Followers

Search Here...

Tuesday 19 September 2023

காயத்ரீ ஜபம் செய்தால், என்னென்ன பலன் கிடைக்கும்? ஏன் 1000 காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும்? சந்தியா வந்தனம் செய்யாமல் ஜபம் செய்யலாமா?வ்யாஸ பகவான் தேவி பாகவதத்தில் சொல்கிறார். தெரிந்து கொள்வோம்.

வ்யாஸ பகவான் தேவி பாகவதத்தில் சொல்கிறார். தெரிந்து கொள்வோம்.

मद्रदेशे महाराजो बभूव अ श्वपति:मुने ।

वैरिणां बलहर्ता च मित्राणां दुःखनाशनः ॥

आसीत्तस्य महाराज्ञी महिषी धर्मचारिणी ।

मालतीति समाख्याता यथा लक्ष्मीर्गदाभृतः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26 ஸ்லோகம் 6)

அஸ்வபதி என்ற அரசன் மத்ர தேசத்தை ஆண்டு கொண்டிருந்தார்.

அவருக்கு மாலதி என்பவள் மனைவி. லக்ஷ்மியை போன்று இருந்த அவளுக்கு, குழந்தை இல்லை என்ற பெரும் குறை ஏற்பட்டது.


सा च राज्ञी च वन्ध्या च वसिष्ठस्योपदेशतः ।

चकाराराधनं भक्त्या सावित्र्याश्चैव नारद ॥

प्रत्यादेशं न सा प्राप्ता महिषी न ददर्श ताम् ।

गृहं जगाम दुःखार्ता हृदयेन विदूयता ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

வசிஷ்டர் இவளுக்கு சாவித்திரி தேவியை உபாஸிக்க சொன்னார். இவள் கடுமையான விரதம் செய்தும், தேவியின் காட்சியோ, அருளோ கிடைக்கவில்லை. 

இதனால், வருத்தத்துடன் அரண்மனை திரும்பினாள்.

राजा तां दुःखितां दृष्ट्वा बोधयित्वा नयेन वै ।

सावित्र्यास्तपसे भक्त्या जगाम पुष्करं तदा ॥

तपश्चकार तत्रैव संयतः शतवत्सरम् ।

न ददर्श च सावित्र्या प्रत्यादेशो बभूव च ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

அவள் வருத்தத்தை கண்டு, அஸ்வபதி தன் மனைவியை அழைத்து கொண்டு, புஷ்கரம் வந்து சேர்ந்தார். 

இருவரும் கடுமையான தவத்துடன் ஸாவித்ரீயை குறித்து 100 வருடங்கள் பிரார்த்தனை செய்தனர்.

இருந்தும் ஸாவித்ரீ காட்சி கொடுக்கவில்லை.

ஆனால், ஒரு அசரீரி வாக்கு கேட்டது...


शुश्रावाकाशवाणीं च नृपेन्द्रश्चाशरीरिणीम् ।

गायत्र्या दशलक्षं च जपं त्वं कुरु नारद ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

"நீ 10 லட்சம் தடவை காயத்ரீ ஜபம் செய்" என்று வாக்கு மட்டும் கேட்டது.


एतस्मिन्नन्तरे तत्र आजगाम पराशरः ।

प्रणनाम ततस्तं च मुनिर्नृपमुवाच च ॥ 

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

அப்பொழுது, பராசரர் (வ்யாஸ பகவானின் அப்பா) தோன்றினார்.

அரசர் நமஸ்கரித்து நின்றார்.


मुनिरुवाच

सकृज्जपश्च गायत्र्याः पापं दिनभवं हरेत् ।

दशवारं जपेनैव नश्येत्पापं दिवानिशम् ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

அந்த முனிவர், "அரசரே! 

  • 1 முறை காயத்ரீ ஜபம் செய்தால், அன்று செய்த பாபம் அழியும்.
  • 10 முறை காயத்ரீ ஜபம் செய்தால், அன்று பகலும் இரவும் செய்த பாபம் அழியும்.


शतवारं जपश्चैव पापं मासार्जितं हरेत् ।

सहस्रधा जपश्चैव कल्मषं वत्सरार्जितम् ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

  • 100 முறை காயத்ரீ ஜபம் செய்தால், ஒரு மாதம் செய்த பாபம் அழியும்.
  • 1000 முறை காயத்ரீ ஜபம் செய்தால், ஒரு வருடம் செய்த பாபம் அழியும்.

लक्षो जन्मकृतं पापं दशलक्षोऽन्यजन्मजम् ।

सर्वजन्मकृतं पापं शतलक्षाद्विनश्यति ॥

करोति मुक्तिं विप्राणां जपो दशगुणस्ततः ।

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

  • 1,00,000 முறை காயத்ரீ ஜபம் செய்தால், இந்த ஜென்மத்தில் உண்டாகும் பாபங்கள் அனைத்தும் அழியும்.
  • 10,00,000 முறை காயத்ரீ ஜபம் செய்தால், பல ஜென்மமாக உண்டான பாபங்கள் அனைத்தும் அழியும். 
  • 100,00,000 முறை காயத்ரீ ஜபம் செய்தால், அனைத்து ஜென்மத்தில் உண்டான பாபங்கள் அனைத்தும் அழியும். இப்படி ஜபம் செய்த அந்தணன் என்ற வேதியன் (விப்ரன்) மோக்ஷத்தை அடைந்து விடுவான்.

करं सर्पफणाकारं कृत्वा तद्‌रन्धमुद्रितम् ।

आनम्रमूर्धमचलं प्रजपेत्प्राङ्‌मुखो द्विजः ।

अनामिकामध्यदेशादधोऽवामक्रमेण च ।

तर्जनीमूलपर्यन्तं जपस्यैवं क्रमः करे ।

श्वेतपङ्‌कजबीजानां स्फटिकानां च संस्कृताम् ॥

कृत्वा वै मालिकां राजन् जपेत्तीर्थे सुरालये ।

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

வலது உள்ளங்கையை பாம்பு போல வளைத்துக்கொண்டு, விரல்கள் இடைவெளி இல்லாமல் சேர்த்து கொண்டு, விரல் நுனி கீழே பார்த்த படி வைத்து கொண்டு, அமைதியாக கிழக்கு பார்த்து அமர்ந்து கையில் வெண்மையான ஸ்படிகமோ, தாமரை விதையால ஆன மாலையை வைத்து கொண்டு, ஜபம் செய்ய வேண்டும்.

இந்த ஜபத்தை புனிதமான தீர்த்த கரையிலோ, கோவிலிலோ செய்ய வேண்டும்.


இதற்கு பிறகு, அந்த அரசருக்கு புத்ர பாக்கியமும், ஸாவித்ரீ தேவியின் தரிசனம் கிடைக்கவும் மேலும் பிரத்யேகமான வழிகளை சொன்னார்.


संस्थाप्य मालामश्वत्थपत्रे पद्मे च संयतः ॥

कृत्वा गोरोचनाक्तां च गायत्र्या स्नापयेत्सुधीः ।

गायत्रीशतकं तस्यां जपेच्च विधिपूर्वकम् ॥

अथवा पञ्चगव्येन स्नात्वा मालां सुसंस्कृताम् ।

अथ गङ्‌गोदकेनैव स्नात्वा वातिसुसंस्कृताम् ॥

एवं क्रमेण राजर्षे दशलक्षं जपं कुरु ।

साक्षाद्द्रक्ष्यसि सावित्रीं त्रिजन्मपातकक्षयात् ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

100 முறை காயத்ரீ ஜபம் செய்த பிறகு, அந்த மாலையை வாழை இலையில் வைத்தோ, தாமரை இலையில் வைத்தோ, பசும் சாணத்தில் வைத்து விட்டு, கங்கா ஜலத்தால் அலம்பி,பிறகு,

10,00,000 முறை காயத்ரீ ஜபம் செய். இதனால், ஜென்ம பாபங்கள் அழியும். உனக்கு ஸாவித்ரீ தேவி காட்சி கிடைக்கும். 

नित्यं सन्ध्यां च हे राजन् करिष्यसि दिने दिने ।

मध्याह्ने चापि सायाह्ने प्रातरेव शुचिः सदा ॥ 

सन्ध्याहीनोऽशुचिर्नित्यमनर्हः सर्वकर्मसु ।

यदह्ना कुरुते कर्म न तस्य फलभाग्भवेत् ॥

नोपतिष्ठति यः पूर्वां नोपास्ते यस्तु पश्चिमाम् ।

स शूद्रवद्‌बहिष्कार्यः सर्वस्माद्‌ द्विजकर्मणः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

அரசரே! ஜபம் செய்வதற்கு, காலை, பகல், மாலை வேளைகளில் தூய்மை அவசியம். 

அதனால், அசுத்தமான நிலையில், சந்தியா வந்தனம் செய்யாத நிலையில், காயத்ரீ ஜபம் செய்ய வேண்டாம்.

அசுத்தமான நிலையில், சந்தியா வந்தனம் செய்யாத நிலையில், காயத்ரீ ஜபம் செய்தால், பலன் கிடைக்காது.


यावज्जीवनपर्यन्तं त्रिःसन्ध्यां यः करोति च ।

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

எந்த த்விஜன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்) காலை, பகல், மாலை சந்தியா வேளையில் சந்தியா வந்தனம் செய்யாமல் இருக்கிறானோ, அவனை எந்த வைதீக காரியத்திலும் சேர்க்க இயலாது. அவனும் சூத்திரனே (employee).


स च सूर्यसमो विप्रस्तेजसा तपसा सदा ॥

तत्पादपद्मरजसा सद्यःपूता वसुन्धरा ।

जीवन्मुक्तः स तेजस्वी सन्ध्यापूतो हि यो द्विजः ॥

तीर्थानि च पवित्राणि तस्य संस्पर्शमात्रतः ।

ततः पापानि यान्त्येव वैनतेयादिवोरगाः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

தன் ஆயுள் காலம் வரை, சந்தியா வந்தனம் தினமும் 3 வேளையும் செய்யும் த்விஜன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்), சூரியன் போல எங்கும் பிரகாசிப்பான். அவனுடைய தபஸ் வெளிப்படும்.

அப்படிப்பட்டவன், எங்கெங்கெல்லாம் கால் வைக்கிறானோ, அந்த மண் புனிதமாகும்.

எந்த த்விஜன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்) காலை, பகல், மாலை சந்தியா வேளையில் சந்தியா வந்தனம் செய்கிறானோ, அவன் மன சுத்தியோடு எப்போதும் இருப்பான். எப்பொழுதும் சக்தியோடும், வாழும் காலத்திலேயே மோக்ஷத்தை அனுபவித்து கொண்டும் இருப்பான்.

அவன் தொடும் ஆறுகள், நதிகள், புண்ய தீர்த்தங்கள் ஆகும்.

அவனிடமிருந்து அனைத்து பாபங்களும் கருடனை கண்ட பாம்புகள் ஓடி மறைவது போல மறையும்.

न गृह्णन्ति सुराः पूजां पितरः पिण्डतर्पणम् ।

स्वेच्छया च द्विजातेश्च त्रिसन्ध्यारहितस्य च ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

எந்த த்விஜன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்) காலை, பகல், மாலை சந்தியா வேளையில் சந்தியா வந்தனம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் செய்யும் எந்த வேத காரியத்தையும் தேவதைகள் ஏற்று கொள்ளாது. அவன் கொடுக்கும் பிண்டத்தை பித்ருக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.


मूलप्रकृति अभक्तो यस्तन्मन्त्रस्याप्यनर्चकः ।

तदुत्सवविहीनश्च विषहीनो यथोरगः ॥ 

ஆதி புருஷனனிடம் (மூல ப்ரக்ருதி) பக்தி இல்லாதவன், மதிக்காதவன், விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றவன் (அவன் வாக்கு பலிக்காது).


विष्णुमन्त्रविहीनश्च त्रिसन्ध्यारहितो द्विजः ।

एकादशीविहीनश्च विषहीनो यथोरगः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

விஷ்ணு மந்திரத்தை சொல்லாதவன், 3 வேளை சந்தியா வந்தனத்தை, ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காத த்விஜன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்), விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றவன் (அவன் வாக்கு பலிக்காது)


हरेरनैवेद्यभोजी धावको वृषवाहकः ।

शूद्रान्नभोजी यो विप्रो विषहीनो यथोरगः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

எந்த பிராம்மணன் விஷ்ணு பிரசாதத்தை மறுக்கிறானோ, பிறர் துணியை துவைக்கிறானோ, சூத்திரன் (employee) கொடுக்கும் உணவை வாங்கி உண்கிறானோ, எருமையில் பயணம் செய்கிறானோ, அவன் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றவன் (அவன் வாக்கு பலிக்காது).


शूद्राणां शवदाही यः स विप्रो वृषलीपतिः ।

शूद्राणां सूपकारश्च विषहीनो यथोरगः ॥ 

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

சூத்திரனின் (employee) சவ உடலை தகனம் செய்யும் பிராம்மணன், திருமணமாகாத பெண்ணின் கணவனை போன்றவன். (அதாவது, இப்படி ஒரு மனிதன் இருக்கவே முடியாது. அது போல, இந்த ப்ராம்மணனை இல்லாதவன் போல கருத வேண்டும்). சூத்திரன் (employee) வீட்டில் சமைத்து கொடுக்கும் பிராம்மணன், இவர்கள் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றவர்கள் (அவன் வாக்கு பலிக்காது)..


शूद्राणां च प्रतिग्राही शूद्रयाजी च यो द्विजः ।

मसिजीवी असिजीवी विषहीनो यथोरगः ॥ 

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

சூத்திரனிடம் (employee) பரிசை ஏற்றுக்கொள்ளும் த்விஜன் (வைசியன், க்ஷத்ரியன், பிராம்மணன்), சூத்திரனுக்கு யாகம் செய்து கொடுப்பவன், குமாஸ்தாவாகவும், போர்வீரனாகவும் வாழும் த்விஜன் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றன் (அவன் வாக்கு பலிக்காது)..


यः कन्याविक्रयी विप्रो यो हरेर्नामविक्रयी ।

यो विप्रोऽवीरान्नभोजी ऋतुस्नातान्नभोजकः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

எந்த பிராம்மணன் தன் மகளை வைத்து பணம் பெறுகிறானோ, ஹரியின் பெயரை சொல்லி வியாபாரம் செய்கிறானோ, அவன் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றன் (அவன் வாக்கு பலிக்காது)..


भगजीवी बार्धुषिको विषहीनो यथोरगः ।

यो विद्याविकयी विप्रो विषहीनो यथोरगः ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

எந்த பிராம்மணன் கணவனோ, மகனோ இல்லாத பெண்ணிடம் உணவு வாங்கி உண்கிறானோ, அவன் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றன் (அவன் வாக்கு பலிக்காது).

எந்த பிராம்மணன் 2 நாள் விலக்குக்கு பிறகு, குளித்த முதல் நாளில் இருக்கும் பெண் சமைத்து உண்கிறானோ, அவன் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றன் (அவன் வாக்கு பலிக்காது)..


सूर्योदये स्वपेद्यो हि मत्स्यभोजी च यो द्विजः ।

शिवापूजादिरहितो विषहीनो यथोरगः ॥ 

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

எந்த பிராம்மணன் சூரியன் உதித்த பிறகும் உறங்கி கொண்டு இருக்கிறானோ, மீன் சாப்பிடுகிறானோ, சிவனின் தேவியை (துர்கா) உபாசிக்காமல் இருக்கிறானோ, அவன் விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றன் (அவன் வாக்கு பலிக்காது)..

इत्युक्त्वा च मुनिश्रेष्ठः सर्वपूजाविधिक्रमम् ।

तमुवाच च सावित्र्या ध्यानादिकमभीप्सितम् ॥ 

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26)

இவ்வாறு ஜபத்தின் பெருமையை, செய்யாமல் இருப்பவனின் பாவத்தை சொல்லிய பிறகு, தன் ஆஸ்ரமத்திற்கு சென்றார் பராசரர்.


दत्त्वा सर्वं नृपेन्द्राय ययौ च स्वाश्रमे मुने ।

राजा संपूज्य सावित्रीं ददर्श वरमाप च ॥

- தேவி பாகவதம்  (வ்யாஸ பகவான்)

(ஸ்கந்தம்: 9, அத்யாயம்: 26 ஸ்லோகம் 40)

முனிவர் சொன்னபடி, ஜபம் செய்த அரசர், ஸாவித்ரீ தேவியை தரிசனம் பெற்று தனக்கு தேவையான வரத்தையும் பெற்றார்.

No comments: