Followers

Search Here...

Showing posts with label hanuman ramayan. Show all posts
Showing posts with label hanuman ramayan. Show all posts

Thursday 4 January 2024

பீமனுக்கு ஹனுமான் சொன்ன குட்டி ராமாயணம் - நாம் தினமும் சொல்லலாம்.

ஹனுமான் சொன்ன குட்டி ராமாயணம் - தினமும் சொல்லலாமே

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது ஒரு சமயம், 

ततः पूर्वोत्तरे वायुः प्लवमानो यदृच्छया।

सहस्र पत्रमर्काभं दिव्यं पद्मम् उपाहरत् ।।

तदवैक्षत पाञ्चाली दिव्यगन्धं मनोरमम्।

अनिलेनाहृतं भूमौ पतितं जलजं शुचि ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

வட கிழக்கில் வீசிய காற்றினால், 1000 இதழ்கள் கொண்ட, சூரியனுக்கு ஒப்பான பிரகாசத்தோடு திவ்யமான ஒரு தாமரை பூ தற்செயலாக வந்து விழுந்தது.

பாஞ்சாலியான திரௌபதி, அந்த திவ்யமான மணம் கொண்ட, மனதை மகிழ்விக்க கூடிய காற்றினால் கொண்டு வரப்பட்ட பூமியில் விழுந்து கிடக்கும் சுத்தமான அந்த தாமரையை பார்த்தாள்.

तच्छुभा शुभमासाद्य सौगन्धिकम् अनुत्तमम्।

अतीवम् उदिता राजन् भीमसेनम् अथाब्रवीत् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

அந்த ஸௌகந்திக புஷ்பத்தை கையில் எடுத்த திரௌபதி, பீமசேனனை பார்த்து, "பீமசேனரே! திவ்யமாக இருக்கும், மிகவும் அழகாக இருக்கும், பூக்களில் உத்தமாக இருக்கும், நறுமணம் கொண்ட, அழகிய வடிவம் கொண்ட, என் மனதை மகிழ்விக்க கூடிய இந்த மலரை பாருங்கள். 

இந்த மலரை தர்ம ராஜருக்கு கொடுப்பேன். 

இதே ஜாதியை சேர்ந்த மலரை மேலும் பறித்து கொண்டு தாருங்கள். 

அந்த பூக்களை நான் காம்யக வனத்தில் உள்ள நமது ஆஸ்ரமத்தில் வைத்து கொள்வேன்

பார்த்தரே ! நான் உங்களுக்கு ப்ரியமானவள் என்று நினைத்தால், இந்த மலர்களை இன்னும் நிறைய பறித்து கொண்டு வாருங்கள். நான்   அவைகளை நமது காம்யக வனத்தில் உள்ள நமது ஆஸ்ரமத்திற்கு கொண்டு போக விரும்புகிறேன்" என்றாள்.


பீமன், திரௌபதியின் இந்த சாதாரண ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவது என்ற முடிவோடு, மலரை கொண்டு வந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பெரும் மலைகளில் ஏறி அந்த ஸௌகந்திக புஷ்பத்தை தேடி அலைந்தான்.


அப்போது ஹனுமான் வயதான வானரம் போல அவன் போகும் பாதையில் படுத்து கொண்டிருந்தார். 

"ஒவ்வொரு உடலுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார்.. உன் உள்ளும் இருக்கிறார். அதனால் தாண்ட மாட்டேன். வழி விடு" என்றான் பீமன்.

"வயதாகி விட்டதால், நகர முடியவில்லை. என் வாலை நகர்த்தி விட்டு செல்" என்றார் ஹனுமான்.

பீமன் என்ன முயற்சி செய்தும் வாலை அசைக்க கூட முடியாமல் போக, வந்திருப்பது யார்? என்று பணிவோடு கேட்டான்.

हनूमानुवाच (ஹனுமான் பீமனை பார்த்து பேசலானார்)

यत्ते मम परिज्ञाने कौतूहलम् अरिंदम।

तत्सर्वम् अखिलेन त्वं शृणु पाण्ड-वनन्दन ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)    

பகைவர்களை அடக்குபவனே! பாண்டுவின் பிள்ளையே! நீ என்னை பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டு இருப்பதால், நான் சொல்லும் அனைத்தையும் கேள்.


अहं केसरिणः क्षेत्रे वायुना जगद् आयुषा।

जातः कमल-पत्राक्ष हनूमान् नाम वानरः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

தாமரை இதழ் போன்ற கண்கள் உடையவனே! நான் கேசரி என்பவரின் பத்னிக்கு உலகத்திற்கு ஆயுளாக இருக்கும் வாயுவின் அனுகிரஹத்தால் பிறந்த எனக்கு ஹனுமான் என்று பெயர். 


सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।

सर्व वानर राजानौ सर्व-वानर यूथपाः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

உலகத்தில் இருந்த அனைத்து வானரர்களும், சூர்ய புத்திரனான சுக்ரீவனுக்கும், இந்திர புத்திரனான வாலிக்கும் பணிந்து இருந்தார்கள். 


उपतस्थु: महावीर्या मम चामित्रकर्शन।

सुग्रीवेणा भवत्प्रीति: अनिलस्य अग्निना यथा ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

எப்படி காற்றுக்கும் நெருப்புக்கும் நெருக்கம் அதிகமாக உள்ளதோ, அது போல இயற்கையாகவே எனக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு இருந்தது.


निकृतः स ततो भ्रात्रा कस्मिं चित्कारण अन्तरे।

ऋश्य-मूके मया सार्धं सुग्रीवो न्यवसच्चिरम् ।। 

  - வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

ஒரு காரணத்தினால், சகோதரனான வாலியினால் துரத்தப்பட்ட சுக்ரீவன், ருஷ்யமுக மலையில் என்னோடு நெடுங்காலம் வாசித்தார்.


अथ दाशरथि: वीरो रामो नाम महाबलः।

विष्णु: मानुष-रूपेण चचार वसुधातलम् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

அந்த சமயத்தில், தசரத புத்திரராக, வீரத்துடன், மஹாபலத்துடன் ராமன் என்ற பெயரில் விஷ்ணுவே மனித ரூபத்தில் அவதரித்து பூமியில் சஞ்சரித்து கொண்டிருந்தார்.

स पितुः प्रियम् अन्विच्छन् सहभार्यः सहानुजः।

स-धनु: धन्विनां श्रेष्ठो दण्ड-कारण्यम् आश्रितः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

சிறந்த வில்லாளியான அவர், தந்தை பிரியப்பட்டதை நிறைவேற்ற, தன் மனைவியுடனும், தம்பியுடனும், வில்லை கையில் ஏந்தி கொண்டு, தண்டக ஆரண்யம் புகுந்தார்.


तस्य भार्या जनस्थान् आच्छलेनापहृता बलात्।

राक्षसेन्द्रेण बलिना रावणेन दुरात्मना ।।

सुवर्ण रत्न चित्रेण मृगरूपेण रक्षसा।

वञ्चयित्वा नरव्याघ्रं मारीचेन तदा अनघ ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

குற்றமில்லாதவனே! அப்போது, ராக்ஷஸர்களின் அரசனும், பலசாலியும், கெட்டவனுமான ராவணன் பொன் போன்ற உடலும், புள்ளிகளாக ரத்தினங்களாலும், பல நிறமுள்ள மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ஒரு ராக்ஷஸனை கொண்டு, அந்த மனிதருள் புனிதரான ராமரை ஏமாற்றி, அவருடைய மனைவியை திருட்டு தனமாக அபகரித்து விட்டான்.


हृतदारः सह भ्रात्रा पत्नीं मार्गन्स राघवः।

दृष्टवा शैल शिखरे सुग्रीवं वानरर्षभम् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

தன் மனைவி தொலைந்து போன திசை நோக்கி நடந்த ராமர், தன் சகோதரனோடு தேடி, சுக்ரீவன் வசிக்கும் இந்த மலை சிகரத்தை அடைந்தார்.

