Followers

Search Here...

Sunday, 17 May 2020

கௌதம ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... கௌதம கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

கௌதம ரிஷி கோத்திரம்

"உலகில் உள்ள அழகையெல்லாம் திரட்டி, ஒரு பெண்ணை ஸ்ருஷ்டி செய்து, வேதம் படித்த ப்ராம்மணனுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பிரம்ம தேவன்.
அதற்காக தன் மனதால் அஹல்யாவை ஸ்ருஷ்டி செய்தார்.

நேபாளத்தில் (Nepal) மிதிலாபுரியை ஆண்டு கொண்டிருந்த ஜனக மஹாராஜனுக்கு குருவாக இருந்தார் "கௌதமர்".

தனக்கென்று மிதலாபுரியின் சமீபத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து வசித்தார்.

1. கௌதமர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. பரத்வாஜர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.

இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.




நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டிய காலங்களில் தேவ(கோவில், பூஜை), பித்ரு (திவசம்) போன்ற காரியங்களில் ஈடுபட கூடாது... தானே சமைக்க கூடாது. இதனால் மஹா பாபங்கள் ஏற்படும்.

இதனால் ஏற்படும் பாபங்களின்  நிவிர்த்திக்காக ஒரு சூத்திரம் (formula) அருளினார் கௌதம ரிஷி. 
கௌதம சூத்திரம் சொன்னபடி ரிஷி பஞ்சமி என்ற விரதத்தை பெண்கள் செய்வது கடமையும் கூட.
பிரம்ம தேவன் தன் மானஸ புத்ரியான அகலிகையை கௌதம ரிஷிக்கு மணம் செய்து கொடுத்தார்.

இவர்களுக்கு சதானந்தர், சிரகாரீ என்ற இரண்டு புதல்வர்கள்.
இந்த சதானந்தர் தான் "ஜனக மஹாராஜனின் குடும்பத்துக்கு ராஜ புரோஹிதராக" இருந்தார்.

இந்திரன் பூமியில் அழகுக்கெல்லாம் அழகுடைய அகலிகையை, கௌதம ரிஷியின் ரூபத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி கெடுத்து விட்டான்.
கௌதம ரிஷி இதை அறிந்து, இந்திரனை சபித்து, தெரியாமல் தவறு செய்து விட்ட அகலிகையையும் "கல்லாக போ" என்று சபித்து விட்டார்.

அந்த சமயத்தில் ராமபிரான் அவதரித்து விட்டார் என்று அறிந்து இருந்ததால், "எப்பொழுது ராமர் பாத துளி உன் மீது படுமோ அப்பொழுது விமோசனம்" என்று வரமும் கொடுத்து கிளம்பி விட்டார்.

இந்திரன், தேவன் தானே!! ஏன் இப்படி செய்தார்?
1000 அஸ்வமேத யாகம் செய்தால், அதற்கு பலன் இந்திர பதவி. 
இது யாருக்கும் பொது நீதி.
மஹா புண்ணியங்கள் செய்யும் போது, யார் வேண்டுமானாலும் இந்திரன் ஆகலாம் என்கிற போது, தவறுகள் ஏற்படும்.

பரமாத்மா நாராயணன் கண்ணபிரானாக அவதரித்த போதும், மனித குழந்தை என்று நினைத்து த்ரேதா யுகத்தில் இருந்த இந்திர தேவன் விருந்தாவனத்தை அழிக்க நினைத்து பிரளய கால மழையை வரவழைத்தான்.
இந்திரனின் கர்வத்தை அடக்க, பரமாத்மாவாகிய கண்ணன், 7 வயது சிறுவனாக இருந்த போதும், தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி ஊர் மக்களை காப்பாற்றினார்.

மேலும், தேவர்கள் சில சமயம் இப்படி சில காரியங்களை செய்து பெருமாளின் பெருமையை காட்ட இப்படி செய்வார்கள்.

கண்ணபிரான் தன்னை விட பலசாலி என்று காட்ட இந்திரன் இப்படி செய்தார்.
அதே போல, ராமபிரானின் சரணத்தில் பதிதர்கள் (மஹாபாபம்) விழுந்தால் கூட பாவனம் (புண்ணிய ஆத்மாவாக) ஆகி விடுவார்கள் என்று காட்ட, இந்திரன் செய்த காரியம் இது.

"இந்திரன் இப்படி கெடுக்காது போனால், ராமபிரானின் பெருமை உலகுக்கு எப்படி தெரியும்?" என்று ஸ்ரீமத்வாச்சாரியார் கேட்கிறார்.



பரத்வாஜ ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... பரத்வாஜ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

பரத்வாஜ ரிஷி கோத்திரம் (பரம்பரை)யில் பிறந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பரத்வாஜர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. கௌதமர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.




இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.
நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அங்கீரஸ ரிஷியின் புத்திரர் "பரத்வாஜர்".

'பரத்' என்றால் "நிரம்பிய" என்று அர்த்தம்.
'வாஜம்' என்றால் "அன்னம்" என்று அர்த்தம்.

அன்னதானத்திற்கு பெரும் புகழ் பெற்றவர் இந்த ரிஷி.

துர்வாச ரிஷி ஒருவரே "பத்தாயிரம் பேர் சாப்பிட கூடிய உணவை" சாப்பிட்டு விடுவார். அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.

பரத்வாஜ ரிஷியோ, தன் தபோ பலத்தால் "பத்தாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்".
அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.
தன் தபோ பலத்தை செலவழித்து, எத்தனை பேர் வந்தாலும் அன்னதானம் செய்து விடுவார் பரத்வாஜர்.

பரதன் அயோத்தி மக்களோடு கிளம்பி ராமபிரானை பார்க்க சித்ரகூடம் நோக்கி வந்தார்.

வரும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு தங்கினார்.

அன்று பரத்வாஜர் போட்ட அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு,  "அயோத்தியை ராமர் ஆளட்டும், பரதன் ஆளட்டும். நாம் இங்கேயே இருந்து விடலாம்" என்று சொன்னார்கள் என்றால், பரத்வாஜர் செய்த அன்னதானம் எப்பேர்ப்பட்டது என்று அனுமானிக்கலாம்.




ராமபிரான் வனவாசம் முடிந்து, ராவண வதம் முடிந்து, இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், 
இன்று பிரயாக்ராஜ் (பிரயாகை) என்று சொல்லப்படும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் (flight) இருந்து இறங்கினார்.
அப்போதும் அனைவருக்கும் அன்னதானம் செய்தார் பரத்வாஜர்.

சாம வேதியான அப்பைய தீக்ஷிதர், பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.

அன்னதானம் செய்வதை உயர்வாக நினைப்பவனுக்கு பரத்வாஜரே குரு.

பரத்வாஜ ரிஷி பரம்பரையில் (கோத்திரம்) இருப்பவர்கள், அன்னதானம் செய்ய செய்ய, தன் ரிஷியை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

இவர் கோத்திரத்தில் பிறந்தவர்கள், ராம பக்தி செய்தால், பரத்வாஜ ரிஷி மிகவும் ஆனந்தப்படுகிறார்.

வனவாசம் முடித்தபிறகு, ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். 

அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற பரத்வாஜ ரிஷி மற்றும் பல மகரிஷிகள், அவரை தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். 

தன்னை போலவே, சீதா, லக்ஷ்மணன் உட்பட ஒரு சிற்பம் வடித்து கொடுத்தார், 
தான் வேண்டுமா? இவர் வேண்டுமா? என்று கேட்டார் ராமர்.

இந்த அர்ச்சா இராமரின் அழகில் சொக்கி போய், "இவரே இருக்கட்டும்" என்றார்.

பரத்வாஜ ரிஷியும் மற்றும் பல ரிஷிகளும் அந்த சிலையை பார்த்தனர். அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், 
"ராமா! இந்த சிலை உயிரோட்டம் உள்ளதாக உங்களை போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்து கொள்ள விரும்புகிறோம்" என்றனர். 

சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர். 

அதன்படி ராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார். 

பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தை சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். 

அந்நியர் படையெடுப்பின் போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர். 

தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜர் தலைஞாயிறு எனும் இடத்தில் அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாக, ஒரு ஏகாதேசி தினத்தன்று கனவு கண்டார். 

அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான ராமர் சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டை செய்தார். 

இந்த வடுவூர் ராமர் பேரழகு. பரத்வாஜ ரிஷி பார்த்த இந்த ராமரை, பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டும். குல தெய்வமாக கொண்டாட வேண்டும்.

ஸ்ரீராமர் கோயில், வடுவூர் கோதண்டராமர் ஆலயம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.