Followers

Search Here...

Sunday 4 June 2023

யார் த்விஜன்? சூத்திரனுக்கும், பெண்களுக்கும் பெரிய கட்டுப்பாடு விதிக்காத சட்ட நூல். பிராம்மணனுக்கு மட்டும் த்விஜன் என்ற பெயரா?. யார் த்விஜன் (இரு பிறப்பாளர்கள்)? இவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன? அறிந்து கொள்வோம் மனு ஸ்மிருதி.

யார் த்விஜன் (இரு பிறப்பாளர்கள்)?

வைசிய தொழிலோ, க்ஷத்ரிய தொழிலோ, பிராம்மண தொழிலோ செய்வதற்கு முன் - பூணூல் அணிந்து, காயத்ரீ உபதேசம் பெற்று, வேதம் கற்பவனே (த்விஜன்) என்று அழைக்கப்படுகிறார்கள்.


த்விஜர்களுக்காக சொல்லப்பட்ட தர்ம சாஸ்திரம் (நீதி நூல்) தெரிந்து கொள்வோம்..


பிறப்பால் அனைவரும் சூத்திரனே (Employee/கொடுத்த வேலை செய்வதற்காக பிறந்தோம்).


शूद्रेण हि समस्तावद् यावद् वेदे न जायते ॥

- மனு ஸ்மிருதி

உபநயனமாகி (பூணூல்) வேதம் கற்றுக்கொள்ளாத வரை, அனைவரும் சூத்திரனே (employee)


வைஸ்ய தொழில் செய்யவோ

வேதம் ஓதி, யாகங்கள் செய்து, வேத தர்மமாக ப்ரம்ம விசாரம் செய்யவோ, 

நாட்டை காக்கவோ செல்பவர்கள் அனைவரும, பூணூல் அணிந்த கொண்டார்கள். 

கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத சூத்திர வர்ணத்தை விட்டு, வேறு வர்ணம் செல்வதால், இவர்கள் இரு பிறப்பாளர்கள் என்றும் த்விஜர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


Employee (சூத்திரன்) தன் நேரத்தை முதலாளிக்கு (employer) கொடுத்து சம்பளம் பெறுகிறான்.

வேலை கொடுப்பவன் (employer) கையில் சூத்திரனின் நேரம் கட்டுப்பட்டு இருப்பதால், சூத்திரனுக்கு, மனு எந்த ஒரு கடினமான சட்டத்தையும் விதிக்கவே இல்லை. 

மிகுந்த சுதந்திரம் பெண்களுக்கும், சூத்திரனுக்கும் கொடுக்கிறார்


கடுமையான வாழ்க்கை முறையை,/சட்டத்தை இராணுவ, காவல்துறை, வியாபார, வைதீக, அரசியல், நீதி துறையில் உள்ளவர்களுக்கே  விதிக்கிறார்.


பிராம்மண வர்ணத்தில் இன்று MP&MLAs, judge போன்றவர்கள் க்ஷத்ரிய, வைசிய, சூத்திரர்களுக்கு சட்டம் இயற்றுகின்றனர்.


க்ஷத்ரிய வர்ணத்தில் இன்று போலீஸ், ராணுவம் போன்றவர்கள் இருக்கின்றனர்.


வைஸ்ய வர்ணத்தில் இன்றும் சிறு/பெரு/சுய தொழில் நடத்துபவர்கள் பலர் உள்ளனர்.


இவர்களுக்கு விதிக்கப்பட்ட கடினமான சட்டங்களை இனி பார்ப்போம்.


இந்த 'கடுமையான சட்டங்கள் எதுவும் சூத்திரனுக்கும் இல்லை. பெண்களுக்கும் இல்லை' என்ற கவனத்தோடு படிக்கும் பொழுதே, "சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் ஹிந்து மதத்தில் (சனாதன தர்மத்தி்ல்) கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்ன?" என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்

பாகம் 2

यो अवमन्येत ते मूले हेतु शास्त्र आश्रयाद् द्विजः ।

स साधुभि: बहिष्कार्यो नास्तिको वेद-निन्दकः ॥

- மனு ஸ்ம்ருதி 

மனிதனுக்கு தர்மம் (நல்லது) எது? என்று நமக்கு எடுத்து சொல்லும் ஸ்ருதிகளையும் (வேதம்), ஸ்ம்ருதிகளையும் (தர்ம சாஸ்திரம்) எந்த இரு பிறப்பாளன் என்ற த்விஜன் அவமானப்படுத்தி பேசுகிறானோ, அப்படிப்பட்டவனை நாத்தீகனை போல கருதி, சாதுக்களாகிய மற்றவர்கள் அருகில் சேர்த்து கொள்ள கூடாது.


एतान् द्विजातयो देशान् संश्रयेरन् प्रयत्नतः ।

शूद्रस्तु यस्मिन् कस्मिन् वा निवसेद् वृत्ति कर्शितः ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், முயற்சி செய்து யாகம் செய்வதற்கு ஏற்ற மான்கள் சஞ்சரிக்கும் பிரதேசங்களில் வாழ வேண்டும். சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (In Today's world, Employees are in Sudra Varna) வேலையில் இருப்பதால், தொழில் நிமித்தமாக எந்த தேசத்திலும் வசிக்கலாம். கட்டுப்பாடு இல்லை 


वैदिकैः कर्मभिः पुण्यैर्निषेकादिर्द्विजन्मनाम् ।

कार्यः शरीरसंस्कारः पावनः प्रेत्य चैह च ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதிலிருந்தே வேத முறைப்படி (பும்ஸவனம் முதல்...) வைதீக காரியங்களை செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், மனத்தூய்மை அவர்களுக்கு இருக்கும். பரலோக வாழ்வுக்கு தேவையான புண்ணியத்தையும் அடைவார்கள்.

गार्भै: होमै: जातकर्म चौड मौञ्जी निबन्धनैः ।

बैजिकं गार्भिकं चैनं द्विजानामपमृज्यते ॥

- மனு ஸ்ம்ருதி

கர்ப்பத்தில் இருக்கும் போதே செய்ய வேண்டிய வேத ஹோமங்கள் (பும்ஸவனம்), பிறகு ஜாதகர்மா, சவுலம், மௌஞ்ஜீ-பந்தனம், உபநயனம் (பூணூல்) போன்ற சடங்குகள் செய்து கொள்ள வேண்டும். பெற்றோரால் ஏற்பட்ட பீஜ-தோஷம், கர்ப்பவாஸ தோஷம் போன்றவைகள், இதன் மூலம்  இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்களுக்கு நீங்கி விடும்,


चूडाकर्म द्विजातीनां सर्वेषाम् एव धर्मतः ।

प्रथमे अब्दे तृतीये वा कर्तव्यं श्रुति चोदनात् ॥

- மனு ஸ்ம்ருதி

"சூடா-கர்மா" என்ற குடுமி வைக்கும் சடங்கை இரு பிறப்பாளர்களார்கள் என்ற த்விஜர்கள் முதல் ஆண்டோ, அல்லது 3ஆம் ஆண்டிலோ செய்ய வேண்டும் அல்லது அவரவர் வழக்கப்படி செய்து கொள்ள வேண்டும்.


गर्भा अष्टमे अब्दे कुर्वीत

ब्राह्मणस्य उपनायनम् ।

गर्भादे् एकादशे राज्ञो 

गर्भात् तु द्वादशे विशः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் (MLA/MP) த்விஜர்களுக்கு 8வது வயதிலும், க்ஷத்ரிய வர்ணத்தில் (defence) த்விஜர்களுக்கு 11வது வயதிலும், வைஸ்ய வர்ணத்தில் (businessman) த்விஜர்களுக்கு 12வது வயதிலும், உபநயனம் /பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.


भवत्पूर्वं चरेद् भैक्षम् उपनीतो द्विजोत्तमः ।

भवन्मध्यं तु राजन्यो वैश्यस्तु भवद् उत्तरम् ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள்,

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருந்தால், "பவதி பிக்ஷாம் தேஹி" என்றும்,

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்தால், "பிக்ஷாம் பவதி தேஹி" என்றும்,

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருந்தால், "பிக்ஷாம் தேஹி பவதி" என்று கூறி பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.


उपस्पृश्य द्विजो नित्यम् अन्नमद्यात् समाहितः ।

भुक्त्वा च: उपस्पृशेत् सम्यगद्भिः खानि च संस्पृशेत् ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், 3 முறை ஜலம் கையில் எடுத்து ஆசமனம் செய்த (அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று சொல்லி குடித்த) பிறகே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு, கை கால்களை அலம்பி, வாய் கொப்பளிக்க வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, ஜலத்தால் இந்திரியங்களை துடைத்து கொள்ள வேண்டும்.

उद्धृते दक्षिणे पाणाव् उपवीती उच्यते द्विजः ।

सव्ये प्राचीनावीती निवीती कण्ठसज्जने ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள் பூணூலை வலது தோள் வழியாக அணிந்து இருக்கும் போது "உபவீதம்" என்று பெயர். இடது தோள் வழியாக அணிந்து இருக்கும் போது "ப்ராசீனாவீதீ" என்று பெயர். கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டால், "நிவீதி" என்று பெயர்.


सहस्र कृत्वस्त्वभ्यस्य 

बहि: एतत् त्रिकं द्विजः ।

महतो अपि एनसो मासात् 

त्वचैवाहि: विमुच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், சந்தியா காலத்திலும், மற்ற சமயங்களிலும் கிராமத்துக்கு வெளியே தனிமையில் இருந்து, ஓம் என்ற ஓங்காரமும், அதனோடு வ்யாஹ்ருதியும் (பூ புவ ஸுவ), அதனோடு காயத்ரீ மந்திரத்தையும் சேர்த்து, ஒரு மாத காலம் தினமும் 1000 முறை சொல்லி வந்தால், பாம்பு தன் சட்டையை கழட்டி போடுவது போல, மஹா பாபங்களிலிருந்து விடுபடலாம்.


न तिष्ठति तु यः पूर्वां नौपास्ते यश्च पश्चिमाम् ।

स शूद्रवद् बहिष्कार्यः सर्वस्माद् द्विजकर्मणः ॥ 

- மனு ஸ்ம்ருதி

த்விஜர்கள் என்ற இரட்டை பிறப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட  இந்த கட்டுப்பாடுகள் எதுவும் சூத்திரனுக்கு (employee)  கிடையாது. காலையில் சந்தியாவந்தனம், மாலையில் சந்தியாவந்தனம் செய்யாத த்விஜர்கள் என்ற இரட்டை பிறப்பாளர்களை, சூத்திரன் என்று கருதி, த்விஜர்களுக்கு விதிக்கப்பட்ட  காரியங்களிலிருந்து விலக்க வேண்டும்.


अग्नीन्धनं भैक्षचर्यामधःशय्यां गुरोर्हितम् ।

आ समावर्तनात् कुर्यात् कृतोपनयनो द्विजः ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், கல்யாணம் ஆகி ஸமாவர்த்தன ஸ்நானம் செய்து கொள்ளும் வரை, அக்னி ஹோத்திரம் செய்து கொண்டு, பிக்ஷை வாங்கி சாப்பிட்டு, உயரமான படுக்கையில் படுக்காமல், குருவுக்கு நன்மை தரும் செயல்களே செய்து கொண்டு இருக்க வேண்டும் 


(குருகுலத்தில் பாடம் படித்து விட்டு, அவருக்கு தக்ஷிணை கொடுத்து விட்டு, திரும்பி வந்து, விவாகம் செய்து கொள்ளும் போது, முதல் நாளோ, விவாக நாளன்றோ ஸமாவர்த்தனம் என்ற வேதோக்தமான ஸ்நான காரியங்கள் செய்ய வேண்டும்.  இப்படி சமாவர்த்தனம்  ஆன பிறகு, அன்றிலிருந்து பஞ்சகஜம் கட்டி கொண்டு, இரண்டு பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனம் என்பது ஒரு "ஸ்நான கிரியை". கல்யாணம் ஆகி, ஸமாவர்த்தனம் ஆன பிறகு, இரு பிறப்பாளன் என்ற த்விஜன் "ஸ்நாதகன்" என்று பெயர் பெறுகிறான்)

उपनीय तु यः शिष्यं वेदम् अध्यापयेद् द्विजः ।

सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते ॥

- மனு ஸ்ம்ருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனுக்கு, உபநயனம் செய்து வைத்து, வேதங்களை அத்யயனம் செய்து வைத்து, ஒழுக்கத்தை போதித்து, தானும் ஒழுக்கத்தில் வாழ்பவர் "ஆசார்யன்" என்ற அழைக்கப்படுகிறார்.


नारुन्तुदः स्यादार्तोऽपि 

न परद्रोहकर्मधीः ।

ययाऽस्योद्विजते वाचा 

नालोक्यां तामुदीरयेत् ॥ 

- மனு ஸ்ம்ருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன், தான் கஷ்டத்தில் இருந்தாலும், பிறர் மனம் நோக பேச கூடாது. பிறருக்கு துரோகம் விளைவிக்க கூடிய காரியத்தை நினைக்க கூட கூடாது. எந்த வார்த்தை பேசினால் அது மற்றவருக்கு பயத்தை தருமோ, அதை பேச கூடாது.


अनेन क्रमयोगेन संस्कृत आत्मा द्विजः शनैः ।

गुरौ वसन् सञ्चिनुयाद् ब्रह्माधिगमिकं तपः ॥

- மனு ஸ்மிருதி

இதுவரை சொல்லப்பட்ட பல விஷயங்களை, ஒரு கர்ம யோகி போல த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) தன் குருவிடம் வசிக்கும் போது கடைபிடித்து கொண்டு இருக்க  வேண்டும்.


तपोविशेषै: विविधै: वृत्तैश्च विधिचोदितैः ।

वेदः कृत्स्नो अधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) இங்கு சொல்லப்பட்ட நியமங்களோடு (தபம்), விரதங்களை எல்லாம் கடைபிடித்துக்கொண்டு, வேதங்களை, உபநிஷத்துக்களை கற்க வேண்டும்.


वेदम् एव सदा अभ्यस्येत् तपस्तप्यन् द्विजोत्तमः ।

वेद अभ्यासो हि विप्रस्य तपः परम् इह उच्यते ॥

- மனு ஸ்மிருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) எப்போதும் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். தபஸ்வியாக இருக்க வேண்டும். த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனில் பிரம்மச்சாரியாக இருக்கும் விப்ரனுக்கு (வேத பிராம்மணன்) வேதம் ஓதுதலே கடமை. அதாவது அவனுக்கு வியாபாரம், அஸ்திரம் போன்றவை கற்றாலும் அதில் ஈடுபட அனுமதி இல்லை.


आ हैव स नखाग्रेभ्यः परमं तप्यते तपः ।

यः स्रग्व्यपि द्विजो अधीते स्वाध्यायं शक्तितो अन्वहम् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன், தனது பிரம்மச்சர்ய வ்ரதம் முடிந்த பிறகும், தொடர்ந்து வேதத்தை தினமும் ஓதிகொண்டு இருந்தால், தலை முதல் கால் வரை தவம் செய்தவனாகிறான்.


यो अनधीत्य द्विजो वेदमन्यत्र कुरुते श्रमम् ।

स जीवन् एव शूद्रत्वम् आशु गच्छति सान्वयः ॥

- மனு ஸ்மிருதி

வேதம் ஓதாமல், மற்ற சாஸ்திரங்களை படிக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) சூத்திரனாகிறான் (employee). மேலும் அவன் வம்சத்தில் உள்ளவர்களையும் சூத்திரனாக்குகிறான்.


मातु: अग्रे अधिजननं द्वितीयं मौञ्जि-बन्धने ।

तृतीयं यज्ञ-दीक्षायां द्विजस्य श्रुतिचोदनात् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனுக்கு (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) 3 பிறப்புகள் ஏற்படுகிறது. தாயிடமிருந்து பிறந்த போது ஒரு பிறப்பு. உபநயனம் ஆன பிறகு, 2வது பிறப்பு. யக்ஞம் செய்யும் போது 3வது பிறப்பு ஏற்படுகிறது.

स्वप्ने सिक्त्वा ब्रह्मचारी द्विजः शुक्रम् आकामतः ।

स्नात्वा अर्कम: च इत्वा त्रिः पुनर्मामित्यृचं जपेत् ॥

- மனு ஸ்மிருதி


காம எண்ணம் இல்லாமல், கனவில் எதேச்சையாக ரேதஸ் வெளிப்பட்டு விட்டால், மறுநாள் பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன்  காலையில் நீராடி, சூரிய பகவானை பூஜித்து, "புனர்மா" என்ற ரிக்கை (வேத மந்திரம்) 3 முறை ஜபிக்க வேண்டும்.


பாகம் 12

यथोक्तानि अपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।

आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥

- மனு ஸ்மிருதி

இரட்டை பிறப்பாளன் என்ற த்விஜோத்தமர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதாலேயே ஆத்ம ஞானம் ஏற்படும்.


एतद् हि जन्म साफल्यं ब्राह्मणस्य विशेषतः ।

प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥

- மனு ஸ்மிருதி

ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவன், பிறவி எடுத்த பலனை அடைய வேதம் ஓதுவதே வழியாகும். இதுவே மற்ற இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் வழி.


एको अपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।

स विज्ञेयः परो धर्मो न अज्ञानाम् उदितो अयुतैः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை நன்கு அறிந்தவன் ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த இரு பிறப்பாளன் என்ற த்விஜனிடமே தர்மம் எது? என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.

No comments: