Followers

Search Here...

Monday 14 December 2020

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்?  ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

அசக்தொள பூமௌ நிகனேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.


அப்சு வா பிரவேசயேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.


ஆர்யாய வா பர்யவதத்யாத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.


அந்தர்தினே வா சூத்ராய |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.

நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான். 

குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..

கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.


இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.. 

மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..

Sunday 13 December 2020

லா இலாஹி இல் அல்லா (Islam), ஸ ஏக புருஷ (Veda) - ஹிந்துக்களுடன் மத நல்லிணக்கம் - மிக முக்கியம்..

 ஹிந்துக்களுடன் மத நல்லிணக்கம் - மிக முக்கியம்.. 

அரேபிய குதிரையில் உருது பேசி கொண்டு வந்த இஸ்லாமியர்கள், மொழி புரிந்து கொள்ள முடியாததால், 'தான் சொல்லும் மத கொள்கை ஹிந்துவிடம் இல்லை' என்று நினைத்துக்கொண்டு 947ல் ஆரம்பித்து 1857 வரை பெரும் சண்டையிட்டான்.


இன்று மொழி தடை இல்லை... இருவரும் என்ன சொல்லிக்கொள்கிறார்கள்?.. கொஞ்சம் கவனிப்போம்.


இஸ்லாமின் மிக முக்கிய நம்பிக்கையாக இருக்கும் சொற்கள்...

அல்லா கு (பரம்பொருளே) அக்பர் (மிக பெரியவர்

லா இலாஹி இல் அல்லா (ஒரே பரம்பொருள் தான் இருக்கிறார்)





ஹிந்துக்களுக்கு உணரும் வேத வாக்கியங்கள்..

ஸ ஏக புருஷ (ஒரே பரம்பொருள் தான் இருக்கிறார்)

பர ப்ரம்மம் (ப்ரம்மம் 'பரம்பொருள்' அனைத்துக்கும் அப்பாற்பட்டவர் (பர))

பூர்வ மேவா இஹா சமிதி தத் புருஷஸ்ய புருஷத்வம் (எல்லா படைப்புக்கும் முன், யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் இருந்து கொண்டே இருக்கிறார்)

ஹ்ரீஸ்சம் தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ (அந்த புருஷன் லக்ஷ்மியை பத்னியாக (nature) கொண்டு இருக்கிறார் - புருஷ சூக்தம்)

இது வரை வேதம் சொல்வதையும், குர்ரான் சொல்வதையும் பார்க்கும் போது,

'இஸ்லாமும், ஹிந்துக்களின் அத்வைதமும் வித்யாசம் இல்லை' என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மத ரீதியில் ஹிந்துக்கள் இஸ்லாமை எதிர்க்காமல் இருப்பதற்கு காரணம் இதுவே...


மேலும், வேதம் பரம்பொருளை பற்றி சொல்லும் போது, தெய்வம் அவதாரம் செய்யும் சக்தி கொண்டது என்பதோடு நிற்காமல், நீயும், நானும் கூட உடலை நீக்கி ஆத்மா என்று பார்த்தால், அதுவும் அந்த பரம்பொருள் தான் என்கிறது.  

இது பரம்பொருளை பற்றிய மேற்படிப்பு.  

உன்னிலும் தெய்வம் இருக்கிறார்.. என்னிலும் தெய்வம் இருக்கிறார் 

என்று சொல்லும் வேதம், ஹிம்சை செய்யாதே என்று நமக்கு சொல்வதை அறியும் போது தான்…  ஹிந்து தர்மத்தின் பெருமை நமக்கு தெரியும்...


புருஷயம் புருஷ மீக்ஷதே (அந்த புருஷன் அனைவரது நெஞ்சிலும் இருக்கிறார்)  

- இந்த வேத வாக்கியத்தை சத்தியம் செய்யவே, அந்த பரம்பொருள் (நாராயணன்),  சிவனாகவும், விஷ்ணுவாகவும், உலகில் ராமனாகவும், கிருஷ்ணனாகவும், நரசிம்மராகவும், வாமனனாகவும் அவதரித்தார்

அவர் தன் சக்தியால் கல்லிலும் பிரவேசிக்கிறார். தண்ணீரே நாராயண தீர்த்தம் என்று கூட நீரில் பிரவேசிக்கிறார்.


ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி (அந்த ஒரே புருஷனே/பரம்பொருளே பல வித ரூபத்திலும் பெயரிலும் இருக்கிறார்

- இந்த வேத வாக்கியத்தை படிக்கும் போதே, ஜீவஹிம்சை செய்யாதே என்ற ஞானம் நமக்கு போதிக்கப்படுகிறது. 

உடல் என்று பார்த்தால், அவன் வேறு, நீ வேறு என்று தோன்றலாம்.

ஆத்மா (உயிர்) என்று நீ பார்க்க ஆரம்பித்தால், இருவருமே பரம்பொருள் தான் என்று தெரிந்து கொள்! 

என்கிறது ஹிந்து தர்மம்.


மத சண்டையை ஹிந்துக்கள் விரும்புவதில்லை..  




ஆனால், 

அத்வைத தத்துவம் தாண்டி பேசும் ஹிந்து தர்மத்தை ஒப்புக்கொள்ள முடியாதவர்களுக்கு ஹிந்துக்கள் வழிபடும் முறை பிடிப்பதில்லை. 

பிடிக்காத பட்சத்தில், ஆதி சங்கரர் போன்றார் சொல்லும் அத்வைதம் போல தான் ஒரே பரம்பொருள் தத்துவத்தை இஸ்லாமும் சொல்கிறது 

என்று நினைத்து, நட்புடன் இருக்க வேண்டும்.


முருகனை கும்பிட்டாலும், ஹிந்துக்கள் "இறைவன் ஒருவனே! அவரை நான் முருகனாக பார்க்கிறேன்"! என்கிறான். 

இதில் என்ன தவறு இருக்க முடியும்?


ராமனை கும்பிட்டாலும், ஹிந்துக்கள் "இறைவன் ஒருவனே! அவரை நான் ராமனாக பார்க்கிறேன்"! என்கிறான். 

இதில் என்ன தவறு இருக்க முடியும்?

 

ஒரே மனிதன் தான்.. 

"இது என் அப்பா" என்கிறான், பிள்ளை.

"இது என் கணவர்" என்கிறாள் மனைவி.


நீ எப்படி மனிதனை அப்பா என்று உருவகம் செய்யலாம்? என்று கேட்டால்?

நீ எப்படி மனிதனை கணவர் என்று உருவகம் செய்யலாம்? என்று கேட்டால்?


ஹிந்து தர்மம் கொஞ்சம் கடவுள் விஷயத்தில் PhD செய்த தர்மம். 

புரிந்து கொள்ள முடியாவிட்டால், பரவாயில்லை..  இருக்கவே இருக்கிறது, அத்வைதம்..  


ஸ ஏக புருஷ (ஒரே பரம்பொருள் தான் இருக்கிறார்) - அத்வைதம் சொல்வதை அனைவரும் ஏற்று தானே ஆக வேண்டும்.. 

இதை தானே மற்ற மதமும் சொல்கிறது.

சிந்திப்போம்..  மத ரீதியான ஹிந்து விரோதத்தை விலக்குவோம்.

Saturday 12 December 2020

கோவிலை சீர்திருத்தம் செய்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்ற வழி.. தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்க வழி.. டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை

இன்றைய கோவில்கள் நிலை:

* கோவில் நிர்வாகம், கோவில் நிலம், சொத்து, வருமானம், உத்சவங்கள், திருப்பணிகள் அரசு கவனிக்கிறது.
* 13000 கோவில்கள் (அதற்கு மேலும் இருக்கலாம்) தமிழ்நாட்டில் இருந்தாலும் (அதில் 108 திவ்ய தேசங்களில் 80க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும், நாயன்மார்கள் பாடிய சிவ ஸ்தலங்கள் ஆயிரம் இருந்தாலும்) இந்த 13000க்கும் மேற்பட்ட கோவில்களில் அதிகபட்சம் இவர்களுக்கு மீனாட்சி கோவில், திருவரங்கம், பழனி என்று 10 கோவில்கள் மட்டுமே பெரும் வருமானம் கொடுக்கிறது.
* 10 கோவில்களில் வரும் வருமானத்தை, அரசு பகிர்ந்து 13000 கோவில்களில் விளக்கு ஏற்றும் அளவுக்காவது உதவி செய்கிறது. 
அது போக, இந்த 10 கோவில்களின் வருமானத்தில் வரும் மீதி பணத்தை கோவிலில் வேலை பார்க்கும் அதிகாரிகள் முதல் மூஞ்சூர் வரை சம்பளமாக பெறுகின்றனர்.. 

காலை 4மணிக்கு குளித்து பூஜை ஆரம்பித்து இரவு வரை பூஜை செய்து, கேலி செய்யும் மக்களை, பொறாமை படும் மக்களிடம் கோபப்படாமல் விபூதி, அர்ச்சனை செய்யும்  அர்ச்சகனுக்கு 5000 ரூபாய் சம்பளம்
"தட்டில் கிடைக்கும் காசை வாங்கி கொள்" என்று கிண்டல்.. 
12 வருடம் வேதம் படித்து, "கோவிலே கதி" என்று இருக்கும் அர்ச்சகருக்கு மதிப்பு இல்லை. 

கோவிலை எப்போது மூட வேண்டும்? 
யார் வந்தால் தனியாக மீண்டும் தீபாதாரனை காட்ட வேண்டும்? 
என்று அரசு அலுவல் அதிகாரி தான் சொல்வார். அதை அர்ச்சகர் கேட்க வேண்டும். 
அதிகாரிகளுக்கு உள்ளே இருக்கும் மூலவர் கற்சிலை.. தெய்வமில்லை.




* இது தவிர, 10 கோவிலில் வரும் மீதி வருமானம் அரசாங்கமும் பொது செலவுக்கு எடுத்து கொள்ளும்.

இன்றைய நிலை:
* வேதம் படித்து அர்ச்சர் ஆகி 5000 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ முடியாததால், இவர்கள் சந்ததி குறைந்து விட்டனர். ப்ராம்மணர்களை விரட்ட, அவர்கள் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
வேலை வாய்ப்பு போட்டிகள், பிராம்மண வெறுப்பு உண்டாகி விட்டது.

* 10 கோவிலால் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கவனிக்கும் அரசு, மிச்சம் இருக்கும் 13000 கோவிலை குப்பை மேடாக ஆக்கி விட்டது...
காஞ்சியில் மட்டும் 18 திவ்ய தேசங்கள் உண்டு. 
ஆனால் இவர்கள் கண்களுக்கு காஞ்சி வரதர் கோவில் மட்டும் தான் வருமானம் தரும் என்று ஆக்கி விட்டனர். 
மற்ற கோவில்களை சென்று பார்த்தால், கோபுரத்தை கட்டிய அரசனுக்கு பிறகு இன்று வரை யாரும் அதை சரி செய்ய முயன்றதாக தெரியவில்லை.

இது போன்ற பல கோவில்களை காப்பது ஒரு கிழ அர்ச்சகர். 
அவர் பிள்ளையும் அர்ச்சகர் ஆக வேண்டாம் என்று படித்து அமெரிக்காவில் செட்டில்.
கோவிலை அழிக்க அருமையாக காய் நகர்த்தி, 13000 வருமானம் தராத கோவில்களில், வேதம் அறிந்த சந்ததிகள் இல்லாமல் செய்து விட்டனர்...
மறு பக்கம், 
ப்ராம்மணனும் வேலைக்கு வருகிறான் என்று பொறாமை வேறு...

* அரசாங்க அதிகாரிகள் கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் தினமும் பட்சணம், காபி சாப்பிட்டு வாழ்கிறார்கள். நிம்மதியான வாழ்க்கை...

* தேவைப்பட்டால், 13000 கோவில்களில் ஒரு கோவிலை இடித்து வேறு ஏதாவது அரசாங்க கட்டிடம் கட்டவும் இவர்களுக்கு வழி உண்டு, காரணமும் உருவாக்குவார்கள்..

* நிர்வாகம் தான் முக்கியம் என்பதால், கோவிலை நிர்வகிக்க கமலஹாசன் போன்ற குணம் கொண்ட இந்துவாக உள்ள நாதீகனும் பதவிக்கு வரலாம், கிறிஸ்தவனும் பதவிக்கு வரலாம்.
இவர்கள் என்ன நாசமும் செய்யலாம்.. இல்லை ஒன்றுமே செய்யாமல் கோவிலை தானாக அழியவும் செய்யலாம்...

கோவிலையே வியாபார ஸ்தலமாக்கி, கோயிலிலேயே கடைகள் அமைக்க இடம் கொடுத்து, 
கோவிலில் நாயன்மார் பாடிய பதிகங்கள் பாடிய ஓதுவார்களை அழித்து விட்டனர்.. 
அவர்கள் சந்ததியும் இன்று வேலைக்கு சென்று விட்டனர்.. 
திருவாசகம் என்ற தமிழை வளர்க்க ஆள் இல்லை. இந்த தமிழை புரிந்து கொள்ளாத தமிழர்கள் ஆக்கி விட்டனர்.
எப்படி பார்த்தாலும், கோவிலில் வருமானம் பார்க்கலாம் என்று தான் பார்க்கிறார்கள்..


மாற்றம் என்ன?

'சிலர் அரசு கோவில் நிர்வாகத்தை விட்டு செல்ல வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார்கள்..

இது சரி போல இருந்தாலும், பிரச்சனை உருவாக்கவும் இது செய்யும்..

ஆதீனங்கள், தீட்சிதர்கள் கட்டுக்குள் இருக்கும் சில கோவில்களை பார்த்தால், கோவிலுக்கு வரும் உண்மையான பக்தனுக்கு வருத்தம் தான் வரும்..

அத்தனை பெருமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் எப்படி உள்ளது?
உள்ளே இருக்கும் சிவபெருமான், அம்பாள் தவிர, பார்க்கும் இடமெல்லாம் எண்ணெய் படிந்த அழுக்கு, கும்பாபிஷேகம் செய்ய சோம்பேறித்தனம்..  கோவில் கோபுரங்களில் செடிகள்...

அது போல, சிதம்பரம் கோவிலுக்கு சென்றால், அர்ச்சனை செய்கிறோம் என்று பிடிவாதமாகவாவது கேட்டு காசு வாங்கி கொள்கிறார்கள் தீட்சிதர்கள்.. 
அவர்கள் இதை நம்பி தான் வாழ்க்கை என்பதாலோ என்னவோ, வரும் பக்தர்களில் காசு கொடுப்பவர்களுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள்..

இப்படி பார்க்கும் போது, ஒட்டு மொத்தமாக அரசு விலகுவது கூடவே கூடாது
ஒரு மேற்பார்வை அவசியம்..


இதோ என்னுடைய பிளான்:
1. கோவிலை விட, கோவிலில் எந்த தெய்வம்? என்பது மிக முக்கியம்... 

நிர்வாகம் செய்பவர் கமலஹாசன் போன்ற பல வித்தைகள் செய்ய தெரிந்தவர் என்றாலும், அந்த கோவில் தெய்வத்திடம் பக்தி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியம்..

ராமானுஜர் அடியார்கள் இருக்கிறார்கள். பக்தி உள்ளவர்கள் தான். 
திறன் அடிப்படையில் ஒரு நாமம் போட்டு கொள்ளும் விஷ்ணு பக்தனை, 'திருவண்ணாமலை கோவிலை நிர்வாகம் செய்' என்று செய்தால், அதை விட வேறு முட்டாள் தனம் இருக்கவே முடியாது...
ஆக, 
சில நடைமுறை சிக்கலை உணர்ந்து இப்படி செய்யலாம்..




* 13000 கோவில்கள் தமிழகத்தில் இருக்கிறது என்றால், மூலவராக இருக்கும் ஸ்வாமியை பொறுத்து காஞ்சி மடம், ஜீயர் மடம், ஆதீனம், என்று தெய்வமே கதி என்று இருக்கும் இவர்களிடம் நிர்வாக பொறுப்பை கொடுக்கலாம். 

