Followers

Search Here...

Monday, 18 June 2018

உத்தமமான மனைவி - இல்லறம் நடத்த முக்கிய பங்கு வகிப்பவள். உத்தமமான மனைவி யாருக்கு கிடைப்பாளோ, அவனே பாக்கியவான்

இல்லறம் நடத்த முக்கிய பங்கு வகிப்பவள் மனைவி.




கிருஹஸ்தனுக்கு மூலம் கிருஹிணியே.
கணவனுக்கு ஆதாரம் மனைவியே.
சுகத்திற்கு காரணம் அவளே.
தர்மத்திற்கு காரணம் அவளே.
சந்ததிக்கு காரணமும் அவளே
என்று சிவ புராணம் கூறுகிறது.

ஏழ்மையையும், இல்லாமையையும் பாராட்டாமல் இருக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
கிடைத்ததைக் கொண்டு கண்ணியமாக குடும்பம் நடத்தும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
வீட்டை துப்புரவாக வைத்துக் இருக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.




மாமனார் மாமியாருக்கு அடங்கி நடக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

பர்த்தாவை குறை சொல்லாமல் இருக்கும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

சிரித்த முகத்துடன் பழகும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

குழந்தைகளிடம் பொறுமையும், வாத்ஸல்யமும் உள்ள  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
தேவ பித்ரு காரியங்களில் சிரத்தை உள்ள  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

சோம்பல் இல்லாமல் உழைக்கும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

பர புருஷனை திரும்பியும் பாராதவளும் ஆன  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

இத்தகைய மனைவி யாருக்கு கிடைப்பாளோ, அவனே பாக்கியவான்.


கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? இல்லற தர்மம் என்றால் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

கணவன் மனைவி இல்லற தர்மம்

பார்யையின்
அருமை தெரிந்த பர்த்தாவும்,
பர்த்தாவின் அருமை தெரிந்த பார்யையும்
குடும்பத்துக்கு அணிகலன் ஆவார்கள்.

சில ஆண் பிள்ளைகள், பெற்றோர்களின் சொல்லைக் கேட்டு கொண்டு அருமையான பார்யையை கைவிட்டு விடுகின்றனர் அல்லது கொடுமை படுத்துகின்றனர்.




இதை விடப் பரிதாபம், சிலர் பார்யையின் சொல்லைக் கேட்டுக் கொண்டு, பெற்றோர்களை அடித்து விரட்டி விடுகின்றனர்.

மாமியாருக்கும், மாற்றுப்பெண்ணுக்கும் 'ஒற்றுமை என்பதே வராது'.
இவர்கள் இருவரிடமும் சமமாக பழகும் சாமர்த்தியமுடையவனே இல்லறத்தில் பிரவேசிக்கலாம்.
தன் பெற்றோர்களை பற்றி தன் மனைவியிடமே ஏசலாகாது.
அதுபோல, ஒரு ஸ்திரீயும், தன் பிறந்தகத்தைப் பற்றி தன் புருஷனிடமும், தன் புக்ககத்து பந்துக்களிடம் ஜம்பம் அடித்துக் கொள்ள கூடாது.
பிறந்தகத்தை விட புக்ககத்தில் பாசமுடைய உத்தமிகள் அரிது.

தன் புகுந்த குடும்பத்திற்கு மித மிஞ்சிய பொருள்களையும், பணத்தையும் பிறந்தகத்திற்கு அனுப்புபவள் பர்த்தாவுக்கு நிம்மதியை தர மாட்டாள்.
அதே போல,
தன் மனைவி மக்களை விட்டு, தான் சம்பாதிக்கும் பொருளை, விவாஹம் ஆகி தனியாக போய் விட்ட தம்பி, தங்கைகளுக்கு செலவழிப்பவனும், ஆடம்பர செலவு செய்பவனும், ஸாத்வியான மனைவிக்கு நிம்மதியை தர மாட்டான்.

வருவாய்க்கு மிஞ்சிய ஆடை,  ஆபரணம், உணவு, சினிமா,  டீவி, வாரப் பத்திரிகை, சூதாட்டம், மது பாணம், ஆஸ்பத்திரி, கோர்ட் இவைகளுக்கே செலவு செய்பவனும்,
சத்சங்கம், தெய்வ பக்தி, ஆலய வழிபாடு, கதாசிரவணம், நாம சங்கீர்த்தனம் இவை எதுவும் அறியாதவனும் "இகத்திலும் கெட்டான், பறத்திலும் கெட்டான்" என்று ஆவான்.

கூனியைப் போல் சூழ்ச்சி செய்து குடும்பத்திற்க்கே நாசம் விளைவிக்கும் துஷ்ட சங்கத்தை வீட்டில் விலக்க வேண்டும்.




நிம்மதி அளிக்கும் சத் சங்கத்தையே வீட்டில் வரவேற்க வேண்டும்.
போலியான "சாதுக்களையும், குருமார்களையும்" கண்டு ஏமாந்து விடக் கூடாது. அவர்களுக்கு ஸ்திரீகள் நெருங்கி சேவை செய்யும் படி விடக் கூடாது.
சாது வேஷம் போட்டு "ராவணன்" சீதையை கொண்டு போனது இதற்கு பிரமாணமாகும்.
எனவே சாதுக்களிடம் ஸ்திரீகள் மிதமாகவே பழக வேண்டும்.

எப்பொழுதும் ஸ்திரீகளின் கற்பில் கவனத்துடன் இருக்கும் கணவனே புத்திசாலி.

மனைவியை "சந்தேகிக்கவும் கூடாது. நம்பவும் கூடாது". நடு நிலைமையில் அவளிடம் பழக வேண்டும்.

யாரிடமும் தன் மனைவியை மிதமாக பழக விடும் கணவன் பிறகு கஷ்டப்பட மாட்டான்.