Followers

Search Here...

Showing posts with label படைக்கப்பட்டவர்கள். Show all posts
Showing posts with label படைக்கப்பட்டவர்கள். Show all posts

Saturday 18 April 2020

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டார்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது? சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டவர்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது?

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான், படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது.  
ப்ரம்ம தேவன், தன் "மனதிலிருந்து சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வயம்பு மனு போன்றவர்களை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.




சனத் குமாரர்கள் "உலக சிருஷ்டியில் நாங்கள் ஈடு படமாட்டோம்" என்று ப்ரம்ம தேவனிடம் சொல்ல, கோபத்தை அடைக்க, அவர் நெற்றியில் இருந்து ருத்ரன் வெளிப்பட்டார் என்று சொல்கிறது.
அவரே 11 ருத்ரர்களாக பிறகு ஆகி, பிறகு கைலாயம் என்ற லோகத்துக்கு சென்று விட்டார் என்று சொல்கிறது வேதம். மேலும் படிக்க இங்கே பார்க்கவும்.

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான் படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது. 

சாதாரண பேன் எப்படி உண்டாகிறது? என்று கவனித்தாலே, வேதம் சொல்லும், ஆரம்ப கால ஸ்ருஷ்டி  நமக்கு புரிந்து விடும்.
நம் தலையில் உள்ள புழுக்கத்தில் இருந்து "பேன் உண்டாகிறது".. ஆண் பெண் சேர்க்கை தேவைப்படாமல் தானே உருவாகிறது.
ஆரம்ப படைப்பு எதுவுமே "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் தான் நடக்கிறது".

மனிதனில் முதல் படைப்பு "மனு".
மனுவை தன் மனதிலிருந்து ஸ்ருஷ்டி செய்தார் பிரம்மா என்று சொல்லும் போது, "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் மனித ஸ்ருஷ்டி எப்படி நடக்கும்?" என்று நினைக்கக்கூடாது.
"ஆரம்ப ஸ்ருஷ்டி எதுவுமே, சேர்க்கை இல்லாமல் நடக்கிறது" என்பதை நாம் புரிந்து கொள்ளவே, நம் தலையிலேயே பேன் உருவாகி நமக்கு புரிய செய்கிறது.
சற்று கவனிக்கும் போது தான், நமக்கு படைப்புகளின் ரகசியங்கள் புரியும்.

திடீரென்று நம் தலையில் பேன் உருவாவதையும்,
திடீரென்று மர பட்டையில் இருந்து மரவட்டை உருவாவதை கவனிக்கும் போது, ஆரம்ப ஸ்ருஷ்டியை புரிந்து கொள்ள முடியும்.

மனிதர்களால் எழுதப்பட்ட 500 பக்க போலி புத்தகம் அல்ல, ஹிந்து மதம்..
மனிதன் ஆடையில்லாமல் முட்டாள் ஆதாம் ஏவாளாக பிறந்தார்கள் என்று சொல்லவில்லை நம் தர்மம்.

முதல் மனிதனே ஸ்வாயம்பு மனு. மனு உலகை ஆளும் திறனுடன், அரசாங்க சட்டம் எப்படி இருக்க வேண்டும்? சமுதாயம் எப்படி அமைக்க வேண்டும்? என்று மனு நீதி கொடுத்தார் என்று மனிதன் மகா அறிவாளியாக தான் படைக்கப்பட்டான் என்று ஆரம்பிக்கிறது..

இன்று வரை நம் இந்திய சட்டம், மனு நீதியை கொண்டு தான் உள்ளது. அம்பேதகர், சட்டத்தை மனு நீதியை கொண்டே அமைத்தார்.
அது மட்டுமல்ல, போலி மதத்தில் உள்ளவர்களே, மனித குலத்தை "Adam" என்று சொல்லாமல் நம் மனுவை தான் "Man" என்று சொல்கின்றனர்.

போலி மதத்தை சேர்ந்தவன் கூட, மனிதன் முட்டாள் ஆதாம் வம்சம் என்று சொல்லி கொள்ள பிரியப்படவில்லை என்கிற போது, அறிவுள்ள ஹிந்துக்கள் சொல்வார்களா?

நாம் அனைவருமே மனு வம்சம்..
மனு பிரம்மாவால் படைக்கப்பட்டவர். ஆதலால் நாம் ரிஷி வம்சம்.




எந்த ஜாதியில் இருந்தாலும், உன் கோத்திரம் (பரம்பரை) என்ன என்று கேட்டால்? 
ஒவ்வொருத்தரும் நான் "கௌசீக ரிஷி" கோத்திரம், நான் "பரத்வாஜ" கோத்திரம் என்று சொல்கிறார்கள்.

நாம் எந்த ரிஷி பரம்பரை? என்பதை ஹிந்துக்கள் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் அந்த ரிஷியை பற்றி முழுவதுமாக தெரிந்து இருக்க வேண்டும்.

1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில், 500 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், "தான் எந்த ரிஷி பரம்பரை?" என்பதையே மறந்து விட்டார்கள் பலர்.

விழித்து எழ வேண்டும் ஹிந்துக்கள்..
தன் ரிஷி யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
முடிந்தால், தன் வீட்டின் பெயராக ரிஷியின் பெயரை வைத்து அடையாளப்படுத்தி கொள்ள ஆரம்பிக்க வேண்டும்..

அவர் சரித்திரத்தை, பெருமையை எழுதி, அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும்..

இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை... 
இதை செய்யும் போது, நம் குலம் எத்தனை பெருமை வாய்ந்த குலம் என்பது புரியும்..

"ஆதியில் அனைவருமே பிரம்ம தேவன் படைப்பு தான்"
என்பதும் புரியும்.
ப்ரம்மாவையும் படைத்த நாராயணன் தான், "நம் முழு முதற்கடவுள்" என்பதும் புரியும்.
சில ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ள.. இங்கே படியுங்கள்.. நீங்கள் எந்த ரிஷி பரம்பரை என்று தேடுங்கள்.. உங்கள் ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

வாழ்க ஹிந்துக்கள்.