Followers

Search Here...

Tuesday, 3 January 2023

துரியோதனின் சகோதரன் 'யுயுத்ஸு' யார் பக்கம் நின்று போரிட்டான்? அறிவோம் மகாபாரதம் (வியாசர்)

பகவத்கீதை உபதேசித்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை சோகத்தில் இருந்து விடுவித்தார்.

யுதிஷ்டிரர் போர்க்களத்தில் கௌரவ சேனைக்கு நடுவே சென்று, பீஷ்மர், துரோணர், கிருபர், மாத்ரியின் சகோதரரும் (மாதுலரும்/மாமா) மத்ர தேச அரசருமான சல்யன் போன்றவர்களிடம் போருக்கான அனுமதியும், அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றார்.


सञ्जय उवाच। (சஞ்சயன் ஞான திருஷ்டியால் மேலும் சொல்கிறார்)

அப்பொழுது,

वासुदेवस्तु राधेयमाहवे अभिजगाम वै।

तत एनम् उवाचेदं पाण्डवार्थे गदाग्रजः ।।             

श्रुतं मे कर्ण भीष्मस्य द्वोषात्किल न योत्स्यसे।

अस्मान्वरय राधेय यावद्भीष्मो न हन्यते ।।

- மஹாபாரதம் (வியாசர்)

வாசுதேவ கிருஷ்ணர், கர்ணனை நோக்கி சென்றார். பாண்டவர்களுக்காக கர்ணனிடம் இவ்வாறு பேசலானார். "ராதையின் புதல்வனே! ராதேயா ! பீஷ்மரிடம் உனக்கு இருக்கும் த்வேஷத்தால், நீ யுத்தம் செய்யப்போவதில்லை என்று கேள்விப்பட்டேன். பீஷமர் இருக்கும் வரை நீ எங்களுடன் சேர்ந்து யுத்தம் செய்யலாமே!"

हते तु भीष्मे राधेय पुनरेष्यसि संयुगम् ।

धार्तराष्ट्रस्य साहाय्यं यदि पश्यसि चेत्समम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"ராதேயா ! பீஷமர் ஒருவேளை கொல்லப்பட்டால், அப்போது நீ தார்த்தராஷ்டிரனான துரியோதனனுக்கு உதவி செய்ய விரும்பினால் மறுபடியும் அவர்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யலாமே!" என்று கேட்டார்.

कर्ण उवाच। (கர்ணன் சொன்னான்)

न विप्रियं करिष्यामि धार्तराष्ट्रस्य केशव ।

त्यक्तप्राणं हि मां विद्धि दुर्योधन हितैषिणम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"கேசவா! துரியோதனனுக்கு பிடிக்காத காரியத்தை நான் செய்ய  மாட்டேன். நான் துரியோதனுக்கு நன்மை செய்வதிலும், அவனுக்காக என் உயிரை கொடுப்பதிலும் விருப்பம் உள்ளவன் என்று நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினான்.


सञ्जय उवाच। (சஞ்சயன் ஞான திருஷ்டியால் மேலும் சொல்கிறார்)

तच्छ्रुत्वा वचनं कृष्णः संन्यवर्तत भारत ।

युधिष्ठिरपुरोगैश्च पाण्डवैः सह संगतः ।।            

- மஹாபாரதம் (வியாசர்)

கர்ணன் பதிலுரைத்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரும் பாண்டவர்களும் இருக்கும் பாண்டவ சேனை பக்கம் சென்றார்.


अथ सैन्यस्य मध्ये तु प्राक्रोशत् पाण्डवाग्रजः ।

योऽस्मान्वृणोति तमहं वरये साह्यकारणात् ।। 

- மஹாபாரதம் (வியாசர்)

பாண்டவ சேனையின் மத்தியில் இருந்த யுதிஷ்டிரர், "எங்களை எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்களை நான் உதவிக்கு அழைக்கிறேன்" என்று இரைந்து கூறினார்.

अथ तान्समभिप्रेक्ष्य युयुत्सु:  इदमब्रवीत् ।

प्रीतात्मा धर्मराजानं कुन्तीपुत्रं युधिष्ठिरम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி யுதிஷ்டிரர் கூறியதை கேட்ட துரியோதனின் சகோதரனும், த்ருதராஷ்டிரனுக்கும் அவன் தாதிக்கும் பிறந்தவனான நல்ல மனமுடைய யுயுத்ஸு, தர்மராஜனும் குந்தி புத்ரனுமான யுதிஷ்டிரரை பார்த்து இவ்வாறு பேசலானான்.


अहं योत्स्यामि भवतः संयुगे धृतराष्ट्र-जान् ।

युष्मदर्थं महाराज यदि मां वृणुषेऽनघ ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"மஹாராஜரே! குற்றமற்றவரே! நீர் விரும்பினால் நான் உம்முடைய சேனையோடு இருந்து கொண்டு, த்ருதராஷ்டிர புத்ரர்களோடு போர் புரிவேன்." என்றான்.


