.  
ப்ரம்ம தேவனின் செயலை அறிந்த பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், 
தானே அனைத்து கோகுல சிறுவர்களாகவும் (ஜீவாத்மாக்கள்) ஆகி, 
தானே அவர்கள் உடுத்தி இருந்த "ஆடை", 
கொண்டு வந்திருந்த "மண் சட்டி" வரை உயிரற்ற பொருளாகவும் ஆகி விட்டார். 

ஒரு வருடம் கழித்து பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், பரமாத்மாவின் சக்தியை அறிந்ததும், ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று உணர்ந்தார்.


"உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும்" ஸ்ரீ கிருஷ்ணரே ஆகி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
சிறுவன் போல காட்சி கொடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை "பகவான்" என்று அறிந்து, மன்னிப்பு கேட்டார் என்று பார்க்கிறோம்.
"உயிருள்ள ஜீவாத்மாக்களை மட்டும் தான் படைக்கிறேன் என்று நினைத்து விடாதே!! 
'உயிரற்ற பொருளாகவும்' நானே இருக்கிறேன்"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரம்ம தேவனுக்கு காட்டியதை,
நாம் மனதில் பதிய வைக்கும் போது தான், நமக்கு உலக படைப்பின் ரகசியங்கள் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
"தானே 14 உலகங்களாக" ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
14 லோகங்களில் ஒன்றான "பூலோகமாகவும்" (earth) நாராயணனே இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நாராயணனே "பூலோகமாகவும் இருக்கிறார்" என்று நாம் புரிந்து கொள்ளும் போது தான்,
"நமக்கு ஏன் இந்த உலக விஷயங்களில் உள்ள ஆர்வம் குறைவதே இல்லை!!" என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த உலக மயக்கத்தை "மாயை" என்று சொல்கிறது வேதம்.

பரமாத்மா வாசுதேவன்,
தானே பஞ்ச பூதங்களாக இருக்கிறார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்)  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நீரிலும் பல நீர் வகையாக (sweet, salt) தன்னை காட்டுகிறார்  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
காற்றிலும் பல வித காற்றாக (Hydrogen, Oxygen, etc.,) ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நெருப்பிலும், விளக்கில் ஒரு நெருப்பாக, சூரியனில் ஒரு நெருப்பாக பல விதங்களில் இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
பரமாத்மா வாசுதேவன்,
நிலத்திலும் பல வித நிலங்களாக ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நிலத்தின் அம்சமாக உருவாகும் மனித உடல்கள்,  மிருக உடல்கள், பறவை உடல்கள், மரங்கள், பூக்கள், அனைத்திலும்  பல ரூபங்கள் தரித்து இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
இப்படி தானே ஆயிரக்கணக்கான ரூபங்களை எடுத்துக்கொண்டு, உயிரற்ற பொருளாகவும் ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


இப்படி "உயிரற்ற பொருளாக" பல கோடி ரூபங்கள் எடுத்துக்கொண்டு, "தன் அம்சமாக உருவான ஜீவாத்மாக்களுக்கு" 
தானே உடலும் கொடுத்து, வாழ தானே இடமும் கொடுத்து பிறக்க வைக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


வேதம் "சஹஸ்ர சீர்ஷ புருஷ:" என்று ஏன் சொல்கிறது? 
என்ற ரகசியம் புரியும்.

"சர்வம் ப்ரம்ம மயம்" (அனைத்திலும் நாராயனே தெரிகிறார்) என்று மகான்கள் ஏன் சொன்னார்கள்? 
என்ற ரகசியமும் புரியும்.
"பரமாத்மாவின் அம்சமாக" வெளிப்பட்ட ஜீவாத்மாக்கள், 
"தான் தனியாக இருப்பது போல தெரிவதால், ஜீவாத்மாக்கள் தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று உணர்வதில்லை.

பரமாத்மாவே மனித உடலாக இருக்கிறார்.
பரமாத்மாவே உலகங்களாகவும் இருக்கிறார் என்று ஜீவாத்மாக்கள் புரிந்து கொள்ள முடியாமல், "இயற்கை" என்று பார்த்து மயங்குகிறார்கள். 
இதையே "மாயை" என்று வேதம் சொல்கிறது.

இந்த உலகில் உள்ள உடல்களை பார்த்து ஆசை கொள்கின்றனர்.
இந்த உலகில் உள்ள நகரங்களை பார்த்து, ஆசை கொள்கின்றனர்.

உலகத்தில் பல ஆசைகளை வளர்த்து கொள்கின்றனர். 
அந்த ஆசைகள் நிறைவேற பல வித முயற்சிகள் செய்ய ஆரம்பிக்கின்றனர். 
இதனால் காமம், கோபம், பொறாமை போன்ற குணங்களை சம்பாதிக்கின்றனர். 
செய்த முயற்சியின் பலனாக புண்ணியங்களை, பாவங்களை சேர்த்து கொள்கின்றனர்.
ஆயுசு முடிந்து, கிடைத்த மனித உடலை விட்ட பின், அந்த ஜீவாத்மா மீண்டும் செய்த பாவ புண்ணிய மூட்டையை பொறுத்து, மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
முடிவே இல்லாத இந்த சுழலில், கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இறந்து, பிறந்து கொண்டே இருக்கிறது.



இதை "சாட்சியாக" பார்த்து கொண்டே இருக்கும் பரமாத்மா நாராயணன், "ஏதாவது ஒரு ஜீவனாவது, உலகில் ஏற்படும் சுக துக்கங்களை கண்டு வெறுத்து, பயந்து, தனக்கு அபயம் தருபவர் எங்கே? என்று 
ஜீவாத்மா தன்னை திரும்பி பார்ப்பானா?" 
என்று காத்து கொண்டு இருக்கிறார். 
ஆனந்த மூர்த்தியான தானே "உலகமாகவும் இருப்பதால்"
உலகத்தை கண்டு ஜீவாத்மாக்கள் மோஹித்தாலும், பரமாத்மா வாசுதேவன் தவறாக நினைப்பதில்லை. 
ஆனால், 
"உலகமாகவும் (உயிரற்ற) நானே இருக்கிறேன்" என்று புரிந்து கொள்ளாமல், "இயற்கை என்றும், உடல்கள் என்றும்" சொல்லிக்கொண்டு ஆசை கொள்வதால், 
பாவ புண்ணியங்கள் அடையும் ஜீவாத்மாவின் நிலையை, கண்டு வருந்துகிறார் பரமாத்மா வாசுதேவன்.
இதற்காக, 
தானே ரிஷிகளாகவும், அவதாரங்கள் செய்தும், 
ஆதி சங்கரராகவும், ராமானுஜராகவும் வந்து, 
புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு வழி காட்டினார்.  வழி காட்டி கொண்டே இருக்கிறார்.  
தானே அர்ச்சா அவதாரங்கள் செய்து திருமலையில், காஞ்சியில், பதரியில், பாரத தேசங்கள் முழுக்க, அர்ச்சா அவதாரங்கள் செய்து நிரந்தரமாக நமக்கு கல் ரூபத்தில் காட்சியும் கொடுக்கிறார். 

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார். 
தன் உடலாகவும் அவர் தான் இருக்கிறார்.
  
தானும் (ஜீவன்) "பரமாத்மாவின் அம்சம்" தான் என்று புரிந்து கொள்ளும் போது, 
"அஹம் ப்ரம்மாஸ்மி" (நாம் அனைவரும் பிரம்மமே) 
என்ற ஞானம் ஏற்பட்டு விடுகிறது. 
அப்பொழுதான் அந்த ஜீவனுக்கு "அத்வைதம்" புரிய ஆரம்பிக்கிறது. 
"இந்த அனுபவம் நமக்கு ஏற்பட வேண்டும்" என்ற கருணையின் காரணமாக தான், 
ஆதி சங்கரராக சிவபெருமானே அவதரித்து "அத்வைத" சித்தாந்தத்தை வெளிக்காட்டினார்.





ப்ரம்ம தேவன் ஆயுள் முடிந்த பின், 
பரமாத்மா நாராயணன் "உயிரற்ற உலகங்களை தன்னிடமே மறைத்து கொண்டு", "தான் படைத்த ஜீவாத்மாக்களை தன்னோடு சேர்த்து கொண்டு" தான் மட்டுமே இருக்கிறார். 
பல விளக்கில் ஏற்றப்பட்ட தீபங்கள் அந்த அணையா விளக்கில் சேர்ந்து மறைந்து விடுவது போல, 
உயிரற்ற உலகங்களும், தன் அம்சமான ஜீவாத்மாக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார். 
பிரளய காலம் முடிந்து, மீண்டும் புது ப்ரம்ம தேவனை நியமித்து, 
தன்னுள் வைத்து இருந்த அனைத்து ஜீவாத்மாக்களையும் மீண்டும் பிறக்க வைக்கிறார். 
அவர்களுக்கு உடலாகவும், உலகங்களாகவும் இவரே ஆகி, மோஹிக்க செய்கிறார் பரமாத்மா.

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
நாமும் (ஜீவனும்) அந்த பரமாத்மாவின் அம்சமே என்பதால், 
"எங்கும் பரப்ரம்மமே இருக்கிறது. ஒரே தெய்வம் தான்" 
என்று ஆதி சங்கரர் அத்வைத வேத சித்தாந்தத்தை வழிகாட்ட வேண்டிய அவசியம் அவர் காலத்தில் ஏற்பட்டது.  
வேதத்தை "கர்மமாகவே செய்யும் கர்மடர்கள்" அதிகமாகி போனதால், வேதத்தில் உள்ள இந்த "ஞானத்தை" புரிந்து கொள்ளாமல், வெறும் செயலாகவே செய்து கொண்டிருந்தனர்.  
அவர்களுக்கு "அத்வைத சித்தாந்தத்தை" வெளிக்காட்டி ஆதி சங்கரர் ஹிந்துக்களை மீண்டும் நேர் வழிக்கு திருப்பினார்.

அரேபிய இஸ்லாமியர்கள், பாரத தேசத்தில் நுழைந்து 
ஹிந்துக்கள் கொல்லப்பட, 
லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட, 
மத மாற்றம் செய்யப்பட, 
ஹிந்துக்கள் நிலை குலைந்த சமயத்தில், ஹிந்துக்களை மீண்டும் நிலை பெற செய்ய மத்வாச்சாரியார் அவதரித்தார்.



உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் "நாராயணனின் அம்சமே" என்ற "அத்வைத ஞானம்" உண்மை தான். 
ஆனால், 
அந்த பக்குவம் அனைத்து ஜீவாத்மாவுக்கும் வருமா? 

"ஆதி சங்கரருக்கு, பிரகலாதனுக்கு, ஜடபரதருக்கு" அந்த பக்குவம் இருந்தது. அத்வைத ஞானம் இருந்தது. 
தன்னை கொல்ல வந்தாலும் "கொலை செய்ய வருபவனும் நாராயணனே" என்று இருந்தனர்.

கோவில்களை இடித்து, 
ஹிந்துக்களை கொன்று, 
மதம் மாற்றும் அரேபியர்களுக்கு இந்த ஞானம் இல்லையே ! 
இந்த பக்குவம் ஹிந்துக்களுக்கு மட்டும் புரிந்து இருப்பதால், 
வேதமே அழியும் அபாயம் ஏற்பட்டது. 

வேத தெய்வங்கள் சும்மா இருக்குமா? பொய் தெய்வங்கள் இல்லையே ! 

மனிதர்கள் உருவாக்கிய மதம் இல்லையே, ஹிந்து தர்மம்.

பிற மதங்களை காப்பது "மனிதர்கள்". 
ஹிந்து தர்மத்தை காப்பது "தெய்வங்கள்" அல்லவா.



காலத்தை அனுசரித்து, யதிராஜர் ராமானுஜர் மூலம் "விஷிஷ்டாத்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.

காலத்தை அனுசரித்து, மத்வாச்சாரியார் மூலம் "த்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.
பரமாத்மா நாராயணன், "தன் அம்சமாகவே கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை படைத்து இருக்கிறார்" என்று பார்த்தோம்.

"தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள், 
"தன்னை படைத்தவன் தான், தன் உடம்பாகவும், உலகமாகவும் இருக்கிறார்" என்று புரியாமல், மயங்கி இருக்க, 
"தான் இருப்பதை உணரும் வரை, தன்னை படைத்தவனை தேடும் வரை" மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறார் என்று பார்த்தோம்.

"அத்வைதம்" என்ற உண்மை நிலையை  ஒரு சிலரே அனுபவத்தில் உணர முடியும் என்பதால், "அத்வைத பக்குவம் மட்டுமே மோக்ஷம் கிடைக்க வழி" என்று சொன்னால், கோடிக்கணக்கான ஜீவனுக்கு மோக்ஷமே கிடைக்காது.

இந்த உலகமும் நாராயணனே, 
இந்த உடலும் நாராயணனே, 
தான் (ஜீவன்) நாராயணின் அம்சமே 
என்று உணர்வதற்கு, நாராயணனாக பார்த்து கருணை செய்தால் தான் வழி.  

அத்வைத நிலை நமக்கு ஏற்பட, பரவாசுதேவன் தான் ஜீவாத்மாவுக்கு  வழி காட்ட வேண்டும். 

"உலகமே நாராயணன், நாமும் அவர் அம்சமே" என்ற ஞானம் ஏற்படாத வரை, நமக்கு நாராயணன் "மோக்ஷம்" கொடுக்க போவதில்லை.  
ஜீவன் "தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு, 
"தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று நினைவே இல்லாமல், 
நாராயணனே உலகமாக இருப்பதை அறியாமல் "இயற்கை" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வரை, பாவ, புண்ணியத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் உலகில் பிறக்க செய்கிறார்



ஜீவன், "இயற்கை" என்ற பெயரில் 'தன்னை தானே ரசிக்கிறான்' என்பதால், 
மோக்ஷம் கொடுக்க அவசியமில்லாமல் இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.

உலகில் சுகங்கள் கிடப்பது போல, பல துன்பங்களும் நமக்கு ஏற்படுகிறது.

உலகில் ஏற்படும் துன்பங்களை பார்த்து, மூப்பை பார்த்து, மரணத்தை பார்த்தும், 
நமக்கு அத்வைத பக்குவம் நமக்கு வரப்போவதே இல்லை.

"நம்மை நாராயணன் தான் படைத்தார். 
அவர் நினைத்தால் மட்டுமே, நமக்கு மோக்ஷம் தர முடியும்" 
என்ற அளவுக்காவது நமக்கு அறிவு இருக்க வேண்டாமா!!
பரமாத்மாவின் பரத்துவத்தை படித்து புரிந்து கொண்டாலும், அனுபவத்தில் கொண்டு வர முடியாத நம்மை போன்றவர்களுக்கு (ஜீவாத்மா), 
அந்த அத்வைத பக்குவத்தை "நாராயணனே" கொடுக்கவல்லவர். 

ஆதலால், நாம் அஞானியாக இருப்பதால், "நம்மை படைத்த நாராயணன் நம்மை காக்கிறார்" என்ற அளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
நம்மை படைத்தவர் மேல், நமக்கு அன்பு (பக்தி) இருக்க வேண்டும்.
ஆதலால், 
"நாம் அஞானியாக இருப்பதால், நாம் நாராயணனை பக்தி செய்ய வேண்டும். அவர் கருணையால் மோக்ஷம் அடைய வேண்டும்" 
என்று "த்வைத" சித்தாந்தத்தை மத்வாச்சாரியார் மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.



அத்வைத பக்குவம் (நிலை) ஏற்படாதவரை, ஜீவாத்மா மோக்ஷம் அடைய முடியாது என்பது உண்மை என்பதால், "ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு" என்று புரிந்து கொண்டு, அந்த பரமாத்மாவிடம் பக்தி (அன்பு) செய்ய வேண்டும்.
அஞானியாக இருந்தாலும், உலகத்தை உலகமாகவே பார்த்தாலும், பக்தி செய்ய ஆரம்பித்து விட்டால், 'தன்னை பார்க்கும் ஜீவனை, தன்னை நினைக்கும் ஜீவனை', பரமாத்மா 
கருணையோடு பார்க்க ஆரம்பிக்கிறார். 
தன் மீது பக்தி வளர செய்கிறார். 
உலகத்தில் ஏற்படும் துன்பங்கள் தான் பக்தனுக்கு வராமல் செய்கிறார். பக்குவத்தை கொடுத்து, தன் கருணையால் "மோக்ஷம்" கூட கொடுத்து விடுகிறார்.

"நம்மை படைத்த நாராயணன் மீது அன்பு (பக்தி) செய்தால், அஞானியும் மோக்ஷம் அடைய முடியும்" என்ற த்வைத சித்தாந்தம் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பு உடையதாக இருப்பதால், மத்வாச்சாரியார் த்வைத சித்தாந்தத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.
ராமானுஜர் வேதத்தின் முழுமையான அபிப்ராயமான "விஷிஷ்டாத்வைதத்தை" வெளிக்காட்டினார்.

"பரமாத்மா ஒருவரே மெய்.  
உலகம் பொய்" என்கிறது அத்வைதம்.

"உலகத்துக்கும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார். 
அதனால் உலகத்தை வெறுக்காமல், உலகத்தில் பார்க்கும் அனைத்திலும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார் என்று பார்" 
என்று அத்வைத சித்தாந்தத்தில்  அந்தர்யாமி தத்துவத்தையையும் காட்டி '"விசேஷ அத்வைதம்" காட்டப்பட்டது. ஸ்ரீ ராமானுஜர் அவர் காலத்தில் (1017AD-1137AD) விஷிஷ்டாத்வைதம் பிரகாசம் அடைந்தது.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர்.
வாழ்க சங்கரர்.

நாராயணின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் அல்லவா.. ஸ்ரீ ராமானுஜர்.
வேதம் "த்வைதம், அத்வைதம்" இரண்டையும் சொல்வதால்,
ஸ்ரீ ராமானுஜர், 
த்வைத சித்தாந்தம் சொல்லும் "பக்தியை" ஏற்கிறார், 
அத்வைத சித்தாந்தம் சொல்லும் "பரதத்துவ" ஞானத்தை ஏற்கிறார்.  



வேதத்தின் முழு அபிப்ராயமான, "விஷிஷ்டாத்வைத சித்தாந்தம்" ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் மீண்டும் வெளிப்பட்டது. 

அஞானியாக இருந்தாலும் பரவாயில்லை. 
உலக கஷ்டங்கள் விலக, பெருமாள் கருணையை பெற, "நமோ நாராயணாய" என்று அனைவரும் சொல்லுங்கள். 
"அனைவரும் ஹரியின் ஜனங்களே" என்று த்வைத சித்தாந்தமான பக்தியை செய்ய சொன்னார் ஸ்ரீ ராமானுஜர்.

பகவானின் கருணை நம் மீது திரும்பும் பொழுது, நமக்கு அத்வைத அனுபவத்தை நாராயணனே கொடுப்பதால், 
"மோக்ஷம்" என்பது உடலை விட்டு பிரிந்து பரஞ்சோதியின் சேர்ந்தால் மட்டும் தான் கிடைக்கும் என்று த்வைதம் சொல்கிறது

அத்வைத அனுபவம் நமக்கு ஏற்படும் போது, நாம் உலகில் இருக்கும் போதே, 'மோக்ஷ அனுபவம் கிடைக்கும்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தத்தையும் ஏற்கிறது "விஷிஷ்டாத்வைதம்".
'பிரகலாதன், ஆதி சங்கரர், ஜடபரதர்' போன்றோருக்கு "பரமாத்மா எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலை இருந்தது. 
தன்னை கொல்ல வந்தவர்களை கூட வேறாக பார்க்க முடியாமல் இருந்தனர். 

"'பரமாத்மா எங்கும் உள்ளார்' என்ற இந்த பரதத்துவ நிலை, 
அஞானியாக இருந்து பக்தி செய்தால் கூட ஏற்படும், பகவான் நமக்கு அந்த அனுபவத்தை கொடுப்பார்" 
என்று 'வேதத்தின் ரகசியத்தை' ராமானுஜர் விஷிஷ்டாத்வைதத்தை காட்டி வெளிப்படுத்தினார்.

ஆழ்வார்கள் பாசுரங்களை பார்க்கும் போது நமக்கு இந்த உண்மை புரிகிறது. 

"பக்தியை நமக்கு ஊட்டும்" 4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்கள், 
பல இடங்களில் 
"ஸ்ரீ ரங்க வாசமே எங்களுக்கு போதும், 
திருமலை வாசமே போதும், 
காஞ்சி வரதனே போதும், 
மோக்ஷத்தை இங்கேயே நாங்கள் அனுபவிப்பதால், பரமபதம் என்ற வைகுண்டம் கூட எங்களுக்கு வேண்டாம்" 
என்று சொல்வதை பார்க்கும் போது, அத்வைத நிலையை காட்டுகின்றனர்.




மகாத்மாக்கள் "அத்வைத நிலையிலேயே" வாழ்கிறார்கள்.  
அஞானியாக நாம் இருப்பதால், 
"உலகமே நாராயணன் தான்" என்ற அனுபவம் நமக்கு ஏற்படாததால், 
"நாம் சேர வேண்டியது அந்த பரஞ்ஜோதியான நாராயணனை தான்" என்ற உண்மை நமக்கு புரியாததால்,
"சுதந்திரமானவர்கள்" என்று நினைத்து கொள்வதால்,
சம்சார சூழலில் சிக்கி, உலக துன்பங்களை அனுபவித்து கொண்டே, மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து கொண்டே இருக்கிறோம்.

அஞானியாக இருக்கும் நமக்கும் வழி உண்டு. 
அஞானியாக இருக்கும் நமக்கும் 'மோக்ஷம்' கிடைக்க வழி உண்டு.

முதல் படியாக "நம்மை படைத்த நாராயணன் மீது அன்பை (பக்தியை) வளர்த்து கொண்டு"
நாராயணன் கருணை நம் மீது விழுந்து, அவர் கருணையாலேயே நமக்கும் அத்வைத அனுபவம் ஏற்பட்டு, நாமும் மோக்ஷம் அடையலாம். 

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விஷிஸ்டாத்வைதம் நமக்கு ஏற்றது. 

மற்ற இரண்டு சித்தாந்தங்களையும் ஏற்று கொண்டு இருப்பதால், விஷிஷ்டாத்வைதம் வேதத்தின் அபிப்ராயம் கூட.

ஆதி சங்கரரை வணங்குவோம்.
மத்வாச்சாரியாரை வணங்குவோம்.
யதிராஜரான ராமானுஜரை வணங்குவோம்.

நம் பாரத பூமியில் அவதரித்த அனைத்து மகாத்மாவையும் வணங்குவோம். 



நம் குருநாதரை நமஸ்கரிப்போம்.

மோக்ஷம் அடைய வழி என்ன?  
நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? என்று காட்டி வழிநடத்தும், 
நம் ஆன்மீக பூமியான பாரத பூமியை நினைத்து, பெருமை படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.



Wednesday 24 July 2019

ஏசு கிறிஸ்து யார்? ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...

ஏசு ஜோசப் யார்?
பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம்.
இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...


கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் தான், இவர்கள் என்று புரியும்..

மகாபாரதம் 5000 வருடம் முன் 'துவாபர' யுகத்தில் நடந்தது.
வியாசர், மகாபாரதம் நடக்கும் போதே எழுதினார்.
சம காலத்தில் இருந்தார்.
மகாபாரதம் எழுதி முடித்த பின், வியாசர் கிருஷ்ணரை பற்றி மட்டுமே  பாகவதம் என்ற புண்ணிய கிரந்தத்தையும் இயற்றினார்.
இதை அர்ஜுனன் பேரன் பரிக்ஷித் 7 நாட்கள் தொடர்ந்து கேட்டார்.

ராமாயணம் சுமார் 12 லட்ச வருடங்கள் முன் த்ரேதா யுகத்தில் நடந்தது.
தமிழ்நாட்டில் திருச்சி அருகில், அன்பில் என்ற ஊரில், ப்ருகு ரிஷியே வேடுவ ஜாதியில், ருக்சன் என்ற வேடுவனாக பிறந்து, ராம நாமத்தை ஜபித்து, வால்மீகி ரிஷியாகி, நாரதர், ப்ரம்மா, சரஸ்வதி அனுகிரஹத்துடன், ராமர் அவதாரம் செய்த காலத்திலேயே ராமாயணம் எழுதி, அதை ராமரின் புதல்வர்கள் லவன் மற்றும் குசனுக்கு சொல்லி, ராமாயணத்தை ஸ்ரீ ராமரே முதன் முதலாக தன் புதல்வர்கள் மூலமே கேட்டார் என்ற பெருமை அடைந்தது.
தமிழன் வால்மீகி த்ரேதா யுகத்தில் சமஸ்கரித மொழியில் கவி நடையில் ராமாயணம் எழுதினார்.
அது தமிழில் இல்லையே என்று, கலி யுகத்தில், கம்பர் தமிழில் கவி நடையில் தமிழாக்கம் செய்து தமிழனுக்கு கொடுத்தார்.

5000 வருடங்கள் முன் இருந்த இந்த இரு புராணங்களையும், இதன் காலத்தையும், முதலில் ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின்,
ஆராய்ச்சி செய்ய ஆர்வம் இருந்தால், 2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படிக்கலாம்.

இப்படி படிக்கும் போது,  உண்மையான அறிவை நமக்கு கொடுக்கும்.
காலத்தை கணிக்கும் போதும் சில உண்மைகள் தானாக விளங்கும்.

5000 வருடங்கள் முன் நிகழ்ந்த மகாபாரதத்தை, அரைகுறையாக தெரிந்து கொண்டு,
12 லட்சம் வருடங்கள் முன் நிகழ்ந்த ராமாயணத்தை 'சீதைக்கு ராமன் சித்தப்பா, இலங்கையை சேர்ந்த ப்ராம்மண ராவணனை தமிழன்' என்ற அளவுக்கு தவறுதலாக புரிந்து கொண்டு, இருக்கும் ஹிந்துக்கள்,
2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படித்தால், மோசம் போவது நிச்சயம்... ஏமாறுவதும் நிச்சயம்.

அற்புதமான ஹிந்து மதத்தில் பிறந்தும், மதம் மாறுவதற்கு காரணம் ராமாயண, மகாபாரத 'காலத்தை'யும், அதன் 'சரித்திரத்தை'யும் புரிந்து கொள்ளாமல் இருப்பதே..

ஹிந்துக்கள் மகா அறிவாளிகள் தான். சந்தேகமில்லை.
ஆனால் தன் மத விஷயங்களை பொறுத்தவரை, போதிய அறிவு இல்லாமல் உள்ளனர் என்பதே நம் பலவீனம்.
இது சற்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.


இனி....
சுமார் 100ADல் உருவாக்கப்பட்ட பைபிள் வசனங்களை கவனிப்போம்..