முழுவதும் கொடுக்காமல், சுழற்சி முறையில், உடுப்பி கோவிலில் உள்ளது போல, 4 வருடத்திற்கு கோவில் பொறுப்புகளை மாற்ற வேண்டும்...

உதாரணத்திற்கு, காஞ்சியில் உள்ள 18 திவ்ய தேச கோவில்களை ஒரு ஜீயர் (வடகலை ஜீயரா? தென்கலை ஜீயரா? என்பது அந்த கோவில் அர்ச்சகரை கேட்டாலேயே தெரிந்து கொள்ளலாம்) மடம் நிர்வாகம் செய்ய வேண்டும். உதாரணமாக, வடகலை ஜீயர், தேசிகர் வழி வந்த ஜீயர் மடம் நிர்வகிக்க வேண்டும்.
அதுபோல,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 15 வடகலை சம்பிரதாய கோவிலை இன்னொரு வடகலை ஜீயர் நிர்வகிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுக்கு பிறகு, கோவில் நிர்வாகம் சுழற்சி செய்யப்பட்டு, ஒரு புத்துணர்ச்சி உண்டாக்க வேண்டும்..

இவர்கள் கோவில் நிர்வாகம், உத்ஸவம், வருமானம், பணி அமர்த்தல் பார்த்து கொள்ள வேண்டும்.

பாகுபாடு, பொறாமை காட்ட விடாமல் இருக்க, அரசு மேற்பார்வை வேண்டும்.

அதற்கு ஒரு சிலர் மேற்பார்வைக்கு அரசு பணி அமர்த்தலாம்..

இப்படி சிவன் கோவிலுக்கு சைவ மடங்கள் என்று கொடுத்தால், அவர்கள் நிர்வாகம் செய்வார்கள்..

வரதர் கோவிலுக்கு வரும் வருமானத்தை கொண்டு, தன்னிடம் இருக்கும் மற்ற 15 கோவில்களை பக்தி இருப்பதால், உண்மையாக செலவு செய்ய ஆரம்பிப்பார்கள்.
அனைத்து கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடக்க ஆரம்பிக்கும்.. 
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்கும்..

"கோவில் நடத்த அர்ச்சர் தேவை" என்ற நிலையில், 
"மற்றவர் வேலையை பிடுங்குகிறான் பிராம்மணன்" என்ற நிலை மாறி, பிராமணர்கள் வேதம் படித்து கோவில் அர்ச்சகன் ஆக முயல ஆரம்பிப்பார்கள்..

அரசுக்கு மற்ற ஜாதிகார்களுக்கு அதிகம் வேலை கொடுக்க முடியும்..
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்க, கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் உள்ள கடைகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்..
சுய தொழில் பெருகும்..

10 கோவில் வருமானமே இவ்வளவு பேருக்கு சோறு போடும் நிலையில், இந்த மாற்றத்தால் 13000 கோவிலும் பழனி, திருப்பதி போல பிரகாசம் அடையும்..
13000 கோவில்களும் பெரும் வருவாய் தரும்.. 

காஞ்சியில் உள்ள பாண்டவ தூதன் பெருமாளுக்கு பெரிய ரதத்தில் தேர் விட்டு கொண்டாடினால், 
காஞ்சி மடம் காமாக்ஷி கோவிலில் அதை விட பெரிய தேர் அமைத்து சிவ பக்தர்களை மகிழ்விப்பார்கள்..

இது ஆரோக்கியமான போட்டியாகவும் இருக்கும். 

'பொறாமை ஏற்படாமல் பார்த்து கொள்வது' நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்கும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு.

இப்படி சரியாக கோவில் நிர்வாகத்தை கட்டு அமைக்கும் போது, 
பக்தி வளரும்.. 

சிவ பக்தன் லட்சம் லட்சமாக சிதிலமடைந்த தன் இஷ்டப்பட்ட கோவிலுக்கு கொடுக்க முன் வருவான்.. 
கோவில்கள் மீண்டும் பிரகாசிக்க, சுய தொழில் பெறுக ஆரம்பிக்கும்.

