Followers

Search Here...

Saturday 27 May 2023

ஆண் குழந்தை பெற வழி என்ன? பெண் குழந்தை பெற வழி என்ன? அலியை பெறுவது எப்படி? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி...

ஆண் குழந்தை பெற வழி என்ன? 

பெண் குழந்தை பெற வழி என்ன?

அலியை பெறுவது எப்படி?

இரட்டை குழந்தைகளை பெறுவது எப்படி?

ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.

அறிவோம் மனு ஸ்மிருதி...


ऋतुकाल अभिगामी स्यात् 

स्व-दार निरतः सदा ।

पर्ववर्जं व्रजेच्चैनां 

तद्व्रतो रतिकाम्यया ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

எப்பொழுதும் மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வது கணவனின் கடமை. மனைவியை தவிர அந்நிய பெண்ணை நினைக்க கூட கூடாது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் சில நாட்கள் தவிர்த்து, மனைவியிடம் சேரலாம்.

ऋतुः स्वाभाविकः स्त्रीणां 

रात्रयः षोडश स्मृताः ।

चतुर्भि: इतरैः सार्धम् 

अहोभिः सद्विगर्हितैः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ரஜஸ் வலை (3 day period) முடிந்த பிறகு, பொதுவாக (least) பெண்ணுக்கு அடுத்த 16 நாட்கள் ருது காலம் என்று சொல்லப்படுகிறது. ருது காலத்தின் முதல் 4 நாட்களும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும்.


तासाम् आद्याश्चतस्रस्तु 

निन्दित: एकादशी च या ।

त्रयोदशी च शेषास्तु 

प्रशस्ता दशरात्रयः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ருது காலத்தின் முதல் 4 நாட்களும், அதே போல 11வது நாளும், 13வது நாளும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும். இந்த 6 நாட்கள் தவிர்த்து, மற்ற 10 நாட்களில் மனைவியோடு சேரலாம்.

युग्मासु पुत्रा जायन्ते 

स्त्रियो अयुग्मासु रात्रिषु ।

तस्माद् युग्मासु पुत्रार्थी 

संविशेदार्तवे स्त्रियम् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில், 6வது அல்லது 8வது நாளில் மனைவியோடு சேர்ந்தால், மகன் பிறப்பான்.

மீதி உள்ள 8 நாட்களில் சேர்ந்தால், மகள் பிறப்பாள்

மகனை விரும்புபவர்கள், மகளை விரும்புபவர்கள் தகுந்த படி சேரலாம்.


पुमान् पुंसो अधिके शुक्रे 

स्त्री भवति अधिके स्त्रियाः ।

समे अपुमान् पुं।स्त्रियौ वा 

क्षीणे अल्पे च विपर्ययः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஆணின் அணுக்கள் (Y) அதிகமாக இருந்தால், மகன் பிறப்பான்.

பெண்ணின் ஶ்ரோணிதம் (X) அதிகமாக இருந்தால், மகள் பிறப்பாள். (இதையும் மாற்ற பும்ஸவனம் என்ற வைதீக கர்மாவை சரியான காலத்தில் செய்தால், மகனாக பிறப்பான்)

இரண்டும் சமமாக இருந்தால், அலி பிறப்பான், அல்லது இரட்டையாக குழந்தைகள் பிறக்கும். 

குறைவாக இருந்தால், கர்ப்பம் ஏற்படாது.


निन्द्यास्वष्टासु चान्यासु 

स्त्रियो रात्रिषु वर्जयन् ।

ब्रह्मचार्येव भवति यत्र 

तत्र आश्रमे वसन् ॥ 

- மனு ஸ்மிருதி (manu smriti)

இப்படி எந்த கணவன் தன் மனைவியின் ருது காலத்தில் முதல் 4 நாட்களும், 11வது, 13வது நாட்களில் சேராமல், மற்ற நாட்களில் மட்டும் சேர்கிறானோ, அவன் க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிப்பவனே. அவன் பிரம்மச்சாரியே!


अमावास्याम् अष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम् ।

ब्रह्मचारी भवेन् नित्यमप्यर्तौ स्नातको द्विजः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்தசி போன்ற நாட்களில், மனைவி ருது காலத்தில் இருந்தாலும், பூணூல் காயத்ரீ உபதேசம் பெற்ற வைசியன்/பிராம்மணன்/க்ஷத்ரியன் (த்விஜன்) மனைவியுடன் படுக்க கூடாது.


No comments: