Followers

Search Here...

Saturday 18 February 2023

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? பெயர் அழகாக இருக்கிறது, என்று பெயர் வைக்கலாமா?

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்?

ஹிந்துக்கள் பெயர் கவர்ச்சியாக இருக்கிறது, என்ற காரணத்தால் மட்டும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்லை.

எந்த காரியத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்து செய்யும் ஹிந்துக்கள், குழந்தைகளுக்கு பெயர் வைப்பதையும் காரணத்தோடு தான் செய்கின்றனர்.  

"5 விதமான கடனோடு தான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்" என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும், தேவதைகளுக்கு, பெற்றோருக்கு, ரிஷிகளுக்கு, பரமாத்மாவுக்கு, அனைத்து உயிர்களுக்கும் (ஜீவாத்மா) கடன் படுகிறான்.

இந்த 5 கடனையும்,

  1. தேவ யக்ஞம், 
  2. பித்ரு  யக்ஞம், 
  3. ப்ரம்ம யக்ஞம், 
  4. மனுஷ்ய யக்ஞம், 
  5. பூத யக்ஞம் 

என்ற 5 விதமான யாகங்கள் மூலம் அடைக்க வேண்டும்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

இந்த 5 கடனில் ரிஷி கடனை அடைப்பது எப்படி?

ரிஷிகளுக்கு நாம் எப்படி கடன் பட்டோம்?

  • நாம் எப்படி மனிதனாக வாழ வேண்டும்? 
  • உலகத்தில் எப்படி வாழ்ந்தால் நமக்கு நன்மை? 
  • கிடைத்த பிறவியில் என்ன செய்தால் பரலோகத்துக்கு அடைய முடியும்? 
  • மோக்ஷம் அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? 
  • எது தர்மம் (righteaous)? 
  • எது அதர்மம்? 

என்று நமக்கு தேவையான அனைத்து சாஸ்த்திரத்தையும் ரிஷிகள் நமக்காக எழுதி ஒரு பெரிய அறிவு களஞ்சியத்தை நமக்கு கொடுத்து விட்டார்கள்.


அப்படி ஒரு வழி காட்டுதலை நமக்கு ரிஷிகள் கொடுக்காது போய் இருந்தால், நாம் மிருகம் போல தானே வாழ்ந்து கொண்டு இருப்போம்.

  • இவள் என் மனைவி, 
  • இவர்கள் என் பிள்ளைகள், 
  • இவள் சகோதரி 

என்ற கட்டுப்பாடு இந்த ரிஷிகளின் வழிகாட்டுதலில் தானே நம் வரை வந்து இருக்கிறது. 

  • நாம் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
  • பெற்றோர் தன் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • கணவன் எப்படி மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும்? 
  • மனைவி கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • அரசன் எப்படி மக்களை காப்பாற்ற வேண்டும்? 
  • மக்கள் எப்படி அரசனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 

என்று பல தர்மங்களையும் பல நூல்களாக ரிஷிகள் நமக்கு அள்ளி கொடுத்து விட்டனர்.

  • தர்மம், அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட மோக்ஷத்தையும் எப்படி அடைய வேண்டும்? என்ற பாதையையும், 
  • நமக்கு பக்தியையும், ஞானத்தையும் தரக்கூடிய ப்ரம்ம வித்யை, பகவத் வித்யையும் 

நமக்கு கொடுத்தவர்கள் ரிஷிகள்.


இப்படி எப்படி வாழ வேண்டும்? என்று நமக்கு வழி காட்டிய ரிஷிகளுக்கு நாம் நன்றி செய்ய வேண்டாமா?

மனு, வால்மீகி, வியாசர், ஆழ்வார்கள் அனைவருமே 'ரிஷிகள்' தான்.

4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்களுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

அப்படி ஒரு ராம குணத்தை நமக்கு "ராமாயண காவியமாக" நமக்கு கொடுத்த தமிழரான வால்மீகிக்கு (அவதாரம் இடம் : அன்பில்) நாம் என்ன செய்ய முடியும்?


ஆளவந்தார், "பராசர பகவான் இப்படி ஒரு அற்புதமான 'ஸ்ரீ விஷ்ணு புராணம்' கொடுத்தாரே, அவருக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?" என்று நினைத்தார். பராசர ரிஷிக்கு நன்றி செய்ய ஆசைப்பட்டார்.

ராமானுஜர் வந்த பொழுது, ஆளவந்தார் பரமபதம் சேர்ந்து விட்டார். 

அப்பொழுது அவரது திருமேனியில் மூன்று விரல்கள் மட்டும் மடிந்து இருந்ததை கண்டு, "ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு பாஷ்யம் செய்வேன்" என்றதும், ஆளவந்தார் திருமேனியில் மடிந்து இருந்த ஒரு விரல் திறந்தது. ஒரு பிள்ளைக்கு பராசரர் என்று பெயர் வைப்பேன் என்றதும் மற்றொரு விரலும் நேரானது.  


இப்படி ஆளவந்தார், பராசரருக்கு கைமாறு செய்ய ஆசைப்பட, ராமானுஜர் அதை நிறைவேற்றி கொடுத்தார். கூரத்தாழ்வார் பிள்ளைக்கு 'பராசரர்' என்று பெயர் வைத்தார்.


அது போல, பாகவதத்தை நமக்கு தந்த சுக ப்ரம்மத்துக்கு நாம் என்ன கைமாறு செய்து விட முடியும்? 

சுக ப்ரம்ம ரிஷி இல்லையென்றால், நமக்கு கிருஷ்ண அவதாரம் என்ன என்றே தெரிந்து இருக்காதே! கிருஷ்ண பக்தியே நமக்கு தெரியாமல் போய் இருக்குமே!


ஆழ்வார்கள் இல்லையென்றால், நமக்கு 108 திவ்ய தேசத்தின் மகிமையும் தெரிந்து இருக்காதே!


இப்படி அள்ளி அள்ளி நமக்கு கொடுத்த ரிஷிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?


நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? என்று ரிஷிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், நமக்கு ஒரு நன்றி உணர்வு வேண்டாமா?

அந்த நன்றியை காட்டுவதற்காக, தானே ராமானுஜர், 'பராசரர் என்று பெயர் வைத்து காட்டினார்.


ரிஷிகள் நமக்கு கொடுத்த நிதிக்கு, பதில் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் பெயரையாவது வைக்கலாமே!


அதனால் தானே, நம் குழந்தைகளுக்கு "ராமானுஜன்" என்று பெயர் வைக்கிறோம். "சடகோபன்" என்று பெயர் வைக்கிறோம்.


இந்த பெயரெல்லாம் ஏன் வைக்கிறோம்?

நமக்கு வழிகாட்டியாக இருக்கும் இந்த ரிஷிகளுக்கு, நன்றியை காட்ட தானே நம் குழந்தைகளுக்கு அவர்கள் பெயரை வைக்கிறோம்.

இதன் மூலம் ரிஷி கடனை நாம் அடைக்க முடியும்.


ரிஷிகள் கொடுத்த சாஸ்திரங்களை தினமும் படிப்பதாலும் நாம் அவர்களுக்கு நன்றி செய்து ரிஷி கடனை அடைகிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயரையும் வைக்கிறோம். இதன் மூலமும் தெய்வ கடனை அடைக்கிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டியின் பெயரையும் வைக்கிறோம். அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு சேவை செய்து கொண்டு, போன பிறகும் திவசம் தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்து நன்றியை காட்டி பித்ரு கடனை அடைக்கிறோம்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

Friday 17 February 2023

கண் பார்வை கிடைக்க "அஸ்வினி குமாரர்களை" துதித்து உபமன்யு செய்த பிரார்த்தனை என்ன? பாகிஸ்தானில் taxila என்று இன்று அழைப்படும், தக்ஷசீலத்தில் ஜனமேஜெயன் ஏன் சர்ப யாகம் செய்தார்? அவரின் குரு யார்? யார் சொல்லி இந்த சர்ப யாகம் செய்தார்?

ஜனமேஜெயன் தன் 3 சகோதரர்களுடன் சத்ர யாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஸாரமேயன் என்ற நாய் வந்தது. அதை அந்த 3 சகோதரர்கள் அடித்து துரத்தினர்.

"யாகத்தை பார்க்காத, ஹவிஸை சாப்பிடாத என் பிள்ளையை ஏன் அடித்தார்கள்?" என்று தேவலோக நாய் (ஸரமை) வந்து கேட்டது.

பதில் சொல்லாமல் இருப்பதை கண்டு, "பெரும் ஆபத்து காத்து இருக்கிறது" என்று சொல்லிவிட்டு மறைந்தது.

இதை  சமாளிக்க,

ஜனமேஜெயன் ஸ்ருத-ஸ்ரவஸ் என்பவரின் பிள்ளையான ஸோம-ஸ்ரவஸ் என்ற ரிஷி புத்திரரை தனது புரோகிதராக ஆக்கி கொண்ட பின்,

அவர் என்ன சொல்கிறாரோ, அதன் படி கேட்டு செய்யுமாறு  தன் 3 சகோதரர்களுக்கும் (ஸ்ருதி-சேனன், உக்கிர-சேனன், பீம-சேனன்) சொல்லி விட்டு, திக் விஜயமாக சென்று, தக்ஷசிலம் (Taxila, Pakistan) என்ற தேசத்தை கைப்பற்றினார்.

स तथा भ्रातॄन्संदिश्य

तक्षशिलां प्रत्यभिप्रतस्थे

तं च देशं वशे स्थापयामास।।

- mahabharat (Vyasa)


தக்ஷசிலம் (Taxila, Pakistan) என்ற தேசத்தை கைப்பற்றிய பிறகு, ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார் ஜனமேஜெயன்.


சிறுவயதில் ஜனமேஜெயனும், மற்றொரு க்ஷத்ரிய அரசனான பௌஷ்யன் என்ற அரசனும் பைதர் என்ற ரிஷியிடம் கல்வி கற்றனர்.

இந்த பைதருக்கு, உதங்கர் என்ற பிராம்மண ரிஷியும் ஒரு சிஷ்யரே.


"பைதர்உபமன்யுஆருணி என்ற உத்தாலகர்" ஆகிய மூவரும் தௌம்ய ரிஷியின் சிஷ்யர்கள். இதில் ஆருணீ என்ற சிஷ்யர் பாஞ்சால (punjab) தேசத்திலிருந்து வந்தவர்

அவரை (பஞ்சாபி சிஷ்யர்) பார்த்து, "தண்ணீர் வயலுக்குள் புகாதவாறு ஒரு மடை கட்டு" என்றார்.

उपमन्यु: आरुणि: बैद:च एति स

एकं शिष्यंम् आरुणिं पाञ्चाल्यं

प्रेषयामास गच्छ केदारखण्डं बधानेति।।

- மஹாபாரதம் (வியாசர்)


ஆருணீ என்ற அந்த சிஷ்யன் (பஞ்சாபி சிஷ்யர்) தௌம்யர் சொன்னபடி வயலுக்கு சென்று மடை கட்ட பல முயற்சி செய்தும், முடியாமல் போக, "சரி இது தான் வழி" என்று ஒரு வழி கண்டு பிடித்தார்.

स उपाध्यायेन संदिष्ट आरुणिः पाञ्चाल्य:

तत्र गत्वा तत् केदारखण्डं बद्धुं नाशकत्।

स क्लिश्यमान: अपश्यद् उपायं

भवत्वेवं करिष्यामि इति।।

- மஹாபாரதம் (வியாசர்)

உடனே, "தானே ஒரு மடையாக படுத்து கொண்டு" விட்டார். பிறகு, தண்ணீர் புகாமல் நிறுத்தி விட்டார்.

स तत्र संविवेश केदारखण्डे शयाने

व तथा तस्मिं तद् उदकं तस्थौ।।

- மஹாபாரதம் (வியாசர்)


வெகுநேரம் ஆனதால், குருவான ஆபோதர் என்ற தௌம்யர், "சிஷ்யனான பாஞ்சால தேசத்து ஆருணீ எங்கே போனான்?" என்று தன் மற்ற சிஷ்யர்களை கேட்டார்

ततः कदाचिद् उपाध्याय आपोदो धौम्यः

शिष्यावपृच्छत् क्व आरुणिः पाञ्चाल्यो गत इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு அவர்கள், "பகவன்! நீங்கள் சொல்லியதன் பேரில் அவன் கழனியில் தண்ணீர் புகுந்து விட கூடாது என்று மடை கட்ட சென்றான்" என்றனர். "அப்படியானால், நாமும் அவன் போன இடத்திற்கே சென்று, அங்கு அவனை பார்ப்போம்" என்றார் தௌம்யர்

तौ तं प्रति उचतु: भगवंस्त्वयैव 

प्रेषितो गच्छ केदारखण्डं बधानेति।

स एवम् उक्तस्तौ शिष्यौ प्रत्युवाच 

तस्मात्तत्र सर्वे गच्छामो यत्र स गत इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அங்கே சிஷ்யர்களோடு சென்ற குருவான தௌம்யர் "ஓ! பாஞ்சால தேசத்து ஆருணீ! எங்கே இருக்கிறாய்? (க்வாஸி)  குழந்தாய் ! வா" என்று கூவினார்.

स तत्र गत्वा तस्याह्वानाय शब्दं चकारः।

भो आरुणे पाञ्चाल्य क्वासि वत्सैहीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர் குரல் கேட்டதும், அந்த வயலில் மடையாக படுத்து இருந்த ஆருணீ உடனே எழுந்து ஓடி வந்து, "நான் இதோ இருக்கிறேன். இந்த வயலிலிருந்து வெளியில் போகும் தண்ணீரை கட்ட முடியாமல் போனதால், நானே மடையாக படுத்து கொண்டிருந்தேன். பகவன்! உங்களுடைய குரல் கேட்டதும், உடனே கழனி மடையை பிளந்து கொண்டு உங்களிடம் வந்தேன். உங்களை நமஸ்கரிக்கிறேன். நான் செய்ய வேண்டிய காரியத்தை நீங்கள் கட்டளையிடவேண்டும்" என்று தன் உபாத்யாயராண தௌம்யரை பார்த்து சொன்னார்.

स तच्छ्रुत्वा आरुणि: उपाध्याय वाक्यं

तस्मात् केदारखण्ड: आत्सहस:

ओत्थायतम् उपाध्यायम् उपतस्थे।।

प्रोवाच चैनमयमस्म्यत्र केदारखण्डे

निःसरमाणम् उदकम् अवारणीयं संरोद्धुं

संविष्टो भगवच्छब्दं श्रुत्वैव सहसा

विदार्य केदारखण्डं भवन्तम् उपस्थितः।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு குருபக்தியில் சிறந்த தன் சிஷ்யனான ஆருணீ (பஞ்சாபி) சொன்னதை கேட்ட குருவான தௌம்யர், "என் குரல் கேட்டதும், நீ வயலில் மடையாக படுத்து எழுந்து ஓடி வந்ததால், 'உத்தாலகன்' என்று பெயர் பெறுவாய். நான் சொன்னதை செய்ததால் நீ புகழோடு வாழ்வாய். அனைத்து வேதமும் அனைத்து தர்ம-சாஸ்திரங்களும் (ஸ்ம்ருதி) உன்னிடத்தில் பிரகாசமாக இருக்கும்" என்று ஆசீர்வாதம் செய்தார்.

स एवमुक्त उपाध्यायः प्रत्युवाच

यस्माद् भवान् केदारखण्डं विदार्योत्थित:

तस्माद् उद्दालक एव-नाम्ना भवान् भविष्यति

इति उपाध्याय एन अनुगृहीतः।।

यस्माद् च त्वया मद् वचनम् अनुष्ठितं

तस्माद् छ्रॆयो अवाप्स्यसि।

सर्वे च ते वेदाः प्रतिभास्यन्ति

सर्वाणि च धर्म-शास्त्राणि इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு அனுக்கிரஹம் செய்யப்பட்ட ஆருணி (உத்தாலகர்) குருவிடம் விடை பெற்று தான் விரும்பிய தேசத்திற்கு சென்றார்.

स एवम् उक्त उपाध्यायेन इष्टं देशं जगाम।।

- மஹாபாரதம் (வியாசர்)


பிறகு, ஆபோதர் என்ற தௌம்யர், தனது மற்றொரு சிஷ்யரான "உபமன்யு"வை பார்த்து, "குழந்தாய் ! உபமன்யு! இனி நீ பசுக்களை மேய்த்து கொண்டு இரு" என்றார். 

अथ: आपरः शिष्य तस्य एव

आपोदस्य धौम्यस्य उपमन्यु: नाम।

तं च: उपाध्यायः प्रेषयामास

वत्सोपम् अन्यो गा रक्षस्व: इति।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவ்வாறே, உபமன்யுவும் தன்னுடைய குரு சொன்னப்படியே பசுக்களை மேய்க்க அழைத்து சென்றார். தினமும் காலையில் பசுக்களை மேய்ச்சலுக்கு கூட்டி சென்று, எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்து கொண்டு, இரவில் அந்த பசுக்களை குருவின் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த பிறகு, குருவை நமஸ்கரிப்பார்.

स उपाध्याय वचनादरक्षद्गाः स

चाहनि गा रक्षित्वा दिवसक्षये

गुरु गृहम् आगम्य उपाध्याय:

अस्य आग्रतः स्थित्वा नमश्चक्रे।।

- மஹாபாரதம் (வியாசர்)

 


தன் சிஷ்யனான உபமன்யு புஷ்டியாக இருப்பதை கவனித்த தௌம்யர், "குழந்தாய்! உபமன்யு ! நீ எதை கொண்டு உயிர் வாழ்கிறாய்? மிகவும் புஷ்டியாக இருக்கிறாயே?" என்றார்.

तम् उपाध्यायः पीवानम् अपश्यद् उवाच

च: एनं वत्सोपम् अन्यो केन वृत्तिं

कल्पयसि पीवान् असि दृढम् इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி குருவான தௌம்யர் கேட்டதும், "தான் பிக்ஷை எடுத்து ஜீவிக்கிறேன்" என்று பதில் கூறினார் உபமன்யு.

स उपाध्यायं प्रत्युवाच भो भैक्ष्येण वृत्तिं

कल्पयामि इति तम् उपाध्यायः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர், "பிக்ஷையை தனக்கு அர்ப்பணம் செய்யாமல், எடுத்து கொள்ள கூடாது" என்றார். குரு சொன்னபடியே அடுத்த முறை பிக்ஷை எடுத்த உணவை அப்படியே குருவிடம் ஸமர்பித்தார்.

मयि निवेद्य भैक्ष्यं न: उपयोक्तव्यम् इति।

स तथेत्युक्तो भैक्ष्यं चरित्व: उपाध्यायाय न्यवेदयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர், அவர் கொடுத்த முழு பிக்ஷை உணவையும் தானே எடுத்துக்கொண்டார்.

स तस्माद् उपाध्यायः सर्वमेव भैक्ष्यम् अगृह्णात्।

- மஹாபாரதம் (வியாசர்)


இருந்தும், மீண்டும் பழையபடி ஒவ்வொரு நாளும் காலை பசுக்களை மேய்ச்சலுக்கு இட்டு சென்றார் உபமன்யு. மாலை ஆனதும் பசுக்களை குருவின் வீட்டில் கட்டி விட்டு, குருவுக்கு நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்.

स तथेत्युक्तः पुनररक्षद्गा अहनि रक्षित्वा

निशामुखे गुरुकुलम् आगम्य गुरोरग्रतः स्थित्वा नमश्चक्रे।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர் (பிக்ஷையை தான் எடுத்துக்கொண்டாலும்) இருந்தும் உபமன்யு புஷ்டியாக இருப்பதை பார்த்து, "குழந்தாய்! உபமன்யு ! உன்னுடைய பிக்ஷை முழுவதையும் மிச்சமின்றி நானே எடுத்து கொண்டு இருக்கிறேன். நீ எப்படி ஜீவிக்கிறாய்?" என்று கேட்டார்.

तम् उपाध्याय: तथापि पीवानम् एव दृष्ट्व उवाच।

वत्स उपमन्यो सर्वमशेषतस्ते भैक्ष्यं

गृह्णामि केनेदानीं वृत्तिं कल्पयसि इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி குருவான தௌம்யர் கேட்டதும், "பகவானாகிய உங்களுக்கு முதல் பிக்ஷை கொடுத்து விட்டு, இரண்டாவது பிக்ஷை எடுத்து ஜீவிக்கிறேன்" என்று உபமன்யு பதில் சொன்னார்.

स एवमुक्त उपाध्यायं प्रत्युवाच।

भगवते निवेद्य पूर्वमपरं चरामि तेन वृत्तिं

कल्पयामि इति तम् उपाध्यायः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர், "இது குருகுல வாசத்துக்கு நியாயமன்று! பிக்ஷை எடுத்து மற்ற சிஷ்யர்களும் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு நீ விரோதம் செய்கிறாய். இவ்வாறு செய்தால் நீ ஆசைக்கு உட்பட்டவனாகி விடுகிறாய்" என்று சொன்னார்.

नैषा न्याय्या गुरुवृत्ति: अन्येषामपि भैक्ष्योप जीविनां

वृत्त्युपरोधं करोषि इत्येवं वर्तमानो लुब्धोऽसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


குரு சொன்னதை ஏற்று, மீண்டும் பசுக்களை ரக்ஷித்து வந்தார் உபமன்யு. வழக்கம் போல தினமும் செய்து கொண்டு குருவை நமஸ்கரித்து கொண்டு இருந்தார்.

स तथेत्युक्त्वा गा अरक्षद्रक्षित्वा च पुन: उपाध्याय

गृहम् आगम्य उपाध्याय: याग्रतः स्थित्वा नमश्चक्रे।।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்படி இருந்தும் தன் சிஷ்யன் புஷ்டியாக இருப்பதை பார்த்த குருவான தௌம்யர், மீண்டும், "குழந்தாய்! உபமன்யு! நான் உன்னுடைய முழு பிக்ஷையை எடுத்து கொள்கிறேன். நீயும் வேறு பிக்ஷை எடுப்பதில்லை. நீ மிகவும் புஷ்டியாக இருக்கிறாயே! எதனால் ஜீவிக்கிறாய்?" என்று கேட்டார்.

तम् उपाध्याय: तथापि पीवानम् एव दृष्ट्वा पुन: उवाच।

वत्स: उपमन्यो अहं ते सर्वं भैक्ष्यं गृह्णामि न चान्यच्चरसि

पीवानसि भृशं केन वृत्तिं कल्पयसि इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி குருவான தௌம்யர் கேட்டதும், உபமன்யு, "குருவே! இந்த பசுக்களின் பாலை குடித்து ஜீவிக்கிறேன்" என்று பதில் சொன்னார். இதை கேட்ட குருவான தௌம்யர், "இது சரி அல்ல.. பாலை நீ குடிக்கலாம் என்று நான் அனுமதி தரவில்லையே" என்று சொன்னார். 

स एवम् उक्तस्तम् उपाध्यायं प्रत्युवाच।

भो एतासां गवां पयसा वृत्तिं कल्पयामीति।

तम् उवाच: उपाध्यायो नैतन्न्याय्यं पय उपय:

उक्तुं भवतो मया नाभ्यनुज्ञातमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உபமன்யு குரு சொன்னதை ஏற்று சபதம் செய்து, மீண்டும் பசுக்களை மேய்த்து கொண்டு, குருவை நமஸ்கரித்து வந்தார்.

स तथेति प्रतिज्ञाय गा रक्षित्वा पुन: उपाध्याय

गृहमेत्य गुरोरग्रतः स्थित्वा नमश्चक्रे।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர் அப்பொழுதும் புஷ்டியாகவே இருப்பதை கண்டு, "குழந்தாய்! நீ பிக்ஷை சாப்பிடவில்லை. வேறு பிக்ஷையும் எடுக்கவில்லை. பாலையும் குடிக்கவில்லை. புஷ்டியாகவே இருக்கிறாயே! இப்போது எதனால் ஜீவிக்கிறாய்?" என்றார்.

तम् उपाध्यायः पीवानम् एव दृष्ट्व उवाच।

वत्स: उपमन्यो भैक्ष्यं नाश्नासि न चान्यच्चरसि

पयो न पिबसि पीवानसि भृशं केनेदानीं वृत्तिं कल्पयसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி குருவான தௌம்யர் கேட்டதும், உபமன்யு, "குருவே! இந்த கன்றுகள் தன் தாயிடம் பால் குடித்து விட்டு, அதன் வாயில் ஒதுக்கும் நுரை பாலை குடித்து ஜீவிக்கிறேன்" என்றார் உபமன்யு.

स एवम् उक्त उपाध्यायं प्रत्युवाच।

भोः फेनं पिबापि यमिमे वत्सा

मातॄणां स्तनात्पिबन्त उद्गिरन्ति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட குருவான தௌம்யர், "குழந்தாய்! இந்த கன்றுகள் நல்ல குணமுள்ளவை.  அதனால் தான், தான் குடிக்கும் போது, உன்னிடத்தில் உள்ள இரக்கத்தினால் பாலை நுரையாக கக்குகிறது. நீ உண்மையில் அதற்கு இடையூறு செய்கிறாய். நுரையை நீ குடிக்கலாகாது" என்று சொன்னார். குரு சொன்னதை ஏற்று கொண்டு, ஆகாரம் இல்லாமல் உபமன்யு தொடர்ந்து பசுக்களை மேய்த்து கொண்டு வந்தார்.

तम् उपाध्यायः प्रत्युवाच।

एते त्वदनुकम्पया गुणवन्तो

वत्साः प्रभूततरं फेनमुद्गिरन्ति।

तदेषामपि वत्सानां वृत्त्युपरोधं करोष्येवं वर्तमानः।

फेनमपि भवान्न पातुमर्हतीति स तथेति

प्रतिश्रुत्य निराहारः पुनररक्षद्गाः।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதனால் உபமன்யு பிக்ஷை உண்ணவில்லை. வேறொரு பிக்ஷையும் உண்ணவில்லை. பாலும் குடிக்கவில்லை. பால்நுரையும் குடிக்கவில்லை. இதனால் பசியினால் வேறு வழியே இல்லாமல், காட்டில் வளர்ந்து இருந்த எருக்க இலைகளை கசக்கி அதை சாப்பிட்டுவிட்டார்.

तथा प्रतिषिद्धो भैक्ष्यं नाश्नाति न च अन्यच्चरति पयो न पिबति

फेनं न: उपयुङ्क्ते स कदाचिद् अरण्ये क्षुधार्त: अर्क-पत्राणि अभक्षयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உபமன்யு சாப்பிட்ட அந்த எருக்க இலைகளின் முரட்டுத்தனமான உப்பும், கைப்பும், காரமும் சேர்ந்த தன்மையால், ஜீரணகாலத்தில் சூட்டை கிளப்பி விடுவதால் கண் குருடாகி போனது. கண் தெரியமாலேயே தவழ்ந்து தவழ்ந்து அலைந்து கொண்டிருந்த உபமன்யு, தவறி போய் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டார்.

स तै: अर्कपत्रै: भक्षितैः क्षारतिक्त कटुरूक्षै:

तीक्ष्ण विपाकै: चक्षुष्युपहतोऽन्धो बभूव।

ततः सोऽन्धोऽपि चङ्क्रम्यमाणः कूपेऽपतत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


சூரியன் அஸ்தமனம் ஆகியும் திரும்பி வராததை கண்ட குருவான தௌம்யர், "உபமன்யு வரவில்லையே?" என்று தன் மற்ற சிஷ்யர்களை கேட்டார்.

अथ तस्मिन्नन आगच्छति सूर्ये चास्ताचलावलम्बिनि उपाध्यायः शिष्यानवोचत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


மேலும், "நான் உபமன்யுவை எல்லா விஷயங்களிலும் தடுத்து விட்டேன். ஒருவேளை அவன் கோபத்தில் வராமல் இருக்கிறானோ. ஆதலால் அவனை நாம் தேடவேண்டும்" என்று சொல்லி தன் சிஷ்யர்களோடு வனம் சென்றார். அங்கு சென்று, "குழந்தாய்! உபமன்யு! எங்கிருக்கிறாய்? குழந்தாய்!  வா!" என்று சத்தமாக கூவினார்..

मय: उपमन्युः सर्वतः प्रतिषिद्धः स नियतं

कुपित: ततो न आगच्छति चिरगतस्त्विति।

ततोऽन्वेष्य इत्येवमुक्त्वा शिष्यैः सार्धमरण्यं गत्वा

तस्याह्वानाय शब्दं चकार भो उपमन्यो क्वासि वत्सैहीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


தன் குருவின் குரலை கேட்ட உபமன்யு, "இதோ இந்த கிணற்றில் விழுந்து கிடக்கிறேன்" என்று உரக்க பதில் சொன்னார். இதை கேட்ட குருவான தௌம்யர், "நீ இந்த கிணற்றில் எப்படி விழுந்தாய்?" என்று கேட்டார்.

स उपाध्यायस्य आह्वान वचनं श्रुत्वा

प्रत्युवाचोच्चैरयम् अस्मिन्-कूपे पतित: अहम् इति।

तम् उपाध्यायः प्रत्युवाच कथं

त्वम् अस्मिन् कूपे पतित इति।।

- மஹாபாரதம் (வியாசர்)

அதற்கு உபமன்யு, "எருக்க இலைகளை தின்றதால் குருடானேன்! அதனால் நடக்கும் போது கிணற்றில் விழுந்து விட்டேன்" என்றார். இதை கேட்ட குருநாதர் அதற்கு பதில் சொல்லலானார்.

स उपाध्यायं प्रत्युवाच अर्क-पत्राणि भक्षयित्वा

अन्धी-भूतोस्म्यतश्चङ्क्रम्यमाणः कूपे पतित इति।

तम् उपाध्यायः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான தௌம்யர், "நீ அஸ்வினி தேவர்களை துதி செய். அவர்கள் தேவ-வைத்தியர்கள். உன்னை கண் உள்ளவனாக செய்வார்கள்." என்று மறுமொழி கூறினார். இப்படி குரு சொன்னதும், உபமன்யு, அஸ்வினி தேவர்களை மந்திர ரூபமான வாக்கியங்களால் துதிக்க தொடங்கினார்.

अश्विनौ स्तुहि तौ देवभिषजौ

त्वां चक्षुष्मन्तं कर्ताराविति।

स एवमुक्त उपाध्यायेन: उपमन्युः

स्तोतुम् उपचक्रमे देवावश्विनौ वाग्भिर्ऋग्भिः।।

- மஹாபாரதம் (வியாசர்)


சூரியனுக்கு முன் செல்லும் அஸ்வினி தேவர்களே! என்றோ முன்பு பிறந்தவர்களே! பல வர்ணங்களில் கிரணங்கள் உள்ளவர்களே, தவத்தால் அழிவில்லாதவர்களே, தேவ லோகத்தில் உண்டானவர்களே, சிறந்த திவ்ய-சிறகுகள் உள்ளவர்களே, ரஜோகுணம் இல்லாதவர்களே, எல்லா உலகங்களுக்கும் மேல் தங்கள் விமானங்களை செலுத்துபவர்களே, உங்களை வாக்கினால் துதிக்க ஆசைப்படுகிறேன்.

प्रपू: वगौ पूर्वजौ चित्रभानू गिरा 

वां शंसामि तपसा ह्यनन्तौ।

दिव्यौ सुपर्णौ विरजौ विमाना-

वधिक्षिपन्तौ भुवनानि विश्वा।।

- மஹாபாரதம் (வியாசர்)


பொன்மயமான பறவைகள் போன்று இருப்பவர்களே, ஆபத்தில் உள்ளவர்களுக்கு உறவினர் போன்றவரே, பொய் பேசாதவர்களே, பார்ப்பதற்கு அழகானவர்களே, அழகான மூக்கு உள்ளவர்களே, விஷேச ஜெயம் உள்ளவர்களே, சூரியனுக்கு முன்னால் செல்லும் அஸ்வினி தேவர்களே, சூரியனுடைய தேஜஸை கோண்டு வெளுப்பும் (பகல்), கருப்புமாகிய (இரவு) பகலையும் இரவையும் மாற்றி மாற்றி திரித்து நெய்யும் சிறந்த தறிகாரர்களே உங்களை துதிக்கிறேன்.

हिरण्मयौ शकुनी सांपरायौ

नासत्यदस्रौ सुनसौ वैजयन्तौ।

शुक्लं वयन्तौ तरसा सुवेमा-

वधिव्ययन्तावसितं विवस्वतः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கருடனை போன்ற பலமுள்ள ஒரு செந்நாயிடம் பிடிக்கப்பட்ட விச்சுளி என்னும் பறவையை சுகமாக இருக்கும் படி விடுவித்த அஸ்வினி தேவர்களே. (ரிக் வேதத்தில் உள்ள ஒரு கதை). நல்ல செய்கையுள்ள நீங்கள் என் துன்பத்தையும் நிவர்த்தி செய்ய நமஸ்கரிக்கிறேன். சிறிதும் இல்லாமல் இருந்த சிவந்த சூரிய கிரணங்களை உதயமாக செய்வது தாங்களே.

ग्रस्तां सुपर्णस्य बलेन वर्तिका-

ममुञ्चतामश्विनौ सौभगाय।

तावत्सुवृत्तावनमं तमाय या-

वसत्तमा गा अरुणा उदावहत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


360 கறவைப்பசுக்கள் (தினங்கள்) ஒரு கன்றை ஈன்று (வருஷம்), அந்த கன்றுக்கு பால் (ஒளி) கொடுத்து அவை வளர்கின்றன.

அந்த 360 பசுக்களும் பல கொட்டில்களில் (தேசங்கள்) இருக்கின்றன. இந்த 360 பசுக்களையும் ஒரே ஒருவன் கறக்கிறான் (சூரியன்).

இந்த 360 பசுக்களிடம் சாரமான தர்மத்தை அஸ்வினி தேவர்களே நீங்கள் கறக்கிறீர்கள். 


720 ஆரக்கால்கள் (360 நாளில் உள்ள இரவும், பகலும்).சக்கரத்தில் கோர்க்கப்பட்டு இருக்கின்றன.

அந்த சக்கரமானது (காலம்) சுற்றளவு இல்லாமலும், அழிவில்லாமலும் சுற்றி கொண்டே இருக்கின்றது. புருஷ ரூபியான அஸ்வினி தேவர்களே மாயையானது உங்களை ஆஸ்ரயித்து  இருக்கிறது.


மற்றொரு சக்கரம் 12 ஆரக்கால்களுடனும் (மாதங்கள்) , 6 நாபியுடனும் (ருதுக்கள்), ஒரே அச்சுடனும் (வருஷம்), அமிர்தத்திற்கு (உணவு தந்து கொண்டு) ஆதாரமாக நடக்கின்றது.  

எல்லா தேவர்களும் யாகத்தையே ஆஸ்ரயித்து  இருக்கின்றனர். அஸ்வினி தேவர்களே துன்பத்தில் இருக்கும் என்னை விடுவிக்க வேண்டும்.

षष्टिश्च गावस्त्रिशताश्च धेनव

एकं वत्सं सुवते तं दुहन्ति।

नानागोष्ठा विहिता एकदोहना-

स्तावश्विनौ दुहतो घर्ममुक्थ्यम्।।

एकां नाभिं सप्त सथा अराः श्रिताः

प्रधिष्वन्या विंशतिरर्पिता अराः।

अनेमि चक्रं परिवर्ततेऽजरं

मायाऽश्विनौ समनक्ति चर्षणी।।

एकं चक्रं वर्तते द्वादशारं

षण्णाभिमेकाक्षममृतस्य धारणम्।

यस्मिन्देवा अधि विश्वे विषक्ता-

स्तावश्विनौ मुञ्चतो मा विषीदतम्।।

अश्विनाविन्दुममृतं वृत्तभूयौ

तिरोधत्तामश्विनौ दासपत्नी।

हित्वा गिरिमश्विनौ गामुदाचरन्तौ

तद्वृष्टिमह्नात्प्रस्थितौ बलस्य।।

- மஹாபாரதம் (வியாசர்)


அஸ்வினி தேவர்கள் அமிர்த மயமான சந்திரனை விட்டதாக வியாபிக்கிறார்கள். தாசர்களை காப்பாற்றுகின்றனர். அஸ்வினி தேவர்கள் பலத்திற்கு காரணமான மழையை கொடுக்க மலையை விட்டு புறப்பட்டு பூமியில் சஞ்சரிக்கிறார்கள்.

அஸ்வினி தேவர்களே! நீங்கள் எல்லோர் முன்னிலையிலும் 10 திசைகளையும் உண்டாக்குகிண்றீர்கள். (வெளிச்சம் இல்லையென்றால் திசை இல்லை)

அந்த 10 திசைகளும் தங்கள் தலை மேல் சூரிய ரதத்தின் சஞ்சாரத்தை சமமாக அடைகின்றன.

அந்த திசைகளில் செல்லும் சூரிய ரதத்தை ரிஷிகளும், தேவர்களும் பின் செல்லுகின்றனர்.

மனிதர்கள் பூமியில் சஞ்சரிக்கின்றனர்.

நீங்கள் எல்லா வர்ணங்களோடு கூடிய கிரணங்களை வரிக்கிறீர்கள். அவை எல்லா உலகத்தையும் வியாபித்து கொண்டு இருக்கிறது.

அந்த கிரணங்களை அனுசரித்து தேவர்களும் சஞ்சரிக்கிறார்கள்.

युवां दिशो जनयथो दशाग्रे

समानं मूर्ध्नि रथयानं वियन्ति।

तासां यातमृषयोऽनुप्रयान्ति

देवा मनुष्याः क्षितिमाचरन्ति।।

युवां वर्णान्विकुरुथो विश्वरूपां-

स्तेऽधिक्षियन्ते भुवनानि विश्वा।

ते भानवोऽप्यनुसृताश्चरन्ति

देवा मनुष्याः क्षितिमाचरन्ति।।

- மஹாபாரதம் (வியாசர்)


பொய் பேசாதவர்கள் என்பதால் நாஸத்யர்கள் என்று அழைக்கப்படும் அஸ்வினி தேவர்கலாகிய உங்களையும், நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் தாமரை மாலையையும் நான் பூஜிக்கிறேன். மோக்ஷத்தை கொடுப்பவர்களும், கர்மபலன்களை விருத்தி செய்கிறவர்களுமான அந்த அஸ்வினி தேவர்களை  தவிர மற்ற தேவர்கள் தங்கள் ஸ்தானத்தில் இருந்து பலன்களை கொடுப்பதில்லை.

तौ नासत्यावश्विनौ वां महेऽहं

स्रजं च यां बिभृथः पुष्करस्य।

तौ नासत्वावमृतावृतावृधा-

वृते देवास्तत्प्रपदे न सूते।।

- மஹாபாரதம் (வியாசர்)


ஒரு சிறுவனும், சிறுமியும் முகத்தாலே கர்ப்பத்தை தரித்தனர் (கடலில் இருக்கும் ஜலத்தை உறிஞ்சி ஆகாயம் கர்ப்பம் தரிக்கிறது). ஓர் உயிருமில்லாத (வாயு மண்டலம்) இவள், இதை நுனிக்காலால் (மழை துளிகளால்)பிரசவித்தாள் . பிறந்த குழந்தை (மழை தண்ணீர்) தாயை (பூமியை)சாப்பிடுகிறது. சூரியனின் கிரணத்தில் இருக்கும் அஸ்வினி தேவர்களாகிய நீங்கள் எல்லோரும் ஜீவிக்கும்படி, சூர்யா கிரணங்களை வியாபிக்க செஇகின்றீர்கள்

मुखेन गर्भं लभतां युवानौ

गतासुरेतत्प्रपदेन सूते।

सद्यो जातो मातरमत्ति गर्भ-

स्तावश्विनौ मुञ्चथौ जीवसे गाम्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உங்களுடைய குணத்தையெல்லாம் சொல்லி வழிபட நான் சக்தியற்றவன். குருடனாகி வழி தெரியாமல் இந்த கிணற்றில் விழுந்து கிடக்கிறேன். ரக்ஷிக்க திறன் உள்ள உங்களை நான் அடைக்கலம் புகுகிறேன்" என்று உபமன்யு பிரார்த்தனை செய்தார்.

स्तोतुं न शक्नोमि गुणैर्भवन्तौ

चक्षुर्विहीनः पथि संप्रमोहः।

दुर्गेऽहमस्मिन्पतितोऽस्मि कूपे

युवां शरण्यौ शरणं प्रपद्ये।।

- மஹாபாரதம் (வியாசர்)


सौतिरुवाच। (மேலும் சூத பௌராணிகர் சொன்னார்)


இவ்வாறு உபமன்யு துதிக்க, அஸ்வினி தேவர்கள் காட்சி அளித்து, "நாங்கள் உன் மேல் அன்பு கொள்கிறோம். இதோ உனக்கு சாப்பிட பக்ஷணம் இருக்கிறது. எடுத்து கொள்" என்றனர்.

एवमृग्भिश्चान्यैरस्तुवत्।

इत्येवं तेनाभिष्टुतावश्विनावाजग्मतुराहतुश्चैं

प्रीतौ स्व एष ते अपूपोशानैनमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட உபமன்யு, "மகிமை பொருந்திய உங்கள் வாக்கு பொய் போகாது. ஆனால், நான் குருவுக்கு தெரியாமல் இந்த பக்ஷிணத்தை சாப்பிட மாட்டேன்" என்றார்.

स एवमुक्तः प्रत्युवाच नानृतमूचतुर्भगवन्तौ

नत्वहमेतमपूपमुपयोक्तुमुत्सहे गुरवेऽनिवेद्येति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட அஸ்வினி தேவர்கள், "கவலைப்படாதே! இது போல முன்பு உன் குருநாதர் பிரார்த்தித்தபோது இதே போன்று அவருக்கும் பக்ஷணம் கொடுத்தோம். அவர் அதை அவருடைய குருவுக்கு சொல்லாமல் சாப்பிட்டார். உன் குரு செய்ததை போலவே நீயும் செய்." என்றனர்.

ततस्तम् अश्विनावूचतुः।

आवाभ्यां पुरस्ताद्भवत उपाध्यायेनैवमेवाभिष्टुताभ्यामपूपोदत्त उपयुक्तः स

तेनानिवेद्य गुरवे त्वमपि तथैव कुरुष्व यथा कृतमुपाध्यायेनेति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி சொன்ன பிறகும், "இந்த விஷயத்தில் அஸ்வினி தேவர்களாகிய உங்களை மறுபடியும் கேட்டு கொள்கிறேன். நான் குருவுக்கு தெரியாமல் சாப்பிட மாட்டேன்" என்றார்

स एवमुक्तः प्रत्युवाच एतत्प्रत्यनुनये भवन्त अवश्विनौ

नोत्सहेऽहमनिवेद्य गुरवेऽपूपमुपयोक्तुमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட அஸ்வினி தேவர்கள், "உன் குரு பக்தியை கண்டு உன்னிடம் மேலும் அன்பு கொள்கிறோம். உன்னுடைய குருவின் பற்கள் எஃகு போன்று உறுதியாக இருக்கும். உனக்கு உன் பற்கள் தங்கம் போல இருக்கும். நீ கண்களை பெறுவாய். அனைத்து கல்வியையும் அடைவாய்" எண்று அஸ்வினி தேவர்கள் உபமன்யுவை ஆசீர்வாதம் செய்தனர்.

तमश्विनावाहतुः प्रीतौ स्वस्तवानया गुरुभक्त्या।

उपाध्यायस्य ते कार्ष्णायसा दन्ता भवतोऽपि हिरण्मया भविष्यन्ति

चक्षुष्मांश्च भविष्यसि श्रेयश्चावाप्स्यसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அஸ்வினி தேவர்கள் இப்படி சொன்னதும், உபமன்யு கண்களை பெற்றார்.

உடனே தன் குருவிடம் ஓடி வந்து அபிவாதனம் செய்து நடந்ததை சொன்னார்.

स एवमुक्तोऽश्विभ्यां लब्धचक्षुरुपाध्यायसकाशमागम्याभ्यवादयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

கண் பார்வை பெற்ற  உபமன்யுவை  குரு அன்போடு பார்த்து, "அஸ்வினி தேவர்கள் சொன்னபடி உனக்கு கல்வியின் பயன் அனைத்தும் கிடைக்கும். உன்னில் அனைத்து வேதங்களும் அணைத்து தர்ம-சாஸ்திரமும் (ஸ்ம்ருதிகள்) பிரகாசிக்கும்." என்று சொன்னார்.

உபமன்யுவுக்கு இவ்வாறு பரீக்ஷை நடந்தது.

आचचक्षे च स चास्य प्रीतिमान्बभूव।।

आह चैनं यथाऽश्विनावाहतुस्तथा त्वं श्रेयोऽवाप्स्यसीति।।

सर्वे च ते वेदाःप्रतिभास्यन्ति सर्वाणि च धर्मशास्त्राणीति।

एषा तस्यापि परीक्षोपमन्न्योः।।

- மஹாபாரதம் (வியாசர்)


பிறகு, குருவான தௌம்யர், பைதர் என்ற மற்றொரு சிஷ்யனை பார்த்து, "குழந்தாய்! பைதா! நான் சொல்லும் வரை சில காலம் என்னுடைய க்ருஹத்தில் பணி விடை செய்து கொண்டிரு. இதன் மூலம் நீ விருப்பப்படும் வித்யை பெறலாம்" என்றார்.

अथापरः शिष्य: तस्यैवापोदस्य धौम्यस्य बैदो नाम

तम् उपाध्यायः समादिदेश वत्स बैद इहास्यतां

तावन्मम गृहे कंचित्कालं शुश्रूषुणा च

भवितव्यं श्रेयस्ते भविष्यतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த பைதர், " அப்படியே செய்கிறேன்" என்று சொல்லி, குருகுலவாசம் செய்து, குருவுக்கு அனைத்து விதத்திலும் சேவை செய்து கொண்டு வந்தான்.

ஒரு எருது சுமை சுமப்பது போல, எப்பொழுதும் குருவினால் நியமிக்கப்பட்டு, வெயில், பசி, தாகம் எது ஏற்பட்டாலும், அதை  சொல்லிக்கொள்ளாமல்,எதற்கும் குறை சொல்லாமல் அனைத்து கைங்கர்யமும் செய்து கொண்டு வந்தான்.

स तथेत्युक्त्वा गुरुकुले दीर्घकालं गुरुशुश्रूषणपरोऽवसत्।

गौरिव नित्यं गुरुणा धूर्षु नियोज्यमानः

शीतोष्णक्षुत्तृष्णादुःखसहः सर्वत्राप्रतिकूलस्तस्य

महतात्कालेन गुरुः परितोषं जगाम।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி வெகு காலங்கள் இவன் செய்து கொண்டே இருக்கா, இவனை கண்டு குருவான தௌம்யர் ப்ரசன்னமானார். அவரின் அனுகிரஹ பலத்தால், அந்த பைதான் சர்வஞன் ஆனான்.இது பைதனுக்கு நடந்த பரீக்ஷை.

तत्परितोषाच्च श्रेयः सर्वज्ञतां चावाप।

एषा तस्यापि परीक्षा बैदस्य।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதற்கு பிறகு, குருவான தௌம்யரின் அனுமதியோடு, தன் குருகுல-வாசத்தை முடித்து கொண்டு, க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை ஏற்று திருமணம் செய்து கொண்டார்.

स उपाध्यायेनानुज्ञातः समावृत्त:

तस्माद् गुरु-कुलवासाद् गृहाश्रमं प्रत्यपद्यत।

- மஹாபாரதம் (வியாசர்)


க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருந்த பைதருக்கும் 3 சிஷ்யர்கள் இருந்தார்கள். ஆனால், பைதர் தன் குருவை போல கடுமையாக இல்லாமல், எந்த வேலையும் கொடுக்காமல் சுகமாக பார்த்து கொண்டார்.

तस्यापि स्वगृहे वसत स्त्रयः शिष्या बभूवुः स

शिष्यान्न किंचिदुवाच कर्म वा क्रियतां गुरुशुश्रूषा वेति।

- மஹாபாரதம் (வியாசர்)


பைதர் குருகுல வாசத்தின் கஷ்டத்தை அறிந்து இருந்ததால், அது போன்ற கஷ்டத்தை தன் சிஷ்யர்களுக்கு விதிக்க ஆசைப்படவில்லை.

दुःखाभिज्ञो हि गुरुकुलवासस्य शिष्यान्परिक्लेशेन योजयितुं नेयेष।।

- மஹாபாரதம் (வியாசர்)


முக்கியமாக ஜனமேஜெயன், பௌஷ்யன் என்ற 2 க்ஷத்ரிய குமாரர்கள்  ப்ராம்மணரான பைதரை ஆசாரியனாக வரித்து படித்தனர்.

अथ कस्मिंश्चित्काले बैदं ब्राह्मणं जनमेजयः पौष्यश्च

क्षत्रियावुपेत्य: उपाध्यायं वरयाञ्चक्रतुः।।

- மஹாபாரதம் (வியாசர்)


ஒரு சமயம் யாகம் செய்வதற்காக புறப்பட்ட பைதர், தன் பிராமண சிஷ்யனான உதங்கர் என்பவரை தன் க்ருஹத்தில் இருக்க சொல்லி, உதங்கரை பார்த்து, "நம்முடைய க்ருஹத்தில் எது வேண்டி இருந்தாலும், அதை நீ குறைவில்லாமல் செய்து தர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கட்டளையிட்டு விட்டு, தூரதேசம் சென்றார்.

