Followers

Search Here...

Friday, 18 July 2025

ஸ்கந்தம் 9: அத்யாயம் 15 (பரசுராமர் முன்னோர்களின் பரம்பரை) - ஸ்ரீமத் பாகவதம் - Srimad Bhagavatham

 புரூரவஸ் பரம்பரை

ஸ்கந்தம் 9: அத்யாயம் 15

श्री-शुक उवाच

ऐलस्य च उर्वशी-गर्भात् षट् आसन् आत्मजाः नृप।
आयुः श्रुत-आयुः सत्य-आयुः रयः अथ विजयः जयः ॥ १ ॥

श्रुत-आयोः वसुमान् पुत्रः सत्य-आयोः च श्रुत-अञ्जयः।
रयस्य सुतः एकः च जयस्य तनयः अमितः ॥ २ ॥

भीमः तु विजयस्य अथ काञ्चनः होत्रकः ततः।
तस्य जह्नुः सुतः गङ्गाम् गण्डूषीकृत्य यः अपिबत्।
जह्नोः तु पूरुः तत्-पुत्रः बलाकः च आत्मजः अजकः ॥ ३ ॥

ततः कुशः कुशस्य अपि कुशाम्बुः तनयः वसुः।
कुशनाभः च चत्वारः गाधिः आसीत् कुशाम्बुजः ॥ ४ ॥

तस्य सत्यवतीम् कन्याम् ऋचीकः अयाचत द्विजः।
वरम् विसदृशम् मत्वा गाधिः भार्गवम् अब्रवीत् ॥ ५ ॥

एकतः श्याम-कर्णानाम् हयानाम् चन्द्र-वर्चसाम्।
सहस्रम् दीयताम् शुल्कम् कन्यायाः कुशिकाः वयम् ॥ ६ ॥

इति उक्तः तत् मतम् ज्ञात्वा गतः सः वरुण-अन्तिकम्।
आनीय दत्त्वा तान् अश्वान् उपयेमे वर-अननाम् ॥ ७ ॥

सः ऋषिः प्रार्थितः पत्न्या श्वश्र्वा च अपत्य-काम्यया।
श्रपयित्वा उभयैः मन्त्रैः चरुम् स्नातुम् गतः मुनिः ॥ ८ ॥

तावत् सत्यवती मात्रा स्व-चरुम् याचिता सती।
श्रेष्ठम् मत्वा तया अयच्छत् मात्रे मातुः अदत् स्वयं ॥ ९ ॥

तत् विज्ञाय मुनिः प्राह पत्नीम् कष्टम् अकारषीः।
घोरः दण्ड-धरः पुत्रः भ्राता ते ब्रह्म-वित् तमः ॥ १० ॥

प्रसादितः सत्यवत्या मा एवम् भूः इति भार्गवः।
अथ तर्हि भवेत् पौत्रः जमदग्निः ततः अभवत् ॥ ११ ॥

सा च अभूत् सु-महा-पुण्या कौशिकी लोक-पावनी।
रेणोः सुताम् रेणुकाम् वै जमदग्निः उवाह याम् ॥ १२ ॥

तस्याम् वै भार्गव-ऋषेः सुताः वसुमत्-आदयः।
यवीयान् जज्ञे एतेषाम् रामः इति अभिविश्रुतः ॥ १३ ॥

यम् आहुः वासुदेव-अंशम् हैहयानाम् कुल-अन्तकम्।
त्रिः-सप्त-कृत्वः यः इमाम् चक्रे निः-क्षत्रियां महीम् ॥ १४ ॥

दुष्टम् क्षत्रम् भुवः भारम् अब्रह्मण्यम् अनीनशत्।
रजः-तमः-आवृतम् अहन् फल्गुन्याम् अपि कृते अहसि ॥ १५ ॥


श्री-राजा उवाच
किम् तत् अंहो भगवतঃ राजन्यैः अजित-आत्मभिः।
कृतम् येन कुलम् नष्टम् क्षत्रियाणाम् अभीक्ष्णशः ॥ १६ ॥


श्री-शुक उवाच
हैहयानाम् अधिपतिः अर्जुनः क्षत्रिय-ऋषभः।
दत्तम् नारायणस्य अंशम् आराध्य परिकर्मभिः ॥ १७ ॥

बाहून् दश-शतम् लेभे दुर्धर्षत्वम् अरातिषु।
अव्याहत-इन्द्रिय-ओजः श्री-तेजः-वीर्य-यशः-बलम् ॥ १८ ॥

योग-ईश्वरत्वम् ऐश्वर्यम् गुणाः यत्र अणिम-आदयः।
चचार अव्याहत-गतिः लोकेषु पवनः यथा ॥ १९ ॥

स्त्री-रत्नैः आवृतः क्रीडन् रेवाम् भसि मद-उत्कटः।
वैजयन्तीम् स्रजम् बिभ्रत् रुरोध सरितम् भुजैः ॥ २० ॥

विप्लावितम् स्व-शिबिरम् प्रति-स्रोतः-सरित्-जलैः।
न अमृष्यत तस्य तत् वीर्यम् वीर-मानी दश-अननः ॥ २१ ॥

गृहीतः लीलया स्त्रीणाम् समक्षम् कृत-किल्बिषः।
माहिष्मत्याम् सन्-निरुद्धः मुक्तः येन कपिः यथा ॥ २२ ॥

सः एकदा तु मृगयाम् विचरन् विपिने वने।
यदृच्छया आश्रम-पदम् जमदग्नेः उपाविशत् ॥ २३ ॥

तस्मै सः नर-देवाय मुनिः अर्हणम् आहरत्।
स-सैन्य-अमात्य-वाहाय हविष्मत्या तपो-धनः ॥ २४ ॥

सः वीरः तत्र तत् दृष्ट्वा आत्म-ऐश्वर्य-अतिशायनम्।
तत् न आद्रियत अग्नि-होत्र्याम् स-अभिलाषः सः हैहयः ॥ २५ ॥

हविः-धानीम् ऋषेः दर्पात् नरान् हर्तुम् अचोदयत्।
ते च माहिष्मतीम् निन्युः स-व्त्साम् क्रन्दतीम् बलात् ॥ २६ ॥

अथ राजनि निर्याते रामः आश्रमम् आगतः।
श्रुत्वा तत् तस्य दौर्मात्म्यम् चुक्रोध अहिः इव आहतः ॥ २७ ॥

घोरम् आदाय परशुम् स-तूणम् चर्म कार्मुकम्।
अन्वधावत दुर्धर्षः मृग-इन्द्रः इव यूथपम् ॥ २८ ॥

