Followers

Search Here...

Tuesday 1 December 2020

தர்மம் எது, அதர்மம் எது என்று எப்படி தெரிந்து கொள்வது?.. யார் ஆரியன்? 'ஆபஸ்தம்ப ரிஷி' சொன்ன சூத்திரம் நமக்கு பதில் தருகிறது... தெரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்...

சூத்திரம் (formula):  
ஆபஸ்தம்ப சூத்திரம்...
'சூத்திரம்' என்றால் formula. 
பெரியவர்களை பார்க்கும் போது, அபிவாதயே (self intro) சொல்லி கொள்ளும் போது, 
நாம் 'எந்த ரிஷியின் சூத்திரத்தை பின்பற்றுபவன்?' 
என்று சொல்லி நமஸ்கரிக்கிறோம்.

சூத்திரம் (formula) என்றால் என்ன?
ஒரு பெரிய விஷயத்தை சுருக்கி சொல்லி விடும் சாமர்த்தியம் கொண்டது, சூத்திரம் (formula) .



e=m(c*c) என்ற சிறிய சூத்திரத்தில் (formula) ஈன்ஸ்டீன் பெரிய விஷயத்தை அடக்கினார்.

நம்மை எல்லாம் இயக்கும் சூத்திரத்தை (formula), நாராயணன் வைத்து இருக்கிறார் என்பதால் தான், பெருமாளுக்கே "சூத்திரதாரி" (Mastermind) என்று பெயர்.
,
மனித சமுதாயத்தை நடத்த, 
காவலர்கள் வேண்டும் (க்ஷத்ரிய),
தர்மம் தெரிந்த, இறைவனிடம் சேர நினைப்பவர்கள் வேண்டும் (பிராம்மண),
தொழில் செய்பவர்கள் வேண்டும் (வைஸ்ய).

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை செய்ய, இயங்க, சூத்திரம் (formula) போன்ற தொழிலாளர்கள் வேண்டும் (சூத்திர) என்பதால் தொழிலாளர்களுக்கும் சூத்திர என்ற அடையாளம் கொடுக்கப்பட்டது.

தொழில் அடிப்படையில் இன்று வேலைக்கு செல்பவர்கள் (Employee) அனைவருமே சூத்திரர்கள் தான்
இவர்கள் பங்களிப்பு மிக முக்கியமானது எனபதை சூத்திர என்ற சொல் கொண்டு குறிப்பிடப்பட்டது.

இது போல, 
ரிஷிகள் நமக்கு பல சூத்திரங்கள் (ஆயுர்வேதத்தில், வான சாஸ்திரத்தில், பக்தி விஷயங்களில், ப்ரம்ம விஷயங்களில், தர்ம விஷயங்களில்) சொல்லி இருக்கிறார்கள்...

இதை ஹிந்துக்களான நாம் ஆராய மறந்தோம்....

ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பரங்கியர்கள், சம்ஸ்க்ரிதம் கற்று கொண்டு, பல இன்றைய கால கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டனர். 

இதை ஹிந்துக்களின் ஏமாளித்தனம் என்று தான் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.
அதில், 
ஆபஸ்தம்பர் என்ற ரிஷி சொன்ன சூத்திரங்கள் பல...

அதில், 
தர்மம் எது! அதர்மம் எது! என்று எப்படி தெரிந்து கொள்வது? 
என்ற கேள்விக்கு, அற்புதமாக ஒரு சூத்திரம் (formula) சொல்கிறார்..

அதன் அழகை பார்க்கும் போது, இது போல ரிஷிகள் எழுதிய பல சூத்திரங்களை நாம் படித்து தெரிந்து கொள்ள ஆவல் எழலாம்.

ஹிந்து மதத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை என்றும் அறியலாம்...
இனி, ஆபஸ்தம்ப ரிஷி சொல்லும் சூத்திரத்தை பார்ப்போம்..

ந தர்ம அதர்மௌ சரத: இதி |
ந தேவ கந்தர்வா ந பிதர இதி |
ஆசக்ஷதே 'அயம் தர்மோ, அயம் அதர்ம' இதி ||
-- ஆபஸ்தம்ப சூத்திரம்




தர்மமே (virtue) தானாக வந்து "இதோ பார்.. நான் தான் தர்மம்" என்று சொல்லிக்கொள்ளாது.
அதுபோல, 
அதர்மமே (sin) தானாக வந்து "இதோ பார்.. நான் தான் அதர்மம்" என்றும் சொல்லிக்கொள்ளாது.

அது போல,
தெய்வமோ, கந்தர்வர்களோ, நம் மூதாதையர்களோ வந்து "இதோ பார்.. இது தான் அதர்மம். இது தான் தர்மம்" என்று சொல்ல வேண்டியதில்லை.

யஸ்து ஆர்யா: க்ரியமானம் ப்ரஸம்சந்தி ஸ தர்ம: |
யத் கர்ஹந்தே ஸ அதர்ம: ||
-- ஆபஸ்தம்ப சூத்திரம்

பண்பு உள்ளவர்கள் (ஆர்யா), எந்த செயல்களை (க்ரியமானம்) கண்டு புகழ்கிறார்களோ! அதுவே தர்மம், 
என்று நீ புரிந்து கொள்ளலாம்.

பண்பு உள்ளவர்கள் (ஆர்யா), எந்த செயல்களை (க்ரியமானம்) கண்டு வெறுக்கிறார்களோ! அதுவே அதர்மம், 
என்று நீ புரிந்து கொள்ளலாம்.

சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |
-  ஆபஸ்த்மப ரிஷி (சூத்திரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 
அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?
நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே ஆரியன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

In below video, ஸ்ரீரங்கஜி explains further over this....On how important for us to do things than giving advice..
How doing things are effective than giving advice.

ஸ்ரீரங்கஜி further explains,  
Children may not follow your advice if you don't follow your dharma.
Children do follow you, if you are actually doing your dharma as well.
must listen..    CLICK HERE

No comments: