Followers

Search Here...

Saturday, 15 March 2025

சூத்திர பெண் யாரை மணக்கலாம்? வியாச மஹாபாரதம் அறிவோம்

சூத்திர பெண் யாரை மணக்கலாம்? வியாச மஹாபாரதம்

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், பல தர்மங்களை யுதிஷ்டிரருக்கு சொன்னார்.


அப்படி சொல்லும் போது, வர்ண கலப்பு எப்பொழுது ஏற்படும் என்று சொல்கிறார்.


भार्याश्चतस्रो राजेन्द्र ब्राह्मणस्य स्वधर्मतः।

ब्राह्मणी क्षत्रिया वैश्या शूद्रा च भरतर्षभ।।

அரசனே! ப்ராம்மண பெண்கள், க்ஷத்ரிய பெண்கள், வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் ஆசைப்பட்டால் பிராம்மண பையனை மணந்து கொள்ளலாம்.


இன்றைய காலப்படி, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பெண்கள், க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளிபெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் பிராம்மண பையனை மணந்து கொள்ளலாம்


राज्ञां तु क्षत्रिया वैश्या शूद्रा च भरतर्षभ।

वैश्यस्य वैश्या विहिता शूद्रा च भरतर्षभ।।

க்ஷத்ரிய பெண்கள், வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் விரும்பினால் க்ஷத்ரிய பையனை மணந்து கொள்ளலாம்.

வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் விரும்பினால் வைஸ்ய பையனை மணந்து கொள்ளலாம்


இன்றைய காலப்படி, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் க்ஷத்ரிய பையனை மணந்து கொள்ளலாம்.

இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் வைஸ்ய பையனை மணந்து கொள்ளலாம்


शूद्रस्यैका स्मृता भार्या प्रतिलोमे तु सङ्करः।

शूद्रायास्तु नरश्रेष्ठ चत्वारः पतयः स्मृताः।।

சூத்திர பெண்கள் விரும்பினால் சூத்திர பையனை மணந்து கொள்ளலாம்.

மேல் வர்ணத்து பெண், கீழ் வர்ணத்திலுள்ள பையனை மணந்து கொண்டால், ஜாதி கலப்பு உண்டாகி விடும்.

சூத்திர பெண், நான்கு வர்ணத்தில் உள்ள எந்த ஆணையும் மணந்து கொள்ளலாம். 


இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளிப்பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் ஆண் பையனை மணந்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் கலப்பு ஜாதியை உருவாக்கி விடுவார்கள்.


वर्णोत्तमायास्तु पतिः सवर्णस्त्वेक एव सः।

द्वौ क्षत्रियाया विहितौ ब्राह्मणः क्षत्रियस्तथा।।

பிறக்கும் பிள்ளைகள் குணக்கலப்போடு பிறக்காமல், தெளிவான குணத்தோடு இருக்க, பெண்கள் தங்கள் வர்ணத்தில் இருக்கும் ஆண் பிள்ளையை மணந்து கொள்வதே சிறந்தது. அதாவது, பிராம்மண வர்ணத்தில் உள்ள பெண், பிராம்மண வர்ண பையனை மட்டுமே மணந்து கொள்வதால் குணம் கலந்த பிள்ளைகள் பிறக்க மாட்டார்கள்.


க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ள பெண், அந்த க்ஷத்ரிய வர்ண பையனையோ, பிராம்மண வர்ண பையனையோ மணந்து கொள்ளலாம்.


இன்றைய காலப்படி, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பெண்கள், அதே போன்ற பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனை மணந்து கொள்ளலாம்.


இன்றைய காலப்படி, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், அதே போன்ற க்ஷத்ரிய வர்ண தொழில் செய்யும் பையனையோ, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனையோ மணந்து கொள்ளலாம்.


वैश्यायास्तु नरश्रेष्ठ विहिताः पतयस्त्रयः।

सवर्णः क्षत्रियश्चैव ब्राह्मणश्च विशाम्पते।।

வைசிய வர்ணத்தில் உள்ள பெண், அந்த வைசிய வர்ண பையனையோ, க்ஷத்ரிய வர்ண பையனையோ, பிராம்மண வர்ண பையனையோ மணந்து கொள்ளலாம்


இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், அதே போன்ற வைஸ்ய வர்ண தொழில் செய்யும் பையனையோ, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பையனையோ, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனையோ மணந்து கொள்ளலாம்.


இவ்வாறு பீஷ்மர் பெண்கள் யார் யாரை மணக்கலாம்? என்று விவரித்தார்.


அனுசாசன பர்வம் 53

Saturday, 1 March 2025

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - திருக்குறள் 1

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - திருக்குறள் 1

மனிதா! எப்படி எழுத்துக்களுக்கு எல்லாம் "அ" என்ற அகரம் அடிப்படையாக இருக்கிறதோ, அதுபோல நீ வாழும் உலகத்திற்கு அந்த ஆதியான முதல் பகவான் இருக்கிறார். அவரே உன் படைப்பிற்கு காரணம். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மனிதா! தூய அறிவுவடிவாக இருக்கும் அந்த இறைவனுடைய திருவடிகளை தொழாமல் நீ இருந்தால், நீ கற்ற கல்வியினால் உனக்கு என்ன பயன் கிடைக்க போகிறது? ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்


மனிதா! கவிழ்ந்த தாமரை மலர் போன்ற உன் நெஞ்சினில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை நீ இடைவிடாமல் நினைத்து வாழ்ந்தால், உனக்கு மோக்ஷமும், அனைத்து இன்பங்களும் கிடைத்து விடுமே. ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்


மனிதா! உலகையும் உன்னையும் படைத்த இறைவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை. அந்த இறைவனின் திருவடிகளை நீ எப்பொழுதும் நினைத்து கொண்டிருந்தால், எப்போதும் எவ்விடத்திலும் உனக்கு துன்பம் இல்லை. இது நிச்சயம். ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


மனிதா! நீ இறைவனிடம் உண்மையாக அன்பை, விரும்பி செலுத்தினால், நீ அறியாமல் செய்த பாவ புண்ணியங்கள் கூட கழிக்கப்பட்டு, உன்னை பாதிக்காமல் இருக்கும். இது நிச்சயம். ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மனிதா!  தோல், வாய், கண், மூக்கு, செவி. இந்த ஐந்தின் மூலம் ஏற்படும் உணர்வுகளை நீ அடக்கி, இறைவன் எதிர்பார்க்கும் தூய்மையான ஒழுக்கநெறியில் நீ நின்றால், உனக்கு நிலையான நல்வாழ்வு கிடைக்குமே. ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


மனிதா! அறிவு, ஆற்றல், குணம்.. இந்த மூன்றிலும் ஒப்பில்லாத இறைவனின் பாதங்களை நீ இடைவிடாது சிந்தித்தால், நீ மனக்கவலை சிறிதும் இன்றி வாழலாம். இறைவனின் திருவடியை நினைக்காமல் வாழ்ந்தால், உன் மனக்கவலை கூட உன்னை விட்டு எளிதில் நீங்காதே! ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது


மனிதா! தர்மம், அதாவ்து அறமே வடிவமாக விளங்கும் இறைவனின் திருவடியை நீ நினைக்காமல் போனால், நீ கடல் போன்ற பொருள் சேர்ப்பதிலும், இன்பத்தை தேடுவதிலுமே காலத்தை கடத்தி, இந்த கடல் போன்ற துன்ப கடலை கடக்க முடியாமல் தவிப்பாய்.  ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது



மனிதா! மதிக்கத்தக்க குணங்களையுடைய பகவானின் திருவடியை வணங்காதவன் தலையில், கண் இருந்தும் குருடனே, காது இருந்தும் செவிடனே. புலன்கள் இருந்தும் அது பயனற்றவையே. ஆதிபகவானின் திருவடியை வணங்கு. இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை


மனிதா! பகவானுடைய திருவடியை நீ பற்றினால் மட்டுமே, மறுபிறப்பு என்ற பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. ஆதிபகவானின் திருவடியை வணங்கு. இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


சமஸ்கிருதம் தர்மம், அர்த்தம், காமம் என்று சொல்கிறது.

அதையே, தமிழில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறோம்..


திருவள்ளுவர் இங்கு இறைவனை வணங்குவது நம் அறம், நம் தர்மம் என்று சொல்கிறார். 


அதிகாரம் 1, கடவுள் வாழ்த்து.