108 திவ்ய தேசத்தில் ஒரே ஒரு கோவில் திருப்பதி.. 
அந்த கோவில் இருப்பதோ மலை உச்சியில்..  
மலை உச்சுக்கு சென்று கோடி கோடியாக பணம் கொட்டுவதற்கு காரணம் கோவிலை பக்தர்கள் நிர்வாகம் செய்கிறார்கள்..
மேற்பார்வை அரசு செய்கிறது... 

அது போல நாமும் இந்த கட்டமைப்பை செய்து விட்டால், 

15 கோவிலை நிர்வாகம் செய்யும் ஒரு மடத்திடம், வருடா வருடம் 15%  வருமானத்தை அரசு தாராளமாக கேட்டு கொள்ளலாம்.

மீதி பணத்தை இவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள்? 
ன்ற மேற்பார்வை ஆலோசனை மட்டும் வழங்கலாம்.. 

85% வருமானத்தை கொண்டு இவர்கள் கையாள முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.. 
பணி அமர்த்துவது, மற்ற கோவிலுக்கு செலவு செய்வது, ஊதியம் அதிகமாக கொடுப்பது என்ற எதிலும் இவர்கள் தலையிட கூடாது..

இந்த மாற்றம், தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்கி விடும்.

ஒரு பக்கம் திருவாசகம் ஓதும் ஒலி கேட்கும்.
ஒரு பக்கம் பாசுரங்கள் ஓதும் ஒலி கேட்கும்.
கோவிலை சுற்றி சுய தொழில் பெருகும். 

இந்திய மக்கள், 
கோவில் தேசமான தமிழகத்தை பார்க்க 4 கோவிலை அல்ல, 13000 கோவிலையும் பார்க்க வருவார்கள்...

பெரும் வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும் போது, வேலை கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கு குறையும்..

அவரவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பிப்பார்கள்..

இதை விட்டு விட்டு, "கோவில் நிர்வாகம் அரசு எடுக்கவே கூடாது." என்று சொன்னால் வைணவ கோவிலுக்கு மற்றவர்கள் நுழைய முடியாமல் கூட போகலாம்.
சைவ வைணவ சண்டை கூட வரலாம்.

மேற்பார்வை செய்ய அரசு நிர்வாகம் தேவை.

Election commission போல, அரசு அதிகாரியாக இருக்கும் சிலரை ஆண்டு வருமானம் என்ன? என்று கவனித்து, 
அதில் 15% வருமானத்தை அரசு கஜானாவில் போட தற்காலிக அமைப்பும் செய்யலாம்.. 
இதனால், நிரந்தர மேற்பார்வை கூட தேவை இல்லை அரசுக்கு..

இது நடைமுறைக்கு கொண்டு வந்தால், 
கோவில் நிறைந்த தமிழகம் பெரும் கோடிகளை தானே சம்பாதிக்கும்..

"டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை" அரசுக்கு என்று தோன்றி விடும்.

பக்தி உள்ளவர்கள் கோவிலை பார்க்கும் போது, தானாக இடிந்து போன கோவில்கள் நிமிரும்.

சிவன் கோவில் இடிந்து கிடப்பதை பார்க்கும் மடாதிபதிகள், அதை சரி செய்ய சிவ பக்தர்களை கொண்டே திருப்பணி செய்து விடுவார்கள்..

பூஜைகள் நடக்க, திருவிழாக்களை நடக்க ஆரம்பிக்க, தொழில் பெருகி, வருமானம் கொட்ட ஆரம்பிக்கும்..

அரசுக்கு உட்கார்ந்தபடி கோடி கோடியாக வருமானம் கிடைக்கும்..
பக்தியும் வளரும்..

உங்கள் கருத்து என்ன?...

Monday 7 December 2020

ஆபஸ்தம்ப ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே.. "ஆபஸ்தம்ப" என்றால் என்ன அர்த்தம்? நம் ரிஷிகளின் பெருமையை...

ஒரு சமயம், 
வேதம் கற்ற ப்ராஹ்மணர் ஒருவர் தன் கிரஹத்தில் ஸ்ராத்தம் (திவசம்) செய்தார். 
  
