Followers

Search Here...

Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Thursday 16 November 2023

பெண்ணை பற்றி மனு சொன்ன விஷயம் என்ன? தெரிந்து கொள்வோம்

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், ஸ்வாயம்பு மனு ப்ரம்ம லோகம் செல்லும் முன்னர் கடைசியாக சொன்ன வார்த்தையை யுதிஷ்டிரனிடம் சொல்கிறார்.

स्त्रियः पुंसां परिददौ मनुर्जिगमिषुर्दिवम्।

अबलाः स्वल्पकौपीनाः सुहृद सत्यजिष्णवः।।

ईर्षवो मानकामाश्च चण्डाश्च सुहृदोऽबुधाः।

स्त्रियस्तु मानमर्हन्ति ता मानयत मानवाः।।

स्त्रीप्रत्ययो हि वै धर्मो रतिभोगाश्च केवलाः।

परिचर्या नमस्कारास्तदायत्ता भवन्तु वः।।

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

மனு தன்னுடைய உலகத்துக்கு செல்லும் முன் இவ்வாறு சொன்னார்.

"மனிதர்களே! பெண்கள் ஆண்களை விட உடல் பலம் குறைந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள். சத்யத்தை ஜெயிப்பவர்கள், பொறாமையும் கொண்டவர்கள், கௌரவத்தை விரும்புபவர்கள், 

மனிதர்களே! பெண்களை கௌரவமாக நடத்துங்கள். தர்மமே பெண்ணை நம்பி தான் இருக்கிறது. காமமும் பெண்ணை நம்பியே இருக்கிறது. அனைத்து பூஜைகளும், வழிபாடும் (நமஸ்காரமும்)  பெண்ணை நம்பியே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமாக இருக்கும் பெண்ணை மதியுங்கள்.

उत्पादनमपत्यस्य जातस्य परिपालनम्।

प्रीत्यर्थं लोकयात्रायाः पश्यत स्त्रीनिबन्धनम्।।

सम्मान्यमानाश्चैता हि सर्वकार्याष्यवाप्स्यथ।

विदेहराजदुहिता चात्र श्लोकमगायत।।

नास्ति यज्ञः स्त्रियाः कश्चिन्न श्राद्धं नोप्रवासकम्।

धर्मः स्वभर्तृशुश्रूषा तया स्वर्गं जयन्त्युत।। 

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

உன் குடும்பத்தில் சந்ததி உருவாக்கி கொடுப்பதும் பெண்ணே. அந்த சந்ததியை வளர்த்து காப்பதும் பெண்ணே. உலக வாழ்க்கை உங்களுக்கு ஆனந்தமாக தெரிவதற்கு காரணமே பெண் தான் என்று பாருங்கள். அவர்களை நீங்கள் கௌரவத்தோடு நடத்தினால், எல்லா பலனையும் பெறுவீர்கள்" என்று சொல்லி, புருஷர்களிடம் பெண்களை தகப்பன் போல கொடுத்து விட்டு, சொர்க்க லோகம் சென்றார் மனு. 

Saturday 21 May 2022

அன்று, பெண்களை அடிமையாக வைத்து இருந்தார்களா? இன்று பெண்கள் பெரிய பதவியில் இருக்கிறார்கள். அன்று, பாரத ஹிந்து (சனாதன) பெண்களுக்கு அரச பதவி கொடுத்தார்களா? அறிவோம் மஹாபாரதம்

அன்றைய காலத்தில் பெண்கள் அரசாள அனுமதி தரப்பட்டதா? 

5000 வருடம் முன், சுமார் 3064BCE அன்று பாரத போர் முடிந்த பிறகு, "இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற என்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.


அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 


வியாசர் 'ராஜ தர்மம்' உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

பிறகு, 

ஸ்ரீ கிருஷ்ணர், ஞான உபதேசம் செய்தார்.


யுதிஷ்டிரன் ஒருவாறு சமாதானம் அடைந்தாலும், மஹாவீரர்களை இழந்து இருக்கும் அவர்களுடைய பத்னிகள் கதறி அழும் சத்தம் அவரை உலுக்கியது. 'இந்த பாவத்துக்கு பதில் இல்லையே' என்று அழுதார்.


அப்போது, வியாசர், 'ப்ராயச்சித்தமாக அஸ்வமேத யாகம் செய்' என்று உபதேசிக்கலானார்.

त्वं तु शुक्लाभिजातीयः परदॊषेण कारितः

अनिच्छमानः कर्मेदं कृत्वा च परितप्यसे

- வியாசர் மஹாபாரதம்

நீ நல்ல குலத்தில் பரிசுத்தமான பிறப்புடையவன். துரியோதனுடைய குணத்தால், உனக்கு இஷ்டம் இல்லாமலே இந்த காரியம் செய்யும் படியாக நேர்ந்தது. இருந்தும் நீ பரிதவிக்கிறாய்.

अश्वमेधॊ महायज्ञः प्रायश्चित्तम् उदाहृतम्

तम् आहर महाराज वि पाप्मैवं भविष्यसि

வியாசர் மஹாபாரதம்

அஸ்வமேத மஹா யாகம் அனைத்து பாவத்துக்கும் பிராயச்சித்தமாக சொல்லப்படுகிறது.

मरुद्भिः सह जित्वारीन् मघवान् पाकशासनः

एकैकं क्रतुम् आहृत्य शतकृत्वः शतक्रतुः

வியாசர் மஹாபாரதம்

மருத்துக்களுடன் இருக்கும் தேவேந்திரன், பகைவர்களை கொன்ற பிறகு, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தான். 

पूतपाप्मा जितस्वर्गॊ लॊकान् प्राप्य सुखॊदयान्

मरुद्गणवृतः शक्रः शुशुभे भासयन् दिशः

வியாசர் மஹாபாரதம்

பிறகு, மீண்டும் தன்னுடைய சுவர்க்க லோகத்தை அடைந்தான்.  மருத்துக்களுடன் சொர்க்கத்தை அலங்கரித்தான்.

स्वर्गलॊके महीयन्तम् अप्सरॊभिः शचीपतिम्

ऋषयः पर्युपासन्ते देवा: च विबुधेश्वरम्

வியாசர் மஹாபாரதம்

அப்சரஸ்கள் நிறைந்த சுவர்க்கத்தில் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனை, அனைத்து தேவர்களும், ரிஷிகளும் ஆராதிக்கிறார்கள்.

सॊ ऽयं त्वम् इह संक्रान्तॊ विक्रमेण वसुंधराम्

निर्जिता: च महीपाला विक्रमेण त्वयानघ

வியாசர் மஹாபாரதம்

மஹாவீரனே! அந்த தேவேந்திரன் போல, நீயும் பராக்ரமத்தால் அரசர்களை வென்று இந்த பூமியை அடைந்து இருக்கிறாய்.

तेषां पुराणि राष्ट्राणि गत्वा राजन् सुहृद्वृतः

भ्रातॄन् पुत्रांश च पौत्रांश् च स्वे स्वे राज्ये ऽभिषेचय

வியாசர் மஹாபாரதம்

ராஜன்! உன்னால் ஜெயிக்கப்பட்ட அரசர்களுடைய தேசத்திற்கு சென்று, அங்கு இருக்கும் அரசர்களின் மகனையே, பேரனையோ, அல்லது அவருடைய சகோதரர்களை, அந்தந்த நாட்டிற்கு அரசராக பட்டம் சூட்டி, அபிஷேகம் செய்.

बालान् अपि च गर्भस्थान् सान्त्वानि समुदाचरन्

रञ्जयन् प्रकृतीः सर्वाः परिपाहि वसुंधराम्

வியாசர் மஹாபாரதம்

ஒருவேளை எந்த தேசத்திலாவது, அந்த அரசனின் வாரிசு குழந்தையாகவோ, அல்லது அந்த அரசி கர்ப்பவதியாக இருந்தாலோ, நல்ல வார்த்தை சொல்லி, ஆதரவு அளித்து, பூமியை பாதுகாத்து கொண்டிரு.

