Followers

Search Here...

Sunday 19 September 2021

தமிழா! பழங்குடி தமிழன் யாரை முதலில் வணங்கினான்? வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்? தமிழா! நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? சங்க இலக்கியம் பரிபாடல் சொல்கிறது...

தமிழா! "பழங்குடி தமிழன்" யாரை முதலில் வணங்கினான்? 

வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்?

எழுத்து வடிவில் இல்லாமல், காதால் கேட்டு கேட்டு, வாயால் சொல்லி சொல்லியே மனனம் செய்வதால், பரமாத்மாவின் அறிவு என்று அழைக்கப்படும், ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலிகளை, சமஸ்க்ரித மொழி "ஸ்ருதி" என்றும், தமிழ் மொழி "மாயா வாய்மொழி" என்றும் அழைக்கிறது.

'உண்மையான தமிழன் யாரை வணங்கினான்?" என்று சங்க இலக்கியங்கள் நமக்கு காட்டுகிறது.

1.

மாயா வாய்மொழி

உரைதர வலந்து

வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால் அந்தணர் அருமறை

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்:

வேதத்தை தந்தவன் திருமால். 

வேதம் என்னும் வாய்மொழி ஓடையில் மலர்ந்தது தாமரை. 

தாமரையில் வெளிப்பட்டார் ப்ரம்ம தேவன்

அந்த ப்ரம்ம தேவனின் தந்தை நீங்கள்! என்று அந்தணர் வாய்மொழியாக வரும் வேதம் சொல்கிறது





இப்படி சங்க இலக்கியமான பரிபாடல், வேதத்தை பற்றி சொல்லி, ப்ரம்ம தேவனை பற்றி, நாராயணன் பற்றி பேசுகிறது.

2.

பரிபாடல், "கெடு இல் கேள்வி" (தோஷமற்ற நூல் வேதம்) என்று வேதத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது.

வடு இல் கொள்கையின்

உயர்ந்தோர் ஆய்ந்த

கெடு இல் கேள்வியுள்

நடு ஆகுதலும்

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்

மாசு இல்லாத (வடு இல்) கொள்கையுடைய உயர்ந்தோர், நன்கு ஆராய்ந்த பிறகு, "ஒரு குறையும் இல்லாதது வேதம். இந்த குறைவில்லாத வேதத்தில் (கெடு இல் கேள்வி) நடுவாக, உட்பொருளாக (நடு ஆகுதலும்) திருமால் இருக்கிறார்" என்கிறார்கள்.


ஆகாசத்தில் என்றுமே இருக்கும் அழியாத வேத ஒலிகள், வெளியோட்டமாக யாகம், ஜபம், பூஜை போன்ற கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே விராட் புருஷனாக பல விதத்தில் துதிக்கிறது.

நேரடியாக பரமாத்மாவை பற்றி சொல்ல தயங்கி, மறைத்து பேசுகிறது வேதம்

தமிழ்மொழி, வேதத்தை "மறை" என்றும் அழகாக சொல்கிறது.

தத்துவங்களை, உட்கருத்தை மறைத்து பேசுவதால், வேதத்துக்கு "மறை" என்று பெயர் கொடுக்கிறது நம் தமிழ் மொழி.




3.

பரிபாடல், 'வேதம்' என்ற சொல்லுக்கு ஈடாக "மறை" என்றும் சொல்கிறது. 

வேதத்து மறை நீ!

பூதத்து முதலும் நீ!

வெஞ்சுடர் ஒளியும் நீ!

திங்களுள் அளியும் நீ!

அனைத்தும் நீ!

அனைத்தின் உட்பொருளும் நீ! 

- பரிபாடல்

அர்த்தம்

பரிபாடல் திருமாலை பற்றி சொல்லும் போது, 

"வேதம் முழுவதின் உட்கருத்தாக, தத்துவமாக (மறை) நீயே இருக்கிறாய்" என்று "வேதத்தின் மறை நீ" என்கிறது.

மேலும்,

"உலக படைப்பிற்கும் முன் இருந்த ஆதி புருஷன் நீ !

ஒளிக்கு ஒளியானவன் நீ!

சந்திரனுக்கும் குளிர் தருபவன் நீ!

மொத்தத்தில் நீ தான் அனைத்துமாக இருக்கிறாய்.

அனைத்துக்கும் உள்ளிருந்து கொண்டு நீயே செயல்படுகிறாய்"

என்று பரிபாடல் நாராயணனை பற்றி சொல்லும் போது, "வேதத்தின் உட்கருத்து நீ" என்று சொல்கிறது.

No comments: