Followers

Search Here...

Thursday 24 November 2022

சிவ லிங்கம் பூமியில் இருக்க காரணம்... காமத்தை ஜெயித்தவர், ஞானத்தை தருபவர் சிவபெருமான். அறிவோம் மஹாபாரதம்

சிவ லிங்கம் பூமியில் இருக்க காரணம். 

हतेषु सर्व-सैन्येषु 

सौप्तिकै तै रथैस्त्रिभिः।

शोचन् युधिष्ठिरो राजा 

दाशार्हम् इदम् अब्रवीत्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

தூங்கிக்கொண்டிருந்த மஹாவீரர்களை, மூவரும்  (அஸ்வத்தாமா, கிருபர், க்ருதவர்மா) கொன்றுவிட்டார்கள் என்ற நிலையில், பெரும் துக்கத்தை அடைந்தார் யுதிஷ்டிரர்.


कथं नु कृष्ण पापेन 

क्षुद्रेण शठ-बुद्धिना।

द्रौणिना निहताः सर्वे 

मम पुत्रा महारथाः।।

तथा कृतास्‌र विक्रान्ताः 

सङ्ग्रामेष्वपलायिनः।

द्रुपदस्यात्मजाश्चैव 

द्रोणपुत्रेण पातिताः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

வாசுதேவ கிருஷ்ணரை பார்த்து, "கோவிந்தா!  பாவியும், அல்பனும், வஞ்சகபுத்தியுள்ள அஸ்வத்தாமனால், எப்படி மஹா ரதர்களான என்னுடைய புத்திரர்களை கொல்ல முடிந்தது? அனைத்து சாஸ்திரங்களும் அறிந்த, மஹா தைரியசாலியான, யுத்தத்தில் புறமுதுகிட்டு ஓடாத துருபத புத்ரனை எவ்வாறு துரோண புத்ரனால் கொல்ல முடிந்தது?

यस्य द्रोणो महेष्वासो 

न प्रादादाहवे मुखम्।

निजघ्ने रथिनां श्रेष्ठं 

धृष्टद्युम्नं कथं नु सः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

சிறந்த வில்லாளியான துரோணரே எவரை கண்டு முகம் கொடுத்து எதிர்க்கவில்லையோ, அப்படிப்பட்ட த்ருஷ்டத்யும்னனை எவ்வாறு இந்த துரோண புத்ரன் கொன்றான்?

किन्नु तेन कृतं कर्म 

तथायुक्तं नरर्षभ।

यदेकः समरे सर्वान्

अवधीन्नो गुरोः सुतः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

புருஷ ஸ்ரேஷ்டரே! ஒரே ஒருவனாக இருந்து கொண்டு, இத்தனை பேரையும் கொல்ல முடிந்த இந்த துரோண புத்திரனுக்கு எதனால் இத்தனை பலம் ஏற்பட்டது?" என்று வினவினார்.


श्रीभगवानुवाच

नूनं स देवदेवानाम् 

ईश्वर ईश्वरम् अव्ययम्।

जगाम शरणं द्रौणि:

एकस्तेनावधीद्बहून्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பகவான் சொல்கிறார்.

"அந்த அஸ்வத்தாமா தேவர்களுக்கும் தேவனான, ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனான, குறை ஒன்றும் இல்லாத மஹாதேவரை சரணமடைந்தான். அது நிச்சயம். அதனாலேயே, ஒருவனாக இருந்து கொண்டு அனைவரையும் கொல்ல முடிந்தது.




प्रसन्नो हि महादेवो 

दद्यादमरतामपि।

वीर्यं च गिरिशो दद्याद्येन्

इन्द्रमपि शातयेत्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மஹாதேவர் ப்ரஸன்னாமானால், மரணமில்லாமல் கூட செய்து விடுவார்.

அவர் ப்ரசன்னமானால், இந்திரனையும் ஜெயிக்கும் வீர்யத்தை கொடுத்து விடுவார்.

वेदाहं हि महादेवं 

तत्त्वेन भरतर्षभ।

यानि चास्यपुराणानि

कर्माणि विविधानि च।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

நான் மஹாதேவரை உள்ளது உள்ளபடி அறிவேன்.

புராதனமாகவும், பல விதமாகவும் இவர் செய்யும் லீலைகளை அறிவேன்.


आदिरेष हि भूतानां 

मध्यम् अन्तश्च भारत।

विचेष्टते जगच्चेदं 

सर्वमस्यैव कर्मणा।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பாரதா! மஹாதேவர் பூதங்களுக்கு  ஆதியாகவும்,மத்யமாகவும், அந்தமாகவும் இருக்கிறார்.

இவர் அசைவினாலேயே இந்த உலகம் இயங்குகிறது.


एवं सिसृक्षु: भूतानि 

ददर्श प्रथमं विभुः।

पितामहो अब्रवीच्चैनं 

भूतानि सृज माचिरम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிரபுவான பிதாமஹர் (ப்ரம்ம தேவன்), ஒரு சமயம் பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்து, இவரை பார்த்து, "காலத்தை கடத்தாமல், உடனே பூதங்களை ஸ்ருஷ்டி செய்யுங்கள்" என்று கேட்டார்.


हरि-केशस्तथेत्युक्‌वा 

दीर्घदर्शी तदा प्रभुः।

दीर्घकालं तपस्तेपे

मग्नोऽम्भसि महातपाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அப்பொழுது, நடக்க போவதை அறிந்த தீர்கதரிசியும், தவத்தில் நாட்டமுடையவரும், அழகான தலை கேசம்  உடையவரும்,பிரபுவாமான மஹாதேவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, ஜலத்தில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.


सुमहान्तं ततः कालं 

प्रतीक्ष्यैनं पितामहः।

स्रष्टारं सर्वभूतानां

ससर्ज मनसाऽपरम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிறகு, நெடு காலம் ஆகியும் மஹாதேவர் வராமல் போனதால், பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய வேறொருவரை (தக்ஷ ப்ரஜாபதி) மனதால் ஸ்ருஷ்டி செய்து விட்டார்.


सोऽब्रवीद्वातरं दृष्ट्वा 

गिरिशं सुप्तमम्भसि।

यदि मे नाग्रजोऽस्ति 

अन्यस्ततः स्रक्ष्याम्यहं प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை (சிவன்) கண்ட இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி), தன் தந்தையிடம்,  "எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால், நான் பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்கிறேன்" என்றார்.


तम् अब्रवीत्पिता नास्ति 

त्वदन्यः पुरुषोऽग्रजः।

स्थाणुरेष जले मग्नो

विस्रब्धः कुरु वै प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

ப்ரம்ம தேவர், "உன்னை  காட்டிலும் வேறு ஒரு ஆண் பிள்ளை இங்கு இல்லை. அந்த பிள்ளை ஜலத்தில் மூழ்கி இருக்கிறான். ஆதலால் மன அமைதியோடு நீ பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்" என்றார்




भूतान्यन्वसृजत्सप्त 

दक्षः क्षिप्रं प्रजापतिः।

यैरिमं व्यकरोत्सर्वं 

भूतग्रामं चतुर्विधम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

எந்த 7 பூதங்களை கொண்டு நால்வகை உயிரினங்கள் படைக்கப்பட்டதோ, அந்த பூதங்களை  இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி) விரைவாக படைக்க தொடங்கினார்

ताः सृष्टमात्राः क्षुधिताः 

प्रजाः सर्वाः प्रजापतिम्।

बिभक्षयिवो राजन्सहसा 

प्राद्रवंस्तदा।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையான தக்ஷ ப்ரஜாபதியையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.


स भक्ष्यमाणस्त्राणार्थी

पितामहमुपाद्रवत्।

आभ्यो मां भगवांस्त्रातु 

वृत्तिरासां विधीयताम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிரம்ம தேவரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள விரும்பி, ப்ரம்ம தேவராய் நோக்கி ஓடினார்.

அவர்  அந்தப் ப்ரம்ம தேவரிடம்,

"ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்" என்றார்.


ततस्ताभ्यो ददावन्नमोषधीः स्थावराणि च।

जङ्गमानि च भूतानि दुर्बलानि बलीयसाम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அப்போது தாத்தாவான ப்ரம்ம தேவர், செடி-கொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு (பலமிக்க உயிரினங்களின்) வாழ்வாதாரமாக (உணவாக) பலவீனர்களை (பலமற்ற உயிரினங்களை) நிர்ணயித்தார் 


विहितान्नाः प्रजास्तास्तु जग्मुस्तुष्टा यथागतम्।

ततो ववृधिरे राजन्प्रीतिमत्यः स्वयोनिषु।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

புதிதாக படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் இனங்களுடன் கூடி (புணர்ந்து) பெருகினர்.


भूतग्रामे विवृद्वे तु सृष्टे देवासुरे तदा।

उदतिष्ठज्जलाज्ज्येष्ठः प्रजाश्चेमा ददर्श सः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவரான (சிவபெருமான்) நீரில் இருந்து எழுந்து, பிரஜைகள் ஸ்ருஷ்டி  செய்யப்பட்டு இருப்பதை கண்டார்.


बहुरूपाः प्रजाः सृष्टा विवृद्धाश्च स्वतेजसा।

चुक्रोध बलवद्दृष्ट्वा लिङ्गं स्वं चाप्यविध्यत।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அவர் (ருத்திரன்), பல வகை உயிரினங்கள் படைக்கப்பட்டு விட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டார்.

இதனால் கோபமடைந்த ருத்திரன், தன் லிங்கத்தை பூமியில் மறையும்படி விழ செய்தார்.  (காமத்தை வென்றவர் என்று நமக்கு உணர்த்தினார். ஆசைகள் அழிய, மெய்ஞானம் நமக்கு ஏற்பட, சிவபெருமானை வணங்குகிறோம்)


तत्प्रविद्धं तथा भूमौ तथैव प्रत्यतिष्ठत।

तमुवाचाव्ययो ब्रह्मा वचोभिः शमयन्निव।।

किं कृतं सलिले शर्व चिरकालस्थितेन ते।

किमर्थं चेदमुत्पाद्य लिङ्गं भूमौ प्रवेशितम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மங்காதவரான பிரம்ம தேவர், அவரிடம் மென்மையான வார்த்தைகளில்,

"ஸர்வா! இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

என்ன காரணத்தினால் உனது லிங்கம் பூமியில் நாட்டப்பட்டது?"

என்று கேட்டார்.


सो अब्रवीज्जातसंरम्भस्तथा लोकगुरुर्गुरुम्।

प्रजाः सृष्टाः परेणेमाः किं करिष्याम्यनेन वै।।

प्रजाः सृष्टाः परेणेमाः प्रजार्थं मे पितामह।

ओषध्यः परिवर्तेः अन्यथैवं सततं प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

உலகத்திற்கே தலைவனான சிவன், கோபத்துடன்  பிரம்ம தேவரிடம்,

"இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?

ஓ! பெரும்பாட்டனே!

கடுந்தவம் செய்ததின் மூலம், நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன்.

இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்" என்றார்




एवमुक्त्वा स सक्रोधो जगाम विमना भवः।

गिरेर्मुञ्जवतः पादं तपस्तप्तुं महातपाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பெரும் தவசீலரான, காமத்தை வென்றவரான அந்த சங்கரர், கோபத்தோடு இவ்வாறு உரைத்து விட்டு, மன அமைதி இல்லாதவராகி, தவம் செய்வதற்காக "முஞ்சிவான்" என்ற மலைச்சாரலை அடைந்தார். 

No comments: