Followers

Search Here...

Showing posts with label திவசம். Show all posts
Showing posts with label திவசம். Show all posts

Saturday 20 July 2024

பித்ரு காரியத்தில், பெண் வயிற்று பேரனை அழைத்து சாப்பிட செய்தால் புண்ணியம். இந்த வரம் யாரால் கிடைத்தது?

"யயாதி" தன் ராஜ்யத்தை தன் மகனான "புரூ"விடம் கொடுத்து விட்டு, சொர்க்க லோகம் சென்றார்.

பல காலம் அங்கு வசித்த அவரை பார்த்து, இந்திரன் ஒரு சமயம் "நகுஷ புத்ரா! நீ அனைத்து கடமையையும் செய்து விட்டு, வனம் சென்று தவம் செய்தீர். அதனால் உன்னிடம் கேட்கிறேன்! தவம் செய்வதில் நீ யாருக்கு ஒப்பானவன்?" என்று கேட்டார்.

इन्द्र उवाच।

सर्वाणि कर्माणि समाप्य राजन्

गृहं परित्यज्य वनं गतोऽसि।

तत्त्वां पृच्छामि नहुषस्य पुत्र

केनासि तुल्य: तपसा ययाते।।

- வ்யாஸ மஹாபாரதம்


யயாதி "இந்திர தேவா! எனக்கு நிகராக தவத்தில் நான் எந்த தேவனையும், மனிதர்களையும், கந்தர்வனையும், ரிஷியையும் காணவில்லை" என்றார்.

ययाति उवाच।

नाहं देव मनुष्येषु गन्धर्वेषु महर्षिषु।

आत्मन: तपसा तुल्यं कंचित् पश्यामि वासव।।

- வ்யாஸ மஹாபாரதம்


உடனே இந்திரன் "ராஜன்! ஒவ்வொருவரின் மகிமை அறியாமல், உனக்கு ஸமமாகவோ, தாழ்வாகவோ, உனக்கு மேலாகவோ இருக்கும் இவர்களை நீ அவமதித்ததால், உனக்கு இனி இந்த சொர்க்கலோகத்தில் இடமில்லை. உன் புண்ணியங்கள் அழிந்து இப்பொழுதே விழுவாய்" என்றார்.

इन्द्र उवाच।

यदा अवमंस्थाः सदृशः श्रेयसश्च 

अल्पीयसश्चा विदित प्रभावः।

तस्मात् लोका: त्वन्तवन्त: तवे मे

क्षीणे पुण्ये पतिता अस्यद्य राजन्।।

- வ்யாஸ மஹாபாரதம்


யயாதி "இவர்களை அவமத்தித்தால், எனக்கு இந்த லோகம் இல்லாமல் போனது. நான் விழும் போது, சாதுக்களின் மத்தியில் விழ விரும்புகிறேன்" என்றார்.

ययातिरुवाच।

सुरर्षि गन्धर्व नर अवमानात् 

क्षयं गता मे यदि शक्रलोकाः।

इच्छाम्यहं सुरलोकाद् विहीनः

सतां मध्ये पतितुं देवराज।।

- வ்யாஸ மஹாபாரதம்


இந்திரன் "சாதுக்களின் மத்தியிலேயே விழுவாய். இதன் பயனாக மீண்டும் இந்த இடத்திற்கு திரும்புவாய். யயாதி! இனி ஒருபோதும் உனக்கு ஸமமானவர்களையோ, தாழ்வானவர்களையோ, மேலானவர்களையோ அவமதிக்காதே" என்றார்.

इन्द्र उवाच।

सतां सकाशे पतिता असि राजंश्च्युतः 

प्रतिष्ठां यत्र लब्धासि भूयः।

एतद् विदित्वा च पुन: ययाते

त्वं मा अवमंस्थाः सदृशः श्रेयसश्च।।

- வ்யாஸ மஹாபாரதம்

யயாதி சொர்க்க லோகத்திலிருந்து கீழே விழ தொடங்கினார்.

விழும் போது, யயாதியின் பெண்ணான "மாதவி" என்பவளின் பிள்ளையாஅஷ்டகன், ஆகாசத்தில் சந்தித்தான். தான் புண்ணியங்களை தருவதாக சொன்னான். 

அரசனாக இருந்த தன்னால், தானம் ஏற்க முடியாது என்று மறுத்தார். 

மேலும் வசுமானன், சிபி, காசி அரசன் ப்ரதர்த்தன் போன்ற ராஜரிஷிகள், முன் வந்து தங்கள் புண்ணிய லோகங்களை தர முன் வந்தனர். அனைத்தையும் தானமாக வாங்க மறுத்தார் யயாதி. 


அப்போது மாதவி தன் புத்திரர்களின் யாக சாலைக்கு வந்தாள். தன் பிதாவான யயாதி இருப்பதை பார்த்து, 

"இவன் உங்கள் மகள் வழி பேரன். ஆதலால் நீங்கள்  என்னுடைய புண்ணியம் மேலும் இவர்களுடைய புண்ணியத்தை எடுத்து கொண்டு மீண்டும் சொர்க்கம் செல்லுங்கள்" என்றாள்.

அதை கேட்டு மகிழ்ந்த யயாதி, "உனது தவத்தின் பயனால், எனது பேரன்களாலும் நான் கரையேறிவன் ஆனேன். இன்று முதல், பித்ரு காரியத்தில், பெண் சந்ததிகள் பெரும் புண்ணியத்தை பெறுவார்கள்" என்றார்.

यदि धर्मफलं ह्येतच्छोभनं भविता तव।

दुहित्रा चैव दौहित्रैस्तारितोऽहं महात्मभिः।।

- வ்யாஸ மஹாபாரதம்


மேலும் இவ்வாறு சொன்னார்.

"மகளின் பிள்ளை (பேரன்), குதபகாலம், எள் இந்த மூன்றும் ஸ்ரார்த்தம் (திவசம்) செய்யும் போது பயன்படுத்தபட்டால், மிகவும் புண்ணியமாக கருதப்படும்.

तस्मात्पवित्रं दौहित्रमद्यप्रभृति पैतृके।

त्रीणि श्राद्धे पवित्राणि दौहित्रः कुतपस्तिलाः।।

- வ்யாஸ மஹாபாரதம்

சுத்தமாக இருப்பதும், கோபமே இல்லாமல் இருப்பதும், அவசரம் இல்லாமல் இருப்பதும் திவசம் (ஸ்ரார்த்தம்) செய்பவனுக்கு அடிப்படை தேவை என்று சொல்லப்படுகிறது. 

திவசத்தில் (சிரார்த்தத்தில்) சாப்பிடுபவர்கள், சாப்பாடு பரிமாறுபவர்கள், வேதம் சொல்பவர்கள் இந்த மூவரும் திவசத்தை பரிசுத்தம் செய்கிறார்கள்.

त्रीणि चात्र प्रशंसन्ति शौचमक्रोधमत्वराम्।

भोक्तारः परिवेष्टारः श्रावितारः पवित्रकाः।।

- வ்யாஸ மஹாபாரதம்


பகல் பொழுதின் 8வது முகூர்த்தத்தில் சூரியன் உஷ்ணம் குறைந்து இருக்கும் காலமே "குதபகாலம்"

அந்த குதப காலத்தில் பித்ருக்களுக்கு தத்தம் கொடுப்பது அழிவில்லாத புண்ணியங்களை தரும்.

दिवसस्याष्टमे भागे मन्दीभवति भास्करे।

स कालः कुतपो नाम पितॄणां दत्तमक्षयम्।।

- வ்யாஸ மஹாபாரதம்


திவசத்தில் பயன்படுத்தும் எள் பிசாசுகள் பித்ரு அன்னத்தை அண்ட விடாமல் செய்யும்.

திவசத்தில் பயன்படுத்தும் தர்ப்பை புல் ராக்ஷஸர்கள் பித்ரு அன்னத்தை அண்ட விடாமல் செய்யும்.

பித்ரு காரியத்தில், சன்யாசிகள் (யதிகள்) சாப்பிட்டால் அழிவில்லாத புண்ணியங்களை தரும்.

तिलाः पिशाचाद्रक्षन्ति दर्भा रक्षन्ति राक्षसात्।

रक्षन्ति श्रोत्रियाः पङ्क्तिं यतिभिर्भुक्तमक्षयम्।।

- வ்யாஸ மஹாபாரதம்


ஞான (மெய் அறிவு) உள்ளவன், வேதம் ஓதியவன், செல்வம் உடையவன், சுத்தமாக இருப்பவன் கிடைத்தால், அதுவே காலம்.

அந்த காலத்திலேயே அவர்களுக்கு அன்னம் கொடுக்கலாம். அவர்களை சந்தித்த காலமே நல்ல காலம். அதை தவிர நல்ல நேரம் பார்க்க அவசியமில்லைஎன்று சொல்லி யயாதி மகிழ்ந்தார்.

लब्ध्वा पात्रं तु विद्वांसं श्रोत्रियं सुव्रतं शुचिम्।

स कालः कालतो दत्तं नान्यथा काल इष्यते।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 


இவ்வாறு யயாதி வரம் கொடுத்ததால், பித்ரு காரியத்தில், பெண் வயிற்று பேரனை அழைத்து சாப்பிட செய்பவர்களுக்கு பெரும் புண்ணியம் சேருகிறது. மேலும் அந்த பெண்ணுக்கும் பேரனுக்கும் அழிவில்லாத புண்ணியங்கள் சேருகிறது.


மனு ஸ்மிருதி

व्रतस्थमपि दौहित्रं श्राद्धे यत्नेन भोजयेत् ।
कुतपं च आसनं दद्यात् तिलैश्च विकिरेन् महीम् ॥

பெண் வயிற்று பேரன் பிரம்மச்சாரியாக இருந்தாலும் அழைத்து எள் இரைத்து, ஆசனம் கொடுத்து உபசரித்து உணவு கொடுக்க வேண்டும்.

त्रीणि श्राद्धे पवित्राणि दौहित्रः कुतपस्तिलाः ।
त्रीणि चात्र प्रशंसन्ति शौचमक्रोधमत्वराम् ॥

பெண் வயிற்று பேரன், பிற்பகல், எள் இவை மூன்றும் பவித்ரமானவை. ஸ்ரார்த்த சமயத்தில், இந்த மூன்றையும் சந்திக்கும் போது, கர்த்தா சுத்தமாகவும், கோபமில்லாமலும், அவசரமில்லாமலும் அணுகினால், பித்ருக்கள் மிகவும் போற்றுவார்கள்.


Saturday 27 May 2023

திவசத்தில் யார் யாரை சாப்பிட அழைக்கலாம்? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி

திவசத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்களை, மேலும் உறவினர்களையும் அழைத்து உணவு கொடுக்கலாம். ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி

प्रक्षाल्य हस्ता वाचाम्य

ज्ञाति प्रायं प्रकल्पयेत् ।

ज्ञातिभ्यः सत्कृतं दत्त्वा

बान्धवान् अपि भोजयेत् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஸ்ரார்த்தம் செய்தவர், பித்ரு ரூபமாக பிராம்மணர்கள் சாப்பிட்டு சென்ற பிறகு, கை கால் அலம்பி கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

பிறகு இரத்த சம்பந்த பங்காளிகள் (ஞாதி) அனைவருக்கும் உபசரித்து உணவு கொடுக்க வேண்டும். மற்ற உறவினர் அனைவரையும் (பாந்தவான்) அப்படியே உபசரித்து, உணவு அளிக்க வேண்டும்

ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை . ஸ்வாயம்பு மனு ஸ்மிருதி

ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை)

विसृज्य ब्राह्मणांस्तांस्तु 

नियतो वाग्यतः शुचिः ।

दक्षिणां दिशम् आकाङ्क्षन् 

याचेतैमान् वरान् पितॄन् ॥ 

- மனு ஸ்மிருதி

சாப்பிட்ட பிராம்மணர்கள் கிளம்பிய பிறகு, அமைதியாக அவர்களை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பிறகு தெற்கு முகமாக நின்று இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்..

दातारो नो अभिवर्धन्तां 

वेदाः सन्तति: एव च ।

श्रद्धा च नो मा व्यगमद् 

बहुदेयं च नो अस्त्विति ॥

தாதாரோ நோ அபி-வர்தந்தாம்

வேதா சந்ததி: ஏவ ச |

ஸ்ரத்தா ச நோ மாவ்யகமத்

பஹுதேயம் ச நோ அஸ்த்விதி ||

- மனு ஸ்மிருதி

அள்ளி தானம்  கொடுக்கும் குணமுள்ள புத்திரர்களால் என் குலம் பெருக வேண்டும்.

வேதம் ஓதுவதிலும், அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதிலும், யாகங்களில் செய்வதிலும் ஆர்வமுள்ள சந்ததிகளால் என் குலம் பெருக வேண்டும்.

எங்கள் அனைவருக்கும் வேதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறையாமல் இருக்கட்டும். 

மற்றவர்களுக்கு அள்ளி கொடுக்கும்படியான செல்வம் எங்களுக்கு கிடைக்கட்டும்.


இவ்வாறு பிரார்த்தனை செய்து ஸ்ரார்த்தம் முடிக்க வேண்டும்...