Followers

Showing posts with label கல்லெடுத்து. Show all posts
Showing posts with label கல்லெடுத்து. Show all posts

Monday, 17 February 2020

பாசுரம் (அர்த்தம்) - கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் - திருமங்கையாழ்வார் காஞ்சி உலகளந்த பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார், தன்னை ஒரு பெண்ணாக (பரகால நாயகியாக) பாவித்து, 'பெருமாளை' தன்னுடைய பிரியனாக (நாயகனாக) பார்க்கிறார்.

பாசுரம் : (ஊரகம் உலகளந்த பெருமாளுக்கு மங்களாசாசனம்)


கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும் !
காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்!
வில் அறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய் என்றும்!
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்!
மல் அடர்த்து மல்லரை ன்று அட்டாய் என்றும்!
மாகீண்ட கை தலத்து என் மைந்தா என்றும்!
சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று
துணைமுலைமேல் துளிசோர சோர்கின்றாளே
-- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)

பரகால நாயகியின் தாயார், தன் பெண்ணுடைய நிலையை பார்த்து மேலும் வருந்துகிறாள்.

"எப்பொழுது பார்த்தாலும் நாம சங்கீர்த்தனமே செய்து கொண்டு இருக்கிறாள். அதுவே ஜீவனமாக இருக்கிறாள். 
அதை தவிர வேறு பேச்சோ, காரியமோ கிடையாது இவளிடம். 

'கோவர்த்தன மலையையே தூக்கி (கல்லெடுத்து) கல் போல விழுந்த மழையிடம் (கல் மாரி) இருந்து காத்தாயே, கிரிதரா!' 
என்று எப்பொழுது பார்த்தாலும் சொல்லி கொண்டு இருக்கிறாள்.  (கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும்)
இல்லாதுபோனால், திவ்ய தேசங்ககளின் பெயர்களையே எப்பொழுதும் சொல்லி கொண்டு இருக்கிறாள். 
'அழகிய காஞ்சிபுரம், ஊரகம்..' என்றே சொல்கிறாள். (காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்)
'அழகான தோள்களை உடைய நீங்கள், யாரும் அசைக்க முடியாத சிவ தனுஷை முறித்து (வில்லிறுத்து), மஹாலக்ஷ்மியான சீதையை கைபிடித்து மணந்து கொண்டீர்களே ! (வில் அறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய் என்றும்) எத்தனை ஆசை உங்களுக்கு சீதாப்பிராட்டியிடம். அந்த ஆசையை கொஞ்சம் என்னிடத்தில் வைக்க கூடாதோ?' என்றெல்லாம் புலம்புகிறாள்.

மேலும் 
'ஒருவேளை காஞ்சியில் உள்ள வெஃகாவில், சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக இருக்கும் நீங்கள், சேஷ சயனத்தில் தூங்கி விட்டீர்களா? எப்படி உங்களுக்கு தூக்கம் வருகிறது? எனக்கு இங்கு தூக்கமே இல்லையே?' (வெஃகாவில் துயில் மர்ந்த வேந்தே என்றும்) என்கிறாள்
'இரண்டு தோள்களையும் தட்டி கொண்டு, உங்களிடம் வந்த முஷ்டீகன், சாணூரன் என்ற மல்லர்களை கண்டும் பயப்படாமல், அவர்கள் வலிமையை அடக்கி ஒழித்து கட்டினீர்களே! என்னிடம் பேச என்ன தயக்கம்? யாரிடம் பயம்? பெண் பிள்ளையான நானே தைரியமாக இப்படி எண்ணத்தை சொல்லும் போது, யாரிடம் பயப்படுகிறீர்கள்? (மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்றும்)' என்கிறாள்
'கேசி என்ற அசுரன் குதிரை போன்ற வடிவத்தில் வர, அந்த அரக்கனின் பிடறி மயிரை பிடித்து இழுத்து, அவன் வாயிக்குள் கைவிட்டு, தன் கையால் கிழித்து, கேசவா என்று பெயர் பெற்றீரே!' (மாகீண்ட கை தலத்து என் மைந்தா என்றும்) என்று புலம்பும் என்னுடைய பெண், 
எம்பெருமானின் வீர செயல்களையும், குணங்களையும், திருநாமங்களையும் யாரிடமாவது சொல்ல வேண்டும், பிறர் தன் நாயகனை பற்றி சொல்ல, கேட்க வேண்டும்" என்று சத்சங்கத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கிளிக்கு பழக்கி வைத்து இருக்கிறாள்."
என்று வருந்துகிறாள் பரகால நாயகியின் தாயார்.
இந்த பரகால நாயகி எம்பெருமானின் வீர செயல்களையும், குணங்களையும், திருநாமங்களையும் சொல்ல சொல்ல, அந்த கிளியும் கேட்டு கேட்டு நன்றாக மனப்பாடம் செய்து விட்டதாம்.

தான் சொல்லிக்கொடுத்ததை அந்த கிளி திருப்பி சொல்கிறதா? என்று பார்க்க, 
"கல்லெடுத்து" என்று இவள் சொல் எடுத்து கொடுக்க (சொல்லெடுத்து), உடனே அந்த கிளியும் "கல்லெடுத்து கல்மாரி காத்தாய்" என்று திருப்பி சொல்ல. 
உடனே இவள், "காமரு" என்று சொல் எடுத்து கொடுக்க (சொல்லெடுத்து), உடனே அந்த கிளியும் "காமரு பூங்கச்சி ஊரகத்தாய்" என்று திருப்பி சொல்கிறது. (தன் கிளியை சொல்லே என்று)
இப்படியே தான் சொல்லிகொடுத்தை, அந்த கிளி திருப்பி சொல்ல சொல்ல, 
எம்பெருமானின் வீர செயல்களை, குணங்களை, திருநாமங்களை நாம சங்கீர்த்தனம் செய்ய, நாம சங்கீர்த்தனத்தை கேட்டு கேட்டு, மேலும் கண்ணீர் பெருக்கி அழ, அவள் மார்பில் கண்ணீர் வழிந்து ஓட, (துணைமுலைமேல் துளிசோர) அப்படியே சோர்ந்து மயங்கி விடுகிறாளே என்னுடைய பெண் (சோர்கின்றாளே)" என்று வருத்தப்படுகிறாள் பரகால நாயகியின் தாய்.. 'காதல் கொண்டு பெருமாளுடன் உறவு கொள்வது, பக்தியின் உச்சம்' என்று சொல்லப்படுகிறது.

சாமானிய ஜனங்கள் இது போன்ற ஆழ்வார்களின் அனுபவத்தை, தாங்கள் அனுபவிக்கும் உலக காமத்துடன் ஒப்பிட்டு விடுவார்கள் என்பதாலேயே, பக்தியில் தகுதி இல்லாதவர்களுக்கு பாசுரங்களின் அர்த்தங்களை சொல்ல பயந்தனர்.

மூன்று பக்தி நிலைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள...
இங்கே படிக்கவும்.