तेन तस्याभवत् सख्यं राघवस्य महात्मनः।

स हत्वा वालिनं राज्ये सुग्रीवं प्रत्यपादयत् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

மஹாத்மாவான அந்த ராகவரை கண்டதும், சுக்ரீவனுக்கு இவருக்கும் நட்பு ஏற்பட்டது. ராமபிரான் வாலியை கொன்று, ராஜ்யத்தை சுக்ரீவனிடமே கொடுத்தார். 


स राज्यं प्राप्य सुग्रीवः सीतायाः परिमार्गणे।

वानरान् प्रेषयामास शतशोऽथ सहस्रशः ।।

 - வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

ராஜ்யத்தை அடைந்த சுக்ரீவன், சீதா தேவியை தேடுவதற்காக  நூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான வானரர்களை அனுப்பினார்.


ततो वानर-कोटीभिः सहितो अहं नरर्षभ।

सीतां मार्गन् महाबाहो प्रस्थितो दक्षिणां दिशम् ।।

 - வியாச மஹாபாரதம் (வன பர்வம்)        

மனிதர்களில் உத்தமனே! அதில் நான், பல கோடி வானரர்களோடு சேர்ந்து கொண்டு சீதா தேவியை தேடி, தெற்கு நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.


ततः प्रवृत्तिः सीताया गृध्रेण सुमहात्मना।

संपातिना समाख्याता रावणस्य निवेशने ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

இப்படி தேடி கொண்டு வந்த போது, மிக்க வலிமையுடைய ஸம்பாதி  என்ற கழுகு, சீதை ராவணனுடைய வீட்டில் இருப்பதாக  சொல்லிற்று.


ततोऽहं कार्य-सिद्ध्यर्थं रामस्याक्लिष्ट कर्मणः।

शत-योजन विस्तारम् अर्णवं सहसा प्लुतः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

எந்த காரியத்தையும் எளிதில் செய்யக்கூடிய, ராமரின் நோக்கம் நிறைவடைய வேண்டும் என்ற சங்கல்பத்தில் 100 யோஜன தூரமுடைய கடலை விரைவாக தாண்டினேன்.


अहं स्व-वीर्याद् उत्तीर्य सागरं मकर आलयम्।

सुतां जनक राजस्य सीतां सुररसुतोपमाम् ।।

दृष्टवान् भरतश्रेष्ठ रावणस्य निवेशने।

समेत्य ताम् अहं देवीं वैदेहीं राघव-प्रियाम् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

பரத குலத்தில் பிறந்த உத்தமனே! நான் என்னுடைய வீர்யத்தால், முதலைகள் நிரம்பி கிடக்கும் அந்த கடலை தாண்டினேன். தொடர்ந்து அந்த ராவணனின் ராஜ்யத்தில் ஜனகனின் பெண்ணான சீதா தேவியை கண்டேன்.. ராகவனுக்கு பிரியமானவளும், விதேஹ அரசரின் பெண்ணுமான அந்த தேவியை அணுகி பேசினேன்.


दग्ध्वा लङ्काम् अशेषेण सादृ प्राकार तोरणाम्।

प्रत्यागत: च अश्य पुनर्नाम तत्र प्रकाश्य वै ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

மாளிகைகளும், பிராகாரங்களும், வாசல்களும் கொண்ட இலங்கையை முழுவதுமாக கொளுத்தி, ராமருடைய பெயரை அங்கு ப்ரகாசப்படுத்தி, மீண்டும் திரும்பினேன். 

मद्वाक्यं चावधार्याशु रामो राजीव लोचनः।

अबद्धपूर्वम् अन्यैश्च बद्ध्वा सेतुं महोदधौ।

वृतो वानर कोटीभिः समुत्तीर्णो महार्णवम् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

தாமரை போன்ற கண்களை கொண்ட ஸ்ரீ ராமர், நான் சொன்னதை கேட்டு, இனி செய்ய வேண்டிய காரியங்களை உறுதி செய்தார்.  அவர் நிச்சயித்த படி, பிறரால் இதுவரை இதற்கு முன் ஒருவராலும் கட்டப்படாத அணையை அந்த பெரிய கடலில் விரைவாக கட்டி முடித்து, கோடிக்கணக்கான வானர படை சூழ ஸ்ரீராமர் அந்த பெருங்கடலை தாண்டினார்.  

ततो ररामेण वीर्येण हत्वा तान्सर्व राक्षसान्।

रणे तु राक्षस-गणं रावणं लोक-रावणम् ।।

निशाचरेनद्रं हत्वा तु सभ्रातृ सुत बान्धवम्।

राज्ये अभिषिच्य लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम् ।।

धार्मिकं भक्तिमन्तं च भक्तानुगत वत्सलः।

प्रत्याहृत्य ततः सीतां नष्टां वेदश्रुतिं यथा ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

பிறகு அந்த வீராதி வீரனான ஸ்ரீராமர், அனைத்து ராக்ஷஸர்களையும் கொன்று, கடைசியாக ராக்ஷஸ கூட்டங்களை உடையவனும், உலகத்தை அலற செய்பவனுமான ராக்ஷஸ அரசனான ராவணனை அவன் தம்பி, பிள்ளைகள் உறவினர்களோடு சேர்த்து கொன்று, தர்மத்தை அனுஷ்டிக்கும், பக்தியுள்ளவரும், அன்பு காட்டுபவனிடம் அன்பு காட்டும் விபீஷணரை ராக்ஷஸ கூட்டத்திற்கு அரசராக ஆக்கி, பட்டாபிஷேகம் செய்து, பிறகு தொலைந்து போன வேதத்தை முன் அவதாரத்தில் மீட்டது போல, சீதா தேவியை மீட்டார்.  

                

तयैव सहितः साध्व्या पत्न्या रामो महायशाः।

गत्वा ततो अतित्वरितः स्वां पुरीं रघुनन्दनः।

अध्यावसत्ततो अयोध्याम् अयोध्यां द्विषतां प्रभुः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

பிறகு புகழ் மிக்கவரும், ரகு நந்தனருமான, பிரபுவான ஸ்ரீராமர், பதிவிரதையான தன் பத்னியோடு அங்கிருந்து புறப்பட்டு, எதிரிகள் எதிர்த்து போரிட முடியாத அயோத்தி என்னும் தன்னுடைய நகரத்துக்கு சென்று வசிக்கலானார்.


ततः प्रतिष्ठितो राज्ये रामो नृपतिसत्तमः।

वरं मया याचितो असौ रामो राजीव लोचनः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

அரசர்களில் சிறந்தவரான அவரால் ராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது.

அந்த தாமரை கண்கள் கொண்ட ஸ்ரீ ராமரிடம், "பகைவரை ஒழிப்பவரே! ராமா! உங்களுடைய சரித்திரம் இந்த உலகத்தில் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலம் வரை நான் இங்கு உயிர் வாழ ஆசைப்படுகிறேன்" என்று வரம் வேண்டினேன்.


यावद् राम कथेयं ते भवेल्लोकेषु शत्रुहन्।

तावज्जीवेयम् इत्येवं तथा अस्त्विति च स: अब्रवीत् ।।

सीता प्रसादाच्च सदा माम् इहस्थमरिंदम।

उपतिष्ठन्ति दिव्या हि भोगा भीम यथेप्सिताः 

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

ஸ்ரீராமரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். 

பகைவர்களை அடக்கும் பீமா! சீதாதேவியின் அருளால், அன்றிலிருந்து நான் விருப்பப்படும் திவ்யமான போகங்கள் நான் இருக்குமிடத்தை தேடி தானே வந்து அடைகின்றது..


दशवर्ष-सहस्राणि दशवर्ष-शतानि च।

राज्यं कारितवान् राम: तत: स्वभवनं गतः ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

ஸ்ரீராமர், 11,000 வருடங்கள் அயோத்தி அரசராக இருந்து ராமராஜ்யம் நடத்தினார். பிறகு, தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார்.

तदिह अप्सरसस्तात गन्धर्वाश्च सदा अनघ।

तस्य वीरस्य चरितं गायन्त्यो रमयन्ति माम् ।।

- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)

சீதா தேவியின் அருளால், அன்றிலிருந்து இந்த இடத்தில எப்பொழுதும் அப்சரஸ்கள், கந்தர்வர்கள் வந்து அந்த வீரருடைய சரித்திரத்தை பாடி என்னை மகிழ்வித்து கொண்டு இருக்கிறார்கள். 


இவ்வாறு ராமரின் சரித்திரத்தை சுருக்கமாக ஹனுமானே பீமனுக்கு சொல்லி, பிறகு, 

பீமனை பார்த்து,

"குரு வம்சத்தில் வந்தவனே! நீ செல்ல நினைக்கும் வழி மனிதர்களுக்கு உகந்த வழி அல்ல. பாரதா! நீ இந்த வழியில் சென்றால் யக்ஷர்களாலோ, ராக்ஷஸர்களாலோ அவமதிக்க பட நேரிடும். தேவ லோகம் செல்ல இது ஒரு மார்க்கமாக இருப்பதால், நீ அவர்களால் சபிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதால், உன்னை நான் போக விடாமல் தடுத்தேன்.

இந்த பாதையில் மனிதர்கள் செல்ல கூடாது. செல்வதில்லை. 

நீ தேடி வந்த குளம் இங்கேயே இருக்கிறது" என்று பீமன் தேடி வந்த குளத்தை காட்டினார் ஹனுமான்.


Hanuman ramayana

अहं केसरिणः क्षेत्रे वायुना जगद् आयुषा।

जातः कमल-पत्राक्ष हनूमान् नाम वानरः ।।

सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।

सर्व वानर राजानौ सर्व-वानर यूथपाः ।।

उपतस्थु: महावीर्या मम चामित्रकर्शन।

सुग्रीवेणा भवत्प्रीति: अनिलस्य अग्निना यथा ।।

निकृतः स ततो भ्रात्रा कस्मिं चित्कारण अन्तरे।

ऋश्य-मूके मया सार्धं सुग्रीवो न्यवसच्चिरम् ।। 

अथ दाशरथि: वीरो रामो नाम महाबलः।

विष्णु: मानुष-रूपेण चचार वसुधातलम् ।।

स पितुः प्रियम् अन्विच्छन् सहभार्यः सहानुजः।

स-धनु: धन्विनां श्रेष्ठो दण्ड-कारण्यम् आश्रितः ।।

तस्य भार्या जनस्थान् आच्छलेन आपहृता बलात्।

राक्षसेन्द्रेण बलिना रावणेन दुरात्मना ।।

सुवर्ण रत्न चित्रेण मृगरूपेण रक्षसा।

वञ्चयित्वा नरव्याघ्रं मारीचेन तदा अनघ ।।

हृतदारः सह भ्रात्रा पत्नीं मार्गन्स राघवः।

दृष्टवा शैल शिखरे सुग्रीवं वानरर्षभम् ।।

तेन तस्याभवत् सख्यं राघवस्य महात्मनः।

स हत्वा वालिनं राज्ये सुग्रीवं प्रत्यपादयत् ।।

स राज्यं प्राप्य सुग्रीवः सीतायाः परिमार्गणे।

वानरान् प्रेषयामास शतशोऽथ सहस्रशः ।।

ततो वानर-कोटीभिः सहितो अहं नरर्षभ।

सीतां मार्गन् महाबाहो प्रस्थितो दक्षिणां दिशम् ।।

ततः प्रवृत्तिः सीताया गृध्रेण सुमहात्मना।

संपातिना समाख्याता रावणस्य निवेशने ।।

ततोऽहं कार्य-सिद्ध्यर्थं रामस्याक्लिष्ट कर्मणः।

शत-योजन विस्तारम् अर्णवं सहसा प्लुतः ।।

अहं स्व-वीर्याद् उत्तीर्य सागरं मकर आलयम्।

सुतां जनक राजस्य सीतां सुररसुतोपमाम् ।।

दृष्टवान् भरतश्रेष्ठ रावणस्य निवेशने।

समेत्य ताम् अहं देवीं वैदेहीं राघव-प्रियाम् ।।

दग्ध्वा लङ्काम् अशेषेण सादृ प्राकार तोरणाम्।

प्रत्यागत: च अश्य पुनर्नाम तत्र प्रकाश्य वै ।।

मद्वाक्यं चावधार्याशु रामो राजीव लोचनः।

अबद्धपूर्वम् अन्यैश्च बद्ध्वा सेतुं महोदधौ।

वृतो वानर कोटीभिः समुत्तीर्णो महार्णवम् ।।

ततो ररामेण वीर्येण हत्वा तान्सर्व राक्षसान्।

रणे तु राक्षस-गणं रावणं लोक-रावणम् ।।

निशाचरेनद्रं हत्वा तु सभ्रातृ सुत बान्धवम्।

राज्ये अभिषिच्य लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम् ।।

धार्मिकं भक्तिमन्तं च भक्तानुगत वत्सलः।

प्रत्याहृत्य ततः सीतां नष्टां वेदश्रुतिं यथा ।।

तयैव सहितः साध्व्या पत्न्या रामो महायशाः।

गत्वा ततो अतित्वरितः स्वां पुरीं रघुनन्दनः।

अध्यावसत्ततो अयोध्याम् अयोध्यां द्विषतां प्रभुः ।।

ततः प्रतिष्ठितो राज्ये रामो नृपतिसत्तमः।

वरं मया याचितो असौ रामो राजीव लोचनः ।।

यावद् राम कथेयं ते भवेल्लोकेषु शत्रुहन्।

तावज्जीवेयम् इत्येवं तथा अस्त्विति च स: अब्रवीत् ।।

सीता प्रसादाच्च सदा माम् इहस्थमरिंदम।

उपतिष्ठन्ति दिव्या हि भोगा भीम यथेप्सिताः ।।

दशवर्ष-सहस्राणि दशवर्ष-शतानि च।

राज्यं कारितवान् राम: तत: स्वभवनं गतः ।।

तदिह अप्सरसस्तात गन्धर्वाश्च सदा अनघ।

तस्य वीरस्य चरितं गायन्त्यो रमयन्ति माम् ।।


ஹனுமான் ராமாயணம்

அஹம் கேசரிந: க்ஷேத்ரே வாயுனா ஜகத் ஆயுஷா 

ஜாத: கமல பத்ராக்ஷ ஹநூமான் நாம வானர:

சூர்ய புத்ரம் ச சுக்ரீவம் சக்ர புத்ரம் ச வாலினம்

ஸர்வ வானர ராஜானௌ ஸர்வ வானர யூதபா:

உபத்தஸ்து: மஹாவீர்யா மம ச ஆமித்ர கர்ஷன

சுக்ரீவேநா பவத் பிரீதி: அனிலஸ்ய அகனினா யதா

நிக்ருத: ச ததோ ப்ராத்ரா கஸ்மின் சித் காரண அந்தரே

ருஷ்ய முகே மயா ஸார்தம் சுக்ரீவோ ந்யவஸச்சிரம்

அத தாஸரதி: வீரோ ராமோ நாம மஹாபல:

விஷ்ணு: மானுஷ ரூபேன சசார வஸுதாதலம் 

ஸ பிது: ப்ரியம் அன்விச்சன் சஹபார்ய: சஹானுஜ:

ஸ-தனு: தன்வினாம் ஸ்ரேஷ்டோ தண்டகாரண்யம் ஆஷ்ரித:

தஸ்ய பார்யா ஜனஸ்தான் ஆச்ச லேன் ஆபஹ்ருதா பலாத்

ராக்ஷஸேந்த்ரேன பலினா ராவணேன துராத்மனா

சுவர்ண ரத்ன சித்ரேன ம்ருக ரூபேன ரக்ஷஸா

வஞ்சயித்வா நர வ்யாக்ரம் மாரீசேன ததா அநக

ஹ்ருத தார: சஹ ப்ராத்ரா பத்நீம் மார்கன்ஸ ராகவ:

த்ருஷ்டவா ஸைல சிகரே சுக்ரீவம் வானரர்ஷபம்

தேன தஸ்யாபவத் ஸக்யம் ராகவஸ்ய மஹாத்மன:

ஸ ஹத்வா வாலினம் ராஜ்யே சுக்ரீவம் ப்ரத்யபாதயத்

ஸ ராஜ்யம் ப்ராப்ய சுக்ரீவ: சீதாயா: பரிமார்கணே

வானரான் ப்ரேஷயாமாஸ ஸதஸோத சஹஸ்ரஸ:

ததோ வானர கோடீபி: ஸஹிதோ அஹம் நரர்ஷப

சீதாம் மார்கன் மஹாபாஹோ ப்ரஸ்திதோ தக்ஷிணாம் திஸம்

தத: ப்ரவ்ருத்தி: ஸீதாயா க்ருத்ரேன ஸு-மகாத்மனா 

ஸம்பாதினா ஸமாக்யாதா ராவணஸ்ய நிவேஸனே 

ததோ அஹம் கார்ய ஸித்யர்த்தம் ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:

ஸத யோஜன விஸ்தாரம் அர்ணவம் ஸஹசாப்லுத:

அஹம் ஸ்வ-வீர்யாத் உத்தீர்ய ஸாகரம் மகர ஆலயம்

ஸுதாம் ஜனக ராஜஸ்ய ஸீதாம் ஸுரரஸுதோபமாம்

த்ருஷ்டவான் பரதஸ்ரேஷ்ட ராவணஸ்ய நிவேஷனே

ஸமேத்ய தாம் அஹம் தேவீம் வைதேஹீம் ராகவ ப்ரியாம்

தக்த்வா லங்காம் அஸேஷேண  ஸாத்ரு ப்ராகார தோரணாம்

ப்ரத்யாகத: ச அஸ்ய புனர்னாம தத்ர ப்ரகாஸ்ய வை

மத்வாக்யம் சாவத் ஆர்யாஸு ராமோ ராஜீவ லோசன:

அபத்தபூர்வம் அன்யை: ச பத்த்வா சேதும் மஹாததௌ 

வ்ருதோ வானர கோடீபி: சமுத்தீர்ணௌ மஹார்ணவம்

ததோ ர ராமேன வீர்யேன ஹத்வா தான்ஸர்வ ராக்ஷஸான்

ரணே து ராக்ஷஸ கனம் ராவணம் லோக ராவணம்

நிஷாசரேநத்ரம் ஹத்வா து சப்ராத்ரு சுத பாந்தவம்

ராஜ்யே அபிஷிச்ய லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்

தார்மிகம் பக்திமந்தம் ச பக்தானுகத வத்ஸல:

ப்ரத்யாஹ்ருத்ய தத: ஸீதாம் நஷ்டாம் வேதஸ்ருதிம் யதா

தயைவ ஸஹித: ஸாத்வ்யா பத்ன்யா ராமோ மஹாயஷா:

கத்வா ததோ அதித்வரித: ஸ்வாம் புரீம் ரகுநந்தன: 

அத்யாவஸத் ததோ அயோத்யாம் அயோத்யாம் த்விஷதாம் ப்ரபு:

தத: ப்ரதிஷ்டிதோ ராஜ்யே ராமோ ந்ருபதிஸத்தம:

வரம் மயா யாசிதோ அஸௌ ராமோ ராஜீவ லோசன:

யாவத் ராம கதேயம் தே பவேல்லோகேஷு ஸத்ருஹன்

தாவத் ஜீவேயம் இத்யேவம் ததா அஸ்த்விதி ச ஸ: அப்ரவீத்

ஸீதா ப்ரஸாதாத் ச ஸதா மாம் இஹஸ்தம் அரிந்தம

உபதிஷ்டந்தி திவ்யா ஹி போகா பீம யதேப்ஸிதா

தஸவர்ஷ சஹஸ்ராணி தஸவர்ஷ ஸதானி ச

ராஜ்யம் காரிதவான் ராம: தத: ஸ்வபவனம் கத:

ததிஹ அப்ஸரஸ் அஸ்தாத கந்தர்வா: ச ஸதா அனக

தஸ்ய வீரஸ்ய சரிதம் காயந்த்யோ ரமயந்தி மாம்