Followers

Search Here...

Showing posts with label சித்ராங்கதா. Show all posts
Showing posts with label சித்ராங்கதா. Show all posts

Friday 21 October 2022

பாண்டிய ராஜ்யத்தில் நடந்த ஒரு நிகழ்வு... - பாண்டிய அரசரும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு... தெரிந்து கொள்வோம்.

பாண்டிய ராஜ்யம் - பாண்டிய அரசரும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு. ஆதி பர்வம், 235 அத்தியாயம்

அர்ஜுனன் தீர்த்த யாத்திரையாக 12 மாதங்கள் மேலும் ஒரு மாதம் வனத்தில் இருந்து விட்டு, மேலும் தொடர்ந்து பயணித்து, நாக கன்னிகையையும் (உலூபி), பிறகு பாண்டிய அரசனின் புதல்வியையும் (சித்ராங்கதை என்ற‌ தமிழ் பெண்) மணந்து கொண்டான். (தீர்த்த யாத்திரை முடித்து கொண்டு திரும்பும் போது, துவாரகை (gujarat) சென்ற போது, தன் தங்கை சுபத்திரையை அர்ஜுனன் மணந்து கொள்ள உதவினார் ஶ்ரீ கிருஷ்ணர்.

अर्जुनं पुरुष-व्याघ्रं स्थिर आत्मानं गुणैः युतम्।

स वै संवत्सरं पूर्णं मासं च एकं वने वसन्।।

तीर्थयात्रां च कृतवान् नाग-कन्याम् अवाप च।

पाण्ड्यस्य तनयां लब्ध्वा तत्र ताभ्यांसहोषितः'।। 

Adi parva 61


தீர்த்தயாத்திரைக்கு சென்ற அர்ஜுனன் கங்கையில் ஸ்நானம் செய்த போது, நாக கன்னிகை "உலூபி" இழுத்து கொண்டு தன் இடத்துக்கு சென்றாள். அவள் தன்னை மணக்கும் படியாக கேட்க, உலூபியை மணந்து கொண்ட அர்ஜுனன், ஒரு நாள் அவளோடு தங்கி விட்டு, மேலும் தீர்த்த யாத்திரையை தொடர்ந்தான்.


பிறகு இமய மலைக்கு சென்றான். பல புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்தான்.


பிறகு கிழக்கு நோக்கி பிரயாணம் செய்து, வரும் வழியில் நைமிசாரண்யத்தில் பல நதிகளில் ஸ்நானம் செய்து, பிறகு கயா சென்று அங்கும் ஸ்நானம் செய்து, பிறகு வங்க (bengal), களிங்க (orisaa), தேசங்களில் உள்ள புண்ய நதிகளில் ஸ்நானம் செய்து, அங்குள்ள கோவில்கள் மாளிகைகளை தரிசித்து கொண்டே, மேலும் ப்ரயாணம் செய்து, மஹேந்திர மலையை கண்டு, பிறகு கோதாவரியில் ஸ்நானம் செய்து, பிறகு, கடல் வரை சேரும் காவிரி நதியில் ஸ்நானம் செய்து, தேவரிஷி பித்ரு தர்ப்பணம் செய்தான்,

मणलूर् ईश्वरं राजन् धर्मज्ञं चित्रवाहनम्।

तस्य चित्राङ्गदा नाम दुहिता चारु दर्शना।।

பிறகு, மணலூர் (மதுரை) என்ற தேசத்துக்கு சென்று அந்த அரசரை சந்தித்தான். அவளுக்கு சித்ராங்கதை என்ற பெண் இருந்தாள்.

तां ददर्श पुरे तस्मिन् विचरन्तीं यदृच्छया।

दृष्ट्वा च तां वरारोहां चकमे चैत्रवाहनीम्।।

அவள் அந்த பட்டிணத்தில் சுதந்திரமாக சஞ்சரிப்பதை கண்டான் அர்ஜுனன். சித்ரம் போல இருக்கும் அவளை கண்டதுமே அவளை விரும்பினான் அர்ஜுனன்.




अभिगम्य च राजानमवदत्स्वं प्रयोजनम्।

देहि मे खल्विमां राजन् क्षत्रियाय महात्मने।।

தன் விருப்பத்தை அந்த தேசத்தின் அரசரிடம் நேராக சென்று "அரசே! உங்கள் பெண்ணை க்ஷத்ரியனான எனக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தான்.


तच्छ्रुत्वा त्वब्रवीद् राजा कस्य पुत्रोऽसि नाम किम्।

उवाच तं पाण्डवोऽहं कुन्तीपुत्रो धनञ्जयः।।

இதை கேட்ட அரசர், "நீ யாருடைய புதல்வன்? உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அர்ஜுனன் "நான் பாண்டவன். குந்தி புத்ரன் தனஞ்சயன்" என்றான்.


तम् उवाचाथ राजा स सान्त्व पूर्वम् इदं वचः।

राजा प्रभञ्जनो नाम कुले अस्मिन्संबभूव ह।।

அர்ஜுனன் பேசியதை கேட்ட அரசன், மிகவும் சாந்தமாக பேச தொடங்கினார்.."எங்கள் ராஜ்யத்தில் ஒரு சமயம் பிரபஞ்சன் என்ற ஒரு அரசர் இருந்தார்.

अपुत्रः प्रसवेनार्थी तपस्तेपे स उत्तमम्।

उग्रेण तपसा तेन देवदेवः पिनाक-धृक्।।

ईश्वरस्तोषितः पार्थ देवदेवः उमापतिः।

स तस्मै भघवान्प्रादाद् एकैकं प्रसवं कुले।।

குழந்தை பாக்கியம் இல்லாத அந்த அரசர், தனக்கு சந்ததி அமைய தவம் செய்தார். அவருடைய உக்ரமான தவத்தால் தேவாதி தேவனும், பினாகி என்ற ஆயுதம் கையில் ஏந்திய உமாபதியான சிவபெருமான் ப்ரசன்னமானார். மேலும் அந்த உமாபதி அரசரை பார்த்து. "உங்கள் குலத்தில் ஒவ்வொரு குழந்தை தான் பிறக்கும்" என்று சொன்னார்.


एकैकः प्रसव: तस्माद् भवति अस्मिन् कुले सदा।

तेषां कुमाराः सर्वेषां पूर्वेषां मम जज्ञिरे।।

இதன் காரணத்தால், இன்று வரை இந்த குலத்தில் ஒவ்வொரு சந்ததிக்கும் ஒரே ஒரு குழந்தை தான் பிறக்கிறது. என்னுடைய முன்னோர்கள் வரை, அனைவருக்கும் ஆண் குழந்தையே பிறந்தனர்.


एका च मम कन्येयं कुलस्योत्पादनी भृशम्।

पुत्रो ममायमिति मे भावना पुरुषर्षभ।।

पुत्रिका-हेतु विधिना संज्ञिता भरतर्षभ।

तस्माद् एकः सुतो योऽस्यां जायते भारत त्वया।।

एतच्छुल्कं भवत्वस्याः कुल कृज्जायताम् इह।

एतेन समयेनेमां प्रतिगृह्णीष्व पाण्डव।।

स तथेति प्रतिज्ञाय तां कन्यां प्रतिगृह्य च।

मासे त्रयो-दशे पार्थः कृत्वा वैवाहिकीं क्रियाम्।

उवास नगरे तस्मिन् मासांस्त्रीन्स तया सह।।

"புருஷர்களில் சிறந்தவனே ! எனக்கு பிறந்த ஒரே பெண் குழந்தை இவள். இவள் தான் என் குலத்தை வளர செய்பவளாக இருக்கிறாள்.

இவள் பெண் குழந்தையாக இருந்தாலும், இவளை சந்ததி வளர்க்கும் புத்ரன் என்றே நினைக்கிறேன். உன் மூலமாக இவளுக்கு பிறக்கும் குழந்தை என் குலத்தை எடுத்து செல்பவனாக இருக்க வேண்டும். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் நான் என் பெண்ணை உன் கையில் ஓப்படைக்க சம்மதிக்கிறேன்" என்றார் அரசர். அர்ஜுனன் "அப்படியே ஆகட்டும்" என்று சபதம் செய்து 12 மாத தீர்த்த யாத்திரை முடிந்த நிலையில், அவளை முறையாக மணம் செய்து கொண்டு, 3 மாதங்கள் பாண்டிய தேசத்திலேயே இருந்தான்.

அதன் பிறகு, அர்ஜுனன் தென் சமுத்திர (கன்யாகுமரி) கரை வரை சென்றான். அங்கு பல புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தான். அங்கிருந்த ரிஷிகள் குறிப்பாக "அகஸ்திய தீர்த்தம், ஸௌபத்ர தீர்த்தம், பௌலோம தீர்த்தம், காரந்தம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் என்ற 5 தீர்த்தங்களில் மட்டும் ஸ்நானம் செய்ய வேண்டாம்" என்று தடுத்தனர்.


ग्राहाः पञ्च वसन्त्येषु हरन्ति च तपोधनान्।
तत एतानि वर्ज्यन्ते तीर्थानि कुरुनन्दन।।

அதில் மனிதர்களை விழுங்கும் 5 பெரும் முதலைகள் இருப்பதை சொல்லி எச்சரித்தார்கள்.


மஹா வீரனான அர்ஜுனன், கவலையே இல்லாமல் இறங்கி, அதில் தன்னை விழுங்க வந்த ஒரு முதலையை தூக்கி கொண்டு வந்து கரையில் போட்டான்.


ரிஷிகள் பார்க்க, அந்த முதலை உருமாறி, சர்வ ஆபரணங்கள் அணிந்த அப்சரஸாக மாறினாள்.


அந்த தேவ லோக அப்சரஸ் மேலும் தன்னுடைய 4 தோழிகள் முதலையாக இருப்பதை சொல்லி, அவர்களையும் சாப விமோசனம்  செய்யுமாறு பிரார்த்தனை செய்தாள்.


தாங்கள் ஐவரும், தவம் செய்து கொண்டிருந்த ப்ராம்மணனை மயக்க நினைத்து அவர் முன் நடனம் ஆடி, பேச்சு கொடுத்த போது, "100 வருடங்கள் முதலையாக போங்கள்" என்று சபித்ததை சொன்னாள்.


அதே சமயம், "ஒரு புருஷ ஸ்ரேஷ்டன் ஒரு நாள் வந்து உங்களை தூக்கி கரை ஏற்றும் போது, சாபம் நீங்கும்" என்று சமாதானமும் செய்தார்.


இதை கேட்ட மஹா வீரனான அர்ஜுனன், மீண்டும் இறங்கி, மற்ற 4 முதலைகளையும் அடக்கி, தூக்கி கொண்டு கரையில் விட்டான். உடனே அனைவரும் தங்கள் தங்கள் உருவத்தை பெற்று, அர்ஜுனனுக்கு நன்றி கூறி, தேவலோகத்துக்கு சென்றனர்.


பிறகு மீண்டும் சித்ராங்கதை இருக்கும் மணலூர்க்கு (மதுரைக்கு) சென்ற அர்ஜுனன், அவள் மூலம் "பப்ரு வாகனன்" என்ற மகனை பெற்றான்.


बभ्रुवाहन नाम्ना तु 

मम प्राणो बहिश्चरः।

तस्माद्भरस्व पुत्रं वै 

पुरुषं वंशवर्धनम्।।

அந்த அரசரை பார்த்து, "என் மகனான 'பப்ரு வாகனனை' உமக்கே தருகிறேன். நீங்கள் என் மகனை வாங்கி கொண்டு, எனக்கு விடுதலை தாருங்கள்" என்று கேட்டான்.

தன் மனைவியான சித்ராங்கதையை பார்த்து, "நீ இங்கேயே இருந்து கொண்டு இரு. பப்ரு வாகனனை நன்றாக வளர்த்து வா. உனக்கு சுகம் உண்டாகட்டும். இவன் வளர்ந்த பிறகு இந்த்ரப்ரஸ்தம் வா. அங்கு மாதா குந்தி தேவி, யுதிஷ்டிரர், பீமன், என்னுடைய இளைய சகோதரர்கள், மற்ற எனது உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீ பார்க்கலாம். என் சொந்தங்களோடு நீயும் சுகமாக இருக்கலாம்.




அன்பானவளே! தர்மத்தில் இருப்பவரும், சத்தியத்தை விடாதவருமான என் சகோதரர் யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய போகிறார்.


உலகத்துக்கே அவர் சக்கரவர்த்தி என்ற பட்டத்தோடு அவர் ராஜ சுய யாகம் செய்து கொள்ளும் போது, உன் தந்தையோடு நீயும் வா. அங்கு உன்னை பார்க்கிறேன்.


இப்பொழுது நம் புத்திரனை காப்பாற்றி வளர்த்து கொண்டு இரு. துக்கப்படாதே!

எனது உயிரே பப்ரு என்ற உருவத்தோடு இருக்கின்றான் என்று பார்.  இந்த வம்சத்தை விருத்தி செய்ய போகும் பப்ருவை பார்த்து கொள்.

என் பிரிவினால் வருத்தப்படாதே !"

என்று அர்ஜுனன் சொல்லி சமாதானம் செய்தான்.


பிறகு மேலும் யாத்திரையை தொடர்ந்து கடற்கரை பக்கம் வந்து, கடைசியாக கேரள தேசம் தாண்டி, புண்யமான கோகர்ண க்ஷேத்ரம் (கர்நாடக) நோக்கி சென்றான்.


பாண்டிய தேசத்துக்கு அர்ஜுனன் சென்றதை பிறகு துரியோதனனும் சொல்கிறான்.

துரியோதனன் தன் தகப்பனார் த்ருதராஷ்டிரனிடம் மீண்டும் ஒரு முறை பாண்டவர்களை சூதாட அழைக்க சொல்லி.. அர்ஜுனனின் பராக்ரமத்தையும், அவன் தீர்த்த யாத்திரை செய்த போது, பலராமரையும் யாதவ சேனையையும் ஒரே ஆளாக எதிர்த்து போரிட்டதையும் சொல்லி பயம் கொள்கிறான்.


தீர்த்த யாத்திரை செய்த அர்ஜுனன், தமிழகம் வந்து, பாண்டிய தேசத்து அரசனின் குமாரியை மணந்தான் என்று சொல்கிறான்.


ततो गोदावरीं कृष्णां कावेरीं चावगाहत।

तत्र पाण्ड्यं समासाद्य तस्य कन्यामवाप सः।।

இப்படி தீர்த்த யாத்திரை செய்து வந்த அர்ஜுனன், கோதாவரி, கிருஷ்ணா, காவேரீ போன்ற புண்ய நதிகளில் நீராடி கொண்டே சென்றான். பிறகு பாண்டிய தேசம் சென்று, அந்த அரசரின் பெண்ணை மணம் செய்து கொண்டான்.


लब्ध्वा जिष्णुर्मुदं तत्र ततो याम्यां दिशं ययौ।

பிறகு மேலும் சந்தோஷத்தோடு மேலும் தென் திசை நோக்கி தீர்த்தயாத்திரை தொடர்ந்தான்.


स दक्षिणं समुद्रान्तं गत्वा चाप्सरसां च वै।

कुमार-तीर्थम् आसाद्य मोक्षयामास च: अर्जुनः।।

தெற்கு கோடிக்கு சென்ற அர்ஜுனன், தேவர்களில் அப்சரஸ் அதிகம் சஞ்சரிக்கும் குமார தீர்த்தம் (கன்னியாகுமாரி) வந்து, அங்கு 5 அப்சரஸ்கள் முதலையாக சாபத்தில் இருப்பதை அறிந்து, தன் பலத்தினாலும், கரையில் எடுத்து சாப விமோசனம் செய்து விடுவித்தான்.


இவ்வாறு துரியோதனன் அர்ஜுனனை பற்றி சொல்கிறான்.

 

யார் அந்த பாண்டிய அரசன்? அவர் பெயர் என்ன?

இவர்கள் பெயரை சஹதேவன் ராஜசூய யாகத்துக்கு திக்விஜயம் சென்ற போது, அவர்களை பார்த்த பொழுது, அறிகிறோம்.


प्रतिजग्राह तस्याज्ञां सम्प्रीत्या मलयध्वजः।।

- Vyasa Mahabharata

அர்ஜுனனின் மாமனாரும், பாண்டிய அரசரான "மலயத்வஜ" அரசரிடம் தான் வந்திருப்பதை தெரிவிக்க தன் தூதுவனை அனுப்பினார், சஹதேவன். உடனேயே, பாண்டிய ராஜன் சஹதேவன் கட்டளையை அன்புடன் அங்கீகரித்தார்.

भार्या रूपवती जिष्णोः पाण्ड्यस्य तनया शुभा।

चित्राङ्गदेति विख्याता द्रमिडी योषितां वरा।।  

आगतं सहदेवं तु सा श्रुत्वाऽन्तः पुरे पितुः।

प्रेषयामास सम्प्रीत्या पूजारत्नं च वै बहु।।

- Vyasa Mahabharata

அர்ஜுனனின் மனைவியும், பாண்டியராஜனின் மகளுமான அழகில் சிறந்தவளான, நல்ல லக்ஷணங்கள் கொண்ட, பெண்களில் சிறந்தவளான, தமிழ் பெண்ணான 'சித்ராங்கதை', சஹதேவன் வந்திருப்பதை தன் தந்தை மூலமாக அறிந்து கொண்டு,  பல வகையான விலையுயர்ந்த பொருள்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவழங்களையும், தூதர்களிடம் கொடுத்து சஹதேவனுக்கு அனுப்பினாள்.


पाण्ड्योऽपि बहु-रत्नानि दूतैः सह मुमोच ह।

मणिमुक्ताप्रवालानि सहदेवाय कीर्तिमान्।।

तां दृष्ट्वाऽप्रतिमां पूजां पाण्डवोऽपि मुदा नृप।

भ्रातुः पुत्रे बहून्रत्नान्दत्वा वै बभ्रूवाहने।।

- Vyasa Mahabharata

அந்த நிகரற்ற மரியாதையை கண்ட சஹதேவன், மிகுந்த ஆனந்தம் அடைந்து, தன் சகோதரன் புதல்வனான பப்ருவாஹனனுக்கு  தானே ரத்தினங்களை அள்ளி கொடுத்து, ஆனந்தப்பட்டார்.




पाण्ड्यं द्रमिड-राजानं श्वशुरं मलयध्वजम्।

स दूतैस्तं वशे कृत्वा मणलूर् ईश्वरं तदा।।

ततो रत्नान्युपादाय द्रमिडै: आवृतो ययौ।

अगस्त्यस्यालयं दिव्यं देवलोकसमं गिरिम्।। 

- Vyasa Mahabharata

பாண்டிய தேசத்தின் தமிழ் அரசனும், மணலூர் (மதுரை) தேசத்தை ஆளும், அர்ஜுனனுக்கு மாமனாருமான மலயத்வஜ பாண்டியனை தன் தூதர்களை அனுப்பி தன் வசப்படுத்தி அவரிடம் ரத்தினங்களை பெற்று கொண்டு, தமிழ் மக்களால் சூழப்பட்ட சஹதேவன் அகத்திய ரிஷியின் திவ்யமான மலையை நோக்கி மேலும் புறப்பட்டார்.


स तं प्रदक्षिमं कृत्वा मलयं भरतर्षभ।

लङ्घयित्वा तु माद्रेय: ताम्रपणीं नदीं शुभाम्।। 

प्रसन्नसलिलां दिव्यां सुशीतां च मनोहराम्।

समुद्र तीरम् आसाद्य न्यविशत् पाण्डु-नन्दनः।।

-Vyasa Mahabharata

ஜனமேஜயா! கிளம்பும் முன், மலயத்வஜ பாண்டியனை வலம் வந்து நமஸ்கரித்து புறப்பட்ட சஹதேவன், கிளம்பி குளிர்ச்சியான நீரை கொண்ட தாம்ரபரணி நதியோரம் வழியாக, இலங்கையை நோக்கி வந்து பயணம் மேற்பட்ட சஹதேவன், கடற்கரையை அடைந்தார்