Followers

Search Here...

Tuesday 23 June 2020

பாசுரம் (அர்த்தம்) - முனியே நான்முகனே... நம்மாழ்வார் க்ஷீராப்தி நாதனை நினைத்து பாடிய அழகான பாசுரம். சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபதத்தில் (வைகுண்டம்) "நாராயணன்" நித்ய வாசம் செய்கிறார்.
ஆதிசேஷனும், மஹாலக்ஷ்மியும் கூடவே இருக்கிறார்கள்.




மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரமபதத்தில், திவ்ய பார்ஷத ரூபத்துடன், பகவானை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

ப்ரம்ம தேவனும் செல்ல முடியாத இடம் 'பரமபதம்'.
ப்ரம்ம தேவனே தரிசிக்காத இடம் "பரமபதம்".
"பரமபதம்" மோக்ஷம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது என்பதால்,
"பிரம்ம தேவன், ரிஷிகள், தேவர்கள் போன்றோர் தன்னை தரிசனம் செய்ய"  'க்ஷீராப்தி என்ற பாற்கடலை' ஸ்ருஷ்டி செய்து கொண்டு, 
அங்கு வ்யூஹ ரூபத்துடன் 'விஷ்ணு'வாக ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கிறார்.
பிறகு, ஒரு சமயம் தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க, பாற்கடலை கடைய சொல்ல,
மஹாலக்ஷ்மியை பாற்கடலை கடையும் போது, வரச்செய்து தானே மணந்து கொண்டார்.

பிரம்ம தேவனுக்கும், ருத்ரனுக்கும் "அந்தர்யாமியாக" இருக்கும் பரவாசுதேவன்,
இவர்களோடு சமமாக பழக ஆசைப்பட்டு, "விஷ்ணுவாக" அவதரித்து விட்டார்.
பிரம்ம தேவனுக்கு "படைக்கும்" தொழிலை கொடுத்து,
ருத்ரனுக்கு "சம்ஹார" தொழிலை கொடுக்க,
தான் விஷ்ணுவாக "காக்கும்" தொழில் செய்கிறேன்,
என்று வந்து விட்டார்.

தேவர்களுக்கு கஷ்டம் என்றால், இவர்தான் காக்க ஓடுவார்.
ஒரு சமயம், ருத்ரனுக்கே பஸ்மாசுரன் என்ற அசுரனால் கஷ்டம் ஏற்பட, ருத்ரனை காக்க ஓடினார்.

ஆதிபுருஷனாக இருந்தும், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்.

தான் படைத்த பிரம்ம தேவனுக்கு சம ஆசனம் கொடுக்கிறார்.
சுலபமான தெய்வமாக இருக்கிறார் பெருமாள்.
யாருக்கும் கிடைக்கிறார்.

அதுமட்டுமா?
தேவர்களுக்கு மத்தியில் "உபேந்திரன்" என்ற ஒரு தேவனாக அவதரித்தார். தேவர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ரிஷிகள் கூட்டத்தில் தானும் ஒரு ரிஷி என்று "வ்யாஸராக" அவதரித்தார். ரிஷிகளுடன் சுலபமாக பழகுகிறார்.
மனிதர்கள் கூட்டத்தில் தானும் ஒரு மனிதன் என்று "ராமபிரானாக" அவதரித்தார். மனிதர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ஒரு சமயம், பன்றி கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு பன்றியாக" கூட அவதரித்து விட்டார்.

மீன் கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு மீனாக" கூட அவதரித்து விட்டார்.

இப்படி அனைவரையும் படைத்து, அனைவருக்குள்ளும் தானே அந்தர்யாமியாக இருந்து கொண்டு,
அதுவும் போதாதென்று,
தானும் அவர்களை போலவே சில சமயம் அவதரித்து,
எப்பொழுதும் அனைத்து ஜீவனிடத்திலும் உறவாட ஆசைப்படுகிறார் பெருமாள்.

'தானே அனைத்துமாக இருக்கிறேன்' என்றும் காட்டுகிறார்.




பரப்ரம்மத்தையே உபாசிக்கும் நம்மாழ்வார் 'தனித்த பொருளான பரவாசுதேவன், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொண்டு, க்ஷீராப்தியில் இருப்பதை கண்டு ஆசைதீர, அந்த க்ஷீராப்தி நாதனுக்கு மங்களாசாசனம்' செய்கிறார்.

க்ஷீராப்தி - 108 திவ்ய தேசத்தில் ஒன்று.

க்ஷீராப்திக்கு மங்களாசாசனம் செய்த பாசுரம் தெரிந்து கொள்வோமே.

பாசுரம்:
முனியே நான்முகனே!
முக்கண்ணப்பா!
என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !
-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

'வைணவ பக்தி' ஆழ்வார்களால் ஒரு புறம் வளர,
'சைவ பக்தி' நாயன்மார்களால் மறுபுறம் வளர்ந்தது.

"பொறாமை இல்லாமல் பக்தியே நம்மிடம் இருந்தது" என்பதற்கு இந்த பாசுரமே சான்று.

இந்த பாசுரத்தில் ஆழ்வார், "தனித்தவரான பரவாசுதேவன் நாராயணன், மும்மூர்த்திகளில் தானும் ஒருவராக தன்னை காண்பித்து கொள்ள க்ஷீராப்தி வந்து விட்டாரே" என்று ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகிறார்.

வேதம் சொல்லும் மும்மூர்த்திகளை, நம்மாழ்வாரும் இங்கு சொல்கிறார்.
இங்கு ஆழ்வார்,
சிவபெருமானை எப்படி அழைக்கிறார்? என்று பாருங்கள்...

முனியே நான்முகனே! 
முக்கண்ணப்பா!
என்று ஆரம்பிக்கும் போது,
முனிவர்களுக்குள் உயர்ந்த நான்முகனான "ப்ரம்ம தேவனை" முதலில் சொல்கிறார்.
பிறகு,
சிவபெருமானை ஆழ்வார் சொல்லும்போது "முக்கண்ணா" என்று மட்டும் சொல்லி அழைத்து இருக்கலாம்!!
ஆனால்,
மூன்று கண் உடைய சிவபெருமானை "அப்பா" என்று சொல்லி அழைக்கிறார்.

சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார்!!
என்று கவனிக்க வேண்டும்.

எங்கு இருந்தது நமக்குள் சிவ விஷ்ணு வெறுப்பு?...

"சிவ-த்வேஷம் வைணவ-த்வேஷம்" என்று சொல்லி சொல்லி, "ஹிந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும்" என்று திட்டமிட்டு, வெளி மதத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை பெருமுயற்சி செய்கின்றனர்.

சிவபக்தியினால் கிருமிகண்ட சோழன் மட்டும் தான், அவன் காலத்தில் வைஷ்ணவ வெறுப்பை காட்டினான்.
இதை மட்டுமே எப்பொழுதும் காட்டி காட்டி, இன்று வரை ஹிந்துக்களை பிரிக்க நினைக்கின்றனர்.

கிருமிகண்ட சோழனுக்கு முன்னால் இருந்த சோழனும்,
அவனுக்கு பின்னால் வந்த சோழர்களும் தான், 'பல வைணவ கோவிலையும் கட்டினர், பல சிவன் கோவிலையும் கட்டினார்கள்'
என்ற உண்மையை இவர்கள் சொல்ல விரும்புவதில்லை.

ஹிந்துக்களை ஒழிப்பதே இவர்கள் நோக்கமாக உள்ளது.

ஹிந்துக்களை பிரித்து,
ஹிந்துக்களுக்கு இடையே வெறுப்பை உருவாக்கி,
தன் போலி மதத்தை நுழைத்து,
தன் மதத்தில் ஆள் சேர்க்க,
இவர்கள் செய்யும் முயற்சிகளை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

கும்பகோணத்தில் ஒரு தெருவில் சாரங்கபாணி இருக்க,
மறு தெருவில் கும்பேஸ்வரர் இருக்கும் போது,
இப்படி ஹிந்துக்களிடையே பிரிவினை உருவாக்க முயற்சிக்கும் இவர்களை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

ஆழ்வார் சிவபெருமானை அழைப்பதே நமக்கு ஆச்சர்யமாக இருக்க,
இங்கு சிவபெருமானை "முக்கண்ணா" என்று மட்டும் அழைக்காமல் "முக்கண்ணப்பா" என்று ஏன் அழைத்தார் ஆழ்வார்?..

ஒரு தகப்பன், தன் பிள்ளை எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லதே செய்வான்.

'ஆத்மாவே நான்' என்ற அறிவுடன், அனுபவத்தில் வாழும் ஞானிக்கு இந்த உடலே ஒரு சிறையாக தோன்றுமாம்.

இந்த "உடல் இல்லாமல் இருந்தால், அந்த பரமாத்மா நாராயணனை இப்பொழுதே அடைந்து விடலாமே!"
என்று ஞானிகள் ஆசைப்படுவார்களாம்.





'சம்ஹாரம்' என்ற அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமான், "மரணம் என்ற காரியத்தின் மூலம், ஆத்மாவுக்கு இந்த சிறையில் இருந்து விடுதலை கொடுக்கிறார்".

ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு பார்த்து பார்த்து நல்லது செய்வது போல, "மரணம் என்ற உபகாரம் செய்து கொடுத்து, இந்த ஜீவ ஆத்மாக்கள் வைகுண்டம் செல்லட்டும் என்று தகப்பன் போல பேருதவி செய்கிறாரே"
என்றதும் சிவபெருமானை 'அப்பா' என்று அழைக்க ஆசை வர, "முக்கண்ணப்பா" என்று நன்றியுடன் அழைக்கிறார் ஆழ்வார்.

ஆழ்வார் பிரம்மாவையும், சிவபெருமானையும் சொல்கிறாரே..
அவருக்கு இஷ்ட தெய்வம் யார்? 
என்ற கேள்விக்கு அவரே இந்த பாசுரத்தில் விடையும் தருகிறார்.
தனித்து இருக்கும் (தனியேன்) ஆதி புருஷனான நாராயணனே, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் "விஷ்ணு"வாக க்ஷீராப்தியில் அவதரித்து இருப்பதை பார்த்து விட்டு,
'என் மாணிக்கமே..என் கள்வா.. என் ஆருயிரே..'
என்று பல தடவை "என்னுடைய, என்னுடைய.." என்று கூப்பிடுகிறார்.

இதன் மூலமே, நாராயணன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர் ஆழ்வார் என்று தெரிகிறது.

அதே சமயம் மற்ற தெய்வங்கள் மேல் மரியாதையும் உண்டு என்றும் காட்டுகிறார்.

"மரியாதை மற்ற தெய்வங்களிடம் இருக்க வேண்டும்.
ஆனால் நம் இஷ்ட தெய்வத்திடம் ஆசையும் பக்தியும் நமக்கு வேண்டும்" 
என்றும் காட்டுகிறார் நம்மாழ்வார்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவையும், சிவபெருமானையும் "நான்முகனே! முக்கண்ணப்பா!" என்று மரியாதையோடு அழைக்கிறார்.

"நாராயணனே இவர்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார்" என்பதால் அவர்களுக்கான மரியாதையை கொடுக்கிறார்.

ப்ரம்மாவை பார்த்தால் வேத மூர்த்தியாக அமைதியாக இருக்கிறார்.
சிவபெருமானோ ஜடை வளர்த்து, சுடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு யோகி போல இருக்கிறார்.

மரியாதை ஏற்பட்டதேயன்றி, இதயத்தை இவர்களுக்கு கொடுத்து விடவில்லையாம் ஆழ்வார்.

என் ஆசையெல்லாம் உலக விஷயங்களில் மட்டுமே சுற்றிக்கொண்டு இருக்க, ஒருசமயம்,
பரவாசுதேவன் நாராயணனே "விஷ்ணுவாக" இருப்பதை பார்க்க வாய்ப்பு கிடைக்க,
"தன் திருமேனி அழகை காட்டியே, உலக விஷயங்களில் அலைந்து கொண்டிருந்த என்னை திருடி, தனக்கு அடியானாக ஆக்கிக்கொண்டு விட்டாரே, இந்த பொல்லாத பெருமாள்!" என்று பாடுகிறார்.
இவரோ, பிரம்மாவை போல, சிவபெருமானை போல அமைதியாக இருக்காமல், 
தன் அழகான சிரிப்பால் உள்ளத்தை மயக்கி, தன் கண் அழகினாலேயே இவர் இதயத்தை திருடி விட்டார் என்றதும்,
விஷ்ணுவின் தாமரை போன்ற கண்களையும், கனிந்த உதடுகளையும் பார்த்து மயங்கி போனதால், "என் மனதை திருடிய கள்வா, பொல்லாதவனே!" என்றெல்லாம் ஆசை தீர கூப்பிடுகிறார்.

என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே!
என்று தனித்து இருக்கும் பரவாசுதேவன், "இப்படி விஷ்ணுவாக, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் அவதரித்து, திருமேனி அழகினால் தன் இதயத்தை திருடி விட்டாரே!" என்கிறார்.

இங்கு,
விஷ்ணுவாக இருக்கும் நாராயணனை பார்த்து,
"என் தாமரைக்கண் கருமாணிக்கமே' என்று திருமேனி அழகில் மயங்கியதை குறிப்பிடுகிறார்.

தனித்த புருஷனாக (தனியேன்) இருந்தாலும்,
மும்மூர்த்திகளில் தானும் ஒருவர் போல இருந்தாலும்,
இவர் தன் இதயத்தை திருடிவிட்டாரே (கள்வா) என்றதும், "என் பொல்லா" என்கிறார்.

"பல ஜென்மங்களாக உங்களிடம் மட்டும் அகப்படாமல் தப்பித்த என்னை, பொல்லாத நீங்கள், உங்கள் திருமேனி அழகை காட்டி, ஒரு சிரிப்பு சிரித்து இன்று என்னை பிடித்து விட்டீர்களே!" என்கிறார்
"பரவாசுதேவனான உங்களிடம் சிக்கிய பின், இனி நான் சம்சாரத்தில் மீண்டும் விழப்போவதில்லை.
உலக மாயையும் எங்களை இனி ஒன்றும் செய்யாது"
என்று கடைசியில் விஷ்ணுவை சரண் அடைந்தவன் பெரும் பயனை பற்றி சொல்கிறார்.

என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !

க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கு,
'சொர்க்க லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம், கைலாசம்' போன்றவற்றில் வசிக்கும் தேவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், ருத்ரனுமே சென்று பார்க்க முடியும்.

பூமியில் இருக்கும் நம்மால் இந்த உடலோடு செல்ல முடியாது.
ஆனால்,
க்ஷீராப்தி நாதனை நம் மனதில் இந்த ஆழ்வார் பாசுரத்தின் மூலம் கண்டு விடலாம். 

குருநாதர் துணை...

Friday 19 June 2020

பிராணாயாமம் - ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸுவ: என்று ஏன் சொல்கிறோம்? 7 பாதாள லோகங்களை சொல்வதில்லையே... ஏன்?

பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது.
பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார்.
பலி சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரம் செய்து தானமாக வாங்கி தேவர்களை, மனிதர்களை, ரிஷிகளை வாழ வைத்தார் பரவாசுதேவன்.


7 பாதாள லோகங்களில் ஒன்றான "சுதலம்" என்ற லோகத்தில், பலி சக்கரவர்த்தியை இருக்க சொல்லி, அவனுக்கு காவலனாக தானே "கதாதரனாக" நிற்கிறார்.
"அடுத்த தேவ இந்திரன் பலி சக்கரவர்த்தி" என்றும் ஆசிர்வதித்து விட்டார்.

இனி,
பிராணாயாமம் சொல்லும் போதும், 
காயத்ரி மந்திரம் சொல்லும் போதும், 
இந்த பாதாள லோகங்களை சொல்வதில்லை. இது ஏன்?

மாறாக,
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று நமக்கு மேல் இருக்கும் லோகங்களை சொல்கிறோம்.
பூலோகத்தில் (ஓம் பூ:) இருக்கும் நாம், நம்முடைய புண்ணியங்களை உயர்த்தி உயர்த்தி, 

  • பித்ருக்கள் உள்ள லோகமான புவர் லோகத்துக்கும்
  • தேவர்கள் உள்ள சொர்க்க லோகத்துக்கும்
  • துருவனை போன்றோர் நக்ஷத்திரமாக இருக்கும் மகர லோகத்துக்கும்
  • ரிஷிகள், யோகிகள், முனிகள் வாழும் ஜன மற்றும் தப லோகத்துக்கும்
  • பிரம்ம தேவன் வசிக்கும் சத்ய லோகத்துக்கும் 

செல்ல ஆசைப்பட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து,
'பாதாள லோகங்களுக்கு சென்று விட கூடாது' என்று நம்மை நிதானப்படுத்துகிறது.




சத்ய லோகத்துக்கும் காரணமான வைகுண்ட நாதனை அடைய ஆசைப்படும் புண்ணிய ஆத்மாக்கள், பிரம்ம தேவன் படைத்த இந்த 14 உலகங்களையும் விட்டு விட்டு, வைகுண்டம் என்ற பரமபதம் அடைந்து விடுகிறான்.

புண்ணியங்கள் செய்து, 
ஜீவ ஹிம்சை செய்யாமல், 
ஜீவ ஹிம்சையான உணவு உண்ணாமல், 
மற்றவர்களுக்கு உபயோகமாக வாழ்ந்து, 
தெய்வத்திடம் பக்தி கொண்டு மனிதன் வாழ வேண்டும் 
என்று வழிகாட்டுகிறது இந்த மந்திரங்கள்..
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று சொல்லும் போதே, நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்று காட்டுகிறது..

இந்த அனுபவத்துடன் பிராணாயாமம் செய்வோம். ஆத்மாவை உயர்த்துவோம்..

Wednesday 17 June 2020

சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..

சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? 
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்...
சோகத்தில் இருப்பவனிடம் உடனேயே தர்மம் பேச கூடாது. 
சோகத்தில் இருப்பவனிடம் தர்மம் பேசினால் கேட்க மாட்டான்.
மேலும்
சோகத்தில் இருப்பவனிடம் 'தர்மம் பேச பேச, கேட்பவனுக்கு சோகம் அதிகமாகிவிடும்'.




சோகம் இல்லாமல் இருக்கும் போது தான் "தர்மம் பேச வேண்டும்".

"சோகம் இல்லாமல் இருக்கும் போது தான், தர்மம் புரியும்.
ஆதலால், 
சோகத்தை முதலில் நீக்கி விட்டு தான், தர்மம் பேச வேண்டும்"
என்று நமக்கு காட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
"கர்ம யோகம், ஞான கர்ம சந்யாச யோகம், கர்ம சந்யாச யோகம், தியான யோகம், ஞான விஞ்ஞான யோகம்,ராஜ வித்யா யோகம், பக்தி யோகம்"
என்று பல வித தர்மங்களை சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்த போது, உடனே "கர்ம யோகம் என்ற தர்மத்தை சொல்கிறேன் கேள்" என்று ஆரம்பிக்கவில்லை என்று கவனிக்க வேண்டும்.

"சோகத்தில் மூழ்கியவனிடம் முதலில் ஞான யோகத்தை (ஸாங்க்ய யோகம்) (Jnana Yoga) பேசி விட்டு தான், 
பிறகு பல வித தர்மங்களை பற்றி பேசுகிறார்" 
ஸ்ரீ கிருஷ்ணர் என்று கவனிக்கலாம்.

"பாண்டவர்களுக்கு குண்டூசி சொத்து கூட தர முடியாது" என்று சொன்ன துரியோதனிடம் போரிடலாம் என்று வந்த அர்ஜுனன், இப்படி என் தாத்தாவையும், குருவையும் எதிர்க்கும் படியாக செய்து விட்டானே! 
இப்படி சொத்துக்காக என் தாத்தாவை கொன்று, குருவை கொன்று, என்ன சாதிக்கப்போகிறேன்?  
நான் போர் செய்ய மாட்டேன். 
பிச்சை எடுத்தாவது வாழ்கிறேன்"
என்று காண்டீபத்தை கீழே வைத்து விட்டான் அர்ஜுனன்.

சோக கடலில் மூழ்கி விட்டான் அர்ஜுனன்.

உடனே "கர்ம யோகம் சொல்கிறேன் கேள்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பிக்கவில்லை.

கர்ம யோகப்படி,
"கர்மாவை செய். நீ ஷத்ரியன். க்ஷத்ரியனாக போர் செய்.
தாத்தாவாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், அதர்மம் செய்யும் துரியோதனன் பக்கம் இருக்கும் இவர்களை கொன்று விடு.
பலனை என்னிடம் விடு"
என்று உடனேயே கர்ம யோகம் பேசி இருந்தால்,
அர்ஜுனன் மேலும் சோகத்தில் ஆழ்ந்து போயிருப்பான்.




சோகம் உள்ளவனிடம், தர்மத்தை பேசுவதை காட்டிலும், "ஆத்ம ஞானத்தை சொன்னால் தான் சோகம் அடங்கும்".

பகவத் கீதை, முதல் அத்யாயத்திலேயே அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

கிருஷ்ண பரமாத்மாவை சரணடைந்து வழி கேட்கிறான்.
முதலில் அவன் சோகத்தை போக்க "ஆத்மாவின் உண்மையான நிலை என்ன?" என்று சொல்லி,
ஞான யோகத்தை சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இரண்டாவது அத்யாயம் முழுக்க "ஞான யோகத்தை" (ஸாங்க்ய யோகம்) பேசி, அவன் சோகத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறார்.

இரண்டாவது அத்யாயம் முடிவிலேயே அர்ஜுனன் சோகத்தை விட்டு விடுகிறான்.

சோகம் இல்லாமல் இருக்கும் அர்ஜுனன் பிறகு பல கேள்விகள் தர்ம விஷயமாக கேட்கிறான்.
அவன் கேட்கும் பல கேள்விகளுக்கு, பல தர்மங்களை சொல்லி உபதேசம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

சோகம் அதிகமாக இருப்பவர்கள், இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களை படித்தாலே சோகம் பறந்து விடும்.
சோகத்தில் சிக்கியவர்களை பார்த்து, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
"கவலை பட தகுதியில்லாத உலக விஷயங்களுக்கு நீ சோகப்படாதே !
போனவனை பற்றியும் கவலை படாதே!  இப்போது சில காலம் இருப்பவனை பற்றியும் கவலைப்படாதே! 

அல்ப காலம் இந்த உடலில் இருக்க போகும் நீ, இதற்கெல்லாம் கவலை படுவதே வீண்!
உடல் அழியக்கூடியது.  
இது சம்பந்தமாக கவலைப்படுவதே வீண் !




ஆத்மா அழியாதது.  
நீயும், நானும் ஆத்மாவே! 
நாம் என்றுமே அழிவதில்லை. 
எந்த ஆத்மாவும் அழிவதில்லை.

இந்த ஆத்மா இந்த உடலுக்குள் சில காலம் இருந்தது. 
இந்த உடல் சிறு குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கிழவனாக ஆகி விழுந்து விட்டது. 
ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா இந்த உடலுக்குள் இருந்த போது எப்படி இருந்ததோ அதே போல எப்பொழுதும் இருந்தது... 
உடல் விழுந்தவுடன், இந்த ஆத்மா வேறு உடலுக்கு போகிறது. 
அவ்வளவு தான்.

இந்த உடலும், மனதும் தான் சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வியை கொடுக்கிறது, அனுபவிக்கிறது.  
நீயோ ஆத்மா !  
இந்த உடல் தரும் இந்த வெற்றியையும் லட்சியம் செய்யாதே ! அவமானங்களையும் லட்சியம் செய்யாதே !
சாதாரணமாகவே இரு.
நீ தனியானவன்.  
நீ ஆத்மா.  

சிறிது காலம் இந்த உடலில் இருக்கிறாய். 
இந்த உடலை வைத்து என்ன நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ செய். 

மற்றபடி இந்த உடலால், மனதால் வரும் அனுபவங்களை சிறிதும் மதிக்காதே !"
என்று "ஞான யோகத்தை" சொல்லி, அர்ஜுனனின் சோகத்தை சரி செய்கிறார் கிருஷ்ணர்.
சோகம் தெளிந்து இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, 'கர்ம யோகம், பக்தி யோகம்' என்று பல வித தர்மங்களை சொல்லி...
"எந்த தர்மமும் உன்னால் கடைபிடிக்க முடியாது என்றால், என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சரணடைந்து விடு. நான் உன்னை காத்து, மோக்ஷம் வரை கூட்டி செல்கிறேன்"
என்று கீதையை முடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சோகத்தில் இருப்பவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன 2வது அத்தியாயம் கட்டாயம் அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
நம்மைவிட்டு, சோகம் ஓடி விடும்.

தர்மங்கள் தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், 3வது அத்தியாயம் ஆரம்பித்து பல தர்மங்களை அர்த்தம் புரிந்து படிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்.
வாழ்க குருநாதர்.

Sunday 14 June 2020

பாசுரம் (அர்த்தம்) - தாள்களை எனக்கே... நம்மாழ்வார் பரமபத நாதனான விராட் ரூபனாக நினைத்து பாடிய அழகான பாசுரம். சடாரியின் பெருமையை விளக்கும் பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபுருஷன் "அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருப்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான கண்களுடன், தலையுடன், தானே அனைத்துமாக இருக்கிறார்"
என்று பரவாசுதேவனின் விராட் ரூபத்தை 'புருஷ சூக்தம்' வர்ணிக்கிறது.
இந்த புருஷ சூக்தத்தின் அர்த்தத்தை, தமிழில் பாசுரமாக பாடி கொடுத்து விட்டார் நம்-ஆழ்வார்.




தாள்களை எனக்கே
தலைத்தலை சிறப்ப தந்த பேருதவி 
கைம்மாறா !! 
தோள்களை ஆரத் தழுவி !
என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ !!

தோள்கள் ஆயிரத்தாய் !
முடிகள் ஆயிரத்தாய் ! துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !
பேர்கள் ஆயிரத்தாய் !
தமியனேன் பெரிய அப்பனே !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)


தன் பலத்தால் "பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை" பிடித்து வைத்து இருந்த பலி சக்கரவர்த்தி,
தானமாக, தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்தான்.

"7 லோகங்களையும் அடமானம் வைத்தாலும், தன் திருவடிக்கு ஈடு ஆகாது"
என்று மிரட்டி, 'மூன்றாவது அடி எங்கே?' என்று பெருமாள் கேட்க,
தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்து நின்றான் பலி சக்கரவர்த்தி.
தன் சொத்தையும், தன்னையும் சமர்ப்பணம் செய்த பிறகு, அதற்கு கைமாறாக பெருமாள் தன் திருவடியை தொடும் ஆனந்தத்தை பலி சக்கரவர்த்திக்கு கொடுத்தார்.
இது வாமன அவதார சரித்திரம்.   




பெருமாளின் திருவடியை தான் நமக்கு கோவிலில் "சடாரி" என்று வைக்கிறார்கள்.

"பெருமாளின் திருவடி சம்பந்தம் கிடைக்க", பலி சக்கரவர்த்தி தன் சொத்து அனைத்தையும் கொடுத்து, தன்னையே கொடுத்தான்.
ஆனால்,
ஒன்றுமே கொடுக்காத நமக்கு, கைம்மாறு எதிர்பார்க்காமல் பெருமாள் தன் திருவடி (சடாரி) கொடுத்துவிட்டாரே !!

"கைம்மாறு எதிர்பார்க்காமல், தன் திருவடியை (தாள்களை) என் தலை மேல் வைத்து சிறப்பித்து (எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த) பேருதவிக்கு நான் என்ன செய்வேன்?" என்று திகைக்கிறார்.

பெருமாள் திருவடி (சடாரி) தன் தலை மீது பட்டதால், தன் சரீரமே பெருமாள் சொத்து ஆகி விட்டது என்ற பூரிப்பில், நம்மாழ்வார் தன்னையே ஆரத்தழுவி கொண்டு (தோள்களை ஆரத் தழுவி) "எனது ஆத்மாவை, அந்த பரஞ்சோதியான நாராயணனுக்கு பரிபூரணமாக சமர்ப்பணம் செய்து விட்டேன் (என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ)"
என்று தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்கிறார்.
தானே அனைத்துமாக விராட் புருஷனாக இருக்கும் பெருமாள், 
ஒவ்வொருவரின் உள்ளிலிருந்து கொண்டு, பார்க்க செய்கிறார், கேட்க செய்கிறார் என்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான தோள்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கண்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கால்களாகவும், 
அவரே ஆயிரக்கணக்கான பெயர்களுடனும்,
இருக்கிறார், என்று புருஷ சூக்த்தத்தை அப்படியே தமிழில் நமக்கு கொடுத்து விட்டார்.

பலி சக்கரவர்த்தி தன்னையும், தன் சொத்துகள் அனைத்தையும் கொடுத்தார். அதற்கு கைமாறாக தன் திருவடியை கொடுத்தார்.
ஆனால்,
திறன் இல்லாத நமக்கு (தமியனேன் எனக்கு), கைம்மாறு எதிர்பார்க்காமல் தன் திருவடியை கொடுத்த பெருமாள், நமக்கு "அப்பா" என்று உறவு காட்டி அழைக்கிறார்.

நம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடு இல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.




பெருமாளின் திருவடி (சடாரி) நம் மீது பட்டாலே, அனைத்து பாவங்களும் போய் விடும் என்று ராமபிரானின் சரித்திரம் மூலமே நிரூபணம் ஆனது.
நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றுநம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடுஇல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.

நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றும் "எம் பெருமாள்" என்று
ம் உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம். ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். "எம் பெருமாள்" என்று
உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம்.
ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள்.

Saturday 13 June 2020

பாசுரம் (அர்த்தம்) - சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த... நம்மாழ்வார் வைகுண்டம்) பரமபத நாதனான நாராயணனை நினைத்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

** பிரளய காலத்தில் உலகம் இருண்டு கிடக்க,
** மோக்ஷம் அடையாத ஆத்மாக்கள் உறங்கி கிடக்க,
** சில ஆத்மாக்கள் கைவல்யம் என்ற மோக்ஷத்தை அனுபவித்து கிடக்க,
** பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
திருவாய்மொழியில் உள்ள அருமையான பாசுரம்.




சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
என்று சொல்லும் போது,
"ப்ரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பிரளய ஜலத்தால், 14 உலகங்களும் சூழப்பட்டு, அழிந்து போய், பேரிருள் சூழ்ந்திருக்கும் நிலையை" சொல்கிறார் ஆழ்வார்.
"தமஸ்" என்ற சமஸ்க்ரித சொல்லையே இங்கு தமிழில் "பாழ்" என்று சொல்கிறார் நம்மாழ்வார்.
"பாழ்" என்றால் "இருள்" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஆத்மாவுக்கு அழிவே இல்லை.
ஆதலால்,
உலகங்கள் அழிந்தாலும், பரமாத்மா நாராயணன் அழிவதில்லை, கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் (நாமும்) அழிவதில்லை.

"மோக்ஷம் அடைந்த ஜீவ-ஆத்மாக்கள், பரமாத்மாவை அடைந்து இருப்பது போல,
பிரம்மாவின் ஆயுசு முடிந்தும், இன்னமும் மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்களும் அழியாமல் பரமாத்மா நாராயணனிடம் 'பாழ்' என்ற இருள் நிலையில், 'தான் எங்கு இருக்கிறோம்?' என்றே அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார்.

இப்படி மகா பிரளய காலத்தில், பரமாத்மாவோடு இருந்த போதிலும், தான் எங்கு இருக்கிறோம்? என்றே அறியாமல்" மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

"மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய பரவாசுதேவன் சங்கல்பிக்கும் வரை, 'தமஸ் என்ற பாழ் இருளில்' இந்த ஜீவாத்மாக்கள் இருக்கிறார்கள்"
என்கிறார்.
அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
என்று சொல்லும் போது,
"14 உலகங்களும் அழிந்த நிலையிலும், மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் அழியாமல் 'நன் மலர் ஜோதியாக' பிராகாசித்து கொண்டே நாராயனிடம் ஒடுங்கி கிடக்கிறது.
ஆனால், ஒரே ஒரு குறை.
அந்த மோக்ஷம் அடையாத ஜீவன்கள் இருளில் (பாழேயோ) கிடக்கிறார்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது,
"'நாராயணிடம் தான், நாம் இருக்கிறோம்' என்று அறியாமலேயே, மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் 'தமஸ்' என்ற நிலையிலேயே கிடக்கிறார்கள்"
என்கிறார்.



"குழந்தை தன் தாய்மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, தாயின் அரவணைப்பை, சுகமான தூக்கத்தை அனுபவித்தாலும், தான் தாயின் மடியில் தான் தூங்குகிறோம் என்று தெரியாமலேயே (தமஸ்) இருப்பது போல,
மோக்ஷம் அடையாமல் இருக்கும் ஜீவாத்மாக்கள், பிரளய காலத்தில் நாராயணின் இதயத்திலேயே உறங்கி கொண்டு இருந்தாலும், அவரிடம் தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார் ஆழ்வார்.

பிரளய காலத்தில் மட்டுமல்ல, நாம் தினசரி தூங்கும் போது கூட, இந்த சேர்க்கை அனைவருக்கும் நடக்கிறது.

"தூங்கினால் சுகமாக உள்ளது" என்று மட்டுமே அறிகிறோம்.
ஆனால், "யார் மடியில் உறங்கினோம்?..யார் சுகமான தூக்கத்தை கொடுத்தார்கள்?"
என்று அறியாமலேயே தூங்குகிறோம்
என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதனால் தான் தூக்கத்தை "தாமஸ" குணம் என்று சொல்கிறோம்.
புத்தி விழிப்பு இல்லாத நிலை அது.

"தாமஸ்" விரட்டி அடிக்கப்பட வேண்டிய விஷம்.
மூளையை மழுங்க செய்வது தாமஸ். 'இருள் போன்றது' தாமஸ்.
ஹிந்துக்கள் இந்த தாமஸிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
என்று சொல்லும் போது,
"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள், பிரளய காலத்தில், சம்சாரத்தில் இருந்து முழு விடுதலை அடைந்து, கைவல்யம் என்ற மோக்ஷத்தை அடைந்து 'சுதந்திர காற்றை' (ஞான இன்பம் என்று சொல்கிறார்) அனுபவிக்கிறார்கள்"
என்று சொல்கிறார்.

இரண்டு விதமான மோக்ஷம் சொல்லப்படுகிறது.
ஒன்று : கைவல்யம் (விடுதலை)
மற்றொன்று : பரமபதம் என்ற வைகுண்டம் (வீடு)

"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற அத்வைத ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள் "நானே பரமாத்மா" என்ற அனுபவத்திலேயே இருப்பதால், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை அடைகிறார்கள்.

உடல் நானல்ல..ஆத்மாவே நான் என்ற ஞானம் அனுபவத்தில் உள்ளதால், 
சம்சாரத்தில் மீண்டும் இவர்கள் பிறப்பதில்லை.

ஜெயில் பல வருடம் சிறை கைதியாக இருந்த ஒருவன், ஒருநாள் விடுதலை பெற்றது போன்ற நிலையே "கைவல்யம்".

சிறையில் இருந்து விடுதலை அடைந்தோமே!!
என்ற சந்தோஷத்தில் இன்பமாக ஊர் முழுக்க அலைபவன் போல,
கைவல்யம் பெற்றவனும் இருக்கிறான்.
இதையே "ஞான இன்பமேயோ" என்று சொல்கிறார்.

"கைவல்யம்" என்ற மோக்ஷத்தை விட, "பரமபதமே" நமக்கு சிறந்தது என்பதால்,
கடைசியாக,
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
என்று சொல்லி பரமபதத்தை நமக்கு காட்டுகிறார் ஆழ்வார்.

அத்வைத ஞானம் பெற்றவன், நானே பரமாத்மா என்று நினைப்பதால், கைலவல்யம் மட்டுமே அடைகிறான்.
அதாவது "விடுதலை" மட்டுமே அடைகிறான்.
ஆனால் "வீடு" போய் சேர்வதில்லை.

ஜெயிலில் பல வருடம் அடைபட்டு, விடுதலை அடைந்தவன், "விடுதலை அடைந்தேன்" என்பதிலேயே திருப்தி அடைவது போல "கைவலயம்".

"உடல் நானல்ல, ஆத்மாவே நான்" என்ற ஞானத்தோடு,
"என் வீடு எது? என் தகப்பன் யார்? என்னை படைத்தவன் யார்?" என்று அறிந்தவன், மோக்ஷம் அடையும் போது, பரமபதம் என்ற வீடு போய் சேருகிறான்
என்கிறார் ஆழ்வார்.

"பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
இதையே
"என் அவா அறச் சூழ்ந்தாயே"
என்கிறார் நம்மாழ்வார்.

பரமபத நாதனான நாராயணனை தொழுவோம்.

குருநாதர் துணை.