Followers

Search Here...

Sunday 2 June 2019

வில்வ மரம் பற்றி...துளசி அர்ச்சனையை ஏற்கும் திருப்பதி பெருமாள், எதற்காக ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்? தெரிந்து கொள்வோமே...

வில்வ மரம் பற்றி...



எப்பொழுதும், துளசி அர்ச்சனையை ஏற்கும் பெருமாள்,
எதற்காக திருப்பதியில் மட்டும், ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்?

ஒவ்வொரு மரமும், செடியும், ஒரு தெய்வத்துக்கு விசேஷமாக சொல்லப்படுகிறது.

பெருமாளுக்கு துளசி உகந்தது என்று சொல்லப்படுகிறது.
துளசியை கொண்டு அர்ச்சனை செய்யும் போது, பெருமாள் மிகவும் உகந்து ஏற்று கொள்கிறார் என்று அறிகிறோம்.


அது போல,
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு ஸ்தல வ்ருக்ஷம் (மரம்) உண்டு.
மகாலட்சுமிக்கு 'வில்வ மரம்" உகந்தது என்று ஸ்ரீசூக்தம் நமக்கு காட்டுகிறது.

தாயார் வில்வ இலையால், புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால், மிகவும் ப்ரீதி அடைகிறாள் என்று அறிகிறோம்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி அருகில் தாயாருக்காக வில்வ மரம் இருக்கிறது. 
"வில்வ மரத்தடியில் எப்பொழுதும் மகாலட்சுமி தாயார் இருக்கிறாள்,
துளசி வனத்தில் பெருமாள் இருக்கிறார்" என்று பக்தர்கள் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள்.

மற்ற மதங்களில் உலகில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்று போதிக்கப்படுகிறது.
நம் சனாதன தர்மமோ, ஒரு செடியை பார்த்தாலும், ஒரு மரத்தை பார்த்தாலும், ஒரு நதியை பார்த்தாலும், அதற்கு சம்பந்தமான தெய்வங்கள் நினைவுக்கு வரவழைத்து, நம்மை எப்பொழுதும் இறை முன்னேற்றத்துக்கே அழைக்கிறது.





அற்புதமான ஹிந்து மதத்திற்கு வெளிநாட்டவன் கூட ஈர்க்கப்படுகிறான். பக்தி செய்கிறான்.
ராஸலீலையின் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 8 வயது கோபாலனாக, ஒவ்வொரு கோபிக்கும் ஒவ்வொரு கிருஷ்ணனாக ஆகி, எங்கும் கண்ணன் என்று ஆகி ராஸ நடனம் ஆட, திடீரென்று மறைந்த விட்டார்.
கோபியர்கள் கண்ணன் எங்கே? கண்ணன் எங்கே? என்று தேடும் போது, துளசி செடியை பார்த்ததும், துளசி செடியை பார்த்து 'கண்ணனை பார்த்தீர்களா?" என்று கேட்டனர் என்று பாகவதம் நமக்கு காட்டுகிறது.
அதே போல,
ராமாயணத்தில், சீதையை தொலைத்து, ஸ்ரீ ராமர் "சீதையை கண்டீர்களா? என்று அங்கு இருந்த 'வில்வ மரத்தை' பார்த்து கேட்டார் என்று வருகிறது.


இது போன்ற சம்பவங்களை கவனிக்கும், வேதத்தின் சாரம் அறிந்தவர்கள், 'ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் சாக்ஷாத் நாராயணனே' என்று அறிந்து கொள்கின்றனர்.

திருப்பதி பெருமாளுக்கு தனுர் மாத சமயத்தில், வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது என்று பார்க்கிறோம்..
துளசி இலையால் அர்ச்சனை செய்தால், பெருமாள் உகப்பு (மகிழ்ச்சி) கொள்கிறார்.
திருப்பதி பெருமாளுக்கு எதற்காக 'வில்வ அர்ச்சனை' செய்கிறார்கள்? 

மற்ற கோவில்கள் போல, திருப்பதியில் தாயாருக்கு தனி சந்நிதி இல்லை.
இங்கு தாயார், பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் (மார்பிலேயே) இருக்கிறாள்.
ஸ்ரீ (லக்ஷ்மி) பெருமாள் வக்ஷஸ்தலத்திலேயே இருப்பதால் தான், பெருமாளுக்கு இங்கு 'ஸ்ரீனிவாசன்' என்று பெயர்.

"தாயாருக்கு உகக்குமே" என்று, வில்வ அர்ச்சனையை பெருமாள் ஏற்று கொள்கிறார் திருப்பதியில்.

திருவேங்கடமுடையானுக்கு வில்வ அர்ச்சனை செய்யும் போது, அது தாயாருக்கு செய்யப்படுகிறது என்று பக்தர்கள் அறிகிறார்கள்.

சமஸ்கரிதத்தில் வில்வத்துக்கு "ஸ்ரீபலம்" என்றும் பெயர் உண்டு.

மகாலக்ஷ்மிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, லக்ஷ்மி கடாக்ஷத்தை பெறுவோம்.
வில்வ அர்ச்சனை சிவபெருமானுக்கும் உகந்தது. 


ஞானமும் (மெய் அறிவு),
செல்வமும்,
ஆயுளும்,
வில்வ அர்ச்சனை மூலம்,
லட்சுமியும், பெருமாளும், சிவபெருமானும் நமக்கு அருள்கின்றனர்.

ஹிந்துக்களாக வாழ்வதே பெருமை...

வாழ்க ஹிந்துக்கள்..

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - afternoon (with meaning)



Sandhya Vandanam - morning (with meaning)


Sandhya Vandanam - evening (with meaning)




1 comment:

Premkumar M said...

வில்வ மரம் பற்றி... 

எப்பொழுதும், துளசி அர்ச்சனையை ஏற்கும் பெருமாள், 
எதற்காக திருப்பதியில் மட்டும், ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்?
ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Share it to all....

https://www.proudhindudharma.com/2019/06/Why-Bilva-Archana.html