Followers

Search Here...

Thursday 13 April 2017

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம். Genesis

ஆபிரகாம் தன்னிடம் எத்தனை விசுவாசமாக இருக்கிறார்?
என்று பார்க்க, ஒரு சமயம், "கடவுள்" அவர் மகனையே உயிர் பலி கொடுக்க கேட்டார்.

கடவுளின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காமல், தன் மகன் தலையை வெட்ட துணிந்ததால், கடவுளின் விசுவாசத்துக்கு பாத்திரமானார் ஆபிரகாம்.




ஆபிரகாம் மகனுக்கு பதில், ஒரு ஆடு பலியாகுமாறு கடவுள் செய்தார். இவர் "தீர்க்கதரிசி" என்று கடவுளால் போற்றப்பட்டார்.

இந்த தியாகத்தை (குர்பானி) நினைவு கூறும் விதமாக இந்த ஒரு நாளில் மட்டும், வருடா வருடம் உலகத்தில், சுமார் 20 மில்லியன் ஆடு, மாடுகள், ஒட்டகம் கொல்லப்பட்டு,  கொண்டாடப்படுவதே பக்ர் ஈத்.
இது தியாகத்தின் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே !!

ஆப்ராம் என்ற ஆபிரகாம், யூத (Judaism) மத போதகர் என்பதை நாம் அறிந்ததே !!
இவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 

இவர் ஊர் (Ur) என்னும் ஊரில் பிறந்தார்.
இது இப்போது ஈராக் தேசத்தில், அரேபியாவில் உள்ளது.
ஏசுவுக்கு, நபிக்கு முன் 2000 வருடம் முன் இருந்தவர் ஆப்ராம்.

யூத மதத்திற்கு பின்பு பிரிந்து, உருவான மதம் கிறிஸ்துவம்.
அதன் பின் உருவான மதம், இஸ்லாம். இதுவும் நாம் அறிந்ததே !!

ஆதலால், 'ஆபிரகாம்' இந்த மூன்று உருவான மதங்களிலும் போற்றப்படுகிறார். இவர் ஒரு தீர்க்கதரிசி.

ஆபிரகாமின் தந்தை பெயர் "தேராகு" (Terah).

"தேராகு"வுக்கு (Terah) மூன்று மகன்கள் :
1. "ஆபிரகாம்" (Abram)
2. "ஆரான்" (Haran) மற்றும்
3. "நாகோர்" (Nahor).

"தேராகு"வுக்கு (Terah) மற்றொரு மனைவி மூலம் ஒரு மகள் :
4. "சாரா" (Sarah or Sarai)

"ஆரான்" (Haran), தன் தந்தை "தேராகு"(Terah) இருக்கும் போதே, ஊர் (Ur), ஈராக்கில் இறந்து விட்டான். (genesis 11:28).

"ஆரான்" (Haran) இறக்கும் போது, இவனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

"ஆரான்"னின் (Haran) 2 மகள்கள்:
1. "மில்கா" (Milcah)
2. "இஸ்கா" (Iscah)

நாகோர், தன் சகோதரன் 'ஆரான்" மகள் "மில்கா"வை மணந்தான். (genesis 11:29).
மில்கா தன் சித்தப்பாவை ("நாகோர்" Nahor) மணந்தாள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் தன் தந்தை "தேராகு"க்கும் (Terah), இன்னொரு தாய்க்கு பிறந்த "சாரா"வை மணந்தார்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயதோடு ஒப்பிடும் போது, "சாரா" வயதில் மிக சிறியவள். மிக அழகானாவள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்.
ஒரு சமயம்,
ஆபிரகாம், சாராவுடன் (சகோதரி முறை+ மனைவி முறை) கடவுளின் ஆணைப்படி, தங்கள் நாட்டில் இருந்து கிளம்பி, ஒரு ஊரை அடைந்தனர்.
எந்த ஊர்?

இரண்டு இடங்கள் இங்கு குறிப்பிடப்படுகிறது.
எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

* ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தான். (genesis 12:10). இந்த ஊரின் அரசன் "பார்வோன்" (Pharaoh).
Or
* ஆபிரகாம், சாராவுடன் இஸ்ரேல்
தேசத்தை அடைந்து, கேராரில் (gerar) தங்கினான். (genesis 20:1).
இந்த ஊரின் அரசன் "அபிமெலே" (Abimelech).

"தீர்க்கதரிசி" ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தார் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்.
இந்த சமயம், "தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயது 75.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் சாராவை பார்த்து இவ்வாறு சொன்னார்,
"சாரா, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று நான் அறிவேன். எகிப்தியர் உன்னை கண்டால், நான் உனக்கு கணவன் (75yr முதியவன்) என்று  தெரிந்தால் என்னை கொன்று போட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆகையால், உன்னால் நான் உயிர் பிழைக்க யாரும் கேட்டால் 'நான் இவர் சகோதரி' என்று சொல்"
என்றார்.

எகிப்தியர்கள், தன் தலைவர் பார்வோன் (Pharaoh/Abimelech) முன் கொண்டு சென்றனர்.
பார்வோன் (Pharaoh) 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமிடம் "இவள் யார்?" என்று கேட்டார்.
'தீர்க்கதரிசி' ஆப்ரகாம் "இவள் என் சகோதரி" என்றார்.




அவளும் "ஆப்ரகாம் தன் சகோதரர்" என்று சம்மதிக்க, இவள் அழகின் காரணமாக இவளை தன் அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.

சகோதரியை தனக்கு தந்த உத்தமர் 'தீர்க்கதரிசி ஆப்ரகாமுக்கு பரிசாக - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் கொடுத்தான் பார்வோன் (Pharaoh).

ஆனால் அந்த இரவு, கடவுள், பார்வோன் (Pharaoh) கனவில் வந்து,
"நீ சாக வேண்டியவன். நீ எந்த பெண்ணை உன் அரண்மனையில் வைத்து உள்ளாயோ, அவள் மணமானவள்"
என்றார்.

பார்வோன் (Pharaoh) நிதானமாக கடவுளை பார்த்து
"நீ இப்படி தான் அப்பாவிகளை தண்டிப்பாயோ!!"
என்றார்.

மேலும் தொடர்ந்தான் பார்வோன் (Pharaoh),
"ஆப்ரகாம் தன் வாயாலேயே 'இவள் என் சகோதரி' என்றான். அவளும் 'ஆப்ரகாம் என் சகோதரன்' என்றாள். 
இப்படி இருக்க, இவளை என் அரண்மனைக்கு அழைத்து வந்த போது என் மனம் தவறு செய்ததாக சொல்லவில்லை. 
நான் குற்றம் செய்யாதவனே " 
என்றான்.

கடவுள்,
"எனக்கு தெரியும் நீ பாவம் செய்யவில்லை என்று. 
அதனால் தான் நீ இது வரை அவளை தொட்டு விடாதவாறு தடுத்து உள்ளேன். இவளை அவன் கணவனிடம் திருப்பி கொடுத்து வி்டு. 
அவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 
அவர் நீ செய்த இந்த காரியத்துக்கு உன் சார்பில்  மன்னிப்பு கேட்டு, உன் பாவத்திலிருந்து காப்பார். 
ஒரு வேளை நீ அவளை கொடுக்கவில்லை என்றால், நீயும், உன்னோடு உள்ள அனைவரும் இறந்து விடுவீர்கள்" 
என்று சொல்லி மறைந்தார்.

அடுத்த நாள் காலை, பார்வோன் (Pharaoh/Abimelech), 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமை அழைத்து
"என்ன காரியம் நீ எங்களுக்கு செய்து இருக்கிறாய்? இவள் உன் மனைவி என்று சொன்னால் என்ன? என்ன தவறு உனக்கு செய்தோம் என்று, இப்படி ஒரு தவறான செயலை நாங்கள் செய்ய தூண்டினாய்? 
உன்னுடைய நோக்கம் என்ன?"
என்று கேட்டான்.

'தீர்க்கதரிசி' ஆபிரகாம், பார்வோனை (Pharaoh) பார்த்து,
"உங்கள் நாட்டில், யாருக்குமே இறைவனை கண்டு பயமிருக்காது என்று நினைத்தேன். 
அதனால் என் மனைவியின் காரணமாக, என்னை கொன்றுவிடுவீர்கள் என்ற உயிர் பயத்தில் இப்படி சொன்னேன்" 
என்றார்.

மேலும் தொடர்ந்து தீர்க்கதரிசி "ஆபிரகாம்" இவ்வாறு பேசலானார், "உண்மையில் இவள் எனக்கு சகோதரி முறையும் தான். என் தந்தைக்கு இவள் மகள், ஆனால் வேறு தாய்க்கு பிறந்தவள். 
எனக்கு மனைவியும் தான். 
நான் தான் அவளிடம் யார் கேட்டாலும் என் சகோதரன் இவர் என்று சொல்ல சொன்னேன்" 
என்றார்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" பேச்சை கேட்ட, பார்வோன் (Pharaoh/Abimelech), இவருக்கு பரிசாக கொடுத்த - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் அனைத்தையும் திரும்ப பெற்றான்.

இவன் மனைவி & சகோதரி "சாரா"வை "தீர்க்கதரிசி" ஆபிரகாமிடம் திருப்பி கொடுத்தான்.

பார்வோன் (Pharaoh/Abimelech) சாராவை பார்த்து, "உன் சகோதரனுக்கு நான் ஆயிரம் வெள்ளி காசு தருகிறேன். இதை கொண்டு நீங்கள் வாழுங்கள்" என்றான்.




பார்வோன் (Pharaoh/Abimelech) தீர்க்கதரிசி ஆபிரகாமை பார்த்து,
"இதோ என் நாடு, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம்" என்றான்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" வென்றார்.

திருவாசகம், ஆத்திச்சூடி போன்ற நூல்களில் கூட காண முடியாத தத்துவங்கள், இந்த நிகழ்ச்சியில் உள்ளது.

https://www.sefaria.org/Genesis.21?lang=bi

தெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ? காரணம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள்?



ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ?
உலகையே படைத்த தெய்வம் ஸ்ரீமந் நாராயணன், பூமியில் அவதாரங்கள் செய்தார்.
சிவன், அவதாரம் என்று செய்யாவிட்டாலும், திருவிளையாடல் என்று அவ்வப்போது பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஸ்ரீமந் நாராயணன், தன் ராம அவதாரத்தை போல ஒரு அவதாரம் ரஷ்யாவிலோ, ஜப்பானிலோ செய்து இருக்கலாமே ?

அப்படி என்ன இந்த உலகை படைத்த தெய்வத்துக்கு, இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை பிரியம்?

இவருக்கு மட்டுமில்லை, இவரால் படைக்கப்பட்ட தேவர்களுக்கு கூட மனிதனாக பிறக்கும் படி சாபமோ, அல்லது தனக்கே ஆசை வந்தால் கூட இந்த பாரத மண்ணில் மட்டும் பிறக்க ஆசை ஆசைப்படுகின்றனர். ஏன்?
இந்திரனின் அம்சமான "அர்ஜுனன்",
சூரியனின் அம்சமான "கர்ணன்",
8 வசுக்களில் ஒருவர் அம்சமான "பீஷ்மர்",
எம தர்மன் அம்சமான "விதுரர்",
தர்ம தேவன் அம்சமான "யுதிஷ்டிரர்",
கலி புருஷன் அம்சமான "துரியோதனன்".
இப்படி அனைவரும் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே கால் பதிக்க விரும்புகின்றனர்?

ஒரு அவதாரம் அமெரிக்காவில் செய்தால் தான் என்ன ?


மனிதனுக்கு எந்த இடம் குளிர்ச்சியாக இருக்குமோ, செல்வம் அதிகமாக இருக்குமோ? அங்கு சென்று வாழ ஆசை வரும்.

மனிதர்களுக்கு மேல், சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் - தேவர்கள்.
தேவர்களுக்கு மேல் ஜன மற்றும் தப லோகத்தில் இருப்பவர்கள் - ரிஷிகள்.
ரிஷிகளுக்கு மேல் சத்ய லோகத்தில் இருப்பவர் - ப்ரம்மா.

அனைவரையும் படைத்து உலகை தன் ஆளுமையில் நடத்துபவர் ஸ்ரீமந் நாராயணன். இவர் இருப்பதோ வைகுண்டம் என்ற பரமபதம்.

மனிதர்களுக்கு சில இடங்கள் ஒரு சில காரணங்களால் பிடிப்பது போல, நம்மை விட உயர்ந்த இவர்களுக்கு, சில காரணங்களினால் "பாரத மண்ணில்" மட்டுமே விருப்பம் உள்ளது.

பல காரணங்கள், அதில் ஒரு சில :
1. பதிவ்ரதைகள் (கற்புக்கு மதிப்பு கொடுக்கும் பெண்கள், கற்புள்ள பெண்கள்) இந்த பாரத மண்ணில் தான் பிறக்கின்றனர்.
இங்கு பிறக்கும் பெண்களுக்கே இந்த உணர்வு அதிகம் உள்ளது.
பாரத நாட்டில் பிறந்த ஒரு குடும்பம் பிற நாட்டில் குடி பெயர்ந்தால், ஒரு சில தலைமுறையில் அங்கு பிறப்பதாலேயே இந்த உணர்வை இழந்து காணப்படுகின்றனர்.



2. இறை நம்பிக்கையோடு தான் இந்த பாரத மண்ணில் அனைவரும் பிறக்கிறார்கள்.
நாத்தீகனுக்கும் இந்த இறை உணர்வு அதிகம் இருப்பதாலேயே எங்கே கடவுள்? காட்டு என்று புலம்புகிறான்.
இறைவன் உண்டு, ஆனால் உணர முடியவில்லையே என்று புலம்புபவனே "நாத்தீகன்".
இந்த கடவுள் இல்லை என்கிற வெறுப்பு உள்ள நாத்தீகன் கூட மற்ற நாட்டில் இல்லை.
கடவுள் உண்டா? என்று கேள்வி கேட்பவனே நாத்தீகன்.
அந்த உணர்வு கூட இல்லாதவர்களே மற்ற நாட்டில் பிறக்கின்றனர்.

நாத்தீகன் என்ன தான் குட்டிகரணம் அடித்து "கடவுள் இல்லை" என்று முயற்சி செய்தாலும், இந்த பாரத மண்ணில் பிறப்பவர்களின் இறை உணர்வை அழிக்க முடியவில்லை.
போதாக்குறைக்கு, நாதீகனுக்கு பிறக்கும் குழந்தையே இறை நம்பிக்கையோடு பிறந்து இவன் நாத்தீகத்திற்கு வெடி வைக்கிறது.

3. "கோவிலுக்கு வழிபாடு செய்ய வா", "புனித நூல் என்று நாங்கள் சொல்லும் இந்த புத்தகத்தை படி", "கேள்வி கேட்காதே" என்று அடிக்காத குறையாக வற்புறுத்துகிறது உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.

இந்த மதங்கள் உருவான நாட்டில், யாருக்கும் இறை சிந்தனை இயற்கையாக இல்லை.
"இறைவன் இருக்கிறான்" என்று புலம்பாத குறையாக சொல்லி சொல்லி நம்ப வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், இந்த பாரத மண்ணில் பிறந்த ஒரு ஹிந்து, தவறி போய், கர்ம வினையால் இந்த பொய் மதத்தில் போய் சேர்ந்தால் கூட, இவன் அந்த தெய்வத்துக்கு செய்யும் வழிபாடு, நம்பிக்கை, ஈடுபாட்டை பார்த்தால், இந்த பொய் மதங்கள் உருவான இடத்தில் இருப்பவர்களையே ஆச்சர்யப்படுத்துகிறது.

"நம்மிடம் கூட இந்த ஈடுபாடு இல்லை, இவன் செய்யும் வழிபாடு நம்மையே விழுங்கி விடும் போல இருக்கிறதே" என்று வியக்கின்றனர்.
இதற்கு காரணம் அந்த பொய் மதங்கள் அல்ல.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன் என்பதாலேயே, அவன் உள்ளே இருக்கும் இறை உணர்வு, அது பொய் மதமாக இருந்தாலும் மிளிர்வது போல காட்டுகிறது.

பாரத மண்ணில் பிறந்த காரணத்திற்காகவே, இந்த இறை நம்பிக்கை இவனை தொத்திக்கொண்டு இருக்கிறது.


4. இறை உணர்வுடனேயே இங்கு பிறப்பவர்கள் அனைவரும் இருப்பதால், ஏழை முதல் பணக்காரன் வரை, கோவிலுக்கு செல்லாமலேயே, பகவத் கீதையோ, திருவாசகமோ படிக்காமல் இருந்தாலும்,
  • ஒழுக்கம் மீறி நடந்தால் தவறு, 
  • பொய் பேச கூடாது, 
  • மற்றவர் பொருள் மீது ஆசை கூடாது, 

என்று யாரும் சொல்லாமலேயே பொறாமை படாமல், அமைதியாக, இருப்பதை கொண்டு வாழ்கின்றனர்.

மற்ற நாட்டிலோ, ஏழையாக இருப்பவன், பணக்காரனை சமயம் கிடைத்தால் சுட்டு கொன்று விட கூட தயங்குவதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்த ஏழை, பணக்காரன் பக்கத்து நிலத்தில் பங்களா கட்டி இருந்தாலும், பொறாமை படுவதில்லை. 
மாறாக, "இவன் புண்ணியம் செய்து இருப்பான் போன ஜென்மத்தில்" என்று மற்றவர்க்கு சமாதானம் செய்வான்.
பாவம் செய்து பணம் சேர்த்தால் குடும்பத்தில் என்ன ஆபத்து வருமோ, அதனால் பாவ பணத்தை விட, ஏழையாக இருப்பதே மேல் என்று கூட சொல்லுவான் இந்த பாரத மண்ணில் பிறந்தவன்.

5. மற்ற நாட்டில் பிறந்தவன், எதை கண்டாலும் அதில் இறைவன் இருப்பதை உணர்வதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன், உப்பு தண்ணீர், ஆற்று தண்ணீர் என்று சொல்லாமல், இதற்கு ஆதாரமான தேவதைகளை மனதில் நிறுத்தி, கங்கை, யமுனை, காவேரி என்று இந்த நீர் நமக்கு கிடைக்க காரணமான தேவதைகளுக்கு மரியாதை செய்கிறான்.
இயற்கையை தெய்வ படைப்பாக பார்த்த இவன், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.

6. மற்ற நாடுகளில் தேடி பார்த்தால் மட்டுமே ஒரு மகான் கிடைப்பார். அதுவும் சந்தேகமே !.
இங்கோ,
காந்தி பிறந்தார். இவர் மட்டும் தானா? என்றால் ஊருக்கு ஒரு மகான். நன்றாக கவனித்தால் நம் தாத்தா, பாட்டி, மூதாதையர்கள் கூட மகான்களாக இறை உணர்வுடன் வாழ்ந்தனர் என்று தெரிய வரும்.
இந்த பாரத மண்ணின் விஷேஷமே இதற்கு காரணம்.

7. இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு, எதை கற்றுக்கொண்டாலும், அதன் மூலமாக இறைவனுக்கு தொண்டு செய்ய முடியுமா? என்று தோன்றும்.

சிற்பத்தில் திறன் உள்ளவன்,
கட்டிடங்கள் கட்டும் திறன் உள்ளவன்,
அரசன் உள்பட அனைவரும் இதே உணர்வுடன் தான் இருந்தனர்.
அரசர்கள் கட்டியுள்ள கோவில்களும், அதன் கட்டிட அமைப்பும், அதில் உள்ள சிற்பங்களும் போதுமான சான்று.
இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு இறை உணர்வுடன் தான் எந்த வேலையும் நடக்கும்.

8. இந்த பாரத தேசம் மற்ற சில நாட்டை விட பரப்பளவில் சிறியது.
ஆனாலும், இங்கு பிறந்த காரணத்தினாலேயே இவர்கள் அறிவாளிகளாக பிறக்கின்றனர். 

அத்தனை பெரிய பெரிய நாடுகளில், பேசும் மொழியோ "ஒன்று" அல்லது "இரண்டு". இவர்கள் அறிவு இவ்வளவு தான்.



ஆனால் இந்த பாரத மண்ணிலோ,
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள். 
பல வித நாகரீக உடைகள். 
மொழிகள் என்றால் வெறும் காட்டுமிராண்டி பாஷை இல்லை. இலக்கணம் பொருந்திய மொழிகள்.
இலக்கணத்தோடு மொழியை ஒரு மடையன் உருவாக்க முடியுமா?

இதை விட ஆச்சர்யம்,
பூமியில் வாழும் நாம், பூமிக்கும் மேல் உள்ள புவர் என்ற நக்ஷத்திர லோகம் தாண்டி, சொர்க்க லோகம், ஜன, தப, சத்ய லோகத்தில் பேசப்படும் சமஸ்க்ருதத்தை கண்டுபிடித்து அதன் பொருளையும் அறிந்து, அதன் மூலமாக
  • ப்ரம்மா யார்? 
  • முழு முதற் கடவுளான அந்த ஸ்ரீமந் நாராயணன் யார்? 
  • தேவர்கள் யார்? 
  • நாம் யார்? 
  • ஏன் பிறந்தோம்? 
  • நம் கடமை என்ன? 

