Followers

Search Here...

Showing posts with label பீமனுக்கு சொன்னது யார். Show all posts
Showing posts with label பீமனுக்கு சொன்னது யார். Show all posts

Sunday 21 January 2024

மஹாபாரதம் (கேள்வி 2) - நான்கு யுகங்களில் உள்ள மனிதர்களை பற்றி பீமனுக்கு சொன்னது யார்? என்ன சொன்னார்?

நான்கு யுகங்களை பற்றி பீமனுக்கு யார் சொன்னார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்.

காற்றில் ஒரு சமயம் சௌகந்திக மலர் ஒன்று திரௌபதி அருகில் வந்து விழுந்தது.

அது போல மேலும் பல மலர்கள் வேண்டும் என்று பீமனிடம் கேட்டாள்.

பீமன் அந்த மலரை தேடி கொண்டு கிளம்பினான். போகும் வழியில், ஹனுமானை கண்டான்.

ஹனுமானிடம் இலங்கையை தாண்டுவதற்காக பெரிய ரூபத்தை எடுத்து கொண்ட காட்சியை தனக்கு காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.


एवमुक्तः स तेजस्वी प्रहस्य हरिरब्रवीत् - Aranya kAndam (Vyasa Mahabharata)

இதை கேட்டு ஹனுமான் புன்முறுவல் செய்தார்.


न तच्छक्यं त्वया द्रष्टुं रूपं नान्येन केनचित्।
कालावस्था तदा ह्यन्या वर्तते सा न सांप्रतम्।
ततोऽद्य दुष्करं द्रष्टुं मम रूपं नरोत्तम ।।

अन्यः कृतयुगे कालश्रेतायां द्वापरे परः।
अयं प्रध्वंसनः कालो नाद्य तद्रूपमस्ति मे ।।

பீமனை பார்த்து, "அந்த உருவம் உன்னாலும் மற்றவர்களாலும் இப்போது பார்க்க இயலாது. க்ருத யுக காலம் வேறு. த்ரேதா யுக காலம் வேறு. துவாபர யுக காலம் வேறு.

அடுத்த அடுத்த காலங்களில் சக்திகள் குறைகிறது.

அந்த ரூபத்தில் நானும் இப்போது இல்லை.


भूमिर्नद्यो नगाः शैलाः सिद्धा देवा महर्षयः।
कालं समनुवर्तन्ते यथा भावा युगेयुगे ।। 

कालंकालं समासाद्य नराणां नरपुङ्गव।
बलवर्ष्मप्रभावा हि प्रहीयन्त्युद्भवन्ति च ।।

तदलं बत तद्रूपं द्रष्टुं कुरुकुलोद्वह।
युगं समनुवर्तामि कालो हि दुरतिक्रमः ।।

யுகங்கள் அதனதன் சக்திக்கு ஏற்று நடப்பது போல, இந்த பூமியும், நதிகளும், மரங்களும், மலைகளும், சித்தர்களும், தேவர்களும், ரிஷிகளும் காலத்தை ஏற்று அனுசரித்து நடக்கிறார்கள்.

மனிதர்களுடைய தேக பலமும் யுகம் செல்ல செல்ல குறைகிறது. முந்திய யுகங்களில் தேக பலம் அதிகமாக இருக்கிறது.

காலத்தை அனுசரித்து நான் இருப்பதால், நீயும் அந்த ரூபத்தை பார்க்க ஆசைப்பட வேண்டாம். காலத்தை மீறி நாம் இருக்க கூடாதல்லவா?"

என்றார் ஹனுமான்.


युगसङ्ख्यां समाचक्ष्व आचारं च युगेयुगे।
धर्मकामार्थभावांश्च कर्मवीर्ये भवाभवौ ।।

"யுகங்களின் கால அளவை அந்த யுகங்களில் இருந்த ஆசாரங்களை, அறம் பொருள் இன்பம் போன்றவைகளின் உண்மையான அர்த்தத்தை, பாவம் புண்ணியம் பற்றியும், ஆற்றலையும், பிறப்பையும், இறப்பையும் பற்றி எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்"

என்று கேட்டான் பீமன். 


कृतं नाम युगं श्रेष्ठं यत्रधर्मः सनातनः।
कृतमेव न कर्तव्यं तस्मिन्काले युगोत्तमे ।। 

न तत्र धर्माः सीदन्ति क्षीयन्ते न च वै प्रजाः।
ततः कृतयुगं नाम कालेन गुणतां गतम् ।।

ஹனுமான், பீமனை பார்த்து,

"க்ருத யுகத்தில் தர்மம் (அறம்) நிலையாக இருந்தது. அந்த யுகத்தில் நல்ல தர்மங்களே (அறமே) செய்யப்பட்டது. அதர்மமாக (அறமில்லாமல்) காரியங்கள் செய்யப்படவில்லை. அந்த யுகத்தில் தர்மம் (அறம்) வாடவே இல்லை. மக்களும் குறையாமல் இருந்தனர். இதனாலேயே இந்த யுகம் க்ருத யுகம் என்று அழைக்கப்பட்டது.


देव दानव गन्धर्व यक्ष राक्षस पन्नगाः।
नासन्कृतयुगे तात तदा न क्रयविक्रयः ।।
न सामऋग्यजुर्वर्णाः क्रिया नासीच्च मानवी।
अभिध्याय फलं तत्र धर्मः संन्यास एव च ।।
न तस्मिन्युगसंसर्गे व्याधयो नेन्द्रियक्षयः।
नासूया नापि रुदितं न दर्पो नापि वैकृतम् ।। 

க்ருத யுக சமயத்தில், தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், பன்னகர்களும் இந்த பூமியில் இருக்கவில்லை. 

அந்த யுகத்தில், வாங்குவது-விற்பது என்ற காரியங்கள் இல்லை.

ருக், யஜு ஸாம என்று தனித்து இல்லாத காலம் அது.. மனிதர்களுக்கு உழைக்க அவசியமும் இல்லை. 

அந்த யுகத்தில் நினைத்த மாத்திரத்தில் அனைத்தும் கிடைத்தது. 

அனைவருக்கும் ஸந்யாஸமே (மோக்ஷ எண்ணமே) இருந்தது.

அந்த யுகத்தில் நோய் யாருக்குமே இல்லை.

அந்த யுகத்தில் புலன்கள் தன் சக்தியை இழப்பதே இல்லை.

அந்த யுகத்தில் யாருமே மற்றவரின் நல்ல குணத்தை பார்த்து அஸூயை படாமல் இருந்தனர்.

அந்த யுகத்தில் யாரும் அழுவதில்லை. யாருக்கும் தன்னை பற்றி அகங்காரம் இல்லை. யாரும் கபடம் செய்வதில்லை. 


न विग्रहः कुतस्तन्द्री न द्वेषो न च पैशुनम्।
न भयं नापि संतापो न चेर्ष्या न च मत्सरः ।।

யாரும் சண்டை இடுவதும் இல்லை.

அந்த யுகத்தில் யாருக்கும் சோம்பல் கிடையாது. யாரிடமும் விரோதமும் கிடையாது. யாருமே மற்றவரை கோள் சொல்வதும் கிடையாது. 

எதை நினைத்தும் பயமும் கிடையாது. 

கிடைக்கவில்லையே என்ற தாபமும் யாருக்கும் கிடையாது. பொறாமையும் கிடையாது. 

யாருக்கும் மற்றவரை கண்டு எரிச்சலும் இல்லை. 


ततः परमकं ब्रह्म सा गतिर्योगिनां परा।
आत्मा च सर्वभूतानां शुक्लो नारायणस्तदा ।। 

அப்படிப்பட்ட க்ருத யுகத்தில், 

எவர் யோகிகளுக்கு கதியாக இருக்கிறாரோ, எவர் அனைத்து உயிருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறாரோ, எவர் பரமானந்தத்துடனேயே இருக்கிறாரோ, அந்த பரம ஸ்வரூபியான நாராயணன், க்ருத யுகத்தில் "வெண்மையாக" இருந்தார்.


ब्राह्मणआः क्षत्रिया वैश्याः शूद्राश्च कृतलक्षणाः।
कृते युगे समभवन्स्वकर्मनिरताः प्रजाः ।।

समाश्रयं समाचारं समज्ञानं च केवलम्।
तदा हि समकर्माणो वर्णा धर्मानवाप्नुवन् ।।

க்ருத யுகத்தில் இருந்த க்ஷத்ரியர்கள் (army,police), பிராம்மணர்கள் (vedic scholars with 6 duties), வைசியர்கள் (employer), சூத்திரர்கள் (employee) அவர்களுடைய இயற்கையான குணத்தில் கலப்படம் இல்லாமல் இருந்தனர். தங்கள் கடமையை பற்றுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த க்ருத யுகத்தில் இருந்த நான்கு வர்ணத்து மக்களும், 

பிரம்மத்தை அடைவதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த பிரம்மத்தை அடைவதற்காக ஒழுக்கத்தோடு எப்பொழுதுமே இருந்தார்கள்.

பிரம்மத்தை பற்றிய அறிவும் கொண்டிருந்த இவர்கள் அதற்கான காரியங்களே செய்து கொண்டிருந்தார்கள். பிரம்மத்தை அடையும் தகுதியோடு இருந்தார்கள்.


एकदेवसदायुक्ता एकमन्त्रविधिक्रियाः।
पृथग्धर्मास्त्वेकवेदा धर्ममेकमनुव्रताः ।। 

வர்ணத்தை (குணத்தை) பொறுத்து, வெவ்வேறு தர்மங்களோடு வாழ்ந்தாலும், பிரம்மத்தை மட்டுமே அனைவரும் தியானித்தார்.

அனைவரும் ஓம் என்ற ப்ரணவத்தையே ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒன்றாக இருந்த வேதத்தையே ப்ரமாணமாக கொண்டு வாழ்ந்தார்கள். 

தர்மத்திலேயே அனைவரும் வாழ்ந்தார்கள்


चातुराश्रम्य युक्तेन कर्मणा कालयोगिना।
अकामफल संयोगात्प्राप्नुवन्ति परां गतिम् ।।

செய்யும் காரியத்தில் பலனை எதிர்பார்க்காமல், தன் காரியங்களை ஈடுபாட்டுடன் செய்து கொண்டே, 4 வரணத்து மக்களும் உத்தம கதியை அடைந்தார்கள்.


आत्मयोग समायुक्तो धर्मोऽयं कृतलक्षणः।
कृते युगे चतुष्पादश्चातुर्वर्ण्यस्य शाश्वतः ।।

ஆத்மாவை ப்ரம்மத்துடனேயே இணைத்து கொண்டு, 4 வரணத்து மக்களும் வாழ்ந்தார்கள். 

தவம் (மன அடக்கம்), சௌசம் (தூய்மையான நடத்தை), தயை (இரக்கம்), உண்மை (சத்யம்) என்ற நான்கு தர்மமும் இந்த மக்களால் காக்கப்பட்டது இந்த க்ருத யுகத்தில்.


कामः कामयमानेषु ब्राह्मणेषु तिरोहितः'।
एतत्कृतयुगं नाम त्रैगुण्यपरिवर्जितम् ।। 

மோக்ஷமே குறிக்கோள் என்று வாழ்ந்த இந்த மக்களால், அறம் பொருள் இன்பம் என்பதில் இன்பம் என்ற காமம் நசிந்து கிடந்தது.

ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணமும் இல்லாத யுகமாக க்ருத யுகம் இருந்தது.


त्रेतामपि निबोध त्वं यस्मन्सत्रं प्रवर्तते।
पादेन ह्रसते धर्मो रक्ततां याति चाच्युतः ।।

த்ரேதா யுகத்தை பற்றியும் சொல்கிறேன் கேள்…

த்ரேதா யுகத்தில், யாகங்கள் நிரம்ப செய்யப்பட்டது.

த்ரேதா யுகத்தில் தர்மத்தின் ஒரு கால் குறைந்தது.

இந்த த்ரேதா யுகத்தில் அச்சுதனான நாராயணன் "சிவப்பு" நிறத்தில் இருந்தார்.


सत्यप्रवृत्ताश्च नराः क्रिया धर्मपरायणाः।
ततो यज्ञाः प्रवर्तन्ते धर्माश्चविविधाः क्रियाः ।।

த்ரேதா யுகத்தில் அனைவரும் சத்தியத்தில் திட சித்தத்தோடு இருந்தார்கள்.

தர்ம காரியங்களில் ஈடுபட்டார்கள்.

பல வித யாகங்கள், பல வித தர்மங்கள், பல வித கிரியைகள் செய்தனர்.


त्रेतायां भावसंकल्पाः क्रियादानफलोपगाः।
प्रचलन्ति न वै धर्मात्तपोदानपरायणाः।

स्वधर्मस्थाः क्रियावन्तो नरास्त्रेतायुगेऽभवन् ।।

த்ரேதா யுகத்தில், கிரியை செய்தால் தான் பலன் கிடைக்கும்.

அதன் காரணத்தால், பல வித கொடைகள் செய்தார்கள்.

த்ரேதா யுகத்தில், தவம், தானம் இரண்டையும் கடைப்பிடித்தார்கள். இதனாலேயே எவரும் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்தனர்.

த்ரேதா யுகத்தில் இருந்த மனிதர்கள் தங்கள் தர்மத்தில் இருந்து கொண்டு, தங்கள் காரியங்களை செய்து கொண்டு இருந்தார்கள்.


द्वापरे च युगे धर्मो द्विभागो नः प्रवर्तते।
विष्णुर्वै पीततां याति चतुर्धा वेद एव च ।।

த்வாபர யுகத்தில் தர்மத்தின் கால்களில் இரண்டு குறைந்தது.

த்வாபர யுகத்தில் விஷ்ணுவானவர் "பொன்" நிறத்தில் இருக்கிறார்.

த்வாபர யுகத்தில் வேதம் நான்காக பிரிந்தது.


ततोऽन्ये च चतुर्वेदास्त्रिवेदाश्च तथा परे।
द्विवेदाश्चैकवेदाश्चाप्यनृचश्च तथा परे ।। 

த்வாபர யுகத்தில் சிலர் சதுர் வேதிகளாகவும், சிலர் த்ரிவேதிகளாகவும், சிலர் ஒரு வேதம் அறிந்தவர்களாகவும், சிலர் வேதமே அறியாதவர்களாகவும் ஆனார்கள்.


एवं शास्त्रेषु भिननेषु बहुधा नीयते क्रिया।
तपोदानप्रवृत्ता च राजसी भवति प्रजा ।।

வேத சாஸ்திரமும் பிரிந்ததால் கிரியைகளும் பிரிந்தன. த்வாபர யுகத்தில் உள்ள மக்கள் ரஜோ குணத்தால் தவத்திலும் தானத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டனர். 


एकवेदस्य चाज्ञानाद्वेदास्ते बहवः कृताः।
सत्यस्य चेह विभ्रंशात्सत्ये कश्चिदवस्थितः ।।
सत्यात्प्रच्यवमानानां व्याघयो बहवोऽभवन्।
कामाश्चोपद्रवाश्चैव तदा वै दैवकारिताः ।। 

ஒன்றாய் இருந்த வேதத்தை முழுவதும் அறிய முடியாததால் வேதம் பிரிக்கப்பட்டது.

த்வாபர யுகத்தில் மனிதனின் புத்தி சக்தி குறைந்ததால், சத்தியத்தில் யாரும் நிலையாக இருப்பதில்லை.

சத்தியத்தில் இருந்து நழுவியதால், பல வித நோய்களும், ஆசைகளும், தெய்வ தண்டனையால் கஷ்டங்களும், உண்டாகின்றன.


यैरर्द्यभानाः सुभृशं तपस्तप्यन्ति मानवाः।
कामकामाः स्वर्गकामा यज्ञांस्तन्वन्ति चापरे ।

एवं द्वापरमासाद्य प्रजाः क्षीयन्त्यधर्मतः।

சிலர், இந்த கஷ்டத்தை போக்கி கொள்ள தவம் செய்கின்றனர்.

சிலர், உலக விஷயங்கள் கிடைப்பதற்காக யாகங்கள் செய்கிறார்கள்.

சிலர் ஸ்வர்கத்தை விரும்பி யாகங்கள் செய்கிறார்கள்.

மனிதர்கள் துவாபர யுகத்தை அடைந்து அதர்மத்தால் இவ்வாறு குறைவடைகிறார்கள்.


पादेनैकेन कौन्तेय धर्मः कलियुगे स्थितः ।
तामसं युगमासाद्य कृष्णो भवति केशवः।
वेदाचाराः प्रशाम्यन्ति धर्मयज्ञक्रियास्तथा ।।
கலி யுகத்தில் தர்மம் ஒரே ஒரு காலில் நிற்கும்.
கலி யுகத்தில் தமோ குணமே மேலோங்கி இருக்கும். 
இந்த யுகத்தை அனுசரித்து கேசவன் கருமை நிறத்தில் இருக்கிறார்.
வேதங்கள் (அறிவு), ஆசாரங்கள் (ஒழுக்கம்) மட்டுமின்றி, தர்மமும் (அறமும்) யாகங்களும் (service) மற்ற கிரியைகளும் (work) குறைந்து காணாமல் போகும்.

ईतयो व्याधयस्तन्द्री दोषाः क्रोधादयस्तथा।
उपद्रवाः प्रवर्तन्ते आधयो व्याधयस्तथा ।
युगेष्वावर्तमानेषु धर्मो व्यावर्तते पुनः।
கலி யுகத்தில், பல வித உபாதைகள், வியாதிகள், கோபமும், சோம்பறித்தனமும் உண்டாகும்.
பெரும் தொந்தரவுகளும், மனோ வியாதியும் உண்டாகும்.
பெரும் பயம் உண்டாகும். கலி யுகம் செல்ல செல்ல, தர்மங்கள் (அறம்) குறைந்து விடும். 

धर्मे व्यावर्तमाने तु लोको व्यावर्तते पुनः ।
लोके क्षीणे क्षयं यानति भावा लोकप्रवर्तकाः।
युगक्षयकृता धर्माः प्रार्थनानि विकुर्वते ।। 
மனிதர்களிடம் தர்மம் (அறம்) குறைய குறைய, உலகம் க்ஷீணமாகும். 
உலகம் க்ஷீணமாக, உலகில் நடைபெற்ற தர்மங்கள், ஞானம் (அறிவு) குறைந்து போகும்.
கலியின் இறுதியில் செய்யப்படும் தர்மங்கள், விரும்பிய பலனை தராமல் எதிர்வினையாக பலன் தந்து விடும்.

एतत्कलियुगं नाम अचिराद्यत्प्रवर्तते।
युगानुवर्तनं त्वेतत्कुर्वन्ति चिरजीविनः ।।
கலி யுகம் என்பது வெகு சீக்கிரத்தில் வர போகிறது.
சிரஞ்சீவிகள் யுகத்தை அனுசரித்து இருக்கிறார்கள். 

यच्च ते मत्परिज्ञाने कौतूहलमरिंदम।
अनर्थकेषु को भावः पुरुषस्य विजानतः ।।
एतत्ते सर्वमाख्यातं यन्मां त्वं परिपृच्छसि।
युगसङ्ख्यां महाबाहो स्वस्ति प्राप्नुहि गम्यताम् ।।
பகைவர்களை அடக்குபவனே! என்னை (விஸ்வரூபத்தை) பற்றி நீ அறிய ஆவல் படுகிறாய். மனிதனுக்கு ப்ரயோஜனமில்லாத விஷயத்தில் என்ன பிடிவாதம்? 
யுகங்களின் வரலாற்றை பற்றி நீ கேட்டதால், நான் சொன்னேன். க்ஷேமமாக இரு. நீ போகலாம்" என்கிறார் ஹனுமான்.