Followers

Search Here...

Showing posts with label செய்ய. Show all posts
Showing posts with label செய்ய. Show all posts

Monday 14 December 2020

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்?  ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

அசக்தொள பூமௌ நிகனேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.


அப்சு வா பிரவேசயேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.


ஆர்யாய வா பர்யவதத்யாத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.


அந்தர்தினே வா சூத்ராய |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.

நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான். 

குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..

கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.


இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.. 

மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..

Friday 24 April 2020

நிர்வாகம் செய்ய, குடும்பம் நடத்த முக்கியமான தகுதி எது? தெரிந்து கொள்ளவேண்டும்...

சகிப்பு தன்மை
குடும்பத்துக்காக சம்பாதித்து, குடும்பத்துக்காகவே உழைத்தாலும்,
குடும்பத்தில் உள்ளவர்களே சில சமயம் அவமானப்படுத்தவும் செய்வார்கள். திட்டுவார்கள்.




"குடும்பத்துக்கே இவன் தான் ஆதாரம்"
என்று தெரிந்தும் அவமானம் செய்யத்தான் செய்வார்கள். குறை கண்டுபிடிப்பார்கள்.
இது இயற்கை என்று உணர வேண்டும்.
பலரை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவனுக்கும் இதே நிலை தான்.
கீழே வேலை பார்ப்பவர்களே திட்டுவார்கள், கேலி செய்வார்கள்...

இப்படி கேலி செய்பவர்களை, திட்டுபவர்களை கண்டு கோபப்பட்டால், சமயத்தில் கவிழ்த்தும் விடுவார்கள்.
வியாபாரத்தை முடக்கி விடுவார்கள்.
கோபம் கூடவே கூடாது..
பொறுப்பில் இருப்பவர்கள் பொறுமையை இழக்கவே கூடாது.

'சகிப்பு தன்மை'யால் மட்டுமே, தனக்கு ஏற்படும் அவமானங்களை கண்டுகொள்ளாமல் சமாளிக்க வேண்டும்.

இவர்கள் செய்யும் கேலிகளை, திட்டுதல்களை பொறுமையுடன் ஆலோசனை செய்து பார்க்க வேண்டும்.

நியாயம் இல்லாத கேலிகளை, திட்டுதலை, ஆலோசனைகளை சிரித்து கொண்டே விலக்க வேண்டும்.
கோபம் அடையாமல் சகித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
சகிப்பு தன்மை இல்லாதவன்,  குடும்ப நிர்வாகம் செய்யவும் லாயக்கு இல்லை.

சகிப்பு தன்மை இல்லாதவன்,
நிர்வாகம் செய்யவும் லாயக்கு இல்லை.

சகிப்பு தன்மை இல்லாதவன்,
எந்த பொறுப்பை ஏற்கவும் லாயக்கு இல்லை.