Followers

Search Here...

Monday 2 March 2020

பாசுரம் (அர்த்தம்) - ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை - திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளுடன், திருநின்றவூர் பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.




இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள் 
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.




திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.

பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான்  எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.




இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார்.
"நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.

இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

வெயிலில் வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக இருக்குமோ!  அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.

வெயிலில் வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம் அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல் (தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.

திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
திருநின்றவூர் பக்தஜீவனன்  (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.


Saturday 29 February 2020

செல்வம் யாருக்கு நிலைக்கிறது? செல்வத்தை எதற்காக நமக்கு இறைவன் கொடுக்கிறார்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? தெரிந்து கொள்வோமே....

தனபாலன் என்ற ஒருவன், வியாபாரம் செய்து கொண்டு இருந்தான்.

உலகத்தில் உள்ள கருமிகளை (கஞ்சன்) எல்லாம் கணக்கு எடுத்து வரிசைப்படுத்தினால், இவன் "முதலாவதாக" வருவானாம்.
உலக மகா கஞ்சன்..
தன் வியாபாரம் மூலம் நிறைய செல்வம் சேர்த்து வைத்து இருந்தான்.
ஆனால்,
தப்பித்தவறி கூட, சொப்பனத்தில் கூட, தானம் செய்து விட மாட்டான்.

யாருக்காவது, தன் கையால் ஏதாவது கொடுத்து விட்டதாக சொப்பனத்தில் கனவு கண்டால் கூட, மறுநாள் தன் மனைவியை கூப்பிட்டு 
"இன்று உபவாசம்..." என்று சொல்லிவிடுவானாம்.




அவன் மனைவி "இன்று ஏகாதசி இல்லையே!!.. நீங்கள் ஏன் இன்று உபவாசம் இருக்க வேண்டும்?"  என்று கேட்டால்,
"இல்லை.. நேற்று ஒருவர் இங்கு வந்து சாப்பிட்டு போய் விட்டார்... 
அதற்கான கணக்கு சரி செய்ய இன்று உபவாசம் இருக்க வேண்டும்" என்று சொல்வானாம்.

"எனக்கு தெரியாமல் இங்கு யாரும் சாப்பிட முடியாதே!!... நான் தானே இங்கு யார் வந்தாலும் சாப்பாடு போட்டு ஆக வேண்டும்..." என்று கேட்க,

"அடி போடி... நீதானே சாதம் போட்டாய்!!" என்று இவன் சொல்ல,

"நான் சத்தியமாக யாருக்கும் சாதம் போடவில்லையே" என்று இவள் சொல்ல,

"சொப்பனத்தில் சாதம் போட்டாயே!!" 
என்று சொல்லி, மறுநாள் முழுக்க ஜலம் கூட குடிக்காமல் உபவாசம் இருப்பானாம் இந்த தனபாலன்.

இப்படி 'கருத்தாக' குடும்பம் நடத்தி வந்தான் தனபாலன்.

சந்யாசிக்கு கூட வராத ஒரு விரக்தி,
லோபிகளுக்கு (கருமிகளுக்கு) வந்து விடுமாம்.
சந்யாசிகள் கூட, சிற்சில சமயம் "இன்னிக்கு அடை பலகாரம் செய்கிறாயா?" என்று கேட்டு விடுவார்களாம்.
ஆனால்,
இந்த லோபிகள், தப்பித்தவறி  கூட, தன் சொந்த வீட்டில் "டிபன் செய்கிறாயா?" என்று கேட்டுவிட மாட்டார்களாம்.

லோபிகளுக்கு தன் வீட்டில் மட்டும் இந்த விரக்தி இருக்குமாம்.. அடுத்தவன் வீட்டில் மூக்கு பிடிக்க சாப்பிடுவார்களாம்.

தன் வீட்டில், "வெறும் ரசம் சாதம் போதுமே" என்று இருப்பார்களாம்.

"துணியை சலவைகாரனிடம் கொடுக்கிறாயே!!.. காசு கொடுத்து சோப் வாங்குகிறாயே?... 
நமக்கு கை எதற்கு இருக்கிறது?.. கசக்கி கட்டி கொள்ளலாமே!" என்று இந்த கருமி சொல்வானாம்.

இப்படி கையாலேயே கசக்கி கட்டும் இந்த கருமிகளின் வேஷ்டி அழுக்கு சேர்ந்து காவி போல தெரியுமாம்...

சந்நியாசி உடுத்தும் காவி உடையும்,
கருமி உடுத்தும் காவி ஏறிய துணியும்
பார்ப்பதற்கு ஒன்று போல தெரியுமாம்.

ஞானத்தால் சந்யாசிகளுக்கு ஏற்படும் விரக்தி,
கருமிகளுக்கு சுலபமாக ஏற்பட்டு விடுமாம்.

கருமிகள் தாங்கள் சேர்க்கும் 'பொருளை' கொண்டு

  • 'அறமும்' (தர்மம்) செய்வதில்லை...
  • அறம் மீறாத 'இன்பமும்' அனுபவிப்பதில்லை...

ஒரு சமயம் இவன் வியாபாரம் நஷ்டமாகி போக, வியாபாரத்துக்காக வாங்கிய கடனை கொடுக்க மனமில்லாமல், ஏமாற்ற நினைத்தான்.


தன் சொத்தை காப்பாற்ற தன் மனைவி, மக்கள், உறவுக்காரர்கள் பெயரில் சொத்தை பிரித்து கொடுத்து விட்டான்.

கடன் கொடுத்தவர்கள், இவனிடம் சொத்து இல்லாமல் இருக்க, அடித்து நொறுக்கி விட்டார்கள்..

கருமித்தனமாக இவனுடன் வாழ்ந்த இவன் மனைவியும், மக்களும் தன் இஷ்டத்துக்கு செலவு செய்தனர்... இவனை உதாசீனப்படுத்தினர்..

உறவுக்காரர்கள், இந்த கருமியிடம் மீண்டும் முகத்தை காட்டவே பிரியப்படவில்லை.

கருமியாக வாழ்ந்த தனபாலன், ஏழை ஆனான். மதிப்பு இழந்து போனான்.

செல்வம் அனைவருக்குமே கிடைக்கிறது...
ஆனால் நிலைப்பதில்லை...

சிலருக்கு செல்வம் இருக்கும்... சம்பாதித்தவனுக்கு நோய் வந்து விடும் அல்லது உயிர் போய் விடும்..
அல்லது
இவன் இருப்பான்.. கண் எதிரே சம்பாதித்த செல்வங்கள் தொலைந்து விடும்...

இப்படிப்பட்ட 'கருமிகளிடம்' மஹாலக்ஷ்மி நிரந்தரமாக தங்க  விரும்பமாட்டாள்...
கோடி பணம் சேர்த்தாலும், பசித்தால் பணத்தை வாயில் போட்டு கொள்ள முடியுமா?...






பணம் முக்கியம் தான். ஆனால், பணத்தை (பொருள்) நமக்கு பகவான் எதற்காக கிடைக்க செய்கிறார்? 
என்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

"தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்" என்று நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்படுகிறது...
இதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.
வள்ளுவர் "அறம் பொருள் இன்பம்" என்ற 3 புருஷார்த்தங்களை பற்றி மட்டும் சொல்வதற்கே 1330 குறள் எழுதினார்..
'மோக்ஷம் என்ற வீடு, அறம் செய்வதால் கிடைக்கும்' என்று
"அறம் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை"
என்று மோக்ஷத்தை பற்றி சொல்கிறார்.

"அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" 

'எழுத்துக்களில் அ என்ற முதல் எழுத்தாகவும் நானே இருக்கிறேன்'
என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
ஆதிமூலமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரை
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்று வணங்கிவிட்டு,
அறம் பொருள் இன்பத்தை பற்றி பாடல் இயற்றுகிறார், வள்ளுவர்.

உலகில் "பொருள்" தானே முக்கியமாக இருக்கிறது!!

பொருளுக்கு(பணத்திற்கு) 'முதல் இடம்' கொடுத்து, 
"பொருள், இன்பம், அறம்" என்று மாற்றி சொல்லி இருக்கலாமே?
மாறாக,
"அறம் பொருள் இன்பம்" என்று பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' ஏன் வைத்து சொன்னார்கள்? 

இதற்கு காரணம் உண்டு.

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • 'அறம்' செய்! (தர்மம் செய்)..

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • தர்மத்துக்கு விரோதமில்லாத 'இன்பத்துக்கும்' செலவு செய்து கொள்!

என்று காட்டவே, பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

நம்மிடம் பொருள் இருந்தால், "தர்மத்தை செய்யலாம்!"
நம்மிடம் பொருள் இருந்தால்,
"தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தையும் அனுபவிக்கலாம்!" 
இதன் காரணத்தால்,
பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

"அறம், பொருள், இன்பம்" என்று இந்த வரிசையில் ஏன் சொன்னார்கள்? என்பதும் இப்போது நமக்கு புரிந்து இருக்கும்.

பொருளை வைத்து 'அறமும் செய்யலாம், இன்பத்தையும் அனுபவிக்கலாம்'

இந்த இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

பொருளை கொண்டு, எதில் அதிகமாக செலவு செய்ய வேண்டும்? 
அறத்துக்கா? இன்பத்துக்கா?




"அறத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்பதற்காக, அறத்தை முதலில் வைத்தார்கள்.

'அறம், பொருள், இன்பம்' என்று சொல்லும் போதே,
உனக்கு கிடைக்கும் பொருளை கொண்டு, முதலில் அறம் (தர்மம்) செய்!
மிச்சப்பட்ட பொருளை கொண்டு, தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தை அனுபவித்து கொள்! 
என்கிறது..

இப்படி நமக்கு கிடைக்கும் பொருளை கொண்டு ஒரு பங்கையாவது அறம் (தர்மம்) செய்து, மீதியை அறம் மீறாத இன்பத்துக்கு (உணவு, உடை, இடம்...) செலவு செய்தோமானால், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்..

லக்ஷ்மியின் கணவரான நாராயணனை நம் இஷ்ட தெய்வமாக கொண்டு, திருப்பதி, ஸ்ரீ ரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் நம்மால் முடிந்த பொருள் சேவை செய்தால், கோவில் திருப்பணிகள் செய்தால், லக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்...

ஹிந்து தர்மத்தில் "ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு" என்று தெரிகிறது...

ஹிந்துவாக பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும்.
பாரத மண்ணில் பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும். 

போலி மதங்களில் வீழாமல் இருக்க, ஹிந்து தர்மத்தை அறிந்து கொள்ள வேண்டும்... 
அனைவரையும் அறிவு பெற செய்து, ஹிந்தவாக ஆக்க வேண்டும்.


வாழ்க ஹிந்து தர்மம்...