பித்ருக்களுக்கு கொடுக்கும் உணவை ஏற்று, போஜனம் செய்விக்க ஒரு பிராஹ்மணருக்காகக் காத்திருந்தார்.

வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். 
அவர் நல்ல பசியுடன் இருந்தார். 
அவரை அமர்த்தி இலை போட்டு, தானே பரிமாறினார் கர்தா. 

வந்த பிராஹ்மணர், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். 




"ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும்" 
என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். 

போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்தாவின் கண்களில் முதலில் இருந்த 'வினயம்' மறைந்து 'ஏளனம்' குடிகொண்டது. 
அதைத் தன் செயல்களிலும் காட்டினார். 

அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

"அபரிதமாக உண்டும் திருப்தியடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்" 
என்று கர்தா நினைத்தார். 

சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 

'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' 
என்று பிராஹ்மணர் கேட்கவே கர்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'திருப்தியாயிற்றா!?' 
என்று கேட்டார். 

(போஜனம் முடிந்தபோது கர்தா பிராஹ்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 
திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்தாஸ்ம:' என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) 

ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' ('எனக்கு திருப்தி இல்லை') என்று சொன்னார்! 
 
கர்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 
'இவர் கேட்க கேட்க கொண்டு வந்து கொட்டினேனே! 
மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை! என்று சொல்லி, என்னை அவமானப்படுத்தி, 
நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த பிராஹ்மணர் கெடுத்துவிட்டாரே!!' 
என்று சினந்தார். 

கர்தா நல்ல தபஸ்வி. 

கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க, கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. 

வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். 

தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்தார். 

'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' 
என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர், 
'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய்.
உன் பார்வைகளாலும், செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

'ஸ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான்' 
என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய்.

உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். 

'ஸ்ரார்த்தம்' என்றாலே 'சிரத்தை' (ஈடுபாடு) என்று அர்த்தம்.
உன் தகப்பனுக்கு செய்ய, எத்தனை ஈடுபாட்டுடன் நீ இருக்கிறாய், என்பதே முக்கியம்.
எத்தனைக்கு எத்தனை சிரத்தையுடன் செய்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை பலன் பித்ருக்களிடமிருந்து உனக்கு கிடைக்கிறது.

ஸ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்!' 
என்றார். 

அதற்குக் கர்தா¸ 
'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். 
இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். 
நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?' 
என்று வினவினார். 

அதற்கு அந்த பிராஹ்மணர்¸
"நான் 'ந' என்று சொல்லி ஸ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. 
புருஷ சூக்தம் பாராயணம் செய்! 
இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!" 
என்றார். 




அதை பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார் கர்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால், அவரை "ஆபஸ்தம்பர்" என்று அழைத்தார்கள். 

ஸ்ராத்த காலத்தில், புருஷ சூக்தமும், காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. 

"ஆப" என்றால் நீர்
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார்
ஆபஸ்தம்பரின் சூத்ரம் பிரசித்தமானது. 

அதில் சில சூத்திரங்களை தெரிந்து கொள்ள, இங்கே படிக்கலாம்.

Sunday 6 December 2020

குருவிடம் எப்படி பழக வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். சிலவற்றை தெரிந்து கொள்வோமே..

குருவிடம் எப்படி பழக வேண்டும்? 
'ஆபஸ்தம்ப ரிஷி' சொல்கிறார். தெரிந்து கொள்வோமே.. 
1.
ந ச ஏனம் அபிப்ரசாரயீத 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது. 

2. 
கச்சந்தம் அனுகச்சேத் அணுகம்
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும். 




3.
தாவந்தம் அனுதாவேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும் 

4. 
ந ஸ உபான: வேஷ்டிதசிரா அவஹித பானிர் அவதா வா ஆசீதேத் | 
அத்வா ஆபன்னாஸ் து கர்ம யுக்தோ வா ஆசீதேத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது. 
ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை. 

5. 
ந சேத் உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகில் அமர கூடாது. 

6. 
தேவம் இவ ஆசார்யம் உபாசீத அவிகதயண் 
அவிமனா வாசம் சுஸ்ரூசமானோ ஸ்ய 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர் சொல்வதை கவனத்துடன், ஆசையுடன் கேட்க வேண்டும். 

7. 
அனுபஸ்த க்ருத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது. 

8. 
அணுவாதி வீத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும். 


9. 
அப்ரதிஷ்டப்த: பாணினா 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது. 

10. 
அனபஸ்ரிதோ நியத்ர 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது. 

11. 
அபிமுகோ ந அபிமுகம் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது. 

12. 
அனாஸன்னோ ந திதூரே | 
யாவத் ஆசீனோ பாஹுப்யாம் ப்ராப்நுயாத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. 
குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும். 

13.
ஏக அதயாயீ தக்ஷிணம் பாஹும் ப்ரதி உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
ஒரே ஒரு சிஷ்யனாக இருக்கும் சமயத்தில், குருவுக்கு வலது பக்கம் அமர வேண்டும். 

14. 
யதா அவகாசம் பஹவ: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம். 

15. 
திஷ்டதி ச ந ஆசீத அனாசன யோக விஹிதே | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது. 
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது. 

16. 
ஆசீனே ச ந சம்விசேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஆசனத்தில் அமராமல் தரையில் அமர்ந்து இருக்கும் போது, நாம் ஆசனத்தில் (chair) அமர கூடாது. 

17. 
சேஷ்டதி ச சிகீர்ஷன் தச் ஷக்தி விசயே 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.. 

18. 
ந ச யஸ்ய சகாஸே ந வக் ஸ்தானினம் உபசம்க்ருஹ்நீயாத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது. 

19. 
கோத்ரேன வா கீர்த்தயேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது. 

20. 
ந ச ஏனம் ப்ரதி உத்திஷ்ட்டே அனூத்திஷ்ட்டே வா | 
அபி சேத் தஸ்ய குரு ஸ்யாத் | 
தேசாத் த்வ ஆசனாச் ச சமஸர்பேத் | 
யஸ்மிம்ஸ் த்வ அனாசார்ய சம்பந்தாத் கௌரவம் 
வ்ருத்திஸ் தஸ்மின் அன்வக் ஸ்தாநீய பை ஆசார்யஸ்ய |
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் குருவை மீறி அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது. 
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமானம் செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம். 




21. 
ந ஸ்மயேத | 
யதி ஸ்மயேத அபிக்ருஹ்ய ஸ்மயேத இதி ஹி ப்ராஹ்மணம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
வாயை திறந்து கொட்டாவி விட கூடாது. 
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும் 

22. 
விசம கதே த்வம ஆசார்ய உக்ரதா: சூத்ரதோ வா ஆஹரேத் | 
சர்வதா சூத்ரதா உக்ரதோ வா ஆசார்ய 
அர்தஸ்ய ஆஹரணம் தார்ம்யம் இதி ஏகே | 
தத்வா ச ந அனுகதயேத் | 
க்ருத்வா ச ந அனுஸ்மரத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன்னால் முடிந்தவரை சம்பாவனை செய்தும், குரு முழுதிருப்தி அடையவில்லை என்றால், வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். 
தேவைப்பட்டால், முழு சம்பாவனையுமே வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது. 
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது. 

23. 
ஸய்யா ஆசனே ச ஆசரிதே ந ஆவிசே |  
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 

24. 
ந அநபிபாஷிதோ குரும் அபிபாஷேத ப்ரியாத் அன்யத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது. 

25. 
சமாவ்ருத்தஸ்ய அபி ஏதத் ஏவ சாமயாசாரிகம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும். 

26. 
சஹ வசன் சாயம் ப்ராத: 
அநாஹுதோ குரும் தர்சன அர்தோ கச்சேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும். 

27. 
முஹும்ஸ் ச ஆசார்ய குலம் தர்சன அர்தோ கச்சேத் 
யதா சக்தி அதிஹஸ்த்யம் ஆதாய அபி தந்த ப்ரக்ஸாலனானி இதி | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும்.
தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.

குருநாதர் துணை