Followers

Search Here...

Showing posts with label ஸ்மிருதி. Show all posts
Showing posts with label ஸ்மிருதி. Show all posts

Monday 21 August 2023

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 4

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 4

चतुर्थमायुषो भागमुषित्वाऽद्यं गुरौ द्विजाः ।

द्वितीयमायुषो भागं कृतदारो गृहे वसेत् ॥ 

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள் (க்ஷத்ரிய army police, பிராம்மண MLA/MP, வைசிய businessmen) தன் வாழ்நாளின் 4 பாகத்தில், முதல் பாதியை குருகுலத்தில் இருந்து படித்து கொண்டும், 2வது பாகத்தில் மணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையையும் நடத்த வேண்டும்.


अद्रोहेणैव भूतानामल्पद्रोहेण वा पुनः ।

या वृत्तिस्तां समास्थाय विप्रो जीवेदनापदि ॥

இதில் வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, பிழைப்புக்கு ஆபத்து இல்லாத சூழ்நிலையில், யாருக்கும் எந்த வித துரோகமும் இல்லாதபடியான வாழ்க்கையை அமைத்து வாழவேண்டும். இயலாத பட்சத்தில், மற்றவர்களுக்கு குறைந்த அளவில் பாதிப்பை கொடுக்கும் தொழிலை மட்டும் செய்து வாழலாம்.

यात्रामात्र प्रसिद्ध्यर्थं स्वैः कर्मभि: अगर्हितैः ।

अक्लेशेन शरीरस्य कुर्वीत धनसञ्चयम् ॥

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, பழிக்கு ஆளாகாதபடி தொழில் செய்யலாம். சுகத்தில் பற்று இல்லாமல், உடலை வருத்தி கொள்ளாமல் செல்வம் சேர்க்கலாம்.


ऋत अमृताभ्यां जीवेत् तु मृतेन प्रमृतेन वा ।

सत्यान् ऋताभ्याम् अपि वा न श्ववृत्त्या कदा चन ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, இந்த மரண பூமியில், வாழும் வரை,  எண்ணத்தில் உண்மையாகவும் (ருதம்), கிடைத்ததை கொண்டு திருப்தியுடன் (அம்ருதம்) வாழ வேண்டும். பேச்சும் (சத்ய) எண்ணமும் (ருதம்) ஒரே போல இருக்க வேண்டும். எந்த ஒரு நிலையிலும், தனது சுய லாபத்துக்காக (ஸ்வவ்ருத்யா) வாழ கூடாது.


ऋतम् उञ्छशिलं ज्ञेयम् अमृतं स्याद् अयाचितम् ।

मृतं तु याचितं भैक्षं प्रमृतं कर्षणं स्मृतम् ॥

மனதில் உண்மை எண்ணங்களே எழ வேண்டும் (ருதம்) என்று நினைப்பவன், சிந்தி கிடக்கும் தானியங்களை மட்டும் எடுத்து வாழ வேண்டும். தெய்வ சிந்தனையுடனேயே (அம்ருதம்) வாழ விரும்புபவன், தானாக விழுந்து கிடக்கும் காய் கனிகளை மட்டுமே எடுத்து கொண்டு ஜீவிப்பது  அனுகூலம் செய்யும். உடலை காப்பாற்ற பிஷை கேட்டு வாழ்வது, மரணத்திற்கு ஒப்பாகும். அதாவது சம்சாரத்தில் தள்ளும். தானே பயிர் செய்து அதை உண்பது அதைவிட பெரிய மரணம். அதாவது, சம்சார சுழலில் தள்ளும்.


सत्यानृतं तु वाणिज्यं तेन चैवापि जीव्यते ।

सेवा श्ववृत्तिराख्याता तस्मात् तां परिवर्जयेत् ॥ 

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது, உள்ளும் (ருதம்) புறமும் (சத்யம்) உண்மையாக இருந்து வியாபாரம் செய்து ஜீவிக்கலாம். எந்த நிலையிலும், தன் வசதிக்காக (ஸ்வ வ்ருத்தி) என்று எந்த ஒரு காரியத்தையும் விப்ரன் செய்து கொள்ள கூடாது.

कुसूलधान्यको वा स्यात् कुम्भीधान्यक एव वा ।

त्र्यहेहिको वाऽपि भवेद् अश्वस्तनिक एव वा ॥

மூன்று வருஷத்திற்கோ, அதற்கு மேலோ தேவையான  தானியங்களை சேர்த்து வைத்திருக்கும் விப்ரன் என்ற வேதியனுக்கு "குஸூல-தான்யகன்" என்று பெயர்.

ஒரு வருஷத்திற்கு தேவையான தானியங்களை சேர்த்து வைத்திருக்கும் விப்ரன் என்ற வேதியனுக்கு "கும்பீ-தான்யகன்" என்று பெயர்.

3 நாட்களுக்கு தேவையான தானியங்களை சேர்த்து வைத்திருக்கும் விப்ரன் என்ற வேதியனுக்கு "த்ரய-ஹேஹிகன்" என்று பெயர்.

மறு நாள் வரை தேவையான தானியங்களை சேர்த்து வைத்திருக்கும் விப்ரன் என்ற வேதியனுக்கு  "அஷ்வ தனிகன்" என்று பெயர். 


चतुर्णामपि चैतेषां द्विजानां गृहमेधिनाम् ।

ज्यायान् परः परो ज्ञेयो धर्मतो लोकजित्तमः ॥

இந்த நால்வரில், முதல் வகையை சேர்ந்தவரை விட இரண்டாமவர் சிறந்தவர். அது போல முறையே அடுத்தடுத்தவர் சிறந்தவர்கள். கடைசியில் இருப்பவர் அடுத்த நாள் சேர்த்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதால், பரமாத்மாவை அதிகம் தியானிப்பார்கள்


षट्कर्मैको भवत्येषां त्रिभिरन्यः प्रवर्तते ।

द्वाभ्यामेकश्चतुर्थस्तु ब्रह्मसत्त्रेण जीवति ॥

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு,

3 வருடம் மேல் தேவையான தானியம் சேர்க்க ஆசைபடுபவன் 6 வழிகளில் பொருள் சேர்க்கலாம் (சிந்தி கிடக்கும் தானியங்கள், விழுந்து கிடக்கும் தானியங்கள், பிக்ஷை, உழைத்து சம்பாதித்து, விவசாயம், வியாபாரம்)

அதற்கு அடுத்து 1 வருடத்திற்கு தேவையான தானியம் சேர்க்க ஆசைபடுபவன் 3 வழிகளில் பொருள் சேர்க்கலாம் (யாகம் செய்தல், வேதம் சொல்லி கொடுத்தல், தானம் பெறுதல்)

அதற்கு அடுத்து 3 நாட்களுக்கு தேவையான தானியம் சேர்க்க ஆசைபடுபவன் 2 வழிகளில் பொருள் சேர்க்கலாம் (வேதத்தை அர்த்தத்தை சொல்லியும், யாகம் செய்தும்) 

அதற்கு அடுத்து 1 நாட்களுக்கு தேவையான தானியம் சேர்க்க ஆசைபடுபவன் 1 வழியில் பொருள் சேர்க்கலாம் (வேதம் சொல்லி கொடுத்து)


वर्तयंश्च शिलौञ्छाभ्यामग्निहोत्रपरायणः ।

इष्टीः पार्वायणान्तीयाः केवला निर्वपेत् सदा ॥

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, செல்வம் சேர்க்காமல் தானியங்கள் மட்டுமே சேர்த்து இப்படி வாழும் வேதியன் என்ற விப்ரன் (பிராம்மணன்) மணம் செய்து கொண்ட பிறகு, அக்னி ஹோத்திரம் மட்டும் செய்து கொண்டு, அமாவாசை பௌர்ணமி அன்று அதற்கான யாகங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும்.


सन्तोषं परमास्थाय सुखार्थी संयतो भवेत् ।

सन्तोषमूलं हि सुखं दुःखमूलं विपर्ययः ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, என்ன கிடைத்ததோ அதை கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். இதுவே சுகம். இதற்கு விபரீதமாக செய்தால், துக்கமே உண்டாகும்.


अतोऽन्यतमया वृत्त्या जीवंस्तु स्नातको द्विजः ।

स्वर्गायुष्ययशस्यानि व्रताणीमानि धारयेत् ॥

கல்யாணம் ஆகி, ஸமாவர்த்தனம் திருமணம் ஆன பிறகு, இரு பிறப்பாளன் என்ற த்விஜன் "ஸ்நாதகன்" என்று பெயர் பெறுகிறான். ஸ்நாதகன் இது வரை சொல்லப்பட்ட 4 விதமான வழிகளில் தனக்கு ஏற்ற தானியங்கள் பெற்று வாழ வேண்டும். நீண்ட ஆயுளோடும், புகழோடும், பரலோகம் அழைத்து கொண்டு விடும்படியான விரதங்களை செய்து கொண்டிருக்க வேண்டும்.


वेदोदितं स्वकं कर्म नित्यं कुर्यादतन्द्रितः ।

तद् हि कुर्वन् यथाशक्ति प्राप्नोति परमां गतिम् ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, வேதத்தால் தனக்கு விதிக்கப்பட்ட நித்ய கர்மாக்களை (சந்தியா வந்தனம் போன்றவை) சோம்பல் இன்றி செய்து கொண்டிருக்க வேண்டும். தன்னால் முடிந்த வரை செய்து கொண்டு வந்தால், நற்கதி கிடைக்கும்.


नैहेतार्थान् प्रसङ्गेन न विरुद्धेन कर्मणा ।

न विद्यमानेष्वर्थेषु नार्त्यामपि यतस्ततः ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணம் செய்து கொண்ட பிறகு, கேளிக்கை மூலமாகவோ, தவறான காரியங்கள் செய்தோ, சம்பாதிக்க கூடாது. செல்வம் இருக்கும் போது மேலும் சம்பாதிக்க கூடாது. அங்கும் இங்கும் அலைந்து கஷ்டகாலத்தில் கூட சம்பாதிக்க கூடாது


इन्द्रियार्थेषु सर्वेषु न प्रसज्येत कामतः ।

अतिप्रसक्तिं चैतेषां मनसा संनिवर्तयेत् ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்), எந்த புலனுடைய (கண், காது, மூக்கு, தோல், நாக்கு) ஆசைக்கும் விழுந்து விட கூடாது. மனதை கட்டுபடுத்தி வைத்து கொள்ள வேண்டும்.

सर्वान् परित्यजेद् अर्थान् स्वाध्यायस्य विरोधिनः ।

यथा तथा अध्यापयंस्तु सा ह्यस्य कृतकृत्यता ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்), வேதமே முக்கியம் என்று இருக்க வேண்டும். வேதத்திற்காக மற்ற அனைத்து காரியத்தையும் கூட விட்டு விடலாம். வேதம் ஓதுதலும், வேதத்தை கற்று கொடுத்தலுமே பிறவி பயனை அளிக்கும்.


वयसः कर्मणोऽर्थस्य श्रुतस्याभिजनस्य च ।

वेषवाग्बुद्धिसारूप्यमाचरन् विचरेदिह ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்), தன் வயதுக்கு ஏற்றபடி, வேலைக்கு ஏற்றபடி, செல்வத்துக்கு ஏற்றபடி, படிப்புக்கு ஏற்றபடி, உறவினர்களுக்கு ஏற்றபடி அறிவோடு செயல்பட வேண்டும். அதன் படி, சரியான உடை, பேச்சு, எண்ணத்தோடு உலகத்தில் வாழ வேண்டும்.


बुद्धि वृद्धि कराण्याशु धन्यानि च हितानि च ।

नित्यं शास्त्राण्यवेक्षेत निगमांश्चैव वैदिकान् ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்), புத்தியை வளர்க்ககூடிய,

தர்மபடி செல்வத்தை சம்பாதிக்க,

தனக்கு நன்மையை சொல்ல கூடிய,

வேத ஞானத்தை வழங்கக்கூடிய,

சாஸ்திர (ஸ்மிருதி) நூல்களை தினமும் படிக்க வேண்டும்.

20 ஸ்மிருதி நூல்கள் உள்ளன. மனு, ஆபஸ்தம்ப, அத்ரி, ஹாரிதர் போன்ற பல ரிஷிகள் ஸ்ம்ருதிகள் கொடுத்துள்ளனர். 

1. ஆபஸ்தம்ப ஸ்ம்ருதி, 

2. அத்ரி ஸ்ம்ருதி, 

3. விஷ்ணு ஸ்ம்ருதி, 

4. ஹாரிதர் ஸ்ம்ருதி, 

5. யாக்ஞவல்க்யர் ஸ்ம்ருதி, 

6. அங்கீரஸ ஸ்ம்ருதி, 

7. யம ஸ்ம்ருதி, 

8. ஸம்வர்த்த ஸ்ம்ருதி, 

9. காத்யாயன ஸ்ம்ருதி, 

10. ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதி, 

11. பராஸர ஸ்ம்ருதி, 

12. வ்யாஸ ஸ்ம்ருதி, 

13. ஸங்க ஸ்ம்ருதி, 

14. ஔசன ஸ்ம்ருதி, 

15. லிகித ஸ்ம்ருதி, 

16. கௌதம ஸ்ம்ருதி, 

17. தக்ஷ ஸ்ம்ருதி, 

18. ஸாதாதப ஸ்ம்ருதி, 

19. வஸிஷ்ட ஸ்ம்ருதி

20. மனு ஸ்ம்ருதி


यथा यथा हि पुरुषः शास्त्रं समधिगच्छति ।

तथा तथा विजानाति विज्ञानं चास्य रोचते ॥

எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் சாஸ்திர நூல்களை படிக்கிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவனுடைய புத்தி ஞானம் பிரகாசிக்கும்.


ऋषियज्ञं देवयज्ञं भूतयज्ञं च सर्वदा ।

नृयज्ञं पितृयज्ञं च यथाशक्ति न हापयेत् ॥

ரிஷி யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம் எப்பொழுதும் செய்ய வேண்டும். மனுஷ்ய யக்ஞம், பித்ரு  யக்ஞம் தன் சக்திக்கு உட்பட்டு செய்ய வேண்டும். ஆனால் செய்யாமல் விடவே கூடாது.


ரிஷி யக்ஞம் (வியாசரின் மஹாபாரதம், பாகவதம், புராணங்கள், ரிஷிகளின் ஸ்ம்ருதிகள், வால்மீகியின் ராமாயணம் படித்தல்)

தேவ யக்ஞம் (கோவிலுக்கு செல்லுதல், வீட்டில் பூஜை, அலங்காரம் செய்தல்)

பூத யக்ஞம் (காக்காய், நாய், பூனை, பறவைக்கு தண்ணீர், உணவு கொடுத்தல்)

மனுஷ்ய யக்ஞம் (வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு‌ உணவு கொடுத்தல்)

பித்ரு  யக்ஞம் (அமாவாசை தர்ப்பணம், திவசம் செய்தல்)


एतानेके महायज्ञान् यज्ञशास्त्र विदो जनाः ।

अनीहमानाः सततम् इन्द्रियेष्वेव जुह्वति ॥ 

மஹா யாகங்களே செய்து கொண்டு வாழும் யக்ஞ தீக்ஷிதர்களோ, தன் புலன்களையே அக்னிக்கு ஆஹுதி செய்து வேறு உலக பற்று இன்றி வாழ்கின்றனர்.


वाच्येके जुह्वति प्राणं प्राणे वाचं च सर्वदा ।

वाचि प्राणे च पश्यन्तो यज्ञ निर्वृत्तिम् अक्षयाम् ॥

இந்த யாக தீக்ஷிதர்கள், தன் வாக்கை வேதம் ஒதுவதற்காக அர்ப்பணித்து தன் ஆயுளையே சமர்ப்பிக்கின்றனர். ஆயுள் முழுவதும் வேத ஒதியே தன் வாக்கை செலவு செய்கின்றனர்.  இப்படி வாக்கையும்,ஆயுளையும் வேதத்துக்கும், யாகங்கள் செய்வதற்குமே கொடுத்த இவர்கள் அழியாத மோக்ஷத்தை அடைவார்கள்.

ज्ञानेनैवापरे विप्रा यजन्त्येतैर्मखैः सदा ।

ज्ञानमूलां क्रियाम् एषां पश्यन्तो ज्ञानचक्षुषा ॥ 

எங்கும் பரமாத்மாவை உணரும்  வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்), ஞான கண் கொண்டே அனைத்து காரியமும் செய்கிறான்.


अग्निहोत्रं च जुहुयादाद्यन्ते द्युनिशोः सदा ।

दर्शेन चार्धमासान्ते पौर्णमासेन चैव हि ॥

வேதியன் என்ற விப்ரன் (அந்தணன்) மணமான பிறகு, காலையும், மாலையும் அக்னி ஹோத்திர ஹோமம் செய்து கொண்டும், பௌர்ணமி, அமாவாசையில் யாகம் செய்து கொண்டும் இருக்க வேண்டும்.


सस्यान्ते नवसस्येष्ट्या तथर्त्वन्ते द्विजोऽध्वरैः ।

पशुना त्वयनस्यादौ समान्ते सौमिकैर्मखैः ॥

தானியங்களை அறுவடை செய்வதற்கு முன், இரு பிறப்பாளர்கள் (வைசியன், க்ஷத்ரியன், பிராம்மணன்), ஹோமங்கள் செய்ய வேண்டும். காலங்கள் மாறும் போதும், தக்ஷிணாயன, உத்தராயண ஆரம்பத்திலும், வருட ஆரம்பத்திலும் ஹோமங்கள் செய்ய வேண்டும்.


नानिष्ट्वा नवसस्येष्ट्या पशुना चाग्निमान् द्विजः ।

नवान्नमद्यात्मांसं वा दीर्घमायुर्जिजीविषुः ॥

நீண்ட ஆயுள் விரும்பும் இரு பிறப்பாளர்கள் (வைசியன், க்ஷத்ரியன், பிராம்மணன்), புது தானியங்கள் வாங்கிய பிறகு, ஹோமங்கள் செய்யாமல் சாப்பிட கூடாது. அதே போல, தக்ஷிணாயன, உத்தராயண ஆரம்பத்தில் ஹோமங்கள் செய்யாமல், மாமிச உணவு சாப்பிட கூடாது.


नवेनानर्चिता ह्यस्य पशुहव्येन चाग्नयः ।

प्राणानेवात्तुमिच्छन्ति नवान्नामिषगर्धिनः ॥

முதலில் அக்னிக்கு ஹோமம் செய்யாமல் தானியமோ, மாமிசமோ சாப்பிடும் இரு பிறப்பாளனை, அக்னி தேவன் விழுங்க விரும்புவான். 


आसनाशनशय्याभिरद्भिर्मूल फलेन वा ।

नास्य कश्चिद् वसेद् गेहे शक्तितो अनर्चितो अतिथिः ॥

நேரம் சொல்லாமல், அதிதியாக வந்தவருக்கு  அமர இருக்கையோ, உணவோ, படுக்கையோ அல்லது குறைந்த பட்சம் கிழங்கு, பழமோ கூட கொடுக்காதவன்  வீட்டில் தங்க கூடாது.  


पाषण्डिनो विकर्मस्थान् बैडालव्रतिकान् शठान् ।

हैतुकान् बकवृत्तींश्च वाङ्मात्रेणापि नार्चयेत् ॥

- மனு ஸ்மிருதி

வேதம் சொல்வதற்கு எதிரான காரியங்கள் செய்யும் பாஷண்டர்கள், வேதம் அனுமதிக்காத காரியங்களை செய்பவர்கள், பூனையை போன்ற திருட்டு குணம் கொண்டவர்கள், கொக்கு போன்று சமயம் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பவர்கள், வேதத்துக்கு எதிராக விவாதம் செய்பவர்கள், இவர்கள் நேரம் சொல்லாதபடி  அதிதியாக வந்தாலும், அவர்களை உபசரிக்க கூடாது. வாய் வார்த்தையால் கூட உபசரிக்க கூடாது.


वेदविद्याव्रत स्नातां श्रोत्रियान् गृहमेधिनः ।

पूजयेद् हव्यकव्येन विपरीतांश्च वर्जयेत् ॥

வேதத்தை முழுமையாக அத்யயணம் செய்து, விரதங்கள் செய்யாமல், ஸமாவர்த்தனம் செய்தவர்கள் "வித்யா ஸ்நாதகன்".

விரதத்தை முழுமையாக செய்து, வேதத்தை முழுமையாக அத்யயணம் செய்யாமல், ஸமாவர்த்தனம் செய்தவர்கள் "விரத ஸ்நாதகன்" என்றும்

இரண்டையும் முடித்தவர்கள், "வித்யா விரத ஸ்நாதகன்".

தேவ பூஜையோ, பித்ரு பூஜையோ செய்யும் போது இவர்களை கூப்பிட்டு பூஜிக்க வேண்டும்.


शक्तितोऽपचमानेभ्यो दातव्यं गृहमेधिना ।

संविभागश्च भूतेभ्यः कर्तव्यो अनुपरोधतः ॥

தன் குடும்பத்தை பாதிக்காத வண்ணம், சக்திக்கு ஏற்ப பிரம்மச்சாரிக்கும், சன்யாசிக்கும் உணவு அளிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு எல்லா உயிருக்கும் உணவு கொடுக்க வேண்டும்.


राजतो धनमन्विच्छेत् संसीदन् स्नातकः क्षुधा ।

याज्यान्तेवासिनोर्वाऽपि न त्वन्यत इति स्थितिः ॥

விப்ரன் என்ற அந்தணன், மணம் செய்து கொண்ட பிறகு, ஸமாவர்த்தனம் செய்து ஸ்நாதகன் ஆகிறான். ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதபடி கஷ்ட காலம் வந்தால், அரசனிடமோ, தான் வைதீக காரியங்கள் செய்து வைத்தவர்களிடமோ, தன் சிஷ்யர்களிடமோ தனக்கு தேவையானதை கேட்டு பெறலாம். மற்றவர்களிடம் கேட்க கூடாது.


न सीदेत् स्नातको विप्रः क्षुधा शक्तः कथं चन ।

न जीर्णमलवद्वासा भवेच्च विभवे सति ॥

- மனு ஸ்மிருதி

விப்ரன் என்ற அந்தணன், மணம் செய்து கொண்ட பிறகு, ஸமாவர்த்தனம் செய்து ஸ்நாதகன் ஆகிறான். இந்த ஸ்நாதகன் உணவு, செல்வம் இருக்கும் பட்சத்தில் வீம்புக்கு பசியோடு இருக்க கூடாது. அனாவசியமாக அழுக்கு ஆடையோ, கிழிந்த ஆடையோ உடுத்த கூடாது. 


कॢप्त केशन खश्मश्रुर्दान्तः शुक्लाम्बरः शुचिः ।

स्वाध्याये चैव युक्तः स्यान् नित्यम् आत्महितेषु च ॥

- மனு ஸ்மிருதி

விப்ரன் என்ற அந்தணன், மணம் செய்து கொண்ட பிறகு, கேசம், நகம், தாடி மீசையை அந்தந்த காலத்தில் எடுத்து, விரத காலங்களில் ஏற்படும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, வெள்ளை ஆடைகளையே உடுத்தி கொண்டு, வேதத்தை ஓதி கொண்டு ஆத்மாவுக்கு நன்மையான காரியங்களை செய்து கொண்டிருக்க வேண்டும்


वैणवीं धारयेद् यष्टिं सोदकं च कमण्डलुम् ।

यज्ञोपवीतं वेदं च शुभं रौक्मे च कुण्डले ॥

- மனு ஸ்மிருதி

விப்ரன் என்ற அந்தணன், மணம் செய்து கொண்ட பிறகு, மூங்கில் கோல், நீர் உள்ள கமண்டலம், பூணூல், தர்ப்பை புல், காதல் குண்டலம் அணிந்து இருக்க வேண்டும்.


नेक्षेतोद्यन्तम् आदित्यं न अस्तं यान्तं कदा चन ।

नोपसृष्टं न वारिस्थं न मध्यं नभसो गतम् ॥

- மனு ஸ்மிருதி

சூரியனை உதிக்கும் பொழுதும், மறையும் பொழுதும் நேர் எதிரே பார்க்க கூடாது. கிரகண சமயத்திலும் பார்க்க கூடாது. தண்ணீரில் சூரியனின் பிரதிபிம்பம் பார்க்க கூடாது. தலை உச்சியில் இருக்கும் போதும் நேரே பார்க்க கூடாது (முத்திரை மூலம் பார்க்கலாம்). 

न लङ्घयेद् वत्सतन्त्रीं न प्रधावेच्च वर्षति ।

न च उदके निरीक्षेत स्वरूपम् इति धारणा ॥

- மனு ஸ்மிருதி

கன்றை கட்டி இருக்கும் கயிறை தாண்ட கூடாது. மழையில் ஓட கூடாது. தண்ணீரில் தன் பிரதி பிம்பத்தை பார்க்க கூடாது.


मृदं गां दैवतं विप्रं घृतं मधु चतुष्पथम् ।

प्रदक्षिणानि कुर्वीत प्रज्ञातांश्च वनस्पतीन् ॥

- மனு ஸ்மிருதி

புற்று, பசு, தெய்வ விக்ரஹங்கள், விப்ரன் என்ற அந்தணன் (வேதியன்), நெய், தேன், நான்கு பாதை கூடும் இடத்தில் உள்ள பெரிய மரங்கள் போன்றவைகளை எதிர்கொண்டால் அவைகளுக்கு வலது புறமாக செல்ல வேண்டும்.


न उपगच्छेत् प्रमत्तो अपि स्त्रियमार्तव दर्शने ।

समान शयने चैव न शयीत तया सह ॥

- மனு ஸ்மிருதி

ஆசை கொண்டு பெண் ரஜஸ் வலையில் (period) இருக்கும் போது அருகில் செல்ல கூடாது. அவள் அருகில் படுக்க கூடாது.


रजसा अभिप्लुतां नारीं नरस्य ह्युपगच्छतः ।

प्रज्ञा तेजो बलं चक्षु: आयु: च एव प्रहीयते ॥

- மனு ஸ்மிருதி

பெண் ரஜஸ் வலையில் (period) இருக்கும் போது ஆசையினால் அருகில் செல்பவனின், புத்தி, வீர்யம், பொலிவு, பலம், கண் பார்வை, ஆயுள் அனைத்தும் குறையும்.


तां विवर्जयतस्तस्य रजसा समभिप्लुताम् ।

प्रज्ञा तेजो बलं चक्षुरायुश्चैव प्रवर्धते ॥

- மனு ஸ்மிருதி

பெண் ரஜஸ் வலையில் (period) இருக்கும் போது அருகில் செல்லாமல் இருப்பவன், புத்தி, வீர்யம், பொலிவு, பலம், கண் பார்வை, ஆயுள் அனைத்தும் வளர்சியடையும்.


नाश्नीयाद् भार्यया सार्धं नैनामीक्षेत चाश्नतीम् ।

क्षुवतीं जृम्भमाणां वा न चासीनां यथासुखम् ॥

- மனு ஸ்மிருதி

மனைவியோடு உணவு உண்ண கூடாது. அதே போல, அவள் சாப்பிடும் போது பார்க்க கூடாது. அவள் தும்மும் போதும், கொட்டாவி விடும் போதும், ஓய்வாக தன் இஷ்டத்துக்கு உட்கார்ந்து இருக்கும் போதும் பார்க்க கூடாது. 


नाञ्जयन्तीं स्वके नेत्रे न चाभ्यक्तामनावृताम् ।

न पश्येत् प्रसवन्तीं च तेजस्कामो द्विजोत्तमः ॥

- மனு ஸ்மிருதி

பொலிவோடு இருக்க விரும்பும் இரு பிறப்பாளர்கள் (வைசியன், க்ஷத்ரியன், பிராம்மணன்), பெண் தன் கண்ணுக்கு மை தீட்டி கொள்ளும் போதும், தலைக்கு எண்ணெய் தேய்த்து கொள்ளும் போதும், ஆடையால் ஒழுங்காக அணியாத போதும், பிரசவ சமயத்திலும் பார்க்க கூடாது.


नान्नमद्यादेकवासा न नग्नः स्नानमाचरेत् ।

न मूत्रं पथि कुर्वीत न भस्मनि न गोव्रजे ॥

ஒரே ஒரு ஆடை அணிந்து கொண்டு சாப்பிட கூடாது. ஆடையே இல்லாமல் குளிக்க கூடாது. ரோட்டிலோ, சாம்பலிலோ, பசு கொட்டிலிலோ மலஜலம் கழிக்க கூடாது.


न फालकृष्टे न जले न चित्यां न च पर्वते ।

न जीर्णदेवायतने न वल्मीके कदा चन ॥

- மனு ஸ்மிருதி

உழுத நிலத்தில், தண்ணீர், யாக சாலை, மலை, பழைய கோவில்கள், புற்று இவைகள் மேல், மலஜலம் கழிக்க கூடாது. 


न ससत्त्वेषु गर्तेषु न गच्छन्नपि न स्थितः ।

न नदीतीरमासाद्य न च पर्वतमस्तके ॥

சின்ன சின்ன ஜந்துக்கள் இருக்கும் பொந்துகளில், நடந்து கொண்டு, நின்று கொண்டு, நதிகளில், மலைகளில், மலஜலம் கழிக்க கூடாது.


वायु अग्नि विप्रमादित्यमपः पश्यंस्तथैव गाः ।

न कदा चन कुर्वीत विण्मूत्रस्य विसर्जनम् ॥

- மனு ஸ்மிருதி

காற்று தன்னை பார்த்து வீசும் படியாக, அக்னி, விப்ரன் என்ற அந்தணன், சூரியனை தன்னை முன் இருக்கும் படியாக இருக்கும் போது, மலஜலம் கழிக்க கூடாது. 


प्रत्यग्निं प्रतिसूर्यं च प्रतिसो मोदक द्विजम् ।

प्रतिगु प्रतिवातं च प्रज्ञा नश्यति मेहतः ॥

- மனு ஸ்மிருதி

அக்னிக்கு எதிராக, சூரியனுக்கு எதிராக, சந்திரனுக்கு எதிராக, தண்ணீருக்கு எதிராக, இரு பிறப்பாளனுக்கு (வியாபாரிகள், சட்டத்தை நிர்ணயிப்பவர்கள் விதிப்பவர்கள், பாதுகாப்பு வீரர்கள்) எதிராக, பசுவுக்கு எதிராக, காற்று தன் முன் அடிப்பதற்கு  எதிராக அமர்ந்து மலஜலம் கழித்தால் அறிவு மங்கும்.


तिरस्कृत्योच्चरेत् काष्ठलोष्ठपत्रतृणादिना ।

नियम्य प्रयतो वाचं संवीताङ्गोऽवगुण्ठितः ॥

மரகுச்சிகள், மண், வைக்கோல் கொண்டு பரப்பி, அமைதியாக உடலை முகத்தை போர்த்தி கொண்டு, தலை குனிந்தபடி மலஜலம் கழிக்க வேண்டும்.


मूत्रोच्चार समुत्सर्गं दिवा कुर्याद् उदङ्मुखः ।

दक्षिणा अभिमुखो रात्रौ सन्ध्यायोश्च यथा दिवा ॥

- மனு ஸ்மிருதி

சூரியன் இருக்கும் போது பகல் பொழுதில் வடக்கு முகமாக அமர்ந்து மலஜலம் கழிக்க வேண்டும். 

இரவில் மற்றும் சந்தியா காலங்களில் தெற்கு முகமாக அமர்ந்து மலஜலம் கழிக்க வேண்டும். 


छायायाम् अन्धकारे वा रात्रावहनि वा द्विजः ।

यथासुखमुखः कुर्यात् प्राणबाधभयेषु च ॥

நிழலாகவோ (மூட்டமாக), இருட்டாகவோ, இரவிலும் பகலிலும் இருந்தால் இரு பிறப்பாளன் (வியாபாரிகள், சட்டத்தை நிர்ணயிப்பவர்கள் விதிப்பவர்கள், பாதுகாப்பு வீரர்கள்), எந்த திசையிலும் அமர்ந்து மலஜலம் கழிக்கலாம். உயிர் பயம் ஏற்பட்ட சமயத்திலும் எந்த திசையிலும் அமர்ந்து மலஜலம் கழிக்கலாம்.

नाग्निं मुखेनोपधमेन्नग्नां नैक्षेत च स्त्रियम् ।

नामेध्यं प्रक्षिपेदग्नौ न च पादौ प्रतापयेत् ॥

- மனு ஸ்மிருதி

நெருப்பை வாயால் ஊத கூடாது. ஆடையில்லாமல் ஒரு பெண் இருக்கும் போது பார்க்க கூடாது, அசுத்தமான பொருட்களை அக்னியில் போட கூடாது. அக்னியை பார்த்து கால் நீட்ட கூடாது.


अधस्तान्नोपदध्याच्च न चैनमभिलङ्घयेत् ।

न चैनं पादतः कुर्यान्न प्राणाबाधमाचरेत् ॥

- மனு ஸ்மிருதி

கட்டில் அருகில் விளக்கு ஏற்றி படுக்க கூடாது. அக்னியை தாண்ட கூடாது. கால்மாட்டில் அக்னி (விளக்கு) இருக்க கூடாது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் படி எந்த காரியமும் செய்ய கூடாது.


नाश्नीयात् सन्धिवेलायां न गच्छेन्नापि संविशेत् ।

न चैव प्रलिखेद् भूमिं नात्मनोऽपहरेत् स्रजम् ॥

- மனு ஸ்மிருதி

சந்தியா வேளையில் (6am, 12noon, 6pm), சாப்பிட கூடாது, அந்த சமயத்தில் வெளியில் செல்ல கூடாது, படுக்க கூடாது, தரையை கீற கூடாது. கூந்தலில் இருக்கும் பூவை எடுக்க கூடாது.


नाप्सु मूत्रं पुरीषं वा ष्ठीवनं वा समुत्सृजेत् ।

अमेध्यलिप्तमन्यद् वा लोहितं वा विषाणि वा ॥

- மனு ஸ்மிருதி

தண்ணீரில் மூத்திரம், மலம், எச்சில் , அசுத்தமான பொருட்களை, இரத்தம், விஷம் இவைகளை கலக்க கூடாது.


नैकः सुप्यात्शून्यगेहे न श्रेयांसं प्रबोधयेत् ।

नोदक्ययाऽभिभाषेत यज्ञं गच्छेन्न चावृतः ॥

- மனு ஸ்மிருதி

பாழடைந்த வீட்டில் தனியாக படுக்க கூடாது. தன்னை விட உயர்ந்தவன் தூங்கும் போது, எழுப்ப கூடாது. மாத விலக்கான பெண்ணோடு பேச கூடாது. யாகத்துக்கு அழைக்காத போது செல்ல கூடாது.


अग्न्यगारे गवां गोष्ठे ब्राह्मणानां च संनिधौ ।

स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिमुद्धरेत् ॥

- மனு ஸ்மிருதி

யாக சாலையில், பசுக்கள், பிராம்மணர்கள் அருகில் இருக்கும் போது, சாப்பிடும் போதும், வலது கை வெளியில் தெரியும் படி இருக்க வேண்டும். (மேல் துண்டு இடது தோள் புறமாக இருக்க வேண்டும்)


न वारयेद् गां धयन्तीं न चाचक्षीत कस्य चित् ।

न दिवि इन्द्रायुधं दृष्ट्वा कस्य चिद् दर्शयेद् बुधः ॥

- மனு ஸ்மிருதி

தண்ணீர் குடிக்கும் பசுவையோ, பால் குடிக்கும் கன்றையோ தடுக்க கூடாது. இவைகள் குடிக்கும் போது மற்றவரை அழைத்து காட்ட கூடாது. இடியை பார்க்க கூடாது. அடுத்தவரை பார்க்க வைக்க கூடாது. தன்னை விட புத்திமான்களை (மகான்களை) நேருக்கு நேர் பார்க்க கூடாது.


नाधर्मिके वसेद् ग्रामे न व्याधिबहुले भृशम् ।

नैकः प्रपद्येताध्वानं न चिरं पर्वते वसेत् ॥

- மனு ஸ்மிருதி

அதர்மம் செய்பவர்கள் வசிக்கும் இடத்தில் இருக்க கூடாது. வியாதிகள் பரவும் இடத்தில் இருக்க கூடாது. அதிகமான மக்கள் இருக்கும் இருக்கும் இடத்திலும் வசிக்க கூடாது. மலை மேல் வசிக்க கூடாது.


न शूद्रराज्ये निवसेन्नाधार्मिकजनावृते ।

न पाषण्डिगणाक्रान्ते नोपस्षृटेऽन्त्यजैर्नृभिः ॥

மற்றவர்களிடம் வேலை செய்து சம்பளம் பெற்றவன் (employee) அரசாங்கம் நடத்தினால், அவன் அரசாங்கத்தில் வசிக்க கூடாது. வேதத்திற்கு புறம்பாக செயல் செய்பவர்கள் இருக்கும் ஊரில் வசிக்க கூடாது. மட்ட ரகமான வாழ்க்கை வாழும் மனிதர்களோடு வசிக்க கூடாது.


न भुञ्जीतोद्धृतस्नेहं नातिसौहित्यमाचरेत् ।

नातिप्रगे नातिसायं न सायं प्रातराशितः ॥

- மனு ஸ்மிருதி

எண்ணெய் எடுத்த பிறகு மிச்சபட்ட உமியை சாப்பிட கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிடவே கூடாது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சாப்பிட கூடாது. மதியம் நன்றாக சாப்பிட்டு விட்டால், இரவு சாப்பிடாமல் இருந்து விடலாம்.


न कुर्वीत वृथाचेष्टां न वार्यञ्जलिना पिबेत् ।

नोत्सङ्गे भक्षयेद् भक्ष्यान्न जातु स्यात् कुतूहली ॥

- மனு ஸ்மிருதி

காரணமில்லாமல் எந்த செயலையும் செய்ய கூடாது. தண்ணீரை கையில் ஏந்தி குடிக்க கூடாது. உணவு பட்சணங்களை மடியில் வைத்து சாப்பிட கூடாது. அதிக சந்தோஷம் கூடாது.


न नृत्येदथ वा गायेन्न वादित्राणि वादयेत् ।

नास्फोटयेन्न च क्ष्वेडेन्न च रक्तो विरावयेत् ॥

- மனு ஸ்மிருதி

அனாவசியமாக நடனம் ஆட கூடாது, பாட கூடாது. வாத்தியங்கள் இசைக்க கூடாது. அனாவசியமாக கை தட்டுவது, பற்களை நறநறவென்று கடிக்க கூடாது. தன் திருப்திக்காக தானாக பகையை உண்டாக்கி கொள்ள கூடாது.


न पादौ धावयेत् कांस्ये कदा चिदपि भाजने ।

न भिन्नभाण्डे भुञ्जीत न भावप्रतिदूषिते ॥ 

- மனு ஸ்மிருதி

வெண்கல பாத்திரம் கொண்டு கால் அலம்ப கூடாது. உடைந்த தட்டில் சாப்பிட கூடாது. மனதுக்கு பிடிக்காத தட்டாக இருந்தாலும் சாப்பிட கூடாது.


उपानहौ च वासश्च धृतमन्यैर्न धारयेत् ।

उपवीतमलङ्कारं स्रजं करकमेव च ॥

- மனு ஸ்மிருதி

இரு பிறப்பாளர்கள் (வைசியன், க்ஷத்ரியன், பிராம்மணன்), பிறர் பயன்படுத்திய செருப்பை, ஆடையை, பூணூலை, நகைகள், மாலைகள், பாத்திரங்களை பயன்படுத்த கூடாது.


नाविनीतैर्भजेद् धुर्यैर्न च क्षुध्व्याधिपीडितैः ।

न भिन्नशृङ्गाक्षिखुरैर्न वालधिविरूपितैः ॥

- மனு ஸ்மிருதி

சுமக்க பழகாத, பசியாக இருக்கும், நோய்வாய்ப்பட்ட, கொம்பு மற்றும் கண்ணில் அடிபட்ட, வால் அறுந்த மிருகங்களை கொண்டு வாகன பிரயாணம் செய்ய கூடாது. 

विनीतैस्तु व्रजेन्नित्यमाशुगैर्लक्षणान्वितैः ।

वर्णरूपोपसम्पन्नैः प्रतोदेनातुदन् भृशम् ॥

பழக்கப்பட்ட, வேகமாக செல்லும், நல்ல லக்ஷணங்கள் கொண்ட, அழகுடைய மிருகங்களை வாகனம் ஓட்டும் போதும், சாட்டையால் அடிக்காமல் பிரயாணம் செய்ய வேண்டும்.


बालातपः प्रेतधूमो वर्ज्यं भिन्नं तथाऽसनम् ।

न छिन्द्यान्नखरोमाणि दन्तैर्नोत्पाटयेन् नखान् ॥

- மனு ஸ்மிருதி

அதிகாலை இளம் வெயில், எரியும் பிண புகை, உடைந்த இருக்கை இவைகளை விட்டு விலகி இருக்க வேண்டும். முடியை, நகத்தை ஒடிக்க கூடாது. நகத்தை கடிக்க கூடாது.


न मृत्लोष्ठं च मृद्नीयान्न छिन्द्यात् करजैस्तृणम् ।

न कर्म निष्फलं कुर्यान्नायत्यामसुखोदयम् ॥

- மனு ஸ்மிருதி

அனாவசியமாக மண் கட்டிகள் இருந்தால் உடைக்க கூடாது. நகத்தால் புல்லை பிடுங்க கூடாது. பிரயோஜனம் இல்லாத காரியம் செய்யவே கூடாது. பின்னால் துக்கத்தை கொடுக்கும் எந்த செயலையும் செய்ய கூடாது.


लोष्ठमर्दी तृणच्छेदी नखखादी च यो नरः ।

स विनाशं व्रजत्याशु सूचकाऽशुचिरेव च ॥

மண் கட்டிகளை அனாவசியமாக உடைப்பவன், புல்லை பிடுங்குபவன், நகங்களை கடிப்பவன், முதுகுக்கு பின்னால் காரியம் செய்பவன், அசுத்தமானவன் நாசத்தை விளைவித்து கொள்வார்கள்


न विगर्ह्य कथां कुर्याद् बहिर्माल्यं न धारयेत् ।

गवां च यानं पृष्ठेन सर्वथैव विगर्हितम् ॥

- மனு ஸ்மிருதி

தான் சொல்வதே சரி என்று விவாதம் செய்ய கூடாது. மாலைகள் வெளியில் தெரியுமாறு அணிய கூடாது. எருதின் மீதேறி செல்ல கூடாது, வண்டியில் பூட்டி பிரயாணம் செய்யலாம்.


अद्वारेण च नातीयाद् ग्रामं वा वेश्म वाऽवृतम् ।

रात्रौ च वृक्षमूलानि दूरतः परिवर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

வீடாக இருந்தாலும் சரி, ஊராக இருந்தாலும் சரி, அதற்கான வாசல் வழியாக தான் செல்ல நுழைய வேண்டும். பின் வாசல் வழியாக நுழைய கூடாது. இரவில் மரத்தின் அடியில் தூங்க கூடாது. முடிந்தவரை மரத்தை விட்டு தூரமாக இருக்க வேண்டும்.


नाक्षैर्दीव्येत् कदा चित् तु स्वयं नोपानहौ हरेत् ।

शयनस्थो न भुञ्जीत न पाणिस्थं न चासने ॥

- மனு ஸ்மிருதி

விளையாட்டாக கூட சூதாட்டம் விளையாட கூடாது. தன் செருப்பை கையில் எடுத்து கொண்டு செல்ல கூடாது. படுக்கையில் அமர்ந்து சாப்பிடவே கூடாது. கையில் வைத்து கொண்டே சாப்பிட கூடாது.  ஆசனத்தில் (chair) உட்கார்ந்து சாப்பிட கூடாது. 


सर्वं च तिलसम्बद्धं नाद्यादस्तमिते रवौ ।

न च नग्नः शयीतैह न चोच्छिष्टः क्व चिद् व्रजेत् ॥

- மனு ஸ்மிருதி

சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு, எள் சேர்த்த எந்த உணவும் சாப்பிட கூடாது. ஆடை இல்லாமல் உறங்கவே கூடாது. சாப்பிட்ட பிறகு, கை கழுவாமல் எங்கும் செல்ல கூடாது.


आर्द्रपादस्तु भुञ्जीत नार्द्रपादस्तु संविशेत् ।

आर्द्रपादस्तु भुञ्जानो दीर्घमायुरवाप्नुयात् ॥

- மனு ஸ்மிருதி

கால் அலம்பி கொண்ட பிறகே சாப்பிட வேண்டும். கால் ஈரத்தோடு சாப்பிட வேண்டும். ஈர காலோடு உண்பவன் நீண்ட ஆயுளை பெறுவான். ஆனால் ஈர காலோடு படுக்க கூடாது.


अचक्षुर्विषयं दुर्गं न प्रपद्येत कर्हि चित् ।

न विण्मूत्रमुदीक्षेत न बाहुभ्यां नदीं तरेत् ॥

- மனு ஸ்மிருதி

அடர்ந்த காட்டில் புதர்கள் வழியாக செல்ல கூடாது. தன்னுடைய மூத்திரம் மலத்தை பார்க்க கூடாது. நதியில் கையால் நீந்த கூடாது. 


अधितिष्ठेन्न केशांस्तु न भस्मास्थि कपालिकाः ।

न कार्पासास्थि न तुषान् दीर्घमायुर्जिजीविषुः ॥

நீண்ட ஆயுளை விரும்புபவன், தலை முடி, சாம்பல், மண்டை ஓடு, உடைந்த பாத்திரங்கள், பஞ்சு, உமி போன்றவற்றில் நிற்க கூடாது.


न संवसेच्च पतितैर्न चाण्डालैर्न पुल्कसैः ।

न मूर्खैर्नावलिप्तैश्च न अन्त्यै: न अन्त्यावसायिभिः ॥

கணவன் இருக்க, வேறொருவனுடன் தவறான தொடர்பு கொண்டவர்கள் (பதித), பிராம்மண தாய்க்கும், சூத்திர தகப்பனுக்கும் பிறந்தவன் (சண்டாள), புல்கர்கள், அறிவாளி என்று நினைத்து கொண்டிருக்கும் முட்டாள்கள் (மூர்க்கர்கள்), திமிராக இருப்பவர்கள், அந்த்யர்கள், நிஷாத தாய்க்கும் சண்டாள தகப்பனுக்கும் பிறந்த அந்த்யாவசாயினர்கள் இருக்கும் இடத்தில் வசிக்க கூடாது.


न शूद्राय मतिं दद्यान् न उच्छिष्टं न हविष्कृतम् ।

न चास्य उपदिशेद् धर्मं न चास्य व्रतम् आदिशेत् ॥

- மனு ஸ்மிருதி

இரு பிறப்பாளர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) சொன்னதை அடக்கத்தோடு செய்து, சம்பாத்தியம் பெற விருப்பமுள்ளவனுக்கு (sudra/employee) எந்த புத்திமதியும் சொல்ல அவசியமில்லை. யாகத்தில் மிஞ்சிய ஹவிசை கொடுக்கவும் அவசியமில்லை. எந்த ஒரு மந்திர உபதேசமும் அவசியமில்லை. எந்த விரதமும் அனுஷ்டிக்க அவசியமில்லை.


यो ह्यस्य धर्ममाचष्टे यश्चैवादिशति व्रतम् ।

सो असंवृतं नाम तमः सह तेनैव मज्जति ॥

- மனு ஸ்மிருதி

இரு பிறப்பாளர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) சொன்னதை அடக்கத்தோடு செய்து, சம்பாத்தியம் பெற விருப்பமுள்ளவனுக்கு (sudra/employee), தனியாக இந்த தர்மத்தை செய், இந்த விரதம் செய் என்று விதிக்க கூடாது. இவ்வாறு விதிப்பவன், சூத்திரனை இப்படி விதிப்பவன், அந்த சூத்திரனையும் இழுத்து கொண்டு, அஸம்வ்ருதம் என்ற நரகத்திற்கு செல்வார்கள்.


न संहताभ्यां पाणिभ्यां कण्डूयेद् आत्मनः शिरः ।

न स्पृशेच्चैतद् उच्छिष्टो न च स्नायाद् विना ततः ॥

- மனு ஸ்மிருதி

தன்னுடைய இரண்டு கைகளாலும் தலையை சொரிய கூடாது. அசுத்தமாக இருக்கும் தலையை தொட கூடாது. தலைக்கு ஜலம் விடாமல் உடம்புக்கு மட்டும் குளிக்க கூடாது.


केशग्रहान् प्रहारांश्च शिरस्येतान् विवर्जयेत् ।

शिरःस्नातश्च तैलेन नाङ्गं किं चिदपि स्पृशेत् ॥

- மனு ஸ்மிருதி

தலை முடியை பிடித்து இழுப்பது, அடிப்பது கூடவே கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து பிறகு, அன்று துளி கூட எண்ணெய் உடம்பில் தேய்த்து கொள்ள கூடாது 


न राज्ञः प्रतिगृह्णीयादराजन्यप्रसूतितः ।

सूनाचक्र ध्वजवतां वेशेनैव च जीवताम् ॥

விப்ரன் என்ற வேதியன்,  க்ஷத்ரிய குலத்தில் பிறந்த அரசனாக இல்லாதவனிடம் தானம் வாங்க கூடாது. கசாப்பு தொழில் செய்பவனிடமும் தானம் வாங்க கூடாது. எண்ணெய் தயாரிப்பு செய்பவனிடமும் தானம் வாங்க கூடாது. வேசிகளிடமும் தானம் வாங்க கூடாது.


दश-सूना समं चक्रं दश-चक्र समो ध्वजः ।

दश-ध्वज समो वेशो दश-वेश समो नृपः ॥

10 கசாப்பு கடைக்காரனுக்கு, ஒரு எண்ணெய் எடுத்து பிழைப்பவன் சமம். 

10 எண்ணெய் எடுத்து பிழைப்பவனுக்கு, 1 சாராய கடை வைத்து விற்பவன் சமம்.

10 சாராய விற்பனை செய்து பிழைப்பவனுக்கு, 1 வேசி சமம்.

10 வேசிக்கு, க்ஷத்ரிய குலத்தில் பிறக்காத ஒரு அரசன் சமம்.


दश-सूणा सहस्राणि यो वाहयति सौनिकः ।

तेन तुल्यः स्मृतो राजा घोरस्तस्य प्रतिग्रहः ॥

10*1000 கசாப்பு கடைக்காரனுக்கு க்ஷத்ரிய குலத்தில் பிறக்காத ஒரு அரசன் சமம். ஆதலால், அப்படிப்பட்ட அரசனிடம், விப்ரன் என்ற அந்தணன் தானம் வாங்கவே கூடாது.


यो राज्ञः प्रतिगृह्णाति लुब्धस्यौच्छास्त्रवर्तिनः ।

स पर्यायेण यातीमान्नरकानेकविंशतिम् ॥

எந்த அரசனிடம் க்ஷத்ரிய (கோபமும், போரிடும் குணமும்) குலத்தில் இல்லையோ, மக்கள் பணத்தை அநியாயமாக தனக்கு எடுத்து கொள்கிறானோ, சாஸ்திரத்தை மீறி செயல் செய்கிறானோ, அந்த அரசனிடம் தானம் வாங்கும் விப்ரன் என்ற அந்தணன், 21 நரகங்களை அடைவான்.


तामिस्रम् अन्धतामिस्रं महारौरव रौरवौ ।

नरकं कालसूत्रं च महानरकमेव च ॥ 

सञ्जीवनं महावीचिं तपनं सम्प्रतापनम् ।

संहातं च सकाकोलं कुड्मलं प्रतिमूर्तिकम् ॥ 

लोहशङ्कुं ऋजीषं च पन्थानं शाल्मलीं नदीम् ।

असिपत्रवनं चैव लोहदारकमेव च ॥

தாமிஸ்ரம் (1), அந்ததாமிஸ்ரம் (2), மஹாரெளரவம் (3), ரௌரவம் (4), நரகம் (5), காலசூத்ரம் (6), மஹாநரகம் (7), சஜ்ஜீவனம் (8), மஹாவீசிம் (9), தபனம் (10), ஸம்ப்ரதாபனம் (11), சம்ஹாதம் (12), சகாகோலம் (13), குட்மலம் (14), ப்ரதிமூர்திகம் (15), லோகசங்கும் (16), ருஜீஷம் (17), பந்தானம் (18), ஸால்மலீம் நதி (19), அஸிபத்ரவனம் (20), லோகதாரகம் (21) என்று 21 நரகங்கள் உள்ளன.


एतद् विदन्तो विद्वांसो ब्राह्मणा ब्रह्मवादिनः ।

न राज्ञः प्रतिगृह्णन्ति प्रेत्य श्रेयोऽभिकाङ्क्षिणः ॥

நன்கு படித்த, பிரம்மத்தையே உபாசிக்கும் பிராம்மணன், க்ஷத்ரிய குலத்தில் இல்லாத அரசனிடம் ஒரு போதும் தானம் வாங்கி, 21 நரகங்களுக்கு செல்ல விரும்ப மாட்டான். 


ब्राह्मे मुहूर्ते बुध्येत धर्मार्थौ चानुचिन्तयेत् ।

कायक्लेशांश्च तन्मूलान् वेदतत्त्वार्थमेव च ॥

ப்ரம்ம முகூர்த்த (4am-6am) வேளையில் எழுந்து, தர்மத்தை (அறம்) பற்றியும், அர்த்தத்தை (பொருள்) பற்றியும் சிந்திக்க வேண்டும்.

தர்மத்தோடு , பொருள் சேர்ப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டும்.

பிறகு வேத தத்வ விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும்.


उत्थायावश्यकं कृत्वा कृतशौचः समाहितः ।

पूर्वां सन्ध्यां जपंस्तिष्ठेत् स्वकाले चापरां चिरम् ॥

எழுந்தவுடன் காலை கடனை முடிக்க வேண்டும். பிறகு தன்னை சுத்தி செய்து கொண்டு காலையில் சந்தியா வந்தனம் செய்து, ஜபம் செய்ய வேண்டும். அதே போல சூரியன் மறையும் மாலை நேரத்தில் (4pm-6pm) சந்தியா வந்தனம் செய்து, ஜபம் செய்ய வேண்டும்.

ऋषयो दीर्घसन्ध्यत्वाद् दीर्घमायुरवाप्नुयुः ।

प्रज्ञां यशश्च कीर्तिं च ब्रह्मवर्चसमेव च ॥

ரிஷிகள் நீண்ட நேரம் சந்தியாவந்தனம் செய்ததாலேயே, நீண்ட ஆயுளுடன் இருந்தனர். இதனாலேயே மேதாவியாகவும், புகழுடனும், பெருமையுடன் வாழ்ந்தனர். பிரம்மத்தை பற்றி மேலும் மேலும் உணர்ந்தனர்.


श्रावण्यां प्रौष्ठपद्यां वाऽप्युपाकृत्य यथाविधि ।

युक्तश्छन्दांस्यधीयीत मासान् विप्रो अर्ध-पञ्चमान् ॥

- மனு ஸ்மிருதி

விப்ரன் என்ற அந்தணன் என்ற வேதியன், ஶ்ராவன (ஆவணி) மாதத்தில், உபாகர்மா விதிப்படி செய்து, நமது எச்சில் வாயால் ஜபிக்கபட்ட வேத மந்திரங்களை, மீண்டும் ஸித்தி பெற, உயிர்ப்பித்து கொள்ள வேண்டும். தொடர்ந்து அடுத்த 4.5 மாதங்கள் வேதத்தை மீண்டும் ப்ரௌஷ / புஷ்ய (தை) மாத பாதி வரை அத்யயனம் செய்ய வேண்டும்.


पुष्ये तु छन्दसां कुर्याद् बहिरुत्सर्जनं द्विजः ।

माघशुक्लस्य वा प्राप्ते पूर्वाह्णे प्रथमेऽहनि ॥

இருபிறப்பாளர்கள் அனைவரும் (பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய), வரை 4.5 மாதங்கள் வேத அத்யயனம் செய்து விட்டு, புஷ்ய (தை) மாதமோ, மாசி மாதம் பிரதமை அன்று, உ த்ஸர்ஜனம் என்ற கிரியை செய்து வேத அத்யயனத்தை முடிக்க வேண்டும்.



यथाशास्त्रं तु कृत्वैवमुत्सर्गं छन्दसां बहिः ।

विरमेत् पक्षिणीं रात्रिं तदेवैकमहर्निशम् ॥ 

சாஸ்திர படி உ த்ஸர்ஜனம் என்ற கிரியை செய்த பிறகு, அன்றைய பகல், இரவு, மற்றும் அடுத்த நாள் பகல் வரை வேதம் சொல்ல கூடாது.


अत ऊर्ध्वं तु छन्दांसि शुक्लेषु नियतः पठेत् ।

वेदाङ्गानि च सर्वाणि कृष्णपक्षेषु सम्पठेत् ॥ 

பிறகு வளர்பிறையில் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். தேய்பிறையில் வேத அங்கங்களை அத்யயனம் செய்ய வேண்டும்.


नाविस्पष्टमधीयीत न शूद्रजनसन्निधौ ।

न निशान्ते परिश्रान्तो ब्रह्माधीत्य पुनः स्वपेत् ॥

வேத மந்திரங்களை ஸ்வரம் மாறும் அளவுக்கு வேகமாக சொல்ல கூடாது. தன் நேரத்தை பிறருக்கு செலவழித்து அதற்கு சம்பளம் வாங்குபவன் (sudra/employee) அருகில் இருந்தும் வேதம் சொல்ல கூடாது. வேதம் ஓதிய பிறகு, அது இரவானாலும் தூங்க கூடாது. மிகவும் சோர்ந்து இருந்தால் மட்டுமே தூங்கலாம்.


यथोदितेन विधिना नित्यं छन्दस्कृतं पठेत् ।

ब्रह्म छन्दस्कृतं चैव द्विजो युक्तो ह्यनापदि ॥

இருபிறப்பாளர்கள் அனைவரும் (பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய), சாஸ்திர விதிப்படி, தினமும் வேத மாதாவான காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அதனோடு, வேதத்தையும் விதிப்படி ஜெபித்து கொண்டு இருக்க வேண்டும்.


इमान्नित्यमनध्यायानधीयानो विवर्जयेत् ।

अध्यापनं च कुर्वाणः शिष्याणां विधिपूर्वकम् ॥

வேத ஓத கூடாது என்று விதிக்கப்பட்ட சமயங்களில், சி ஷ்யனும் வேதம் படிக்க கூடாது, அதே சமயம், அத்யாபகர் சொல்லி தரவும் கூடாது.


कर्णश्रवेऽनिले रात्रौ दिवा पांसुसमूहने ।

एतौ वर्षास्वनध्यायावध्यायज्ञाः प्रचक्षते ॥

மழை காலத்தில் காது துளைக்கும் அளவிற்கு காற்று, மழை கொட்டும் போது வேதம் ஓத கூடாது. காற்றில் புழுதி படர்ந்து இருக்கும் போது, வேதம் ஓத கூடாது.  வேதம் ஓதி கொண்டு இருக்கும் போது இப்படி நேர்ந்தால், உடனே நிறுத்த வேண்டும்.


विद्युत्स्तनितवर्षेषु महोल्कानां च सम्प्लवे ।

आकालिकमनध्यायमेतेषु मनुरब्रवीत् ॥

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சமயத்தில், அல்லது வால் நக்ஷத்திரம் தெரியும் போதும், அந்த சமயம் ஆரம்பித்து அடுத்த நாள் அதே சமயம் வரை, வேதம் சொல்ல கூடாது. இவ்வாறு மனு (ஸ்வாயம்பு) சொல்கிறார்.


एतांस्त्वभ्युदितान् विद्याद् यदा प्रादुष्कृताग्निषु ।

तदा विद्यादनध्यायमनृतौ चाभ्रदर्शने ॥

மழை காலத்தில் இடி மின்னல் ஏற்படும் போது தான் வேதம் ஓத கூடாது. மற்ற காலத்தில் இடி இடித்தால் வேதம் ஓதலாம். அதே சமயம் அக்னி காரியம் செய்யும் போதோ, சந்தியா காலத்திலோ மேக மூட்டம் இருந்தால், வேதம் ஓத கூடாது.


निर्घाते भूमिचलने ज्योतिषां चोपसर्जने ।

एतानाकालिकान् विद्यादनध्यायान् ऋतावपि ॥ 

மழை இல்லாத காலத்தில் இடி மட்டும் இடித்தால், வேதம் ஓத கூடாது. பூகம்பம் நிகழ்ந்தால் வேதம் ஓத கூடாது. நக்ஷத்திரம் விழுவது தெரிந்தால், அந்த சமயம் ஆரம்பித்து அடுத்த நாள் அதே சமயம் வரை, வேதம் சொல்ல கூடாது.


प्रादुष्कृतेष्वग्निषु तु विद्युत्स्तनितनिःस्वने ।

सज्योतिः स्यादनध्यायः शेषे रात्रौ यथा दिवा ॥

அக்னி காரியம் செய்யும் போதோ, சந்தியா காலத்திலோ இடி மின்னல்  மட்டும் ஏற்பட்டால், வெளிச்சம் இருக்கும் வரை வேதம் ஓத கூடாது. இடி மின்னலோடு மழையும் பெய்தால், அந்த சமயம் ஆரம்பித்து அடுத்த நாள் அதே சமயம் வரை, வேதம் சொல்ல கூடாது.


अन्तर्गतशवे ग्रामे वृषलस्य च सन्निधौ ।

अनध्यायो रुद्यमाने समवाये जनस्य च ॥

தெருவில் அல்லது கிராமத்தில் யாராவது இறந்தால், அதார்மவாதிகள் அருகில் இருந்தால், மக்கள் கூட்டமாக இருந்து எதோ காரணத்தால் அழுது கொண்டிருந்தால், வேதம் ஓத கூடாது.


उदके मध्यरात्रे च विण्मूत्रस्य विसर्जने । 

उच्छिष्टः श्राद्धभुक्चैव मनसापि न चिन्तयेत्

நீரின் நடுவில் இருக்கும் போதும், நடு இரவிலும், மலஜலம் கழிக்கும் போதும், திவசத்திற்கு தன்னை நியமித்து இருக்கும் போதும், எச்சிலுடன் இருக்கும் போதும், வேதத்தை மனதாலும் நினைக்க கூடாது.


प्रतिगृह्य द्विजो विद्वान् एकोद्दिष्टस्य केतनम् ।

त्र्यहं न कीर्तयेद् ब्रह्म राज्ञो राहोश्च सूतके ॥

இறந்தவருக்கு காரியம் (ஏகோதிஷ்டம்) செய்ய நியமிக்கபட்ட இரு பிறப்பாளன் (அந்தணன், க்ஷத்ரியன், வைசியன்) அன்று முதல் 3 நாட்களுக்கு, அரசனுக்கு மகன் பிறந்த போதும், கிரஹன சமயம் போதும், 3 நாட்கள் வேதம் ஓத கூடாது.


यावदेकानुदिष्टस्य गन्धो लेपश्च तिष्ठति ।

विप्रस्य विदुषो देहे तावद् ब्रह्म न कीर्तयेत् ॥

இறந்தவருக்கு காரியம் (ஏகோதிஷ்டம்) செய்ய நியமிக்கபட்ட இரு பிறப்பாளன் (அந்தணன், க்ஷத்ரியன், வைசியன்) தான் சாப்பிட்டது முழுமையாக ஜீரணமாகும் வரை வேதத்தை படிக்க கூடாது.


शयानः प्रौढपादश्च कृत्वा चैवावसक्थिकाम् ।

नाधीयीतामिषं जग्ध्वा सूतकान्नाद्यमेव च ॥

படுத்துக்கொண்டும், காலை நீட்டி கொண்டும், அலட்சியமாக அமர்ந்து கொண்டோ, மாமிசம் சாப்பிட்ட பிறகோ, பிறப்பு இறப்பு காரியங்கள் சம்பந்தபட்ட உணவை சாப்பிட்ட பிறகோ, வேதம் ஓத கூடாது.

नीहारे बाणशब्दे च सन्ध्ययोरेव चोभयोः ।

अमावास्याचतुर्दश्योः पौर्णमास्य्ऽष्टकासु च ॥

பனி மூடி இருக்கும் போது, வீணை ஓசை கேட்கும் போது, சந்தியா காலத்திலும், அமாவாசை சதுர்த்தி தினங்களில், பௌர்ணமி அஷ்டமி 

தினங்களில் வேதம் ஓத கூடாது.


अमावास्या गुरुं हन्ति शिष्यं हन्ति चतुर्दशी ।

ब्रह्माष्टकपौर्णमास्यौ तस्मात् ताः परिवर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

அமாவாசையில் வேதம் ஓதினால், அது குருவை கொல்லும். சதுர்தசியில் வேதம் ஓதினால் அது சிஷ்யனை கொல்லும். அஷ்டமி பௌர்ணமி தினங்களில் வேத ஓதுவதை தவிர்க்க வேண்டும்.


पांसुवर्षे दिशां दाहे गोमायुविरुते तथा ।

श्वखरोष्ट्रे च रुवति पङ्क्तो च न पठेद् द्विजः ॥

சூறாவளி வீசும் போதும், திசைகள் தீ பற்றி எரியும் போதும், நரி (கோமாயு) ஊளையிடும் போதும், நாய் கழுதை அழுகுரல் எழுப்பும் போதும், பல பேர் மத்தியிலும் வேதம் ஓத கூடாது.


नाधीयीत श्मशानान्ते ग्रामान्ते गोव्रजेऽपि वा ।

वसित्वा मैथुनं वासः श्राद्धिकं प्रतिगृह्य च ॥

சுடுகாட்டில் இருந்து கொண்டோ, ஊர் எல்லையிலும், மாட்டு தொழுவத்திலும், உறவு கொண்ட போது உடுத்தி இருந்த ஆசையோடோ, ஸ்ரார்த்த உணவு ஜீரணம் ஆகாத போதோ, வேதம் ஓத கூடாது. 


प्राणि वा यदि वाऽप्राणि यत् किं चित्श्राद्धिकं भवेत् ।

तदालभ्याप्यनध्यायः पाण्यास्यो हि द्विजः स्मृतः ॥

ஸ்ரார்த்தம் செய்து வைத்து, அதற்கு உயிரோ உயிரற்றதோ (பசு, தானியம் எதுவாயினும்) தானமாக எது வாங்கினாலும், அன்று இருபிறப்பாளன் என்ற க்ஷத்ரியன், வைசியன், அந்தணன் மூவருமே வேதம் ஓத கூடாது. 


चोरैरुपद्रुते ग्रामे सम्भ्रमे चाग्निकारिते ।

आकालिकमनध्यायं विद्यात् सर्वाद्भुतेषु च ॥

திருட்டினால் துன்பம் நேரும் போதோ, அகனியால் துன்பம் நேரும் போதோ, ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தாலோ அடுத்த நாள் அதே சமயம் வரை வேதம் ஓத கூடாது.


उपाकर्मणि च उत्सर्गे त्रिरात्रं क्षेपणं स्मृतम् ।

अष्टकासु त्वहोरात्रं ऋत्वन्तासु च रात्रिषु ॥

உபாகர்மா செய்த பின் 3 நாட்களும், உத்ஸர்ஜனம் முன் 3 நாட்களும் வேதம் ஓத கூடாது. அஷ்டமி அன்று இரவு பகல் முழுவதும் வேதம் ஓத கூடாது. ஒவ்வொரு காலம் முடியும் தினத்தன்று வேதம் ஓத கூடாது.


नाधीयीताश्वमारूढो न वृक्षं न च हस्तिनम् ।

न नावं न खरं नोष्ट्रं नैरिणस्थो न यानगः ॥

குதிரை, யானை, கழுதை அல்லது மரத்தில் அமர்ந்து கொண்டோ, வாகனங்களில் அமர்ந்து கொண்டோ, களர் நிலத்தில் அமர்ந்து கொண்டோ, பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ வேதம் ஓத கூடாது.


न विवादे न कलहे न सेनायां न सङ्गरे ।

न भुक्तमात्रे नाजीर्णे न वमित्वा न शुक्तके ॥

விவாதம் செய்யும் போதோ, சண்டையிடும் போதோ, போர் வீரர்கள் இருக்கும் போதோ, போர் நடக்கும் போதோ, சாப்பிட்ட உடனேயோ, அஜீரணமாக இருக்கும் போதோ, வாந்தி எடுக்கும் போதோ, ஏப்பம் விடும் போதோ, வேதம் ஓத கூடாது.


अतिथिं चाननुज्ञाप्य मारुते वाति वा भृशम् ।

रुधिरे च स्रुते गात्रात्शस्त्रेण च परिक्षते ॥

அதிதியாக வீட்டிற்கு வந்தவர் அனுமதி பெறாமல், பெருங்காற்று வீசும் போது, உடலில் ரத்தம் வழிந்தால், ஆயுதங்களால் ஏற்பட்ட காயம் இருந்தால் வேதம் ஓத கூடாது.


सामध्वनावृग्यजुषी नाधीयीत कदा चन ।

वेदस्याधीत्य वाऽप्यन्तम् आरण्यकमधीत्य च ॥

ஸாம வேதம் கேட்கும் போது, ரிக், யஜுர் வேதம் கூட சொல்ல கூடாது. வேதம் பூர்த்தி செய்த நாளன்று மீண்டும் அன்றே மீண்டும் வேதம் ஓத கூடாது. அதே போல, வேதத்தில் ஆரண்யகம் சொல்லி விட்டு, மீண்டும் வேதம் ஓத கூடாது.


ऋग्वेदो देवदैवत्यो यजुर्वेदस्तु मानुषः ।

सामवेदः स्मृतः पित्र्यस्तस्मात् तस्याशुचिर्ध्वनिः ॥

ரிக் வேதம் தெய்வங்களை ஆகர்ஷிக்கிறது. யஜுர் வேத யாக மந்திரங்கள் மனிதர்களை ஆகர்ஷிக்கிறது. சாம வேதம் பித்ருக்களை ஆகர்ஷிக்கிறது. பித்ருக்களின் ஒலி துக்கத்தை வெளிப்படுத்துகிறது, எனவே சாம வேதத்தின் ஒலி தூய்மை குறைகிறது


एतद् विद्वन्तो विद्वांस: त्रयी निष्कर्षम् अन्वहम् ।

क्रमतः पूर्वम् अभ्यस्य पश्चाद् वेदम् अधीयते ॥

தெய்வங்கள், மனிதர்கள், பித்ருக்கள் என்ற வரிசையில் வேதம் இருப்பதால், விதவான்கள் ரிக், யஜுர், சாம வேதத்தின் முதல் சில மந்திரங்களை சொல்லி விட்டு தான், அவரவருக்கான வேத மந்திரங்களை படிக்க வேண்டும்.


पशु मण्डूक मार्जार श्व सर्प नकुलाखुभिः ।

अन्तरागमने विद्यादनध्यायमहर्निशम् ॥

பசு, தவளை, பூனை, நாய், பாம்பு, ஒணான், எலி போன்றவை வேதம் கற்றுக்கொள்ளும் போது குறுக்கே வந்தால், அன்றைய தினம் வேதம் சொல்வதை நிறுத்த வேண்டும்.

द्वावेव वर्जयेन्नित्यमनध्यायौ प्रयत्नतः ।

स्वाध्यायभूमिं चाशुद्धमात्मानं चाशुचिं द्विजः ॥

வேத அத்யயனம் செய்யும் இடம் அசுத்தமாக இருந்தாலோ, தான் அசுத்தமாக இருந்தாலோ, வேதம் ஓத கூடாது.


अमावास्याम् अष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम् ।

ब्रह्मचारी भवेन् नित्यमप्यर्तौ स्नातको द्विजः ॥

அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்தசி போன்ற தினங்களில் த்விஜன் என்ற இரு பிறப்பாளன் (வைசியன், க்ஷத்ரியன், அந்தணன்) மணமானவனாக இருந்தாலும் பிரம்ச்சர்யத்தோடு இருக்க வேண்டும்.


न स्नानमाचरेद् भुक्त्वा नातुरो न महानिशि ।

न वासोभिः सहाजस्रं नाविज्ञाते जलाशये ॥

சாப்பிட்டு விட்டு குளிக்க கூடாது. நோயாளி குளிக்க கூடாது. நள்ளிரவில் குளிக்க கூடாது. அழுக்கான ஆடையுடன் குளிக்க கூடாது. பழக்கமில்லாத தெரியாத குளங்களில் குளிக்க கூடாது.


देवतानां गुरो राज्ञः स्नातकाचार्ययोस्तथा ।

नाक्रामेत् कामतश्छायां बभ्रुणो दीक्षितस्य च ॥

- மனு ஸ்மிருதி

தெய்வ விக்ரகங்கள் நிழலை கூட மிதிக்கவோ, தாண்டவோ கூடாது. அது போல, தந்தை, குரு, அரசன், விரதத்தில் இருக்கும் பூணூல் காயத்ரீ உபதேசம் பெற்ற வைசியன்/பிராம்மணன்/க்ஷத்ரியன் (த்விஜன்), ஆசார்யன், யக்ஞம் செய்ய தீக்ஷை பெற்று இருப்பவன் நிழலையும் மிதிக்கவோ, தாண்டவோ கூடாது.


मध्यन्दिने अर्धरात्रे च श्राद्धं भुक्त्वा च सामिषम् ।

सन्ध्ययो: उभयोश्चैव न सेवेत चतुष्पथम् ॥

மத்யான நேரத்தில், நடு ராத்திரியில் நெடு நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்க கூடாது. திவச உணவு சாப்பிட்ட பிறகு அங்கேயே இருக்க கூடாது. காலை உதய காலத்தில், சூரியன் மறையும் வேளையில், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திலும் நெடு நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்க கூடாது.


उद्वर्तनमपस्नानं विण्मूत्रे रक्तमेव च ।

श्लेश्मनिष्ठ्यूतवान्तानि नाधितिष्ठेत् तु कामतः ॥ 

உடம்பை சுத்தி செய்ய பயன்படும் பொடிகள், ஏற்கனவே ஒருவர் குளித்த தண்ணீர், மலமூத்திரம், ரத்தம், சளி, வாந்தி, மென்று துப்பியவை போன்றவைகளை மிதிக்க கூடாது.


वैरिणं नोपसेवेत सहायं चैव वैरिणः ।

अधार्मिकं तस्करं च परस्यैव च योषितम् ॥

எதிரி, எதிரியின் நண்பன், தர்மத்திற்கு எதிராக செயல் செய்பவன், திருடன், பிறர் மனைவி.. இவர்களிடம் அளவுக்கு மீறி பழக கூடாது.


न हीदृशमनायुष्यं लोके किं चन विद्यते ।

यादृशं पुरुषस्येह परदारोपसेवनम् ॥

இந்த உலகத்தில் பிறர் மனைவியை அடைவது போன்று கீழ்த்தரம் வேறொன்றுமில்லை. ஒருவன் ஆயுளை குறைப்பது இதைவிட வேறொன்றுமில்லை. 


क्षत्रियं चैव सर्पं च ब्राह्मणं च बहुश्रुतम् ।

नावमन्येत वै भूष्णुः कृशानपि कदा चन ॥ 

- மனு ஸ்மிருதி

தான் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்,  எந்த ஒரு நிலையிலும் க்ஷத்ரியன், பாம்பு, பிராம்மணன் இந்த மூவரையும் ஹிம்சிக்க கூடாது. இவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் துன்பபடுத்த கூடாது.


एतत् त्रयं हि पुरुषं निर्दहेदवमानितम् ।

तस्मादेतत् त्रयं नित्यं नावमन्येत बुद्धिमान् ॥

- மனு ஸ்மிருதி

இந்த மூவரும், தன்னை அவமானம் செய்தவர்களை நிச்சயம் ஒருசமயம் தண்டித்து விடுவார்கள். இதனால் இவர்களை புத்திசாலிகள் ஒருபோதும் துன்பபடுத்த மாட்டார்கள்.


न आत्मानम् अवमन्येत पुर्वाभिरसमृद्धिभिः ।

आ मृत्योः श्रियमन्विच्छेन्नैनां मन्येत दुर्लभाम् ॥

- மனு ஸ்மிருதி

வியாபாரம் நஷ்டமடைந்து செல்வம் அனைத்தும் போனாலும் தன்னை தானே வெறுத்து கொள்ள கூடாது. வாழும் வரை செல்வம் சம்பாதிக்க முடியும் என்று முயல வேண்டும். செல்வம் சேர்க்க முடியாது என்று நினைக்க கூடாது.


सत्यं ब्रूयात् प्रियं ब्रूयान् न ब्रूयात् सत्यम् अप्रियम् ।

प्रियं च न अनृतं ब्रूयाद् एष धर्मः सनातनः ॥

- மனு ஸ்மிருதி

நீ உண்மையையே பேசு. நீ சொல்ல ஆசைப்படும் உண்மை பிறருக்கு பிரியமாக இருக்குமானால் பேசு.

நீ சொல்ல ஆசைப்படும் உண்மை பிறருக்கு பிரியமாக இருக்காது என்றால், அந்த உண்மையை அவர்களிடம் சொல்லாதே.

பிறருக்கு பிரியமாக இருக்கும் என்பதற்காக பொய் பேசாதே. 

இதுவே காலம் காலமாக உலகில் உள்ள தர்மமாகும்.


भद्रं भद्रम् इति ब्रूयाद् भद्रम् इति एव वा वदेत् ।

शुष्कवैरं विवादं च न कुर्यात् केन चित् सह ॥

- மனு ஸ்மிருதி

எப்பொழுதும் "மங்களம் மங்களம்" என்றே சொல்ல வேண்டும். மங்களமான சொல் கொண்டே எப்பொழுதும் பேச வேண்டும். யாரிடமும் வீண் விவாதம் செய்து கொண்டிருக்க கூடாது.


नातिकल्यं नातिसायं नातिमध्यन्दिने स्थिते ।

नाज्ञातेन समं गच्छेन्नैको न वृषलैः सह ॥

அதிகாலையில், சாயங்காலம் முடியும் வேளையில், மத்யான வேளையில், தெரியாத இடங்களுக்கு, பாவிகளோடு வெளியில் செல்ல கூடாது.


हीन-अङ्गान्‌ अतिरिक्ताङ्गान् विद्याहीनान् वयोऽधिकान् ।

रूप द्रविण हीनांश्च जातिहीनांश्च नाक्षिपेत् ॥ 

- மனு ஸ்மிருதி

உடல் குறை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக உறுப்புகள் உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், வயதானவர்கள், அழகற்றவர்கள், செல்வம் இல்லாதவர்கள், ஜாதியில் தாழ்ந்தவர்கள் இவர்களை யாரையும் குறை சொல்லி பேச கூடாது.


न स्पृशेत् पाणिन: उच्छिष्टो विप्रो गो ब्राह्मणान लाण् ।

न चापि पश्येद् अशुचिः सुस्थो ज्योतिर्गणान् दिवा ॥

- மனு ஸ்மிருதி

எச்சில் கையோடு விப்ரன் என்ற வேதியன் என்ற அந்தணன், பசுவையோ, பிராம்மணனையோ தொட கூடாது. தீட்டு காலங்களில் சூரியனையோ, சந்திரனையோ , நக்ஷத்திரங்களையோ பார்க்க கூடாது.

स्पृष्ट्वैतानशुचि: नित्यमद्भिः प्राणान् उपस्पृशेत् ।

गात्राणि चैव सर्वाणि नाभिं पाणितलेन तु ॥

ஒரு வேளை பசுவையோ, பிராம்மணனையோ எச்சில் கையோடு தொட்டு விட்டால், ஆசமனம் செய்து தண்ணீரால் வாய், கைகள், 5 புலன்கள், பாதம், தொப்புள் பகுதி போன்றவற்றை துடைத்து கொள்ள வேண்டும்.


अनातुरः स्वानि खानि न स्पृशेद् अनिमित्ततः ।

रोमाणि च रहस्यानि सर्वाण्येव विवर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

தன் அங்க உறுப்புகளை, குறிப்பாக வாயையோ, முடியையோ, அந்தரங்க உறுப்பையோ அனாவசியமாக தொட கூடாது.


मङ्गल आचारयुक्तः स्यात् प्रयतात्मा जितेन्द्रियः ।

जपेच्च जुहुयाच्चैव नित्यम् अग्निमतन्द्रितः ॥

மங்களத்தை கொடுக்கும் ஆசாரங்களை (நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து கொள்வது போன்றவை) அனுசரிக்க வேண்டும். புலனடக்கத்தோடு இருக்க வேண்டும். சோம்பேறித்தனம் இல்லாமல் தினமும் ஜபம் செய்ய வேண்டும். அக்னிக்கு ஹோமம் செய்ய வேண்டும்.


मङ्गल आचार युक्तानां नित्यं च प्रयतात्मनाम् ।

जपतां जुह्वतां चैव विनिपातो न विद्यते ॥

- மனு ஸ்மிருதி

மங்களத்தை கொடுக்கும் ஆசாரங்களை (நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து கொள்வது போன்றவை) அனுசரித்தும், புலன் (பேச்சில், பார்வையில், கேட்பதில், தொடுவதில், நுகர்வதில்) அடக்கத்தோடும், சோம்பேறித்தனம் இல்லாமல் தினமும் ஜபம் செய்து கொண்டும், அக்னிக்கு ஹோமம் செய்து வந்தால், எந்த தீங்கும் ஏற்படாது.


वेदम् एव अभ्यसेन् नित्यं यथाकालमतन्द्रितः ।

तं ह्यस्याहुः परं धर्ममुपधर्मोऽन्य उच्यते ॥

- மனு ஸ்மிருதி

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேதம் ஓதி கொண்டே இருக்க வேண்டும். விப்ரன் என்ற அந்தணனுக்கு இதுவே முக்கிய தர்மம். மற்ற தர்மம் அனைத்தும் இதற்கு பிறகே.


वेदाभ्यासेन सततं शौचेन तपसैव च ।

अद्रोहेण च भूतानां जातिं स्मरति पौर्विकीम् ॥

- மனு ஸ்மிருதி

எப்பொழுதும் வேதம் ஓதிக்கொண்டும், ஆசாரம் தவறாமலும், ஜபம் போன்றவற்றில் தவமும், எந்த உயிருக்கும் துரோகம் செய்யாமலும், இருக்கும் விப்ரன் என்ற அந்தணனுக்கு பூர்வ ஜென்மங்களை பற்றிய ஞானம் உண்டாகும்.


पौर्विकीं संस्मरन् जातिं ब्रह्मैवाभ्यस्यते पुनः ।

ब्रह्माभ्यासेन चाजस्रमनन्तं सुखमश्नुते ॥

- மனு ஸ்மிருதி

முன் ஜென்ம வாழ்க்கையில் தான் பட்ட பல-துக்கங்களை அறிந்து கொள்ளும் விப்ரன் என்ற அந்தணன், 'இனி பிறவி வேண்டாம்' என்ற விவேகம் பெற்று வேதம் மட்டுமே ஓதி கொண்டு, நித்ய சுகம் கொடுக்கும் மோக்ஷத்துக்கு சென்று விடுகிறான்.


सावित्रान् शान्तिहोमांश्च कुर्यात् पर्वसु नित्यशः ।

पितॄंश्चैव अष्टकास्वर्चेन् नित्यम् अन्वष्टकासु च ॥

முக்கியமான நாட்களில் (அமாவாசை, பௌர்ணமி) நெய் ஹோமத்தோடு காயத்ரீயும், சாந்தி ஹோமமும் செய்ய வேண்டும். 

க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் அஷ்டமி (அஷ்டகா), நவமி (அன்வஷ்டகா) திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்ய வேன்டும்.


दूरादावसथान् मूत्रं दूरात् पादावसेचनम् ।

उच्छिष्टान्ननिषेकं च दूरादेव समाचरेत् ॥

- மனு ஸ்மிருதி

வீட்டிற்கு வெளியே தூரமாக மலஜலம் கழிக்கவும், கால் அலம்பவும், சாப்பிட்ட மிச்சத்தை கொட்டவும் இடம் அமைத்து கொள்ள வேண்டும்.


मैत्रं प्रसाधनं स्नानं दन्तधावनम् अञ्जनम् ।

पूर्वाह्ण एव कुर्वीत देवतानां च पूजनम् ॥

பல் தேய்ப்பது, குளிப்பது, அலங்கரித்து கொள்வது (கண்ணுக்கு மை போன்றவை), தெய்வ பூஜை அனைத்தையும் முற்பகலில் (12 மணிக்குள்) செய்து விட வேண்டும்.


दैवतान्यभिगच्छेत् तु धार्मिकांश्च द्विजोत्तमान् ।

ईश्वरं चैव रक्षार्थं गुरूनेव च पर्वसु ॥

- மனு ஸ்மிருதி

நன்மை விரும்புபவர்கள், கோவிலுக்கு சென்று தெய்வத்தை வழிபடுபவதையும், தர்மத்தில் இருக்கும் இரு பிறப்பாளர்களை (க்ஷத்ரிய, வைசிய, பிராம்மண) சந்திப்பதையும், தேசத்தை காக்கும் அரசனை பார்ப்பதையும், ஆத்ம குருவை தரிசிப்பதையும் வழக்கமாக கொள்ள வேண்டும்.


अभिवादयेद् वृद्धांश्च दद्याच्चैवासनं स्वकम् ।

कृताञ्जलिरुपासीत गच्छतः पृष्ठतोऽन्वियात् ॥

- மனு ஸ்மிருதி

வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால் நமஸ்கரித்து தன் ரிஷி பரம்பரையை சொல்ல வேண்டும். கை குவித்து அவர் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் நடந்தால், அவரோடு பின் செல்ல வேண்டும்.


श्रुति स्मृति ओदितं सम्यङ्निबद्धं स्वेषु कर्मसु ।

धर्ममूलं निषेवेत सदाचारमतन्द्रितः ॥

- மனு ஸ்மிருதி

ஸ்ருதி என்ற வேதமும், அந்த வேதத்தை நன்கு அறிந்த ரிஷிகள் கொடுத்த 20க்கு மேற்பட்ட  ஸ்ம்ருதிகளும் (இந்த மனு ஸ்மிருதி உட்பட) ஒவ்வொருவனுக்கும் சொன்ன கடமைகளை, தர்மத்துக்கு ஆதாரமாக சொல்லியுள்ள நல்ல ஆசாரங்களையும் கடைப்பிடித்தால், எந்த அசுபமும் நேராது.


आचारात्लभते ह्यायु: आचारादीप्सिताः प्रजाः ।

आचाराद् धनमक्षय्यम् आचारो हन्त्यलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

ஆசாரத்தோடு வாழ்வதால் ஆயுள் கூடும். ஆசாரத்தோடு வாழ்வதால் விரும்பிய புத்திரர்கள் கிடைக்கும். ஆசாரத்தோடு வாழ்வதால் செல்வம் குறையில்லாமல் கிடைக்கும். ஆசாரத்தோடு வாழ்வதால் அமங்களமான நிகழ்வுகள் நடக்காது.


दुराचारो हि पुरुषो लोके भवति निन्दितः ।

दुःखभागी च सततं व्याधितोऽल्पायुरेव च ॥

- மனு ஸ்மிருதி

ஆசாரத்தை விட்டவர்கள், உலக மக்களால் வெறுக்கப்படுவார்கள். எப்பொழுதும் ஏதோ ஒரு துக்கத்தை மனதில் சுமந்து கொண்டும், வியாதியோடும், அல்ப ஆயுசுடன் மடிவார்கள்.


सर्वलक्षण हीनोऽपि यः सदाचारवान् नरः ।

श्रद्दधानो अनसूयश्च शतं वर्षाणि जीवति ॥

- மனு ஸ்மிருதி

எந்த லக்ஷணமும் இல்லாமல் இருந்தாலும், ஆசாரத்தை மட்டும் விடாமல் ஈடுபாட்டுடன் கடைபிடித்து வாழ்பவர்கள், எதிரியாக இருந்தாலும் பிறரின் நல்ல குணத்தில் தோஷம் பார்க்காதவர்கள் (அனசூய), 100 வருடங்கள் இந்த உலகில் வாழ்வார்கள்.


यद् यत् परवशं कर्म तत् तद् यत्नेन वर्जयेत् ।

यद् यदात्मवशं तु स्यात् तत् तत् सेवेत यत्नतः ॥

- மனு ஸ்மிருதி

எந்தெந்த காரியங்கள் பிறரை நம்பி செய்ய வேண்டி இருக்கிறதோ, அந்தந்த காரியங்களை முடிந்தவரை விட்டு விட வேண்டும். எந்தெந்த காரியங்களை தானே செய்து விட முடியுமோ, அந்தந்த காரியங்களை முயற்சி செய்து முடிக்க வேண்டும்.

सर्वं परवशं दुःखं सर्वम् आत्मवशं सुखम् ।

एतद् विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः ॥

- மனு ஸ்மிருதி

பிறரை நம்பி செய்யப்படும் காரியங்கள் துக்கமே. தானே செய்யும் காரியமே சுகம். மனதில் சுகமும் துக்கமும் இதை பொறுத்து தான் அமைகிறது.


यत् कर्म कुर्वतोऽस्य स्यात् परितोषोऽन्तरात्मनः ।

तत् प्रयत्नेन कुर्वीत विपरीतं तु वर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

எந்த காரியத்தை செய்தால் மனதுக்கு பிடிக்கிறதோ, அந்த காரியத்தை சாஸ்திர விரோதமின்றி செய்ய வேண்டும். மனதிற்கு பிடிக்காத செயலை செய்ய கூடாது


आचार्यं च प्रवक्तारं पितरं मातरं गुरुम् ।

न हिंस्याद् ब्राह्मणान् गाश्च सर्वांश्चैव तपस्विनः ॥

ஆசாரங்களை சொல்லி கொடுத்தவரையோ, கல்வி போதித்தவரையோ, தகப்பனையோ, தாயையோ, குருவையோ, பிராம்மணர்களையோ, பசுவையோ, தபஸ்விகளையோ துன்புறுத்த கூடாது.


नास्तिक्यं वेदनिन्दां च देवतानां च कुत्सनम् ।

द्वेषं दम्भं च मानं च क्रोधं तैक्ष्ह्ण्यं च वर्जयेत् ॥

தன்னையும் உலகையும் படைத்தவன் இல்லை என்று நாத்தீகம் பேசுவது, வேதத்தை திட்டுவது, தேவதைகளை தூற்றுவது, வெறுப்பை உமிழ்வது, கர்வம், தற்பெருமை, கோபம், பதட்டம் அடைவது போன்றவை விலக்கத்தக்கது.


परस्य दण्डं नोद्यच्छेत् क्रुद्धो नैनं निपातयेत् ।

अन्यत्र पुत्रात्शिष्याद् वा शिष्ट्यर्थं ताडयेत् तु तौ ॥

எந்த காரணமானாலும் மற்றொருவரை அடிக்க கை ஒங்க கூடாது. கோபத்தால் எதையும் வீசி எரியவும் கூடாது. தன் பிள்ளையிடமோ, தன் மாணவனிடமோ மட்டுமே, நல்லதை போதிப்பதற்காக கை ஓங்கலாம்.


ब्राह्मणायावगुर्यैव द्विजातिर्वधकाम्यया ।

शतं वर्षाणि तामिस्रे नरके परिवर्तते ॥

ஒரு பிராம்மணனை, இரு பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) கொன்றால், கொன்றவன் 100 வருடங்கள் தாமிஸ்ரம் என்ற நரகத்தில் விழுவார்கள்.


ताडयित्वा तृणेनापि संरम्भात्मतिपूर्वकम् ।

एकविंशतीमाजातीः पापयोनिषु जायते ॥

பிரம்மத்திலேயே நிலைத்து இருக்கும் பிராம்மணனை, தெரிந்தே ஒரு புல்லால் அடித்தால் கூட, அடுத்த 21 ஜன்மங்களில் பாபிகளின் கர்பத்தில் பிறக்க செய்து விடும்.


अयुध्यमानस्योत्पाद्य ब्राह्मणस्यासृगङ्गतः ।

दुःखं सुमहदाप्नोति प्रेत्याप्राज्ञतया नरः ॥ 

தன்னிடம் சண்டைக்கு வராத பிராம்மணனை ரத்தம் வரும் அளவுக்கு அடிப்பவன், இறந்த பிறகு, நரகத்தில் தாள முடியாத பெரும் துன்பத்தை அனுபவிப்பான்.


शोणितं यावतः पांसून् सङ्गृह्णाति महीतलात् ।

तावतोऽब्दानमुत्रान्यैः शोणितोत्पादकोऽद्यते ॥

சண்டைக்கு வராத பிராம்மணனை அடித்து அவன் சிந்தும் ரத்தம் எத்தனை துளி மண்ணை நனைக்குமோ, அத்தனை வருடங்கள், ரத்தங்கள் உறிஞ்சப்பட்டு நரகத்தில் துன்பப்படுவான்.


न कदा चिद् द्विजे तस्माद् विद्वानवगुरेदपि ।

न ताडयेत् तृणेनापि न गात्रात् स्रावयेदसृक् ॥ 

இரு பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்), சண்டைக்கு வராத பிராம்மணனை நிந்திக்கவோ, அடிக்கவோ, ரத்தம் சிந்த வைக்கவோ கூடாது.


अधार्मिको नरो यो हि यस्य चाप्यनृतं धनम् ।

हिंसारतश्च यो नित्यं नैहासौ सुखमेधते ॥

- மனு ஸ்மிருதி

தர்மத்தை மீறுபவன், பொய் சொல்லி செல்வம் சேர்ப்பவன், பிறரை துன்புறுத்தி எப்பொழுதும் வாழ்பவன், இந்த உலகில் சுகமாக வாழ மாட்டான்.


न सीदन्नपि धर्मेण मनोऽधर्मे निवेशयेत् ।

अधार्मिकानां पापानामाशु पश्यन् विपर्ययम् ॥

எக்காரணத்தை கொண்டும் தர்மத்தை விட்டு விலக மனதை விட கூடாது. அதர்மம் செய்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் தன் பாபத்தினால் அழிவார்கள் என்பதை பார்த்து விலகியே இருக்க வேண்டும்.


न अधर्मश्चरितो लोके सद्यः फलति गौरिव ।

शनैरावर्त्यमानस्तु कर्तुर्मूलानि कृन्तति ॥

அதர்மம் செய்பவன் இந்த உலகில் உடனே அதன் பலனை அடைவதில்லை. ஆனால், காலம் கனியும் போது, அதற்கான பாப பலனை நிச்சயம் பெறுவார்கள் 


अधर्मेणैधते तावत् ततो भद्राणि पश्यति ।

ततः सपत्नान् जयति समूलस्तु विनश्यति ॥

அதர்மம் செய்பவன் அவன் செய்த செயல்களுக்கான காலம் வரும் வரை சுக போகங்களை அனுபவித்து கொண்டிருப்பான். தன்னைவிட பலம் குறைந்த எதிரிகளையும் வென்று விடுவான். எப்பொழுது அவன் செய்த பாபம் பரிபக்குவம் அடையுமோ, அப்போது சொத்து, பிள்ளைகளோடு வேரோடு தானும் அழிந்து போவான்.


सत्य धर्म आर्यवृत्तेषु शौचे चैवारमेत् सदा ।

शिष्यांश्च शिष्याद् धर्मेण वाच् बाहूदरसंयतः ॥

- மனு ஸ்மிருதி

உண்மை பேசுதல், அவரவர் தர்மத்தில் இருத்தல், ஒழுக்கத்தோடு இருத்தல், சுத்தமாக இருத்தல் இவற்றில் எப்போழுதும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். தன்னுடைய சிஷ்யர்களையும், இதில் ஈடுபாட்டுடன் இருக்குமாறு செய்ய வேண்டும். பேச்சு, கை, வயிறு இந்த மூன்றையும் கட்டுப்பாடுடன் வைத்து இருக்க வேண்டும்.


परित्यजेद् अर्थ कामौ यौ स्यातां धर्मवर्जितौ ।

धर्मं चाप्यसुखोदर्कं लोक सङ्क्रुष्टम् एव च ॥

அதர்ம வழியில் கிடைக்கும் இன்பத்தையும், பொருளையும் பெறுவதற்கு கூட நினைக்க கூடாது. சுகத்தை கொடுக்கும் தர்மமே என்றாலும், அதை உலகத்தார் நிந்தித்தால் அந்த சுகத்தையும் ஏற்க கூடாது.


न पाणि पाद चपलो न नेत्र चपलो अनृजुः ।

न स्याद् वाक् चपलश्चैव न परद्रोहकर्मधीः ॥

- மனு ஸ்மிருதி

கைகள், கால்கள் எப்பொழுதும் சஞ்சலம் அடைய கூடாது. காரணமில்லாமல் கைகளை ஆட்டிகொண்டு, நடந்துகொண்டு இருக்க கூடாது. கண்களும் சஞ்சலம் அடைய கூடாது. பார்க்க கூடாதவையை பார்க்க கூடாது. வாக்கு சஞ்சலம் அடைய கூடாது. வீண் பேச்சு கூடாது. யாருக்கும் துரோகம் நினைக்க கூடாது.


येनास्य पितरो याता येन याताः पितामहाः ।

तेन यायात् सतां मार्गं तेन गच्छन्न रिष्यति ॥

எந்த தர்மத்தை தந்தை பின்பற்றினாரோ, எந்த தர்மத்தை பாட்டனார் பின்பற்றினாரோ, அந்த வழியிலேயே செல். எந்த குறையும் ஏற்படாது.

ऋत्विक् पुरोहित आचार्यै मातुल अतिथि संश्रितैः ।

बाल वृद्धा तुरै वैद्यै: ज्ञाति सम्बन्धि बान्धवैः ॥

माता पितृभ्यां जामीभिर्भ्रात्रा पुत्रेण भार्यया ।

दुहित्रा दासवर्गेण विवादं न समाचरेत् ॥

- மனு ஸ்மிருதி

யாகம் செய்ய அமர்ந்திருக்கும் ருத்விக், புரோஹிதர், ஆசாரியன், தாய் மாமன், திடீரென்று வீட்டிற்கு வந்த விருந்தாளி, சிறுவன், வயதானவர், நோயாளி, வைத்தியன், தந்தை வழி பங்காளி, சம்பந்தி, தாய் வழி பந்துக்கள், தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள், பிள்ளை, மனைவி, மகளின் பிள்ளை, தான் சொல்வதை செய்யும் தாஸர்கள் - இவர்களோடு விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


एतै: विवादान् सन्त्यज्य सर्वपापैः प्रमुच्यते ।

एतैर्जितैश्च जयति सर्वान् लोकान् इमान् गृही ॥

- மனு ஸ்மிருதி

இவ்வாறு இவர்களுடன் விவாதம் செய்யாமல் இருந்தால் எந்த பாபமும் நேராது. இவர்களுடன் விவாதம் செய்யாமல் இருந்தால் அனைவராலும் வெற்றியே கிடைக்கும். 


आचार्यो ब्रह्मलोकैशः प्राजापत्ये पिता प्रभुः ।

अतिथिस्त्विन्द्रलोकेशो देवलोकस्य चर्त्विजः ॥

- மனு ஸ்மிருதி

ஆசாரியனிடம் விவாதம் செய்யாமல் இருப்பவன், ப்ரம்ம லோகம் அடைவான்.

தந்தையிடம் விவாதம் செய்யாமல் இருப்பவன், ப்ராஜாபத்யம் என்ற லோகம் அடைவான்.

ருத்விக்குகளோடு விவாதம் செய்யாமல் இருப்பவன், தேவ லோகம் அடைவான்.


जामयो अप्सरसां लोके वैश्वदेवस्य बान्धवाः ।

सम्बन्धिनो ह्यपां लोके पृथिव्यां मातृमातुलौ ॥

- மனு ஸ்மிருதி

குடும்பத்தில் உள்ள பெண்களிடம் விவாதம் செய்யாமல் இருப்பவன், அப்சரஸ்கள் இருக்கும் லோகத்தை அடைவான்.

தாய் வழி பந்துக்களோடு விவாதம் செய்யாமல் இருப்பவன், விஸ்வே தேவர்கள் இருக்கும் லோகத்தை அடைவான்..

ஸம்பந்திகளிடம் விவாதம் செய்யாமல் இருப்பவன், வருண லோகத்தை அடைவான்..

தாய் மாமனிடம் விவாதம் செய்யாமல் இருப்பவன், பூமியில் நீண்ட காலம் இருப்பான்


आकाशेशास्तु विज्ञेया बालवृद्धकृशातुराः ।

भ्राता ज्येष्ठः समः पित्रा भार्या पुत्रः स्वका तनुः ॥

- மனு ஸ்மிருதி

சிறுவர்களிடம், வயோதிகர்களிடம், ஏழைகளிடம், வியாதியஸ்தர்களிடம் விவாதம் செய்யாமல் இருப்பவர்கள், புண்ணியமான மேல் உலகங்களில் வஸிப்பார்கள்.

தந்தைக்கு சமமான மூத்த சகோதரனிடமோ, தன் மனைவியிடமோ, பிள்ளையிடமோ விவாதம் செய்வது தன் உடம்பையே பார்த்து குறை சொல்வது போலாகும்.


छाया स्वो दासवर्गश्च दुहिता कृपणं परम् ।

तस्माद् एतैरधिक्षिप्तः सहेतासञ्ज्वरः सदा ॥

- மனு ஸ்மிருதி

நிழல் போல துணையாக நிற்பவன் தாஸன் (employee). அன்பாக வளர்க்கப்பட்டவள் மகள். எப்பொழுதாவது தாஸனோ, மகளோ தன்னிடம் விவாதம் செய்தாலும், பொறுமையோடு இருக்க வேண்டும். அவர்களிடம் விவாதம் செய்ய கூடாது.


प्रतिग्रह समर्थोऽपि प्रसङ्गं तत्र वर्जयेत् ।

प्रतिग्रहेण ह्यस्याशु ब्राह्मं तेजः प्रशाम्यति ॥

- மனு ஸ்மிருதி

தானம் (பணம்) வாங்குவது என்பது அனுமதிக்கப்பட்டாலும், தேவைக்கு மீறி தானம் வாங்கினால், ப்ரம்ம தேஜஸ் அழிந்து போய் விடும்.


न द्रव्याणाम् अविज्ञाय विधिं धर्म्यं प्रतिग्रहे ।

प्राज्ञः प्रतिग्रहं कुर्याद् अवसीदन्नपि क्षुधा ॥

- மனு ஸ்மிருதி

தானம் (பணம்) வாங்குபவன் எது வாங்கத்தக்கது, எது வாங்க தகாதது என்று அறிந்து இருக்க வேண்டும். இந்த பாகுபாடு புரிந்து கொள்ளாத நிலையில், பசியால் துடித்தால் கூட தானம் வாங்க கூடாது.


हिरण्यं भूमिम् अश्वं गाम् अन्नं वास: तिलान् घृतम् ।

प्रतिगृह्णन्नविद्वांस्तु भस्मीभवति दारुवत् ॥

- மனு ஸ்மிருதி

தங்கம், பூமி, குதிரை, பசு, அன்னம், ஆடை, எள், நெய் போன்றவைகளை தகுதி இல்லாமல் தானமாக வாங்கினால், காய்ந்த விறகு பற்றி எரிந்து சாம்பலாவது போல அழிவான்.


हिरण्यम् आयु: अन्नं च भूर्गोश्चाप्योषतस्तनुम् ।

अश्व: चक्षुस्त्वचं वासो घृतं तेजस्तिलाः प्रजाः ॥

- மனு ஸ்மிருதி

தானம் வாங்க தகுதி இல்லாதவன் தங்கத்தை தானமாக வாங்கினால், ஆயுள் குறைந்து போகும். தானம் வாங்க தகுதி இல்லாதவன் அன்னம் (உணவு), பூமி, பசுவை தானமாக வாங்கினால் அவன் உடல் எரியும். தானம் வாங்க தகுதி இல்லாதவன் குதிரை (வாகனங்கள்) போன்றவற்றை தானமாக வாங்கினால் கண் பார்வை குறையும். தானம் வாங்க தகுதி இல்லாதவன் ஆடைகளை தானமாக வாங்கினால் தோலில் பொலிவு குறையும். தானம் வாங்க தகுதி இல்லாதவன் எள்ளை தானமாக வாங்குபவன் சந்ததி நசியும்.


अतपास्त्वनधीयानः प्रतिग्रहरुचिर्द्विजः ।

अम्भस्यश्मप्लवेनैव सह तेनैव मज्जति ॥

- மனு ஸ்மிருதி

கல் தோணியில் ஏறிக்கொண்டு கடலை கடக்க நினைப்பவன் எப்படி மூழ்கி அழிவானோ, அது போல, வேதம் கற்காத, ஒழுக்கமில்லாத இரு பிறப்பாளன் (வைசியன், பிராம்மணன், க்ஷத்ரியன்) தானம் வாங்கினால் அழிந்து போவான்.


तस्माद् अविद्वान् बिभियाद् यस्मात् तस्मात् प्रतिग्रहात् ।

स्वल्पकेनापि अविद्वान् हि पङ्के गौरिव सीदति ॥

- மனு ஸ்மிருதி

தான் வாங்கிய தானத்தின் பாப பலனை போக்கி கொள்ள சக்தி அற்ற அறிவீலி, சேற்றில் அகப்பட்ட பசுவை போல, நரகத்தில் வீழ்வான்.


न वार्यपि प्रयच्छेत् तु बैडालव्रतिके द्विजे ।

न बकव्रतिके पापे नावेदविदि धर्मवित् ॥

தர்மம் அறிந்த பண்புள்ளவன், பூனை (திருட்டு குணம்) போன்ற குணமுள்ள, கொக்கு போன்ற குணமுள்ள, வேதம் ஓதாத, இரு பிறப்பாளனுக்கு (வைசியன், பிராம்மணன், க்ஷத்ரியன்) துளி ஜலம் கூட தானம் செய்ய கூடாது. 


त्रिष्वप्येतेषु दत्तं हि विधिनाऽप्यर्जितं धनम् ।

दातुर्भवत्यनर्थाय परत्रादातुरेव च ॥

நியாயமாக சம்பாதித்து, அந்த செல்வத்தையே இந்த மூவருக்கு தானம் கொடுத்தாலும், கொடுத்தவனும் வாங்கியவனும் சேர்ந்து நரகத்திற்கே செல்வார்கள்.


यथा प्लवेनोपलेन निमज्जत्युदके तरन् ।

तथा निमज्जतोऽधस्तादज्ञौ दातृप्रतीच्छकौ ॥

கல் தோணியில் ஏறிக்கொண்டு கடலை கடக்க நினைப்பவன் எப்படி மூழ்கி அழிவானோ, அது போல, வேதம் கற்காத, பூனை போன்ற, கொக்கு போன்ற குணமுள்ள இரு பிறப்பாளனுக்கு (வைசியன், பிராம்மணன், க்ஷத்ரியன்) தானம் கொடுத்தால், வாங்கியவனும் கொடுத்தவனும் நரகம் போவான்.


धर्मध्वजी सदा लुब्धश्छाद्मिको लोकदम्भकः ।

बैडालव्रतिको ज्ञेयो हिंस्रः सर्वाभि सन्धकः ॥

- மனு ஸ்மிருதி

தான் செய்த தர்மத்தை தம்பட்டம் செய்பவன், தர்மத்வஜீ எனப்படுவான். தர்மத்வஜீ, பேராசைக்காரன், ஏமாற்றுக்காரன், நயவஞ்சகன், பிறரை ஹிம்சிக்கும் குணம் கொண்டவன், பிறர் புகழை கண்டு பொறுக்க முடியாதவன், இவர்களை (பைடால-வ்ரதன்) பூனை போன்ற குணம் கொண்ட இரு பிறப்பாளர்கள் (வைசியன், பிராம்மணன், க்ஷத்ரியன்) என்று அறிய வேண்டும்.


अधोदृष्टिर्नैष्कृतिकः स्वार्थ-साधन-तत्परः ।

शठो मिथ्याविनीतश्च बकव्रतचरो द्विजः ॥

- மனு ஸ்மிருதி

கீழ் தரமான பார்வை உடையவன், கொடூர குணம் கொண்டவன், தன் காரியத்தை பிறர் துன்பப்பட்டாலும் எப்படியாவது முடித்து கொள்வதில் கண்ணாக இருப்பவன், பிறர் நலனை கெடுப்பதில் கண்ணாக இருப்பவன், பார்வைக்கு பணிவு உள்ளவன் போல நடிப்பவன். இவர்களை (பகவ்ரதன்) கொக்கு போன்ற குணம் கொண்ட இரு பிறப்பாளர்கள் (வைசியன், பிராம்மணன், க்ஷத்ரியன்) என்று அறிய வேண்டும்.


ये बकव्रतिनो विप्रा ये च मार्जारलिङ्गिनः ।

ते पतन्ति अन्धतामिस्रे तेन पापेन कर्मणा ॥

எந்த அந்தணன் (விப்ரன்) பைடால-வ்ரதனாகவோ, பக-வ்ரதனாகவோ இருக்கிறானோ, அவன் செய்யும் பாப காரியங்களுக்கு அந்ததாமிஸ்ரம் என்ற நரகத்தை அடைவான்.


न धर्मस्यापदेशेन पापं कृत्वा व्रतं चरेत् ।

व्रतेन पापं प्रच्छाद्य कुर्वन् स्त्रीशूद्रदम्भनम् ॥

தன் பாபம் நீங்குவதற்காக விரதங்களை செய்யும் போது, 'தர்மத்துக்காக விரதம் செய்கிறேன்' என்று பேசி பெண்களையும், சூத்திரனையும் ஏமாற்ற கூடாது. 


प्रेत्येह चेदृशा विप्रा गर्ह्यन्ते ब्रह्मवादिभिः ।

छद्मना चरितं यच्च व्रतं रक्षांसि गच्छति ॥

பாபத்தை நீக்க தர்மம் செய்து விட்டு, வெளியில் "தர்மம் செய்கிறேன்" என்று மட்டும் சொல்லி ஏமாற்றும் இப்படிப்பட்டவர்களை பிரம்மத்தில் லயித்து இருப்பவர்கள் நிந்திக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்யும் வ்ரதங்களின் பலன் அனைத்தும் ராக்ஷஸர்களையே சென்று அடையும்.


अलिङ्गी लिङ्गिवेषेण यो वृत्तिमुपजीवति ।

स लिङ्गिनां हरत्येनस्तिर्यग्योनौ च जायते ॥

தன் வேஷத்தை மறைத்து கொண்டு, வேறு வேஷம் போட்டு அதன் மூலம் சம்பாதிப்பவன், வேறு வேஷத்திற்கு உரிமை உடையவர்களின் பாபத்தை பெறுகிறான். மறு ஜென்மத்தில் மிருகமாக பிறப்பான் 


परकीयनिपानेषु न स्नायाद् हि कदा चन ।

निपानकर्तुः स्नात्वा तु दुष्कृतांशेन लिप्यते ॥

- மனு ஸ்மிருதி

பிறர் வெட்டிய குளத்தில் குளிக்க கூடாது. அப்படி குளித்தால், குளம் அமைத்தவன் செய்த பாபங்கள், குளித்தவனுக்கு போய் சேரும்


यानशय्या आसनान्यस्य कूप उद्यान गृहाणि च ।

अदत्तान्युपयुञ्जान एनसः स्यात् तुरीयभाक् ॥

- மனு ஸ்மிருதி

வாகனம், படுக்கை, நாற்காலி, கிணறு, தோட்டம், வீடு போன்றவற்றை அதன் உரிமையாளன், தனக்கு வழங்காத நிலையில், அதை அனுபவிக்கவே கூடாது. அனுமதி இல்லாமல் அனுபவித்தால், அதன் உரிமையாளன் செய்த பாபத்தில் 4ல் ஒரு பங்கு அனுபவித்தவனுக்கு வந்து சேரும்.


नदीषु देवखातेषु तडागेषु सरःसु च ।

स्नानं समाचरेन् नित्यं गर्तप्रस्रवणेषु च ॥

- மனு ஸ்மிருதி

நதியில், தேவர்களால் அமைக்கப்பட்ட குளங்களில், நீரூற்று, அருவிகளில் தினமும் குளிக்கலாம்.


यमान् सेवेत सततं न नित्यं नियमान् बुधः ।

यमान् पतत्यकुर्वाणो नियमान् केवलान् भजन् ॥

- மனு ஸ்மிருதி

நியமத்தை கடைபிடிக்க முடியாமல் போனாலும், யமம் என்ற யோகத்தை எப்பொழுதும் கடைப்பிடிப்பேன் என்று நினைப்பவனே புத்திசாலி. யமத்தை விட்டு விட்டு, நியமத்தை மட்டும் கடைப்பிடிப்பவன் வீழ்வான். 

பிரம்மச்சரியம், இரக்கம், பொறுமை, சத்தியம், பாவம் செய்யாமை, அஹிம்சை, திருடாமை, புலன் அடக்கம் - இவை யமம்

குளிப்பது, மௌனம், ஆசாரம், விரதம், யாகம் செய்வது, வேதம் ஓதுவது - இவை நியமம்


नाश्रोत्रियतते यज्ञे ग्रामयाजिकृते तथा ।

स्त्रिया क्लीबेन च हुते भुञ्जीत ब्राह्मणः क्व चित् ॥

வேதம் கற்காதவன் செய்யும் யாகத்திலும், கிராம பூசாரி செய்யும் யாகத்திலும், பெண்கள் செய்யும் யாகத்திலும், ஆண்மை இல்லாதவன் செய்யும் யாகத்திலும், பிரம்மத்தை உபாசிக்கும் பிராம்மணன் சாப்பிட கூடாது.


अश्लीकमेतत् साधूनां यत्र जुह्वत्यमी हविः ।

प्रतीपमेतद् देवानां तस्मात् तत् परिवर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

இப்படி யாகத்தில் விடப்படும் ஹவிஸ் சாதுக்களுக்கு அலட்சுமீகரமானது. தேவர்களுக்கு விரோதமானது. இதனால் பிரம்மத்தை உபாசிக்கும் பிராம்மணன் அங்கு சென்று சாப்பிட கூடாது.


मत्तक्रुद्धातुराणां च न भुञ्जीत कदा चन ।

केशकीटावपन्नं च पदा स्पृष्टं च कामतः ॥

- மனு ஸ்மிருதி

குடி போதையிலோ, கோபத்திலோ, நோய்வாய்ப்பட்டோ இருக்கும் நபர்களிடம் உணவு வாங்கி உண்ண கூடாது. 

தலை முடி, புழு விழுந்த உணவையும் உண்ண கூடாது.

காலால் உதைக்கபட்ட உணவையும் உண்ண கூடாது.


भ्रूणघ्नावेक्षितं चैव संस्पृष्टं चापि उदक्यया ।

पतत्रिणावलीढं च शुना संस्पृष्टमेव च ॥

- மனு ஸ்மிருதி

கற்பத்தில் இருக்கும் குழந்தையை கொன்றவன் பார்த்த உணவையும், மாத விலக்காக இருக்கும் பெண் தொட்ட உணவையும், சாப்பிட கூடாது. காக்கை போன்ற பறவைகள், நாய் சாப்பிட்ட உணவையும் சாப்பிட கூடாது.


गवा च अन्नम् उपघ्रातं घुष्टान्नं च विशेषतः ।

गणान्नं गणिकान्नं च विदुषा च जुगुप्सितम् ॥

- மனு ஸ்மிருதி

பசு முகர்ந்த உணவையோ, வெட்ட வெளியில் அனைவரும் பார்க்க கொடுக்கப்படும் உணவையோ, கூட்டமாக பலரோடு சேர்ந்து கொடுக்கப்படும் உணவையோ, வேசிகள் கொடுக்கும் உணவையோ, பண்டிதர்கள் மறுக்கும் உணவையோ சாப்பிட கூடாது.


स्तेन गायनयोश्चान्नं तक्ष्ह्णो वार्धुषिकस्य च ।

दीक्षितस्य कदर्यस्य बद्धस्य निगडस्य च ॥

- மனு ஸ்மிருதி

திருடன், பாடகன், மர வேலை செய்யும் தச்சன், வட்டி வாங்குபவன், தீக்ஷிதன், கஞ்சன், கைதி, சங்கடத்தில் இருப்பவன், போன்றவர்கள் கொடுக்கும் உணவை உண்ண கூடாது.


अभिशस्तस्य षण्ढस्य पुंश्चल्या दाम्भिकस्य च ।

शुक्तं पर्युषितं चैव शूद्रस्योच्छिष्टमेव च ॥

- மனு ஸ்மிருதி

குற்றஞ்சாட்டப்பட்டவன், அலி, தம்பட்டம் அடிப்பவன் கொடுக்கும் உணவையோ, புளித்து போன உணவையோ, ஒரு நாளுக்கு மேல் உள்ள பழைய உணவையோ உண்ண கூடாது.


चिकित्सकस्य मृगयोः क्रूरस्य उच्छिष्ट भोजिनः ।

उग्रान्नं सूतिकान्नं च पर्याचान्तमनिर्दशम् ॥

- மனு ஸ்மிருதி

வைத்தியன், மிருகத்தை வேட்டையாடுபவன், கெட்ட குணம் உடையவன், பிறர் சாப்பிட்டதை சாப்பிடுபவன், கோபமாக இருப்பவன், 10 நாள் முடியாத பிரசவித்த பெண், இவர்கள் உணவை உண்ண கூடாது.


अनर्चितं वृथामांसमवीरायाश्च योषितः ।

द्विषदन्नं नगर्यन्नं पतितान्नम् अवक्षुतम् ॥ 

- மனு ஸ்மிருதி

மரியாதை இன்றி அளிக்கப்படும் உணவு, அனுமதிக்காத மாமிச உணவு, கணவனும் பிள்ளையும் இல்லாத பெண் சமைத்த உணவு, எதிரி கொடுக்கும் உணவு, ஊர் தலைவன் கொடுக்கும் உணவு, தவறான உறவு கொண்ட பதிதர்கள் உணவு, பிறர் தும்மல் பட்ட உணவு, இவைகளை உண்ண கூடாது.


पिशुनानृतिनोश्चान्नं क्रतुविक्रयिणस्तथा ।

शैलूषतुन्नवायान्नं कृतघ्नस्यान्नमेव च ॥

- மனு ஸ்மிருதி

பிறரை பற்றி கோள் சொல்பவன் உணவு, பொய் சாட்சி சொல்பவன் உணவு, யாக பலனை விற்பவன் உணவு, ஆடி பிழைப்பவன் உணவு, தையல்காரன் உணவு, நன்றி மறந்தவன் உணவு, இவைகளை உண்ண கூடாது.


कर्मारस्य निषादस्य रङ्गावतारकस्य च ।

सुवर्णकर्तुर्वेणस्य शस्त्रविक्रयिणस्तथा ॥

- மனு ஸ்மிருதி

இரும்பு கொல்லன், நிஷாதன் (மீன் தொழில் செய்பவன்), நாடக நடிகன், பொற்கொல்லன், இசை கருவிகள் வாசித்து ஜீவிப்பவன், ஆயுதங்கள் செய்பவன். இவர்கள் உணவை உண்ண கூடாது.


श्ववतां शौण्डिकानां च चैलनिर्णेजकस्य च ।

रञ्जकस्य नृशंसस्य यस्य च उपपतिर्गृहे ॥

- மனு ஸ்மிருதி

நாய் வளர்ப்பவன், மது பானம் விற்பவன், சலவை தொழில் செய்பவன், துணிக்கு சாயம் பூசுபவன், கருணையே இல்லாதவன், வேறொரு கணவனை தன் வீட்டில் வைத்திருக்கும் பெண். இவர்கள் உணவை உண்ண கூடாது.


मृष्यन्ति ये चोपपतिं स्त्रीजितानां च सर्वशः ।

अनिर्दशं च प्रेतान्नमतुष्टिकरमेव च ॥

- மனு ஸ்மிருதி

கள்ளக்காதலனோடு இருக்கும் மனைவியோடு ஒரே வீட்டில் இருப்பவன் உணவு, பெண் சொல்வதையே எப்பொழுதும் கேட்பவனின் உணவு, 10 நாள் மரண தீட்டு முடியாதவன் உணவு, தன் மனதுக்கு பிடிக்காத உணவு. இவைகளை உண்ண கூடாது.


राजान्नं तेज आदत्ते शूद्रान्नं ब्रह्मवर्चसम् ।

आयुः सुवर्णकारान्नं यशश्चर्मावकर्तिनः ॥

- மனு ஸ்மிருதி

அரசனின் உணவை சாப்பிடுவதால், சாப்பிட்டவனின் பொலிவு குறையும்

சூத்திரனின் (employee) உணவை சாப்பிடுவதால், சாப்பிட்டவனின் தெய்வத்தன்மை குறையும்

பொற்கொல்லனின் உணவை சாப்பிடுவதால், சாப்பிட்டவனின் ஆயுள் குறையும்

செருப்பு தொழில் செய்பவனின் உணவை சாப்பிடுவதால், சாப்பிட்டவனின் புகழ் குறையும்


कारुकान्नं प्रजां हन्ति बलं निर्णेजकस्य च ।

गणान्नं गणिकान्नं च लोकेभ्यः परिकृन्तति ॥

- மனு ஸ்மிருதி

சிற்பியின் உணவை சாப்பிடுவதால், சாப்பிட்டவனின் சந்ததி குறையும்.

சலவை தொழில் செய்பவனின் உணவை சாப்பிடுவதால், சாப்பிட்டவனின் பலம் குறையும். பலருக்கு வழங்கப்படும் உணவையோ, வேசிகள் கொடுக்கும் உணவையோ உண்டால் நல்ல லோகங்கள் எளிதில் கிடைக்காது.


पूयं चिकित्सकस्यान्नं पुंश्चल्यास्त्वन्नमिन्द्रियम् ।

विष्ठा वार्धुषिकस्यान्नं शस्त्रविक्रयिणो मलम् ॥

- மனு ஸ்மிருதி

மருத்துவனின் உணவை உண்டால்,  சீழை உண்பதற்கு சமம். 

அலியின் உணவை உண்டால், வீரியத்தை உண்பதற்கு சமம்.

வட்டி வியாபாரம் செய்பவன், ஆயுதம் செய்பவனின் உணவை உண்டால், மலத்தை உண்பதற்கு சமம்.


य एतेऽन्ये त्वभोज्यान्नाः क्रमशः परिकीर्तिताः ।

तेषां त्वगस्थिरोमाणि वदन्त्यन्नं मनीषिणः ॥

- மனு ஸ்மிருதி

இவர்கள் தவிர, இதுவரை சொன்ன மற்றவர்கள் உணவை உண்டால், அது அஸ்தியையும், முடியையும் சாப்பிட்டதற்கு சமம்.


भुक्त्वाऽतोऽन्यतमस्यान्नममत्या क्षपणं त्र्यहम् ।

मत्या भुक्त्वाऽचरेत् कृच्छ्रं रेतोविण्मूत्रमेव च ॥

தெரியாமல் இவர்கள் உணவை சாப்பிட்டால், 3 நாட்கள் பட்டினி கிடந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். தெரிந்தே இவர்கள் உணவை சாப்பிட்டால், க்ருச்ர வ்ரதம் இருந்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பால் மட்டுமே குடித்து 3 நாட்களும், அதே போல வெண்ணெய் மட்டுமே, தண்ணீர் மட்டுமே, காற்று மட்டுமே குடித்து மூன்று மூன்று நாட்களும் இருப்பது க்ருச்ர வ்ரதம் (மொத்தம் 12 நாட்கள்)


नाद्यात्शूद्रस्य पक्वान्नं विद्वानश्राद्धिनो द्विजः ।

आददीताममेवास्मादवृत्तावेकरात्रिकम् ॥

- மனு ஸ்மிருதி

எந்த ஒரு இரு பிறப்பாளனும் (வைசியன், பிராம்மணன், க்ஷத்ரியன்), தன் பெற்றோருக்கு திவசம் செய்யாத சூத்திரன் சமைத்த உணவை சாப்பிட கூடாது. பசியால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே, தானியமாக மட்டும் வாங்கி கொள்ளலாம்.


श्रोत्रियस्य कदर्यस्य वदान्यस्य च वार्धुषेः ।

मीमांसित्वोभयं देवाः सममन्नमकल्पयन् ॥

- மனு ஸ்மிருதி

ஒரு பக்கம், வேத அத்யயனம் செய்தவன், ஆனால் மஹா கஞ்சன்.

மறு பக்கம், வட்டி தொழில் செய்பவன் ஆனால் வள்ளல்.

இவர்களின் உணவு  சமம் என்று தேவர்கள் சொன்னார்கள்.


तान् प्रजापतिराहैत्य मा कृध्वं विषमं समम् ।

श्रद्धापूतं वदान्यस्य हतमश्रद्धयेतरत् ॥ 

- மனு ஸ்மிருதி

அப்பொழுது ப்ரம்மா, "விஷமமாக இருவரது உணவும் சமம் என்று சொல்லாதீர்கள். மனமுவந்து ஈடுபாட்டுடன் கொடுக்கும் (வட்டி வியாபாரியின்) உணவே ஏற்க தக்கது. மனமில்லாமல் கொடுக்கும் (வேதம் ஓதியவன்) உணவு ஏற்க தகாதது" என்றார்.


श्रद्धयेष्टं च पूर्तं च नित्यं कुर्यादतन्द्रितः ।

श्रद्धाकृते ह्यक्षये ते भवतः स्वागतैर्धनैः ॥

யாகம், தர்ம காரியங்கள் போன்றவை செய்யும் போது, சுயநலமில்லாமல் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். இதற்கு தேவையான செல்வத்தை நியாயமாக சேர்த்து இருக்க வேண்டும். இப்படி செய்தால் நிலையான சுகங்கள் வாழ்வில் உண்டாகும்


दानधर्मं निषेवेत नित्यमैष्टिकपौर्तिकम् ।

परितुष्टेन भावेन पात्रमासाद्य शक्तितः ॥

தானம் என்ற தர்மம் செய்யும் போது, யாகம் செய்யும் போதும், பாத்திரம் அறிந்து தன்னால் முடிந்த வரை கொடுக்க வேண்டும். மனமுவந்து மகிழ்ச்சியோடு தர்மம் செய்ய வேண்டும். 


यत् किं चिदपि दातव्यं याचितेनानसूयया ।

उत्पत्स्यते हि तत् पात्रं यत् तारयति सर्वतः ॥

- மனு ஸ்மிருதி

பிச்சை கேட்பவனுக்கு சிறிதாவது தானம் செய்ய வேண்டும். அவனிடம் குறை காணாமல் கொடுக்க வேண்டும். பாவத்தின் காரணமாக கிடைக்க வேண்டிய நரகத்திற்கு போக விடாமல், தானம் வாங்கியவர்கள் காக்கிறார்கள்.


वारिदस्तृप्तिमाप्नोति सुखमक्षय्यमन्नदः ।

तिलप्रदः प्रजामिष्टां दीपदश्चक्षुरुत्तमम् ॥

- மனு ஸ்மிருதி

தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதால் மனதில் எதை பார்த்தாலும் திருப்தி உணர்வு ஏற்பட ஆரம்பிக்கும். அன்னம் கொடுப்பதால் அழிவில்லா சுகம் உண்டாக ஆரம்பிக்கும். எள்ளை தானம் வழங்குவதால் சந்ததி உண்டாகும். தீப தானம் செய்வதால் நல்ல கண் பார்வை உண்டாகும்.


भूमिदो भूमिमाप्नोति दीर्घमायुर्हिरण्यदः ।

गृहदोऽग्र्याणि वेश्मानि रूप्यदो रूपमुत्तमम् ॥

- மனு ஸ்மிருதி

பூமி தானம் செய்பவர்களுக்கு மேலும் பூமி கிடைக்கும். தங்கம் தானமாக கொடுப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். வீடு தானம் கொடுப்பவனுக்கு மேலும் பல வீடுகள் ப்ராப்தியாகும். வெள்ளியை தானம் செய்பவர்களுக்கு பேரழகு உண்டாகும்.


वासोदश्चन्द्रसालोक्यमश्विसालोक्यमश्वदः ।

अनडुहः श्रियं पुष्टां गोदो ब्रध्नस्य विष्टपम् ॥

ஆடை தானம் செய்பவன் சந்திர லோகம் செல்வான். குதிரை (வாகனம்) தானம் செய்பவன் அஸ்வினி குமாரர்கள் இருக்கும் லோகம் செல்வான். காளையை (விவசாயம் செய்ய) தானம் செய்பவன் நல்ல செய்திகளை கேட்பான். பசுவை தானம் செய்பவன் சூரிய லோகத்தை அடைவான்.


यानशय्याप्रदो भार्यामैश्वर्यमभयप्रदः ।

धान्यदः शाश्वतं सौख्यं ब्रह्मदो ब्रह्मसार्ष्टिताम् ॥

- மனு ஸ்மிருதி

வாகனம், படுக்கை போன்றவை தானம் செய்பவன் நல்ல குணமுள்ள மனைவியை அடைவான். அடைக்கலம் கொடுத்தவன் ஐஸ்வர்யம் அடைவான். தானியங்கள் தானம் செய்பவன் சௌக்கியத்தை அடைவான். வேதத்தை சொல்லி கொடுத்தவன் ப்ரம்ம லோகம் அடைவான்


सर्वेषामेव दानानां ब्रह्मदानं विशिष्यते ।

वार्यन्नगोमहीवासस्।तिलकाञ्चनसर्पिषाम् ॥

- மனு ஸ்மிருதி

ப்ரம்ம ஞானத்தை (வேதத்தை) தானமாக கொடுப்பது, தண்ணீர், அன்னம், பசு, பூமி, ஆடை, எள், தங்கம், நெய் போன்றவைகளை தானம் செய்வதை விட மிக மிக உயர்ந்தது.


येन येन तु भावेन यद् यद् दानं प्रयच्छति ।

तत् तत् तेनैव भावेन प्राप्नोति प्रतिपूजितः ॥

- மனு ஸ்மிருதி

எதை எதை நினைத்து கொண்டு எந்த எந்த தானம் செய்யப்படுகிறதோ, அந்த அந்த பலன் கிடைக்கும். 


योऽर्चितं प्रतिगृह्णाति ददात्यर्चितमेव वा ।

तावुभौ गच्छतः स्वर्गं नरकं तु विपर्यये ॥

- மனு ஸ்மிருதி

எவன் பகவானுக்கு பூஜை (நெய்வேத்யம்) செய்த பிறகு அதை தானம் செய்கிறானோ, எவன் பூஜை செய்யப்பட்டதையே தானமாக வாங்குகிறானோ இருவரும் சொர்க்கத்தை அடைவார்கள். நெய்வேத்யம் செய்யப்படாத பொருளை தானம் செய்பவன் நரகத்தை அடைவான்.

நெய்வேத்யம் செய்யப்படாத பொருளை தானம் வாங்குபவன் நரகத்தை அடைவான்.


न विस्मयेत तपसा वदेदिष्ट्वा च नानृतम् ।

नार्तोऽप्यपवदेद् विप्रान्न दत्त्वा परिकीर्तयेत् ॥

- மனு ஸ்மிருதி

தன்னுடைய தவத்தை (முயற்சியில் உள்ள பிடிவாதம்) கண்டு பெருமைப்பட்டு கொள்ள கூடாது. யாகம் (பொது சேவை) செய்யும் போது பொய் பேச கூடாது. தன் துன்பத்துக்காக எக்காரணம் கொண்டும் அந்தணன் என்ற வேதியன் என்ற விப்ரனை திட்ட கூடாது. தானம் கொடுத்து விட்டு அதை விளம்பரம் செய்ய கூடாது.


यज्ञोऽनृतेन क्षरति तपः क्षरति विस्मयात् ।

आयुर्विप्रापवादेन दानं च परिकीर्तनात् ॥

- மனு ஸ்மிருதி

பொய் பேசுவதால் யாகத்தின் (பொது சேவை) பலன் கிடைக்காமல் அழியும். கர்வபடுவதால் தவம் (முயற்சி) அழியும். வேதியனை துன்பம் செய்தால் ஆயுள் குறையும். செய்த தானத்தை பிறரிடம் சொன்னால், தானத்தின் தெய்வ பலன் கிடைக்காமல் போகும்.


धर्मं शनैः सञ्चिनुयाद् वल्मीकमिव पुत्तिकाः ।

परलोकसहायार्थं सर्वभूतान्यपीडयन् ॥

- மனு ஸ்மிருதி

எப்படி எறும்பு சிறிது சிறிதாக மண் சேர்த்து சேர்த்து பெரிய புற்று கட்டுமோ, அது போல தர்ம காரியங்களை முடிந்த வரை சிறிது சிறிதாக செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் எந்த உயிருக்கும் (மனிதனோ/மிருகமோ) தீங்கு செய்யாமல் வாழும் போது, மேலுலகங்கள் (சொர்க்க லோகங்கள், மகர லோகங்கள், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம், பாற்கடல், கைலாசம், வைகுண்டம்) கிடைக்கும்


नामुत्र हि सहायार्थं पिता माता च तिष्ठतः ।

न पुत्रदारं न ज्ञाति: धर्म: तिष्ठति केवलः ॥

- மனு ஸ்மிருதி

தந்தையோ, தாயோ, நம்மோடு கடைசி வரை வரப்போவதில்லை. மனைவியோ, பிள்ளையோ, உறவினர்களோ கூட வரப்போவதில்லை. ஒருவன் இறந்த பிறகும் கூடவே வரப்போவது பூலோகத்தில் அவரவர்கள் செய்த தர்மமே (அறம்)


एकः प्रजायते जन्तु: एक एव प्रलीयते ।

एको अनुभुङ्क्ते सुकृतम् एक एव च दुष्कृतम् ॥

- மனு ஸ்மிருதி

ஜீவன் தனியாகவே உடலுக்குள் பிரவேசிக்கிறான். ஜீவன் தனியாகவே உடலை விட்டு செல்கிறான். ஜீவன் தனியாகவே அந்த உடலை, மனதை கொண்டு செய்யும் நல்ல வினைகளுக்கு பயனை அனுபவிக்கிறான். ஜீவன் தனியாகவே  தான் செய்யும் கெட்ட வினைகளுக்கு துன்ப பயனை அனுபவிக்கிறான்.


मृतं शरीरम् उत्सृज्य काष्ठलोष्टसमं क्षितौ ।

विमुखा बान्धवा यान्ति धर्मस्तम् अनुगच्छति ॥

- மனு ஸ்மிருதி

ஜீவன் பிரிந்த பிறகு, கிடக்கும் இவனின் சவ உடலை, கட்டையை வைத்து அடுக்கி கொளுத்தி விட்டோ, மண்ணில் புதைத்து விட்டோ இவனை சுற்றி இருந்தவர்கள் சென்று விடுவார்கள். இந்த ஜீவனோடு கூடவே வரப்போவது பூலோகத்தில் இவன் வாழ்ந்த, செய்த தர்மம் (அறம்) மட்டுமே.


तस्माद् धर्मं सहायार्थं नित्यं सञ्चिनुयात्शनैः ।

धर्मेण हि सहायेन तमस्तरति दुस्तरम् ॥

- மனு ஸ்மிருதி

பாபம் என்று பெரிய இருட்டை, தர்மத்தின் பயனால் தான் கடக்க முடியும். மரணத்திற்கு பிறகும் காப்பாற்ற கூடிய தர்மத்தை பூலோகத்தில் வாழும் போது, சிறிது சிறிதாக செய்து, சேர்த்து கொள்ள வேண்டும் 


धर्मप्रधानं पुरुषं तपसा हतकिल्बिषम् ।

परलोकं नयत्याशु भास्वन्तं खशरीरिणम् ॥

பூலோகத்தில், அறத்தை (தர்மத்தை) விட்டு விலகாமல் தன் காரியத்தை செய்து கொண்டு இருக்கும் ஜீவனை, பாபம் என்ற இருட்டிலிருந்து தாண்ட செய்து, பரலோகங்களுக்கு (மேல் உலகங்கள்) அந்த தர்மமே கூட்டி சென்று விடும்.


उत्तमै: उत्तमै: नित्यं सम्बन्धान् आचरेत् सह ।

निनीषुः कुलम् उत्कर्षम् अधमान्‌अधमांस्त्यजेत् ॥

ஒருவன் தன்னை உயர்த்தி கொள்ள நினைத்தால், எப்பொழுதும் தன்னை விட உயர்ந்த ஆசாரத்தை (ஒழுக்கம்) உடையவர்கள் போல இருக்க ஆசை பட வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். தன்னை விட ஆசாரம் (ஒழுக்கம்) குறைந்தவர்களோடு பழகுவதால், தன்னை மட்டுமில்லாமல் குலத்தையே சிறுமைபடுத்தி கொள்ள நேரிடும்


उत्तमान् उत्तमान् एव गच्छन् हीनांस्तु वर्जयन् ।

ब्राह्मणः श्रेष्ठताम् एति प्रत्यवायेन शूद्रताम् ॥

உயர்ந்த ஒழுக்கம் உடையவர்கள் உயர்ந்த மேல் உலகங்கள் அடைவார்கள். பிரம்மத்தை அடைவதே லட்சியம் என்று வாழும் பிராம்மணன், உலக ஆசைகள் கொண்டவர்களோடு பழக ஆரம்பித்தால், பிராம்மண குணத்தை இழந்து சூத்திர குணத்தை (employee mindset) பெற்று விடுவான்.


दृढकारी मृदुर्दान्तः क्रूराचारैरसंवसन् ।

अहिंस्रो दमदानाभ्यां जयेत् स्वर्गं तथाव्रतः ॥

எடுத்த காரியத்தில் உறுதியும், மென்மையான குணமும், பொறுத்து கொள்ளும் குணமும், தீய பழக்கவழக்கம் (ஆசாரங்களை) கொண்டவனிடமிருந்து விலகியும், பிற உயிர்களை கொல்லாமலும், தன் குணத்தை கட்டுபடுத்தி வைத்து இருப்பவர்கள் நிச்சயம் ஸ்வர்கம் முதலான லோகங்களுக்கு செல்வார்கள்.


एधौदकं मूलफलमन्नम् अभ्युद्यतं च यत् ।

सर्वतः प्रतिगृह्णीयान्मध्वथाभयदक्षिणाम् ॥

எரிக்க பயன்படும் பொருட்கள், தண்ணீர், கிழங்கு, பழம், தேன்,‌ தானாக கொடுக்கப்பட்ட உணவு போன்றவற்றை யாரிடமும் வாங்கலாம்.


आहृताभ्युद्यतां भिक्षां पुरस्तादप्रचोदिताम् ।

मेने प्रजापतिर्ग्राह्यामपि दुष्कृतकर्मणः ॥

பிறர் தானாக விருப்பப்பட்டு உணவு கொடுத்தால், முன்பு ஏற்று கொள்வதாக சொல்லப்பட்ட உணவு கிடைத்தால், அந்த உணவை யாரிடமும் வாங்கி கொள்ளலாம் என்று பிரஜாபதியான பிரம்ம தேவர் அங்கீகரிக்கிறார்.


नाश्नन्ति पितरस्तस्य दशवर्षाणि पञ्च च ।

न च हव्यं वहत्यग्निर्यस्तामभ्यवमन्यते ॥

இந்த தானத்தை ஏற்க மறுப்பவன் கொடுக்கும் எதையும் பித்ருக்கள் அடுத்த 15 வருடங்களுக்கு ஏற்க மாட்டார்கள். அதே போல அக்னியில் கொடுக்கப்படும் ஹவிஸும் தேவர்களை போய் சேராது.


शय्यां गृहान् कुशान् गन्धानपः पुष्पं मणीन् दधि ।

धाना मत्स्यान् पयो मांसं शाकं चैव न निर्णुदेत् ॥

படுக்கை, வீடு, தர்ப்பை, சந்தனம் போன்ற வாசனை பொருட்கள், பூ, மணிகள், தயிர், அவல், மீன், பாயசம், மாமிசம், காய்கறி போன்றவை தானமாக கொடுத்தால் மறுக்க கூடாது.


गुरून् भृत्यांश्चोज्जिहीर्षन्नर्चिष्यन् देवत अतिथीन् ।

सर्वतः प्रतिगृह्णीयान्न तु तृप्येत् स्वयं ततः ॥

தன் குருவுக்காகவும், தன்னை நம்பி இருப்பவர்களுக்காவும், தேவதைகளுக்காவும், விருந்தாளிக்காகவும் எதையும் தானமாக ஏற்கலாம். ஆனால் அதில் எதையும் தனக்கு என்று பயன்படுத்தி கொள்ள கூடாது.


गुरुषु त्वभ्यतीतेषु विना वा तैर्गृहे वसन् ।

आत्मनो वृत्तिमन्विच्छन् गृह्णीयात् साधुतः सदा ॥

குருவை இழந்து நிற்கும் சிஷ்யன், வீட்டில் ஒருவரும் இல்லாமல் தனித்து இருப்பவன், நல்ல குணம் கொண்ட சாதுக்கள் கொடுக்கும் உணவையே உண்டு வாழ வேண்டும். 


आर्धिकः कुलमित्रं च गोपालो दासनापितौ ।

एते शूद्रेषु भोज्यान्ना याश्चात्मानं निवेदयेत् ॥

தன் பூமியை தானே உழுது பயிர் செய்பவன், தன் குலத்தில் பெரும் பற்று கொண்டவன், பசுக்களை காப்பவன், குருவுக்கு அடிபணிந்து (தாஸனாக) அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பவன். இவர்கள் சூத்திரனாகவே இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று கொள்ளலாம்.


यादृशोऽस्य भवेदात्मा यादृशं च चिकीर्षितम् ।

यथा चौपचरेदेनं तथाऽत्मानं निवेदयेत् ॥

தான் எப்படிப்பட்ட எண்ணங்கள் (attitude) கொண்டவன், தான் எப்படிப்பட்ட வேலை செய்வதில் (work experience) நிபுணன், தான் எந்த விதத்தில் சேவை செய்ய திறன் (skill) கொண்டவன், என்பதை சூத்திரன் (employee) மனதில் பொய் இல்லாமல் கூறி வேலையில் சேர வேண்டும். 


यो अन्यथा सन्तम्‌ आत्मानम्‌‌ अन्यथा सत्सु भाषते ।

स पापकृत्तमो लोके स्तेन आत्मापहारकः ॥

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவனை (ஆர்ஜவம் இல்லாதவர்களை), பாவ செயல் செய்பவன் என்று உலகம் தூற்றும். இப்படிப்பட்டவர்கள் தன் ஆத்மாவையே ஏமாற்றும் திருடர்கள் என்று அறியலாம். 


वाच्यर्था नियताः सर्वे वाङ्मूला वाग्विनिःसृताः ।

तांस्तु यः स्तेनयेद् वाचं स सर्वस्तेयकृन्नरः ॥

வாக்கு தான் பல விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது. வாக்கை தான் ஒலிக்கு ஆதாரமாக கொண்டு இருக்கிறது. ஒலி வாக்கு மூலமாக தான் வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட வாக்கை மாற்றி மாற்றி பேசும் மனிதனை "திருடன்" என்றே அறிய வேண்டும்.


महर्षिपितृदेवानां गत्वाऽनृण्यं यथाविधि ।

पुत्रे सर्वं समासज्य वसेन् माध्यस्थ्यमाश्रितः ॥

- மனு ஸ்மிருதி

ரிஷிகள் கொடுத்த கிரந்தங்களை, வேதத்தை சொல்லி ரிஷி கடனையும்,

உடல் கொடுத்து வளர்த்த பெற்றோர்களை உயிரோடு இருக்கும் வரை காப்பாற்றி, அவர்கள் இறந்த பிறகும் ஸ்ரார்த்தம் முதலியவை நன்றியோடு செய்து பித்ரு கடனையும், அக்னி காரியங்கள் செய்து தேவ கடனையும் அடைப்பது, குடும்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கு பொது விதி. தன் பிள்ளை வளர்ந்த பிறகு, அவனிடம் பொறுப்பை கொடுத்து விட்டு, எந்த விஷயத்திலும் ஈடுபடாமல் ஒரு மத்யஸ்தனக அமைதியாக இருக்க வேண்டும்.


एकाकी चिन्तयेन् नित्यं विविक्ते हितम् आत्मनः ।

एकाकी चिन्तयानो हि परं श्रेयो अधि गच्छति ॥

பொறுப்பை பிள்ளையிடம் கொடுத்து, பரமாத்மாவையே ஒரு மனத்தோடு சிந்தனை செய்து கொண்டு, தன் ஆத்மாவுக்கு நல்லதான காரியங்களே செய்து கொண்டு, தனிமையிலேயே ஆத்ம சிந்தனை செய்து கொண்டு இருந்தால், பெரும் புகழுடன் அவன் மேல் உலகங்களுக்கு செல்வான்.


एषौदिता गृहस्थस्य वृत्तिर्विप्रस्य शाश्वती ।

स्नातकव्रत कल्पश्च सत्त्ववृद्धिकरः शुभः ॥

இவ்வாறாக விப்ரன் என்ற வேதியன் என்ற அந்தணன் கிருஹஸ்தனாக எப்படி வாழ்ந்து  நல்ல லோகங்களை அடைய முடியும் என்று சொல்லப்பட்டது. ஸ்நாதக விரதம் சொல்லப்பட்டன. சத்வ குணம் மேலோங்குவதற்கான நல்ல விஷயங்களும் சொல்லப்பட்டன.


अनेन विप्रो वृत्तेन वर्तयन् वेदशास्त्रवित् ।

व्यपेतकल्मषो नित्यं ब्रह्मलोके महीयते ॥

வேத சாஸ்திரம் அறிந்த விப்ரன் என்ற அந்தணன் என்ற வேதியன், இதுவரை சொன்னது போல வாழ்ந்தால், ப்ரம்ம லோகத்தை நிச்சயம் அடைவான்.