ராமாயணத்தில் ராமர், தசரதர், சீதா தேவி போன்றவர்கள் மனிதர்கள் என்றும், சுக்ரீவன், ஹனுமான், அங்கதன் போன்றவர்கள் வானரர்கள் என்றும், ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் போன்றவர்கள் ராக்ஷஸர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
வானரர்கள், ராக்ஷஸர்கள் இருவருமே, உடல் பலம் அதிகம் கொண்டவர்கள் என்று காட்டப்படுகிறது.
வானரர்கள் உடல் பலத்தோடு, வானில் தாவும் திறனையும் பெற்று இருந்தார்கள் என்று காட்டப்படுகிறது.
ராக்ஷஸர்கள் மாமிசம் அதிகம் உண்பவர்களாகவும், தேவைபட்டால் மனிதர்களை உண்பவர்களாகவும் காட்டப்படுகிறது.
இருவருமே மாயங்கள் தெரிந்தவர்கள் என்றும் காட்டப்படுகிறது.
தசரதர், ராமர், சீதை போன்றவர்கள், இன்று இருக்கும் மனிதர்களை போல காட்டப்படுகிறார்கள். உயர்ந்த மனித பண்புகள் உடையவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். கைகேயி, கூனி போன்ற மனிதர்களும் காட்டப்படுகிறார்கள்.
வானரர்கள் படித்தவர்களாகவும் இருந்தார்கள். பல மொழிகள் பேசினார்கள் என்றும் காட்டப்படுகிறது.
ராக்ஷஸர்களும் படித்தவர்களாக இருந்தார்கள் என்றும் காட்டப்படுகிறது. ராவணன் ராக்ஷஸ பெண்ணுக்கும், பிராம்மண ரிஷிக்கும் பிறந்தவனாக இருந்தான் என்றும் தெரிகிறது.
குரங்கு என்று கருதப்படும் வானரர்கள் எப்படி பேசி இருக்க முடியும்? என்ற கேள்வி நமக்குள் எழ வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை நாம் கவனித்தோம் என்றால், ஒரு காலத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறது.
இப்பொழுது இருக்கும் மனிதர்களை homosApien என்று அழைக்கிறது.
இவர்களை தவிர மேலும் இரண்டு விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது.
அவர்களை homo erectus, homo neanderthals என்று அழைக்கிறது.
இவர்கள் சுமார் ஒரு லட்சம் வருடங்கள் முன்பு வரை வாழ்ந்து இருக்கலாம் என்று அறிவியல் சொல்கிறது.
கிடைத்த மண்டை ஓட்டை பார்த்து, இவர்கள் உடல் அமைப்பை பார்த்து, இப்பொழுது இருக்கும் மனிதர்களை விட மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்று சொல்கிறது.
இவர்கள் வாழ்வு முறை எப்படி இருந்திருக்கும் என்று மேலே நாட்டு புத்தகத்தில் இல்லாததால், இவர்கள் இருவரும் கல்லை உடைத்து கொண்டு, காட்டு மிராண்டி போல வாழ்ந்து இருப்பார்கள் என்று அனுமானிக்கிறது அறிவியல்.
அதே சமயம்,
ராமாயண காலம் த்ரேதா யுகத்தில் நடந்தது என்று சொல்லப்படுகிறது.
அதாவது குறைந்தது 12 லட்சம் வருடங்கள் முன்பு நடந்து இருக்கிறது.
அந்த ராமாயணத்தில், அறிவியல் சொல்லும் இந்த மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது..
அந்த மூன்று விதமான மனிதர்களின் பலம் எப்படி இருந்தது? என்ன குணம் கொண்டிருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி பேசினார்கள்? என்று அனைத்தையும் காட்டுகிறது.
வானரர்கள் என்ற இந்த மனிதர்கள் homo erectus என்று நாம் அறிய முடியும்.
அதே போல, ராக்ஷஸர்கள் என்ற இந்த மனித வர்கம், homo neanderthals என்று நாம் அறிய முடியும்.
இன்று வானரர்கள் என்ற மனித வர்கமும் இல்லை. ராக்ஷஸர்கள் என்ற மனித வர்கமும் இல்லை.
உடல் பலம் குறைந்த மனிதர்கள், அதாவது homo sapiens, எப்படி உடல் பலம் கொண்ட homo erectus, homo neanderthals போன்ற மனிதர்களை தாண்டி இன்று வரை இருந்திருக்க முடியும் என்ற கேள்வியும் நமக்கு எழலாம்.
ராமாயணத்தில் பார்த்தோமென்றால், உடல் பலம் கொண்ட வானரர்கள், ராக்ஷஸர்கள் மோதிகொண்டார்கள் என்று பார்க்கிறோம்.
சுக்ரீவனும் வாலியும் தங்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றும் பார்க்கிறோம்.
பலம் கொண்ட இவர்கள் ஒன்று தங்களுக்குள் சண்டையிட்டோ, ஒருவருக்கொருவர் சண்டையிட்டோ தங்கள் இனத்தை அழித்து கொண்டு இருக்கலாம்.
எப்படி பலத்த காற்று வீசும் போது, புல் தன் தலையை வணங்கி கொண்டு வழி விட்டு, தானும் தப்பிக்குமோ அது போல, உடல் பலம் குறைந்த மனிதர்கள், அதாவது homo sapiens என்ற மனித வர்கம், இவர்களிடம் தப்பித்து இன்றுவரை தன் மனித வர்கத்தை காப்பாற்றி இருக்க வேண்டும்.
வானரர்கள் என்றால் இன்று நாம் பார்க்கும் குரங்கு என்று சொல்ல முடியாது.
சமஸ்க்ருதத்தில் கபிஹி என்றாலும் குரங்கு என்று பொருள்.
வானில் பறக்கும் சக்தி கொண்டிருந்த நரர்கள் இவர்கள் என்பதால், ராமாயணம் வானரர்கள் என்று பல முறை அழைக்கிறது.
இவர்களிடம் கபிஹி, அதாவது குரங்கு போன்ற நிலையற்ற புத்தியும், வாலும் இருந்துள்ளது என்று தெரிகிறது.
இலங்கை சென்ற ஹனுமானின் வாலுக்கு தீ வைத்தனர். ஹனுமான் அந்த தீயை வைத்துக்கொண்டே இலங்கை முழுவதையும் கொளுத்தினார்.
இலங்கை எரிந்து கொண்டிருக்கும் போது, "ஐயோ! சீதா தேவியும் இருக்கிறாளே.. என்னுடைய குரங்கு புத்தியால் இப்படி செய்து விட்டேனே" என்று பதறினார்.
பிறகு, அசோகவனம் மட்டும் எரியவில்லை என்று பார்த்த பிறகே சமாதானம் அடைந்தார் என்று பார்க்கிறோம்.
இவ்வாறு அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லும் மூன்று விதமான மனிதர்களையும் காட்டும் ஒரே நிகழ்வு ராமாயணம் மட்டுமே.
Homo erectus என்ற வானரர்கள், homo neanderthals என்ற ராக்ஷஸர்கள் வாழ்வு முறையை காட்டுவதும் ராமாயணம் மட்டுமே.
அன்று ராமாயணத்தில் சொல்லப்பட்ட அயோத்தி இன்றும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட பஞ்சவடியும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட இமய மலையும் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட யமுனை, கங்கையும் இருக்கிறது. ராமபிரான் ஆணையால் வானரர்கள் போட்ட பாலமும் இன்று கூட தெரிகிறது. ராவணன் படித்து வைத்திருந்த இலங்கை என்ற தேசமும் இருக்கிறது.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அவதரித்த அன்பில் என்ற ஊர் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது.
வேடுவனாக இருந்த இவரிடம் நாரதர் "ராம ராம" என்று ஜபம் செய் என்று சொல்ல, ரா என்ற எழுத்து முதல் எழுத்தாக இருப்பதால் இவர் ஜபம் செய்ய முடியாமல் உளற, வ்ருக்ஷத்தை காண்பித்து இது என்ன என்று நாரதர் கேட்க, இது மரா என்று இந்த வேடுவன் கொச்சை தமிழில் சொல்ல, அதையே சொல்லி கொண்டு இரு என்றார் நாரதர்.
மராமராமராமரா என்று சொல்ல அதுவே திரும்பி ராம நாமமாக ஆனது என்பதை தமிழனான வால்மீகியே தன் கதையை முதல் அத்யாயத்தில் சொல்கிறார்.
இந்த வால்மீகி ராமபிரான் அவதாரம் முடிந்த பிறகு, மீண்டும் தமிழகம் வந்து, சென்னையில் இருக்கும் திருநீர்மலையில் மோக்ஷம் அடைந்தார் என்றும் பார்க்கிறோம்.
ஒரு தமிழர் எழுதிய இந்த ராமாயண சரித்திரம், தமிழிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிற்காலத்தில் கம்பன் என்ற பெருங்கவி, ராமாயணத்தை தமிழில் எழுதினார் என்றும் பார்க்கிறோம்.
தமிழன் வால்மீகி காட்டிய ராமாயணத்தில் தான், மூன்று வகை மனிதர்கள் இருந்தார்கள் என்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பாக தமிழர்களுக்கு பெருமை கொடுக்கிறது.
அன்பில் செல்வோம், திருநீர்மலை செல்வோம். தமிழன் வால்மீகியை போற்றுவோம்.