स कदाचिद्याज्य कार्येणाभि प्रस्थित

उत्तङ्क नामानं शिष्यं नियोजयामास।।

भोयत् किंचिद् अस्मद् गृहे परिहीयते

तदिच्छाम्यहमपरिहीयमानं भवता क्रियमाणमिति

स एवं प्रतिसंदिश्योत्तङ्कं बैदः प्रवासं जगाम।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதன் படியே உதங்கர், குருவின் ஆணைக்கு கட்டுப்பட்டு, அங்கேயே வாசம் செய்து, அங்கே கொடுக்கப்பட்ட அனைத்து காரியத்தையும் செய்து வந்தார்

अथ: उत्तङ्कः शुश्रूषुर्गुरुनियोगमनुतिष्ठमानो गुरुकुले वसति स्म।

स तत्र वसमान उपाध्यायस्त्रीभिः सहिताभिराहूयोक्तः।।

- மஹாபாரதம் (வியாசர்)


அங்கே இருந்த மற்ற ஆசிரியர்களின் பத்தினிகள் ஒருநாள் சேர்ந்து வந்து, உதங்கரை அழைத்து, "உன்னுடைய ஆசாரியரின் மனைவி ருது ஸ்நானம் செய்து இருக்கிறாள். உன்னுடைய குருவும் இவள் அருகில் இல்லாத நிலை. ஆதலால், சிஷ்யனான நீ இவளோடு சேர்ந்து இருக்க வேண்டும்" என்றனர்

उपाध्यायानी ते ऋतुमती उपाध्यायश्च प्रोषितोऽस्या

यथाऽयमृतुर्वन्ध्यो न भवति तथा क्रियतामेषा विषीदतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட உதங்கர், அந்த பெண்களை பார்த்து, "நான் பெண்களாகிய நீங்கள் சொல்லும் இந்த காரியத்தை செய்ய மாட்டேன். குருவான பைதர், என்னை செய்ய கூடாத காரியத்தையும் செய் என்று கட்டளையிடவில்லை" என்று இவர்கள் சொன்னதை மறுத்தார்.

एवमुक्तस्ताः स्त्रियः प्रत्युवाच।

न मया स्त्रीणां वचनाद् इदम् अकार्यं करणीयम्।

न ह्यहम् उपाध्यायेन संदिष्ट: अकार्यम् अपि त्वया कार्यम् इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


பிறகு, வெகுகாலம் கழித்து குருவான பைதர் தன் க்ருஹத்துக்கு திரும்பி வந்தார். இந்த காலத்தில் நடந்தவற்றை அனைத்தையும் கேட்டு, தன் சிஷ்யனை கண்டு பேரானந்தம் அடைந்தார்.

तस्य पुनरुपाध्यायः कालान्तरेण गृहमाजगाम तस्मात्प्रवासात्।

स तु तद्वृत्तं तस्याशेषमुपलभ्य प्रीतिमानभूत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


தன் சிஷ்யனை பார்த்து, "குழந்தாய்! உதங்கா! உனக்கு என்ன விருப்பமோ கேள்! நான் அதை செய்வேன்" என்றார். மேலும், "நீ எனக்கு உன் தர்மத்தை விடாமல் சேவை செய்ததால், உன்னிடம் உள்ள ஸ்நேஹம் மேலும் வளர்ந்தது. நான் உனக்கு விடை கொடுக்கிறேன். நீ விரும்பியதை உன் வாழ்க்கையில் பெறுவாய். நீ போகலாம்" என்று வாழ்த்தினார்.

उवाच चैनं वत्सोत्तङ्कं किं ते प्रियं करवाणीति।

धर्मतो हि शुश्रूषितोऽस्मि भवता तेन प्रीतिः परस्परेण नौ संवृद्धा

तदनुजाने भवन्तं सर्वानेव कामानवाप्स्यसि गम्यतामिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு குருவான பைதர் சொன்னதும், உதங்கர் "குருநாதா!  நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? குருவுக்கு சம்மதம் இல்லாததை சிஷ்யன் அதர்மமாக கொடுக்க கூடாது. அதே போல, சிஷ்யனின் தகுதிக்கு மீறி அதர்மமாக குருவும் கேட்க கூடாது.  அப்படி அதர்மமாக கேட்டல், துவேஷம் உருவாகும். அதர்மமாக இப்படி செய்பவர்கள் நாசம் அடைவார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆதலால், உங்களால் விடைபெற்ற நான், குருகுல வாசத்தை விட்டு செல்லும் முன், நீங்கள் விரும்பும் தனத்தை தக்ஷிணையாக கொடுக்க விரும்புகிறேன்" என்றான்

स एवमुक्तः प्रत्युवाच किं ते प्रियं करवाणीति एवं ह्याहुः।।

यश्च अधर्मेण वै ब्रूयाद् यश्चा अधर्मेण पृच्छति।

तयो: अन्यतरः प्रैति विद्वेषं चाधिगच्छति।।

सोहमनुज्ञातो भवता इच्छामीष्टं गुर्वर्थमुपहर्तुमिति।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட குருவான பைதர், "குழந்தாய் ! உதங்கா! நீ இன்னும் சில காலம் இங்கேயே இரு" என்றார் 

तेनैवमुक्त उपाध्यायः प्रत्युवाच वत्सोत्तङ्क उष्यतां तावदिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி சொன்னதும் சிலகாலம் கூடவே இருந்த உதங்கர், மீண்டும் தன் குருநாதரை பார்த்து, "உங்களுக்கு கொடுக்க வேண்டிய குரு தக்ஷிணையை கொடுக்க வேண்டும். நீங்கள் கட்டளை இடுங்கள்" என்று பிரார்த்தித்தார்.

स कदाचित्तमुपाध्यायमाहोत्तङ्क आज्ञापयतु

भवान्किं ते प्रियमुपाहरामि गुर्वर्थमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


குருவான பைதர், "குழந்தாய்! உதங்கா! நீ எனக்கு தக்ஷிணை கொடுக்கிறேன்" என்று பலமுறை கேட்கிறாய். அப்படி நீ கொடுக்க ஆசைப்பட்டால், நீ வீட்டுக்குள் சென்று, உனது குருவின் பத்னியிடம் 'நான் என்ன கொடுக்க வேண்டும்?' என்று கேள்.  அவள் என்ன சொல்கிறாளோ அதை செய்து கொடு" என்று சொன்னார்.

तमुपाध्यायः प्रत्युवाच वत्सोत्तङ्क बहुशो मां चोदयसि गुर्वर्थमुपाहरामीति तद्गच्छैनां प्रविश्योपाध्यायानीं पृच्छ किमुपाहरामीति एषा यद्ब्रवीति तदुपाहरस्वेति।।

- மஹாபாரதம் (வியாசர்)

இவ்வாறு குருநாதர் சொன்னதும், அவரது பத்னியிடம் சென்று உதங்கர், "அம்மா! குருநாதரால் அனுமதிக்கப்பட்டு க்ருஹஸ்த ஆஸ்ரமம் செல்ல இருக்கிறேன். அவருக்கு கொடுக்க வேண்டிய குருதக்ஷிணையை கொடுத்து விட்டு செல்ல ஆசை படுகிறேன். ஆதலால், நான் கொடுக்க வேண்டிய குருதக்ஷிணை என்னவென்று நீங்கள் எனக்கு ஆணையிட வேண்டும்" என்று கேட்டார்.

स एवमुक्त उपाध्यायेनोपाध्यायानीमपृच्छद्भवत्युपाध्यायेनास्म्यनुज्ञातो गृहं गन्तुमिच्छामीष्टं ते गुर्वर्थमुपहृत्यानृणो गन्तुं तदाज्ञापयतु भवती किमुपाहरामि गुर्वर्थमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட குருபத்னி, உதங்கரை பார்த்து, "நீ க்ஷத்ரியனான பௌஷ்யன் என்ற அரசனின் மனைவி அணிந்து இருக்கும் குண்டலங்களை கேட்டு பெற்று வா. இன்றிலிருந்து 4வது நாள் ஒரு விரதம் வரப்போகிறது. அந்த குண்டலங்களை அணிந்து கொண்டு அன்று ப்ராம்மணர்களுக்கு உணவு பரிமாற விரும்புகிறேன். அதற்குள் அந்த குண்டலங்களை சம்பாதித்து வா. இப்படி செய்தால் நீ இதுவரை கற்ற கேள்வியெல்லாம் காலத்தில் பயன் தரும். இந்த காலத்துக்குள் நீ இதை செய்யாவிட்டால் நாசமடைவாய்." என்று சொன்னாள்

सैवमुक्तोपाध्यायानी तमुत्तङ्कं प्रत्युवाच गच्छ पौष्यं प्रति राजानं कुण्डले भिक्षितुं तस्य क्षत्रियया पिनद्धे।।

आनयस्वेतश्चतुर्थेऽहनि पुण्यकर्म भविता ताभ्यामाबद्धाभ्यां शोभमाना ब्राह्मणान्परिवेष्टुमिच्छामि।

तत्संपादयस्व एवं हि कुर्वतः श्रेयो भविताऽन्यथा कुतः श्रेय इति।।

- மஹாபாரதம் (வியாசர்)

குருபத்னி கேட்டதை பெற்றுக்கொண்டு வர புறப்பட்ட உதங்கர், வழியில் ஒரு பெரிய வ்ருஷபத்தில் அமர்ந்து இருந்த ஒரு பெரிய ஆளை கண்டார்.

स एवमुक्तस्तयोपाध्यायान्या प्रातिष्ठतोत्तङ्कः स पथि गच्छन्नपश्यदृषभमतिप्रमाणं तमधिरूढं च पुरुषमतिप्रमाणमेव स पुरुष उत्तङ्कमभ्यभाषत।।

- மஹாபாரதம் (வியாசர்)


மாட்டின் மேல் அமர்ந்து இருந்த அந்த புருஷன் உதங்கரை பார்த்து, "உதங்கா! இந்த மாட்டின் மூத்திரத்தை வாங்கி குடி" என்றார்.

भोउत्तङ्कैतत्पुरीषमस्य ऋषभस्य भक्षयस्वेति स एवमुक्तो नैच्छत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி இந்த புருஷன் சொன்னதை ஏற்க உதங்கர் மறுத்தார்.

तमाह पुरुषो भूयो भक्षयस्वोत्तङ्क मा विचारयोपाध्यायेनापि ते भक्षितं पूर्वमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த புருஷன் மறுபடியும் உதங்கரை பார்த்து, "உதங்கா! சங்கடப்படாமல் குடி. உன் குருவும் முன்பு குடித்து இருக்கிறார்" என்றார். குண்டலங்களை வாங்கி கொள்ள அவசரமாக கிளம்பிய உதங்கர்  இதை கேட்டதும், சரி என்று அந்த மாட்டின் மூத்திரத்தை குடித்து விட்டு, ஆசமனம் செய்து கை கால் அலம்பி கொள்ளாமல் உடனே புறப்பட்டு விட்டார்.

स एवमुक्तो बाढमित्युक्त्वा तदा तद्वृपभस्य मूत्रं पुरीषं च भक्षयित्वोत्तङ्कः संभ्रमाढुत्थित एवापोऽनुस्पृश्य प्रतस्थे।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு விரைந்து சென்ற உதங்கர், பௌஷ்ய ராஜனின் அரண்மனைக்கு சென்று அங்கு வீற்று இருந்த அரசனை கண்டார். அரசனை ஆசிர்வாதங்களால் பெருமை படுத்தினார்.

यत्र स क्षत्रियः पौष्यस्तम् उपेत्यासीनम् पश्यद उत्तङ्कः।

स उत्तङ्कस्तम् उपेत्याशीर्भि: अभिनन्द्योवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


பௌஷ்யன், உதங்கரை பார்த்து, "பகவானே! பௌஷ்யனான நான், உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?" என்று கேட்க,

अर्थी भवन्तम् उपागत: अस्मीति स एनम् अभिवाद्य उवाच।

भगवन्पौष्यः खल्वहं किं करवाणीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


"என் குருவுக்காக உன்னிடம் இருக்கும் குண்டலங்களை யாசிக்க வெந்து இருக்கிறேன். அவற்றை நீ எனக்கு கொடுக்க வேண்டும்" என்றார்.

स तम् उवाच गुर्वर्थं कुण्डलयो: अर्थेनाभि आगतोऽस्मि।

ये वै ते क्षत्रिया पिनद्धे कुण्डले ते भवान्दातुम् अर्हतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட பௌஷ்ய மகாராஜன், "பெண்கள் இருக்கும் அந்தப்புரத்திற்கு சென்று அங்கு கேட்டு வாங்கி கொள்ளுங்கள்" என்றார். சரி என்று, அந்தப்புரம் சென்ற உதங்கருக்கு அங்கே அவருடைய பத்னி கண்ணுக்கு தெரியவில்லை.

तं प्रत्युवाच पौष्यः प्रविश्यान्तःपुरं क्षत्रिया याच्यतामिति।

स तेनैवमुक्तः प्रविश्यान्तःपुरं क्षत्रियां नापश्यत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர் திரும்ப வந்து பௌஷ்ய ராஜனை பார்த்து, "நீ என்னை பொய்யாக உபசரிக்கிறாயா? அந்தப்புரத்தில் உனது அரசி காணவில்லை. என் கண்களுக்கு தெரியவில்லை." என்று சொன்னார்.

स पौष्यं पुनरुवाच न युक्तं भवताऽहमनृतेनोपचरितुं

न हि तेऽन्तःपुरे क्षत्रिया सन्निहिता नैनां पश्यामि।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி உதங்கர் சொன்னதும் சிறிது ஆலோசித்து விட்டு, பௌஷ்யன் "நீர் நிச்சயமாக ஆசாரம் குறைந்து இருக்கிறீர்கள். நிதானமாக யோசித்து பாருங்கள். அந்த அரசி ஆசாரம் குறைந்தவனுக்கும், அசுத்தமானவனுக்கும் தெரியமாட்டாள். பதிவிரதையான அவளை அசுத்தமானவன் பார்க்க முடியாது" என்றார்.

स एवमुक्तः पौष्यः क्षणमात्रं विमृश्योत्तङ्कं प्रत्युवाच।

नियतं भवान् उच्छिष्टः स्मर तावन्न हि

सा क्षत्रिया उच्छिष्टेनाशुचिना शक्या द्रष्टुं

पतिव्रतात्वात्सैषा नाशुचेर्दर्शनमुपैतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி அரசர் சொன்னதும், தான் சாப்பிட்ட பிறகு கை கால் அலம்பாமல் வந்தது ஞாபகம் வரவே, பௌஷ்ய ராஜனை பார்த்து, "வேகமாக வரவேண்டி இருந்ததால், சாப்பிட்டவுடன் கை கால் அலம்பாமல் வந்து விட்டேன்." என்றார். அதை கேட்ட பௌஷ்ய ராஜன், "கை கால் அலம்பல் எழுந்து வந்தது உங்கள் குற்றம்" என்றார்.

अथैवमुक्त उत्तङ्कः स्मृति उवाच अस्ति

खलु मया तु भक्षितं नोपस्पृष्टम् आगच्छतेति।

तं पौष्यः प्रति उवाच एष ते व्यतिक्रमो

नोत्थितेनोपस्पृष्टं भवति शीघ्रम् आगच्छतेति।।

- மஹாபாரதம் (வியாசர்)


"ஆம்" என்று ஆமோதித்த உதங்கர், உடனே கிழக்கு முகமாக அமர்ந்து கை, கால், முகத்தை நன்றாக அலம்பிக்கொண்டு, நுரையில்லாத காய்ச்சாத ஜலத்தை மூன்று முறை மார்பு வரை செல்லும் அளவுக்கு குடித்து, கண், காது மூக்கு முதலிய இடங்களை ஜலத்தினால் துடைத்து கொண்டு அந்தப்புரத்திற்கு போனார்.

अथोत्तङ्कस्तं तथेत्युक्त्वा प्राङ्मुख उपावेश्य

सुप्रक्षालित पाणि पाद वदनो निःशब्दाभिरफेनाभि:

न: उष्णाभि: हृद्गताभि: अद्भिस्त्रिः पीत्वा द्विः परिमृज्य

खान्यद्भिरुपस्पृश्य च: अन्तःपुरं प्रविवेश।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு சென்ற பொழுது, அந்தப்புரத்தில் இருந்த அரசியை கண்டார். அவளும் உதங்கரை பார்த்ததும் எதிர்கொண்டு அழைத்து நமஸ்கரித்து, "பகவன்! நல்வரவு. நான் செய்யவேண்டியதை கட்டளை இடவேண்டும்" என்றாள்.

ततस्तां क्षत्रियामपश्यत्सा च दृष्ट्वैवोत्तङ्कं प्रत्युत्थाय अभिवाद्य:

उवाच स्वागतं ते भगवन्नाज्ञापय किं करवाणीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு கேட்டதும், உதங்கர் "இந்த குண்டலங்களை என் குருவுக்காக யாசிக்கிறேன். இவற்றை நீ கொடுக்க வேண்டும்" என்றார்

स तामुवाचैते कुण्डले गुर्वर्थं मे भिक्षिते दातुमर्हसीति।

- மஹாபாரதம் (வியாசர்)


அரசி உதங்கருடைய குருபக்தி என்ற நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டு, இவர் தானம் பெறுவதற்கு தகுதியானவர், இவரை விட்டுவிட கூடாது என்று நினைத்து, "நாகராஜனாகிய தக்ஷகன் இந்த குண்டலங்கள் அடைய பெரும் ஆர்வத்தோடு இருக்கிறான். ஜாக்கிரதையாக நீங்கள் இதை கொண்டு செல்ல வேண்டும்" என்றாள்

सा प्रीता तेन तस्य सद्भावेन पात्रमयमनतिक्रमणीयश्चेति

मत्वा ते कुण्डले अवमुच्यास्मै प्रायच्छदाह चैनमेते कुण्डले

तक्षको नागराजः सुभृशं प्रार्थयत्यप्रमत्तो नेतुमर्हसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


க்ஷத்ரிய பெண்ணான அரசி இவ்வாறு சொன்னதும், உதங்கர் "நீ கவலைப்பட வேண்டாம். நாகராஜனான தக்ஷகன் என்னை வெல்ல மாட்டான்" என்று சொன்னார்.

स एवमुक्तस्तां क्षत्रियां प्रत्युवाच भवती सुनिर्वृता भवतु।

न मां शक्तस्तक्षको नागराजो धर्षयितुमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு சொல்லிவிட்டு, அரசியிடம் விடைபெற்ற பிறகு, பௌஷ்யனிடம் "ப்ரீதி அடைந்தேன்" என்று சொல்லி விட்டு புறப்பட தயாரானார்.

स एवमुक्त्वा तां क्षत्रियामामन्त्र्य पौष्यसकाशमागच्छत्।

आह चैनं भोः पौष्य प्रीतोऽस्मीति तमुत्तङ्कं पौष्यः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்போது, பௌஷ்ய ராஜன், உதங்கரை பார்த்து, "பகவன் ! உங்களை போன்ற தகுந்தவர்கள் (யோக்கியதை உள்ளவர்) எளிதில் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் சிறந்த அதிதியாக இருப்பதால், உங்களுக்கு என் ஸ்ரத்தையை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறிது நேரம் எனக்காக ஒதுக்க வேண்டும்" என்றார்

भगवंश्चिरेण पात्रम् आसाद्यते भवाश्च गुणवानतिथि:

तदिच्छे श्राद्धं कर्तुं क्रियतां क्षण इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர், "உனக்காக அவகாசம் கொடுக்கிறேன். உன் சக்திக்கு ஏற்ப சீக்கிரமாக அன்னத்தை தயார் செய்து கொடு" என்றார். "இதோ! தயார் ஆகி விடும்" என்று பௌஷ்ய ராஜன் சொல்லி தன் சக்திக்கு ஏற்ற அன்னத்தை கொடுத்து உதங்கருக்கு உணவு பரிமாறினார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच कृतक्षण एवास्मि

शीघ्रम् इच्छामि यथोप पन्नम् 

अन्नम् उपस्कृतं भवतेति

स तथेत्युक्त्वा यथोप

पन्नेनान्नेनैनं भोजयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)


தனக்கு பரிமாறப்பட்ட அன்னம், ஆறி போனதாகவும், அதில் தலைமுடி இருப்பதையும் கண்டு, "இது அசுத்தமான உணவாக உள்ளது" என்று நினைத்து "எனக்கு அசுத்தமான உணவை நீ கொடுத்ததால் நீ குருடனாக போவாய்" என்று அரசனை சபித்து விட்டார்.

अथ: उत्तङ्कः सकेशं शीतमन्नं दृष्ट्वा 

अशुचि एतदिति मत्वा तं पौष्यम् उवाच।

यस्मान्मे अशुच्यन्नं ददासि 

तस्माद् अन्धो भविष्यसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி உதங்கர் சபித்ததும், பௌஷ்ய ராஜன் பதிலுக்கு "நீர் குறையில்லாத அன்னத்தை குறை சொல்லியதால் சந்ததி இல்லாமல் போவீர்" என்று பதிலுக்கு சபித்தார்.

तं पौष्यः प्रत्युवाच।

यस्मात् त्वम् अदुष्टम् अन्नं दूषयसि तस्माद् अनपत्यो

भविष्यसीति तम् उत्तङ्कः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நீ அசுத்தமான அன்னத்தையும் கொடுத்து விட்டு, எனக்கு ப்ரதி-சாபம் கொடுத்தது சரியல்ல. அன்னத்தை கண்ணால் பார்" என்றார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட அசுத்தமான உணவு உண்மையிலேயே அசுத்தமாக இருந்ததை கவனித்தார் அரசர்.

न युक्तं भवता अन्नम् अशुचि 

दत्त्वा प्रतिशापं दातुं तस्माद् 

अन्नम् एव प्रत्यक्षी कुरु।

ततः पौष्यस्तद् अन्नम् अशुचि दृष्ट्वा 

तस्या शुचिभावम् अपरोक्षयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த அன்னத்தில் பெண்ணின் கேசமும், ஆறிப்போனதாகவும் இருந்ததை கண்டு உதங்கரை பார்த்து, "பகவன், தெரியாமல் உங்களுக்கு ஆறிப்போன, கேசம் விழுந்த அன்னம் பரிமாறப்பட்டுள்ளது. நான் குருடனாக இல்லாமல் இருக்க வேண்டும். என்னை மன்னிக்கும் படி வேண்டுகிறேன்" என்றார்.

अथ तदन्नं मुक्त केश्या स्त्रियोपहृतमनुष्णं सकेशं

चाशुच्येतदिति मत्वा तम् ऋषिम् उत्तङ्कं प्रसादयामास।।

भघवन्नेतद् अज्ञानादन्नं सकेशम् उपाहृतं शीतं च।

तत्क्षामये भवन्तं न भवेयमन्ध इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நான் சொன்னது பொய் போகாது. இருந்தாலும், நீ சிலகாலம் கண் தெரியாமல் இருந்து, பிறகு சீக்கிரத்தில் மீண்டும் கண் பெறுவாய்" என்றார். மேலும் "நீ எனக்கு கொடுத்த சாபம் தொடராமல் இருக்க வேண்டும்" என்றார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

न मृषा ब्रवीमि भूत्वा त्वम् अन्धो 

नचिरादनन्धो भविष्यसीति।

ममापि शापो भवता दत्तो न भवेदिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு பௌஷ்ய ராஜன் "நான் சாபத்திலிருந்து உங்களை விடுவிக்க மாட்டேன். எனக்கு கோபம் இன்னும் அடங்கவில்லை. ப்ராம்மணனுக்கு இதயம் வெண்ணெய் போன்றது. ப்ராம்மணனுக்கு வாக்கு கூரான கத்தி போன்றது. க்ஷத்ரியர்களான எங்களுக்கு இது மாற்றி வைக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாக்கு வெண்ணை போலவும், உள்ளம் கூர்மையான கத்தி போன்றதாகவும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? ஆதலால் என் இதயம் கொடியதாக இருப்பதால், சாபத்தை நான் மாற்ற முடியாது. நீர் போகலாம்" என்றார்.

तं पौष्यः प्रत्युवाच न चाहं शक्तः शापं प्रत्यादातुं

न हि मे मन्यु: अद्याप्युपशमं गच्छति

किं चैतद्भवता न ज्ञायते यथा।।

नवनीतं हृदयं ब्राह्मणस्य

वाचि क्षुरो निहित: तीक्ष्णधारः।

तद् उभयम् एतद् विपरीतं क्षत्रियस्य

वाङ् नवनीतं हृदयं तीक्ष्ण-धारम् इति।।

तदेवंगते न शक्तोऽहं तीक्ष्ण हृदयत्वात्तं 

शापम् अन्यथा-कर्तुं गम्यतामिति।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட உதங்கர், "நீ கொடுத்த உணவு அசுத்தமாக இருந்ததை நீயே பார்த்து என்னிடம் மன்னிப்பு கேட்டாய். 'குற்றமில்லாத அன்னத்தை தூஷித்ததால் உனக்கு சந்ததி இல்லாமல் போகும் என்று சபித்தாய்'. ஆனால் இந்த அன்னம் அசுத்தமானது தான் என்பதால், உன் சாபம் என்னிடம் பலிக்காது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு குண்டலங்களை எடுத்து கொண்டு புறப்பட்டார் உதங்கர்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

भवता अहम् अन्नस्या शुचि

भावम् आलक्ष्य प्रत्यनुनीतः।

प्राक् च तेऽभिहितं यस्माद् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो भविष्यसीति।

दुष्टे चान्ने नैष मम शापो भविष्यतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர் சென்று கொண்டிருந்த போது, பாதையில் அவ்வப்போது ஒரு ஆடையில்லாத சாது அடிக்கடி காணப்படும், மறைந்து கொண்டும் பின் தொடர்ந்தார்.

साधयामस्तावदित्युक्त्वा प्रातिष्ठतोत्तङ्कस्ते कुण्डले गृहीत्वा।

सोऽपश्यदथ पथि नग्नं क्षपणकमागच्छन्तं मुहुर्मुहुर्दृश्यमानमदृश्यमानं च।।

- மஹாபாரதம் (வியாசர்)


கை கால் அலம்பி கொண்டு சந்தியாவந்தனம் செய்து விட்டு செல்லலாம் என்று நினைத்து, தான் கொண்டு வந்திருந்த குண்டலத்தை பூமியில் புதைத்து விட்டு, அருகில் இருந்த குளத்திற்கு சென்றார் உதங்கர். இந்த சமயத்தை எதிர்பார்த்த அந்த சந்நியாசி அந்த குண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான்.

अथोत्तङ्कस्ते कुण्डले संन्यस्य भूमावुदकार्थं प्रचक्रमे।

एतस्मिन्नन्तरे स क्षपणकस्त्वरमाण उपसृत्य ते कुण्डले गृहीत्वा प्राद्रवत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு ஸ்நானம் செய்து சுத்தமாக தேவர்களுக்கு குருவுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு வந்த உதங்கர், இந்த சாது குண்டலங்களை எடுத்து கொண்டு ஓடுவதை கண்டு, துரத்தினார்.

तमुत्तङ्कोऽभिसृत्य कृतोदककार्यः शुचिः प्रयतो नमो देवेभ्यो

गुरुभ्यश्च कृत्वा महता जवेन तमन्वयात्।।

- மஹாபாரதம் (வியாசர்)


வேகமாக ஓடி, சாது ரூபத்தில் இருந்த தக்ஷகனை பிடித்து விட்டார்.

तस्य तक्षको दृढमासन्नः सतं जग्राह।

- மஹாபாரதம் (வியாசர்) 


இப்படி பிடிபட்டதுமே, தக்ஷகன் தன் நிஜரூபத்தை எடுத்து கொண்டு, பூமியில் தெரிந்த ஒரு பெரிய வளைக்குள் விரைவாக புகுந்து சென்றான்.

गृहीतमात्रः स तद्रूपं विहाय तक्षक स्वरूपं कृत्वा

सहसा धरण्यां विवृतं महाबिलं प्रविवेश।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி பூமிக்கு அடியில் புகுந்த நாகராஜன், நேராக நாகலோகம் சென்று விட்டான்.

प्रविश्य च नागलोकं स्वभवनमगच्छत्।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த அரசி சொன்னது ஞாபகம் வர, வந்தது தக்ஷகன் என்று அறிந்து கொண்டு, அந்த வளையை தன் தடியால் அடித்து உடைக்க பார்த்தார் உதங்கர்.

अथोत्तङ्कस्तस्याः क्षत्रियाया वचः स्मृत्वा तं तक्षकमन्वगच्छत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர் என்ன முயன்றும் அந்த வளையை உடைக்க முடியவில்லை. இதை கண்ட இந்திரன் கருணை கொண்டு, தன் வஜ்ராயுதத்தை பார்த்து, "நீ போய் அந்த ப்ராம்மணனுக்கு உதவி செய்" என்றார். உடனே அந்த வஜ்ராயுதம் அவர் கையில் வைத்திருக்கும் தடியில் புகுந்து கொண்டு, அந்த வளையை பிளந்து எரிந்தது.

स तद्बिलं दण्डकाष्ठेन चखान न चाशकत्।

तं क्लिश्यमानमिन्द्रोऽपश्यत्स वज्रं प्रेषयामास।

गच्छास्य ब्राह्मणस्य साहाय्यं कुरुष्वेति।।

अथ वज्रं दण्डकाष्ठमनुप्रविश्य तद्बिलमदारयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர் தக்ஷகன் புகுந்த அந்த வளைக்குள் நுழைந்து, முடிவு தெரியாததும், பற்பல பெரிய மாளிகைகளும், செல்வந்தர்கள் வசிக்கும் அரண்மனைகளையும், மேல் மாளிகைகளும் நூற்றுக்கணக்கான நிரம்பி இருப்பதை பார்த்து கொண்டே, விளையாடுவதற்கு என்று ஆச்சர்யமான இடங்கள் கணக்கில்லாமல் இருப்பதுமான நாகலோகத்தை கண்டார்.

तमुत्तङ्कोऽनुविवेश तेनैव बिलेन प्रविश्य च तं

नागलोकमपर्यन्तमनेकविधप्रासादहर्म्यवलभीनिर्यूह

शतसंकुलमुच्चावचक्रीडाश्चर्यस्थानावकीर्णमपश्यत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


அங்கு இருந்த பலவித நாகங்களை பின்வரும் ஸ்லோகங்களால் துதித்தார்.

स तत्र नागांस्तानस्तुवदेभिः श्लोकैः।

- மஹாபாரதம் (வியாசர்)


ஐராவதம் என்னும் நாகனை ராஜாவாக உடையவரும், யுத்தங்களில் பிரகாசிப்பவரும், காற்றினோடும், மின்னலோடும் சேர்ந்து மழை பொழியும் மேகங்களை போல சரமாரி பொழிபவரும்,

य ऐरावतराजानः सर्पाः समितिशोभाः।

क्षरन्त इव जीमूताः सविद्युत्पवनेरिताः।।

- மஹாபாரதம் (வியாசர்)


அழகான ரூபம் உடையவரும், பற்பல ரூபமுடையவரும், விசித்திரமான குண்டலங்களை தரித்தவருமான ஐராவத நாகத்தின் குலத்தில் உண்டான நாகர்கள், சொர்க்கத்தில் தேவர்கள் பிரகாசிப்பது போல, நாகலோகத்தில் பிரகாசிக்கின்றனர்.

सुरूपा बहुरूपाश्च तथा कल्माषकुण्डलाः।

आदित्यवन्नाकपृष्ठे रेजुरैरावतोद्भवाः।।

-- மஹாபாரதம் (வியாசர்)


கங்கையின் வடக்கே நாகர்களின் ஸ்தானம் அநேகம் உண்டு. அங்குள்ள மஹாநாகர்களையும் நான் துதிக்கிறேன். ஐராவத நாகனை தவிர வேறு யாரால் சூர்ய கிரணங்களாகிய சேனையில் சஞ்சரிக்க முடியும்?

बहूनि नागवेश्मानि गङ्गायास्तीर उत्तरे।

तत्रस्थानपि संस्तौमि महतः पन्नगानहम्।।

इच्छेत्कोऽर्कांशुसेनायां चर्तुमैरावतं विना।

- மஹாபாரதம் (வியாசர்)


த்ருதராஷ்டிரமான நாகம் போகும் போது, 28800 நாகங்கன், சூரியனின் குதிரைகளுக்கு கடிவாளமாக சமீபமாகவும், தூரமாகவும் போகின்றன.

शतान्यशीतिरष्टौ च सहस्राणि च विंशतिः।।

सर्पाणां प्रग्रहा यान्ति धृतराष्ट्रो यदैजति।

ये चैनमुपसर्पन्ति ये च दूरपथं गताः।।

- மஹாபாரதம் (வியாசர்)


நான் ஐராவதத்தின் மூத்த சகோதரர்களுக்கும் நமஸ்காரம் செய்கிறேன்.

अहमैरावतज्येष्ठभ्रातृभ्योऽकरवं नमः।

- மஹாபாரதம் (வியாசர்)


முன்பு குருக்ஷேத்ரத்திலும், காண்டவ வனத்திலும் வாசித்த தக்ஷகன் என்ற நாகராஜனை குண்டலத்திற்காக துதிக்கிறேன். தக்ஷகனும், அஸ்வேஸனும் எப்போதும் கூடவே இருந்து கொண்டு, குருஷேத்ரம், மேலும் இஷூமதி நதிக்கரையில் வகிக்கிறார்கள்.  

यस्य वासः कुरुक्षेत्रे खाण्डवे चाभवत्पुरा।

तं नागराजमस्तौषं कुण्डलार्थाय तक्षकम्[१]।

तक्षकश्चाश्वसेनश्च नित्यं सहचरावुभौ।

कुरुक्षेत्रं च वसतां नदीमिक्षुमतीमनु।।

- மஹாபாரதம் (வியாசர்)


நாகர்களுக்கு அரசனாக ஆக விரும்பி, மஹ்தயுமா என்ற நதி தீர்த்தத்தில் வசித்த தக்ஷகனுடைய கடைசி பிள்ளை "ஸ்ருத-சேன"னுக்கும் நான் எப்பொழுதும் நமஸ்காரம் செய்கிறேன்." என்று உதங்கர் பிரார்த்தனை செய்தார்

जघन्यजस्तक्षकस्य श्रुतसेनेति यः सुतः।

अवसद्यो महद्द्युम्नि प्रार्थयन्नागमुख्यताम्।

करवाणि सदा चाहं नमस्तस्मै महात्मने।।

- மஹாபாரதம் (வியாசர்)


सौतिरुवाच। (சூத பௌராணிகர் மேலும் தொடர்கிறார்)

இவ்விதம் நாகர்களை துதித்தும் ப்ராம்மணரான உதங்கருக்கு குண்டலங்களை குண்டலங்களை கொடுக்காமல் இருப்பதை பார்த்து பெரிதும் கவலையுற்றார்.

एवं स्तुत्वा स विप्रर्षिरुत्तङ्को भुजगोत्तमान्।

नैव ते कुण्डले लेभे ततश्चिन्तामुपागमत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு சிந்தித்து கொண்டிருந்த போதே, அங்கே இரண்டு பெண்கள் துணி நெய்யும் இயந்திரத்தில் நூலை ஏற்றி, ஒரு கோலால் துணி நெய்து கொண்டிருப்பதை பார்த்தார்.

एवं स्तुवन्नपि नागान्यदा ते कुण्डले नालभत्तदाऽपश्यत्स्त्रियौ

तन्त्रे अधिरोप्य सुवेमे पटं वयन्त्यौ।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த துணியில் கருப்பும் வெளுப்புமான நூல்கள் காணப்பட்டன.

6 பிள்ளைகளால் சுற்றப்படுவதும், 12 ஆரக்கால்கள் உள்ளதுமாகிய ஒரு சக்கரத்தையும், அங்கு ஒரு புருஷனையும் ஒரு அழகான குதிரையையும் கண்டார்.

तस्मिंस्तन्त्रे कृष्णाः सिताश्च तन्तवश्चक्रं

चापश्यद्द्वादशारं षड्भिः कुमारैः परिवर्त्यमानं

पुरुषं चापश्यदश्वं च दर्शनीयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)


தான் பார்த்தவர்களை உடனே பின் வரும் மந்திரங்களால் துதிக்கலானார்.

स तान्सर्वांस्तुष्टाव एभिर्मन्त्रवादश्लोकैः।।

- மஹாபாரதம் (வியாசர்)


24 கணுக்கால் உள்ளதும், எப்போதும் நடப்பதுமாகிய இந்த அழிவில்லா சக்கரத்தின் நடுவில், 360 ஆரக்கால்கள் போடப்பட்டு இருக்கின்றன. அந்த சக்கரத்தை 6 பிள்ளைகள் சுற்றுகிறார்கள். உலகமெங்கும் பரந்த உருவமுள்ள 2 சிறு பெண்கள் கருப்பும் வெளுப்புமான நூல்களை எப்போதும் திருப்பி கொண்டும், உயிர்களையும் உலகங்களையும் எப்போதும் மாற்றி கொண்டே இந்த வஸ்திரத்தை நெய்கின்றனர்.

त्रीण्यर्पितान्यत्र शतानि मध्ये

षष्टिश्च नित्यं चरति ध्रुवेऽस्मिन्।

चक्रे चतुर्विंशतिपर्वयोगे

षड्वै कुमाराः परिवर्तयन्ति।।

तन्त्रं चेदं विश्वरूपे युवत्यौ

वयतस्तन्तून्सततं वर्तयन्त्यौ।

कृष्णान्सितांश्चैव विवर्तयन्त्यौ

भूतान्यजस्रं भुवनानि चैव।।

- மஹாபாரதம் (வியாசர்)


வஜ்ராயுதத்தை வைத்து இருப்பவரும், உலகத்தை காப்பவரும், விருத்திரன், நமுசி என்ற 2 அசுரர்களை கொன்றவரும், 2 கருப்பு துணியை கட்டி கொண்டு இருப்பவரும், மஹாத்மாவும், உலகத்தில் உண்மை, பொய் என்ற ஆத்மா, அநாத்மா இரண்டையும் பிரித்து பார்க்கும் சக்தியுள்ளவனும், ஜலத்தினுடைய பிள்ளையும், புராதனனுமான, அக்னியை குதிரையாக அடைந்து இருப்பவனும், உலகங்களை நடத்துகிறவனும், 3 உலகங்களுக்கும் நாதனுமாகிய அந்த இந்திரனை (தலைவனை) வணங்குகிறேன்" என்று துதி செய்தார்.

वज्रस्य भर्ता भुवनस्य गोप्ता

वृत्रस्य हन्ता नमुचेर्निहन्ता।

कृष्णे वसानो वसने महात्मा

सत्यानृते यो विविनक्ति लोके।।

यो वाजिनं गर्भमपां पुराणं

वैश्वानरं वाहनमभ्युपैति।

नमोऽस्तु तस्मै जगदीश्वराय

लोकत्रयेशाय पुरंदराय।।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்போது அந்த குதிரையில் இருந்த அந்த புருஷன், உதங்கரை பார்த்து, "உன்னுடைய ஸ்தோத்ரத்தினால் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்க, "எனக்கு நாகங்கள் வசப்பட வேண்டும்" என்று உதங்கர் வேண்டினார்.

ततः स एनं पुरुषः प्राह प्रीतोऽस्मि

तेऽहसनेन स्तोत्रेण किं ते प्रियं करवाणीति।

स तमुवाच नागा मे वशमीयुरिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த புருஷன் உதங்கரை பார்த்து, "இந்த குதிரையின் அபானத்தில் ஊது" என்று சொன்னதும், சரி என்று உதங்கர் ஊதினார். இவ்வாறு ஊதியதும், அந்த குதிரையின் எல்லா ரோம துவாரங்களிலிருந்தும் புகையுடன் அக்னி ஜ்வாலைகள் வெளிப்பட்டன. அதனால், நாக லோகத்தில் வெப்பம் உண்டாயிற்று. தக்ஷகன் அக்னி ஜ்வாலையின் வெப்பம் தாங்காமல், பரபரப்புடன் குண்டலங்களை எடுத்து கொண்டு, விரைவாக வெளியே வந்து, உதங்கரை பார்த்து, "இந்த குண்டலங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னான்

स चैनं पुरुषः पुनरुवाच एतमश्वमपाने धमस्वेति।।

ततो अश्वस्य अपानमधमत्ततो अश्वाद्धम्यमानात्

सर्वस्रोतोभ्यः पावकार्चिषः सधूमा निष्पेतुः।।

ताभिर्नागलोक उपधूपितेऽथ संभ्रान्त:

तक्षक: अग्ने: तेजोभयाद्विषण्णः कुण्डले गृहीत्वा

सहसा भवनान्निष्क्रम्योत्तङ्कमुवाच।।

इमे कुण्डले गृह्णातु भवानिति।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர் அந்த குண்டலங்களை பெற்று கொண்ட பிறகு, "குருவான பைதரின் பத்னி இன்று தான் விரதம் இருக்க போகிறாள். நானோ வெகு தொலைவில் இருக்கிறேன். எவ்வாறு குண்டலங்களை கொண்டு கொடுப்பேன்" என்று யோசித்தார்.

स ते प्रतिजग्राहोत्तङ्कः प्रतिगृह्य च कुण्डलेऽचिन्तयत्।।

अद्य तत्पुण्यकमुपाध्यायान्या दूरं

चाहमभ्यागतः स कथं संभावयेयमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு சிந்தித்து கொண்டு இருந்தபோதே, உதங்கரை பார்த்து, "உதங்கா! இந்த குதிரையின் மேலே ஏறிக்கொள். இது நொடியில் உன்னை உன் குருவின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கும்" என்று அந்த புருஷன் சொன்னார்.

तत एनं चिन्तयानमेव स पुरुष उवाच।

उत्तङ्क एनमेवाश्वमधिरोह त्वां क्षणेनैवोपाध्यायकुलं प्रापयिष्यतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அந்த குதிரையின் மேல் ஏறிக்கொண்டு குருவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

स तथेन्युक्त्वा तमश्वमधिरुह्य प्रत्याजगामोपाध्यायकुलं।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்போது ஸ்நானம் செய்து விட்டு, தலையை உலர்த்தி கொண்டு உட்கார்ந்து இருந்த குருவின் பத்னி, "உதங்கன் வரவில்லையே!" என்று சபிக்க எண்ணிக்கொண்டு இருந்தாள்.

उपाध्यायानी च स्नाता केशानावापयन्त्युपविष्टोत्तङ्को

नागच्छतीति शापायास्य मनो दधे।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த சமயத்தில் குருவின் க்ருஹத்தை அடைந்த உதங்கர் உள்ளே சென்று, குருபத்னியை நமஸ்கரித்து, குண்டலங்களை கொடுத்தார். அதை பெற்று கொண்ட குருபத்னி உதங்கரை பார்த்து, "உதங்கா! நீ சரியான காலத்தில் வந்து சேர்ந்தாய். உன் வரவு நல்வரவு  ஆனது.நீ வராது போயிருந்தால், நான் கோபத்தில் சபித்து இருப்பேன். உனக்கு நன்மையே உண்டாகும். நீ உன் காரியத்தில் ஸித்தி (வெற்றி) அடைவாய்." என்று சொன்னாள்.

अथैतस्मिन्नन्तरे स उत्तङ्कः प्रविश्य उपाध्यायकुलं

उपाध्यायानीमभ्यवादयत्ते चास्यै कुण्डले प्रायच्छत्सा चैनं प्रत्युवाच।।

उत्तङ्क देशे कालेऽभ्यागतः स्वागतं ते वत्स

`इदानीं यद्यनागतोसि कोपितया मया शप्तो भविष्यसि'

श्रेयस्तवोपस्थितं सिद्धिमाप्नुहीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு பிறகு, உதங்கர் நேராக தன் குருவான பைதரிடம் வந்து நமஸ்கரித்தார். குருவான பைதர், "குழந்தாய்! உதங்கா! உனக்கு நல்வரவு. ஏன் உனக்கு இத்தனை காலம் ஏற்பட்டது?" என்றார்.

अथोत्तङ्क उपाध्यायमभ्यवादयत्।

तमुपाध्यायः प्रत्युवाच वत्सोत्तङ्क स्वागतं ते किं चिरं कृतमिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு உதங்கர், "குருநாதா! என்னுடைய இந்த காரியத்தை நாகராஜனான தக்ஷகன் இடையூறு செய்தான். அதனால் நாகலோகம் வரை செல்ல வேண்டியதாயிற்று.அங்கு தறியில் துணி நெய்து கொண்டிருக்கும் இரு பெண்களை கண்டேன். அவர்கள் நெய்த துணியின் நூல் கருப்பும் வெள்ளையாக இருந்தது. அவை என்ன?"

तमुत्तङ्क उपाध्यायं प्रत्युवाच।

भोस्तक्षकेण मे नागराजेन विघ्नः

कृतोऽस्मिन्कर्मणि तेनास्मि नागलोकं गतः।।

तत्र च मया दृष्टे स्त्रियौ तन्त्रेऽधिरोप्य पटं

वयन्त्यौ तस्मिंश्च कृष्णाः सिताश्च तन्तवः।

किं तत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


மேலும் 12 ஆரக்கால்கள் கொண்ட ஒரு சக்கரத்தை பார்த்தேன். ஆறு பிள்ளைகள் அதை சுற்றி கொண்டு  இருந்தனர்.அந்த சக்கரம் என்ன? ஒரு புருஷனையும் கண்டேன். அவன் யார்? ஒரு பெரிய குதிரையையும் கண்டேன். அது என்ன? வழியில் போகும் போது முதலில் ஒரு வ்ருஷபத்தை பார்த்தேன். அதன் மேல் ஒரு புருஷன் இருந்தான். அவன் என்னிடம் மரியாதையுடன், "உதங்கா நீ இந்த மாட்டின் மூத்திரத்தை குடி. உன் குருவும் இதை சாப்பிட்டு இருக்கிறார்" என்றான்.அவன் இப்படி சொன்னதால், அந்த வ்ருஷபத்தின் கோமியத்தை உட்கொண்டேன். யார் அவன்? இவையெல்லாம் என்னவென்று நீங்கள் உபதேசிக்க வேண்டும்." என்றார் உதங்கர்.

तत्र च मया चक्रं दृष्टं द्वादशारं षट्चैनं

कुमाराः परिवर्तयन्ति तदपि किं।

पुरुषश्चापि मया दृष्टः स चापि कः।

अश्वश्चातिप्रमाणो दृष्टः स चापि कः।।

पथि गच्छता च मया ऋषभो दृष्टस्तं च

पुरुषोऽधिरूढस्तेनास्मि सोपचारमुक्त

उत्तङ्कास्य ऋषभस्य पुरीषं भक्षय

उपाध्यायेनापि ते भक्षितमिति।।

ततस्तस्य वचनान्मया तदृषभस्य पुरीषमुपयुक्तं स चापि कः।

तदेतद्भवतोपदिष्टमिच्छेयं श्रोतुं किं तदिति।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி உதங்கர் கேட்டதும், குருவான பைதர் பேசலானார்.

स तेनैवमुक्त उपाध्यायः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


"உதங்கா! நீ பார்த்த இரண்டு பெண்கள் தாதா (உண்டாக்கும் தேவதை), விதாதா (மாறுதல்களை ஏற்படுத்தும் தேவதை) என்ற 2 தேவதைகள். அவர்கள் பயன்படுத்திய கருப்பு, வெள்ளை நூல், இரவு பகலை குறிப்பிடுகிறது. அந்த 6 பிள்ளைகள் 6 காலங்களை (ருதுக்கள்) குறிப்பிடுகிறது. சக்கரத்தில் இருந்த 12 ஆரக்கால்கள் 12 மாதங்களை குறிப்பிடுகிறது. அந்த சக்கரம் வருஷத்தை சொல்கிறது. அந்த குதிரை அக்னி தேவன். அதில் அமர்ந்து இருந்த புருஷன் பர்ஜன்யன் என்று சொல்லப்படும் மேக தேவதை. நீ கண்ட வ்ருஷபம் ஐராவதம் என்ற தேவலோக யானை.  அதன் மேல் அமர்ந்து இருந்த புருஷன் தேவேந்திரன். நீ சாப்பிட்ட கோமியம் உண்மையில் தேவ அம்ருதம். அந்த அம்ருதத்தை சாப்பிட்டதால் தான், நீ அந்த நாக லோகம் சென்றும் பொசுங்காமல் இருந்தாய்.அந்த தேவேந்திரன் எனக்கு  நண்பன். உன்னிடத்தில் இருந்த கருணையால் இவ்வாறு அனுக்கிரஹம் செய்து இருக்கிறார். அதனால் தானே நீ மீண்டும் குண்டலங்களை பெற்றாய். அழகான முகம் உடையவனே! நீ போகலாம். உனக்கு அனுமதி கொடுக்கிறேன். நீ மேன்மையே அடைவாய்" என்று ஆசிர்வதித்தார் பைதர்.

ये ते स्त्रियौ धाता विधाता च ये च ते कृष्णाः सितास्तन्तवस्ते रात्र्यहनी।

यदपि तच्चक्रं द्वादशारं षट्कुमाराः परिवर्तयन्ति तेपि षड्ऋतवः

द्वादशारा द्वादश मासाः संवत्सरश्च

यः पुरुषःस पर्जन्यः योऽश्वः सोऽग्निः य ऋषभस्त्वया

पथि गच्छता दृष्टः स ऐरावतो नागराट्।।

यश्चैनमधिरूढः पुरुषः स चेन्द्रः यदपि ते भक्षितं तस्य

ऋषभस्य पुरीषं तदमृतं तेन खल्वसि तस्मिन्नागभवने न व्यापन्नस्त्वम्।।

स हि भगवानिन्द्रो मम सखा त्वदनुक्रोशादिममनुग्रहं कृतवान्।

तस्मात्कुण्डले गृहीत्वा पुनरागतोऽसि।।

तत्सौम्य गम्यतामनुजाने भवन्तं श्रेयोऽवाप्स्यसीति।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு தன் குருநாதருக்கு தக்ஷிணை கொடுத்து விட்டு, தக்ஷகன் மீது கோபத்துடன், அவனுக்கு பதிலுக்கு பதில் செய்யும் எண்ணத்துடன், ஜனமேஜயன் ஆட்சி செய்யும் ஹஸ்தினாபுரம் நோக்கி புறப்பட்டார்.

स उपाध्यायेनानुज्ञातो भगवानुत्तङ्कः क्रुद्धस्तक्षकं प्रतिचिकीर्षमाणो हास्तिनपुरं प्रतस्थे।।

- மஹாபாரதம் (வியாசர்)