என்று பல கேள்விகளுக்கு விடையை கண்டுபிடித்து, அதை அந்த அந்த ஊரில் பிறந்த மகான்கள், தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில், தெலுங்கில் காவியங்கள் போன்றும், கீர்த்தனைகள் போன்றும் தந்தனர் என்று பார்க்கிறோம்.

இந்த எந்த வித ஆச்சர்யங்களும் இல்லாது, தன் வயிற்றை நிறைக்கும் வழி என்ன? என்று மட்டுமே பார்க்கும் மனிதர்களே பொதுவாக பிற நாட்டில் பிறக்கின்றனர்.

இப்படி பல காரணங்களினால், தேவர்கள், பாரத மண்ணையே விரும்புகின்றனர்.
நாராயணன் தன் அம்சமாக இந்த உலகத்தில் அவதாரம் செய்ய நினைத்தால் கூட, இந்த பாரத மண்ணில் பிறக்கவே ஆசைப்படுகிறார்.

இறை உணர்வு அதிகம் உள்ளவர்கள் பிறப்பதாலேயே, தேவர்கள் முதல் நாராயணன் வரை இவர்கள் அவதாரம் இந்த பாரத மண்ணிலேயே நடக்கிறது.

மற்ற நாடுகளில், மூலைக்கு மூலை இறை உணர்வு இல்லாது, உலகத்தில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்ற சுயநல உணர்வுடன் பிறக்கின்றனர்.

இந்த பாரத மண்ணில் மட்டும் தான், மூலைக்கு மூலை மகான்கள் பிறக்கின்றனர்.
கடல் போன்ற மகான்கள் கூட்டத்தில், ஒரு சில துளி மகான்கள் பெயர்கள் இப்போது நம் நினைவில் செலுத்தலாம்.
  • காஞ்சி மகா பெரியவர், 
  • காந்தி, 
  • பாரதியார், 
  • விவேகானந்தர், 
  • ராமகிருஷ்ணர், 
  • தியாகராஜர், 
  • விஜய தாசர், 
  • பத்ராச்சல ராமதாசர், 
  • ஸ்ரீ ராகவேந்திரர், 
  • துக்காராம், 
  • ஸமர்த்த ராமதாசர், 
  • துளசி தாசர், 
  • கனக தாசர், 
  • புரந்தர தாசர், 
  • சுரதாசர், 
  • கபீர் தாசர், 
  • ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், 
  • வல்லபாச்சாரியார், 
  • மணவாள மாமுனிகள், 
  • நரசிம்ஹ மேதா, 
  • நாம தேவர், 
  • மத்வாச்சாரியார், 
  • ஜயதேவர், 
  • ஸ்ரீ ராமானுஜர், 
  • நாதமுனி, 
  • ஆதி சங்கரர்,
  • நாயன்மார்கள், 
  • ஆழ்வார்கள்..... 
  • வள்ளுவர்
  • வள்ளலார்
  • திருமூலர்
  • சித்தர்கள்




இன்னும் கோடி மகான்கள் இந்த பாரத மண்ணில் உதித்தவர்கள்.

இந்த மண்ணில் பிறக்க தேவர்களும் ஆசைபடும் காரணம் புரிந்தால், இந்த மண்ணில் நாம் புழுவாகவோ, நரியாகவோ, பிறக்காமல், குருடனாகவோ, நொண்டியாகவோ பிறந்து விடாமல்,
அதற்கும் மேல், பாரத மண்ணில் பொய் மத குடும்பத்தில் பிறக்காமல், ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, பிறந்த இடமோ, வாழும் ஊரோ திவ்ய க்ஷேத்திரமாகவும் இருந்து இருந்தால், நாம் செய்த புண்ணியம் தானாகவே நமக்கே புரியும்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம்.
பாரத மண்ணில் ஹிந்துவாய் பிறப்பது தேவர்களே பொறாமைப்பட வைக்கும் மகா புண்ணியம்.



Sandhyavandanam Afternoon tamil - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Evening tamil - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning tamil - Hear and understand meaning of each sloka

Tuesday 21 March 2017

உத்தராயணம் தஷிணாயனம் - 12 மாதங்கள் பற்றிய விளக்கம். தெரிந்து கொள்வோமே !






மகா பாரத போரில், பீஷ்மர் வீழ்ந்தார்.
மகா பாரத போர் நடந்த சமயம் "தஷிணாயன" காலம்.
தான் விரும்பிய பொழுது சாகும் வரத்தை பெற்றவர் பீஷ்மர்.
"உத்தராயண" காலம் வரும் வரை, அம்பு படுக்கையில், யுத்த களத்திலேயே உயிரை விடாமல் யோகத்தில் இருந்தார்.
நம் பூமியில் ஒரு வருடம் என்பது, சொர்க்கலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு "ஒரு நாள்".

இது அனைவருக்கும் தெரிந்ததே.
இதுவரை தெரியாது என்றால், இப்பொழுது தெரிந்திருக்கும்.

பாரத் தேசத்தின் காலப்படி, தேவர்களின் கால நேரம் எப்படி உள்ளது? ஒரு அலசல்.

உத்தராயணம் :

  • தை (சொர்க்கலோகத்தில் 6AM-8AM), 
  • மாசி (சொர்க்கலோகத்தில் 8AM-10AM), 
  • பங்குனி (சொர்க்கலோகத்தில் 10AM-12 Noon), 
  • சித்திரை (சொர்க்கலோகத்தில் 12 Noon-2PM), 
  • வைகாசி (சொர்க்கலோகத்தில் 2PM-4PM), 
  • ஆனி (சொர்க்கலோகத்தில் 4PM-6PM), 

ஆகிய ஆறு மாதங்களும் "உத்தராயண" காலமாகும்.

தேவர்களுடைய ஒரு பகல் பொழுது "உத்தராயண" காலமாகும்.

உத்தராயண காலத்தில் தை மாதத்தில் நாம் பொங்கல் வைத்து சூரியனை வணங்குவது இப்பொழுது ஏன்?
என்று இப்போது புரிந்திருக்கும்.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், சொர்க்கத்தில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

சித்திரை வெயில் கொளுத்துவது ஏன்?
என்று கேள்விக்கும் இதை வைத்து அனுமானிக்கலாம்.
தேவ லோகத்தில், நடு பகல் 12 மணியில் ஆரம்பிக்கிறது சித்திரை மாதம்.

பூமிக்கு மேலே உள்ள சொர்க்கத்தில் தேவர்களும்,
அவர்களுக்கும் மேல் உள்ள மஹ, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளும்,
அதற்கும் மேல் உள்ள சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவும் 
"உத்தராயண" காலத்தில் விழித்து இருப்பார்கள்.

இதன் காரணமாக, பீஷ்மர் "உத்தராயண" காலம் வரும் வரை காத்திருந்து, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "விஷ்ணு சஹஸ்ரநாமம்" முதன் முதலில் சொல்லி, பின் தன் உடலை குருக்ஷேத்ர மண்ணில் விட்டு விண்ணுலகம் சென்றார்.

தை மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "மகா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
"தை மாதம்" தேவர்களுக்கு, சொர்க்கலோகத்தில் 6AM to 8AM என்று அனுமானிக்கலாம்.

மாசி மாதக் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் "சிவராத்திரி" உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
மாசி மாதம் தேவர்களுக்கு 8AM to 10AM என்று அனுமானிக்கலாம்.

பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "வசந்த நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.
இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் "ஸ்ரீ ராம நவமி" என்று பூமியில் கொண்டாடுகின்றோம்.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.

ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் ஒன்பது நாட்கள் "ஆஷாட நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம் தேவர்களுக்கு 4PM to 6PM என்று அனுமானிக்கலாம்.


தஷிணாயனம் :

  • ஆடி (சொர்க்கலோகத்தில் 6PM-8PM தேவர்கள் வழிபடும் காலம்), 
  • ஆவணி (சொர்க்கலோகத்தில் 8PM-10PM), 
  • புரட்டாசி (சொர்க்கலோகத்தில் 10PM-12AM),
  • ஐப்பசி (சொர்க்கலோகத்தில் 12AM-2AM),
  • கார்த்திகை (சொர்க்கலோகத்தில் 2AM-4AM),
  • மார்கழி (சொர்க்கலோகத்தில் 4AM-6AM தேவர்கள் வழிபடும் காலம்), 
ஆகிய ஆறு மாதங்களும் "தஷிணாயனம்" காலமாகும்.
இந்தக் காலம் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.

தேவர்களுக்கு இது இரவு பொழுது என்பதால், அவர்களுக்கு மேல் உள்ள துர்க்கை, சிவ, விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்கி நம்மை காத்துக்கொள்ள வேண்டிய காலம் இது.

அனைத்து தெய்வங்களுக்கும் மேல், முழு முதற் கடவுளான பெருமாளை வணங்குவது நம்மை காத்துக் கொள்ள சரியான வழி.

பொதுவாக,
மனிதர்கள் இறை வழிபாடு செய்ய வேண்டிய காலம் இது.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

தேவர்களுடைய காலப்படி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
இதே சமயத்தில், பூமியில் ஆடி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இதே சமயத்தில் தேவர்களோடு, சிவ விஷ்ணு வழிபாடு செய்கின்றனர்.

இதே போல,
தேவர்களுடைய காலப்படி,
விடி காலை 4 மணி முதல் 6 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
தேவர்களுக்கு இது ப்ரம்ம முகூர்த்தம். தியானமும், விரதமும், தெய்வ வழிபாடும் செய்ய ஏற்ற காலம்.
இதே சமயத்தில்,
பூமியில் மார்கழி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இந்த மாதத்தில் தெய்வங்களை வழிபடுகின்றனர். பெருமாளுக்கு உகந்த மாதம் "மார்கழி".

ஆவணி மாத அமாவாசைக்குப் பின் நான்காவது நாள் வரும் சுக்ல பட்ச சதுர்த்தி நாடெங்கும் "விநாயக சதுர்த்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானின் செல்ல குழந்தை விநாயகரை மனிதர்கள் வழிபடுகின்றனர்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.
ஸ்ரீ மகாவிஷ்ணு, ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
இந்நாள் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

மகாவிஷ்ணு, ஆவணி திருவோணத்தில் ஸ்ரீ வாமனராக அவதாரம் எடுத்து மகாபலி என்ற அரக்க அரசனின் ஆணவத்தை அடக்கிய நாளே " ஓணம் " பண்டிகை ஆகும்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்கள் "சாரதா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் தொடங்கிப் பத்து நாட்கள் "துர்கா பூஜை" பூமியில் கொண்டாடப்படுகின்றது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

காரணம் இல்லாமல் எந்த ஒரு பண்டிகையும், எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்காதது நம் தர்மம்.

இந்த ஸனாதன மதத்தில் இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் உண்டோ !! என்று எண்ணத்தோன்றுகிறது.

மனிதனுடைய காலத்தை மட்டுமில்லாது,
  • தேவர்கள் காலம் என்ன? 
  • பிரம்மாவின் இன்றைய வயது என்ன? 
  • இன்னும் எத்தனை காலம் உள்ளது? 
என்று  பதில் சொல்லிக்கொண்டே பறந்து விரிந்து செல்கிறது நம் தர்மம்.


5000 வருடத்திற்கு முன்,
  • மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக இருந்தனர் என்று உளறி, 
  • 2012ல் உலகம் அழியும், 
  • இதோ வந்து விட்டார், அதோ பாருங்கள் 
என்று ஊரை ஏமாற்றாமல்,
  • பிறவிக்கு என்ன காரணம்?
  • துன்பத்திற்கு என்ன காரணம்?
  • உலகத்தின் வயது என்ன?
  • உலகம் என்ன ஆகும்?
என்று அடுக்கிக் கொண்டே போகும் கேள்விகள் அனைத்துக்கும் நம் சனாதன தர்மம் பதில் சொல்கிறது.

சரியான கேள்வியை, சரியான பெரியோர்களிடம் கேட்டாலே, சனாதன தர்மத்தின் மகத்துவம் புரியும்.

நாம் இந்த தர்மம் உள்ள குடும்பத்தில் பிறந்து இருக்கிறோமே என்று நம்மையே பார்த்து மெச்சிக் கொள்ள தோன்றும்.

சோமாலியாவிலோ, சீனாவிலோ, அமெரிக்காவிலோ இந்த சனாதன தர்மம் தெரியாத குடும்பத்தில் பிறந்து இருந்தால்...
  • நம் மூதாதையர்கள் மடையர்கள் எனவும், ஆடை அணியாது அலைந்த ஆதாம் ஏவாள் என்றும்,
  • மறு பிறவி இல்லை அதனால் எதுவும் செய்யலாம் என்றும்,
  • பிறப்பிலேயே ஏழையாக, குறையோடு பிறந்ததற்கு கடவுளை காரணம் காட்டியும்,
  • தினமும் தின்றோம், தூங்கினோம், ஏதோ ஒரு கடவுள் இருக்கிறார் என்று நம்பி, கடைசியில் செத்தோம்
என்று வாழ்க்கை வீணாகியிருக்கும்.

நல்ல வேளையாக, நாம் முன் ஜென்மங்களில் செய்த பல நல்ல காரியங்களால்...
  • மனித பிறவியும் கிடைத்து,
  • இந்தியாவில் பிறக்கவும் செய்து,
  • ஹிந்துவாகவும் பிறக்க செய்து, 
  • அறிவும் கொடுத்து,
  • கேள்விகள் எழ செய்து, அதற்கு சரியான பெரியோர்களையும் காட்டி தெளிவு படுத்தி,
இன்னும் நம்மை உயர்த்தி கொண்டே போக, ஹிந்துவாக பிறந்தோம்.

சனாதன தர்மம் என்றும் நிலைத்து இருக்கும்.

ஹிந்துவாய் பிறந்ததே பல கோடி புண்ணியத்தின் பலன் என்று நமக்கு புரிந்து விடும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

Wednesday 8 March 2017

Goa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த 463 வருட வரலாறு - Vasco da gama, Portuguese in INDIA (1498AD to 1961AD)

500 வருடங்கள் முன் நடந்த வரலாறு :  
நம் பாரத கலாச்சாரத்தை கெடுக்க, செல்வங்கள் கொள்ளையடிக்க பட, மதம் மாற்றப்பட, Portuguese, Dutch, France, Britain நாட்டில் இருந்து வந்த கிறிஸ்துவர்களுக்கு, நாம் கொடுத்த காலம் ஓரிரு வருடங்கள் இல்லை. 1498ல் முதல் 1961 வரை (சுமார் 463 வருடங்கள்).




இஸ்லாமிய மத மாற்றம், கோவில் இடிப்பு, ஹிந்துக்கள் கொலை எல்லாம் இந்தியாவில் பெரும்பாலும் தெலுங்கு தேசம் வரை பரவியது.
இன்றும் இஸ்லாமிய பெரும்பான்மை வடக்கில் பெங்கால், ஹைதிராபாத், போன்ற மாநிலங்களில் நாம் காணலாம்.
மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதம் மாறி 1000 வருடங்களாக இருந்த முஸ்லீம்கள், தனி நாடு வேண்டும் என்று கேட்டு பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற உருவாக்கப்பட்ட தேசங்களில் குடி புகுந்தனர்.
இது நடக்காமல் இருந்து இருந்தால், இன்று, ஒரு ஹிந்து இந்தியாவில் இருந்து இருக்க முடியாது.

அதே சமயம், பாரத தேசத்தை கவனித்தால், கோவா முதல், விசாகப்பட்டினம் வரை கடற் கரை ஓரம் முழுவதும், கிறிஸ்த்துவ மதம் பரவி உள்ளது.

ஒரு பக்கம், இந்தியாவை இஸ்லாமிய மதம் 1000 வருடங்களாக தாக்கி கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், இந்த கிறிஸ்துவ கூட்டம் உள்ளே நுழைந்து விட்டது.

இந்த இரண்டு மதமும் பெரும் முயற்சி செய்தும், இன்றும் இந்தியாவில் ஹிந்துக்கள் இருக்கிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம் தான் சொல்ல முடியும்.
மற்ற மதங்கள் மனிதர்களால் காக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது.
ஹிந்து தர்மத்தை தெய்வமே காக்கிறது. வளர்க்கிறது.  

தெய்வம் இந்த சமயத்தில் பாரத தேசத்தில் எத்தனை மகான்களை அவதரிக்க செய்தார் என்று பார்க்கிறோம்.
தானே கிருஷ்ணா சைதன்யராகவும், ஸ்ரீ ராம கிருஷ்ணராகவும் அவதரித்தார்.

சென்னையில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டு, பின் 
விஜயநகர ராஜ்யத்தின் கீழ் இருந்த துலு அரசர்கள் மீண்டும் இப்போது இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலை 2km கடலை தாண்டி ஊருக்கு உள்ளே, ஆகம விதிப்படி மீண்டும் கட்டினர்.
இந்த கோவிலே இன்று நாம் காணும் கபாலீஸ்வரர் கோவில்.

அந்நிய மதக்காரர்கள், ஹிந்து கோவிலில் உள்ளே நுழைந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு கபாலீஸ்வரர் கோவில் சான்று போதாதா?

எப்படி இந்த கிறிஸ்துவ கூட்டம் பாரத தேசத்தில் புகுந்தது?  தெரிந்து கொள்ள வேண்டாமா?
வாஸ்கோட காமா (Vascoda Gama) எப்படிப்பட்டவன் ? தெரிந்து கொள்வோமே 

பொறுமையுடன் படித்தால், வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவுக்கு செல்கிறேன் என்று செவ் இந்தியர்கள் இருந்த அமெரிக்காவில் 1492ம் (AD or CE) ஆண்டு கால் அடி எடுத்து வைத்தான் கொலம்பஸ் என்ற இத்தாலி நாட்டவன்.

மதத்தை பரப்பும் நோக்கத்திலேயே, இவர்கள் எதையும் செய்வதால், இவர்கள் அமெரிக்காவில் செய்தது மனித படுகொலை.
அடுத்தவன் வீட்டில் சென்று கொலை செய்து, அவன் வீட்டிலேயே உட்கார்ந்து நியாயம் பேச முடியுமா? இவர்களிடம் அந்த நியாயத்தை தெரிந்து கொள்ளலாம்.

இவர்கள் செய்த அட்டகாசத்தின் வினை, இப்போது இந்த அமெரிக்க நாடே இந்த புதிய கலாச்சாரம், புதிய மதத்தால் படர்ந்து இருக்கிறது.
தன் மதமே இப்படி புகுத்தப்பட்டது தான் என்றாலும், இப்பொழுது இஸ்லாம் போன்ற பிற மதங்கள் இங்கு வேரூன்றுவது இவர்களுக்கு பொறுக்கவில்லை. என்ன அநியாயம்?

அடுத்தவன் நோவு தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வது இவர்களுக்கு பொருந்துகிறது. ஐரோப்பிய தேசங்கள், அமெரிக்கா போன்ற தேசங்கள் இஸ்லாம் தேசமாக ஆக போவது நிச்சயமே.

இது ஒரு புறம் இருக்க, 8 வருடம் கழித்து, இதே ஸமயத்தில், வியாபாரம், மத மாற்றம் என்ற நோக்கில் 1498ம் (AD or CE) ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியாக, இந்திய பெருங்கடலை கடந்து கோழிக்கோடு (Calicut), கேரளா கடற்கரை ஓரம் படகில் வந்தான் வாஸ்கோட காமா (Vasco da gama).

கடல் ஓர மீனவர்கள், நாகரீகம் கொண்டு விரட்டி அடிக்காமல், இவர்களை உள்ளே வர அனுமதித்தனர்.
மிலேச்ச தேசத்தவன் உள்ளே நுழைந்தால் என்னென்ன கலாச்சார சீரழி செய்வான் என்பதை இந்த வாஸ்கோட காமா கதை சொல்லிவிடும்.

தன் மதத்தை பரப்ப, நம் கலாச்சாரத்தை கெடுக்க இவர்களுக்கு நாம் கொடுத்த காலம் 1498ல் முதல் 1961 வரை (சுமார் 463 வருடங்கள்).

இன்று, இவர்கள் நாட்டை விட்டு போனாலும், இவர்களால் தன் மதத்தை, கலாச்சாரத்தை விட்டு வாழும் ஹிந்துக்கள் (convert) இன்று நாட்டை சீரழிக்கும் காட்சி நடக்கிறது.

வரலாற்றை படிப்பதால், குறைந்த பட்சம், இந்த போர்ச்சுகல் நாட்டினர் என்ன செய்தனர்? நாம் இழந்தது என்ன?  நம் வீட்டில் இருந்து கொண்டு நமக்கு என்ன செய்தனர்? என்பது விளங்கும்.

