Followers

Search Here...

Saturday 16 September 2023

காயத்ரீ மந்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணம் (முருகன்) சொல்கிறது. அறிந்து கொள்வோம்.

காயத்ரீ மந்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணம் (முருகன்) சொல்கிறது.  

துர்லபா ஸர்வ-மந்த்ரேஷு 

காயத்ரீ ப்ரணவான்விதா 

ந காயத்ரீ அதிகம் கிஞ்சித் 

த்ரயீஷு பரிகீயதே

दुर्लभा सर्वमंत्रेषु गायत्री प्रणवान्विता ।

न गायत्री अधिकं किंचित् त्रयीषु परिगीयते ।।

—स्कन्द पुराण (काशीखण्डः Chapter 9. Slokam 51)

Among all the Mantras, Gayatri with Praṇava (om) is the most rare and hence worthy of respect. No Mantra greater than Gayatri is sung in the Vedas.

அனைத்து மந்திரங்களிலும், பிரணவத்துடன் (ஓம்) கூடிய காயத்ரீ மிகவும் அரிதானது, எனவே மரியாதைக்குரியது. காயத்ரீயை விட பெரிய மந்திரம் 3 வேதங்களில் கூட பாடப்படவில்லை.

ந காயத்ரீ ஸமோ மந்த்ரோ

ந காசி சத்ருசீ புரீ

ந விஸ்வேஷ ஸமம் லிங்கம்

ஸத்யம் ஸத்யம் புந: புந:

न गायत्री समो मंत्रो न काशी सदृशी पुरी ।

न विश्वेश समं लिंगं सत्यंसत्यं पुनःपुनः ।।

—स्कन्द पुराण (काशीखण्डः Chapter 9. Slokam 52)

It is true. It is true again and again that there is no Mantra on a par with Gayatri. There is no city equal to Kasi. There is no figure on par with Kasi ViswanathA.

இது உண்மை. காயத்ரீக்கு இணையான மந்திரம் இல்லவே இல்லை என்பது மீண்டும் மீண்டும் உண்மை. காசிக்கு நிகரான நகரம் இல்லை. காசி விஸ்வநாதருக்கு இணையான ரூபம் வேறு இல்லை.

காயத்ரீ வேத-ஜனனீ

காயத்ரீ ப்ராஹ்மண-ப்ரஸூ:

காதாரம் த்ராயதே யஸ்மாத்

காயத்ரீ தேன கீயதே

गायत्री वेद-जननी गायत्री ब्राह्मण-प्रसूः ।

गातारं त्रायते यस्माद् गायत्री तेन गीयते ।।

—स्कन्द पुराण (काशीखण्डः Chapter 9. Slokam 53)

Gayatri is the mother of the Vedas. Gayatri gives births to BrAhmaṇas. Since it saves him who sings (gAya) it, it is described as Gayatri.

காயத்ரீ வேதங்களின் தாய். காயத்ரி பிராம்மணர்களை பெற்று எடுக்கிறாள். மூன்று பதம் (த்ரீ) உள்ள இந்த மந்திரத்தை பாடுவதாலேயே (காய), காயத்ரீ என்று பெயர் ஏற்பட்டது.

காயத்ரீ ஏவ பரம்-விஷ்ணு:

காயத்ரீ ஏவ பர:சிவ:

காயத்ரீ ஏவ பரோ ப்ரஹ்மா

காயத்ரீ ஏவ த்ரயீ தத: ।।

गायत्री एव परं विष्णु: गायत्री एव परःशिवः ।

गायत्री एव परो ब्रह्मा गायत्री एव त्रयी ततः ।।

—स्कन्द पुराण (काशीखण्डः Chapter 9. Slokam 58)

Gayatri only worships great Vishnu; Gayatri only worships great  Śiva; Gayatri anly worships great BrahmA. Also, Gayatri only gave us 3 Vedas

காயத்ரீயே அப்பாற்பட்டு இருக்கும் விஷ்ணுவை நமக்கு காட்டுகிறாள். காயத்ரீயே அப்பாற்பட்டு இருக்கும் சிவனை நமக்கு காட்டுகிறாள்.; காயத்ரீயே அப்பாற்பட்டு இருக்கும் பிரம்மாவை நமக்கு காட்டுகிறாள். காயத்ரீயே மூன்று வேதத்தையும் கொடுத்தாள்.

குருநாதர் துணை

No comments: