Followers

Search Here...

Showing posts with label என்ன சொல்லவேண்டும். Show all posts
Showing posts with label என்ன சொல்லவேண்டும். Show all posts

Friday 12 November 2021

இரவு தூங்கும் முன் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும்? பகவானை தரிசிக்க எப்படி தயாராக இருக்க வேண்டும்?

இரவு தினமும் படுத்து கொள்ளும் முன், கை கால் அலம்பி கொண்டு, துடைத்து கொண்டு, படுக்க வேண்டும்.

பகவத் தரிசனம் கனவில் ஏற்பட கூடும், அசுத்தமாக படுக்க கூடாது. 

வடக்கே தலை வைத்து படுக்க கூடாது.

தெய்வத்தின் (ஸ்வாமி அறை) பக்கம் கால் வைத்து படுக்க கூடாது.

ஏதாவது துணியாவது படுக்கையுமாக போட்டு தான் படுக்க வேண்டும். வெறும் தரையில் படுக்கக்கூடாது. உடல் ஆரோக்கியம் முக்கியம்.


அம்மாவாசை போன்ற பித்ரு தினங்களில், ஏகாதசி போன்ற விரத தினங்களில் மனைவியோடு படுக்க கூடாது. அன்று சவரம் செய்வதும் கூடாது.


படுப்பதற்கு முன் கீழே சொல்லியுள்ள பிரார்த்தனையை சொல்லி விட்டு படுக்க வேண்டும்.

அகஸ்திய: மாதவ: ச ஏவ

முசுகுந்தோ மஹாபல: 

கபில: முனி அஸ்திக:

பஞ்சைதே ஸுகசாயின:

அகஸ்தியர், மாதவ, முசுகுந்த, கபில, அஸ்திகர், ஆகிய ஐவரும் சுகமாக சயனிக்க அருள் புரியட்டும்

ஸச்சித்த-சாயீ புஜகேந்த்ர-சாயீ

நந்தாங்க-சாயீ கமலாங்க-சாயீ

அம்போதி-சாயீ வடபத்ர-சாயீ

ஸ்ரீரங்க-சாயீ ரமதாம் மனோமே

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் (ஸ்ரீரங்க அஷ்டகம்)

ஸாது ஜனங்களில் சித்தத்தில் சயனிப்பவன், நந்தகோபன் மடியில் சயனிப்பவன், மஹாலக்ஷ்மி மடியில் சயனிப்பவன், பாற்கடலில் சயனிப்பவன், ப்ரளய காலத்தில், ஆலிலையில் பால முகுந்தனாக சயனிப்பவன், ஸ்ரீரங்கத்தில் சயனிப்பவன் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது. 

கரார-விந்தேன பதார-விந்தம்

முகார-விந்தே வினிவேச-யந்தம்

வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்

பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

- கிருஷ்ண கர்ணாம்ருதம்

(தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற தன் இடது பாதத்தை, தாமரை போன்ற தன் வாயில் வைத்து தன்னையே சுவைத்து கொண்டிருக்கும் ஆலிலை மேல் சயனித்திருக்கும் குழந்தை முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்) 



அனாயாஸேன மரணம்

வினா தைன்யேன ஜீவனம்

தேஹி மே க்ருபயா சம்போ

த்வயீ பக்திம் அசஞ்சலாம்

மரண பயம் இல்லாத கண் இமைப்பது போல சுலபமான  மரணம், வறுமை, கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமைய, உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா. உங்களிடம் நிலையான பக்தியையும் கொடுங்கள்.

வ்யத்யஸ்த-பாதம் அவதம்ஸித பர்ஹி-பர்ஹம்

ஸாசீ க்ருதானன நிவேசித வேணுரந்த்ரம்

தேஜ: பரம் பரம-காருணிகம் புரஸ்தாத்

ப்ராண: ப்ரயாண ஸமயே மம ஸன்னிதத்தாம்

- கிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலா-சுகர்)

மாற்றி வைத்த பாதங்கள் உடையவனும், மயில் தொகை சூடியவனும், சாய்ந்த முகத்தில் குறுக்காக வைக்கப்பெற்ற குழலின் துவாரங்களை உடையவனும், சிறந்த கருணை உடையவனும், பரஞ்ஜோதி வடிவானவனுமான கிருஷ்ணன், என்னுடைய பிராணன்  வெளி கிளம்பும் சமயத்தில், என் முன் காட்சி அளிக்கட்டும்.

அதராம்ருத சாரு வம்ச நாளா:

மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா:

ஹரி நீல ஸிலா விபங்க நீலா:

ப்ரதிபா: ஸந்து மம அந்திம ப்ரயாணே

(கோபால விம்சதியில் ஸ்வாமி தேசிகன்)

நச்சியே கையினில் வேய்ங்குழலை ஏந்தியே, நளினவாய் தன்னில் வைத்து நயமுடன் ஓசைதனை எழுப்பிய வண்ணமே, இணையிலா உச்சியிற் கொண்டையும், மயிலினது இறகையும் அதில் சேர்த்தியே, அடியேற்கு வரப்போகும் மரண உற்சவத்தினில், நீ குழந்தை வடிவாய் எழிலுடன் காட்சியருள் கண்ணனே !


தேஹாவஸான ஸமயே தயயா ரகூணாம்

நாத: கராம்புஜ: விராஜத பீதி முத்ர:

ஆருஹ்ய புஷ்பகம் அலங்க்ருத வாமபாக: 

தேவ்யா விதேஹ ஸுதயா மம ஸந்நிதத்தாம்

(ராம ஸ்தவ கர்ண ரஸாயணம் - ராமபத்ர தீக்ஷிதர்) 



க்ருஷ்ண த்வதீய பதபங்கஜ பஞ்சராந்த

மத்யைவ மே விசது மானஸ ராஜஹம்ஸ:

ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தை:

கண்டா வரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே

(முகுந்தமாலை - குலசேகர ஆழ்வார்)

கிருஷ்ணா! இந்த சமயத்தில் என்னுடைய மனம் என்ற அன்னப் பறவைக்கு, தங்களுடைய தாமரைப் பாதத் தண்டுகளில் இப்போதே அடைக்கலம் கொடுங்கள். மரண வேளையின் பொழுது என்னுடைய தொண்டை கபம், வாதம், பித்தம்,  போன்றவைகளால் தடைபடும் போது தங்களை எப்படி என்னால் நினைக்க  முடியும்?


இவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு படுக்க வேண்டும்.

படுத்து இருக்கும் போது, பகவன் நாமத்தை ஸ்மரணம் செய்து (நினைத்து) கொண்டே தூங்க வேண்டும்.


இடையிடையே விழிப்பு வந்தால், தூக்கம் வரும்வரை  பகவன் நாமத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.


தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்தாலும் பகவன் நாமத்தை சொல்லும் அளவுக்கு நாக்கை மனசை பழக்கிட வேண்டும்.


இரவில் மலம் மூத்திரம் கழிக்க எழுந்தால், கை கால் அலம்பி, துடைத்து கொண்டு படுக்க வேண்டும்.


இரவில் அசுத்தமாக படுப்பவனிடம், பூத பிரேத பிசாசுகள் வரும். இதனால் கெட்ட கனவுகள் வரும்.

இரவு சுத்தமாக படுக்க வேண்டும். கனவில் பகவான் தரிசனம் தரக்கூடும்.

எனவே கை கால் அலம்பி சுத்தமாக படுத்து உறங்க வேண்டும்.


அதிகமான தூக்கம் கூடாது. 

இரவு 10 மணிக்குள் படுத்து கொண்டு, 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.


இவ்வாறு சாஸ்திரப்படி தினமும் வாழ்க்கை நடத்துபவர்கள் இகத்திலும், பரத்திலும் சுகமாக இருப்பார்கள்.


குருநாதர் துணை