Followers

Search Here...

Monday 11 June 2018

நமக்கு 2 சரீரம் உண்டு : ஸூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம்

நமக்கு 2 சரீரம் உண்டு : ஸூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம்:

உயிருடன் இருக்கும் காலத்தில், ஸுக, துக்கங்களை அனுபவித்துக் கொண்டு, குடும்ப நலனை கவனித்தது உடல் இல்லை, உடலுக்குள் இருந்த ஜீவனே.

இந்த ஜீவனே, எல்லா காரியங்களையும் செய்து கொண்டும், அனுபவித்து கொண்டும் இருந்து வருகிறான்.




சரீரமே "நான்" என்று கர்வத்துடன் இருப்பவன் கூட, தன்னுடைய மரண காலத்தில் உண்மை உணர்வான்.

மரண காலத்தில், இந்த ஸரீரம் வேறு, ஜீவன் வேறு என்று தெரிய வருகிறது.

அதனால் தான், அந்த ஜீவன் போன பிறகு, உடல் எந்த காரியங்களையும்  செய்ய முடியாமலும், அனுபவிக்க முடியாமலும் கிடக்கிறது.

உடல்(சரீரம்) இரண்டாக உள்ளது.
* ஸூக்ஷ்ம சரீரம்,
* ஸ்தூல சரீரம்.

எலும்பு, மஜ்ஜை, நரம்பு, சதை, இரத்தம், தோல் ஆகியனவற்றால் ஆன நம் பௌதீக உடல் - ஸ்தூல சரீரம்

5 ப்ராணங்கள், 5 ஞான இந்திரியங்கள், 5 கர்ம இந்திரியங்கள், மனம் -
ஆக 16 கலையுள்ளது ஸூக்ஷ்ம சரீரம்.

நிச்சயமற்ற எண்ணங்கள் தான் "மனம்" என்று சொல்வோம்.
5 ஞான இந்திரியங்கள் (காது, தோல், கண், நாக்கு, மூக்கு)
5 கர்ம இந்திரியங்கள் (வாய், கைகள், கால்கள், எருவாய், கருவாய்)
5 ப்ராணன்கள் (ப்ராண வாயு, அபான வாயு, வ்யான வாயு, உதான வாயு, ஸமான வாயு)
மொத்தம் 16. இந்த 16 வாசனைகளையும் கொண்டது ஸூக்ஷ்ம சரீரம்.

ஸூக்ஷ்ம சரீரம் வாஸனா மயமானது.
இந்த நம் சரீரத்தை பார்க்க முடியாது. இருப்பதை உணர முடியும்.
அதாவது,
புரியும் படி சொல்ல வேண்டுமென்றால்,
கண் தெரியாதவனும் திடீரென யாராவது கூப்பிட்டால் திரும்புகிறான். அவனுக்கு தான் கண் தெரியாதே ! திரும்புவானேன்? இது தான் வாசனை.

வயோதிக தசையில் சரீரம் ஸ்திரீ ஸம்போகத்துக்கு உரியதாக இல்லாத போதிலும், யுவதியையும், அழகியையும் கண்டு ஆசைப்படுகிறான். இது தான் வாசனை.

உடலை காட்டிலும், உணர்ச்சி தனியாக இருக்கிறது.
இதற்கு காரணமென்ன? அதுதான் ஸூக்ஷ்ம சரீரம்.

ஸூக்ஷ்ம சரீரத்தின் உதவியாலேயே இந்த ஸ்தூல சரீரம் இயங்குகிறது.

ஸூக்ஷ்ம சரீரம் போய் விட்டால், ஸ்தூல சரீரம் சவம் ஆகிவிடுகிறது.

ஸ்தூல சரீரத்தை விட்டு ஜீவன் ஸூக்ஷ்ம சரீரத்துடன் மரண காலத்தில் வெளியேறுகிறான்.




ஸூக்ஷ்ம சரீரத்துடன் சென்ற ஜீவன், கொஞ்ச நாட்கள் பிரேத சரீரத்தை பெறுகிறான்.
இந்த பிரேத சரீரத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சாரம் செய்கிறான்.

பிரேத சரீரத்துடன் ஸஞ்சாரம் செய்யும் ஜீவன், பூலோகத்தில் இருந்த தன் மனைவி, மக்களிடமும், இறந்து போய் கிடைக்கும் ஸ்தூல சரீரத்திலும் ஆசை இருக்கிறது.
மீண்டும் மனைவி, மக்களுடன் பேசி பழக வேண்டும், சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று வாசனை இருக்கிறது.
அதன் உடலானது தகனம் செய்யப்பட்டு விட்டதால், அந்த பிரேதத்துக்கும் பசி,தாகம் முதலியவை உண்டாகி விடுகிறது.

ஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது.

'அபர காரியம்' செய்யப்படாமல் இருக்கும் போது, ஜீவன் உடலை விட்டு விலகிய பின், பிரேத சரீரத்துக்குள் இருக்கும் ஜீவன் பிரேதங்களாகவே (ஆவி) அலைகின்றனர்.

அபர காரியம் பற்றி தெரிந்து கொள்ள
Proudhindudharma
படிக்கவும்.


No comments: