Followers

Search Here...

Showing posts with label மனு ஸ்ம்ருதி. Show all posts
Showing posts with label மனு ஸ்ம்ருதி. Show all posts

Thursday 25 May 2023

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?.. அறிவோம்..

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?..  அறிவோம்..

अध्यापनम् अध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् ॥ 
- Manu Smriti (Rule Book)
  1. வேதத்தை கற்றுக்கொடுத்தல்,
  2. வேதத்தை ஓதுதல்
  3. ஸமிதாதானம் ஆரம்பித்து யாகங்கள் செய்தல்
  4. யாகம் செய்வித்தல்
  5. தானம் கொடுத்தல்
  6. தானம் வாங்குதல்
இந்த 6ம் பிராம்மண வர்ணத்தில் இருப்பவனின் கடமையாகும்.
(இன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து க்ஷத்ரியர்களை (police) தனக்கு கீழ் வைத்து மக்களை வழிநடத்துபவர்கள் - முதலமைச்சர், மந்திரிகள். இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

प्रजानां रक्षणं दानमिज्या अध्ययनमेव च ।
विषयेष्वप्रसक्तिश्च क्षत्रियस्य समासतः ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. மக்களை காப்பாற்றுதல்,  
  2. தானம் அளித்தல்
  3. யாகம் செய்தல்,
  4. வேதத்தை ஓதுதல்
  5. விஷய சுகங்களில் மூழ்காமல் இருத்தல்.
இந்த 5ம் க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்து ப்ராம்மண வர்ணத்தில்  (MLA/CM) சொல்படி மக்களை வழிநடத்துபவர்கள் - POLICE. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)
3
पशूनां रक्षणं दानमिज्याऽध्ययनमेव च ।
वणिक्पथं कुसीदं च वैश्यस्य कृषिमेव च ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. பசுக்களை காப்பாற்றுதல்
  2. யாகங்கள் செய்தல்
  3. வேதத்தை ஓதுதல்
  4. வாணிபம் செய்தல்
  5. வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையை நடத்துதல்
  6. விவசாயம் செய்தல்
இந்த 6ம் வைஸ்ய  வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று வைசிய வர்ணத்தில் இருந்து வாழ்க்கை வழிநடத்துபவர்கள் - EMPLOYER/FARMER. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

"வேதம் ஓதுதல்" இந்த மூன்று வர்ணத்தில் இருப்பவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான கடமைகளில் ஒன்று.

வேதத்தில், பிரம்மத்தை பற்றிய ஞான விஷயங்கள் மட்டுமின்றி, தர்ம (சட்டம்) சொல்லப்பட்டு இருக்கிறது. 

ஆட்சி முறைகள், தனுர் வேதம், விவசாயம் என்று அனைத்தும் இருக்கிறது. 

அவரவர்களுக்கு தேவையான படிப்பை கற்று, அதை தினமும் மேலும் மேலும் படித்து மெருகேற்றவே "வேதம் ஓதுதல்" தினசரி கடமையாக சொல்லப்பட்டு இருக்கிறது.

சிற்ப கலையின் அற்புதத்தை இன்றும் கோவில்களில் நாம் பார்க்கும் போது, வைசிய வர்ணத்தில் இருந்த சிற்பிகள் எத்தனை வேத அறிவோடு இருந்தார்கள் என்று தெரிகிறது.
4.
एकमेव तु शूद्रस्य प्रभुः कर्म समादिशत् ।
एतेषामेव वर्णानां शुश्रूषामनसूयया ॥ 
- Manu Smriti (Rule Book)

மற்ற வர்ணத்தில் இருப்பவர்களுக்கு சொல்லப்பட்ட எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல், சுகமாக சூத்திரர்கள் (EMPLOYEE) வாழ அனுமதிக்கப்படுகின்றனர். 

மற்ற வர்ணத்தில் இருப்பவர்கள் (Police, MP/MLA/Employer) கொடுக்கும் வேலையை, வேலை கொடுப்பவனை கண்டு பொறாமை இல்லாமல் இருப்பது ஒன்றே, இவர்களின் ஒரே கடமையாக இருக்கிறது.

தர்மத்தில் இருப்பவனின் லக்ஷணம் என்ன? How do we identify a person as "Dharmic"?

தர்மத்தில் இருப்பவனின் லக்ஷணம் என்ன? How do we identify a person as "Dharmic"?


वेदः स्मृतिः सदाचारः स्वस्य च प्रियमात्मनः ।

एतत् चतुर्विधं प्राहुः साक्षाद् धर्मस्य लक्षणम् ॥

- Manu smriti (மனு ஸ்மிருதி)

1. வேதத்தை நன்கு அறிந்தும்

2. தர்ம சாஸ்திரங்களை (ஸ்மிருதிகள்) அறிந்தும்

3. ஆசாரத்தோடு வாழ்ந்து கொண்டும், 

4. (சுக துக்கம் பாதிக்காமல்) எப்பொழுதும் பிரேமிகனாக இருந்து கொண்டும்,

யார் இருக்கிறாரோ, அவரையே "தர்மத்தின் சொரூபம்" என்று அறியலாம். 

Depth understanding of Veda (Shruti)

Depth understanding of Dharma Sastra / Upanished (smriti)

Vedic guided principled life

Staying always blissed (happy)

One who possess all 4 qualities can be identified as "Dharmic Person"


Saturday 20 May 2023

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்? - அறிவோம் மனு ஸ்ம்ருதி

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்?  

பூ: புவ: ஸுவ: மஹ: ஜன: தப: சத்ய: 

பூ: என்ற நமது பூலோகத்திற்கு மேல் புவர் (நக்ஷத்ரம்) லோகங்களுக்கு மேல், தேவர்கள் ஸுவ என்ற சொர்க்க லோகத்தில் வசிக்கின்றனர்.

அதற்கும் மேல் மஹ, ஜன, தப லோகங்களுக்கு மேல் ப்ரம்ம தேவன் சத்ய லோகத்தில் வசிக்கிறார்.


இப்பொழுது சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்ம தேவன் 50 வயது முடிந்து, 51வது வயதின் முதல் நாள் பகலை கழித்து கொண்டு இருக்கிறார்.


ப்ரம்மா, தன் ஒவ்வொரு நாளும் 71 சதுர் யுகங்களை ஆளும் 14 மனுக்களை பார்க்கிறார் . 

அவருடைய இன்றைய பொழுதில், 27 சதுர் யுகங்கள் முடிந்து விட்டது.

இப்பொழுது இவர் 28வது சதுர் யுகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.

இந்த சதுர் யுகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 

4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது  மனிதர்களுக்கு  5000 பூலோக வருடங்கள் கலியுகத்தில் முடிந்து விட்டது.

पित्र्ये रात्र्यहनी मासः प्रविभागस्तु पक्षयोः ।

कर्मचेष्टास्वहः कृष्णः शुक्लः स्वप्नाय शर्वरी ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

பித்ருக்கள் வாழும் உலகத்தில் ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு மாத காலமாகும். 

இந்த 1 மாதத்தில், 

15 நாட்கள் கொண்ட தேய்பிறை கால சமயத்தில் (அமாவாசை வரை), பித்ருக்கள் கர்மானுஷ்டங்கள் செய்கின்றனர். இது அவர்களுக்கு பகல் பொழுது.

அடுத்த 15 நாட்கள் கொண்ட வளர்பிறை கால சமயத்தில் (பௌர்ணமி வரை), இரவு பொழுதாக இருப்பதால், உறங்குகின்றனர்.


ஒவ்வொரு மனிதனும், தன் பெற்றோரை நினைத்து கொண்டு, பித்ருக்கள் உறங்க போகும் முன், தன் கையால் எள், ஜலம் கொடுத்து தன் பெற்றோரை நினைத்து கொண்டு தர்ப்பணம் (திருப்தி) செய்கிறான்.

दैवे रात्र्यहनी वर्षं प्रविभाग: तयोः पुनः ।

अह: तत्रोदगयनं रात्रिः स्याद् दक्षिणायनम् ॥ 

- மனு ஸ்ம்ருதி (Manu Smriti)

(மனிதர்கள் வாழும்) பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, (சொர்க்க லோகத்தில் உள்ள) தேவர்களுக்கு பகலும், இரவும் சேர்ந்த ஒரு நாள் மட்டுமே.


தேவ லோகத்தில்:

  • தை (6-8AM), மாசி (8-10AM), பங்குனி (10AM-12Noon), 
  • சித்திரை (12Noon -2PM), வைகாசி (2PM -4PM), ஆனி (4PM -6PM)
என்ற 6 மாதங்கள் தேவலோகத்தில் ஒரு பகலாக  உள்ளது. இதற்கு உத்தராயணம் என்று பெயர்.

  • ஆடி (6PM -8PM), ஆவணி (8PM -10PM), புரட்டாசி (10PM -12AM), 
  • ஐப்பசி (12AM -2AM), கார்த்திகை (2AM -4AM), மார்கழி (4AM -6AM)
என்ற மற்றொரு 6 மாதங்கள், தேவ லோகத்தில் ஒரு இரவாக உள்ளது. இதற்கு தக்ஷிணாயணம் என்று பெயர்.

மார்கழி மாத காலத்தில் 18 நாள் மஹாபாரத யுத்தம் நடந்தது. 

யுத்தத்தில் 10வது நாள் பீஷ்மர் வீழ்ந்தார். 

உத்தராயணம் வரும் வரை உயிரை விட்டு விடாமல், யோகத்தில் இருந்து, தை மாதம் வந்ததும் (உத்தராயண காலம்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "1000 நாமங்களால்" ஸ்துதி செய்து, அவர் முன்பாக தேகத்தை துறந்து மேலுலகம் சென்றார்.
ब्राह्मस्य तु क्षपाहस्य यत् प्रमाणं समासतः ।
एकैकशो युगानां तु क्रमशस्तन् निबोधत ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
(சத்ய லோகத்தில் இருக்கும்) பிரம்மாவுடைய பகல், இரவு கால கணக்கை, யுக அளவை சொல்கிறேன். கேளுங்கள்.

चत्वार्याहुः सहस्राणि वर्षाणां तत् कृतं युगम् ।
तस्य तावत् शती सन्ध्या सन्ध्यांशश्च तथाविधः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
4000 தேவ வருடங்கள் மேலும் 400 தேவ வருடங்கள் காலை, 400 தேவ வருடங்கள் மாலை சந்தியா காலங்களாக, மொத்தம் 4800 தேவ வருடங்கள் ஒரு க்ருத-யுகம் காலம்
इतरेषु ससन्ध्येषु ससन्ध्यांशेषु च त्रिषु ।
एकापायेन वर्तन्ते सहस्राणि शतानि च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
இதில் 1000 வருடங்கள் குறைத்து,  100 வருடங்கள் ஒவ்வொரு சந்தியிலும் படிப்படியாக குறைய, மற்ற மூன்று யுகங்கள் காலத்தை அறியலாம். அதாவது,
  • 3600 தேவ வருடங்கள் ஒரு த்ரேதா-யுகம் காலம் = பூமியில் 3*4,32,000 வருடம்
  • 2400 தேவ வருடங்கள் ஒரு துவாபர-யுகம் காலம் = பூமியில் 2*4,32,000 வருடம்
  • 1200 தேவ வருடங்கள் ஒரு கலி-யுகம் காலம் = பூமியில் 4,32,000 வருடம் 

  • பூமியில் 360 நாட்கள் = பூமியில் வருடம் = தேவலோகத்தில் தேவ நாள்
  • பூமியில் 360 வருடம் = தேவலோகத்தில் 360 தேவநாள் = தேவலோகத்தில் தேவ வருடம்
  • பூமியில் 36,000 வருடம் = தேவலோகத்தில் 36,000 தேவ நாள் தேவலோகத்தில் 100 தேவ வருடம் (ஒரு இந்திரனின் ஆயுள்)
  • பூலோகத்தில் ஒரு கலி யுகம் = பூமியில் 4,32,000 வருடம் = தேவலோகத்தில் 4,32,000 தேவ நாள் = தேவலோகத்தில் 1200 தேவ வருடம் 12 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = பூமியில் 43,20,000 வருடம் = தேவலோகத்தில் 43,20,000 தேவ நாள் = தேவலோகத்தில் 12,000 தேவ வருடம் = தேவ லோகத்தில் 1 தேவ யுகம்  = 120 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • 71 * பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்)
यदेतत् परि-सङ्ख्यातमादावेव चतुर्युगम् ।
एतद् द्वादश साहस्रं देवानां युगम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)

இந்த 4 யுகங்கள் சேர்ந்தால், மொத்தம் 12000 (4800,3600,2400,1200) தேவ வருடங்கள் ஆகிறது.  (அதாவது 120 இந்திரர்கள் ஒரு சதுர் யுகத்தில் பதவிக்கு வருகின்றனர்)

दैविकानां युगानां तु सहस्रं परि-सङ्ख्यया ।
ब्राह्मम एकम् अहर्ज्ञेयं तावतीं रात्रिम् एव च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
1000 முறை இப்படிப்பட்ட 12000 தேவ வருடங்கள் முடியும் போது (1,20,00,000 Deva Yug), அது சத்ய லோகத்தில் பிரம்மாவுக்கு ஒரு பகலாக இருக்கிறது. அதே கால அளவுக்கு பிரம்மாவுக்கு ஒரு இரவும் இருக்கிறது.

तद् वै युग सहस्रान्तं ब्राह्मं पुण्यम् अहर्विदुः ।
रात्रिं च तावतीम् एव ते अहोरात्र विदो जनाः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் இந்த பகல் பொழுது "புண்ய காலம்" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதும் "புண்ய இரவு" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதிலும் அழியாமல் இருப்பவர்கள் "அஹோ ராத்திரிகள்" என்று செல்லப்படுகிறார்கள்.

तस्य सो अहर्निशस्यान्ते प्रसुप्तः प्रतिबुध्यते ।
प्रतिबुद्ध: च सृजति मनः सद् असद् आत्मकम् ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மா தன்னுடைய இரவு காலத்தில் தூங்குவார். முடியும் தருவாயில் எழுந்திருப்பார். எழுந்த பிறகு, "ஸத் (soul) அஸத்தில் (nature) பிரவேசித்தபடியான  ரூபமான படைப்பை" மீண்டும் தொடங்குகிறார்.

मनः सृष्टिं विकुरुते चोद्यमानं सिसृक्षया ।
आकाशं जायते तस्मात् तस्य शब्दं गुणं विदुः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் மனம், படைப்பை செய்ய ஏவப்பட்டு, ஆகாயத்தை படைத்தார். ஆகாயத்தில் "சப்தம்" (ஒலி) குணமாக அமைத்தார்.

आकाशात् तु विकुर्वाणात् सर्व-गन्धवहः शुचिः ।
बलवान् जायते वायुः स वै स्पर्शगुणो मतः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஆகாயத்திலிருந்து வாசனைகளை கடத்தும், மிகவும் சுத்தமான, மஹா பலம் பொருந்திய வாயுவை (காற்று) படைத்தார். வாயுவில் "ஸ்பரிசம்" (தொடுதல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

वायो: अपि विकुर्वाणाद् विरोचिष्णु तमोनुदम् ।
ज्योति: उत्पद्यते भास्वत् तद् रूप गुणम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
வாயுவிலிருந்து பிரகாசத்தை ஏற்படுத்தும், இருட்டை போக்கடிக்கும் ஜோதியை (அக்னி)  படைத்தார். ஜோதியில் "உருவம்" (பார்த்தல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

ज्योतिषश्च विकुर्वाणाद् आपो रस गुणाः स्मृताः ।
अद्भ्यो गन्धगुणा भूमि: इत्येषा सृष्टि: आदितः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஜோதியிலிருந்து (அக்னி) தண்ணீரை படைத்தார். தண்ணீரில் "ரசத்தை" (சுவை) கூடுதல் குணமாக அமைத்தார்.

यद् प्राग् द्वादश साहस्रम् उदितं दैविकं युगम् ।
तदेक सप्ततिगुणं मन्वन्तरम् इह उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
12,000 தேவ வருடங்கள் "ஒரு சதுர் யுகம்" என்று முன்பே சொல்லப்பட்டது. தேவ லோகத்தை பொறுத்தவரை "12,000 தேவ வருடங்கள், ஒரு தேவ யுகம்" என்று சொல்லப்படுகிறது.
71 தேவ யுகங்கள் (71 சதுர் யுகம் சேர்த்து), ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்) என்று சொல்லப்படுகிறது.

मन्वन्तराण्य सङ्ख्यानि सर्गः संहार एव च ।
क्रीडन् इव एतत् कुरुते परमेष्ठी पुनः पुनः ॥ 
- மனு ஸ்ம்ருதி (rule book)
எப்படி படைப்பும், சம்ஹாரமும் எண்ண முடியாததோ, அது போல, மன்வந்திரங்களும் எத்தனை முடிந்தது? எத்தனை நடக்க போகிறது? என்று எண்ண முடியாதபடி விளையாட்டாக ( லீலையாக) மீண்டும் மீண்டும் படைப்பு தொழிலை செய்து கொண்டே இருக்கிறார்


Monday 19 September 2022

சூத்திரன் என்றால் "விபச்சாரி மகன்" என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறதா? எந்த சமஸ்க்ரித வார்த்தையை இப்படி உருட்டுகிறார்கள் என்று பார்ப்போமே!

சூத்திரன் என்றால் "விபச்சாரி மகன்" என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறதா? 

எந்த சமஸ்க்ரித வார்த்தையை இப்படி உருட்டுகிறார்கள் என்று பார்ப்போமே!

ध्वज-आहृतो भक्त-दासो

गृहजः क्रीतदत् त्रिमौ  ।

पैत्रिको दण्डदासश्च

सप्तैते दासयोनयः ॥

- manu-smruti

த்வஜ ஆஹ்ருதா பக்த-தாஸ

க்ருஹஜ:  கீர்ததத் த்ரிமௌ |

பைத்ரிகோ தண்ட-தாஸ: ச 

ஸப்தைதே தாஸயோநய: ||

- மனு ஸ்ம்ருதி


அர்த்தம் :

1. போரில் கைது செய்யப்பட்டவன் தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (த்வஜ ஆஹ்ருதா).


2. அன்பினால் (பக்தியால்) கைங்கர்யம் செய்ய வருபவன் தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (பக்த தாஸ).


3. வீட்டில் வேலை செய்பவனின் பிள்ளை, தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (க்ருஹஜ).

(சமஸ்க்ரித "க்ருஹஜ" என்ற சொல்லை தவறான அர்த்தம் புரிந்து கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை காட்டி, சூத்திரனை "விபச்சாரியின் மகன்" என்று காட்டுகிறார்கள் இப்படி காட்டி, வேலைக்கு போகும் மக்களை (employee / சூத்திர) "விபச்சாரி" என்று சொல்லி அவமானப்படுத்த நினைக்கின்றனர்.  "க்ருஹ" என்றால் வீடு என்று அர்த்தம். 

எப்படி வீடு (க்ருஹ), விபச்சாரி என்று அர்த்தம் செய்ய முடியும்? 

ஹஸ்தினாபுர அரண்மனையில் வேலை பார்த்தாள் ஒருவள். அவளுக்கு பிறந்தார் விதுரன்

இவர் என்ன விபச்சாரியின் மகனா? வேலைக்காரியின் மகனை விபச்சாரி மகன் என்று சொல்லி, ஹிந்துகளாக வேலைக்கு செல்பவர்களை கேவலப்படுத்துகின்றனர்.

விபச்சாரியின் மகனை அந்த காலத்தில் மதிக்கவே மாட்டாராகள். 

தன் அரண்மனையில் வேலை பார்த்த இவளின் பிள்ளைக்கு முதல் அமைச்சராக (chief minister) பணி கொடுத்து (employee) பீஷ்மர் த்ருதராஷ்டிரனுக்கு துணையாக இருக்க வைத்தார்.  வேலைக்காரியின் மகன் என்று சொன்னதை, விபச்சாரியின் மகன் என்று சொல்லி ஹிந்துக்களை கீழ்த்தரமாக பேசியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்


4. விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (கீர்ததத்).


5. பிறரால் வேலை செய்ய நியமிக்கப்பட்டவன், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (த்ரிமௌ).


6. பரம்பரையாக பணி செய்பவன், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (பைத்ரிக:) .


7. அபராதத்தை கட்ட முடியாமல், வேலை செய்து சரி கட்ட நினைப்பவன், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (தண்ட தாஸ).

Sunday 18 September 2022

பெண் குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? "மனு-ஸ்ம்ருதி" என்ன சொல்கிறது?

பெண் குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? மனு தன்னுடைய "மனு-ஸ்ம்ருதி"யில் நமக்கு வழி காட்டுகிறார். 

स्त्रीणां सुखौद्यम् अक्रूरं विस्पष्टार्थं मनोहरम् ।

मङ्गल्यं दीर्घवर्णान्तम् आशीर्वादाभिधानवत् ॥

- மனு ஸ்ம்ருதி

பெண் குழந்தைக்கு, சுகமாக அழைக்கும் படியாகவும், கெட்ட அர்த்தம் இல்லாதபடியாகவும், அர்த்தமில்லாத பெயராக இல்லாமலும், மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும் படியாகவும், மங்களமான சொல்லாகவும், பெயரின் கடைசி அக்ஷரம் நீட்டி தீர்க்கமாக முடியும் படியாகவும் (ரமா, கீதா, உமா, தேவீ, சீதா, ராதா, ருக்மிணீ), ஆசிகள் வழங்க கூடிய பெயராகவும் இருக்க வேண்டும். 


"மனு ஸ்ம்ருதியை கொளுத்துவோம்! அதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்று மறுப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. 

தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதற்கு மாறாக "சொறி, சிரங்கு..." என்று பெயர் வைத்து சனாதனத்தை வேர் அறுத்து, தங்கள் பெருமையை காட்டலாம்.

மனு ஸ்ம்ருதி.... "இரு பிறப்பாளன்" (த்விஜன்) என்றால் என்ன? பிராம்மணன், க்ஷத்ரியன், வைஸ்யன் ஆகிய ,மூன்று வர்ணத்தாரும் "இரு பிறப்பாளன்" (த்விஜன்) என்று அழைக்கப்படுகிறார்கள். ஏன் சூத்திரனை இப்படி அழைக்கவில்லை?

பிறப்பால் அனைவருமே சூத்திரன் (In Today's world, All Employees are in Sudra Varna) தான். 

நாம் பிராம்மண வர்ணத்தையோ, க்ஷத்ரிய வர்ணத்தையோ, வைஸ்ய வர்ணத்தையோ அடையும் போது, "அந்த வர்ணத்தின் தர்மங்களை கடைபிடிக்க வேண்டும்" என்பதால், மற்ற மூன்று வர்ணத்தில் இருப்பவர்களை "இரு பிறப்பாளர்கள்" என்று அழைக்கிறோம்.


புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால்,

ஒருவன் ஆபீசுக்கு வேலைக்கு சென்று, சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தான். (சூத்திர வர்ணம்)

ஒருநாள், அவன் மந்திரியாகி விட்டான் (பிராம்மண வர்ணம்). 

மந்திரி ஆன பிறகு, அவனுக்கு கடமைகள் மாறுகின்றன.  

மந்திரிக்கு தேவையான தகுதியையும், அதன் கோட்பாடுகளையும், வாழ்க்கை முறையையும் கற்று, அதன் படி வாழ ஆரம்பிக்கிறான்.


சூத்திர வர்ணத்தில் இருந்து பிராம்மண வர்ணத்துக்கு வந்து அதன் படி வாழ்வதால், அப்போது அவனை "இரு பிறப்பாளன்" (த்விஜன்) என்று வேதம் அழைக்கிறது.


कृष्णसारस्तु चरति मृगो यत्र स्वभावतः ।

स ज्ञेयो यज्ञियो देशो म्लेच्छदेशस्त्वतः परः ॥   

- மனு ஸ்ம்ருதி

கருப்பு கோடுகள் கொண்ட மான்கள் பிறந்து சஞ்சரிக்கும் பிரதேசமே "யாகங்கள்" செய்வதற்கு ஏற்ற இடம். சாதுவான இந்த மான்கள் சஞ்சரிக்காத இடங்கள் மிலேச்ச தேசமாக கருத வேண்டும். மிலேச்ச இடங்கள் யாகம் செய்ய தகுதி அற்றது.


एतान्द्विजातयो देशान् संश्रयेरन् प्रयत्नतः ।

शूद्रस्तु यस्मिन् कस्मिन् वा निवसेद् वृत्तिकर्शितः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருக்கும் (In Today's world, MP&MLAs are in Brahmin Varna), க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கும் (In Today's world, Defence people are in kshatriya Varna), வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் (In Today's world, Employers are in Vaisya Varna) இரு பிறப்பாளர்கள், முயற்சி செய்து யாகம் செய்வதற்கு ஏற்ற மான்கள் சஞ்சரிக்கும் இந்த பிரதேசங்களில் வாழ வேண்டும். சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (In Today's world, Employees are in Sudra Varna) வேலையில் இருப்பதால், தொழில் நிமித்தமாக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.