Followers

Search Here...

Friday 29 April 2022

பேராசை, கோபம், அகங்காரம் - கொண்ட மனிதர்களை நினைத்து வேதனைப்படுகிறார், யம தர்மன்... மஹாபாரதம் பேசுகிறது.

பேராசை, கோபம், அகங்காரம் - கொண்ட மனிதர்களை நினைத்து வேதனைப்படுகிறார், யம தர்மன்

த்ருதராஷ்டிரன் பாரத போர் முடிந்த பிறகு 100 பிள்ளைகளையும் இழந்த புத்ரசோகத்தில் மூழ்கி இருந்தான்.


விதுரர் சமாதானம் செய்து பேசலானார் 


अहॊ विनिकृतॊ लॊकॊ लॊभेन च वशीकृतः |

लॊभ क्रॊधमदॊन्मत्तॊ नात्मानम् अवबुध्यते || 

- vyasa mahabarata

Alas! This world is being deceived! Everyone is fascinated by greed!

Greed, anger, and arrogance (religion) make every human being self-arrogant.

அந்தோ! இந்த உலகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறதே! பேராசையினால் அனைவரும் கவரப்பட்டு இருக்கிறார்களே!

பேராசையும், கோபமும், அகங்காரமும் (மதமும்) தானே ஒவ்வொரு மனிதனையும், தன்னை உணர விடாமல் செய்கிறது.


कुलीनत्वेन रमते दुष्कुलीनान् विकुत्सयन् |

धनदर्पेण दृप्तश् च दरिद्रान् परिकुत्सयन् || 

- vyasa mahabarata

He who is born of a good caste, by greed or anger or arrogance, rejoices when he curses a person born of a low caste.

Similarly, The rich insult the poor  out of greed or anger or arrogance.

இந்த மூன்றினால் தானே, நல்ல குலத்தில் பிறந்தோம் என்பதற்காக, இழி குலத்தில் பிறந்தவனை திட்டி, ஆனந்தப்படுகிறான்.

இந்த மூன்றினால் தானே, பணக்காரன், ஏழையை அவமதித்து திட்டுகிறான்.


मूर्खान् इति परान् आह नात्मानं समवेक्षते |

शिक्षां क्षिपति चान्येषां नात्मानं शास्तुम् इच्छति || 

- vyasa mahabarata

One regards others to be ignorant fools, but seldom takes a survey of one’s own self. One attributes faults to others but is never desirous to punish one’s own self.

இந்த மூன்றினால் தானே,  மூர்க்கனாக இருந்து கொண்டு, மற்றவன் எப்படி? என்று எடை போடுகிறான். ஆனால், தான் யார் (ஆத்மா) என்று உணருவதில்லையே!

இந்த மூன்றினால் தானே, அடுத்தவர் குறையை பார்த்து அறிவுரை சொல்ல ஆசைப்படுகிறான்.

இந்த மூன்றினால் தானே, தான் செய்யும் தவறுக்கு தனக்கு புத்திமதி சொல்லிக்கொள்ள ஆசைப்படாமல் இருக்கிறான் !


अध्रुवे जीवलॊके ऽस्मिन् यॊ धर्मम् अनुपालयन् |

जन्मप्रभृति वर्तेत प्राप्नुयात परमां गतिम् ||

- vyasa mahabarata (Stri Parva)

Whoever listens to this sruti (this sentence uttered by the widower) and protects and follow essense of dharma from the birth will attains the ultimate destiny (Salvation).

எவன் இந்த ஸ்ருதியை (விதுரர் சொன்ன இந்த வாக்கியம்) கேட்டு, நிலையற்றதான இந்த பூலோக வாழ்க்கையில் பிறந்தது முதல் தர்மத்தை காத்து வருவானோ அவன் உத்தம கதியை அடைகிறான்.


एवं सर्वं विदित्वा वै यस् तत्त्वम् अनुवर्तते |

स प्रमॊक्षाय लभते पन्थानं मनुजाधिप ||

- vyasa mahabarata

O king (Drutharashtra)! 

Whoever knows the philosophy of Dharma and lives dharmic life, gets free himself from the path of samsara.

அரசே (த்ருதராஷ்டிரா) !

எவன் தர்மத்தின் தத்துவத்தை அறிந்து, வாழ்க்கையை வாழ்கிறானோ! அவன் தன்னை சம்சார பாதையில் இருந்து விடுவித்து கொள்கிறான்.

இவ்வாறு விதுரனாக அவதரித்திருந்த யம தர்மன், த்ருதராஷ்டிரன் மூலமாக பேராசை, கோபம், அகங்காரம் என்ற மூன்றின் அபாயத்தை சொல்லி, சம்சார சக்கரத்தில் இருந்து தப்பிக்க வழியை சொன்னார்.

Yama Dharma, thus incarnated as Vithura, told us, the three dangers "greed, anger, and pride" through Drudharashtra, and the way to escape from the wheel of samsara (to attain moksha).

Saturday 23 April 2022

குணவான் என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? ராமரே 'குணவான்', ராமரே 'வீர்யவான்' என்று தமிழரான வால்மீகி 'ராமாயணம்' காட்டுகிறார். தெரிந்து கொள்வோம்.

'குணவான்' என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? '

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கலாம். அதற்காக நம்மை குணவான் என்று சொல்லிவிட முடியாது.

'சரணாகதி செய்த பிறகு, பிறருடைய குற்றத்தை அறிந்தும், மன்னிப்பது' என்பது உயர்ந்த குணம்.


'தன்னை நம்பியவர்கள் செய்யும்/செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் யாரிடம் இருக்குமோ!' அவர்களை 'குணவான்' என்று சொல்கிறோம்.

எப்படிப்பட்ட எதிரியானாலும், எதிர்த்து வெற்றி கொள்ளும் மஹாவீரனை, "வீர்யவான்" என்று சொல்கிறோம்.

'எதிரியை தண்டிக்கும் மஹாவீரனாக இருந்தும், இப்படி ஒரு குணவான், என் சமகாலத்தில் வாழ்கிறாரா? எதிரி என்று தெரிந்தும், குற்றவாளி என்று தெரிந்தும், தண்டிக்கப்படவேண்டியவன் என்று தெரிந்தும், தன்னை சரணமடைந்தால் மன்னிக்கும் குணம் கொண்டவன் உலகில் இப்பொழுது இருக்கிறாரா?' என்று அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த வால்மீகி, நாரதரை கேட்கிறார்.

कोन्वस्मिन् सांप्रतम् लोके 

गुणवान् कः च वीर्यवान् |

- வால்மீகி ராமாயணம்

40000 ராக்ஷஸ படையோடு, கர-தூஷணன் ராமபிரானை கொல்ல வந்தான். தனி ஒருவனாக ராமபிரான் மட்டுமே நின்று, 40000 பேரையும் ஒழித்து காட்டினார்.

ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்து சீதையை மீட்க நின்றார்.


'சீதாதேவியை ராமபிரான் இல்லாத சமயத்தில் கடத்தி, இங்கே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு' என்று சொன்ன விபீஷணனை, ராவணன் எட்டி உதைத்து வெளியேற்றிய பிறகு, ராமபிரானை சரணாகதி செய்ய வருகிறான். 

சுக்ரீவன், 'ராக்ஷஸனான விபீஷணன், போர் நடக்க போகும் சமயத்தில், எதிரி பக்கத்தில் இருந்து வந்து இருக்கிறான். மஹா ஆபத்து' என்றான்.

ராவணனை நேருக்கு நேர் போர் செய்து வீழ்த்தும் மஹாவீரனாக இருந்தும், 'என்னிடம் சரணம் என்று ஒருவன் வந்தால், அவனுக்கு அபயம் கொடுப்பது எனக்கு விரதம். விபீஷணனை மட்டுமல்ல, அவனோடு அந்த ராவணனே வந்து இருந்தால் (रावणः स्वयम्) அவனையும் மன்னித்து விடுவேன்" என்றார்.

आनयैनं हरिश्रेष्ठ

दत्तमस्याभयं मया ।

विभीषणो वा सुग्रीव

यदि वा रावणः स्वयम्

- வால்மீகி ராமாயணம்

தன்னை அண்டியவன் செய்த குற்றத்தை மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு மனிதனை பார்ப்பதே அரிது. ராமபிரானுக்கோ, கடல் போன்ற குணங்களில் இதுவும் ஒரு குணமாக இருந்தது.


இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், "ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, தண்டனை ஒன்றே வழி. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று சொல்லி இருப்பான்.


சீதாதேவியை தொலைத்து, பஞ்சவடியில் (மஹாராஷ்டிரா) இருந்து நடந்து, ராமேஸ்வரம் வரை வந்து, 5 நாளில் வானரர்கள் பாலம் அமைக்க, கடும்கோபத்துடன் போருக்கு தயாராக இருந்த சமயத்தில், விபீஷணன் என்று ஒருவன் சரணாகதி செய்ய வருகிறான் என்றதும், "அவனோடு, ராவணன் வந்திருந்தாலும் அபயம் கொடுக்கிறேன்" என்று சொல்வதை பார்க்கும் போது, ராமபிரான் "குணவான்" என்று தெரிகிறது.  


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனை மன்னிக்க அப்பொழுதும் தயாராக இருந்தார் என்று பார்க்கும் போது தான், "பதித பாவன சீதாராம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது.


குணவானாக இருக்கும் ராமபிரான் சரித்திரத்தை, அன்பில் என்ற இடத்தில் அவதரித்த தமிழன் வால்மீகி, கவி நடையாக எழுதுகிறார்.


நல்ல மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்பை கொண்ட ராமபிரானை வணங்குவார்கள்.

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


Sunday 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

Friday 15 April 2022

கள்ளழகர்... வைகை ஆற்றங்கரை வர காரணம்.... என்ன?

தன் பக்தர்களை பார்க்க, அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள, புது புது பக்தர்களை உருவாக்க, மோக்ஷம் கொடுக்க, பக்தனிடம் தனக்கு இருக்கும் அன்பை காட்ட வருகிறார் கள்ளழகபெருமாள்...

ராம அவதாரம் செய்த பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் அரண்மனையை விட்டு விட்டு, 

ஆடை அலங்காரத்தை மாற்றி கொண்டு,  

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக லக்ஷ்மணனையும் சேர்த்து கொண்டு, 

தனக்காக காத்து கிடக்கும் பல ரிஷிகள், சபரி ஆஸ்ரமத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பழங்கள், கிழங்குகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்தினார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களான ஹனுமான், சுக்ரீவன், விபீஷணன் போன்றவர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி

மேலும் கோடிக்கணக்கான வானரர்கள், ராக்ஷஸர்கள், அணில் உட்பட பலரை தன் பக்தனாக்கி, 

உறவுகளால் விரட்டப்பட்ட தர்மாத்மாவான விபீஷணனுக்கு இலங்கையையே கொடுத்து, சகோதரனால் விரட்டப்பட்ட சுக்ரீவனுக்கு அவன் மனைவியோடு ராஜ்யத்தையும் கொடுத்து, 

ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அயோத்திக்கு திரும்பினார்.


ராம அவதாரம் செய்த போது தான் பெருமாள் இப்படி செய்தார் என்று நினைக்க கூடாது.


பெருமாள், இன்றும் மதுரையில், ஒவ்வொரு வருடமும் இந்த ஆச்சர்யமான நிகழ்வை செய்து காட்டுகிறார்.


கள்ளழகராக வீற்று இருக்கும் பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் கோவிலை விட்டு விட்டு, 

கையில் சாட்டை, கோடாலியோடு அலங்காரம் செய்து கொண்டு, 

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக பல போலீஸை சேர்த்து கொண்டு, 

தனக்காக மண்டகபடியில் காத்து கிடக்கும் பல பக்தர்களின் மண்டபத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பொங்கல் பழங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்துகிறார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி, 

மேலும் கோடிக்கணக்கான வெளியூர், வெளிநாட்டவர்களை தன் பக்தனாக்கி

உறவுகளால் விரட்டப்பட்டவர்கள், சகோதரனால் விரட்டப்பட்டவர்கள், ஏழைகள் என்று அனைவருக்கும் சுகமான வாழ்வு கிடைக்க அணுகிரஹம் செய்து

மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அழகர்மலைக்கு திரும்புகிறார்.


கள்ளழகருக்கு காவல் புரிபவர்கள் தன்னை லக்ஷ்மணன் போலவும்,

அவருக்காக மண்டகப்படியில் காத்து இருந்து வரவேற்பவர்கள், தங்களை ரிஷிகள் போலவும்,

அவருக்கு போகும் வழியில் சேவை செய்பவர்கள், தங்களை பலம்வாய்ந்த வானர சேனை போலவும்,

ஏதோ முடிந்தவரை சேவை செய்பவர்கள், தங்களை ராமபிரானுக்கு சேவை செய்த அணில் போலவும்,

துக்கத்தில் இருந்து பெருமாளை பார்ப்பவர்கள், தங்களை சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும், நினைக்கும் போது, கள்ளழகரை ராமராக தரிசிப்போம். 

Saturday 2 April 2022

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார். வைஷ்ணவர்கள் தினமும் உச்சரிக்கும் நாமங்கள் - சிவ, மஹேஸ்வர, மஹாதேவ, தேவேஸ (தேவ ஈஸ்வர)

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார்...

"மங்களம், பத்ரம், கல்யாணம், சுபம், பிரசன்னம், நிர்மலம்" என்ற அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் "சிவ". சமஸ்கரித நிகண்டு (dictionary) இந்த அர்த்தத்தை விளக்குகிறது.

"தன்மே மன: சிவ ஸங்கல்பமஸ்து"
என்னுடைய மனது கண்ட கண்ட சிந்தனைகள் கொள்ளாமல், நிர்மலமாக மங்களமாக ஆகட்டும்! என்று யஜுர் வேதத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் அடுத்த தெருவில், காஞ்சி மடாதிபதியாக போதேந்திராள் இருந்தார். ராம நாமத்தை பிரச்சாரம் செய்தார்.

பகவந் நாம போதேந்திராள் "ராம" நாமத்தை உலகம் முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், அருகிலேயே இருக்கும் ஸ்ரீதர ஐயாவாள் "சிவ சிவ சிவ சிவ..' என்று சொல்வார்.

இருவரும் மகாத்மாக்கள். ஸ்ரீதர ஐயாவாள் சாக்ஷாத் சிவபெருமான் அம்சம் என்றே சொல்வார்கள்.

ராம நாமத்தின் மகிமை தெரியாதவரில்லை ஸ்ரீதர ஐயாவாள்.
அவரிடம் கேட்டால், வாயை திறந்தால் "சிவ சிவ" என்று தான் வருகிறது என்றாராம்.

'பகவானுடைய நாம உபதேசம்' பெறுவதாக தான் சாதாரண ஜனங்கள் நினைப்பார்கள்.
பகவன் நாமம் தான் உண்மையில் நம்மை பிடிக்கிறது.

சிலரை, "ராம" நாமம் பிடிக்கிறது.
சிலரை "சிவ" நாமம் பிடிக்கிறது.
சிலரை "திருவஷ்டாக்ஷரம்" பிடிக்கிறது.

மங்களாமான அந்த பரமாத்மாவை தியானத்து கொண்டே ஸ்ரீதர ஐயாவாள் ஒரு சமயம் "சிவ சிவ..' என்று சொல்ல, சிவபெருமானுக்கு பதிலாக "ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக புல்லாங்குழல் வைத்து கொண்டு" தரிசனம் கொடுத்து விட்டார்.

சொன்னதோ சிவ நாமம், தரிசனமோ கிருஷ்ண தரிசனம்..

சிவ சிவ என்று சொன்னதற்கு விஷ்ணு வந்தாரே! எப்படி?

மங்களமானவர், பிரசன்னமானவர் விஷ்ணு என்பதால், விஷ்ணுவுக்கும் "சிவ" என்று பெயர் உண்டு.

ஆயிரம் விஷ்ணு நாமத்தில், விஷ்ணுவுக்கு "சிவ" என்று பெயரும் உண்டு.

விஷ்ணு பக்தனும், மங்களமான விஷ்ணுவை "சிவ சிவ" என்றே ஜபிக்கிறான்..

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்-க்ஷேப்தா க்ஷேம-க்ருத் சிவ: |
ஸ்ரீவத்ஸ-வஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்-வர: ||

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அர்த்தமும்