युधिष्ठिर उवाच। (இதை கேட்ட யுதிஷ்டிரர் பதில் சொல்ல ஆரம்பித்தார்)

एह्येहि सर्वे योत्स्यामस्तव भ्रातॄनपण्डितान्।

युयुत्सो वासुदेवश्च वयं च ब्रूम सर्वशः ।।            

वृणोमि त्वां महाबाहो युध्यस्व मम कारणात्।

त्वयि पिण्डश्च तन्तुश्च धृतराष्ट्रस्य दृश्यते ।।

भजस्वास्मान्राजपुत्र भजमानान् महाद्युते ।

न भविष्यति दुर्बुद्धि: धार्तराष्ट्रोऽत्यमर्षणः ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"யுயுத்ஸு..  வா..  வா..  நாம் அனைவரும் உன்னுடைய சகோதர்களுடன் போர் புரிவோம். வாசுதேவ கிருஷ்ணரும் நாங்களும் சேர்ந்து சொல்கிறோம். உறுதியான புஜங்கள் கொண்டவனே! நான் உன்னை ஏற்கிறேன். எனக்காக நீ யுத்தம் செய். உன்னால் திருதராஷ்டிரரின் சந்ததியும், பித்ருகளுக்கு பிண்டமும் கிடைக்க போகிறது என்று பார்க்கிறேன். கெட்ட புத்தியுள்ளவனும், பொறாமை குணமுள்ளவனுமான துரியோதனன் இனி இருக்க போவதில்லை" என்றார்.


सञ्जय उवाच।  (சஞ்சயன் ஞான திருஷ்டியால் த்ருதராஷ்ட்ரிடம் மேலும் சொல்கிறார்)

ततो युयुत्सुः कौरव्यान् परित्यज्य सुतांस्तव।

जगाम पाण्डु पुत्राणां सेनां विश्राव्य दुन्दुभिं ।।

- மஹாபாரதம் (வியாசர்)

அரசே! இதற்கு பிறகு, யுயுத்சு கௌரவ சேனையுள்ள உன் புத்திரர்களை விட்டு விட்டு, துந்துபி வாத்யத்தை முழங்கி கொண்டே, பாண்டு புத்திரர்களின் சேனையை அடைந்தான்.


அதன் பிறகு,

மிகவும் உற்சாகத்துடன்  யுதிஷ்டிரர், தங்கத்தால் பிரகாசமாக இருக்கும் கவசத்தை மறுபடியும் அணிந்து கொண்டார்.


பாண்டவர்கள் அனைவரும் அவரவர்கள் தேரில் ஏறிக்கொண்டார்கள்.

Saturday, 31 December 2022

100 பாபங்கள் அறிவோம்.

100 பாபங்கள் :

தர்ம சிந்தனை உடையவர்களாகவே ஹிந்துக்கள் இருக்கின்றனர். 


ஹிந்துக்கள் மற்ற நாட்டின் மீது படை எடுத்து, அந்த மக்களை அடிமை படுத்தி, அவர்கள் கலாச்சாரத்தை, செல்வத்தை கொள்ளை அடித்ததில்லை. 


தன் மதத்தவர்கள் மற்ற மதம் போனாலும் கண்டிப்பதில்லை. 


ஆள் சேர்க்க மற்றவர்களை போல பிரச்சாரம் செய்து இங்கே இழுப்பதும் இல்லை. 


ஹிந்துக்கள் "பாபங்களுக்கு பயந்ததே" இதற்கு காரணம்


100 பாபங்களுக்கு முக்கியமாக ஹிந்துக்கள் பயந்தனர்.

1.

ஐந்து மகா பாபங்கள் (Five greatest sin)

மதுபானம், சூதாட்டம், கொலை, பொய் சாட்சி, கற்பழித்தல் - பாபம்

2. 

உணவு கட்டுப்பாடின்றி, கண்ட இடத்தில், கண்ட பேர் கையால், கண்ட பொருளை சாப்பிடுவது - பாபம்.

3.

கடவுள் வழிபாடு இன்றி, கடவுள் நம்பிக்கை இன்றி, நன்றி இல்லாமல் சாப்பிடுவதும், தூங்குவதும் - பாபம்.


4.

உண்மையான பக்தி இல்லாமல், பக்தனை போல வேஷம்போட்டு பிறரை ஏமாற்றுவது - பாபம்


5. 

பிறர் நலத்தை கவனிக்காமல், சுயநலமாக இருப்பது - பாபம்


6.

மிருகத்திற்கு ஊசி போட்டு (செயற்கையாக) கரு உண்டாக்குவது - பாபம்


7.

பெண்ணுக்கு ஊசி போட்டு (செயற்கையாக) கரு உண்டாக்குவது - பாபம்


8.

கருவில் உள்ள குழந்தை வளர்வதை (ஸ்கேன்) பார்ப்பது - பாபம்


9.

பெண்களை, 'பிள்ளை பெறும் இயந்திரமாக' நினைப்பது - பாபம்.


10.

உருவான கருவை கலைத்து விடுவது (ப்ரூண ஹத்தி)  - பாபம்.


11.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல், வளர்ப்பது - பாபம்


12. 

குழந்தை வேண்டாம் என்று கருத்தடை செய்வது - பாபம்.


13.

குழந்தை பிறப்பதை வேடிக்கை பார்ப்பது - பாபம்.


14.

கன்றுக்குட்டியை விற்று விட்டு, பசுமாட்டிடம் பால் கறப்பதும், குடிப்பதும் - பாபம்


15. 

பால் கறக்கும் வரை பசுவை காப்பாற்றி அதன் மூலம் பயன் அடைந்து, மலட்டு தன்மை வந்த பிறகு நன்றி கெட்டு விற்பது - பாபம்


16.

காளை கன்றுகளை கொலைகாரனுக்கு கொடுப்பது - பாபம்


17.

மீன், ஆடு, கோழி இவைகளை வளர்த்து, பின் தானே அவைகள் சாவதற்கு காரணமாக இருப்பது - பாபம்


18.

மாமிசம் சாப்பிடுவதும், மாமிசம் வியாபாரம் செய்வதும் - பாபம்


19.

காலத்தில் பெண்களை திருமணம் செய்து கொடுக்காமல் இருப்பது - பாபம்.


20.

ஆண் பிள்ளையை ஆன்மீகமாக வளர்த்து, பெண் பிள்ளையை கலாச்சாரம் தெரியாமல், அவர்கள் இஷ்டத்துக்கு வளர்ப்பது - பாபம்.


21.

படித்த பெண்களை வேலைக்கு அனுப்பி, பெற்றோர்கள் பணம் சேர்ப்பது - பாபம்


22. 

கலப்பு மணம், விதவா விவாகம், பெண்களுக்கு மறுமணம் செய்வது - பாபம்.


23.

பெண், தாலி கட்டிய கணவனை மீறுவதும், ஆண், தன் மனைவியை கைவிடுவதும் - பாபம்.


24.

விவாகரத்து எக்காரணம் கொண்டும் ஆணும், பெண்ணும் செய்து கொள்வது - பாபம்


25. 

படிக்கும் காலங்களில், ஜாதி வேற்றுமை பார்ப்பது - பாபம்


26.

வேலை பார்க்கும் இடங்களில், ஜாதி வேற்றுமை பார்ப்பது - பாபம்


27.

ஜாதியின் அடிப்படையில் சலுகை கொடுத்து, கல்வி, அதனால் ஏற்பட்ட அறிவு, திறமை, உழைப்பு ஆகிய நான்கை புறக்கணிப்பது - பாபம்


28.

ஒரு சமூகம் முன்னேற்றமடைய கொடுக்கப்பட்ட சலுகையை, காலத்துக்கு ஏற்றவாறு மாற்றாமல், முன்னேற்றம் அடைந்த பிறகும் அதே சலுகையை வைத்து சண்டை இடுவது - பாபம்


29.

நன்றாக படிக்கும் மாணவனுக்கு, மதிப்பெண் (mark) வேண்டுமென்றே குறைவாக போடுவது - பாபம்.


30.

நன்றாக உழைத்தவனுக்கு பதவி உயர்வு தராமல், உழைக்காதவனுக்கு பதவி உயர்வு தருவது - பாபம்.


31.

தான் செய்த தவறை, குற்றத்தை, பிறர் தலையில் கட்டுவது - பாபம்


32. 

வேலை பார்ப்பவனை, திடீரென்று வேலை இல்லை என்று சொல்லி, அனுப்பி விடுவது - பாபம்.


33.

சம்பள உயர்வுக்காக, பார்க்கும் வேலையை விட்டு, நன்றி கேட்டு, மற்ற வேலைக்கு தாவுவது - பாபம்.


34.

சொன்ன சம்பளம் ஒன்று, கொடுத்த சம்பளம் வேறு என்று ஏமாற்றுவது - பாபம்


35. 

வேலை நிறுத்தம் செய்து, பெரிய நிறுவனங்களை பாதிக்கப்பட செய்வது - பாபம்


36.

ஊழியர்களுக்கு ஊதியம் தராமல், அதிக லாபத்தை முதலாளி வைத்துக்கொள்வது - பாபம்


37.

குடி இருக்கும் வீட்டை, சொந்த வீடாக நினைப்பது - பாபம்


38.

ஜாதி வேற்றுமையை சொல்லி கேலி செய்வதோ, திட்டுவதோ - பாபம்


39.

அவரவர் தர்மப்படி செய்து கொள்ளும் ஆடை அலங்காரம், நடைமுறை பழக்கங்களை கேலி செய்வது - பாபம்.


40.

பெற்றோர்களை விட்டு விட்டு, வெளிநாடு சென்று பிழைப்பது - பாபம்.


41.

தன் நாட்டு நாகரீகத்தை விட்டு, பிற நாட்டு நாகரீகத்த்தில் நாட்டம் காட்டுவது - பாபம்


42. 

தாய் மொழியை மதிக்காமல், பிற மொழியை பேசுவதும், படிப்பதும் - பாபம்.


43.

தன் மதத்தை விட்டு, பிற மதத்தில் சேர்வது - பாபம்.


44.

உடலை விட்டு பிரிந்த பெற்றோர்களுக்கு ஈமக்கடன் செய்யாமல் இருப்பது - பாபம்


45. 

மறைந்த பெற்றோர்களுக்கு திதி (திவசம்), தர்ப்பணம் (தன் கையால் கொஞ்சம் ஜலம் விட்டு திருப்தி செய்வது) செய்யாமல் இருப்பது - பாபம்


46.

வருடம் ஒரு முறை, மறைந்த பெற்றோர்களுக்கு திதி (திவசம்) செய்யாமல், வெறும் தானம் மட்டும் செய்வது - பாபம்


47.

சகோதரர்கள் யாராவது ஒருவர் திதி செய்தால் போதும் என்று சும்மா இருப்பது - பாபம்


48.

ஒரே சமையல் செய்து, பல திவசங்களுக்கு பயன்படுத்துவது - பாபம்


49.

சமையல், பக்ஷணம் போன்றவை திவச நாளில் செய்யாமல், ஒரு நாள் முன்பே செய்து பயன்படுத்துவது - பாபம்.


50.

கணவன் மனைவி உறவு இல்லாமல் இருப்பது, கணவன் மனைவி உறவு அல்லாத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாகனத்தில் போவது - பாபம்.


51.

போதை பொருட்களை, சித்தத்தை கலக்கும் மாத்திரைகளை உட்கொள்வது - பாபம்


52. 

டாக்டர் அனுமதியின்றி தூக்க மாத்திரை சாப்பிடுவது - பாபம்.


53.

கண்ட வேளையில் தூங்குவதும், கண்ட வேளையில் சாப்பிடுவதும் - பாபம்.


54.

கடன் வாங்குவதும், வாங்கிய கடனை அடைக்காமல் ஏமாற்றுவதும் - பாபம்


55. 

தான தர்மம் செய்யாமல், கஞ்சனை போன்று சேர்த்து வைத்து கொள்வது - பாபம்


56.

பாவத்திற்கு பண உதவி செய்வது - பாபம்


57.

வரி கொடுக்காமல், பொய் கணக்கு போடுவது - பாபம்


58.

கோவில் சொத்தையும், தர்ம சொத்தையும் சேர்ப்பது - பாபம்


59.

ஆச்சார்யாளையும், பெரியோர்களையும் பற்றி அவதூறாக பேசுவது - பாபம்.


60.

நான்கு வேதத்தையும், இதிஹாசத்தை பற்றியும் குறை சொல்வது - பாபம்.


61.

ப்ராம்மணனாக பிறந்து, ஸ்நானம், சந்தியா வந்தனம் இரண்டும் செய்யாமல் உணவு உண்பது - பாபம்


62. 

ப்ராம்மணனாக பிறந்து, புகை பிடிப்பது - பாபம்


63.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் சவரம் செய்து கொள்வது - பாபம்.


64.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் உறவு கொள்வது - பாபம்.


65. 

ப்ராம்மணனாக பிறந்து, பூணல் போட்ட பிறகு, பூணல் இல்லாமல் இருப்பதும், கழற்றி வைப்பதும் - பாபம்


66.

ப்ராம்மணனாக பிறந்து, குடுமி, பஞ்சகஜம், பூணல் இல்லாமல் எதை செய்தாலும் - பாபம்


67.

பெண்கள் தங்கள் அவயவங்கள் தெரியுமாறு உடையணிவது - பாபம்


68.

ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையோடு கேளிக்கை செய்வது - பாபம்


69.

தம்பதிகளாக இல்லாத ஆணும், பெண்ணும் கை குலுக்குவதும், கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் - பாபம்.


70.

அட்டஹாசமாக சிரிப்பதும், அட்டஹாசமாக கூச்சல் போடுவதும், அட்டஹாசமாக சண்டைபோடுவதும், அழுவதும் - பாபம்.


71.

இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி கலகம் மூட்டுவதும், குடும்பத்தை பிரிப்பதும் - பாபம்


72. 

பெண்கள் மாத விலக்கு காலங்களில் விலகி இல்லாமல், சேர்ந்திருப்பது - பாபம்


73.

மாத விலக்கான பெண்கள் ஓய்வாக இல்லாமல், இவர்களுக்கு மற்றவர்கள் சமைத்து ஓய்வு அளிக்காமல், இவர்களை சமைக்க செய்வதும், அந்த உணவை பிறர் சாப்பிடுவதும் - பாபம்.


74.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் மாத விலக்கான பெண்கள் கலந்து கொள்வது - பாபம்.


75. 

ஜனனம் ஆன சமயத்திலும், மரண சமயத்திலும் தேவ காரியங்கள் செய்வது - பாபம்


76.

மரணம், மாத விலக்கு போன்ற தீட்டு காலங்களில், கோவிலுக்குள் போவது - பாபம்


77.

பெண்கள் தன் கணவனை தவிர அன்ய புருஷனிடம் அளவுக்கு மீறி பேசுவது, பழகுவது - பாபம்


78.

கணவனை சொல்லை விட, அன்ய புருஷன் சொல்வதை கேட்டு நடப்பது - பாபம்


79.

கணவனை விட்டு, வேறு தேசம் சென்று வேலை பார்ப்பது - பாபம்.


80.

பெற்றோர்களை விட்டு, பெண் வேறு தேசம் சென்று படிப்பது, வேலை பார்ப்பது - பாபம்.


81.

மாமனார், மாமியாரை வீட்டை விட்டு போ, என்று மருமகள் சொல்வது - பாபம்


82. 

மருமகளை, மகனோடு வாழ விடாது மாமனார், மாமியார் செய்தால் - பாபம்


83.

கல்யாணம் ஆகியும், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் இருந்தால் - பாபம்.


84.

கல்யாணம் ஆகியும், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல் பெண்ணை வைத்து கொண்டு, மாப்பிள்ளையிடம் பணம் வாங்குவது - பாபம்.


85. 

படுத்த படுக்கை ஆகிவிட்ட பெற்றோர்களை கவனிக்காமல், பெற்ற பிள்ளைகள் (ஆண்/பெண்) இருப்பது - பாபம்


86.

வியாதியினால் அவதிப்படும், அங்கஹீனம் ஆகி அவதிப்படும் எந்த உறவினரையும்  புறக்கணிப்பது, கவனிக்காமல் இருப்பது - பாபம்


87.

ஆபத்து, பேரழிவு காலங்களில் உறவினர்களை இழந்து, அகதிகள் ஆகி போனவர்களை புறக்கணிப்பது, கவனிக்காமல் இருப்பது - பாபம்


88.

அகதியாக இருப்பவன், கஷ்டப்படுபவன், காப்பாற்றப்பட்டு வாழ வழி காட்டப்பட்டவுடன், காப்பாற்றிய தேசத்துக்கே, மக்களுக்கே பாதகம் செய்வது. அகதியாக வாழும் இடத்தையே சொந்தம் கொண்டாடுவது - பாபம்


89.

சேர்ந்து இருந்து கொண்டே, கூட இருப்பவனுக்கு குழி பறிப்பது, ஏமாற்றுவது - பாபம்.


90.

தஞ்சம் என்று வந்தவரை, சமயத்தில் பிறரிடம் காட்டிக்கொடுப்பது - பாபம்.


91.

கொலைகாரனிடமிருந்து தப்பி ஓடும் விலங்கை, மனிதன் பிடித்து கொடுத்து கொலைக்கு தூண்டுவது - பாபம்


92. 

சம்பளம் கொடுக்காமல், வேலை வாங்குவது - பாபம்


93.

வியாபாரத்தில் வரும் லாபத்தை, அவ்வப்போது வேலை செய்வோருக்கு சம்பளம் போக, லாபத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது - பாபம்.


94.

வேலைக்கு வரும் பெண்களிடம் தவறாக பேசுவது, பார்ப்பது, கற்பழிப்பது - பாபம்.


95. 

நம்பிக்கையோடு வந்த நோயாளி, தவறுதலான சிகிச்சையினால் மரணம் அடைந்தால் - பாபம்


96.

கர்ம வினையை அனுபவிக்காமல், ஒருவர் உறுப்பை மற்றவருக்கு வைப்பது  - பாபம்


97.

ரத்த தானம், மாமிச தானம், கண் தானம் செய்வதும் கூட - பாபம்


98.

தெய்வத்தின் பெயரால், கொலை செய்வது - பாபம்


99.

தற்கொலை செய்து கொண்டால் - பாபம்.


100.

பிறப்புக்கு தாய் தந்தை தான் காரணம் என்று, கடவுள் காரணமில்லை என்று சொல்லி, மரணம் எந்த வயதிலும், எந்த நிலையிலும் வரலாம் என்று அறிந்தும், பிறப்புக்கும், மரணத்திற்கும் பகவான் சூத்ரதாரியாக இருக்கிறார் என்று அறியாமல், நாதீகனாக நன்றி கெட்டு இருப்பது - பாபம்.


தெரிந்தோ, தெரியாமலோ இந்த பாபங்கள் நம் வாழ்வில் ஸம்பவித்தால், காரணமில்லாத துக்கங்கள் (நம் துர்மரணம் அல்லது நம் ப்ரியபட்டவர்கள் துர்மரணம், எல்லாம் இருந்தும் நிம்மதி இழந்த நிலை, நோய், கவலை) நம் வாழ்விலும், நம் சந்திதியினருக்கும் சேரும். 


பூஜையோ, தானமோ, தர்மமோ இந்த பாபங்களை எளிதில் போக்காது. இதை செய்ய நமக்கு நேரமும் கிடையாது.


தினமும் நடக்கும் போதும், உட்காரும் போதும், அமைதியாக இருக்கும் போதும், தூங்க செல்லும் போதும், எழுந்திருக்கும் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், 

கோவிந்தனின் நாமத்தை சொல்லி கொண்டிருந்தால், செய்த பாபத்திற்கு அதுவே ப்ராயச்சித்தமாகும். 


நம் திறனையும் மீறி, பாபத்தால் ஏற்படும் துக்கங்கள், கோவிந்தனின் நாமத்தை சொல்வதால், நமக்கு ஏற்படாமல் இருக்கும்.


பெருமாள் "கோவிந்தா" என்ற இந்த சொல் ஒன்றை தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 


திரௌபதியை காப்பாற்றிய சொல்லும் "கோவிந்தா" என்ற நாமமே.


கலியில் யோகம், யாகம், பூஜை, தவம் எதையும் செய்ய சக்தியற்ற மனிதர்களுக்கு, "கோவிந்தா" என்ற நாமமே வழித்துணை.

Friday, 30 December 2022

மஹாபாரத போரில், 18 அக்ஷௌணி சேனையில் எத்தனை போர் வீரர்கள் இருந்தனர்? குருக்ஷேத்ரத்துக்கு 'ஸமந்த-பஞ்சகம்' என்ற பெயர் எதனால் கிடைத்தது?

குருக்ஷேத்ரத்துக்கு 'ஸமந்த-பஞ்சகம்' என்ற பெயர் எதனால் கிடைத்தது?

மஹாபாரத போரில், 18 அக்ஷௌணி சேனையில் எத்தனை போர் வீரர்கள் இருந்தனர்?


ரிஷிகள் ஸூதரிடம் "ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தை பற்றி சொன்னீர்களே, அதை பற்றி மேலும் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.


ஸூதர் பேசலானார்...

"அந்தணர்களே! கேளுங்கள், சொல்கிறேன்.

ஸாதுக்களே !  ஸமந்த-பஞ்சகம் பற்றி சொல்கிறேன்.

த்ரேதா யுகமும், துவாபர யுகமும் சந்தித்த சமயத்தில், அஸ்திரங்களில் சிறந்த பரசுராமர் கோபத்தினால் தூண்டப்பட்டு, பூமியில் அரசாளும் க்ஷத்ரியர்களை அடிக்கடி வதம் செய்தார்.

शृणुध्वं मम भो विप्रा ब्रुवतश्च कथाः शुभाः।

समन्त-पञ्चक आख्यं च श्रोतुमर्हथ सत्तमाः।।

त्रेता-द्वापरयोः सन्धौ रामः शस्त्रभृतां वरः।

असकृत्पार्थिवं क्षत्रं जघानामर्षचोदितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

அக்னியை போன்று இருந்த பரசுராமர், தன் பராக்ரமத்தால் க்ஷத்ரியர்களை அழித்து, ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தில 5 ரத்த மடுக்களை (பள்ளம்) அமைத்து, கோபத்தால் அந்த மடுக்களில் தண்ணீர் போல ரத்தத்தையே நிரப்பினார். க்ஷத்ரியர்களின் ரத்தத்தினாலேயே பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார் என்று கேள்விப்படுகிறோம்.


இப்படி இவர் செய்வதை கண்ட ரிஷிகர் போன்ற பித்ருக்கள் சேர்ந்து, இவர் முன் தோன்றி, "ராமா! ராமா! ப்ருகு குலத்தில் தோன்றியவனே! உன்னுடைய இந்த அதீத சக்தியை கண்டும், உன் பித்ரு பக்தியை கண்டும் ஆனந்தப்படுகிறோம்.

अथर्चीकादयोऽभ्येत्य पितरो रामम् अब्रुवन्।

राम राम महाभाग प्रीताः स्म तव भार्गव।।

- மஹாபாரதம் (வியாசர்)


பெரியசக்தி உள்ளவனே! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். வேண்டிய வரத்தை கேட்டு கொள்" என்றனர்.


பரசுராமர், "பித்ருக்களாகிய நீங்கள் என்னை கண்டு ப்ரீதி அடைந்து அனுகிரகம் செய்ய ஆசைப்பட்டால், நான் இது வரை க்ஷத்ரியர்களை அழித்ததாகிய பாவத்திலிருந்து விடுபட வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்." என்றார்.

यदि मे पितरः प्रीता यद्यनुग्राह्यता मयि।

यच्च रोषाभिभूतेन क्षत्रमुत्सादितं मया।।

अतश्च पापान्मुच्येऽहमेष मे प्रार्थितो वरः।

ह्रदाश्च तीर्थभूता मे भवेयुर्भुवि विश्रुताः।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட பித்ருக்கள், "அப்படியே ஆகும். இனி நீ பொறுத்து கொள்ள வேண்டும்" என்று ஆசிர்வதித்தனர்.


இதை கேட்ட பிறகு, பரசுராமர் சாந்தமடைந்தார்.


ரத்தமே ஜலமாக இருந்த அந்த மடுக்கள் இருக்கும் இடமே "ஸமந்த-பஞ்சகம்" என்று பெயர் பெற்றது.

இதே இடத்தில், துவாபர யுகமும், கலி யுகமும் சந்தித்த சமயத்தில், கௌரவ சேனைக்கும், பாண்டவ சேனைக்கும் யுத்தம் உண்டாயிற்று.

अन्तरे चैव संप्राप्ते कलिद्वापरयोरभूत्।

समन्तपञ्चके युद्धं कुरुपाण्डवसेनयोः।।

- மஹாபாரதம் (வியாசர்)


தர்மத்தை நிலைநாட்டிய இந்த க்ஷேத்ரத்தில் யுத்தம் செய்வதற்காக 18 அக்ஷௌணிகள் சேர்ந்தனர்.

तस्मिन्परमधर्मिष्ठे देशे भूदोषवर्जिते।

अष्टादश समाजग्मुरक्षौहिण्यो युयुत्सया।।

- மஹாபாரதம் (வியாசர்)


ப்ராம்மணர்களே ! இந்த தர்ம க்ஷேத்ரத்திலேயே அனைத்து அக்ஷௌணிகளும் அழிந்தனர்.


இவ்வாறு இந்த க்ஷேத்ரம் 'ஸமந்த-பஞ்சகம்' என்று பெயர் பெற்றது." என்று சொன்னார்.


ரிஷிகள் அக்ஷௌணியின் எண்ணிக்கை பற்றி கேட்க, ஸூதர் மேலும் பேசலானார்..


"சேனை விதியில்,

1 தேர் (ரதம்), 1 யானை, 3 குதிரைகள், 5 காலாட்கள் சேர்ந்து - ஒரு பத்தி (1,1,3,5) என்று சொல்லப்படுகிறது.

एको रथो गज: च एको नराः पञ्च पदातयः।

त्रय: च तुरगा: तज्ज्ञैः पत्ति: इति अभिधीयते।।

- மஹாபாரதம் (வியாசர்)

3 பத்தி சேர்ந்து - ஒரு சேனாமுகம் (3,3,9,15) என்று சொல்லப்படுகிறது.

3 சேனாமுகம் சேர்ந்து - ஒரு குல்மம் (9,9,27,45) என்று சொல்லப்படுகிறது.

पत्तिं तु त्रि-गुणाम् एताम् आहुः सेनामुखं बुधाः।

त्रीणि सेनामुखान् एको गुल्म इति अभिधीयते।।

- மஹாபாரதம் (வியாசர்)


3 குல்மம் சேர்ந்து - ஒரு கணம் (27,27,81,135) என்று சொல்லப்படுகிறது.

3 கணம் சேர்ந்து - ஒரு வாஹினி (81,81,243,405) என்று சொல்லப்படுகிறது.

3 வாஹினி சேர்ந்து - ஒரு ப்ருதன் (243,243,729,1215) என்று சொல்லப்படுகிறது.

त्रयो गुल्मा गणो नाम वाहिनी तु गणा: त्रयः।

स्मृता: तिस्र: तु वाहिन्यः पृतनेति विचक्षणैः।।

- மஹாபாரதம் (வியாசர்)


3 ப்ருதன் சேர்ந்து - ஒரு சமு (729,729,2187,3645) என்று சொல்லப்படுகிறது.

3 சமு - ஒரு அனீகினீ (2187,2187,6561,10935) என்று சொல்லப்படுகிறது.

10 அனீகினீ - ஒரு அக்ஷௌணி (21870,21870,65610,109350)  என்று சொல்லப்படுகிறது.

चमू: तु पृतन अस्ति  स्रस्तिस्र: चमु अस्तु अनीकिनी।

अनीकिनीं दशगुणां प्राहु: अक्षौहिणीं बुधाः।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஒரு அக்ஷௌணியில், ஏறத்தாழ (ப்ரசங்க்யமாக)  20 ஆயிரத்துக்கும் மேல், ஆயிரத்துக்கும் மேல், நூற்றுக்கும் மேல் ரதங்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும், லட்சத்துக்கு மேல், ஆயிரத்துக்கும் மேல், காலாட் படையும், 50 ஆயிரத்துக்கும் மேல் முன்னூறுக்கும் மேல் குதிரைப்படைகளும் உள்ளனர்.

अक्षौहिण्याः प्रसंख्याता रथानां द्विजसत्तमाः।

संख्या गणित तत्त्वज्ञैः सहस्राणि एक विंशतिः।।

शतानि उपरि च एव अष्टौ तथा भूय: च सप्ततिः।

गजानां च परीमाणमेतदेव विनिर्दिशेत्।।

ज्ञेयं शतसहस्रं तु सहस्राणि नव एव तु नराणाम् अपि ।

पञ्च आशच्छ तानि त्रीणि च अनघाः।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு அக்ஷௌணியின் எண்ணிக்கையை மஹாபாரதத்தில் காண்கிறோம்.


சரியாக, 

1 அக்ஷௌணி என்பது

21,870 ரதங்களும்; 21,870 யானைகளும்; 65,610 குதிரைகளும்; 1,09,350 காலாட்படையும் சேர்ந்தது.

அது போல,

18 அக்ஷௌணி (2,18,700) என்பது, 3,93,660 ரதங்களும்; 3,93,660 யானைகளும்;  11,80,980 குதிரைகளும்; 19,68,300 காலாட்படையும் சேர்ந்தது. 

(Nearly 39 lakh (39,36,600) mighty army men around the world, have died fighting each other in same place called kurukshetra @ samantha-panchakam in 18 days mahabharata War)


மஹாபாரத போரின் முடிவில், வெறும் 10 பேர் மட்டுமே இதில் உயிரோடு இருந்தனர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸாத்யகி, யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹதேவன், அஸ்வத்தாமன், க்ருதவர்மன், கிருபர்)

Thursday, 29 December 2022

பரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்? How long king parikshit lived?

How long king parikshit lived? ரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்?

அஸ்வத்தாமா தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களின் பிள்ளைகளை மற்றும் திரௌபதியின் சகோதரன், சிகண்டி போன்றவர்களை கொன்று, கர்ப்பமாக இருக்கும் உத்திரையின் மீதும் அஸ்திரம் செலுத்தினான்.

அதை கிருஷ்ணர் தடுத்தார்.


இவனின் காரியங்களை பார்த்து ஸ்ரீகிருஷ்னர், "3000 வருடங்கள் உயிரோடு இருந்து, காட்டில் தனி ஆளாக அலைந்து கொண்டிருப்பாய்" என்று சபித்தார்.


அதே சமயம், தன்னால் காப்பாற்றப்பட்ட பிள்ளை, கர்ப்பத்தில் வளர்ந்து, பரீக்ஷித் என்ற பெயருடன் புகழ் பெறுவான் என்றார்.

மேலும்,

"சூரனான பரீக்ஷித் நீண்ட ஆயுளை அடைந்து சிறந்த விரதத்தை கடைபிடித்து கொண்டு, சரத்வானுடைய பிள்ளையான இந்த க்ருபரிடம் அனைத்து அஸ்திரங்களையும் கற்பான். தர்மாத்மாவான பரீக்ஷித், உத்தமான சாஸ்திரங்களை படித்து, க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து, 60 வருட காலங்கள் பூமியை ஆள போகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார்.

वयः प्राप्य परिक्षित्तुं देवव्रतमवाप्य च।

कृपाच्छारद्वताच्छूरः सर्वास्त्राण्युपपत्स्यते।।

विदित्वा परमास्त्राणि क्षत्रधर्मव्रते स्थितः।

षष्टिं वर्षामि धर्मात्मा वसुधां पालयिष्यति।।

इतश्चोर्ध्वं महाबाहुः कुरुराजो भविष्यति।          

परिक्षिन्नाम नृपतिर्मिषतस्ते सुदुर्मते।।

- மஹாபாரதம் (வியாசர்)

Tuesday, 27 December 2022

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? how many days krishna studied in shanthibini ashram?

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்?

how many days krishna studied in shanthibini ashram?

பீஷ்மர் சொல்கிறார்...


ततस्तौ जग्मतुस्तत्र गुरुं सान्दीपिनिं पुनः।

गुरुशुश्रूषणायुक्तौ धर्मज्ञौ धर्मचारिणौ।।

व्रतम् उग्रं महात्मानौ विचरन्ताववन्तिषु।

अहोरात्रैश्च तुष्पष्ट्या साङ्गान्वेदानवापतुः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கிருஷ்ணரும், பலராமரும் சாந்தீபினி ஆஸ்ரமத்துக்கு சென்றனர். தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், கடுமையான ப்ரம்மச்சர்யத்தை கடைபிடித்து கொண்டு, குருவுக்கு இரவுபகல் பாராது சேவை செய்து, 64 நாட்களில் வேதம், வேத அங்கங்கள் (கலைகள்) முழுவதையும் கற்றனர்.

लेख्यं च गणितं चोभौ प्राप्नुतां यदुनन्दनौ।

गान्धर्ववेदं वैद्यं च सकलं समावापतुः।।

हस्तिशिक्षामश्विशिक्षां द्वादशाहेन चाप्नुताम्।

तावुभौ जग्मतुर्वीरौ गुरुं सान्दीपिनिं पुनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த யாதவர்கள், எழுத்து (writing), எண் (maths), சங்கீதம் (music), வைத்தியம் (medicine), யானை பயிற்சி (elephant handling  / riding), குதிரை பயிற்சி (horse handling /ride) இவற்றையெல்லாம் 12 நாட்களில் கற்றனர்.


धनुर्वेदचिकीर्षार्थं धर्मज्ञौ धर्मचारिणौ।

ताविष्वासवराचार्यमभिगम्य प्रणम्य च।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், தனுர் வேதம் (weaponary) கற்று கொள்ள மீண்டும் சாந்தீபினி ஆஸ்ரமம் வந்து, தன் ஆசாரியரை வணங்கினர்.


तेन वै सत्कृतौ राजंश्चरन्तौ ताववन्तिषु।

पञ्चाशद्भिरहोरात्रैर्दशाङ्गं सुप्रतिष्ठितम्।।

स-रहस्यं धनुर्वेदं सकलं ताववापतुः।

दृष्ट्वा कृतार्थो विप्रेन्द्रो गुर्वर्थे तावचोदयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிர ராஜன் ! வில் வித்தையில் தேர்ந்த அந்த சாந்தீபினியை நமஸ்கரித்து, அவரால் மிகவும் விரும்பப்பட்ட இந்த இருவரும், அவந்தி தேசத்தில் இருந்து கொண்டே, 50 நாட்களில் இரவு பகல் பாராமல் கற்று, 10 அங்கங்களோடு கூடிய தனுர் வேதத்தை அதன் ரஹஸ்யங்களோடு கூட அறிந்து கொண்டு, மனதில் ஆழமாக பதியும் படி கற்றனர்.


கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? 64+12+50=126 நாட்கள்.


ஸ்ரீ கிருஷ்ணராக பகவான் நாராயணனே வந்தார் என்பதால் 128 நாட்களில் படித்தார் என்பது கூட ஆச்சரியமில்லை.

இவை அனைத்தும் சாந்தீபினியே சொல்லி கொடுத்தார் என்று பார்க்கும் போது, அவர் பெருமையை நாம் உணரலாம்.

உஜ்ஜயினி என்று இன்று சொல்லப்படும் நகரமே அன்று அவந்தி தேசமாக இருந்தது.