कुमारॊ नास्ति येषां च कन्या: तत्राभिषेचय

कामाशयॊ हि स्त्री वर्गः शॊकम् एवं प्रहास्यति

வியாசர் மஹாபாரதம்

எந்த அரசருக்கு மகன் இல்லையோ, அவர்களுடைய பெண்களை அந்தந்த ராஜ்யத்தில் முடி சூட்டி அரசாள செய். போகங்களில் இயற்கையாகவே விருப்பமுள்ள பெண்கள், இதனால் சோகத்தை விடுவார்கள்.

एवम् आश्वासनं कृत्वा सर्वराष्ट्रेषु भारत

यजस्व वाजिमेधेन यथेन्द्रॊ विजयी पुरा

வியாசர் மஹாபாரதம்

பாரதா! இவ்வாறு, உலகிலுள்ள அனைத்து ராஜ்யத்துக்கும் சென்று அனைவரையும் சமாதானம் செய்த பிறகு, இந்திரனை போல நீயும் அஸ்வமேத யாகம் செய்.

अशॊच्या: ते महात्मानः क्षत्रियाः क्षत्रियर्षभ

स्वकर्मभि: नाशं कृतान्त बल मॊहिताः

வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரியர்களில் உத்தமனே! க்ஷத்ரியர்களான இந்த வீரம் கொண்ட அரசர்கள் யாவரும், போர் செய்வது தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் என்று அறிந்து விருப்பப்பட்டு இந்த போரில் கலந்து கொண்டு, வீர ஸ்வர்க்கம் அடைந்து விட்டார்கள். அவர்களை குறித்து நீ கவலைப்பட வேண்டாம்.

अवाप्तः क्षत्र धर्म: ते राज्यं प्राप्तम् अकल्मषम्

चरस्व धर्मं कौन्तेय श्रेयान् यः प्रेत्य भाविकः

வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரிய தர்மப்படி போர் செய்து, நீ எதிரிகளே இல்லாத ராஜயத்தை அடைந்து இருக்கிறாய். 

கௌந்தேயா! பரலோகத்திலும் போற்றப்படும் உன் க்ஷத்ரிய தர்மத்தை காத்து, இந்த உலகை ஆண்டு கொண்டிரு


இவ்வாறு, வியாசர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிர மகாராஜனுக்கு சொல்லி, சமாதானம் செய்தார்.

Sunday 7 June 2020

"ஆணுக்கு பெண் அடங்கி இருக்க வேண்டும்" இது நியாயம் என்று எப்பொழுது புரியும்?

முதலாளிக்கு விசுவாசமாக இரு:
வேலை பார்ப்பவனுக்கு இந்த அறிவுரை தவறாக தான் தோன்றும்.
தான் ஒரு காலத்தில் சொந்த வியாபாரம் தொடங்கும் போது "இது நியாயம்" என்று புரியும்.



தந்தை சொல் மீறாதே:
தான் பிள்ளையை இருக்கும் போது இதன் அர்த்தம் புரியாது.
தான் தகப்பனாக ஆகும் போது, இதன் நியாயம் புரியும்.

சத்தியம் பேசு:
பொய் பேசும் வரை நமக்கு இந்த வாக்கு புரியாது.
தனக்கு எதிராக மற்றொருவன் பொய் சாட்சி சொல்லும் போது, இதன் நியாயம் புரியும்.

குடிக்காதே:
தான் குடிக்கும் போது, இதன் அர்த்தம் புரியாது.
தான் பெற்ற பிள்ளை பிற்காலத்தில் குடித்து சீரழியும் போது இதன் நியாயம் புரியும்.




பெண் ஆணுக்கு (முதலில் தகப்பன், பிறகு கணவன்,  கடைசியில் பிள்ளைக்கு) கட்டுப்பட்டு இருக்க வேண்டும் :
இது ஆண் ரிஷிகளாக சேர்ந்து கொண்டு, "பெண்ணை அடக்க செய்த சதி" என்று தான் தோன்றும்.

குழந்தை பருவத்தில் பொறுப்பான தகப்பன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

இளமையான அழகான பெண்ணாக இருக்கும் காலத்தில்,  தனக்காக சம்பாதித்து உழைக்கும் கணவன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

வயதான காலத்தில் பிள்ளை இல்லாமல் வாழும் போது, இதன் அர்த்தம் புரியும்.