Followers

Search Here...

Saturday 17 February 2018

ப்ரம்மாவின் வயது என்ன ?

ப்ரம்மாவின் வயது என்ன ?

பரம் என்ற பரமாத்மா (நாராயணன்) ப்ரம்மாவை படைத்தார்.
ப்ரம்மாவின் இன்றைய வயது என்ன ?
50 வயதை கடந்து, 51வது வருடத்தின் முதல் நாள் கடந்து கொண்டு இருக்கிறது.

ப்ரம்மாவின் ஒரு பகலில், 14 மனு அரசர்கள் ஆள்கின்றனர்.
ஒவ்வொரு மனுவின் காலம் முடிந்த பின், 17 லட்சத்தி 28 ஆயிரம் வருடங்கள் உலகம் கடலில் மூழ்கும்.

ஒவ்வொரு மனு அரசனும் 71 சதுர் யூகங்களை ஆள்கின்றனர்.

ஒரு சதுர் யுகம் என்பது 43 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள்.

ஆக, ஒரு மனு அரசர் 30 கோடியே 67 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள் ஆள்கிறார்.

ப்ரம்மாவின் இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்களில், இதுவரை 6 மனு அரசர்கள் காலம் முடிந்துள்ளது.

இப்பொழுது 7வது மனு அரசர் ஆண்டு கொண்டு இருக்கிறார்.
இவர் பெயர் : வைவஸ்வதன்.

இவருடைய 71 சதுர் யூகங்களில் இதுவரை 27 சதுர் யூகங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது இவர் 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இந்த சதுர் யூகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது.

கலி யுகத்தின் மொத்த வருடம் 4 லட்சத்தி 32 ஆயிரம் வருடங்கள்.
ஆங்கிலேய calendar படி கலி யுகம் 3102 BCல் ஆரம்பிக்கிறது.

சுமார் 3300 BCல் ஸ்ரீ கிருஷ்ணராக, ப்ரம்மாவை படைத்த அந்த பரமாத்மாவே அவதரித்து மகாபாரத போர் செய்தார்.
3300 BC முதல் 1700 BC வரை indus valley civilization என்று கண்டுபிடித்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

2017ல், கலியுகம் 5118 வருடங்கள் கடந்து உள்ளது. இன்னும் 432000 - 5118 வருடங்கள் உள்ளது. நியாயமாக, கலி யுகம் இப்பொழுது தான்  ஆரம்பித்துள்ளது. 😊

நம் ஒரு வருடம், சொர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு, ஒரு நாள்.

தேவர்கள் அவர்கள் காலப்படி 100 வருடம் இருந்து, அங்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப, சொர்க்க லோகத்திலிருந்து மேல் இருக்கும் மகர் லோகத்துக்கோ, ஜன லோகத்துக்கோ, தப லோகத்துக்கோ செல்வர்.
இந்த மகர, ஜன, தப லோகத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது பாவம் செய்திருந்தால், கீழ் லோகமான பூமியில் பிறப்பர்.
தேவர்களை பொறுத்தவரை மனிதர்கள் கீழ் தரமானவர்கள் 😊.

தப லோகத்துக்கும் மேல், சத்ய லோகம் உள்ளது. அங்கு தான் ப்ரம்மா இருக்கிறார்.

14 மனு அரசர்கள் ஆட்சி செய்து முடிக்கும் பொழுது, ப்ரம்மாவுக்கு ஒரு பகல் முடியும்.

ப்ரம்மாவின் இரவு, பகலை போன்று நீளமானது.
இந்த சமயத்தில், ப்ரம்மா தன் இருப்பிடமான சத்ய லோகத்தையும், மக, ஜன, தப லோகத்தை தவிர்த்து, பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார்.
இத்தனை காலங்கள் பிறந்தும், இறந்தும் இன்னும் நாராயணனை அடையாமல் உலக வாழ்க்கையே மீண்டும் மீண்டும் செய்து வாழ்ந்த அனைத்து ஆத்மாக்களும் ப்ரம்மாவின் இரவு காலம் முழுவதும், தான் இருக்கிறோம் என்று தெரியாமல் தூங்குவது போல அந்த பரமாத்மாவில் ஒடுங்கும்.

மீண்டும் ப்ரம்மாவின் பகல் ஆரம்பித்தவுடன், பிரம்மா மீண்டும் பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் படைத்து, முக்தி அடையாமல், அறியாமல் தூங்கும் நிலையில் உள்ள ஜீவாத்மாக்களை உலகில் மரமாகவோ, பறவையாகவோ, விலங்காகவோ, மனிதனாகவோ அவரவர் செய்த பாவ, புண்ணியத்தை பொறுத்து மீண்டும் பிறக்க வைக்கிறார்.

நிம்மதி கெடுவதற்கு காரணம்

நிம்மதி

மனதில் நிம்மதி உடையவன், எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறான்.

நிம்மதி எப்படி கெடு்கிறது?
பொதுவாக, இந்த உலகத்தில் நாம் பலருடன் பழகுவதினாலேயே நமக்கு நிம்மதி கெடு்கிறது.

நிம்மதி கெடுவதற்கு காரணம், நாம் பழகும் மனிதனோ, மிருகமோ ஏதுவாக இருந்தாலும் அதில் உள்ள குறைகளே காரணம்.
அந்த குறைகளை, நாம் அறியும் போது, நமக்கு நிம்மதி கெடுகிறது. மற்றவர் குறையால், இழப்பது நம் நிம்மதியை தான்.

சிறிது நாள் பழகினாலேயே, நமக்கு மற்றவர்களின் குறைகள் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவே கடைசியில் நம் நிம்மதியை கெடுக்கிறது.

கணவன், மனைவி இடையே கூட இந்த குறைகளே, இருவருக்கும் இருந்த நிம்மதியை கெடுக்கிறது.

மாமியார் தன் மருமகளின் குறைகளை கண்டுபிடித்தே, இருந்த நிம்மதியை தானும் கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

இதேபோல மருமகள், மாமியார் குறைகளை கண்டு பிடித்து, இருந்த நிம்மதியை கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

வீட்டிலே உள்ளவர்களின் குறையே, நம் நிம்மதியை கெடுக்கும் என்றால், வெளி மனிதர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த உலகில் பல மனிதர்கள். அவரவர்களுக்கு பல ஸ்வபாவம், பல நம்பிக்கை உள்ளது.
இப்படி பலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், இவர்களிடம் உள்ள குறைகள், நம் நிம்மதியை அழித்தே விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள 2 வழிகள் :
1. தனிமையில் எப்போதும் இருக்க முயற்சி செய்தால், பிறர் குறை தெரிய வாய்ப்பு இல்லை. இதுவே நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி. இதில் ஒரு குறைபாடு உள்ளது. தனிமையில் இருக்கும் போதும், மனம் அடங்காமல் இருப்பதால், மனம் தன்னிடம் உள்ள குறையை எடுத்துக் காட்டும். மற்றவர் மீது பார்த்த குறையை விட, தன்னிடம் பார்க்கும் குறைகள் இன்னும் நிம்மதியை கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

2. மகான்கள் மற்றும் குருவின் வழி : குருவுக்கு பல சிஷ்யர்கள் உண்டு. குரு உலகப் பற்று இல்லாமல் இருந்தாலும், நம்மை போன்றவர்களை வாழ்வில் உயர்த்த நம் வரை வந்து சகஜமாக பேசுகின்றனர். நாம் பேசும் கீழ் தரமான பேச்சுக்கள், செய்யும் செயல்கள் அனைத்துமே அவருக்கு குறைகளாக இருந்தும், 1000 குறைகள் இருந்தாலும், அதில் எங்காவது ஒளிந்திருக்கும் 1 நல்ல குணத்தை கண்டுபிடித்து, அதை மட்டுமே பெரிதுப்படுத்தி குறை உள்ளவனிடமும், புன்முறுவலோடு பேசுகிறார். இந்த முறையினால், மகான்கள் லட்சம் பேரிடம் பழகும் போதும், தன் நிம்மதியை கெடுத்துக் கொள்வதில்லை.

கலி புருஷன் "இந்த கலி யுகத்தில், நான் அதர்மத்தை நிலை நிறுத்தி, கலியின் கொடுமையை மக்களுக்கு காட்டுவேன்." என்று சொல்லி, மேலும், "எங்கே "ஹரி"யின் நாமம் கேட்கிறதோ அங்கு இந்த கலியின் கொடுமை இருக்காது, தர்மம் நிலைக்கும், மக்கள் அவதிப்பட மாட்டார்கள்" என்று சொன்னான்.
இதனை கேட்ட அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், பரீட்சித்து மன்னன், பல இன்னல்களை மக்கள் இந்த கலியுகத்தில் அனுபவிக்க நேரிடுமே என்று ஒரு கவலையினால், தன் நிம்மதி கெட வாய்ப்பு இருந்தும், கலி புருஷன் "ஹரி" நாமம் சொன்னால் பாதிப்பில்லை என்று சொன்னது மட்டும் பெரிதாகப் பட்டது.
கலி புருஷனிடமும் ஒரு நல்ல குணத்தை பார்த்தார் பரீட்சித்து.

நிம்மதி கெடாமல் இருப்பதற்கு, ஓடி ஒளிவதை விட, மற்றவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் பார்ப்பதே சரியான வழி.

தீய குணத்தை பார்ப்பதால், நம் நிம்மதியும் கெடும், பகையும் வளரும்.

இருக்கும் ஒரு நல்ல குணத்தை பார்ப்பதால் கூட, நம் நிம்மதி நம்மிடமே இருக்கும். மேலும் குறை உள்ளவனும், இதனால் மேலும் பல நல்ல குணங்களை காலம் செல்ல செல்ல வளர்த்துக் கொள்வான்.

கோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம்

அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகழ் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
நம்மாழ்வார் - திருவாய் மொழி

பரமாத்மாவாகிய நாராயணரின் திருவடி, தன் தலை மேல் படவேண்டும் என்றால் கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அத்தனை புண்ணியத்தையும் செலவு செய்தாலும், அவர் பாத ஸ்பரிசம் கிடைக்காது.
பலிச்சக்கரவர்த்தி தான் சம்பாதித்த உலகங்களை அந்த நாராயணரின் பாதத்தில் அர்ப்பணம் செய்தும், அதுவும் போதாது என்று தெரிந்தவுடன், தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்ததும், பகவான் ஸ்ரீமந் நாராயணர் பாதம் தன் சிரசில் படும் பாக்கியம் பெற்றார்.

தன் திருவடியை பக்தன் தலை மேல் வைத்து "நீ என்னை சேர்ந்தவன்" என்று உரிமையுடன் ஆட்கொண்டார்.


அத்தனை மதிப்புள்ள பெருமாளின் சடாரி (பெருமாள் திருவடி) தன் தலை மீது பட்டும், தான் ஒன்றுமே சமர்ப்பிக்க வில்லையே !!
பலிச்சக்கரவர்த்தி தன்னையே சமர்ப்பித்த பின்னரே, "நீ என்னை சேர்ந்தவன்" என்று தலை மீது தன் திருவடி வைத்த வெங்கடேச பெருமாள், தான் ஒன்றுமே சமர்ப்பிக்காமலே, தன்னை ஆட்கொண்டு விட்டாரே என்று கருணையை நினைத்து, இனியாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வது என்று "உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்று தன்னை ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார்.

நாமும் கோவிலில் சடாரி (பெருமாள் பாதரக்ஷை) நம் தலையில் படும்போது,  பலிச்சக்கரவர்த்தியின் ஆத்ம சமர்ப்பணத்தை நினைத்து, ஆழ்வாரின் இந்த பாசுரத்தை ஸ்மரிப்போம்.

Tuesday 13 February 2018

பாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்? நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
இந்த கேள்வி இந்தியர்களை பார்த்து பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுகிறது.


இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர்.
இதில் மூன்றில் ஒரு பங்கு ஜனங்களே உள்ள நாடு அமெரிக்கா.
இந்தியாவை போன்று ஜனத்தொகை உள்ள நாடு சீனா.
ஆனால், இந்தியாவை விட, நிலப்பரப்பு பல மடங்கு பெரியது.
நில பரப்பில் பாரத தேசத்தை விட பல மடங்கு பெரியது அமெரிக்கா.
கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் இவை எல்லாம்.
சாலை விதிகளை மீறினால் தண்டனை உண்டு இந்த நாடுகளில்.
இஸ்லாமிய நாடுகளில், வேறு மத சின்னங்கள் வைத்து கொண்டாலோ, கொண்டாடினாலோ கூட கடுமையான தண்டனை உண்டு. 
"திருட்டு" போன்ற செயல்களுக்கு தலை துண்டிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் பல தேசங்களில் இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும் இந்த தேசங்களில், தனி மனிதர்கள் துப்பாக்கி வாங்கி, பாதுகாப்புக்கு வைத்து கொள்கின்றனர். என்ன விசித்திரம்?
தனி மனித பாதுகாப்புக்கு, அச்சம் பொதுவாக காணப்படுகிறது.

இந்த அச்சம், இவர்களிடம் ஒருவன் சிரித்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.

சிறு உதவி செய்தாலும், THANK YOU  சொல்லும் பழக்கமும்,
சிறிய தவறு செய்தாலும், SORRY சொல்லும் பழக்கமும் இவர்களுக்கு பாதுகாப்பு இன்மையால் வந்த பழக்கங்கள்.
தானாக வந்த நல்ல பழக்கங்கள் இல்லை.
கட்டாயத்தால் உயிர் பயத்தால் வந்தவைகள் இவை.

இந்தியாவை தவிர பொதுவாக மற்ற நாடுகள், கடுமையான சட்டத்தை கொண்டு தான் மக்களை வழி நடத்துகிறது.

நல்ல விஷயங்கள் யாவும் சட்டத்தாலும், பயத்தாலும் தான் இந்த நாடுகளில் நடக்கிறது.

இந்தியாவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் கடுமையான சட்டங்கள் இல்லை.
கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இங்கு உண்டு. 
சட்டம் கொடுமையாக உள்ளது என்று புலம்புவோர் இங்கு இல்லை.
கடுமையான சில சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் தனி மனித ஒழுக்கம் மகான்களாலும், ரிஷிகளாலும், சாஸ்திரங்களாலும் புகட்டப்பட்டு, அது மக்கள் மனதில் ஆழ்ந்து ஊறி போய்  உள்ளது. 
பெரும்பாலும் ஹிந்துக்கள் சாத்வீக வாழ்க்கை வாழ்கின்றனர்.

சட்டங்கள் கடுமையாக இல்லாமல் போனாலும்,
அமெரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பு இல்லாமல் இருந்தாலும்,
கொஞ்சம் நிலப்பரப்பில் 120 கோடி மக்களை தாங்கி கொண்டு,
120 கோடி மக்களும் கையில் துப்பாக்கி தூக்கி கொண்டு, உயிர் பயத்தால் அலையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர்.

இது எப்படி இந்தியாவில் சாத்தியமாகிறது? என்பதே நம் பாரத நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்கள் கேள்வி.
நம்மிடம் உள்ள "நிம்மதியை" பார்த்து திகைக்கின்றனர்.


ஹிந்துவுக்கும், மற்ற தேசத்தில் உள்ள பிற மதத்தை சேர்ந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சின்ன உதாரணம் :

ஒரு பள்ளியில், ஆசிரியனாக ஒருவன் வேலை பார்த்து வந்தான்.
அவன் ஹிந்து அல்லாத வெளிநாட்டவன்.
தன் வகுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியனுக்கு பிடிக்கவில்லை.
அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், இவன் திருப்பி அடிப்பானோ?
மிகவும் சிறியவன் இவன். திருப்பி அடிக்க வாய்ப்பே இல்லை.

தைரியமாக அடிக்கலாம் என்று நினைத்தால், இவன் தன் அப்பாவை கூட்டி கொண்டு வந்து விட்டால்?
இவனின் தந்தை என்னை வெளுத்து விடுவாரே !!

இவன் அப்பனை சமாளித்து விடலாம் என்று நினைத்தாலும், இவன் போலீசுக்கு சென்று விட்டால், போலீஸ் அடியும் விழும், ஜெயிலும் கிடைக்குமே??
ஐயோ வேண்டவே வேண்டாம்..  
சமயம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்போம்"
என்று நினைத்து தன் கோபத்தை அடக்கி கொண்டான்.

இப்படி "சட்டத்திற்கு பயந்து, சமுதாயத்துக்கு பயப்படுகின்றனர்" வேறு மதத்தை சேர்ந்த வெளிநாட்டினர்.
பள்ளியில் ஒரு ஹிந்து ஆசிரியனாக வேலை பார்த்து வந்தான்.
அந்த ஆசிரியனுக்கும் தன் வகுப்பில் உள்ள ஒரு சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ பிடிக்கவில்லை.

அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஹிந்து ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், நான் செய்யும் பாவம் என்ற கர்மாவுக்கு, தண்டனை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அனுபவிக்க நேரிடுமே?

இவனுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மாவை அடித்த பாவம் சேருமே?

கடவுள் எங்கும் உள்ளார் என்று தெரியும் போது, இவனை காரணமே இல்லாமல் அடித்தால், நான் செய்யும் பாவத்துக்கு தண்டனை கிடைக்குமே?
அந்த பாவம் என்  பிள்ளைகளை பாதித்தால்?
அப்படியாவது இவனை அடித்து தான் நான் திருப்தி அடைய வேண்டுமா?
ஏன் நான் இரக்கப்பட கூடாது?

நான் ஏன் காரணமில்லாமல் ஜீவ ஹிம்சை செய்ய வேண்டும்?


என் மனதில் ஏற்படும் கோபத்திற்கு, நான் தானே காரணம். 
இவனை ஏன் பலிகடா ஆக்க வேண்டும்? இது என் குறை தானே?

நான் ஏன் ஒதுங்கி போக கூடாது?

ஏன் நான் முயற்சி செய்தாவது, அந்த சிறுவனிடத்தில் எங்காவது ஒட்டி இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்து, அவனை அடிப்பதற்கு பதில், அன்பு செய்ய முயற்சி செய்ய கூடாது?"
என்று பல கேள்விகள் மனதில் எழ, கோபத்தை விட்டு, "ஐயோ பாவம்" என்ற இரக்கம் வந்தது ஹிந்து ஆசிரியனுக்கு

இந்த சாத்வீக குணம் பொதுவாக அனைத்து பாரத மக்களிடமும் இருப்பதால் தான், பாரத மக்கள் இன்று வரை நிம்மதியாக வாழ்கின்றனர்.

ஹிந்துக்கள் சுய ஒழுக்கம், பாவ புண்ணிய ஞானத்தோடு இருப்பதால், குணத்திலேயே நல்லவர்களாக இருக்கின்றனர். 

வெளி மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், சட்டத்தால் மட்டுமே நல்லவர்களாக இருக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்.
பாதுகாப்பு இன்மை, உயிர்அச்சத்தால், வெளிநாட்டவர்கள் சொன்ன "THANK YOU", "SORRY" போன்ற வார்த்தைகள், ஹிந்துக்கள் கேட்கும் போது நல்ல பழக்கம் என்று தோன்றினாலும், அவர்களுக்கு இந்த பழக்கம் குணத்தால் வரவில்லை, பயத்தால் வந்த பழக்கமே.
மற்றவர்களை பார்த்து உயிர் பயமோ, பாதுகாப்பு இன்மையோ ஹிந்துக்களுக்கு இல்லாததால், மற்றவர்களுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்பதால், நமஸ்காரம், வணக்கம் சொல்லும் பழக்கம்  ஹிந்துக்களுக்கு இருந்ததே தவிர, "THANK YOU", "SORRY" சொல்லும் பழக்கம் நமக்கு இருந்ததே இல்லை.

120 கோடி மக்களுக்கு, சட்டம் கடுமையாக இல்லாத நிலையில், சில லட்ச போலீஸ் உண்மையில் போதுமா?
இயற்கையாகவே ஹிந்துக்களுக்கு இருக்கும் பாவ புண்ணிய அறிவாலும், ஜீவ காருண்யம் இயற்கையாக இருப்பதாலும், 120 கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், கடந்த 1200 வருடங்களில் புகுந்த பிற மதங்களால் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் உட்பட, அனைவரும் இந்த உயரிய குணத்தால் பிணைக்கப்பட்டு, தங்களை தாங்களே சட்ட ஒழுங்கு மீறாமல் பார்த்து கொள்கின்றனர்.
அவ்வப்போது ஏற்படும் மீறலுக்கு, இருக்கும் சில போலீஸ் உதவி செய்கின்றனர்.
இந்த சாத்வீக குணம் இந்த ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? 
நம் பாட்டனார்களால் வந்தது.

நம் பாட்டனார்களுக்கு எப்படி வந்தது இந்த குணம்?
நம் பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும் தந்தனர்.
இவர்களுக்கு இந்த குணம் எப்படி வந்தது?
ரிஷிகளுக்கு வேதத்தில் இருந்து வந்தது.


வேதம் எதிலிருந்து வந்தது?
வேதம் ப்ரம்மாவினால் வந்தது.
ப்ரம்மா எப்படி வந்தார்?
நாராயணனின் மூலம் வந்தார்.

நாராயணன் யார்?
நரன் (மனித) உடம்பில் புகுந்த அனைத்து ஜீவனுக்கும் அடைக்கலமாக, கதியாக இருப்பவரே நாராயணன்.
இவரே பரவாசுதேவன்.
இவரே கடவுள். இவரே பகவான்.
பாரத மக்களுக்கு இந்த குணங்கள் ஏற்பட்டதற்கு மூல காரணமாக ஸ்வயம் "நாராயணனே" இருக்கிறார்.

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
பாரத மக்கள் பிடித்திருக்கும் சங்கிலியில் தலைவனாக இருக்கிறார் "பரமாத்மா".
இந்த நாராயணன், திருப்பதி, ஸ்ரீ ரங்கம் என்று ஆரம்பித்து பாரதம் முழுவதும் தன்னை வ்யாபித்துக் கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனாகவும், பெருமாளாகவும், சிவனாகவும், முருகனாகவும், வேதத்தில் சொன்ன பல தேவதைகளின் ரூபத்திலும் பரவி, இந்த சாத்வீக குணம் நம்மை விட்டு போகாமல், இன்று வரை காத்து வருகிறார்.

இந்த கலாச்சாரத்தை அதிசயித்து காண வரும் கூட்டங்கள் அதிகம்.

அதே சமயம்,
"இந்த கலாச்சாரத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன், போலி மதங்கள்,
போலி கொள்கைகள் கொண்டு, 
பணத்தை காட்டி ஏமாற்றி, 
மதம் மாற்ற, இந்த பாரத கலாச்சாரத்தை கலைக்க, போலி மத வியாபாரிகள் கொண்டு 2000 வருடங்களாக முயற்சிக்கின்றனர்.
இந்த போலிகளின் நோக்கம், இந்த ஆச்சர்யமான பாரத கலாச்சாரத்தை அழித்து, சுய நல மனிதர்களாக மாற்றி, மீண்டும் பிரித்து ஆளும் கொள்கை கொண்டு வந்து, இந்தியாவை பிடிப்பதே.


ஹிந்துக்கள் அனைவரும் "நாராயணனே கதி" என்று இருந்து, நம் கலாச்சாரத்தின் மகிமையை இந்த போலிகளுக்கும் சொல்லி,
போலிகளை ஹிந்துக்கள் ஆக்கி,
பாரதம் மட்டுமின்றி, உலகத்தையே பரஸ்பரம் வெறுப்பு காட்டாத சமுதாயம் ஆக்குவோம்.
ஹிந்து மதம் ஆரம்பம் இல்லாதது.
மனித சமுதாயத்தில், மனித படுகொலைகள் என்பது இந்த போலி மதங்கள் உருவான பின் தான் அதிக அளவில் நடந்தது.

இந்த போலி மதங்கள் உருவானதற்கு முன், அரசர்கள் போர் செய்தனர் என்று படித்து இருப்போம்.
ஆனால், இந்த போலி மதங்கள் உருவான பின்னர்,
உலக வரலாற்றை புரட்டினோம் என்றால், ஒரு நாட்டை கைப்பற்றி, அந்த நாட்டின் பொது மக்கள் வேரோடு அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்..
அமெரிக்கா போன்ற தேசங்கள் செவ்விந்தியர்கள் வேரோடு அழிக்கப்பட்டு பிற மதங்களால் உருவானது.
ரோமானிய கலாச்சாரம் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.
பௌத்த தேசங்கள் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.

இந்தியா, 1200 வருடங்கள், காரணமே இல்லாமல், இந்த போலி மதங்களால், கோடிக்கணக்கான ஹிந்துக்களை இழந்தது.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
கஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெறும் தருவாயில், மீண்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஒரு அறிவாளி படிப்பானா?
ஒரு அறிவாளி செய்யக்கூடிய காரியம் அல்ல.
ஹிந்துவாக பிறந்தும், போலி மதத்துக்கு மாறுபவன் இது போன்ற செயல் தான் செய்கிறான்.
பல ஜென்ம புண்ணியத்தால், உலகில் பல நாடுகளில் எங்கோ பிறக்காமல், பாரத குடும்பத்தில் ஹிந்துவாக பிறக்கிறோம்.
ஹிந்து குடும்பத்தில் பிறப்பதே எத்தனை அதிர்ஷ்டம் என்பதை உலகை  கவனித்தாலே புரியும்.
இந்தியாவை தவிர எந்த மூலையில் பிறந்து இருந்தாலும் ஹிந்துவின் மகிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்ற வார்த்தை கூட கேட்காத வாழ்க்கை வாழும் கிடைத்து இருக்கும்.


அனைவரும் ஹிந்துக்கள் ஆகி, பரஸ்பரம் அன்பு கொண்டு, ஜீவ ஹிம்சை செய்வதை தவிர்ப்போம்.

மாமிசம் உண்டு, மது அருந்தி கீழ் தரமான செயல்கள் செய்யாமல், சாத்வீகனாக வாழ்வோம். 

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  


Sunday 11 February 2018

ப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன?

பாண்டவர்கள் காட்டில் இருந்த போது, எங்கு சென்றாலும், பொதுவாக பீமன் முன்னே நடந்து செல்வான்.

பீமனை தொடர்ந்து மற்ற சகோதரர்கள் பின் தொடர்வார்கள்.

ஒரு சமயம், முன்னால் நடந்து கொண்டிருந்த பீமன் திடீரென்று காணாமல் போய் விட்டான்.

பதறிய தர்மபுத்திரர், வழி எங்கும் தேட, ஒரு பெரிய மலை பாம்பு, பீமனை விழுங்கி இருந்தது. பீமன் தலை மட்டும் வெளியில் இருப்பதை கண்டார்.

1000 யானை பலம் கொண்ட பீமனை தோற்கடிக்கவே முடியாதே!!
இப்படி இருக்க, பீமனை எப்படி இந்த பாம்பு விழுங்கியது என்று நடந்த ஆபத்தை கண்டு பதறினார்.

பீமனை வெளியில் எடுக்கலாமா? பாம்பை வெட்டி விடலாமா, கொளுத்தலாமா? என்று முடிவு செய்வதற்குள், பீமனை விழுங்கி இருந்த அந்த பாம்பு பேச தொடங்கியது,
"மலை பாம்பாக நான் நீண்ட காலங்கள் பசியோடு இங்கேயே கிடக்கிறேன். நானாக உணவுக்கு செல்ல இயலாது.
உன் சகோதரன், தானாக வந்து என்னிடம் உணவாக மாட்டிக்கொண்டான்.
நீ இனியும் இங்கு இருக்காதே. இந்த  இடத்தை விட்டு சென்று விடு. மீறினால், நான் உன்னையும் என் நாளை உணவுக்கு சேர்த்து விழுங்கி விடுவேன். எனக்கு உணவாக கிடைத்த உன் சகோதரனே என் உணவு"
என்றது.

பீமனை விழுங்கவும் இல்லை, பாம்பு பேசுகிறது என்றதும், இது தேவனாகவோ, ராக்ஷஷனாகவோ இருக்க வேண்டும் என்று உணர்ந்த யுதிஷ்டிரர், அந்த பாம்பை பார்த்து,
"என் சகோதரன் எல்லையில்லா பலம் கொண்டவன். இவனை விட்டு விடுங்கள்.
இவனுக்கு பதில் வேறு உணவு கிடைக்க, உங்கள் பசிக்கு உணவு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

பீமனை விழுங்கிய பாம்பு தர்மனை பார்த்து,
"நீ கொடுக்கும் உணவு எனக்கு தேவை இல்லை.
நீ என்ன முயற்சி செய்தாலும் பீமனை மீட்க முடியாது.

ஆனால், நீ மிகவும் தர்மம் தெரிந்தவன், சாஸ்திரம் தெரிந்தவன் என்று உலகம் உன்னை பிரசித்தியாக சொல்கிறது.

நான் தர்ம விஷயமாக இல்லாமல், தர்ம சூக்ஷ்மமாக சில கேள்விகள் கேட்க போகிறேன்.

அதற்கு நீ சரியான பதில் சொன்னால், உன் தம்பி பீமனை விட்டு விடுவேன். இல்லையெனில், பீமனோடு, உன்னையும் சேர்த்து விழுங்கி விடுவேன்"
என்றது.

"அடடா, தர்மமான கேள்வியா? இப்பொழுதே கேட்கப்போகிறாயா?
அதுவும் தர்ம சூக்ஷ்மமாக கேள்வி கேட்க போகிறாயா?
தம்பி உயிருக்கு ஆபத்து என்ற இக்கட்டான நிலையில் தர்ம சம்பந்தமான கேள்வியா?
கொஞ்சம் அவகாசம் கொடு"
என்று தர்மர் கேட்கவில்லை. மறுக்கவும் இல்லை.
பதறவும் இல்லை.

தர்ம விஷயத்தில், இவருக்கு தெரியாத விஷயங்கள் கிடையாது. எந்த தர்ம சம்பந்தமான கேள்விக்கும் பதில் சொல்ல தன்னம்பிக்கை உடையவராக இருப்பதால், தர்மர்,
"தர்ம சம்பந்தமான கேள்வி என்றால், மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல தயார்"
என்றார்.

அந்த பாம்பு, கேட்ட முதல் கேள்வியே, மிகவும் பெரிய கேள்வி, கடினமான கேள்வி, பொல்லாத கேள்வியும் கூட.

அந்த பாம்பு கேட்டது,
"க்ஷத்ரிய குலத்தில் பிறந்த யுதிஷ்டிரா, நீ மகா புத்திசாலி என்ற காரணத்தால் தான், இந்த கேள்வியை உன்னிடம் கேட்கிறேன்.

பிராமணன்,  பிராமணன் என்று சொல்கிறார்களே.
அவர்கள் மிகவும் பூஜிக்கப்பட வேண்டிவர்கள் என்றும் சொல்கிறார்களே.

மற்றவர்கள் பிராமணன் சொல்வதை கேட்க வேண்டும் என்று சொல்கிறார்களே.

பிராமண லக்ஷணம் என்றால் என்ன?
நான் பிராமணன்,  பிராமணன் என்று சொல்பவன் எல்லாம் பிராமணன் ஆகி விடுவானா?

எப்படி இருந்தால் ஒருவன் பிராமணன் ஆகிறான்?
யார் பிராமணன்? என்று சொல்"
என்றது.

தயங்காமல் க்ஷத்ரியனான தர்மர் பதில் சொன்னார்,
"யாரிடத்தில் ஸத்யம் (உண்மை) இருக்கிறதோ,

யாரிடத்தில் தானம் (ஈகை) இருக்கிறதோ,

யாரிடத்தில் கருணை குணமாக  இருக்கிறதோ,

யாரிடத்தில் ஸதாசாரம் (நன்நடத்தை) இருக்கிறதோ,

யாரிடத்தில் அஹிம்சை (ஜீவ ஹிம்சை செய்து உடல் வளர்க்காமல், பிற ஜீவனை ஹிம்சை செய்யாமல்) இருக்கிறதோ,

யார் தன் ஜீவ வாழ்க்கையை ரிஷிகளின் வேத தர்மத்தில் இருந்து, தபசுக்காவே தன் வாழ்க்கையை செலவழித்து, வாழ்கிறானோ,

யார் சுக போகத்தை அடைவதற்காக ஜீவிக்கவில்லையோ,

யாரிடத்தில் இரக்கம் குணமாக  இருக்கிறதோ,
அப்படிப்பட்ட நற்குணங்களை கொண்ட, சாத்வீகமானவனே பிராமணன் என்று வேத ஸ்ம்ருதிகள் சொல்கிறது. "
என்றார் தர்மபுத்திரர்.

தர்மபுத்திரர் இங்கு சொன்னது தர்ம சூக்ஷ்மம்.

தர்மபுத்திரர் சொன்ன சொல், இதோ,
"சத்யம் தானம் க்ஷமா சீலம் ஆந்ரு ஸம்ஸ்யம் தபோ க்ருணா: த்ருஷ்யந்தே யத்ர நாகேந்திர ஸ ப்ராம்மண இதி ஸ்ம்ருத:"

"सत्यं दानं क्षमाशीलं आनृशंस्यं तपोघ्घृणा। दृश्यन्ते यत्र नागेन्द्र स ब्राह्मण इतिस्मृतः"

இப்படி பதில் சொன்னதும், அந்த பாம்பு, தர்மரை பார்த்து கேட்டது,
"அது என்ன இப்படி சொல்லிவிட்டீர்?
ப்ராம்மணனுக்கு பிறந்தவன் ப்ராம்மணன் இல்லையா?

நீங்கள் சொல்லும் குணங்கள், ஒரு க்ஷத்ரியனிடமோ (protection force), வைஸ்யனிடமோ (business man) சூத்ரனிடமோ (employee) தென்பட்டால், அவனும் ப்ராம்மணன் என்றல்லவா ஆகி விடுகிறது?

இந்த குணங்கள் இருந்தால் அவன் பிராம்மணன் என்று இப்படி சொன்னால், இப்படி தான் இருக்க வேண்டும் என்று அமைந்த ஒரு குடும்ப அமைப்பு கெட்டு விடுமே?

நீ க்ஷத்ரிய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ நாட்டை காப்பாற்று,

நீ வைஸ்ய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ வியாபாரம் செய்.

நீ பிராமண குலத்தில் பிறந்த காரணத்தால், நீ ப்ரம்மத்தை உபாசித்து கொண்டே, தர்மம் எது என்று அறிந்து, மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு வாழ்.

நீ சூத்ர குலத்தில் பிறந்த காரணத்தால், நீ மற்றவர்கள் கொடுக்கும் ஊதியத்துக்கு உழைத்து (employee) அவர்களுக்கும் உபயோகமாக, நீயும் சம்பாதித்து வாழ்ந்து கொள்.

என்று சாஸ்திரங்கள், பாகுபடுத்தி வைத்துள்ள ஒரு அமைப்பு கெட்டு விடுமே?"
என்று கேட்டது அந்த பாம்பு.

துவாபர யுகம் முடியும் நேரம், கலி யுகம் ஆரம்பிக்க போகும் காலம் அது.

இந்த சமயத்திலேயே வர்ணங்கள் கலக்க ஆரம்பித்து இருந்தன.

க்ஷத்ரியனான (armed men) தர்மருக்கே பிராம்மண குணம் கலந்து இருந்தது.
முழுமையான க்ஷத்ரியனாக இல்லாமல், க்ஷத்ரிய-பிராமணனாக இருந்தார்.

பிராமணனான (priest) துரோணருக்கு க்ஷத்ரிய குணம் கலந்து இருந்தது.
முழுமையான பிராமணனாக இல்லாமல், பிராமண-க்ஷத்ரியனாக இருந்தார்.

சூத்திரனான (employee) விதுரருக்கு பிராம்மண குணம் கலந்து இருந்தது.
முழுமையான வைஸ்யனாக இல்லாமல், வைஸ்ய-பிராமணனாக இருந்தார். வைஸ்யனாக இருந்த இவர், மிகுந்த உயர் பதவியான "முதல் அமைச்சராக" (hastinapur chief minister) இருந்தார் என்பது கவனிக்க தக்கது. பிராமண குணமும் இருந்ததால், விதுர நீதி சொன்னார். எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே பொழுது கழித்தார்

இப்படி வர்ணங்கள் துவாபர இறுதியிலேயே கலந்து விட்டதை உணர்ந்த தர்மர், "யார் உண்மையான பிராம்மணன்?" என்ற கேள்விக்கு தர்ம சூக்ஷ்மமான பதில் கேட்டதால், மேலோட்டமாக பிறப்பால் பிராம்மணன் என்று சொல்லாமல்,
"பிராம்மண லக்ஷணம் யாரிடம் உள்ளதோ அவனே பிராம்மணன்" என்று குணத்தை கொண்டு மதிக்க வேண்டும் என்றார்.

தர்மர் காலத்திலேயே கொஞ்சம் கலந்து இருந்த வர்ணத்துக்கே, தர்மர் குலத்தை வைத்து இனி யார் க்ஷத்ரியன் (Army man)?
யார் பிராம்மணன் (priest)?
யார் சூத்ரன் (employee)?
யார் வைஸ்யன் (businessman)?
என்று சொல்ல முடியாது என்பதால், குணத்தை வைத்து தான் இனி வர்ணத்தை சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்.

இதுவரை ஒருவனின் வர்ணம்  அவனுடைய ஆசாரத்திலும், குணத்திலும் மற்ற வர்ணங்கள் கலக்காமல் இருந்ததால், இவன் பிராம்மணன், இவன் க்ஷத்ரியன், இவன் சூத்ரன், இவன் வைஸ்யன் என்று பிறப்பை வைத்தே கண்டு பிடிக்க முடிந்தது.

ஆசாரம் கலி யுகத்தில் கெட்டு போவதால்,
க்ஷத்ரியன் (army) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான்.

பிராம்மணன் (priest) குடும்பத்தில், சூத்ர (employee) குணத்தில் பிறக்கிறான். வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறான், பிறருக்கு உழைத்து அதில் வருமானம் தேட முயற்சிக்கிறான். முதல் அமைச்சர் கூட ஆகிறான்.

சூத்திரன் (employee) குடும்பத்தில், க்ஷத்ரிய (army) குணத்தில் பிறக்கிறான். நாட்டுக்காக உயிர் துறக்க துணிகிறான். மற்ற குணத்தில் உள்ளவர்களை காப்பதில் ஆர்வம் காட்டுகிறான். மற்றவர்களுக்கு வேலை செய்து, அதில் வருமானம் சம்பாதித்து சாப்பிட இஷ்டமில்லாமல், உயிர் தியாகம் செய்யவும், நாட்டிற்கு காவல்காரனாகவும் இருக்க ஆசை படுகிறான்.

வைஸ்யன் (business) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான். தன் குடும்ப வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் சந்யாசியாக ஆசை படுகிறான்.

இப்படி ஆகி விட்ட நிலையில், பிராம்மணன் யார் என்று கேட்கும் பொழுது,
"வெளி ஆசாரத்தில், பிறப்பால் உண்மையான பிராம்மணன் யார் என்று கேட்டால், பிறப்பால் சொல்ல முடியாது இனி என்பதால், இனி குணத்தால் மட்டுமே, பிராம்மணனை சொல்ல முடியும்"
என்று தர்மர் விளக்கினார்.

4 வர்ணமும் மூன்று யுகங்கள் ஆசாரம் கெடாமல், குணமும் கலக்காமல் இருந்ததால், பிறப்பால் வர்ணத்தை கண்டு பிடிக்க முடிந்தது.

கலியில் நான் பிறப்பால் சூத்ரன், பிறப்பால் பிராம்மணன், பிறப்பால் க்ஷத்ரியன், பிறப்பால் சூத்ரன் என்று சொல்ல முடியாது.

நான் பிராம்மணன் என்று சொல்லி கொள்பவன், வேதம் படிப்பதில்லை. குறைந்த பட்சம் அவனுடைய கடமையாக விதிக்கப்பட்ட மூன்று வேளை சந்தியா வந்தனம் கூட செய்வதில்லை.
பூணுல், குடுமி, நெற்றியில் திலகமோ, விபூதியோ இல்லாமல் கூட திரிகிறான்.

அனைத்து வர்ணத்தில் உள்ளவனுக்கும் தினமும் ஹரி நாமமோ/சிவ நாமமோ, தெய்வ பக்தியும், அவரவர் வீட்டில் பூஜையும், கோவில் சென்று வழிபடுவதும் பொது கடமையாக இருந்தது.

இந்த ஆசாரங்களும் அழிந்து, இன்று வைஸ்யன், சூத்ரன், பிராம்மணன், க்ஷத்ரியன் என்று எல்லோரும் தெய்வ நிந்தனை செய்ய துணிகின்றனர், நெற்றியில் திலகம் கூட  இல்லாமல் திரிகின்றனர்.

இவன், ஹிந்துவா? முஸ்லீமா?  என்ற அளவுக்கு வேஷத்தில் ஒரே மாதிரியாகி போன பின், நான் பிராம்மணன், சூத்ரன், வைஸ்யன், க்ஷத்ரியன் என்று சொல்வதே வெட்ககேடான விஷயம். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன். நம் தெய்வங்கள் நெற்றியில் எதுவும் தரிக்காமல் இருக்கிறதா? பெருமாள், சிவன், முருகன் என்று எந்த தேவனும் நெற்றியில் திலகம் வைத்து உள்ளனர். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன்.

வர்ணம் ஆசாரத்தால் இனி அழிந்து விடும் என்றாலும், வர்ணம் குணத்தில் அழிவதே இல்லை.

அதனால் குணத்தை கொண்டே பிராம்மணன் யார்? என்று கண்டுபிடிக்க முடியும் என்று தர்ம சூக்ஷ்மத்தை விளக்கினார்.

இப்படி கலப்பு ஏற்பட காரணம் என்ன? வைஸ்யன் குடும்பத்தில் பிராம்மண குணத்தில் ஒருவன் பிறக்க அல்லது வளர காரணம் என்ன?
மற்ற வர்ணத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும்
சகவாசம் (உறவு),
சல்லாபம் (பேச்சு),
உணவு பரிமாற்றம்,
ஜலம்,
போன்றவை நமக்கு பிறக்கும் குழந்தைக்கோ, நமக்கோ கூட பிற வர்ண கலப்பு ஏற்பட்டு விடுகிறது.

நாட்டுப்பற்று உள்ளவன் குடும்பத்தில், வைஸ்ய குணம் உள்ளவன், தனக்கு கிடைக்கும் லாபத்தை பார்த்து, சில சமயத்தில், சொந்த நாட்டையே காட்டி கொடுத்து விடுகிறான்.

இந்த தர்ம சூக்ஷ்மமான பதிலை எதிர்பார்த்த அந்த சர்ப்பம் (பாம்பு), பீமனை கக்கி விடுவித்தது.

யுதிஷ்டிரர், பாம்பை பார்த்து,
"பாம்பு வடிவத்தில் இருக்கும் நீங்கள் தேவனா? அரக்கனா?. பாம்பாக இருந்து என்னிடம் பேசும் நீங்கள், யார் என்று எனக்கு சொல்ல வேண்டும்."
என்றார்.

பாம்பு பேசலானது,
"தர்மா !! சொல்கிறேன் கேள்.
நான் சந்திர வம்சத்தில் இருந்து வந்தவன்.
ஆயு என்பவரின் மகன். நகுஷன் என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு ராஜரிஷி.
என்னுடைய தானங்களாலும், பலத்தாலும், தர்மங்களாலும் நான் பூலோகம், புவர் லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் ஆளும் தகுதி பெற்றேன்.

இதனால், என்னை போல எவன் உண்டு என்ற அகங்காரம் கொண்டிருந்தேன்.

சொர்க்கத்துக்கு சென்ற நான், அனைத்தையும் அனுபவிக்கலாம் என்று நினைத்து விட்டேன்.

நான் எப்பொழுது சொர்க்க லோகத்துக்கு இந்திரனாக ஆகி விட்டேனா, அப்பொழுது, இந்திரனின் மனைவி "சசி" தேவியும் தனக்கு சொந்தம் தான் என்று நினைத்தேன்.

தானே அவளின் அந்தப்புரம் வர இருப்பதாக சொன்னேன்.

பதிவ்ரதையான சசி தேவி கண்ணீர் வடித்தாள்.
நான் வந்து விட போகிறேனே, என்ற பயத்தில், தான் என்ன செய்வது என்று தவித்தாள்.

தேவ குரு "ப்ருஹஸ்பதி" அங்கு சென்றார்.
"கவலை படாதே. ஒன்றும் ஆகாது.
அவன் வருவதாக இருந்தால், உன்னை பார்க்க வேண்டுமென்றால், சப்த ரிஷிகள் பல்லக்கு தூக்க, அதில் ஏறி வர வேண்டும் என்று கேள். காமுகனுக்கு நியாயம் அநியாயம் தெரியாது, சாதுக்கள் எதிரில் அவன் கட்டாயம் அபச்சாரமாக ஏதாவது செய்து விடுவான்"
என்றார்.

இதையே சசி தேவியும் என்னிடம்  தெரிவிக்க, இந்திரனாகி போன நான், சப்த ரிஷிகளை எனக்கு பல்லக்கு தூக்க அழைத்தேன்.

சொர்க்க லோகத்துக்கும் மேல், உள்ள லோகங்களில் சஞ்சரிக்கும் இவர்கள், கர்வமில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டு எனக்கு பல்லக்கு தூக்கினர்.

வைவஸ்வத மனு ஆட்சி புரியும் இந்த 71 சதுர் யுகத்தின் சப்த ரிஷிகள் வெறுப்பை சம்பாதித்தேன்.

அவர்களில் அகத்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கினை இவர் கையால் தூக்கி கொண்டு நடக்க, மற்ற ரிஷிகள் தன் தோளில் வைத்து நடந்தனர்.

இவரால் வேகம் தடைப்படுகிறதே என்று பார்த்த நான், கேலியாக, "சர்ப சர்ப" என்று பாம்பை போல வேகமாக ஊர்ந்து செல் என்று அகத்தியனை பார்த்து சொன்னேன்.

சப்த (7) ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியர், கோபம் கொண்டு 'அப்படியென்றால், நீ மலை பாம்பாக போ. அங்கேயே கிட' என்று சபித்து விட்டார்.

மெதுவாக நடந்தார் என்று கேலி செய்த நான், அன்றிலிருந்து, எங்கும் நகராமல், இந்த நிலையில் யுகங்களாக கிடக்கிறேன்.

மலை பாம்பாக இருந்தாலும், பூர்வ ஜென்மம் நினைவோடு இருக்கிறேன்.
சாதுக்களை கிண்டல் செய்து சாபத்தை வாங்கினாலும், அவர்கள் அணுகிரஹமும் செய்வார்கள் என்பதால், அகத்தியர்,
"எப்பொழுது பஞ்ச பாண்டவர்களில், பீமனை பிடிப்பாயோ, அவனை கொண்டு தர்ம சூக்ஷ்ம விஷயத்தை யுதிஷ்டிரனிடம் கேட்டு ஞானம் அடைவாயோ அப்பொழுது உனக்கு சாப விமோசனம் என்று அகத்தியர் சொன்னார்"
என்று சொன்ன மறுகணம், தன் பாம்பு உருவம் மறைந்து, நகுஷன் என்ற ராஜரிஷியாக வெளி வந்தார். வணங்கி விடைபெற்றார்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க ஹிந்து கலாச்சாரம்.