Followers

Search Here...

Saturday 15 August 2020

கோவிலை சுற்றி, பிறகு தன்னையே ஒரு சுற்றி கொள்வது ஏன்? தெரிந்து கொள்வோம்..

 கோவிலை சுற்றி, பிறகு தன்னையே ஒரு சுற்றி கொள்வது ஏன்? தெரிந்து கொள்வோம்..

பொதுவாக நதிகளை 'பெண்ணாகவும்', 

கடல், மலைகளை 'ஆணாகவும்', 

நம் வேத தர்மம் காட்டுகிறது.


நதிகளை "கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி, சரஸ்வதி,நர்மதா, சிந்து' என்று பெண்ணாகவே அழைக்கிறோம்.


ஒரு தாயை போல நமக்காக ஓடி வந்து, பயிர்களை வளர செய்து, நமக்கு அன்னமும், தாகத்துக்கு நீரும் தருகிறாள்.


'ஹிமாலய மலை, கோவர்த்தன மலை, திருமலை, அழகர் மலை' என்று மலைகள் அனைத்தையும் ஆணாக அழைக்கிறோம்.


மலைகளில் கோவர்த்தன மலையை "கிரி ராஜ்" என்றே இன்றும் அழைக்கிறார்கள்.


கடலை "சமுத்திர ராஜன்" என்று சொல்கிறோம்.





நதிகளுக்கு தகப்பனாக 'மலைகள்' சொல்லப்படுகிறது.


சமுத்திரம் நதிகளின் 'கணவன் என்று சொல்லப்படுகிறது.


மலைகளில் இருந்து ஓடி வரும் நதிகள், சமுத்திரனிடம் வந்து சேர்ந்து விடும்.


பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்த பிறகு, 

கங்கை, காவிரி, கோதாவரி என்று அனைத்து நதிகளும் வருவதை விட, இன்று யமுனை மட்டும் சற்று மந்தமான வேகத்தில் வந்தாள்.


சமுத்திர ராஜனுக்கு 'இவள் மட்டும் ஏன் மந்தமாக தன்னை நோக்கி வருகிறாள்?' என்று தோன்றியது.


யமுனையிடம் "யமுனா! ஏன் இன்று மந்தமாக வருகிறாய்?" 

என்று கேட்டார்.


யமுனா தேவி, தன் கணவனிடம், "உங்களுக்கு தெரியாததா! பகவான் நாராயணன், கிருஷ்ண அவதாரம் செய்து இருகிறார். 

அவர் நான் ஓடும் வழியில் தானே, குழந்தையாக லீலை செய்கிறார்.


ஸ்ரீ பிருந்தாவனம் வழியாக நான் ஓடும் போது, அந்த நீலமேகம் போன்ற கண்ணன் கிளை தாழ்ந்து இருக்கும் மரத்தில் ஏறி, அமர்ந்து கொண்டு குழல் ஊதுகிறான்.


அப்பொழுது அந்த கண்ணனின் சங்கு சக்கரம் ரேகை பதிந்த பாதம், யமுனா நதியாக ஓடும் என் மீது படும் பாக்கியம் கிடைக்கிறது. 

இதை ரசித்து கொண்டே இருக்கும் என்னால், வேகமாக ஓட முடியாமல் மந்தமாகி விடுகிறேன்.


உங்களுக்கும் பரமாத்மாவின் பாத ஸ்பரிசம் கிடைக்க வேண்டும் என்கிற நினைவும் எனக்கு உண்டு.


பத்னியான நான், பரமாத்மாவை உங்களோடு சேர்ந்து அனுபவிக்க முடியாமல் போனாலும், உங்களுக்காக நான் இந்த பூக்களை பிரசாதமாக கொண்டு வந்து இருக்கிறேன்.





யமுனா நதியான என் மீது விழும் பல வித புஷ்பங்களை, தாமரை போன்ற மலர்களை, அந்த கண்ணனின் பாதம் படும்படியாக எடுத்து செல்வேன். 

அவர் பாத ஸ்பரிசம் இந்த மலருக்கு கிடைத்துள்ளது.


கிருஷ்ண பிரசாதம் கிடைத்த ஆனந்தத்தில் அந்த பரந்தாமனை ஒரு வலம் வந்து சுற்றி, பிறகு இந்த பாக்கியம் கிடைத்த என்னையும் தன்னைத்தானே சுற்றி கொண்டு உங்களிடம் வந்து சேர்ந்தேன்"

என்று சொல்லி தான் கொண்டு வந்த பூக்களை தன் பதியான சமுத்திர ராஜனிடம் சேர்த்தாள்.


கிருஷ்ண பிரசாதம் கிடைத்த ஆனந்தம் ஒரு புறம் இருந்தாலும்,

"யமுனாவுக்கு கிடைத்த பாக்கியம், தனக்கு இல்லாமல் உள்ளதே! 

கிருஷ்ண தரிசனமும், அவர் செய்யும் லீலைகளும் பார்க்க முடியாமல் போனதே" 

என்று வருத்தம் கொண்டாராம் சமுத்திர ராஜன். 


அனைவரது அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, சமுத்திர ராஜனின் மனக்குறையை அறியாமல் இருப்பாரா?..


கம்சனை கொன்ற பிறகு, மதுராவுக்கு அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், சமுத்திர ராஜன் ஆசையை தீர்க்கும் விதமாக, கடலுக்கு நடுவே அதி ஆச்சர்யமாக துவாரகை என்ற நகரை உருவாக்கி, தன் அவதார காலம் முழுக்க, கிருஷ்ண தரிசனமும், கிருஷ்ண லீலையை பார்க்கும் ஆனந்தத்தையும், சமுத்திர ராஜனுக்கும் கொடுத்தார்.


கிருஷ்ண பக்தன் நினைப்பதெல்லாம் கிடைக்கும்.


யமுனா தேவி புஷ்பம் எடுத்து கொண்டு போய் கிருஷ்ண பாதத்தில் வைத்து, பிறகு கிருஷ்ண பிரசாதமாக எடுத்து கொண்டு, கோவிந்தனை வலம் வந்து, தன் பாக்கியத்தை நினைத்து தன்னையே ஒரு சுற்று சுற்றி பிறகு தன் வீட்டுக்கு செல்வது போல, 

நாமும் பெருமாளுக்கு நம் கையால் ஏதாவது கொடுத்து, பெருமாளிடம் பிரசாதமாக பெற்று கொண்டு, பெருமாளை வலம் வந்து, பிறகு தன் பாக்கியத்தை எண்ணி தன்னையே ஒரு சுற்றி கொண்டு, பிறகு நம் வீட்டுக்கு செல்லும் பழக்கம் ஏற்பட்டது.


பக்தியின் ஒரு வித வெளிப்பாடு இது. ஒரு அற்புதமான அனுபவம்.


எந்த செயலிலும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய ஹிந்து தர்மத்தை மற்றவர் கேலி செய்ய மானமுள்ள ஹிந்து அனுமதிக்க கூடாது..

No comments: