Followers

Search Here...

Showing posts with label ச்யவன ப்ராசம். Show all posts
Showing posts with label ச்யவன ப்ராசம். Show all posts

Monday 18 May 2020

ச்யவன ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ச்யவனர் கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

ச்யவனர் (ச்யாவன) ரிஷி கோத்திரம்
'ப்ருகு ரிஷி'யின் பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:
  1. ச்யாவன
  2. ம்ருகண்டு
  3. மார்க்கண்டேயர்
  4. ஹேம ரிஷி
  5. ஆப்னவான
  6. ஔர்வ
  7. ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
  8. பரசுராமர்
ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வந்தவர் ச்யவனர்.
ஆயுர்வேதத்துக்கு ரிஷி இவர்.
இவர் பெயரில் தான் இன்றுவரை "ச்யவன ப்ராசம்" என்ற லேகியம் தயாரிக்கப்படுகிறது.

"ராம நாமம் என்ற தாரக மந்திரமே அனைவருக்கும் மோக்ஷம் தரக்கூடியது" என்று சொன்ன ரிஷி இவர்.

'ச்யவனபிராஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை ஏற்கும் நாம்,
'"ராம" நாமத்தை சொன்னால் ஆத்மாவுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை கேட்க வேண்டாமா?
சுற்று சிந்தித்து பார்க்க வேண்டும் நாம்.

கடுமையான தவம் செய்வார். ஒரு சமயம் பல வருடங்கள் தவத்தில் அமர்ந்து விட்டார். இவரை சுற்றி புற்று உருவாகி விட்டது.




அந்த சமயம், "சர்யாதி" என்ற அரசன், தன் மகள் "சுகன்யாவுடன்" காட்டுக்கு வேட்டையாட வந்தார்.

ஒரு கூடாரம் போட்டு தங்கினார்கள்.
தன் தோழிகளுடன் சுகன்யா கொஞ்சம் உலாவி கொண்டு இருந்தாள்.

அங்கு ச்யவனர் மேல் சுற்றி இருக்கும் புற்றை கண்டாள்.
அந்த புற்றில் ச்யவனரின் இரண்டு கண்களே இரண்டு ஜோதியாக (வெளிச்சம்) தெரிய... "இது என்னவாக இருக்கும்? குத்தி பார்க்கலாமா?" என்று தன் தோழிகளிடமே கேட்டுக்கொண்டு, ஒரு குச்சியை எடுத்து குத்தி விட்டாள்.
கண்கள் பறிபோய் விட்டது. குருடனாகி விட்டார் ச்யவனர்.

"வயதானவர்..  கோபக்காரர். சபித்து விடுவாரோ!!" என்று பயந்தான் அரசன். தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

"தான் குருடனாகி விட்டதால், இனி துணை இல்லாமல் இருக்க முடியாது. ஆதலால் உன் மகளை எனக்கு துணைவியாக கொடு"
என்று சொல்லிவிட்டார் ச்யவனர்.

மறுபேச்சு இல்லாமல், சுகன்யாவை விதிப்படி மணம் செய்து கொடுத்து விட்டார் அரசர்.

மகளை பார்த்து, "எந்த நிலையிலிலும் கணவருக்கு அபச்சாரம் செய்து விடாதே.. கவனமாக இரு. உனது கற்ப்பாலும், தொண்டினாலும் அவர் சந்தோஷப்படும் படியாக இருக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு, தன் அரண்மனைக்கு திரும்பி விட்டார் அரசர்.

நேற்றுவரை ராஜகுமாரி.. இன்று ரிஷி பத்தினி.
நேற்றுவரை அரண்மனை வாசம்.. இன்று காட்டில் ஆஸ்ரம குடிசையில் வாசம்.
நேற்றுவரை அரண்மனை விருந்து உண்டவள்... இன்று காய், கிழங்கு உண்கிறாள்.
நேற்று பட்டாடை உடுத்திய சுகன்யா... இன்று மரவுரி ஆடை உடுத்திக்கொண்டாள்.

"தன் கணவனே தெய்வம்" என்று வாழ்ந்து வந்தாள் சுகன்யா.
இந்திர தேவன், தேவர்களுக்கான யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடையாது என்று ஒதுக்கி வைத்து இருந்தார்.
அஸ்வினி குமாரர்கள் தேவர்களுக்கு மருத்துவர்கள்.

தான் வயதானவனாக இருந்தாலும், ரிஷியாக ப்ரம்மச்சர்யத்தில் இருந்தாலும், கற்புடன் தனக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் சுகன்யாவுக்கு அணுகிரஹம் செய்ய விரும்பினார் ச்யவனர்.

உடனே யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கும் சேர்த்து சோமபானம் கொடுத்தார்.
தன்னை உபசரித்த ச்யவன ரிஷிக்கு, தன்னை போன்றே திவ்யமான தேவ ரூபத்தை கொடுத்து விட்டனர்.
இளமையான ச்யவன ரிஷியாக ஆகி விட்டார்.
சுகன்யா பெரிதும் ஆச்சர்யப்பட்டாள். ஆனந்தமாக இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம், சர்யாதி தன் மகள் எப்படி காட்டில் இருக்கிறாளோ, என்று பார்க்க வந்தான்.
வந்து பார்த்த போது, இளமையான ஒருவருடன் சுகன்யா இருப்பதை பார்த்து மிகவும் கோபித்து கொண்டார்.

"அப்பா.. இவர் உங்கள் மாப்பிளை தான். தபோ பலத்தால் இளமையாகி விட்டார்" என்றாள் சுகன்யா.

அதற்கு  ச்யவனர், "ராஜனே! சுகன்யா தன் கற்பின் பலத்தால் என்னை இளமையாக்கி விட்டாள்" என்று பெருமையுடன் சொன்னார்.

அரசன் பெருமகிழ்ச்சியுடன் திரும்பினான்.

ஸ்யாவன ரிஷியின் பரம்பரையில் வருபவர்கள் நீங்கா இளமையுடன் இருப்பார்கள்.
ராம பக்தி கொண்டு இருப்பார்கள்.
ஆயுர்வேதம் படிப்பு படித்தால், பெரும் வைத்தியர்கள் ஆவார்கள்.

ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வருவதால், பெருமாளிடம் பக்தியும், மஹாலக்ஷ்மி அணுகிரஹமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.