Followers

Search Here...

Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Saturday 15 April 2023

மகாபாரத சமயத்தில் மதுரை, தமிழ்நாடு... ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்

ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? 

தமிழர்களுக்கும் திரௌபதிக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருக்கும்?

 

திரௌபதியை மணந்து கொண்ட அர்ஜுனன், தமிழகம் வந்தாரா?

மஹாபாரதம் படிக்கும் போது, இதற்கான விடை நமக்கு தெரிகிறது.


அது மட்டுமல்ல, அர்ஜுனன் பாண்டிய இளவரசியான சித்ராங்கதையை மணந்து கொண்டார் என்று தெரிகிறது.


அர்ஜுனன் பிள்ளையே பிறகு பாண்டிய மன்னன் ஆனான் என்றும் தெரிகிறது. 

மஹாபாரத போருக்கு பிறகு 4000 வருடங்கள் (பாண்டிய ஆட்சி இருந்த வரை) அர்ஜுனன் வம்சமே பாண்டிய மன்னர்களாக ஆண்டனர்.


அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதையை மணக்க இடம் கொடுத்த திரௌபதிக்கு இந்த தமிழ் மண் தெரிவிக்கும் நன்றி என்று அறிய முடிகிறது.


மேலும், திரௌபதி அக்னியில் இருந்து வந்தவள் என்று காட்ட, தீ மிதிக்கும் வழிபாடும் ஏற்பட்டது என்று அறிய முடிகிறது.


மஹாபாரத காலத்தில் (3100BCE) "மதுரை"க்கு பெயர் என்ன இருந்து இருக்கிறது? என்று அறிய முடிகிறது.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?

சோழ அரசாட்சியும், சேர அரசாட்சி முடிந்ததும், பாண்டிய அரசாட்சி பல வருடங்கள் நடந்தது என்பது மாலிக் காபூர் வந்த சமயத்தில் அறிய முடிகிறது. இஸ்லாமியர்கள் தாக்கிய மீனாக்ஷி கோவிலில் இன்றும் உடைக்கபட்ட சிவ லிங்கம் கதை சொல்கிறது.

5000 வருடம் முன் மஹாபாரத காலத்தில் "மணிபூரம்" என்றும் மதுரை அழைக்கப்பட்டு இருக்கிறது.

பார்வதி தேவியே மலயத்வஜ பாண்டியனுக்கு மீனாக்ஷியாக பிறந்து இந்த பாண்டிய தேசத்தை ஆண்டாள். மலயத்வஜன் வம்சத்தில் வந்த பாண்டிய மன்னன் என்று சகாதேவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார், அன்று இருந்த பாண்டிய அரசர்.

பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, சில மைல் தூரத்தில் கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் கோவர்த்தனம் போலவும், பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே கடைசி வரை வசித்தார்.
மணிபூரம் தென்மதுரை போல இவருக்கு தெரிய, உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை... வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்.

அவர் காலத்துக்கு பிறகே, மதுரை என்ற பெயர் உண்டாகியது.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் முக்தி பெற்ற ஸ்தலம் அழகர்மலை என்ற சோலைமலை என்ற திருமாலிருஞ்சோலை.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


தமிழர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்


Connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Thursday 25 August 2022

பாரதத்தில் தமிழர்கள். தமிழர்களையும், சோழ-பாண்டிய தேசத்தையும், அர்ஜுனனின் மனைவியும் தமிழ் நாட்டு அரசகுமாரியுமான 'சித்ராங்கதை" மற்றும் மலயத்வஜ பாண்டியனை சஹாதேவன் சந்தித்த நிகழ்வு பற்றி அறிவோம்.. அறிவோம் மஹாபாரதம்

சஹாதேவன் தமிழர்களையும், சோழ-பாண்டிய தேசத்தையும், அர்ஜுனனின் மனைவியும் தமிழ் நாட்டு அரசகுமாரியுமான 'சித்ராங்கதை" சந்தித்த நிகழ்வு பற்றி அறிவோம். சபா பர்வம், அத்தியாயம் 33

சஹாதேவன் யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வருகிறார். 

அங்கே அவரை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள்.

वैशम्पाय उवाच।

(வைசம்பாயனர் ஜனமேஜெயனிடம் சொல்கிறார்)

शृणु राजन्यथा वृत्तं सहेदवस्य साहसम्।।

कालनद्वीपगांश्चैव तरसाऽजित्य चाहवे।

दक्षिणां च दिशं जित्वा चोलस्य विषयं ययौ।।

- Vyasa Mahabharata

ராஜன்! சஹதேவன் பராக்ரமத்தை விரிவாக சொல்கிறேன். கேளுங்கள். காடுகளிலும், தீவுகளிலும் உள்ளவர்களை வெற்றிகொண்டு, தென் திசையை நோக்கி திக்விஜயம் செய்து பல தேசங்களை தன் வசப்படுத்திக்கொண்டே 'சோழ ராஜ்யம்'  வந்து சேர்ந்தார் சஹதேவன்

ददर्श पुण्य-तोयां वै कावेरीं सरितां वराम्।

नाजापक्षिगणै: जुष्टां तापसैरुप शोभिताम्।।

Vyasa Mahabharata

அப்போது, சஹதேவன், புண்ய தீர்த்தமான காவேரி தீர்த்தத்தை தரிசித்தார். அங்கு பலவகை பறவைகள் சூழ்ந்த, தபமே லட்சியமாக கொண்ட ரிஷிகளால் அலங்கரிக்கப்பட்ட சோழ தேசத்தை  கண்டார்.

साल लोध्र अर्जुनैल्वै: जम्बू शाल्मल किंशुकैः।

कदम्बैः सप्तपर्णैश्च कश्मर्य आमलकैर्वृताम्।।   

न्यग्रोधैश्च महाशाखैः प्लक्षै: औदुम्बरै: अपि।

शमी पलाश वृक्षैश्च अश्वत्थैः खदिरैर्वृताम्।।

बदरीभिश्च सञ्छन्नाम् अश्वकर्णैश्च शोभिताम्।

चूतैः पुण्ड्रक-पत्रैश्च कदली वन संवृताम्।।

Vyasa Mahabharata

சால (ஆச்சா மரம்) வ்ருக்ஷங்களும், லோத்ரா (வெள்ளிலாதி மரம்) வ்ருக்ஷங்களும், அர்ஜுன (மருத மரம்) வ்ருக்ஷங்களும், வில்வ வ்ருக்ஷங்களும், ஜம்பு (நாவல் மரம்) வ்ருக்ஷங்களும், ஸால்மள (இலவு பஞ்சு மரம்) வ்ருக்ஷங்களும், கிம்ஸுகை (கல்யாண முருங்கை மரம்) வ்ருக்ஷங்களும், கடம்ப வ்ருக்ஷங்களும்,  சப்தபர்ண (ஏழிலைபாலை மரம்) வ்ருக்ஷங்களும், கர்ஷ்மய (குமிழ் மரம்) வ்ருக்ஷங்களும், ஆம (நெல்லி மரம்) வ்ருக்ஷங்களும், பெரிய கிளைகள் கொண்ட ந்யக்ரோத (ஆல மரம்) வ்ருக்ஷங்களும், ப்லக்ஷ (புளிய மரம்) வ்ருக்ஷங்களும், ஒளதும்பர (அத்தி மரம்) வ்ருக்ஷங்களும், ஸமீ (வன்னி மரம்) வ்ருக்ஷங்களும், பலாச வ்ருக்ஷங்களும், அஸ்வத்த (அரச மரம்) வ்ருக்ஷங்களும், கதிரை (கருங்காலி மரம்) வ்ருக்ஷங்களும், பதரீ (இலந்தை மரம்) வ்ருக்ஷங்களும், அஷ்வகர்ண வ்ருக்ஷங்களும், சூதை (மா மரம்) வ்ருக்ஷங்களும், புண்ட்ரக வ்ருக்ஷங்களும், கதளீ (வாழை மரம்) வ்ருக்ஷங்களும் நிரம்பி இருப்பதை கண்டார்.

चक्रवाकगणैः कीर्णं प्लवैश्च जलवायसैः।

समुद्रकाकैः क्रौञ्चैश्च नादितां जल कुक्कुटैः।। 

एवं खगैश्च बहुभिः सङ्घुष्टां जलवासिभिः।

आश्रमैर्बहुभिः सक्तां चैत्यवृक्षैश्च शोभिताम्।।

Vyasa Mahabharata 

மேலும், சக்ரவாக பறவைகள், வாத்து, நீர் காக்கை, கடற்காக்கை, அன்றில் (அரிவாள் மூக்கன்), நீர்கோழி போன்ற நீர் பறவைகள் பல கூவிக்கொண்டு இருப்பதையும், ரிஷிகளின் ஆஸ்ரமங்கள் நிறைந்து  அழகுடன் இருப்பதையும் கண்டார்.

शोभितां ब्राह्मणैः शुभ्रै: वेदवेदाङ्ग पारगैः।

क्वचित्तीररुहैर्वृक्षै: मालाभिरिव शोभिताम्।।

Vyasa Mahabharata

மேலும், வேத அங்கங்களும் அறிந்த வேதங்கள் ஓதும் பிராம்மணர்கள் வசிக்கும் இடங்களில் காணப்பட்ட மரங்களில் பூத்த மலர்களே மாலைகள் போல காட்சி கொடுப்பதையும் கண்டார். 

क्वचित्सुपुष्पितैर्वृक्षैः क्वचित्सौगन्धिकोत्पलैः।

कह्लारकुमुदोत्फुल्लैः कमलैरुपशोभिताम्।।   

कावेरीं तादृशीं दृष्ट्वा प्रीतिमान्पाण्डवस्तदा।

अस्मद्राष्ट्रे यथा गङ्गा कावेरी च तथा शुभा।।

Vyasa Mahabharata

சில இடங்களில் செங்கழுநீர், சில இடங்களில் குவளை, சில இடங்களில் செவ்வல்லி, சில இடங்களில் ஆம்பல் (ஒரு வகை அல்லி மலர்), சில இடங்களில் தாமரை பூக்கள் மலர்ந்து, அழகாக காட்சி கொடுக்கும் காவிரியை கண்டு, "நமது ராஜ்யத்தில் கங்கை எப்படியோ, அப்படியே காவிரியும் சிறந்து இருக்கிறது" என்று பூரிப்பு அடைந்தார் சஹதேவன்.

सहदेवस्तु तां तीर्त्वा नदीम् अनुचरैः सह।

दक्षिणं तीरभासाद्य गमनायोपचक्रमे।। 

Vyasa Mahabharata

காவிரி நதியின் அழகை ரசித்தவாறே சேனைகளோடு நதிக்கரை வழியாக வந்து கொண்டிருந்தார் சஹதேவன்.

आगतं पाण्डवं तत्र श्रुत्वा विषयवासिनः।

दर्शनार्थं ययुस्ते तु कौतूहल समन्विताः।।

Vyasa Mahabharata

பாண்டவ மைந்தன் சோழ சோழராஜ்யம் வந்திருப்பதை கேள்விப்பட்ட ஜனங்கள், சகாதேவனை காண போவதில் பெரும் குதூகலம் அடைந்தனர்.

द्रमिडाः पुरुषा राजन्स्रियचश्च प्रियदर्शनाः।

गत्वा पाण्डुसुतं तत्र ददृशुस्ते मुदाऽन्विताः।।

Vyasa Mahabharata

தமிழ் பேசக்கூடிய ஆடவர்களும், பெண்களும், பார்க்க பார்க்க ஆசையுண்டாகும் படி இருக்கும் சஹதேவனை பார்க்க சென்றனர்.

सुकुमारं विशालाक्षं व्रजन्तं त्रिदशोपमम्।

दर्शनीयतमं लोके नेत्रै: अनिमिषैरिव।। 

Vyasa Mahabharata

ம்ருதுவான தேகமும், பெரிய அழகான கண்களும், தேவர்களுக்கு ஓப்பானவன் போலவும், இவ்வுலகத்தில் மிக்க அழகுள்ளவனாகவும், ஆச்சர்யப்படதக்கவனுமாகிய சஹதேவனை கண் கொட்டாமல் பார்த்தனர்.

आश्चर्यभूतं ददृशु: द्रमिडास्ते समागताः।

महासेनोपमं दृष्ट्वा पूजां चक्रुश्च तस्य वै।।    

रत्नैश्च विविधै: इष्टै: भोगै: अन्यैश्च संमतैः।

गतिमङ्गलयुक्तार्भिः स्तुवन्तो नकुल अनुजम्।।

सहदेवस्तु तान्दृष्ट्वा द्रमिलानागतान्मुदा।    

विसृज्य तान्महाबाहुः प्रस्थितो दक्षिणां दिशम्।।

Vyasa Mahabharata

பெரிய சேனையோடு வரும் சஹதேவனை கண்டு மங்கள கானங்களோடு கூடிய ஸ்தோத்திரங்கள் சொல்லி வரவேற்றனர். விரும்பத்தக்க பல பொருள்களை அளித்து உபசரித்தனர். அந்த தமிழர்களை கண்டு, மிகவும் ஆனந்தம் அடைந்த சஹதேவன், அவர்களுக்கு விடைகொடுத்து, மேலும் தென்திசை நோக்கி திக் விஜயம் தொடர்ந்தார்.

दूतेन तरसा चोलं विजित्य द्रमिडेश्वरम्।

ततो रत्नान्युपादाय पाण्डस्य विषयं ययौ।।

Vyasa Mahabharata

தமிழ் தேசமான சோழ ராஜ்யத்திற்கு வந்து, தன் தூதுவனை அனுப்பி, அந்த அரசனின் நட்பை பெற்று, அவரிடம் ரத்தினங்களை பெற்றுக்கொண்டு, பாண்டிய தேசம் நோக்கி புறப்பட்டார்.

दर्शने सहदेवस्य न च तृप्ता नराः परे।

गच्छन्तम् अनुगच्छन्तः प्राप्ताः कौतूहलान्विताः।।

Vyasa Mahabharata

சஹதேவனை பார்த்த பல ஜனங்கள், ஆசை ,தீராமல் சோழ ராஜ்யத்திலிருந்து கூடவே கிளம்பி பாண்டிய தேசம் வந்து விட்டனர்.

ततो माद्री-सुतों राजन्मृग सङ्घान् विलोकयन्।

गजान् वनचरान् अन्यान् व्याघ्रान् कुष्ण मृगान् बहून् ।।

Vyasa Mahabharata

பாண்டிய தேசம் வரும் வழியில், காட்டில் அலையும் யானைகளையும், புலிகளையும், மான்களையும், மற்றும் பல மிருகங்களையும் பார்த்து கொண்டே வந்தார்.

शुकान् मयूरान् द्रुष्ट्वा तु गृध्रान् आरण्य कुक्कुटान्।

ततो देशं समासाद्य श्वशुरस्य महीपतेः।।

Vyasa Mahabharata

மேலும், கிளிகளையும், மயில்களையும், கழுகுகளையும், நாட்டுகோழிகளையும் பார்த்து கொண்டே பாண்டிய தேசம் வந்து சேர்ந்தார்.  

प्रेषयामास माद्रेयो दूतान् पाण्ड्याय वै तदा।

प्रतिजग्राह तस्याज्ञां सम्प्रीत्या मलयध्वजः।।

Vyasa Mahabharata

அர்ஜுனனின் மாமனாரும், பாண்டிய அரசரான "மலயத்வஜ" அரசரிடம் (அரசனின் பெயர் சித்ரவாகனன் என்று அர்ஜுனன் பிறகு வரும் போது தெளிவாக வியாசர் சொல்கிறார்) தான் வந்திருப்பதை தெரிவிக்க தன் தூதுவனை அனுப்பினார். உடனேயே, பாண்டிய ராஜன் சஹதேவன் கட்டளையை அன்புடன் அங்கீகரித்தார்.

(மலயத்வஜ பாண்டியனின் மகளே "மீனாக்ஷி". பார்வதி தேவியே இங்கு பாண்டிய மன்னனுக்கு பெண்ணாக அவதரித்தாள். அந்த பாண்டிய அரசர்களில் வழிவந்த அரசரே அர்ஜுனனை காண்கிறார்).

भार्या रूपवती जिष्णोः पाण्ड्यस्य तनया शुभा।

चित्राङ्गदेति विख्याता द्रमिडी योषितां वरा।।  

आगतं सहदेवं तु सा श्रुत्वाऽन्तः पुरे पितुः।

प्रेषयामास सम्प्रीत्या पूजारत्नं च वै बहु।।

Vyasa Mahabharata

அர்ஜுனனின் மனைவியும், பாண்டியராஜனின் மகளுமான அழகில் சிறந்தவளான, நல்ல லக்ஷணங்கள் கொண்ட, பெண்களில் சிறந்தவளான, தமிழ் பெண்ணான 'சித்ராங்கதை', சஹதேவன் வந்திருப்பதை தன் தந்தை மூலமாக அறிந்து கொண்டு,  பல வகையான விலையுயர்ந்த பொருள்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவழங்களையும், தூதர்களிடம் கொடுத்து சஹதேவனுக்கு அனுப்பினாள். 

पाण्ड्योऽपि बहु-रत्नानि दूतैः सह मुमोच ह।

मणिमुक्ता प्रवालानि सहदेवाय कीर्तिमान्।।

तां दृष्ट्वाऽप्रतिमां पूजां पाण्डवोऽपि मुदा नृप।

भ्रातुः पुत्रे बहून्रत्नान् दत्वा वै बभ्रूवाहने।।

Vyasa Mahabharata

அந்த நிகரற்ற மரியாதையை கண்ட சஹதேவன், மிகுந்த ஆனந்தம் அடைந்து, தன் சகோதரன் புதல்வனான பப்ருவாஹனனுக்கு  தானே ரத்தினங்களை அள்ளி கொடுத்து, ஆனந்தப்பட்டார்.

पाण्ड्यं द्रमिड-राजानं श्वशुरं मलयध्वजम्।

स दूतैस्तं वशे कृत्वा मणलूरेश्वरं तदा।।

ततो रत्नान्युपादाय द्रमिडैरावृतो ययौ।

अगस्त्यस्यालयं दिव्यं देवलोक समं गिरिम्।। 

Vyasa Mahabharata

பாண்டிய தேசத்தின் தமிழ் அரசனும், மணலூர் தேசத்தை ஆளும், அர்ஜுனனுக்கு மாமனாருமான மலயத்வஜ பாண்டியனை தன் தூதர்களை அனுப்பி தன் வசப்படுத்தி அவரிடம் ரத்தினங்களை பெற்று கொண்டு, தமிழ் மக்களால் சூழப்பட்ட சஹதேவன் அகத்திய ரிஷியின் திவ்யமான மலையை நோக்கி மேலும் புறப்பட்டார்.

स तं प्रदक्षिमं कृत्वा मलयं भरतर्षभ।

लङ्घयित्वा तु माद्रेय: ताम्रपणीं नदीं शुभाम्।। 

प्रसन्न सलिलां दिव्यां सुशीतां च मनोहराम्।

समुद्र तीरम् आसाद्य न्यविशत् पाण्डुनन्दनः।।

-Vyasa Mahabharata

ஜனமேஜயா! கிளம்பும் முன், மலயத்வஜ பாண்டியனை வலம் வந்து நமஸ்கரித்து புறப்பட்ட சஹதேவன், கிளம்பி குளிர்ச்சியான நீரை கொண்ட தாம்ரபரணி நதியோரம் வழியாக, இலங்கையை நோக்கி வந்து பயணம் மேற்பட்ட சஹதேவன், கடற்கரையை அடைந்தார்.