ஏரோது (herod) என்ற ராஜா, "ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது" என்று கேட்டபொழுது, அவனும், அவனோடு கூட ஜெருசலம்  நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Matthew 2.3
(3102BC முன், அதாவது சுமார் 5000 வருடம் முன் பரப்ரம்மமே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்.
கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்றதும், மதுரா அரசனாக கொடுங்கோல் ஆட்சி செய்யும் கம்சன் மனம் கலங்கினான்.
5000 வருடம் முன்பேயே நடந்த அதே நிகழ்வு.. இன்றும் மதுரா போய் பார்க்கலாம்..)
ஏரோது (herod) ராஜா, பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான் என்பதால், அப்பா ஜோசப் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதன் தாய் மேரியையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான்.
Matthew 2.13, 2.14
(கிருஷ்ணரை கம்சன் கொன்று விடுவானோ என்று தேவகி பயப்பட, பிறந்த குழந்தையாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் 'அப்படி பயம் இருந்தால், தன்னை கோகுலம் எடுத்து செல்லுங்கள்' என்று சொல்ல, குழந்தை கிருஷ்ணரை எடுத்துக்கொண்டு  கோகுலம் புறப்பட்டார் வசுதேவர். 
 5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் மதுரா உள்ளது..கிருஷ்ணர் பிறந்த இடம் உள்ளது. போய் பார்க்கலாம்.)

ஏரோது (Herod) மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான்.
Matthew 2.16
(கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்று அறிந்த கம்சன், ஒரு மாதத்தில் பிறந்த அனைத்து குழந்தையையும் கொன்று விட சொல்லி, பூதனை என்ற அரக்கியை கோகுலத்துக்கு அனுப்பினான்.
5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் கோகுலம் உள்ளது.. போய் பார்க்கலாம்.)
ஏரோது (Herod) இறந்த பிறகு, பிள்ளையையும் அவன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான் ஜோசப். 
Matthew 2.20, 2.21
(கம்சனை தன் 11 வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற பின், மதுராவில் வசுதேவரும், தேவகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்...)

5000 வருடம் (3102BCக்கு முன்) முன்பு, பாரத மண்ணில் நடந்த சரித்திரம்.

அரைகுறையாக யாரோ ஒரு கிராமத்தான் மஹாபாரத கதையை கேட்டு, அதே கதையை தன் அறிவுக்கு எட்டிய அளவுக்கு,
யவனர்கள் என்று அழைக்கப்பட்ட தேசங்களில் திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு சுமார் 2000 வருடம் (சுமார் 100ADல்) முன்பு சொல்லி இருக்கலாம்..

பொதுவாக உச்சரிப்பு புரிந்து கொள்ளாமல் போகும் போது, தவறான அர்த்தங்களை புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது..  கீழே உள்ள வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

அது போல, 5000 வருடம் முன் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், உலகம் முழுக்க பேசப்பட்டு, சரித்திரம் உருமாறி 3000வருட காலத்தில் யவன தேசங்களான ஜெருசலம் போன்ற தேசங்களில் மாறுபட்டு இருக்க கூடும்.


இன்று கூட கிராமங்களில் நாடக நடிகர்கள் கிருஷ்ண கதையை "கண்ணன் பொறந்தான் மதுரைல... கோகுல கிராமத்துல வளந்து, பொல்லாத கம்சன ஒரே அடி போட்டு கொன்றான். பெத்த அப்பா அம்மாவை சிறையிலேந்து காப்பாற்றினான்" என்று அவர்கள் பாணியில் சொல்வது உண்டு.


இப்படி கண்ணன் கதை சொல்லும் பழக்கம் உலகம் முழுக்க, பரவி இருந்தது...
உலகத்தில் உள்ள க்ஷத்ரியர்கள் அனைவரும் பங்குபெற்ற மகாபாரத போருக்கு பின்னர், உலகமே தர்மபுத்திரர் ஆட்சிக்கு கீழ் வந்தது.

5000 வருடம் முன் நடந்த கிருஷ்ணன் கதையை, 2000 வருடம் முன் கிறிஸ்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

கம்ச மாமா கதையை திருடி, ஏரோது (herod) ஆக்கியது போல தோன்றுகிறதா?

மதுரா என்ற ஊரையே திருடி, பெத்லகேம் ஆக்கியது போல தோன்றுகிறதா?

கோகுலம் என்ற ஊரையே திருடி, எகிப்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கதை, 5000 வருடம் முன் இருந்த கதையை சுட்டுள்ளது என்று தோன்றுகிறதா?

ஏசு அவதார கதை இப்படி தான் பைபிளில் எழுதப்பட்டுள்ளது...
புதிய ஏற்பாடு "மத்யு" (Matthew) அப்படி தான் தெளிவாக, 5000 வருடத்திற்கு முன் இருந்த மகாபாரத கதையை சுட்டு சொல்கிறது...

இதை மாற்ற 3வது new testament கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை...

மற்றொரு புதிய ஏற்பாடு லூக்கில் சொல்வதை இனி பார்ப்போம்..
மேலும் தொடர்வோம்...
ஜோசப், தன் மனைவி மேரிக்கு பிறந்த குழந்தைக்கு 8வது நாளில் "ஹேசு கிறிஸ்து" என்று பெயர் வைத்தார்..
Luke 2.21
(குழந்தை பிறந்து 10வது நாள் பெயர் வைக்கும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உண்டு.
ஜோசப் அய்யாவிடம் இந்த பழக்கம் இருக்கிறது.
ஜோசப், ஏசு, மேரி ஒரு சுத்தமான ஹிந்து கலாச்சாரத்தை கொண்ட வெளிநாட்டில் வசித்த குடும்பம் என்று தெரிகிறது.)
இன்று கூட இஸ்கான் போன்ற கிருஷ்ண அமைப்புகளில், ஹிந்து கலாச்சாரத்தில்  ஈர்க்கப்பட்டு, வெளிநாட்டில் வாழும் குடும்பங்கள் இருப்பதை காண்கிறோம். இவர்கள் கிருஷ்ணா என்று உச்சரிப்பதில்லை. கிஸினா என்று தான் உச்சரிக்கிறார்கள். 
2000 வருடங்கள் முன், இந்த நாடுகளில் உச்சரிப்பில் கிருஷ்ணர் கிருஸ்துவாக மருவி இருக்க கூடும்.

உலகம் முழுவதும் ஹிந்து கலாச்சாரமே இருந்தது என்று இன்று வரை பூமியில் கிடைக்கும் சிவ லிங்கமும், கோவில்களின் பாகங்களே சாட்சி...
ஹிந்து கலாச்சாரத்தில், நன்றாக கவனித்தோம் என்றால்,  பரமாத்மாவை "ப்ரம்மம்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்கள்.





அந்த ப்ரம்மமே, "வாமன, நரசிம்ம, ராம, கிருஷ்ணனாக அவதாரம் செய்தார், ருத்ரனாக" வந்தார்  என்று சொல்கிறார்கள்.
அவரே அனைத்துமாக இருக்கிறார்.
அவரே 'நாராயணன்' என்றும் சொல்கிறது ரிக் வேதம்.

ப்ரம்மமே 'பரமாத்மா' என்ற வழிபாட்டில் இருந்து, இரண்டு சித்தாந்தங்கள் வெளி வந்தன என்று பார்க்கிறோம்.
அந்த ப்ரம்மம் அரூபமானவர், வேதத்தில் உள்ள ருத்ரனே அந்த பரமாத்மா என்று "சைவ" சித்தாந்தமும்,

அந்த பரமாத்மா ரூபம் தரித்து நாராயணனாக இருக்கிறார் என்று புருஷ சூக்தம் போன்ற வேத சூக்தங்களை காட்டி நிரூபித்து, நாராயணனே அந்த பரமாத்மா என்று "வைணவம்" சித்தாந்தமும் உருவானது.
ப்ரம்மமே 'பரமாத்மா' என்று ஹிந்துக்கள் அனைவரும்  ஒப்புக்கொண்டாலும்,
அரூபமான ருத்ரனே 'பரமாத்மா' என்றும்,
விஷ்ணுவே 'பரமாத்மா' என்றும் இரண்டு சித்தாந்தங்களாக பிரிந்தது என்று பார்க்கிறோம்.

இது ஒரு ஆச்சரியமில்லை...

கொஞ்சம் நாம் கவனித்தால்,
2000 வருடங்கள் முன் தோன்றிய கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டுமே "யூத மதத்தில் இருந்து பிரிந்த" இரு வேறு சித்தாந்தங்கள் என்ற ஒற்றுமையை பார்க்கிறோம்.

யூத மதம் "ப்ரம்மம்" என்ற சொல்(ஒலி) போலவே ஒலிக்கும், "ஆப்ரஹாம்" (இப்ராஹிம்) என்பவரே தங்கள் வழிகாட்டி என்று நம்புகின்றனர்.

ஒலி அடிப்படையில் சொல்லி பார்த்தால், "ப்ரம்மம், இப்ராஹிம், ஆப்ரஹாம்" மூன்றும் ஒரே மாதிரியான சப்தத்தை ஒலிக்கிறது என்று கவனிக்கலாம்.

சைவ சித்தாந்தங்கள் போலவே,
இறைவன் அரூபமானவர், அவரையே சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாம் என்ற சித்தாந்தம் நபிகளால் உருவானது.
இஸ்லாம் என்ற அரேபிய சொல்லுக்கே "சரணாகதி" என்று தான் பொருள். ஆங்கிலத்தில் surrender to god என்று பொருள் தருகிறது.

இறைவன் அரூபமானவர் என்று சொல்லும் சித்தாந்தத்தை சைவர்கள் கடைபிடிக்கின்றனர்.
அரூபமானவர் ருத்ரன் என்று காட்ட, ஒரு ரூபமில்லாத லிங்கத்தை ருத்ரனாக வழிபடுகின்றனர்.
தியானம் செய்கின்றனர்.
இஸ்லாமில் மசூதிகள் அமைப்பு லிங்க ரூபமாக உள்ளது.
தியானத்திற்கு அதிக மரியாதை உள்ளது.  
வீண் பேச்சுக்கள் பேச மாட்டார்கள் இஸ்லாமியர்கள்.

மற்றொரு சித்தாந்தத்தில்,
இறைவன் ரூபம் உடையவர்.
அவர் கிறிஸ்து என்று கிறிஸ்துவம் உருவானது.
இவர்கள் உருவ வழிபாடு செய்கின்றனர்.


இந்தியாவில் ஹிந்துவாக பிறந்தும், புரியாமல் மதம் மாறியுள்ள கிறிஸ்தவர்கள் கூட, இன்று 90 சதவீதம் ஹிந்து மதப்படி தான் பூஜை, ஸ்லோகங்கள், ஜபம், துளசி மாலை, இசை கச்சேரி, ஸ்தூபம், தூபம், தேர், பாத யாத்திரை என்று ஏறத்தாழ  ஹிந்துவாகவே கிறிஸ்துவை ஆக்கி, வழிபடுகின்றனர்.

ஏசு, கிருஷ்ண பக்தனா?
அல்லது கிருஷ்ணர் கதையை தான் கொஞ்சம் எடுத்து கிறிஸ்து என்ற பெயரில் எழுதப்பட்டதா? என்பது நமக்கு தேவை இல்லாத சர்ச்சை..
அது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

5000 வருடத்திற்கு முன் நடந்த கிருஷ்ண சரித்திரம், 2000 வருடத்திற்கு முன் நடந்ததாக சொல்லப்படும் சரித்திரத்தில் நடந்ததா? 
இல்லை கதை களம் மட்டும் எடுக்கப்பட்டதா? என்பது அவரவர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏசு, ஜோசப், மேரி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி கொண்ட ஒரு ஹிந்து குடும்பமாக தான் தெரிகிறது.
ரோமானிய அரசாட்சியில் இந்த யூத குடும்பங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் என்று பார்க்கிறோம்.

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


தன் குழந்தைக்கு புண்யாஜலம் தெளித்து சுத்தி செய்ய, ஜெருசலத்தில் உள்ள 'கோவிலுக்கு' ஜோசப்பும், மேரியும் சென்று, தன் குழந்தையை தெய்வத்திடம் (lord) காண்பித்தனர்.
Luke 2:22
(குல தெய்வத்தை பார்க்க போகும் பழக்கம் ஜோசப் அய்யாவிடம் இருந்துள்ளது.
ஜோசப் அய்யா, எந்த தெய்வத்திடம் ஏசு குழந்தையை  காட்டினார்?? எந்த கோவிலுக்கு கூட்டி சென்றார்?? என்று மட்டும் சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது !!
Luke 2:22 வசனம் எதிர்காலத்தில் மறைக்கப்படலாம்...

'என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்' என்று ஏசு சொல்லும் முக்கியமான வசனத்தில் கூட, அவர் எந்த சமூகத்தை உண்மையில் சொன்னார்? என்று சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது)

அந்த காலங்களில் அடக்கி ஆண்ட ரோமானியர்களுக்கு பயந்து மறைக்கப்பட்டு இருக்கலாம்...
வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு முதல் ஆண் குழந்தையும் இறைவனால் புனிதப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிப்படி, ஏசுவை இறைவன் முன் காண்பித்தனர் அவன் பெற்றோர்கள்.
Luke 2:23
(ஏசுவுக்கு ஆசி கூறிய தெய்வம் நாராயணன் என்றோ ஸ்ரீ கிருஷ்ணர் என்றோ, சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது.)

ஏசு உண்மையா? கற்பனையா? என்பது தேவை இல்லாத சர்ச்சை.

அப்படி ஒருவர் இருந்தார் என்றே நம்புவோம்.
கலியுக முடிவில், தான் வைகுண்டம் போக தீர்மானித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
தான் மறைந்து விட்டால், துவாரகை கடலில் மூழ்கி விடும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும், லட்சக்கணக்கான யாதவர்கள் நான்கு திசையிலும் அவரவர்கள் குடும்பத்துடன் பிரிந்து சென்றனர் என்று மகாபாரதம் காட்டுகிறது.

பாரத நாட்டில் இன்றும் வடக்கில் யாதவர்கள் (yadav) என்றும், தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் கோனார்கள், யாதவர்கள் என்றும் இருக்கின்றனர்.

யூதர்கள் என்ற குலமும் யாதவர்கள் தான்.
யது குலத்தில் வந்த இவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

யாதவ, யூத, யது என்ற சொல்லிலேயே ஒற்றுமை தெளிவாக தெரிகிறது.

பெயர் மருவி உள்ளதே தவிர, இவர்கள் வாழ்வு முறை, வழிபாடு, ஏசு "பரம பிதாவே என்று அழைக்கும் முறை" எல்லாம் ஹிந்து கலாச்சாரமாக தான் உள்ளது.
இவர்களுக்கு கிருஷ்ணரே குல தெய்வம் என்று தெளிவாக தெரிகிறது.

காலபோக்கில் உடை, பாஷை மாறி போனாலும், கதை களமோ, தன் மகனுக்கு கிறிஸ்து என்று பெயர் வைக்கும் பழக்கமோ இவர்களை விட்டு மாறவில்லை என்று தெரிகிறது.

ஸ்ரீ ராகவேந்திரர், க்ஷீரடி சாய் பாபா போன்ற உத்தமர்கள், ராம, கிருஷ்ண பக்தி செய்த மகான்கள்.

கிருஷ்ணரை வணங்கிய இந்த மகான்களையே தெய்வமாக இன்றும் பல லட்ச பாரத மக்கள் வணங்குகின்றனர் என்று பார்க்கிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணரை பரம பிதாவாக வழிபட்ட கிறிஸ்து ஒரு மகான் தான்.
மகானையே வழிபடும் பழக்கம் நமக்கு உண்டு.
இது இவர்களிடத்திலும் உள்ளது...

அடியேன் ராமானுஜ தாஸன் என்று வைணவர்கள் சொல்லி கொள்வார்கள்.

இந்த பழக்கமே கிறிஸ்து என்ற மகானை பின்பற்றியவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கிறிஸ்துவை வழிபடுவதில் தவறில்லை.
ஆனால் அவர் யாரை வணங்கினாரோ அந்த பரம பிதாவான ஸ்ரீ கிருஷ்ணரை புரிந்து கொள்ள, பகவத் கீதையை படித்து கிருஷ்ண பக்தர்களாக ஆக முயற்சிக்க வேண்டும்.
காலத்தை ஒட்டிய ஆராய்ச்சி செய்தால், கிறிஸ்து வெளிநாட்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தன் என்றே தெரிகிறது...
யூத குலத்தில் ஏசு என்று ஒருவர் பிறந்தார் என்றே ஒப்புக்கொண்டாலும், இவர் தன் வாழ்நாள் முழுவதும் "பர மண்டலத்தில் இருக்கும் பிதாவே" என்று வழிப்பட்டது சாஷாத் யாதவ கண்ணனையே என்று தெரிகிறது.

ராமரை வணங்கிய ராகவேந்திரரையே தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உள்ளது போலவே,
கிருஷ்ணன் என்ற பரம பிதாவை வணங்கிய கிருஸ்து என்ற மகானை தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் வெளிநாட்டில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது...
மாடு மேய்த்த கண்ணனை போல, பக்தனான இவரும் ஆடு மேய்க்க ஆசைப்பட்டார் என்று ஊருக்கு தகுத்தாற்போல சொல்லி இருக்கலாம் அங்கு இருந்த பெரியோர்கள்.
அல்லது, கிருஷ்ணர் கதையை சற்று மாற்றி, அங்கு மாடுகளை விட ஆடுகள் அதிகம் என்பதால், ஆடு மேய்த்தார் என்று சொல்லி இருக்கலாம்.

கிருஸ்துவின் கதை, கிருஷ்ணர் கதையில் இருந்து எடுக்கப்பட்டதா? 
அல்லது கிருஷ்ணர் கதையை ஒரு கிராமத்தான் தன் இஷ்டத்துக்கு மாட்டுக்கு பதில் ஆடு என்றும், கம்சனுக்கு பதில் ஏரோது என்றும்,
கிருஷ்ணருக்கு பதில் கிறிஸ்து என்றும்,
மதுராவுக்கு பதில் பெத்லகேம் என்றும்,
கோகுலம் என்ற ஊரை, எகிப்து என்றும் மாற்றினார்களா என்பதும் யோசிக்க வேண்டியதாக உள்ளது...
எது எப்படியோ!!  ஏசு ஒரு யாதவ பையன் தான். நம்ம பையன் தான்.
வெளிநாடுகளில் வாழும் இஸ்கான் ஹிந்துக்களை போல தான் இவர்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணனை தான் இப்படி கிறிஸ்து என்று  சொன்னார்களா? இல்லை,
தாங்கள் யாதவ குலம் என்பதால் கிருஷ்ண கதையை தன் போக்கில் எழுதி, ரோமானியர்களை பல தெய்வ கொள்கையில் இருந்து மாற்ற, ஒரே தெய்வம் தான், அவரே கிருஷ்ணர் என்று நிலை நாட்ட முயற்சித்தார்களா? என்பது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்...

கிருஷ்ண பக்தியை, கிருஷ்ணரே பரமாத்மா என்று சொல்லும் இஸ்கான் போன்ற அமைப்புகளும், யாதவர்கள் போன்ற மனோபாவம் கொண்டவர்களாக தான் உள்ளனர்.
அவர்களுக்கு ஒரே தெய்வம் தான். ஒரே ஜபம் தான். ஒரே குறிக்கோள் தான்.

வைணவம் என்ற சித்தாந்தம் மற்றும் இஸ்கான் என்ற சமீபத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட அமைப்பும், கிருஷ்ண பக்தியை அனைவரிடமும் பரப்ப ஆசைப்படுகிறது.

வைணவத்தில் ஜாதி மதம் பார்க்காமல் அனைவருக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து, நாராயணன் சொத்து நீ என்று உபதேசங்கள் செய்து, வைணவனாக சேர்த்து கொள்கிறது.

இஸ்கான் போன்ற அமைப்புகள், ஒரு படி மேலே போய், கிருஷ்ண பக்தி செய்பவர்களுக்கு உண்ண உணவு, உடை, நிம்மதியான வாழ்க்கை, ஜபம், என்று கொடுத்து, பூணூல் போட்டு, பூஜைகள் செய்ய சொல்லிக்கொடுத்து உலக மக்கள் யாவரையும் கிருஷ்ண பக்தி செய்ய இழுக்கிறது...

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்ட யாதவ, என்ற யூதர்களும், மத மாற்றம், கிருஸ்துவே கடவுள், அவர் பெயரை ஜபம் செய்யுங்கள் என்று கிருஸ்து பக்தி செய்ய அழைக்கிறார்கள்...

மனித அறிவுள்ள நாம், பாரத பூமியில் பிறந்த பிறகும், முட்டாளாக இருக்க கூடாது...

நமக்கு சுட்ட கதை வேண்டுமா ?
சுடாத கதை வேண்டுமா ?
என்று சிந்திக்க வேண்டும்.

இன்று கூட ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற ஜபத்தை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது, அவர்கள் உச்சரிப்பில் ஒரு வித்தியாசம் தெரிகிறது...

மும்பா தேவி என்று சொல்லை கூட சொல்ல முடியாமல் தவிக்கும் வெளிநாட்டவர்கள், "பாம்பே" என்று உலறினார்கள்...

பாரத நாடு என்று சொல்ல இயலாமல், சிந்து என்ற நதியை வைத்தே பாரத மக்களை அடையாளப்படுத்தி, அதையும் ஹிந்து, ஹிண்டு, இந்து என்றும் உளறி கொட்டினர்.
br />
1000 வருடங்கள் இவர்களிடம் சிக்கி, 1947ல் விடுபட்ட போது, மகா உளறல்காரர்களான பிரிட்டிஷ் நாட்டினர், இண்டியா என்று அவர்களாக நமக்கு ஒரு பெயர் வைத்து, பாரத நாட்டில் சிந்து பகுதியை, பாக்கி இடம் (பாகிஸ்தான்) என்று பெயர் கொடுத்து, கையெழுத்து போட்டு விட்டு தன் ஊருக்கு சென்றனர்.

உண்மையான பெயர் என்ன என்று தெரிந்த பின்னும், இப்பொழுது இருக்கும் பெயர் அர்த்தமில்லாத பெயர் என்றும் தெரிந்தும், அறிவுள்ள மனித சமுதாயம் அதை மாற்ற யோசிக்குமா? யோசிக்காதா?

பாம்பே என்ற அர்த்தமில்லாத பெயரை மாற்றி, மீண்டும் மும்பை என்று மாற்றினார்கள்.
இது போல பல அர்த்தமில்லாத பெயர்களை மாற்றி அதன் உண்மையான பெயர்களுக்கு மாற்றி உள்ளனர் அறிவு உள்ள நம் பாரதமக்கள்.

1000 வருடங்கள் உள்ளே நுழைந்த வெளி நாட்டினர்களுக்கு, உச்சரிப்பு பிரச்சனையால், ஊர் பெயர்களை மட்டுமல்ல, பாரதம் என்ற பெயரையே இண்டியா என்று மாற்றி விட்டனர் என்று பார்க்கிறோம்.

5000 வருடங்கள் முன் குடி பெயர்ந்த யாதவர்கள் ஊட்டிய கிருஷ்ண பக்தி யவன தேசங்களில் நிலைத்தாலும், கிருஷ்ண என்ற சொல் வெளிநாட்டவர்களால் கிறிஸ்து ஆகி இருக்கலாம். பெயர்கள் உருமாறி இருக்கலாம்.

பாரத மக்கள், ஒரிஜினல் எது? ஒரிஜினல் யார்? என்று புரிந்து கொள்ளும் போது, போலிகளை ஒதுக்கி, அர்த்தமில்லாத பெயர்களை மாற்றுவதில் தயங்குவதில்லை.

அதே போல,
யாதவ கூட்டம் யவன தேசங்களுக்கு சென்று வாழ்ந்த போது, என்றோ ஒரு காலத்தில் யூத குலம் என்று பெயர் மருவி இருக்கலாம்.

அங்கு 'கிறிஸ்து'  என்ற ஒரு நல்ல பிள்ளை, "கிருஷ்ணரே கதி" என்று வாழ்ந்து இருக்கலாம்.

இங்கு காந்தியை மகான் என்று, ஆஞ்சநேயர் போன்ற உத்தமமான பக்தர்களை கூட வழிபடும் பழக்கம் உண்டு..
இது போலவே,
யாதவ என்ற யூத குலத்தில் பிறந்த கிறிஸ்து என்ற மகானை தெய்வமாக கும்பிடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆர்வத்தால், கிருஷ்ணர் கதையை கொஞ்சம் இவர் சரித்திரத்தில் சேர்த்து இருக்கலாம்.

பக்தியின் காரணத்தால், தான் வணங்கும் குருவின் சரித்திரத்தில் தெய்வங்களின் சரித்திரத்தை பொருத்தி பார்ப்பது கூட உண்டு.

இதில் மறைக்கப்பட்ட உண்மை எதுவென்றால், "பரம பிதாவே" என்று ஏசு அழைக்கும் தெய்வம், அவர் அப்பா இவரை கூட்டிக்கொண்டு எந்த இறைவனை வணங்கினார்? எந்த கோவிலுக்கு போனார்? போன்றவை மறைக்கப்பட்டது தான். ரோமானியர்களுக்கு பயந்து அன்று மறைக்கப்பட்டு இருக்கலாம்.

யூத குலத்தில் பிறந்த மகான் ஏசு வழிபட்ட அந்த பரம பிதா கிருஷ்ணரே என்ற உண்மையை உணர்வது, உணர்த்துவது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையும் கூட..

பரம பிதாவின் ராஜ்யம் உலகெங்கும் பரவும் என்று ஏசு சொல்கிறார்...
இன்று இஸ்கான் போன்ற அமைப்புகளால் அது நிரூபணம் ஆகிறது என்று பார்க்கிறோம்..

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க யாதவர்கள்...
வாழ்க யது குலம்...
வாழ்க வெளிநாட்டில் சென்று வாழ்ந்த பெயர் மாறி போன யூத குலம்...
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


ஸ்ரீ கிருஷ்ணர் சரித்திரத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் படிக்க வேண்டும்.
ஏசுவின் பிரியமான புத்தகம் பகவத் கீதையாக தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரை இகழ்வது, ஏசுவுக்கு கட்டாயம் ஏற்பு உடையதாக இருக்காது..
பரம பிதா ஸ்ரீ கிருஷ்ணரை, ஏசும் எவரையும் ஏசு ஏற்க வாய்ப்பு இல்லை.

பாரத மண்ணில் பிறக்க கட்டாயம் ஏசு ஆசைப்பட்டு இருப்பார்.

சாய்பாபா என்ற மகாத்மாவை வணங்கும் ஹிந்துக்களுக்கு, கிருஸ்து என்ற கிருஷ்ண பக்தரை வணங்க தயக்கம் இருக்காது..
ஆனால் அவர் வணங்கிய பரம பிதாவை ஏசினால், ஏசுவும் கை விடுவார் என்றே புரிகிறது...

தவறான உச்சரிப்பில் உருவான தெய்வங்களை வணங்காமல், ஸ்ரீ கிருஷ்ணரையே அனைவரும் வணங்குவோம்.

இஸ்கானில் உள்ள வெளிநாட்டவர்கள் கிருஷ்ணரை கிஸினா என்று உச்சரிக்கிறார்கள். 1000 வருடங்கள் கழித்து, வெளிநாடுகளில் இவர்கள் வழிபாடு பிடித்து, எங்கள் தெய்வம் கிஸினா என்று சொல்லி கொண்டு அலைந்தால் எப்படி இருக்கும்? பொய்யான பெயர்களை களைவோம். கிருஷ்ணா என்ற உண்மையான பரமாத்மாவை பற்றிக்கொள்வோம்.

வாழ்க யூதர்கள்.  வாழ்க வெளிநாடுகளில் வாழ்ந்த, வாழும் கிருஷ்ண பக்தர்கள்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்...