இந்த கோழிக்கோடு (Calicut) என்ற கேரளா நாட்டை ஆண்டு வந்தான் ஒரு ஹிந்து அரசன்.
சமுத்திர கரை ஓரத்தில் இருந்தவர்கள் பொதுவாக இந்த அரசனை "சமுத்திரி" என்று அழைத்து இருக்கின்றனர். இவர் ஒரு நாயர் குல அரசர்.

தமிழோ, சமஸ்க்ரிதமோ, மலையாளமோ எதுவும் வாயில் நுழையாத போர்ச்சுகல் வியாபாரிகள் "சமுத்திரி" என்று உச்சரிக்க தெரியாமல் "Zamorin" என்று அழைத்தனர்.
திருச்சிரார்பள்ளியை trichy என்றனர்.

தமிழில் பேச முயற்சி செய்த இவர்களால், தமிழும் இவர்களால் கெட்டது.
பலமானவர்கள் என்று சொல்ல தெரியாமல் "பெலமானவர்கள்" என்றனர். தமிழ் மொழிக்கு வந்த கேடு.




இந்த உண்மை ஒரு புறம் இருக்க, வணிகம் செய்ய  கோழிக்கோடு (Calicut) நாட்டில் போர்ச்சுகல் நாட்டினர் நுழைந்து உள்ளனர் என்று கேள்விப்பட்டு, சமுத்திரி அரசன் இவர்களை பார்க்க வந்தார்.
வந்தாரை வாழ வைக்கும் புத்தி இந்தியர்களுக்கே உள்ள குணம். 
இதுவே பல நேரம் நமக்கு இன்னல் தந்துள்ளது.

அரசருக்கு, இவர்கள் வருகை தவறாக தெரியவில்லை. வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார் அரசன்.
ஏலக்காய், மிளகு, இன்னும் பல இந்திய உணவு தானியங்கள் ஐரோப்பிய தேசம் பார்த்திராத உணவு பொருட்கள்.

இதை போன்ற விலை மதிப்புள்ள, மருத்துவ குணம் உள்ள பொருட்களை இந்தியர்களிடம் வாங்கிக் கொண்டு, துணி, தொப்பி, சக்கரை, தேன் போன்ற பொருட்களை பண்டை மாற்று முறைப்படி தந்தான் வாஸ்கோட காமா.
மதிப்பில்லாத இந்த பொருட்களை ஏற்று கொள்ள மறுத்தார் அரசர்.

அனைத்து வாணிகமும் தங்கம், வெள்ளியிலேயே பொருட்களுக்கு மாற்றும் வழக்கம் இருந்தது.

சமுத்திரி அரசன், போர்ச்சுகல் நாட்டினர் தங்கள் நாட்டு உணவு பொருட்களை எடுத்து கொண்டு தொப்பி, துணி போன்றவை மாற்றப்படுவதை மறுத்தார்.
தங்கம், வெள்ளியாக கொடுத்தால், வாணிகம் தொடரலாம் என்று உத்தரவு இட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிழைப்புக்கு வந்த நாட்டில்,  வாஸ்கோட காமா கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டான்.
இவன் செய்த செயல் இவன் எப்பேற்பட்டவன் என்று காட்டுகிறது.
வாஸ்கோட காமா கப்பலில் ஏற்றப்பட்ட தானிய மூட்டைகளுடன், அங்கிருந்த சில நாயர்களையும், 16 மீனவர்களையும் வலுக்கட்டாயமாக சிறைபிடித்து,  பொருட்களுடன் திருடி கொண்டு தப்பித்து விட்டான்.

இவன் அள்ளிக்கொண்டு போன பொருட்கள் பெரும் லாபத்தை அந்த ஊரின் போர்ச்சுகல் அரசனுக்கு ஈட்டு தந்தது.
மீண்டும் இந்த தானியங்கள் இந்தியாவிலிருந்து கிடைக்க எப்படியாவது ஒரு உடன்படிக்கை ஏற்பட்டாக வேண்டும் என்று போர்ச்சுகல் அரசன் முடிவு செய்தான்.

மீண்டும் வாஸ்கோடகாமாவை அனுப்பினால், இவன் செய்த செயலுக்கு வாணிகமும் தடைபடும், உயிரும் போகும் என்பதால், போர்ச்சுகல் அரசன் "பெட்ரோ காப்ரல்" என்ற ஒருவன் தலைமையில் "எப்படியாவது கோழிக்கோடு (Calicult) சென்று சமுத்திரி அரசனை சமாதானம் செய்து, தொடர்ந்து வாணிகம் செய்ய அனுமதிக்க வைக்க வேண்டும்" என்று கூறி அனுப்பி வைத்தான்.

ஆச்சர்யம், ஹிந்து அரசன் நடந்ததை மறந்து, தொடர்ந்து வாணிகம் செய்து கொள்ள அனுமதித்தான்.
அதர்மம் செய்தவனை இந்த ஹிந்து அரசன் மன்னித்ததன் படு பயங்கர விளைவை அடுத்த 500 வருடங்களுக்கு ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கு தந்தது. இதுவே நமக்கு பாடம்.

மீண்டும் வாணிகம் செய்து கொண்டிருந்த இவர்கள், கோழிக்கோடு மட்டுமில்லாது, கொச்சின் (Cochin now Kochi), கண்ணனூர் (Cannanore (now Kannur)) போன்ற ஊர்களிலும் வாணிகம் செய்வதை விரிவு படுத்தினர்.

கேரளா தேசம் இவர்களால் மதம் மாற்றம் செய்யப்பட ஆரம்பித்த காலம் இது.

இந்த நிலையில், கோழிகோட்டில் வாழ்ந்த அரேபிய இஸ்லாம் வணிகர்களுடன், தகராறில் ஈடுபட்டனர்.
ஹிந்துக்களை போல அடித்தாலும், திருடினாலும் அமைதியாக போகக் கூடியவர்கள் அல்ல அரேபிய இஸ்லாம் வணிகர்கள்.
இஸ்லாம் வணிகர்கள், நடந்த கலவரத்தில் 60 போர்ச்சுகல் வணிகர்களை கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தினால், "பெட்ரோ காப்ரல்", சமுத்திரி அரசன், தங்களை இந்த இஸ்லாமிய கூட்டத்திலிருந்து காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறி, ஆத்திரம் அடைந்து, நாட்டில் பல இடங்களில் குண்டு வைத்தான்.

இப்படி அட்டகாசம் செய்த இந்த போர்ச்சுகல் வணிகன் "பெட்ரோ காப்ரல்" 1501ம் ஆண்டு தன் நாட்டுக்கு திரும்பினான்.

இந்த நிகழ்விலிருந்து கடைசி வரை, போர்ச்சுகல் வணிகர்களுக்கு இதனால் தீராத கோபம் இஸ்லாமியர்கள் மீது கடைசி வரை இருந்தது.

போர்ச்சுகல் நாட்டினர் வாணிகம் தொடர்ந்து கொண்டிருந்த இந்த காலத்தில், விஜயநகர ஹிந்து பேரரசர் "கிருஷ்ணதேவ ராயர்" ஹிந்து தேசங்களான கர்நாடகம், ஆந்திர, தமிழகம் அனைத்தையும் ஒருவனாக இரவு பகலாக காத்துக் கொண்டிருந்தார்.
இவர் சபையில் விகடகவியாக இருந்தவரே "தெனாலி ராமன்".
கிருஷ்ணதேவ ராயரை ஒழிக்க 6 சுல்தான்கள் கடும் முயற்சி செய்து கொண்டிருந்த சவாலான காலம் இது.
* டெல்லியை கைப்பற்றி இருந்த லோதி சுல்தான் "சி்கந்தர் லோதி",
* கர்நாடக நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த பீஜாப்பூர் சுல்தான், பிடார் சுல்தான்,
* ஆந்திர நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த கோல்கொண்டா சுல்தான், பிரார் சுல்தான்,
* மஹாராஷ்டிரா நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த அஹமத்நகர் சுல்தான்.
இந்த சவாலான இஸ்லாமிய எதிர்ப்பை சந்திக்கும் காலத்தில், 1502ம் ஆண்டு, போர்ச்சுகல் வணிகர்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கிறார்கள் என்பதால், இவர்கள் பழுவேற்க்காடு (pulicat) என்ற தமிழ்நாட்டில் உள்ள ஊரில் வர்த்தக புறக்காவல் நிலையம் (trading outpost) அமைக்க முயற்சித்தபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது விஜயநகர சாம்ராஜ்யம்.





இதுவும் ஒரு விஷ பாம்பை கொல்ல, இன்னொரு தேளை வளர்த்தது போல தான் ஆனது.
இதுவும் நாம் வரலாறை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

விஜயநகர அரசின் பாதுகாப்பினால், போர்ச்சுகல்காரர்கள் 1502ல் இருந்து 1560ம் ஆண்டு வரை, சுமார் 58 வருடங்கள் தமிழ்நாட்டில் தன்னை வ்யாபித்துக் கொண்டனர்.

இருந்தாலும், கேரளாவில் உள்ள கோழிக்கோடு மட்டும் போர்ச்சுகல்காரர்களுக்கு காலடி வைக்க முடியாததாகவே இருந்தது.

இதே வருடம், 1502ம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டிலிருந்து மீண்டும் "வாஸ்கோட காமா" 15 கப்பலகள் மற்றும் 800 படை வீரர்களுடன் கோழிக்கோடு (calicult, Kerala) ஹிந்து அரசனை தாக்குவதற்கு அனுப்பப் பட்டான்.

மேலும் வாணிகம் மூலம் இந்த இடத்தில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டு அனுப்பப்பட்டான்.

வரும் வழியில், கப்பலில் மெக்காவிற்கு (Mecca) சென்று கொண்டிருந்த அரேபிய இஸ்லாம் வணிகர்களை கண்டான்.
உடனே தன் படைகளை கொண்டு கடலிலேயே தாக்கி கொன்று, அனைவரையும் கடலில் தூக்கி வீசினான்.

ஹிந்து அரசன் இரு முறை இந்த போர்ச்சுகல்காரர்கள் வந்து நாசம் செய்த போதிலும், நல்ல குணத்தின் காரணமாக மீண்டும் சுமூகமாக உடன்படிக்கைக்கு சம்மதித்தான்.

வாஸ்கோட காமா கோழிகோட்டில் இருக்கும் அனைத்து அரேபிய இஸ்லாமியர்களையும் வெளியேற்ற சொன்னான்.
இதற்கு சமுத்திரி அரசன் "சம்மதிக்க முடியாது" என்று தீர்மானமாக சொல்லி விட்டான்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாஸ்கோட காமா பல இடங்களில் அணுகுண்டு வீசி ஊரை சேதப்படுத்தினான்.
பலர் பலி ஆனார்கள்.
இப்படி அட்டகாசம் மீண்டும் செய்து விட்டு, தன் நாட்டிற்கு 1503ம் ஆண்டு திரும்பினான்.




இவனை மீண்டும் அனுப்பினால் இனி வியாபாரேமே செய்ய முடியாது என்று போர்ச்சுகல் அரசன் முடிவு செய்தான்.
அடுத்த 20 வருடங்களை வாஸ்கோட காமா தனிமையில் கழித்தான்.

1505ம் ஆண்டு, பிரான்சிஸ்கோ அல்மெய்தா என்பவன் 22 கப்பளுடன், 1500 போர் வீரர்களுடன் போர்ச்சுகல் நாட்டிலிருந்து கிளம்பி, கோழிக்கோடு இறங்கினால் போர் அபாயாயம் உள்ளதால், கோவா "Goa" கடல் ஓரம் இறங்கினான்.

வந்து 7 வருடங்கள் ஆன நிலையில், போர்ச்சுகல்காரர்களின் மத சம்பந்தமான வேலைகள் ஆரம்பமானது.
Goaவில் இவன் "Anjediva கோட்டை" கட்டி முடித்தான்.
அதே வருடத்தில் கேரளாவில் உள்ள கண்ணனூரில் இவன் "செயின்ட் St.Angelo" என்ற ஒரு கோட்டையை கட்டினான்.

இவர்கள் கேரள நாட்டில் மேலும் படர்வதை திறம்பட எதிர்த்தான், கோழிக்கோடு சமுத்திரி அரசன்.

இந்த நிலையில், 1508ம் ஆண்டு பிரான்சிஸ்கோ Goaவிலிருந்து குஜராத் வரை தன் வணிகத்தை விஸ்தாரப்படுத்த ஆசைப்பட்டு, குஜராத்தில் இருந்த இஸ்லாமிய சுல்தானை எதிர்த்து போரிட்டு உயிர் இழந்தான்.

1509ம் ஆண்டு "அபோன்சா" (Afonsa) என்பவனை  போர்ச்சுகல் அரசன் அனுப்பினான்.
சமுத்திரி அரசனை இவர்களால் சமாளிக்க முடியாமல் இவர்களின் வாணிகம், தமிழகம் பக்கமும், கோவா பக்கமும் திரும்பியது.

1510ம் ஆண்டு, "அபோன்சா" (Afonsa), விஜயநகர தேசத்தின் "திம்மய்யா" என்ற ஹிந்துவின் துணை கொண்டு, கர்நாடகா தேசத்தின் பீஜாப்பூர் சுல்தான் "யூசுப் அடில் ஷா"வை கொன்றனர்.
இது மிக பெரிய வெற்றியாக கருதப்பட்டது.
விஜயநகர அரசின் மதிப்பை பெற்றனர் உள்ளே புகுந்த போர்ச்சுகல் நாட்டினர்.

இப்படி மதிப்பை பெற்றுக் கொண்ட போர்ச்சுகல் நாட்டினர் தைரியமாக தங்கள் மத வேலைகளை தமிழகத்தில் செயலாக்கினர்.

இதுவும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடமே. திருடன் திருடனே.
1516ம் ஆண்டு, தமிழகத்தில் இவர்களின் மத வேலைகள் ஆரம்பித்தது. இன்றும் கோவில் நகரமாக இருக்கும் மயிலாப்பூரில் "luz church" இந்த காலத்தில் தான் கட்டினார்கள்.

2 ஆண்டுகளில், 1518ம் ஆண்டு மேலும் "st. Thomas fort" கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் கட்டினார்கள்.

இதனை தொடர்ந்து, 4 வருடங்கள் கழித்து, மயிலாப்பூரில் கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, தாமஸ் (Thomas) என்பவரின் சமாதி என்ற பெயரில் "Santhome cathedral" என்ற கட்டிடம் கட்டினார்கள்.
இதற்கு போர்ச்சுகல்காரர்கள் அன்று வைத்த பெயர் "saao tome church".
இது மறுவி santhome ஆனது.
கடல் ஓரத்தில் ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் 7ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்பது வரலாறு.

திருஞான சம்பந்தர் பாடிய "பூம்பாவை" பதிகத்தில் அவர் பாடிய 6வது பாடலில் "கபாலீஸ்வரர் கடல் ஓரத்தில் இருந்ததை" சரியாக குறிப்பிடுகிறார்.
இதேபோல்
அருணகிரிநாதரின் 697வது பாட்டிலும் இது அறியப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் போன்று, தந்தைக்கும் கடற்கரை ஓரம் கோவில் இருந்ததை ஹிந்துக்கள் இழந்தது சோகமே !
ஞான சம்பந்தர் பாடலில்
"மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்  
அடல்ஆனே றூரும் அடிகளடி பரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்று பாடுகிறார்.
அருணகிரிநாதரின் பாடலில் 
"கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" என்று பாடுகிறார்.

கோவிலை இடித்து, கலாச்சார சீரழிவு செய்வது என்பது இந்த வெளி மதங்கள் லட்சியம்.
இது இவர்கள் தவறில்லை.
ஆனால், இப்படி நடந்ததற்கு காரணம், ஆரம்பத்திலேயே இவர்கள் அதர்மம் செய்யும் போது ஹிந்துக்கள் மன்னித்ததே !!

விஜயநகர ராஜ்யத்தின் கீழ் இருந்த துலு அரசர்கள் மீண்டும் இப்போது இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலை 2km கடலை தாண்டி ஊருக்கு உள்ளே, ஆகம விதிப்படி மீண்டும் கட்டினர்.
இந்த கோவிலே இன்று நாம் காணும் கபாலீஸ்வரர் கோவில்.

ஆச்சர்யம் என்னவெனில், கோழிக்கோடு (Calicut) சமுத்திரி அரசன், போர்ச்சுகல் நாட்டினர் பல முறை தவறு செய்தும் வாணிகம் செய்ய அனுமதித்தது போல, விஜயநகர அரசும், சுல்தான்களை எதிர்க்க இந்த போர்ச்சுகல் படை உதவுவதை கருத்தில் கொண்டு, வந்த ஊரில் கலாச்சார சீரழிவு செய்தவனை மன்னித்து, அவர்கள் கட்டிய கட்டிடத்தை இடிக்காமல் விட்டனர்.

இன்று வரை பிற மத த்வேஷம் காட்டாமல் ஹிந்துக்கள் இருக்கின்றனர். போர்ச்சுகல் நாட்டினர் கட்டிய "saao tom church" இன்றும் கடல் கரையில் உள்ளது.
இந்த இரக்கமே, ஹிந்துக்களுக்கு இன்று வரை நல்ல குணமாகவும், பல சமயம் தன் கலாச்சார சீரழிவுக்கும் காரணமாகி இருக்கிறது.
இதுவும் நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இப்படியே இந்திய கடல் ஓரங்களை பலமாக பிடித்து கொண்டிருந்த சமயத்தில், இந்த போர்ச்சுகல் அரசன் மீண்டும் 1524ம் ஆண்டு, ஒதுக்கப்பட்டு இருந்த "வாஸ்கோட காமா"வை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பினான்.

1526ம் ஆண்டு, கோவாவில் (Goa) இருந்து குஜராத் பக்கம் போக முடியாததால், அருகில் இருந்த மங்களூர் (Mangalore), உடுப்பி (Udupi) போன்ற தேசங்களை போர்ச்சுகல் நாட்டினர் கைப்பற்றினர்.

1530ம் ஆண்டு, கேரள தேசத்தை விட இவர்கள் பலம் கோவாவில் (Goa) அதிகம் இருந்ததால், தன் தலைநகரமாக "Goa"வை மாற்றினர்.
1530ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை (431 வருடங்கள்) இவர்கள் இந்த நகரத்தை தன் வசத்தில் வைத்து இருந்தனர்.

இன்று கூட Goa என்றதும் இந்த ஊரை பற்றி ஹிந்துக்களுக்கு ஒரு கீழ் தரமான எண்ணமே உருவாகிறது. 
இதுவே இவர்கள் எப்படிப்பட்ட கலாச்சாரம் கொண்டிருந்தனர் என்பதற்கு சான்று.

1531ம் ஆண்டு, மேலும் கோவா (Goa) அருகில் இருந்த பம்பாய் (Mumbai), டையூ (Diu), டாமன் (Daman) போன்ற நகரங்களையும், குஜராத் சுல்தானிடம் இருந்து கைப்பற்றினர்.

இந்தியாவில் இருந்து எடுத்து சென்ற, பொருட்களை கொண்டு, போர்ச்சுகல் நாடு, அனைத்து ஐரோப்பிய நாடுகளையும், பல வருடங்கள் தன்னை நம்பி வாழ வைத்தது.




இந்த காரணத்தினாலேயே, சுமார் 100 வருடம் கழித்து பிரிட்டிஷ் ராணி "எலிசபெத்", ஜான் கம்பெனி (John Company) என்ற கப்பல் வியாபாரம் செய்யும் கம்பெனியை அழைத்து இந்தியாவுக்கு சென்று இந்த தானிய உணவுகளை நேரடியாக வாங்க அனுமதி தந்தாள்.

இப்படி 1601ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர்கள் தான் "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி" (British East India Company) என்ற "ஜான் கம்பெனி"

இந்த இரு நாட்டினரும் (British, Portuguese) சேர்ந்து, இந்திய கலாச்சாரத்தை அழிக்கவும், தன் மதத்தை புகுத்தவும், ஆதரவு செய்யாத ஹிந்துக்களை எதிர்த்தும், வ.வு,சி முதல் காந்தி வரை ஜெயிலில் தள்ளியும், செல்வத்தையும் தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றும் 1601ம் முதல் 1947ம் ஆண்டு வரை (சுமார் 347 வருடங்கள்) இந்திய கலாச்சார அழிவில் சேர்ந்து ஈடுபட்டனர்.

1612ம் ஆண்டு, "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி" தன் எதிரியான போர்ச்சுகல் நாட்டு வணிகர்களுடன் போர் செய்து, குஜராத் தேசத்தில் உள்ள சூரத் (Surat) நகரை முதலில் கைப்பற்றியது.

போர்ச்சுகல் நாட்டு வணிகர்களை சமாளிக்க, அப்போதைய முகலாய மன்னன் "ஜஹாங்கிர்" (Jahangir) உதவியை சாதுர்யமாக பெற்றனர்.

பெருங்குடிகாரனான "ஜஹாங்கிர்" இவர்கள் கொடுத்த மது பானத்தில் மயங்கினான். இவன் மனைவி "நூர்ஜஹான்" (Noor Jahan) நாட்டை இவன் பெயரில் நிர்வாகித்தாள்.

இப்படி ராஜ தந்திரம் செய்து போர்ச்சுகல் நாட்டினர் தன்னை எதிர்க்க விடாமல் தடுத்தனர்.

1619ம் ஆண்டு, சூரத் (Surat) நகரில், பிரிட்டிஷ் காரர்கள் இப்போது இவர்களின் "எல்லைப்புற காவல் நிலையத்தை" அமைத்தனர்.

முகலாயர்கள் உதவியுடன் பிரிட்டிஷ்காரர்கள் பெங்கால் தேசத்தை (Bengal) கைப்பற்றினர் சில வருடங்களில்.

இன்னும் ஒரு படி மேல் போய், பிரிட்டிஷ் அரசன் "சார்லஸ் II" (Charles II), போர்ச்சுகல் நாட்டின் இளவரசி "catherine" என்பவளை மணந்து, வரதக்ஷனையாக (dowry) பம்பாய் சுற்றி கைப்பற்றிய 7 இடங்களை வாங்கி கொண்டான்.

இந்த இடங்களை, வாடகைக்கு "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி" கொடுத்தான் பிரிட்டிஷ் அரசன் "சார்லஸ் II" (Charles II).

இதனால் "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி"யின் பலம் எளிதாக கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியாவிலும் வேகமாக பரவியது.

இதுவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே. எதிரியான போர்ச்சுகல் நாட்டை தந்திரமாக தன் வழிக்கு கொண்டு வந்து பின் அவர்களையே தன் வழிக்கு கொண்டு வந்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.

இந்த இரு நாடும் சேர்ந்து கொண்ட பின், முதலில் முகலாயர்களை மராத்திய, விஜயநகர ஹிந்துக்களின் துணை கொண்டு முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதற்கு பின், ஹிந்துக்களையும் அடக்க 1857ம் ஆண்டிலிருந்து பல வித முயற்சி செய்தனர்.

இந்த 100 வருட காலங்களில் பல வித முயற்சி செய்து, 2 உலக போரை ஹிட்லரின் காரணமாக சந்தித்து, பல வித காரணங்களின் காரணமாக, இறுதியில் நாட்டை விட்டு வெளியேறினர்.

Goaவில் அப்பொழுதும் அமர்ந்து கொண்டு நாட்டை விட்டு போக மறுத்த போர்ச்சுகல் படையை, இந்திய சுதந்திர நாட்டின் (Independent INDIA) ராணுவம் எளிதாக தோற்கடித்து, 1961ம் ஆண்டு நாட்டை விட்டு போர்ச்சுகல் நாட்டினரை இறுதியாக துரத்தியது.

இவர்கள் சென்றாலும், Goa என்ற நகரம் கலாச்சார சீரழிவில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
இந்த நகரை பற்றிய எண்ணமும் தவறாகவே உள்ளது.
மிலேச்சனை உள்ளே விட்டால், கோவில் நகரம் கூட குடிகார ஊராகும் என்பதற்கு இந்த நகரமே உதாரணம்.

அமெரிக்க நாடு, ஒரு புது மதம் நுழைந்ததனால், அங்கு இருந்த மக்களை அகற்றி, தன் மதத்தை எளிதாக நிலை நிறுத்தி கொண்டது.
அங்கு இருந்த செவ்விந்தியராகள் (Red Indians) என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை, அவரகள் கலாச்சாரம் என்ன என்றும் தெரியவில்லை.

ஆச்சர்யம் என்னவென்றால், இந்தியாவில் 1300 வருடங்களில், நான்கு புது மதங்கள் புகுந்து  (இந்தியாவிலிருந்தே 2, மற்ற நாட்டிலிருந்து 2) முடிந்த அளவு அட்டகாசம் செய்தும், இன்றும் ஸ்ரீனிவாசன், ராதா, சிவா, ராமன் கிருஷ்ணன், கார்த்திக், அஜய், விஜய் என்ற பெயர் நிலைத்து இருப்பதே !

ஹிந்து கலாச்சாரத்தை 1300 வருடங்கள் நம் குடும்பத்து பாட்டனார்கள் தான் நமக்கு காப்பாற்றி தந்துள்ளனர் என்பதை இதில் இருந்து நாம் மறக்கக்கூடாது.

இனி அடுத்த தலைமுறைக்கு இந்த கலாச்சாரத்தை இன்னும் மெருகேற்றி காத்தக் கொடுப்பதே, நம் ஹிந்துக்களின் கடமை.

இதற்கு ஹிந்துக்களாகிய நாம் முதலில்  வரலாற்றையும், இது ஏன்? இது எதற்கு? என்ற கலாச்சார மற்றும் தெய்வ சம்பந்தமான கேள்விகளை சரியான ஆன்மீக அறிவுள்ள பெரியோர்களிடம் கேட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் கலாச்சாரத்தின் அறிவை நாம் விரிவடைய செய்து கொள்ள ஆரம்பிக்கும் போது தான், நாம் நம் தலைமுறைக்கு வழி காட்ட முடியும்.




வரலாற்றை படிக்கும் போது, நாம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான்.
"தவறு செய்தவனை, கலாச்சார சீரழிவு செய்தவனை, மீண்டும் மீண்டும் மன்னித்தது தான்".

மிகவும் நல்லவர்களாக இருந்து இருக்கிறோம்.
அதனாலேயே ஹிந்துக்களின் பல உயிர்கள் வீழ நாமே காரணம் ஆனோம் என்பதே நம் வரலாறு நமக்கு சொல்லும் நீதி.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 





Wednesday 1 March 2017

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?
தேவையான காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியை கடைபிடிக்காமல் நாம் இருந்ததால், இந்தியா முழுவதும் எந்த நிலைக்கு ஆனது?


இனியும் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியில் செல்லாமல் இருந்தால் என்ன ஆகும் ?

நம் வரலாற்றை நோக்கி ஒரு அலசல் :

பொதுவாக, நம் ஹிந்து தேசத்தில், அனைவரும் தர்மம் தெரிந்தவர்கள். மிகமிக நல்லவர்கள்.

இவர்களிடம் உள்ள பெரிய தவறு என்னவென்றால்,
ஒரு "அதர்மம் செய்பவனை நேரில் கண்டாலும் அவனை எதிர்க்காமல், பதில் அடி கொடுக்காமல், அதர்மம் செய்பவர்களை தர்ம வழியிலேயே திருத்த முயற்சி செய்தனர் அல்லது அமைதி காத்தனர்".

"ஒரு கன்னத்தை காட்டினால் மறு கன்னத்தையும் காட்டு"
என்பது இது போன்ற செயல் தான்.
இது நம் ஹிந்து மதத்தில் உள்ள சந்யாசிகளுக்கும், ப்ராம்மணர்களுக்கும் சொல்லப் பட்டு இருக்கிறது.
ஏகநாதர் என்பவர் ஓரு ப்ராம்மணர். இவர் பண்டரிநாதனின் பக்தர்.
இவர் காலத்தில் அக்பரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
ஹிந்து அரசர்கள் பலர் கப்பம் கட்டியும், சில வீர அரசர்கள் பாரதத்தை இவர்களிடம் காக்கவும் சண்டை இட்டனர்.

இப்படிப்பட்ட காலத்தில், இவர் ஒரு நாள், பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து, ஜெபம் செய்யத் தொடங்கினார்.

இதை பார்த்த ஒரு மிலேச்சன் (ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன்) பாண்டுரங்கனை தியானித்து ஜெபம் செய்து கொண்டிருந்த ஏகநாதரின் மேல், தாம்பூலம் கலந்த எச்சிலை அவன் வாயிலிருந்து முகத்தில் காரி உமிழ்ந்தான். ஹிந்துக்கள் தன்  நாட்டில் வாழ முடியாத நிலை.
ஆனால், ஏகநாதர் அவனை கோபிக்கவில்லை.

பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே மீண்டும் கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து ஜெபம் செய்யத் தொடங்கினார்.
மீண்டும் துப்பினான்.

இது போல 108 தடவைகள் முகத்தில் துப்பி கொண்டே இருந்தான் அந்த மிலேச்சன் .
கடைசியில் அந்த முரடன் ஓய்ந்து போய் , இவரின் பொறுமை என்ற தர்மத்தை பார்த்து, ஏகநாதரின் காலில் விழுந்து,
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான்.

ஏகநாதரோ,
"உன்னால் எனக்கு இன்று பாண்டு ரங்கனின் பெயரை 108 தடவை குளித்து விட்டு சொல்லும் பாக்கியம் ஏற்பட்டது" என்றார்.
இது பிராம்மண லட்சணம். ஸாது லட்சணம்.

இது கோவிலில் தொண்டு செய்யும் ஒரு ப்ராம்மணனுக்கு என்று உள்ள தர்மம்.

ஆனால் இதை ஒரு அரசனோ, நாட்டை காக்கும் வீரர்களோ எடுத்து கொண்டால் அந்த தேசம் அழிய வேண்டியது தான்.

இந்த காரணத்திற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மத்தாலேயே வெற்றி கொள்" என்கிறார்.
பாரத போரில் அதை நமக்கு காட்டினார்.

1025AD, முகம்மது கஜினி 17 முறை குஜராத் வழியாக இந்தியாவில் நுழைய பார்த்தான். 17 முறையும் தோற்றான்.
17 முறையும் தோற்று, 18வது முறை ஹிந்து அரசனை வென்று, நாட்டை சூறையாடி,  சோம்நாத்தில் உள்ள சிவ ஆலயத்தை இடித்து, பல கோடி மதிப்புள்ள செல்வங்களை கொள்ளை அடித்து சென்றான்.
இப்படி நம் வீட்டில் கொள்ளை அடுத்தவனை புகழ்ந்து,
"17 தடவை தோற்றாலும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்" என்று குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் புகுத்தி, ஒரு திருடனை புகழும் அவலம், இந்தியாவில் மட்டும் தான். கொள்ளை அடித்த தங்க வைடூரிய குவியலை எதுத்துக்கொண்டு தன்  நாட்டில் குவித்தான்.
17 முறையும், முகம்மது கஜினியை தோற்கடித்த ஹிந்து அரசனை பற்றி பாட புத்தகத்தில் இல்லை. 
17 முறை வெற்றி கொண்ட ஹிந்து அரசன் வீரனா? ஓடியவன் வீரனா?


17 முறையும் அட்டகாசம் செய்த ஒரு திருடனை, ஒவ்வொரு தடவையும் மன்னித்து அனுப்பிய ஹிந்து அரசன், ஏகநாதர் செய்த செயலுக்கு ஒப்பானது.

ஏகநாதர் ப்ராம்மணர். பரவாயில்லை.
அரசனாய் இருந்து தண்டிக்காமல்,  ஒரு முறை, இரு முறை அல்ல, 17 முறை மன்னித்தார்.

ஒரு விதத்தில் இந்த ஹிந்து அரசனின் நல்ல குணம் தெரிந்தாலும், நாட்டை இப்படி சாதுவாக இருந்து காக்க முடியாது என்பதே நாம் வரலாற்றை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

ஒருமுறை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியை பின் பற்றி இருந்திருந்தால் !! முதல் படையெடுப்பிலேயே இந்த திருடன் கொல்லப்பட்டு இருப்பான்.
பாம்பு "விஷம் கக்கும்" என்று தெரிந்தும், மன்னித்து விட்டதன் விளைவே, 1947ல் இந்தியர்கள்  பிச்சைகாரர்களாக விடப்பட்டு, இன்று இந்தியா வளரும் நாடாக ஆனதற்கு காரணம்.
இப்பொழுது இருக்கும் பல கிழக்கு நாடுகள் இந்தியாவின் செல்வத்தை கொண்டே அவர்கள் நாட்டை வளர்த்துள்ளது, கோஹினூர் வைரம் வரை.

இப்படி நம் வரலாறு படித்து தெரிந்து கொள்வதால், நமக்கு என்ன பயன்?
நாம்
"இன்று செய்யும் சில தவறுகள்" 
"நம்மால் முடிந்தும், செய்யாமல் அமைதியாக விட்ட நல்ல காரியங்கள்", 
அடுத்த பல தலைமுறைகளை, நம் செயலால் கஷ்டப்பட வைத்து விடும்.

ஒரு வேளை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியில் சென்றிருந்தால், 1025 ADயில் ஆரம்பித்த கொள்ளை, 1947 AD வரை தொடர்ந்து இருக்காது. இதுவே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

  • தீயவனுக்கு மன்னிப்பு கூடாது.
  • நல்லவர்களை பலர் சேர்ந்து காக்க வேண்டும். நல்லவர்களை இனம் கண்டு நட்பு கொள்ள வேண்டும்.
  • தீயவனை தீயவனாகவே எதிர்க்க வேண்டும்.
  • அதர்மம் செய்பவர்கள் எப்பொழுதும் அதர்மமே பேசுவார்கள்.
  • அதர்மம் செய்பவர்கள் தர்ம வழியில் இருப்பவர்களை கிண்டல் செய்வார்கள்.

அதர்மம் செய்பவர்களையும் தர்மம் பேச வைக்கலாம்.எப்படி?
அதர்மம் செய்பவர்களும் ஒரு சமயம் தர்மம் பேசுவார்கள். எப்போது ?

தனக்கு ஒரு அதர்மம் நடக்கும் போது, அதர்மம் செய்பவர்களும் தர்மம் பேசுவார்கள்.
இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மம் கொண்டு பதில் கொடு.
அப்பொழுது தான் அதர்மம் செய்பவனும் 'தர்மம் பேசுவான்'" என்கிறார்..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது "தரம் சூக்ஷ்மம்"


ஒரு திருடன் "ஏன் திருடுகிறாய்?" என்று கேட்டால், தான் செய்யும் அதர்மத்துக்கு பல வித நியாயம் கற்பிப்பான்.
தான் செய்தது அதர்மம் என்று ஒப்புக்கொள்ளவே மாட்டான்.

அதே திருடன் வீட்டில் 10 பவுன் நகை திருடு போனால்,
"ஐயோ ! இது நியாயமா? தர்மமா?"
என்று தர்மம் பேசுவான்.

இந்த சம்பவம் ராமாயணத்திலும், பாரத போரிலும் காண்கிறோம்.

ஹனுமான் கடலை தாண்டி இலங்கையில் இறங்கிய போது, ஒரு பெண் ராக்ஷஷி (லங்கினி) எல்லையை காவல் (lady defence force in srilanka 😊) காத்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணாக இருக்கிறாளே ! என்று, இவளை அடிக்க வேண்டாம், மெதுவாக உள்ளே சென்று விடுவோம் என்று ஹனுமான் தீர்மானித்து உள்ளே நடக்கலானார்.
இதை பார்த்த இவள், "என்னை மீறி உள்ளே செல்ல முடியாது, முடிந்தால் என்னிடம் போர் செய்" என்றாள்.

அடிக்க மனம் வராமல், லேசாக தன் இடது கையால் ஒரு தட்டு தட்டினார். அதுவே பெரிய அடியாக அவளுக்கு தெரிந்தது. தலை சுற்றியது.

அது வரை "என்னிடம் சண்டைக்கு வா" என்று அழைத்த லங்கினி திடீரென்று தர்மம் பேசலானாள்..
"இப்படி ஒரு பெண்ணை அடிக்கலாமா ? இது நியாயமா?" 
என்று புலம்பி, "உள்ளே தாராளமாக செல்லுங்கள்" என்று வழி விட்டாள்.

இதே போல வாலியும் தன் சொந்த தம்பி உயிருடன் இருக்கும் போது, தம்பியின் மனைவியை தன் மாளிகையில் வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்தான்.
பார்க்கும் இடமெல்லாம் துரத்தி துரத்தி தன்  தம்பி சுக்ரீவனை அடிப்பான். நாடு துரத்தினான்.


ராமர் மறைந்து நின்று அம்பு விட்டு கொல்ல, சாகும் தருவாயில் தர்மம் பேசலானான்.
"மறைந்து நின்று கொல்லலாமா? நியாயமா? தர்மமா ?" என்று புலம்பினான்.

பாரத போரில், ஒரு சமயம் அர்ஜுனனின் தேர் சக்கரம் குழியில் மாட்டிக் கொள்ள, ஸ்ரீ கிருஷ்ணரே தோள் கொடுத்து சக்கரத்தை தூக்க, இந்த சமயத்தில் கர்ணன் சர மாறியாக அம்புகளை ஸ்ரீ கிருஷ்ணர் மீது செலுத்தினான்.
ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் செயலை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் தேர் உடைந்த போது, தேர்  சக்கரத்தை சரி செய்ய கீழே இறங்கும் அபிமன்யுவை, கர்ணன் அம்பு விட்டு பலருடன் சேர்ந்து கொன்றான்.

இன்னொரு சமயம், கர்ணன் தேர் மாட்டிக்கொள்ள, கர்ணனே சக்கரத்தை தூக்க வேண்டிய நிலை வந்த போது, அர்ஜுனன் தர்மப்படி சண்டை இடக்கூடாது என்று காத்து இருக்க, ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் அதர்மத்தை காட்டி,
"அவனை அவன் வழியிலேயே அடித்து வீழ்த்து" என்றார்.
அடிபட்டு விழுந்த கர்ணன், சாகும் தருவாயில் கண்ணனை பார்த்து
"இப்படி தர்மம் மீறி செய்யலாமா ?" என்று கர்ணனின் வாயிலும் தர்மம் வந்தது.
கண்ணன் கர்ணனை பார்த்து
"உனக்கும் தர்மம் என்றால் என்ன என்று கடைசியாக ஞாபகம் வந்ததே!" என்றார்.


  • தர்ம வழியை பின்பற்றுபவனிடம், நீயும் தர்ம வழியை காட்டு.
  • அதர்ம வழியில் இருப்பவனை, அவன் செய்த அதர்ம வழியிலேயே சென்று ஒரு பாடம் புகட்டு.



"ஒரு கன்னத்தை காட்டு அடிக்கிறேன்", என்பவனுக்கு "மறு கண்ணத்தையும் காட்டு" என்பது சந்யாசிகளுக்கு அழகாக இருக்கலாம்.

நாட்டை காக்க, தன் கலாச்சாரத்தை காக்க, தன் வீட்டை காக்க இது ஒருபோதும் பயன்படாது என்பதே நம் வரலாறு காட்டுகிறது.

"ஒரு கன்னத்தை காட்டு" என்று கேட்பவனை, அவன் அடிப்பதற்கு முன்னரே, அவன் இரு கன்னத்திலும் சேர்த்து அறைந்து விடு.
இப்படி செய்வதாலேயே, இது போன்று அதர்மமாய் கேட்பவர்கள் உடனே தர்ம வழிக்கு வருவர்.

மேலும் தர்ம வழியில் நடப்பவர்கள் (ஏகநாதர் போன்றோர்) இது போன்ற தீயவர்களிடம் தப்புவார்கள்.

இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் காட்டும் வழி - "தர்ம சூக்ஷ்மம்".
இந்தியாவிற்கு இப்போது மிக தேவையான தர்மம் இது.

கலியுகம் பிறக்க போகிறது என்பதை அறிந்த பகவான் "நாராயணன்" ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, நமக்கு சொன்ன முக்கிய பாடம் இதுவே.

கலியில்,

  • அதர்மம் பேசுபவர்கள், 
  • நம் கலாச்சாரத்தை கேலி செய்பவர்கள், 
  • தெய்வ நிந்தை செய்பவர்கள், 
  • தர்ம வழியில் இருக்கும் சாதுக்களை கிண்டல் செய்பவர்கள் 

அதிகம் இந்தியாவில் படை எடுப்பார்கள்.

  • இந்தியாவில் உள்ள மக்களை பணம், பயம் கொண்டு மாற்றுவார்கள் 

என்பதை குறிப்பாக உணர்த்தி, தர்மம் மட்டும் தெரிந்த இந்த ஹிந்துக்களுக்கு "தர்ம சூக்ஷ்மம்" என்ற ஒரு விஷயத்தை அருளினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கஜினி காலத்தில் ஏதோ காரணத்திற்காக, தர்ம சூக்ஷ்மம் சமயத்தில் பயன் படுத்தபடவில்லை.
வரலாற்றில் எங்கும் காண முடியாதபடி 17 முறையும் ஒரு திருடனை மன்னித்தனர்.

இனி இந்த தவறை ஹிந்துக்கள் செய்தால்,
மிலேச்ச மதத்தில் சேர்ந்தோ, அல்லது
யூதர்கள் போல சிதறி நாடோடிகள் போல வாழ வேண்டியது தான்.

ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
நம் தர்மத்தை எதிர்க்கும் அதர்மவாதிகளை அவர்கள் வழியில் சென்று அடக்கி, தர்மம் பேச வைப்போம்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka