Followers

Search Here...

Saturday 2 April 2022

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார். வைஷ்ணவர்கள் தினமும் உச்சரிக்கும் நாமங்கள் - சிவ, மஹேஸ்வர, மஹாதேவ, தேவேஸ (தேவ ஈஸ்வர)

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார்...

"மங்களம், பத்ரம், கல்யாணம், சுபம், பிரசன்னம், நிர்மலம்" என்ற அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் "சிவ". சமஸ்கரித நிகண்டு (dictionary) இந்த அர்த்தத்தை விளக்குகிறது.

"தன்மே மன: சிவ ஸங்கல்பமஸ்து"
என்னுடைய மனது கண்ட கண்ட சிந்தனைகள் கொள்ளாமல், நிர்மலமாக மங்களமாக ஆகட்டும்! என்று யஜுர் வேதத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் அடுத்த தெருவில், காஞ்சி மடாதிபதியாக போதேந்திராள் இருந்தார். ராம நாமத்தை பிரச்சாரம் செய்தார்.

பகவந் நாம போதேந்திராள் "ராம" நாமத்தை உலகம் முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், அருகிலேயே இருக்கும் ஸ்ரீதர ஐயாவாள் "சிவ சிவ சிவ சிவ..' என்று சொல்வார்.

இருவரும் மகாத்மாக்கள். ஸ்ரீதர ஐயாவாள் சாக்ஷாத் சிவபெருமான் அம்சம் என்றே சொல்வார்கள்.

ராம நாமத்தின் மகிமை தெரியாதவரில்லை ஸ்ரீதர ஐயாவாள்.
அவரிடம் கேட்டால், வாயை திறந்தால் "சிவ சிவ" என்று தான் வருகிறது என்றாராம்.

'பகவானுடைய நாம உபதேசம்' பெறுவதாக தான் சாதாரண ஜனங்கள் நினைப்பார்கள்.
பகவன் நாமம் தான் உண்மையில் நம்மை பிடிக்கிறது.

சிலரை, "ராம" நாமம் பிடிக்கிறது.
சிலரை "சிவ" நாமம் பிடிக்கிறது.
சிலரை "திருவஷ்டாக்ஷரம்" பிடிக்கிறது.

மங்களாமான அந்த பரமாத்மாவை தியானத்து கொண்டே ஸ்ரீதர ஐயாவாள் ஒரு சமயம் "சிவ சிவ..' என்று சொல்ல, சிவபெருமானுக்கு பதிலாக "ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக புல்லாங்குழல் வைத்து கொண்டு" தரிசனம் கொடுத்து விட்டார்.

சொன்னதோ சிவ நாமம், தரிசனமோ கிருஷ்ண தரிசனம்..

சிவ சிவ என்று சொன்னதற்கு விஷ்ணு வந்தாரே! எப்படி?

மங்களமானவர், பிரசன்னமானவர் விஷ்ணு என்பதால், விஷ்ணுவுக்கும் "சிவ" என்று பெயர் உண்டு.

ஆயிரம் விஷ்ணு நாமத்தில், விஷ்ணுவுக்கு "சிவ" என்று பெயரும் உண்டு.

விஷ்ணு பக்தனும், மங்களமான விஷ்ணுவை "சிவ சிவ" என்றே ஜபிக்கிறான்..

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்-க்ஷேப்தா க்ஷேம-க்ருத் சிவ: |
ஸ்ரீவத்ஸ-வஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்-வர: ||

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அர்த்தமும்

No comments: