Followers

Search Here...

Showing posts with label சடாரி. Show all posts
Showing posts with label சடாரி. Show all posts

Sunday 14 June 2020

பாசுரம் (அர்த்தம்) - தாள்களை எனக்கே... நம்மாழ்வார் பரமபத நாதனான விராட் ரூபனாக நினைத்து பாடிய அழகான பாசுரம். சடாரியின் பெருமையை விளக்கும் பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபுருஷன் "அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருப்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான கண்களுடன், தலையுடன், தானே அனைத்துமாக இருக்கிறார்"
என்று பரவாசுதேவனின் விராட் ரூபத்தை 'புருஷ சூக்தம்' வர்ணிக்கிறது.
இந்த புருஷ சூக்தத்தின் அர்த்தத்தை, தமிழில் பாசுரமாக பாடி கொடுத்து விட்டார் நம்-ஆழ்வார்.




தாள்களை எனக்கே
தலைத்தலை சிறப்ப தந்த பேருதவி 
கைம்மாறா !! 
தோள்களை ஆரத் தழுவி !
என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ !!

தோள்கள் ஆயிரத்தாய் !
முடிகள் ஆயிரத்தாய் ! துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !
பேர்கள் ஆயிரத்தாய் !
தமியனேன் பெரிய அப்பனே !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)


தன் பலத்தால் "பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை" பிடித்து வைத்து இருந்த பலி சக்கரவர்த்தி,
தானமாக, தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்தான்.

"7 லோகங்களையும் அடமானம் வைத்தாலும், தன் திருவடிக்கு ஈடு ஆகாது"
என்று மிரட்டி, 'மூன்றாவது அடி எங்கே?' என்று பெருமாள் கேட்க,
தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்து நின்றான் பலி சக்கரவர்த்தி.
தன் சொத்தையும், தன்னையும் சமர்ப்பணம் செய்த பிறகு, அதற்கு கைமாறாக பெருமாள் தன் திருவடியை தொடும் ஆனந்தத்தை பலி சக்கரவர்த்திக்கு கொடுத்தார்.
இது வாமன அவதார சரித்திரம்.   




பெருமாளின் திருவடியை தான் நமக்கு கோவிலில் "சடாரி" என்று வைக்கிறார்கள்.

"பெருமாளின் திருவடி சம்பந்தம் கிடைக்க", பலி சக்கரவர்த்தி தன் சொத்து அனைத்தையும் கொடுத்து, தன்னையே கொடுத்தான்.
ஆனால்,
ஒன்றுமே கொடுக்காத நமக்கு, கைம்மாறு எதிர்பார்க்காமல் பெருமாள் தன் திருவடி (சடாரி) கொடுத்துவிட்டாரே !!

"கைம்மாறு எதிர்பார்க்காமல், தன் திருவடியை (தாள்களை) என் தலை மேல் வைத்து சிறப்பித்து (எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த) பேருதவிக்கு நான் என்ன செய்வேன்?" என்று திகைக்கிறார்.

பெருமாள் திருவடி (சடாரி) தன் தலை மீது பட்டதால், தன் சரீரமே பெருமாள் சொத்து ஆகி விட்டது என்ற பூரிப்பில், நம்மாழ்வார் தன்னையே ஆரத்தழுவி கொண்டு (தோள்களை ஆரத் தழுவி) "எனது ஆத்மாவை, அந்த பரஞ்சோதியான நாராயணனுக்கு பரிபூரணமாக சமர்ப்பணம் செய்து விட்டேன் (என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ)"
என்று தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்கிறார்.
தானே அனைத்துமாக விராட் புருஷனாக இருக்கும் பெருமாள், 
ஒவ்வொருவரின் உள்ளிலிருந்து கொண்டு, பார்க்க செய்கிறார், கேட்க செய்கிறார் என்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான தோள்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கண்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கால்களாகவும், 
அவரே ஆயிரக்கணக்கான பெயர்களுடனும்,
இருக்கிறார், என்று புருஷ சூக்த்தத்தை அப்படியே தமிழில் நமக்கு கொடுத்து விட்டார்.

பலி சக்கரவர்த்தி தன்னையும், தன் சொத்துகள் அனைத்தையும் கொடுத்தார். அதற்கு கைமாறாக தன் திருவடியை கொடுத்தார்.
ஆனால்,
திறன் இல்லாத நமக்கு (தமியனேன் எனக்கு), கைம்மாறு எதிர்பார்க்காமல் தன் திருவடியை கொடுத்த பெருமாள், நமக்கு "அப்பா" என்று உறவு காட்டி அழைக்கிறார்.

நம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடு இல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.




பெருமாளின் திருவடி (சடாரி) நம் மீது பட்டாலே, அனைத்து பாவங்களும் போய் விடும் என்று ராமபிரானின் சரித்திரம் மூலமே நிரூபணம் ஆனது.
நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றுநம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடுஇல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.

நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றும் "எம் பெருமாள்" என்று
ம் உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம். ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். "எம் பெருமாள்" என்று
உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம்.
ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள்.