Followers

Search Here...

Showing posts with label தக்ஷிணாயை. Show all posts
Showing posts with label தக்ஷிணாயை. Show all posts

Saturday 23 October 2021

மெக்கா திசை பார்த்து முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஹிந்துக்கள் இது போன்று திசை நோக்கி பிரார்த்தனை செய்கிறார்களா? செய்தால், அதன் நோக்கம் என்ன? அனுபவம் என்ன? ஸந்த்யாவந்தனத்தில் உள்ளதா? அதன் உள் அர்த்தம் என்ன? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள...

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் எதுவும் 2000 வருடங்களுக்கு முன் உருவான மற்ற மதங்களில் இல்லை.

ஹிந்து தர்மம் சொல்லும் பல விஷயங்களில், ஒரு சில விஷயங்களை மற்ற மதங்களும் சொல்கிறது.

உதாரணத்திற்கு, 

முஸ்லீம் மதத்தில் உள்ளவர்கள், எந்த திசையில் மெக்கா இருக்கிறதோ! அந்த திசையை பார்த்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

முஸ்லீம்களில் மற்றொரு பகுதியினர், மெக்காவை பார்த்து சொல்வதில்லை. இவர்கள் சூரியனுக்கு எதிர் திசையை பார்த்து பிரார்த்தனை செய்கின்றனர். 

ஒரு ஒழுங்குக்காக இவர்கள் இந்த பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள்.


திசையை பார்த்து ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்வதை  சாதாரணமாகவே பார்க்கலாம். 

கையை தூக்கி, மேலும் கீழும், நான்கு பக்கமும் சுற்றி ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்வதை சகஜமாகவே பார்க்கலாம்.




"பரமாத்மா ஒரு திசையில் இல்லை. அவர் எங்கும் இருக்கிறார்" என்ற தத்துவத்தில், ஹிந்துக்கள் அனைத்து திசையிலும் இருக்கும் பரமாத்மாவை வணங்குகின்றனர். 


இது மட்டும் ஒரு காரணமல்ல.. 

'பரமாத்மா எங்கும் இருக்கிறார், நம் அனைவருக்குள்ளும் ஆத்மாவாகவும் இருக்கிறார்' என்பதால் தான், ஹிந்துக்கள், உலகத்தில் உள்ள அனைவரையும், பரமாத்மாவாக நினைத்து வணங்குகின்றனர்.

நமக்குள் இருக்கும் ஆத்மா (ஜீவாத்மாக்கள்) மட்டுமா பரமாத்மா? 

'எங்கும் பரமாத்மா இருக்கிறார்' என்று சொல்லும் போது, பரமாத்மாவே பஞ்ச பூதமாகவும் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. 


அந்த பரமாத்மாவே "உலகங்களாகவும், அந்த பரமாத்மாவே அந்த உலகங்களில் கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களாகவும் நுழைந்து இயக்கி கொண்டு இருக்கிறார்" என்று வேதம் சொல்கிறது.

ஆதலால் தான், 

பிரளய காலத்தில் 'உலகங்கள், ஜீவாத்மாக்கள் அனைத்தையும் தனக்குள் அடக்கி விடுகிறார்' பரமாத்மா என்று வேதம் சொல்கிறது. 

14 உலகங்களை 'ஸ்ரீவத்ஸமாகவும்', கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை 'கௌஸ்துபம்' என்ற மாலையாகவும் அணிந்து கொண்டு, பிரளய காலத்தில் பரவாசுதேவன் மட்டும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

முஸ்லீம்கள் மெக்கா திசை நோக்கி வழிபடுகிறார்கள் என்று பார்த்தோம். 

ஹிந்து தர்மத்திலும் இந்த பழக்கத்தை காணலாம்.

ஸ்ரீரங்க நாதரின் மேல் பக்தி கொண்டவன், வேலை காரணமாக டெல்லி சென்றாலும், அங்கிருந்து கொண்டே ரங்கநாதர் கோவில் இருக்கும் திசை நோக்கி நமஸ்கரிக்கிறான்.


காசி விஸ்வநாதரின் மேல் பக்தி கொண்டவன், வேலை காரணமாக சென்னை வந்தாலும், அங்கிருந்து கொண்டே காசி விஸ்வநாதர் கோவில் இருக்கும் திசை நோக்கி நமஸ்கரிக்கிறான்.

ஹிந்துவாக பிறந்தவன், இந்திய (பாரத) தேசத்தை விட்டு, அமெரிக்கா சென்றாலும், உலகத்திற்கே கோவில் கோபுரம் போல இருக்கும் இந்திய தேசம் இருக்கும் திசை நோக்கி நமஸ்கரிக்கிறான். 




பாரத மண்ணில் ஆயிரக்கணக்கான மகாத்மாக்கள், யோகிகள், ரிஷிகள் பிறந்தார்கள், இருக்கிறார்கள்.. வர போகிறார்கள். 

இந்த பாரத மண்ணில் தேவர்களும், சிவபெருமானும், பெருமாளும் லீலைகள் செய்து இருக்கிறார்கள்

நம்மை படைத்த பரமாத்மா ராமராகவும், கண்ணனாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும் இந்த மண்ணில் வந்து காட்சி கொடுத்து இருக்கிறார்கள். 

ரிஷிகள், மகான்கள், சித்தர்களுக்கு காட்சி கொடுத்த தெய்வங்கள், பாரத மண் எங்கும் கோவிலில் இன்றும் பூஜை செய்யும் விதமாக கல் ரூபத்திலும், மர ரூபத்திலும், பஞ்சலோக ரூபத்திலும், நீர் ரூபத்திலும், ஆகாச ரூபத்திலும் இருக்கிறார்கள்

ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த அதே தெய்வங்கள், நமக்கும் கோவிலில் காட்சி கொடுக்கிறார்கள்.

நமக்காக தெய்வங்களை வரவழைத்து, நாம் கேட்கும் பிரார்த்தனையை கோவிலில் உள்ள அந்த தெய்வங்கள் நமக்கும் அருள பிரார்த்தனை செய்த அந்த மகாத்மாக்கள் நம்மை சுற்றி அவதரித்தார்கள்.

 

அந்த மகாத்மாக்களுக்கும், சித்தர்களுக்கும், யோகிகளுக்கும், ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும், பரமாத்மாவுக்கு எப்படி நன்றி சொல்வது? 

ஹிந்துக்கள் கையை தூக்கி, நான்கு புறமும் சுற்றி, மேலும் கீழும் நமஸ்காரம் செய்வது இந்த காரணம் தான்.


இந்த அனுபவத்தில் ஹிந்துக்கள் திசைகளை நமஸ்கரிக்கும் போது, அனைவரையும் தெய்வமாக பார்க்கும், அனைத்தையும் தெய்வமாக பார்க்கும் அனுபவம் ஏற்படும். 

நம்மை சுற்றி இருக்கும் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களையும், அவதரித்த மகான்களையும், நமஸ்கரித்த புண்ணியம் கிடைக்கும்.

ஸந்த்யாவந்தனத்தில், இந்த பிரார்த்தனை உள்ளது.

இந்த அனுபவத்தில், நாம் நான்கு திசையை நமஸ்கரிக்கும் போது தான், எத்தனை அற்புதமான பிரார்த்தனை! எத்தனை அற்புதமான ஸந்த்யாவந்தனம்!  என்று புரியும். 

இந்த பிரார்த்தனை செய்ய மனிதனாக பிறந்தவனுக்கு கசக்குமா? 


"ப்ராச்யை  திசே நம:" (east)

"தக்ஷிணாயை திசே நம:" (south)

"ப்ரதீக்ஷ்யை திசே நம:" (west)

"உதீக்ஷ்யை திசே நம:" (north)

ஊர்த்வாய நம: (above) 

அதராய நம: (below) 

அந்தரீக்ஷாய நம: (straight) 

பூம்யை நம: (earth) 

ப்ரஹ்மணெ நம: (towards your heart)

விஷ்ணவே நம: (north - where ksheerapthi resides above 14 worlds)

ம்ருத்யுவே நம:  (south - where yama resides south direction of earth (bhuva lok))


சந்தியா வந்தனம் அர்த்தம் தெரிந்து சொல்ல:

காலை 

மதியம் 

மாலை 


Sandhyavandanam with English meaning:

Morning

Afternoon

Evening