Followers

Search Here...

Showing posts with label வன்மம். Show all posts
Showing posts with label வன்மம். Show all posts

Friday 20 January 2023

பிராம்மணனுக்கு பேச்சும், க்ஷத்ரியனுக்கு இதயமும் கடுமையாக இருக்கும். மஹாபாரதத்தில் உள்ள அழகான உரையாடல்..

பிராம்மணனுக்கு பேச்சும், க்ஷத்ரியனுக்கு இதயமும் கடுமையாக இருக்கும். மஹாபாரதத்தில் உள்ள அழகான உரையாடல்.

பௌஷ்ய ராஜன், உதங்கரை பார்த்து, "பகவன் ! உங்களை போன்ற தகுந்தவர்கள் (யோக்கியதை உள்ளவர்) எளிதில் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் சிறந்த அதிதியாக இருப்பதால், உங்களுக்கு என் ஸ்ரத்தையை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறிது நேரம் எனக்காக ஒதுக்க வேண்டும்" என்றார்

भगवंश्चिरेण पात्रम् आसाद्यते भवाश्च गुणवानतिथि:

तदिच्छे श्राद्धं कर्तुं क्रियतां क्षण इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர், "உனக்காக அவகாசம் கொடுக்கிறேன். உன் சக்திக்கு ஏற்ப சீக்கிரமாக அன்னத்தை தயார் செய்து கொடு" என்றார். "இதோ! தயார் ஆகி விடும்" என்று பௌஷ்ய ராஜன் சொல்லி தன் சக்திக்கு ஏற்ற அன்னத்தை கொடுத்து உதங்கருக்கு உணவு பரிமாறினார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच कृतक्षण एवास्मि

शीघ्रम् इच्छामि यथोप पन्नम् 

अन्नम् उपस्कृतं भवतेति

स तथेत्युक्त्वा यथोप

पन्नेनान्नेनैनं भोजयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)

தனக்கு பரிமாறப்பட்ட அன்னம், ஆறி போனதாகவும், அதில் தலைமுடி இருப்பதையும் கண்டு, "இது அசுத்தமான உணவாக உள்ளது" என்று நினைத்து "எனக்கு அசுத்தமான உணவை நீ கொடுத்ததால் நீ குருடனாக போவாய்" என்று அரசனை சபித்து விட்டார்.

अथ: उत्तङ्कः सकेशं शीतमन्नं दृष्ट्वा 

अशुचि एतदिति मत्वा तं पौष्यम् उवाच।

यस्मान्मे अशुच्यन्नं ददासि 

तस्माद् अन्धो भविष्यसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி உதங்கர் சபித்ததும், பௌஷ்ய ராஜன் பதிலுக்கு "நீர் குறையில்லாத அன்னத்தை குறை சொல்லியதால் சந்ததி இல்லாமல் போவீர்" என்று பதிலுக்கு சபித்தார்.

तं पौष्यः प्रत्युवाच।

यस्मात् त्वम् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो

भविष्यसीति तम् उत्तङ्कः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நீ அசுத்தமான அன்னத்தையும் கொடுத்து விட்டு, எனக்கு ப்ரதி-சாபம் கொடுத்தது சரியல்ல. அன்னத்தை கண்ணால் பார்" என்றார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட அசுத்தமான உணவு உண்மையிலேயே அசுத்தமாக இருந்ததை கவனித்தார் அரசர்.

न युक्तं भवता अन्नम् अशुचि 

दत्त्वा प्रतिशापं दातुं तस्माद् 

अन्नम् एव प्रत्यक्षी कुरु।

ततः पौष्यस्तद् अन्नम् अशुचि दृष्ट्वा 

तस्या शुचिभावम् अपरोक्षयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த அன்னத்தில் பெண்ணின் கேசமும், ஆறிப்போனதாகவும் இருந்ததை கண்டு உதங்கரை பார்த்து, "பகவன், தெரியாமல் உங்களுக்கு ஆறிப்போன, கேசம் விழுந்த அன்னம் பரிமாறப்பட்டுள்ளது. நான் குருடனாக இல்லாமல் இருக்க வேண்டும். என்னை மன்னிக்கும் படி வேண்டுகிறேன்" என்றார்.

अथ तदन्नं मुक्त केश्या स्त्रियोपहृतमनुष्णं सकेशं

चाशुच्येतदिति मत्वा तम् ऋषिम् उत्तङ्कं प्रसादयामास।।

भघवन्नेतद् अज्ञानादन्नं सकेशम् उपाहृतं शीतं च।

तत्क्षामये भवन्तं न भवेयमन्ध इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நான் சொன்னது பொய் போகாது. இருந்தாலும், நீ சிலகாலம் கண் தெரியாமல் இருந்து, பிறகு சீக்கிரத்தில் மீண்டும் கண் பெறுவாய்" என்றார். மேலும் "நீ எனக்கு கொடுத்த சாபம் தொடராமல் இருக்க வேண்டும்" என்றார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

न मृषा ब्रवीमि भूत्वा त्वम् अन्धो 

नचिरादनन्धो भविष्यसीति।

ममापि शापो भवता दत्तो न भवेदिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு பௌஷ்ய ராஜன் "நான் சாபத்திலிருந்து உங்களை விடுவிக்க மாட்டேன். எனக்கு கோபம் இன்னும் அடங்கவில்லை. ப்ராம்மணனுக்கு இதயம் வெண்ணெய் போன்றது. ப்ராம்மணனுக்கு வாக்கு கூரான கத்தி போன்றது. க்ஷத்ரியர்களான எங்களுக்கு இது மாற்றி வைக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாக்கு வெண்ணை போலவும், உள்ளம் கூர்மையான கத்தி போன்றதாகவும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? ஆதலால் என் இதயம் கொடியதாக இருப்பதால், சாபத்தை நான் மாற்ற முடியாது. நீர் போகலாம்" என்றார்.

तं पौष्यः प्रत्युवाच न चाहं शक्तः शापं प्रत्यादातुं

न हि मे मन्यु: अद्याप्युपशमं गच्छति

किं चैतद्भवता न ज्ञायते यथा।।

नवनीतं हृदयं ब्राह्मणस्य

वाचि क्षुरो निहित: तीक्ष्णधारः।

तद् उभयम् एतद् विपरीतं क्षत्रियस्य

वाङ् नवनीतं हृदयं तीक्ष्ण-धारम् इति।।

तदेवंगते न शक्तोऽहं तीक्ष्ण हृदयत्वात्तं 

शापम् अन्यथा-कर्तुं गम्यतामिति।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட உதங்கர், "நீ கொடுத்த உணவு அசுத்தமாக இருந்ததை நீயே பார்த்து என்னிடம் மன்னிப்பு கேட்டாய். 'குற்றமில்லாத அன்னத்தை தூஷித்ததால் உனக்கு சந்ததி இல்லாமல் போகும் என்று சபித்தாய்'. ஆனால் இந்த அன்னம் அசுத்தமானது தான் என்பதால், உன் சாபம் என்னிடம் பலிக்காது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு குண்டலங்களை எடுத்து கொண்டு புறப்பட்டார் உதங்கர்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

भवता अहम् अन्नस्या शुचि

भावम् आलक्ष्य प्रत्यनुनीतः।

प्राक् च तेऽभिहितं यस्माद् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो भविष्यसीति।

दुष्टे चान्ने नैष मम शापो भविष्यतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)