तम् आपतन्तम् भृगु-वर्यम् ओजसा
धनुः-धरम् बाण-परश्वध-अयुधम्।
ऐणेय-चर्म-अम्बरम् अर्क-धामभिः
युतम् जटाभिः ददृशे पुरीम् विशन् ॥ २९ ॥

अचोदयत् हस्ति-रथ-अश्व-पत्तिभिः
गदा-असि-बाण-ऋष्टि-शतघ्नि-शक्तिभिः।
अक्षौहिणीः सप्त-दश अति-भीषणाः
ता रामः एकः भगवान् असूदयत् ॥ ३० ॥

यतः यतः असौ प्रहरत् परश्वधः
मनः-अनिल-ओजाः पर-चक्र-सूदनः।
ततः ततः छिन्न-भुज-ऊरु-कन्धराः
निपेतुः उर्व्याम् हत-सूत-वाहनाः ॥ ३१ ॥

दृष्ट्वा स्व-सैन्यम् रुधिर-ओघ-कर्दमे
रण-अजिरे राम-कुठार-सायकैः।
विवृक्ण-चर्म-ध्वज-चाप-विग्रहम्
निपातितम् हैहयः आपतत् रुषा ॥ ३२ ॥

अथ अर्जुनः पञ्च-शतेषु बाहुभिः
धनुःषु बाणान् युगपत् सः सन्दधे।
रामाय रामः अस्त्र-भृताम् समग्रणीः
तान् एक-धन्व-एषुभिः आच्छिनत् समम् ॥ ३३ ॥

पुनः स्व-हस्तैः अचलान् मृधे अङ्‌घ्रिपान्
उत्क्षिप्य वेगात् अभिधावतः युधि।
भुजान् कुठारेण कठोर-नेमिना
चिच्छेद रामः प्रसभम् तु अहेः इव ॥ ३४ ॥

कृत्त-बाहोः शिरः तस्य गिरेः श्रृङ्गम् इव आहरत्।
हते पितरि तत्-पुत्राः अयुतम् दुद्रुवुः भयात् ॥ ३५ ॥

अग्नि-होत्रीम् उपावर्त्य स-व्त्साम् पर-वीर-हा।
समुपेत्य आश्रमम् पित्रे परिक्लिष्टाम् समर्पयत् ॥ ३६ ॥

स्व-कर्म तत् कृतम् रामः पित्रे भ्रातृभ्यः एव च।
वर्णयामास तत् श्रुत्वा जमदग्निः अभाषत ॥ ३७ ॥

राम राम महा-बाहो भवान् पापम् अकार्षीत्।
अवधीः नर-देवम् यत् सर्व-देव-मयम् वृथा ॥ ३८ ॥

वयम् हि ब्राह्मणाः तात क्षमया अर्हणताम् गताः।
यया लोक-गुरुः देवः पारमेष्ठ्यम् अगात् पदम् ॥ ३९ ॥

क्षमया रोचते लक्ष्मीः ब्राह्मी सौरी यथा प्रभा।
क्षमिणाम् आशु भगवान् तुष्यते हरिः ईश्वरः ॥ ४० ॥

राज्ञः मूर्धा-अभिषिक्तस्य वधः ब्रह्म-वधात् गुरुः।
तीर्थ-संसेवया च अंहः जहि अङ्ग अच्युत-चेतनः ॥ ४१ ॥

इति श्रीमद्‍भागवते महापुराणे पारमहंस्यां
संहितायां नवम-स्कन्धे पञ्चदशोऽध्यायः ॥ १५ ॥

ஸ்கந்தம் 9: அத்யாயம் 16 (பரசுராமர் 21 தலைமுறை க்ஷத்ரியர்களை ஒழித்தார்) - ஸ்ரீமத் பாகவதம் - Srimad Bhagavatham

பரசுராமர் 21 தலைமுறை க்ஷத்ரியர்களை ஒழித்தார்

ஸ்கந்தம் 9: அத்யாயம் 16

श्री-शुक उवाच
पितृ-उपशिक्षितः रामः तथा इति कुरु-नन्दन।
संवत्सरम् तीर्थ-यात्राम् चरित्वा आश्रमम् आव्रजत् ॥ १ ॥

कदाचित् रेणुका याता गङ्गायाम् पद्म-मालिनम्।
गन्धर्व-राजम् क्रीडन्तम् अप्सरोभिः अपश्यत ॥ २ ॥

विलोकयन्ती क्रीडन्तम् उदक-अर्थम् नदीम् गता।
होम-वेलाम् न सस्मार किञ्चित् चित्र-रथ-स्पृहा ॥ ३ ॥

काल-अत्ययम् तम् विलोक्य मुनिः शाप-विशङ्किता।
आगत्य कलशम् तस्थौ पुरः धाय कृत-अञ्जलिः ॥ ४ ॥

व्यभिचारम् मुनिः ज्ञात्वा पत्न्याः प्रकुपितः अब्रवीत्।
घ्नत एनाम् पुत्रकाः पापाम् इति उक्ताः ते न चक्रिरे ॥ ५ ॥

रामः सञ्चोदितः पित्रा भ्रातॄन् मात्रा सह अवधीत्।
प्रभाव-ज्ञः मुनेः सम्यक् समाधेः तपसः च सः ॥ ६ ॥

वरेण अछन्दयामास प्रीतः सत्यवती-सुतः।
वव्रे हतानाम् रामः अपि जीवितम् च अस्मृतिम् वधे ॥ ७ ॥

उत्तस्थुः ते कुशलिनः निद्रा-अपायात् इव अञ्जसा।
पितुः विद्वान् तपः-वीर्यम् रामः चक्रे सुहृत्-वधम् ॥ ८ ॥

ये अर्जुनस्य सुता राजन् स्मरन्तः स्व-पितुः वधम्।
राम-वीर्य-पराभूताः लेभिरे शर्म न क्वचित् ॥ ९ ॥

एकदा आश्रमतः रामे स-भ्रातरि वनम् गते।
वैरम् सिसाधयिषवः लब्ध-छिद्राः उपागमन् ॥ १० ॥

दृष्ट्वा अग्नि-आगार-आसीनम् आवेशित-धियम् मुनिम्।
भगवति उत्तम-श्लोके जघ्नुः ते पाप-निश्चयाः ॥ ११ ॥

याच्यमानाः कृपणया राम-मात्रा अति-दारुणाः।
प्रसह्य शिरः उत्कृत्य निन्युः ते क्षत्र-बन्धवः ॥ १२ ॥

रेणुका दुःख-शोक-आर्ता निघ्नन्ती आत्मानम् आत्मना।
राम राम इहि तात इति विचुक्रोश उच्छकैः सती ॥ १३ ॥

तत् उपश्रुत्य दूर-स्था हा राम इति आर्त-वत्-स्वनम्।
त्वरया आश्रमम् आसाद्य ददृशे पितरम् हतम् ॥ १४ ॥

तत् दुःख-रोष-अमर्ष-आर्ति-शोक-वेग-विमोहितः।
हा तात साधो धर्मिष्ठ त्यक्त्वा अस्मान् स्वर्गतः भवान् ॥ १५ ॥

विलप्य एवम् पितुः देहम् निधाय भ्रातृषु स्वयम्।
प्रगृह्य परशुम् रामः क्षत्र-अन्ताय मनः दधे ॥ १६ ॥

गत्वा माहिष्मतीम् रामः ब्रह्म-घ्न-विहत-श्रियम्।
तेषाम् सः शीर्ष-भी राजन् मध्ये चक्रे महा-गिरिम् ॥ १७ ॥

तत् रक्तेन नदीम् घोराम् अब्रह्मण्य-अभय-आवहाम्।
हेतुम् कृत्वा पितृ-वधम् क्षत्रे अमङ्गल-कारिणि ॥ १८ ॥

त्रिः-सप्त-कृत्वः पृथिवीम् कृत्वा निः-क्षत्रियाम् प्रभुः।
समन्त-पञ्चके चक्रे शोणित-उदान् ह्रदान् नृप ॥ १९ ॥

पितुः कायेन सन्धाय शिरः आदाय बर्हिषि।
सर्व-देव-मयम् देवं आत्मानम् अयजत् मखैः ॥ २० ॥

ददौ प्राचीम् दिशम् होत्रे ब्रह्मणे दक्षिणाम् दिशम्।
अध्वर्यवे प्रतीचीम् वै उद्गात्रे उत्तराम् दिशम् ॥ २१ ॥

अन्येभ्यः आवान्तर-दिशः कश्यपाय च मध्यतः।
आर्यावर्तम् उपद्रष्ट्रे सदस्येभ्यः ततः परम् ॥ २२ ॥

ततः च अवभृथ-स्नानम् विधूत-अशेष-किल्बिषः।
सरस्वत्याम् ब्रह्म-नद्याम् रेजे व्यभ्रः इव अंशुमान् ॥ २३ ॥

स्व-देहम् जमदग्निः तु लब्ध्वा संज्ञान-लक्षणम्।
ऋषीणाम् मण्डले सः अभूत् सप्तमः राम-पूजितः ॥ २४ ॥

जामदग्न्यः अपि भगवान् रामः कमल-लोचनः।
आगामिनि अन्तरे राजन् वर्तयिष्यति वै बृहत् ॥ २५ ॥

आस्ते अद्य अपि महेन्द्र-अद्रौ न्यस्त-दण्डः प्रशान्त-धीः।
उपगीयमान-चरितः सिद्ध-गन्धर्व-चारणैः ॥ २६ ॥

एवम् भृगुषु विश्व-आत्मा भगवान् हरिः ईश्वरः।
अवतीर्य परम् भारम् भुवः अहन् बहुशः नृपान् ॥ २७ ॥

गाधेः अभूत् महा-तेजाः समिद्धः इव पावकः।
तपसा क्षात्रम् उत्सृज्य यः लेभे ब्रह्म-वर्चसम् ॥ २८ ॥

विश्वामित्रस्य च एव आसन् पुत्राः एक-शतम् नृप।
मध्यमः तु मधुच्छन्दा मधुच्छन्दसः एव ते ॥ २९ ॥

पुत्रम् कृत्वा शुनः-शेपम् देवरातम् च भार्गवम्।
आजीगर्तम् सुतान् आह ज्येष्ठः एषः प्रकल्प्यताम् ॥ ३० ॥

यः वै हरिश्चन्द्र-मखे विक्रीतः पुरुषः पशुः।
स्तुत्वा देवान् प्रजेश-आदीन् मुमुचे पाश-बन्धनात् ॥ ३१ ॥

यः रातः देव-यजने देवैः गाधिषु तापसः।
देवरातः इति ख्यातः शुनः-शेपः सः भार्गवः ॥ ३२ ॥

ये मधुच्छन्दसः ज्येष्ठाः कुशलम् मेनिरे न तत्।
अशपत् तान् मुनिः क्रुद्धः म्लेच्छाः भवत दुर्जनाः ॥ ३३ ॥

सः होवाच मधुच्छन्दाः सार्धम् पञ्चाशता ततः।
यत् नः भवान् संजानीते तस्मिन् तिष्ठामहे वयम् ॥ ३४ ॥

ज्येष्ठम् मन्त्र-दृशम् चक्रुः त्वाम् अन्वञ्चः वयम् स्म हि।
विश्वामित्रः सुतान् आह वीर-वन्तः भविष्यथ।**
ये मानम् मे अनुगृह्णन्तः वीर-वन्तम् अकर्त माम् ॥ ३५ ॥

एषः वः कुशिका वीरः देवरातः तम् अन्वितः।
अन्ये च अष्टक-हारीत-जय-क्रतु-मद-आदयः ॥ ३६ ॥

एवम् कौशिक-गोत्रम् तु विश्वामित्रैः पृथक्-विदम्।
प्रवर-अन्तरम् आपन्नम् तत् हि च एवम् प्रकल्पितम् ॥ ३७ ॥

इति श्रीमद्भागवते महा-पुराणे पारमहंस्याम्
संहितायाम् नवम-स्कन्धे षोडशः अध्यायः ॥ १६ ॥

Thursday, 17 July 2025

வானரர்கள் பேசினார்களா? யார் இந்த வானரர்கள்? அறிவோம்

ராமாயணத்தில் ராமர், தசரதர், சீதா தேவி போன்றவர்கள் மனிதர்கள் என்றும், சுக்ரீவன், ஹனுமான், அங்கதன் போன்றவர்கள் வானரர்கள் என்றும், ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் போன்றவர்கள் ராக்ஷஸர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

வானரர்கள், ராக்ஷஸர்கள் இருவருமே, உடல் பலம் அதிகம் கொண்டவர்கள் என்று காட்டப்படுகிறது.


வானரர்கள் உடல் பலத்தோடு, வானில் தாவும் திறனையும் பெற்று இருந்தார்கள் என்று காட்டப்படுகிறது.


ராக்ஷஸர்கள் மாமிசம் அதிகம் உண்பவர்களாகவும், தேவைபட்டால் மனிதர்களை உண்பவர்களாகவும் காட்டப்படுகிறது.

இருவருமே மாயங்கள் தெரிந்தவர்கள் என்றும் காட்டப்படுகிறது.


தசரதர், ராமர், சீதை போன்றவர்கள், இன்று இருக்கும் மனிதர்களை போல காட்டப்படுகிறார்கள். உயர்ந்த மனித பண்புகள் உடையவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். கைகேயி, கூனி போன்ற மனிதர்களும் காட்டப்படுகிறார்கள்.


வானரர்கள் படித்தவர்களாகவும் இருந்தார்கள். பல மொழிகள் பேசினார்கள் என்றும் காட்டப்படுகிறது.


ராக்ஷஸர்களும் படித்தவர்களாக இருந்தார்கள் என்றும் காட்டப்படுகிறது. ராவணன் ராக்ஷஸ பெண்ணுக்கும், பிராம்மண ரிஷிக்கும் பிறந்தவனாக இருந்தான் என்றும் தெரிகிறது.


குரங்கு என்று கருதப்படும் வானரர்கள் எப்படி பேசி இருக்க முடியும்? என்ற கேள்வி நமக்குள் எழ வாய்ப்பு இருக்கிறது.


இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை நாம் கவனித்தோம் என்றால், ஒரு காலத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறது.

இப்பொழுது இருக்கும் மனிதர்களை homosApien என்று அழைக்கிறது.

இவர்களை தவிர மேலும் இரண்டு விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது.

அவர்களை homo erectus, homo neanderthals என்று அழைக்கிறது.


இவர்கள் சுமார் ஒரு லட்சம் வருடங்கள் முன்பு வரை வாழ்ந்து இருக்கலாம் என்று அறிவியல் சொல்கிறது.

கிடைத்த மண்டை ஓட்டை பார்த்து,  இவர்கள் உடல் அமைப்பை பார்த்து, இப்பொழுது இருக்கும் மனிதர்களை விட மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்று சொல்கிறது.


இவர்கள் வாழ்வு முறை எப்படி இருந்திருக்கும் என்று மேலே நாட்டு புத்தகத்தில் இல்லாததால், இவர்கள் இருவரும் கல்லை உடைத்து கொண்டு, காட்டு மிராண்டி போல வாழ்ந்து இருப்பார்கள் என்று அனுமானிக்கிறது அறிவியல்.


அதே சமயம், 

ராமாயண காலம் த்ரேதா யுகத்தில் நடந்தது என்று சொல்லப்படுகிறது. 

அதாவது குறைந்தது 12 லட்சம் வருடங்கள் முன்பு நடந்து இருக்கிறது.


அந்த ராமாயணத்தில், அறிவியல் சொல்லும் இந்த மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது..


அந்த மூன்று விதமான மனிதர்களின் பலம் எப்படி இருந்தது? என்ன குணம் கொண்டிருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி பேசினார்கள்? என்று அனைத்தையும் காட்டுகிறது.


வானரர்கள் என்ற இந்த மனிதர்கள் homo erectus என்று நாம் அறிய முடியும்.


அதே போல, ராக்ஷஸர்கள் என்ற இந்த மனித வர்கம், homo neanderthals என்று நாம் அறிய முடியும்.


இன்று வானரர்கள் என்ற மனித வர்கமும் இல்லை. ராக்ஷஸர்கள் என்ற மனித வர்கமும் இல்லை.


உடல் பலம் குறைந்த மனிதர்கள், அதாவது homo sapiens, எப்படி உடல் பலம் கொண்ட homo erectus, homo neanderthals போன்ற மனிதர்களை தாண்டி இன்று வரை இருந்திருக்க முடியும் என்ற கேள்வியும் நமக்கு எழலாம்.


ராமாயணத்தில் பார்த்தோமென்றால், உடல் பலம் கொண்ட வானரர்கள், ராக்ஷஸர்கள் மோதிகொண்டார்கள் என்று பார்க்கிறோம்.


சுக்ரீவனும் வாலியும் தங்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றும் பார்க்கிறோம்.


பலம் கொண்ட இவர்கள் ஒன்று தங்களுக்குள் சண்டையிட்டோ, ஒருவருக்கொருவர் சண்டையிட்டோ தங்கள் இனத்தை அழித்து கொண்டு இருக்கலாம்.

எப்படி பலத்த காற்று வீசும் போது, புல் தன் தலையை வணங்கி கொண்டு வழி விட்டு, தானும் தப்பிக்குமோ அது போல, உடல் பலம் குறைந்த மனிதர்கள், அதாவது homo sapiens என்ற மனித வர்கம், இவர்களிடம் தப்பித்து இன்றுவரை தன் மனித வர்கத்தை காப்பாற்றி இருக்க வேண்டும்.


வானரர்கள் என்றால் இன்று நாம் பார்க்கும் குரங்கு என்று சொல்ல முடியாது. 

சமஸ்க்ருதத்தில் கபிஹி என்றாலும் குரங்கு என்று பொருள்.


வானில் பறக்கும் சக்தி கொண்டிருந்த நரர்கள் இவர்கள் என்பதால், ராமாயணம் வானரர்கள் என்று பல முறை அழைக்கிறது. 

இவர்களிடம் கபிஹி, அதாவது குரங்கு போன்ற நிலையற்ற புத்தியும், வாலும் இருந்துள்ளது என்று தெரிகிறது.


இலங்கை சென்ற ஹனுமானின் வாலுக்கு தீ வைத்தனர். ஹனுமான் அந்த தீயை வைத்துக்கொண்டே இலங்கை முழுவதையும் கொளுத்தினார். 


இலங்கை எரிந்து கொண்டிருக்கும் போது, "ஐயோ! சீதா தேவியும் இருக்கிறாளே.. என்னுடைய குரங்கு புத்தியால் இப்படி செய்து விட்டேனே" என்று பதறினார்.


பிறகு, அசோகவனம் மட்டும் எரியவில்லை என்று பார்த்த பிறகே சமாதானம் அடைந்தார் என்று பார்க்கிறோம்.


இவ்வாறு அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லும் மூன்று விதமான மனிதர்களையும் காட்டும் ஒரே நிகழ்வு ராமாயணம் மட்டுமே.


Homo erectus என்ற வானரர்கள், homo neanderthals என்ற ராக்ஷஸர்கள் வாழ்வு முறையை காட்டுவதும் ராமாயணம் மட்டுமே.

அன்று ராமாயணத்தில் சொல்லப்பட்ட அயோத்தி இன்றும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட பஞ்சவடியும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட இமய மலையும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட யமுனை, கங்கையும் இருக்கிறது. ராமபிரான் ஆணையால் வானரர்கள் போட்ட பாலமும் இன்று கூட தெரிகிறது. ராவணன் படித்து வைத்திருந்த இலங்கை என்ற தேசமும் இருக்கிறது.


ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அவதரித்த அன்பில் என்ற ஊர் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. 


வேடுவனாக இருந்த இவரிடம் நாரதர் "ராம ராம" என்று ஜபம் செய் என்று சொல்ல, ரா என்ற எழுத்து முதல் எழுத்தாக இருப்பதால் இவர் ஜபம் செய்ய முடியாமல் உளற, வ்ருக்ஷத்தை காண்பித்து இது என்ன என்று நாரதர் கேட்க, இது மரா என்று இந்த வேடுவன் கொச்சை தமிழில் சொல்ல, அதையே சொல்லி கொண்டு இரு என்றார் நாரதர்.


மராமராமராமரா என்று சொல்ல அதுவே திரும்பி ராம நாமமாக ஆனது என்பதை தமிழனான வால்மீகியே தன் கதையை முதல் அத்யாயத்தில் சொல்கிறார். 


இந்த வால்மீகி ராமபிரான் அவதாரம் முடிந்த பிறகு, மீண்டும் தமிழகம் வந்து, சென்னையில் இருக்கும் திருநீர்மலையில் மோக்ஷம் அடைந்தார் என்றும் பார்க்கிறோம்.


ஒரு தமிழர் எழுதிய இந்த ராமாயண சரித்திரம், தமிழிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிற்காலத்தில் கம்பன் என்ற பெருங்கவி, ராமாயணத்தை தமிழில் எழுதினார் என்றும் பார்க்கிறோம்.


தமிழன் வால்மீகி காட்டிய ராமாயணத்தில் தான், மூன்று வகை மனிதர்கள் இருந்தார்கள் என்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பாக தமிழர்களுக்கு பெருமை கொடுக்கிறது. 


அன்பில் செல்வோம், திருநீர்மலை செல்வோம். தமிழன் வால்மீகியை போற்றுவோம். 


Wednesday, 11 June 2025

பேரழிவை ஏற்படுத்திய பாரத போருக்குப் பிறகு, தனது 100 மகன்களையும் இழந்த த்ருதராஷ்டிரருக்கு விதுரர் ஆறுதல் கூறினார்.

பரசுராமர், நாரதர், வியாசர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் அறிவுரை சொல்லியும் கேட்க மறுத்தேனே என்று வருந்தினார்.


பின்னர், விதுரர் த்ருதராஷ்டிரரை இவ்வாறு சமாதானம் செய்தார்.


அரசே, எழுந்திருங்கள். ஏன் இப்படிப் சோகப்பட்டு படுத்து இருக்கிறீர்கள்? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்துங்கள். இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தைரியத்தால் தான் வாழ்கின்றன.



கூடியவர்கள் அனைவரும் ஒருநாள் பிரிந்து தான் ஆக வேண்டும். சேர்த்த புகழ் எல்லாம் ஒருநாள் மறையத்தான் செய்யும். சந்தித்தவர்கள் ஒருநாள் பிரியத்தான் போகிறார்கள். அது மட்டுமா. இருப்பவர்கள் வாழ்க்கை அனைத்து மரணத்தில் தான் முடிய போகிறது.


வீரனையும் மரணம் விட்டுவிடாது. கோழையையும் மரணம் விட்டுவிடாது. ஓ பாரதா, நிச்சயம் வரும் மரணத்தை, உன்னத க்ஷத்திரியர்கள் ஏன் சண்டையிட்டு ஏற்கக்கூடாது?


போர் செல்லாதவன் கூட ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். போருக்கு செல்பவன் அனைவரும் மரணிப்பதும் இல்லை. மரணம் avaravar காலத்தை பொறுத்தது. யாரும் தங்கள் விதிக்கப்பட்ட நேரத்தை மீறவும் முடியாது.


பிறப்பதற்கு முன் எங்கோ இருந்தவன், இறந்த பிறகு எங்கோ சென்று விடுகிறான். எனவே இயற்கையாகவே தோன்றி மறையும் விஷயத்தை கண்டு, ஏன் வருத்தப்பட வேண்டும்?


துக்கப்படுகிறான் என்பதால், இறந்தவன் திரும்பி வர போவதில்லை, துக்கப்படுபவனும் இறந்தவனோடு இறப்பதுமில்லை.


இப்படி தான் உலகம் செல்கிறது என்று பார்க்கும் போது, நீங்கள் ஏன் துக்கப்படுகிறீர்கள்?


காலம் எல்லா உயிரினங்களையும் பல வழிகளில் மரணத்தின் பக்கம் இழுக்கிறது. குருவம்சத்வரே!, காலம் எந்தப் பாரபட்சத்தையும் வெறுப்பையும் யாரிடமும் காட்டாது.


காற்று புல்வெளிகளை சிதறடிப்பது போல, காலம் அனைத்து உயிர்களையும் இழுத்து செல்கிறது.


அனைவரும் மரணத்தை நோக்கி ஒரே பாதையில் தான் பயணித்துகொண்டு இருக்கிறோம். அதில் ஒருவர் முதலில் இலக்கை அடைந்து விட்டார். அதை பார்த்து, மற்றவர்கள் ஏன் துக்கப்பட வேண்டும்? ஒருநாள் நாமும் அந்த இலக்கை அடையத்தானே போகிறோம்.


அரசே, போரில் இறந்தவர்களுக்காக நீங்கள் துக்கப்படக்கூடாது. நீங்கள் வேதங்களை அறிந்தவரல்லவா! போரில் வீர மரணம் அடைந்தவர்கள்,  சொர்க்க உலகத்தை அடைந்துவிட்டார்கள். மறவாதீர்கள்.


மரணத்தை தழுவிய அனைவரும் கற்றறிந்தவர்கள், சரித்திரம் உடையவர்கள், எதிரியை எதிர்கொண்டு வீர மரணத்தை ஏற்றவர்கள். அவர்களை நினைத்து ஏன் துக்கப்பட வேண்டும்?


அவர்கள் உங்கள் வாழ்க்கையில் சிறிது காலம் இருந்தார்கள், இப்போது போய்விட்டார்கள். அவர்கள் ஒருபோதும் உண்மையிலேயே உங்களுடையவர்கள் அல்ல, நீங்களும் அவர்களுடையவர்கள் அல்ல. இதை உணரும் போது ஏன் புலம்ப வேண்டும்?


இறக்கும் போர்வீரன் சொர்க்கத்தைப் பெறுகிறான்; வெற்றி பெறுபவன் புகழைப் பெறுகிறான். போரில் இரண்டு பக்கமும் உண்மையில் எந்த இழப்பும் இல்லை.


இந்திரன், போரில் வீர மரணத்தை அடைந்தவர்களுக்கு, சொர்க்க உலகங்களைத் தயாராக திறந்து வைத்து இருக்கிறான். பாரதரே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாகிவிட்டனர்.


தியாகங்களினாலோ, தானம் செய்வதினாலோ, தவத்தினாலோ, கல்வியினாலோ கூட சொர்க்கம் கிடைப்பது நிச்சயம் என்று சொல்ல முடியாது. ஆனால், போரில் இறக்கும் வீரன் சொர்க்கத்தை அடைவது போல, மற்ற மனிதர்கள் சொர்க்கத்தைப் எளிதில் பெறுவதில்லை.


போர் வீரன் தன்னுடைய நெருப்பு போன்ற தன் உடலில் அம்புகளை ஒரு புனித யாகம் செய்வது போல ஏற்கிறான். ஒவ்வொருவரும் அம்புகளையே அக்னிக்கு ஆகுதி கொடுப்பது போல கொடுக்கின்றனர்.


அரசே, போரில் வீர மரணமே, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் உன்னதமான பாதை. ஒரு க்ஷத்திரியனுக்கு, போரில் இறப்பதை விட பெரியது எதுவுமில்லை.


உங்கள் பிள்ளைகள் உன்னதமானவர்கள், வீரம் மிக்கவர்கள், போரில் அற்புதமானவர்கள். அவர்கள் உயர்ந்த கதியை பெற்றனர் - அவர்கள் நினைத்து நீங்கள் துக்கப்படக்கூடாது.


சிறந்தவரே, உங்கள் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். துக்கத்தால் மூழ்கி, உங்கள் வாழ்க்கைக்கு முடிவை தேடி கொள்ளாதீர்கள்.


ஆயிரக்கணக்கான பெற்றோர்களை, நூற்றுக்கணக்கான மகன்களை, மனைவிகளை, எண்ணற்ற முந்தைய பிறவிகளில் பார்த்தாயிற்று. உண்மையில் யார் யாருக்கு சொந்தம்?


ஆயிரக்கணக்கான துக்கங்களும், நூற்றுக்கணக்கான பயமும், இந்த உண்மையை அறியாமல் இருப்பதால் தான் தோன்றுகிறது. ஆனால் ஞானிகள் இந்த சோகத்தில் சிக்குவதில்லை.


அரசே, காலம் யாரையும் நேசிப்பதுமில்லை, வெறுப்பதுமில்லை. காலம் எப்பொழுதும் நடுநிலையானது. காலம் எல்லாவற்றையும் முன்னோக்கி செலுத்துகிறது.


காலமே எல்லாவற்றையும் பழுக்க வைக்கிறது. அந்த காலமே பிறகு அந்த உயிரினங்களையும் அழிக்கிறது. நாம் தூங்கினால் கூட, காலம் எப்போதும் விழித்திருக்கிறது. காலம் உண்மையிலேயே யாராலும் தடுக்க முடியாததாக இருக்கிறது.


இளமை, அழகு, வாழ்க்கை, செல்வம், ஆரோக்கியம் மற்றும் அன்பான உறவுகள் கிடைக்கின்றன. ஆனால், இவை எதுவும் நிரந்தரமானவை அல்ல. அதை உணர்ந்த ஞானிகள் இவற்றை விரும்புவதில்லை.


உங்கள் ராஜ்யம் போய் விட்டதே என்று நீங்கள் துக்கப்படக்கூடாது. நீங்கள் துக்கமடைந்தாலும், நடந்தது நடந்து விட்டது என்பதே உண்மை.


எந்த நிலையிலும் முயற்சியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டால், துக்கத்திலிருந்து மீண்டு வர முடியும். துக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே சிறந்த தீர்வு.


துக்கத்தை மனதில் வைத்து இருக்கும் வரை, ​​அது நீங்கவே நீங்காது. துக்கம் மனதில் இருக்க இருக்க, உண்மையில் இன்னும் துக்கம் அதிகமாகிறது. பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும் போதும், நமக்கு பிடித்தமானவர்கள் பிரியும் போதும், துக்கம் எழுகிறது.


தெளிந்த ஞானம் இல்லாதவர்கள், இது போன்ற நிலையில், மன துக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஞானிகள் இதனால் மனசோர்வு அடைவதில்லை. துக்கப்படுவதால் செல்வமோ, நல்லொழுக்கமோ, மகிழ்ச்சியோ கிடைக்கப்போவதில்லை.


துக்கம் எந்த நோக்கத்திலும் வெற்றியைக் கொண்டு வராது, துக்கம் ஒருவனின் நல்லொழுக்கம், செல்வம் மற்றும் இன்பம் என்ற இந்த மூன்று புருஷார்த்தங்களையும் அடைய விடாமல் தடுத்து விடும்.


உலக ஆசைகளில் சிக்கிய மக்கள், ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறார்கள். அதிருப்தி அடைந்தவர்கள் குழப்பத்தில் விழுகிறார்கள், அதே நேரத்தில் மனத்திருப்தி அடைந்தவர்கள் அமைதியைக் அனுபவிக்கிறார்கள்.


உண்மையை உணர்ந்த ஞானிகள், ஞானத்தால் மன துக்கத்தையும், மருந்துகளால் உடல் நோயையும் அழித்து கொள்கிறார்கள்.


இதுவே அறிவின் பலம். முதிர்ச்சியடையாதவர்கள் இந்த ஞானத்தை அடைய முடியாது. கடந்த கால செயல்களின் விளைவு அதாவது கர்ம வினை, ஒரு நபர் தூங்கினாலும், நின்றாலும், ஓடினாலும் பின்தொடர்கிறது.


ஒருவர் எந்தச் செயல்களைச் செய்தாலும் - அது நல்லதோ அல்லது கெட்டதோ, ,அந்தந்தச் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிக்கிறார்கள்.


ஒருவர் ஒரு செயலைச் செய்கிறானோ, அதற்கான பலனை அந்த உடல் அனுபவிக்கிறது. ஆத்மாவோ, அனைத்துச் செயல்களுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது.


நல்ல செயல்களிலிருந்து மகிழ்ச்சியும், கெட்ட செயல்களிலிருந்து துக்கமும் வருகிறது. எப்படிப்பட செயல், எங்கு செய்யப்பட்டாலும், விளைவுகள் அதன்படி நிச்சயமாக கிடைக்கும்.


செயல் இல்லாமல் எந்தப் பலனும் கிடைக்காது. உண்மையை உணர்ந்த ஞானிகள் ஒருபோதும் அறிவுக்கு எதிரான, தீங்கு விளைவிக்கும் மற்றும் நல்வாழ்வின் வேர்களை அழிக்கும் செயல்களில் தங்களை ஒருபோதும் இணைத்துக் கொள்வதில்லை.


இவ்வாறு விதுரர் ஆறுதல் சொல்ல, சமாதானம் அடைந்த த்ருதராஷ்டிரர் மேலும் பல தர்ம விஷயங்களை கேட்டார்.


வியாச மஹாபாரதம்

ஸ்த்ரீ பர்வம்

Friday, 30 May 2025

ஸ்கந்தம் 3: அத்யாயம் 9 (ஸ்ரீ ப்ரம்ம ஸ்துதி) - ஸ்ரீமத் பாகவதம் - Srimad Bhagavatham

ஸ்ரீ ப்ரம்ம ஸ்துதி

ஸ்கந்தம் 3: அத்யாயம் 9

ஸ்கந்தம் 3: அத்யாயம் 13

ब्रह्म उवाच

ज्ञातो असि मे अद्य सुचिरान् ननु देहभाजां

न ज्ञायते भगवतो गति: इति अवद्यम् ।


न अन्यत् त्वद् अस्ति भगवन्नपि तत् न शुद्धं

माया गुण व्यतिकराद् यत् उरु: विभासि ॥


रूपं यदेतद् अवबोध रस उदयेन

शश्वत् निवृत्त तमस: सद् अनुग्रहाय ।

आदौ गृहीतम् अवतार शतैक बीजं

यत् नाभि-पद्म भवनाद् अहम् आविरासम् ॥


नात: परं परम यद् भवत: स्वरूपम्

आनन्द मात्रम् अविकल्पम् अविद्ध वर्च: ।

पश्यामि विश्व सृजम् एकम् अविश्वम् आत्मन्

भूत: इन्द्रिय आत्मक मद: त उपाश्रित: अस्मि ॥


तद्वा इदं भुवन मङ्गल मङ्गलाय

ध्याने स्म नो दर्शितं त उपास कानाम् ।

तस्मै नमो भगवते अनुविधेम तुभ्यं

यो अनाद‍ृतो नरक भाग्भि: असत्प्रसङ्गै: ॥


ये तु त्वदीय चरण अम्बुज कोश गन्धं

जिघ्रन्ति कर्ण विवरै: श्रुति वात नीतम् ।

भक्त्या गृहीत चरण: परया च तेषां

नापैषि नाथ हृदय अम्बु रुहात् स्व-पुंसाम् ॥


तावद् भयं द्रविण देह सुहृद् निमित्तं

शोक: स्पृहा परिभवो विपुलश् च लोभ: ।

तावत् मम इति असद् अवग्रह आर्ति मूलं

यावत् न ते अङ्‌घ्रिम् अभयं प्रवृणीत लोक: ॥


दैवेन ते हत धियो भवत: प्रसङ्गा:

सर्व अशुभ उप-शमनाद् विमुख इन्द्रिया ये ।

कुर्वन्ति काम सुख लेश लवाय दीना

लोभ अभिभूत मनस अकुशलानि शश्वत् ॥


क्षुत् तृद् ‌त्रि-धातुभि: इमा मुहु: अर्द्यमाना:

शीत उष्ण वात वरषै: इतर इतरात् च ।

काम अग्निना अच्युत रुषा च सुदुर्भरेण

सम्पश्यतो मन उरुक्रम सीदते मे ॥


यावत् पृथक्त्वम् इदम् आत्मन इन्द्रियार्थ

मायाबलं भगवतो जन ईश पश्येत् ।

तावत् न संसृति: असौ प्रति संक्रमेत

व्यर्थ अपि दु:ख निवहं वहती क्रिया अर्था ॥


अह्नि आपृत आर्त करणा निशि नि:शयाना ।

नाना मनोरथ धिया क्षण भग्न निद्रा: ।

दैव आहत अर्थ रचना ऋषय अपि देव

युष्मत् प्रसङ्ग विमुखा इह संसरन्ति ॥


त्वं भक्ति योग परिभावित हृत् सरोज

आस्से श्रुते इक्षित पथो ननु नाथ पुंसाम् ।

यद्यद् दिया त उरुगाय विभावयन्ति

तत्तद् वपु: प्रणयसे सद्-अनुग्रहाय ॥


न अति प्रसीदति तथा उपचित उपचारै:

आराधित: सुर-गणै: हृदि बद्ध कामै: ।

यत् सर्वभूत दयया असद् अलभ्यया एको

नाना जनेषु अवहित: सुहृद् अन्तरात्मा ॥


पुंसाम् अतो विविध कर्मभि: अध्वर आद्यै-

दानेन च उग्र तपसा परिचर्यया च ।

आराधनं भगवतस्तव सत्क्रिय अर्थो

धर्मो अर्पित: कर्हिचिद्‌ म्रियते न यत्र ॥


शश्वत् स्वरूप महसा एव निपीत भेद

मोहाय बोध धिषणाय नम: परस्मै ।

विश्व उद्भव स्थिति लयेषु निमित्त लीला-

रासाय ते नम इदं चकृम ईश्वराय ॥


यस्य अवतार गुण कर्म विडम्बनानि

नामानि ये असु-विगमे विवशा गृणन्ति ।

ते अनैक जन्म शमलं सहस एव हित्वा

संयान्ति अपावृत अमृतं तम् अजं प्रपद्ये ॥


यो वा अहं च गिरिश: च विभु: स्वयं च

स्थिति उद्भव प्रलय हेतव आत्म मूलम् ।

भित्त्वा त्रिपाद् ववृध एक उरु प्ररोह:

तस्मै नमो भगवते भुवन द्रुमाय ॥


लोको विकर्म निरत: कुशले प्रमत्त:

कर्मणि अयं त्वद् उदिते भवद अर्चने स्वे ।

य: तावद् अस्य बलवान् इह जीवित आशां

सद्य छिनत्ति अनिमिषाय नमोऽस्तु तस्मै ॥


यस्माद् ‌बिभेमि अहमपि द्वि-परार्ध धिष्ण्यम्

अध्यासित: सकल-लोक नमस्कृतं यत् ।

तेपे तपो बहु-सव: अवरुरुत् समान:

तस्मै नमो भगवते अधिमखाय तुभ्यम् ॥


तिर्यङ्‍ मनुष्य विबुध आदिषु जीव योनिषु

आत्म इच्छय आत्म कृत सेतु परीप्सया य: ।

रेमे निरस्त विषय अपि अवरुद्ध देह:

तस्मै नमो भगवते पुरुषोत्तमाय ॥


य: अविद्यया अनुपहत: अपि दशार्ध वृत्त्या

निद्राम् उवाह जठरी कृत लोक यात्र: ।

अन्त: जले अहि-कशिपु स्पर्श अनुकूलां

भीमोर्मि मालिनि जनस्य सुखं विवृण्वन् ॥


यन्नाभि पद्म भवनाद् अहम् आसमीड्य

लोकत्रय उपकरणो यद् अनुग्रहेण ।

तस्मै नमस्त उदरस्थ भवाय योग

निद्रा अवसान विकसत् नलिनेक्षणाय ॥


स अयं समस्त जगतां सुहृद् एक आत्मा

सत्त्वेन यत् मृडयते भगवान् भगेन ।

तेन एव मे द‍ृशम् अनुस्पृशतात् यथाहं

स्रक्ष्यामि पूर्व वदिदं प्रणत प्रिय असौ ॥


एष प्रपन्न वरदो रमया आत्म शक्त्या

यद्यत् करिष्यति गृहीत गुण अवतार: ।

तस्मिन् स्व-विक्रमम् इदं सृजतोऽपि चेतो

युञ्जीत कर्म शमलं च यथा विजह्याम् ॥


नाभि हृदाद् इह सत अम्भसि यस्य पुंसो

विज्ञान शक्ति अहम् आसम् अनन्त शक्ते: ।

रूपं विचित्रम् इदम् अस्य विवृण्वतो मे

मा रीरिषीष्ट निगमस्य गिरां विसर्ग: ॥


स असौ अदभ्र करुणो भगवान् विवृद्ध-

प्रेम स्मितेन नयन अम्बुरुहं विजृम्भन् ।

उत्थाय विश्व विजयाय च नो विषादं

माध्व्या गिरा अपनयतात् पुरुष: पुराण: ॥


मैत्रेय उवाच

स्व-सम्भवं निशाम्य एवं तपो विद्या समाधिभि: ।

यावत् मनोवच: स्तुत्वा विरराम स खिन्न वत् ॥


अथ अभिप्रेतम् अन्वीक्ष्य ब्रह्मणो मधुसूदन: ।

विषण्ण चेतसं तेन कल्प व्यतिकर अम्भसा ॥


लोक-संस्थान विज्ञान आत्मन: परिखिद्यत: ।

तम् आह अगाधया वाचा कश्मलं शमयन्निव ॥


श्रीभगवानुवाच

मा वेद-गर्भ गा: तन्द्रीं सर्ग उद्यमम् आवह ।

तन्मया पादितं ह्यग्रे यन्मां प्रार्थयते भवान् ॥


भूय: त्वं तप आतिष्ठ विद्यां चैव मद् आश्रयाम् ।

ताभ्याम् अन्त: हृदि ब्रह्मन् लोकान् द्रक्ष्यसि अपावृतान् ॥


तत आत्मनि लोके च भक्ति युक्त: समाहित: ।

द्रष्टा असि मां ततं ब्रह्यन् मयि लोकांस्त्वम् आत्मन: ॥


यदा तु सर्व भूतेषु दारुषु अग्निम् इव स्थितम् ।

प्रतिचक्षीत मां लोको जह्यात् तर्हि एव कश्मलम् ॥


यदा रहितम् आत्मानं भूतेन्द्रिय गुण आशयै: ।

स्वरूपेण मयोपेतं पश्यन् स्वाराज्यम् ऋच्छति ॥


नाना कर्म वितानेन प्रजा बह्वी: सिसृक्षत: ।

न आत्मा अवसीदति  अस्मिं: ते वर्षीयान् मद् अनुग्रह: ॥


ऋषिम् आद्यं न बध्नाति पापीयां त्वाम् रजोगुण: ।

यन्मनो मयि निर्बद्धं प्रजा: संसृजतो अपि ते ॥


ज्ञातोऽहं भवता तु अद्य दु: विज्ञेयोऽपि देहिनाम् ।

यन्मां त्वं मन्यसे अयुक्तं भूत इन्द्रिय गुण आत्मभि: ॥


तुभ्यं मद् विचिकित्सायाम् आत्मा मे दर्शितो अबहि: ।

नालेन सलिले मूलं पुष्करस्य विचिन्वत: ॥


यद् चकर्थ अङ्ग मत्-स्तोत्रं मत्कथा अभ्युदय अङ्कितम् ।

यद्वा तपसि ते निष्ठा स एष मद् अनुग्रह: ॥


प्रीतोऽहम् अस्तु भद्रं ते लोकानां विजय इच्छया ।

यद् अस्तौषी: गुणमयं निर्गुणं मा अनुवर्णयन् ॥


य एतेन पुमान् नित्यं स्तुत्वा स्तोत्रेण मां भजेत् ।

तस्याशु सम्प्रसीदेयं सर्व काम वरेश्वर: ॥


पूर्तेन तपसा यज्ञै: दानै: योग समाधिना ।

राद्धं नि:श्रेयसं पुंसां मत्प्रीति: तत्त्व वित् मतम् ॥


अहम् आत्मात्मनां धात: प्रेष्ठ: सन् प्रेयसाम् अपि ।

अतो मयि रतिं कुर्याद् देहादि: यत्कृते प्रिय: ॥


सर्व वेदमयेन इदम् आत्मना आत्म आत्म योनिना ।

प्रजा: सृज यथा पूर्वं याश्च मयि अनुशेरते ॥


मैत्रेय उवाच

तस्मा एवं जगत् स्रष्ट्रे प्रधान पुरुष ईश्वर: ।

व्यज्य इदं स्वेन रूपेण कञ्ज-नाभ तिरोदधे ॥


குருநாதர் துணை